24-07-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இந்த மகாபாரத
யுத்தத்தில் பழைய மரம் (சிருஷ்டி) அழிந்து போகும். அதனால்
யுத்தத்திற்கு முன் பாபாவிடம் முழுமையாக ஆஸ்தியைப் பெற்றுக்
கொள்ளுங்கள்.
கேள்வி:
பாபாவுக்கு மாதாக்களின் குழு
வேண்டும். ஆனால் அந்தக் குழுவின் விசேஷத் தன்மை என்னவாக இருக்க
வேண்டும்?
பதில்:
தேகி அபிமானியாக இருப்பதற்கான
முழு முயற்சி செய்கின்ற அப்படிப்பட்ட குழுவாக இருக்க வேண்டும்.
நாம் தூய்மையாகி, தூய்மையான உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற
பக்கா நஷா (ஆர்வம்) அவர்களுக்கு இருக்க வேண்டும். தூய்மையை
இழந்து விடக் கூடாது. நஷ்டோமோகா (முற்றிலும் பற்றுதல் இல்லாத)
குழுவாக இருக்க வேண்டும். அப்போது ஏதேனும் அதிசயம் நிகழ்த்திக்
காட்டலாம். யார் மீதும் மோகம் இருக்கக் கூடாது. மோகம் என்ற
கயிறு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் இதை அறிவார்கள், அதாவது இனிமை
யான பாபா நம்மை சொர்க்கவாசி ஆக்குவதற்காக இங்கே வந்துள்ளார்.
இது குழந்தைகளின் புத்தியில் உள்ளது. ஒவ்வொரு வருக்கும் இதைப்
புரிய வைக்க வேண்டும் - நாம் ஆத்மா, இந்த நினைவு யாத்திரையினால்
தான் தூய்மை யாகிறோம். எவ்வளவு சகஜமான உபாயம்! தந்தையை நினைவு
செய்தால் போதும். குழந்தைகள் அறிவார்கள், பாபா ஒரு விநாடியில்
முக்தி-ஜீவன் முக்திக்கான ஆஸ்தி தருகிறார். இப்போது அனைவரும்
ஜீவன் பந்தனத்தில் உள்ளனர். இராவண இராஜ்யத்தின் கட்டுப்பாட்டில்
உள்ளனர். இந்த விஷயத்தை பாபா அறிவார், குழந்தைகள் அறிவார்கள்.
வேறு யாருமே அறியார். குழந்தைகளாகிய உங்களுக்கு நிச்சயம்
உள்ளது-எல்லையற்ற தந்தையை நாம் நினைவு செய்கிறோம் என்றால்
ஆத்மாவுக்கு உள்ளுக் குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். எந்தத்
தந்தையை அரைக்கல்பமாக நினைவு செய்து கொண்டிருந்தோமோ, அந்த தந்தை
கிடைத்து விட்டார். துக்கத்தில் தந்தையை நினைவு செய்து கொண்டே
இருக்கின்றனர். நீங்களும் நினைவு செய்தீர்கள். இப்போது நீங்கள்
துக்கத்தில் வந்து நினைவு செய்வதில்லை. யாரை முழு உலகமும்
நினைவு செய்கிறதோ, அந்தத் தந்தை வந்துள்ளார் என்பதை நீங்கள்
அறிவீர்கள். பாபா அடிக்கடி புரிய வைத்துள்ளார் - இங்கே நீங்கள்
அமர்ந்திருக்கும் போது புரிந்து கொள்ளுங்கள் - நாம் ஆத்மா. பாபா
பரந்தாமத்திலிருந்து வந்திருக்கிறார். கல்ப-கல்பமாக தமது
வாக்குறுதியின் படி வருகிறார். பாபாவின் உறுதிமொழி - நீங்கள்
எப்போது அழைக்கிறீர்களோ, மேலும் அரைக் கல்பம் எப்போது
முடிவடைகிறதோ, அப்போது நான் வர வேண்டியுள்ளது. கலியுகத்திற்குப்
பிறகு சத்யுகம் வர வேண்டும் என்றால் நான் வர வேண்டியுள்ளது. இது
குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டும் தான் தெரியும் - இது சங்கம
யுகம், பாபா வந்து விட்டார். குழந்தைகள் நீங்களும் சேவை
செய்கிறீர்கள். ஒவ்வொரு நாளும் அறிமுகம் கொடுத்துக் கொண்டே
செல்கிறீர்கள். பாபாவின் அறிமுகம் அனைவருக்கும் கிடைத்துக்
கொண்டே இருக்கிறது. இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், அறிந்து
கொண்டிருக்கிறீர்கள், எல்லையற்ற பாபா சிவபாபா நமக்கு மீண்டும்
எல்லையற்ற ஆஸ்தி தருவதற்காக வந்துள்ளார். நீங்கள் பாபா-பாபா
என்று சொல்கிறீர்கள் இல்லையா? நாம் சிவபாபாவிடம் வந்துள்ளோம்.
சிவபாபாவும் சொல்கிறார், நான் சாதாரண உடலில் வந்திருக்கிறேன்,
கல்பத்திற்கு முன்பு போலவே. இதை மறக்கக் கூடாது. மாயா
அப்படிப்பட்ட பாபாவை மறக்கும் படியாகச் செய்து விடுகின்றது.
அவரை நினைப்பதன் மூலம் தான் தூய்மை இல்லாத நிலையி-ருந்து தூய்மை
ஆக வேண்டியுள்ளது. நீங்கள் அறிவீர்கள், அனைவருக்கும் சத்கதி
அளிப்பவர் ஒரே ஒரு சத்குரு ஆவார். சீக்கியர்களும்
பாடுகின்றனர்-சத் ஸ்ரீ அகால் என்று. பதீத பாவனர் தான் சத்குரு
என்று சொல்லப்படுகிறார். பதீத பாவனா என்று அழைக்கவும்
செய்கின்றனர். ஆத்மா அழைக்கின்றது. இப்போது நீங்கள் அறிவீர்கள்,
நாம் இங்கே வந்திருக்கிறோம், பாபாவுடன் நேராகச் சந்திப்
பதற்காக. பெரிய-பெரிய மனிதர்கள் ஓருவர் மற்றவருடன்
சந்திப்பதற்காகச் செல்கின்றனர். அவர் களுக்கு எவ்வளவு மகிமை
உள்ளது! மிக விமரிசையாக, ஆடம்பரத்திற்காக குஷியின் பேண்டு இசை
முதலிய வற்றை இசைக்கின்றனர். இங்கே குப்த வேஷத்தில்
வந்திருப்பவர் யார் என்பதை நீங்கள் தான் அறிவீர்கள். அவர்
தூரதேசத்தில் வசிக்கும் பிரயாணி எனச் சொல்லப் படுகிறார்.
நீங்கள் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் பரந்தாமத்தின் நிவாசிகள்.
இங்கே பயணிகளாகி வந்துள் ளோம், பாகத்தை நடிப்பதற்காக. பாபா
புரிய வைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உலகத்தில் யாருக்குமே
தெரியாது. நீங்கள் பாபாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீôகள். அதை
நன்றாக தாரணை செய்ய வேண்டும். பாபா புரிய வைக்கிறார், நீங்கள்
அனைவரும் இந்தக் கர்ம சேத்திரத்தில் பயணிகள். நாம்
சாந்திதாமத்தில் வசிப்பவர்கள். பிறகு இங்கே டாக்கி (சப்தத்தின்)
உலகத்தில் வருகிறோம். நாம் சாந்திதாமத்தி-ருந்து வந்த பயணிகள்.
84 பிறவிகளின் பாகத்தை இங்கே நடிக்கின்றோம். கடைசியில் இது
இறுதி நேரம். ஆக, பாபா வந்துள்ளார் - பழைய சிருஷ்டியைப்
புதியதாக ஆக்குவதற்காக. இதையும் நீங்கள் அறிவீர்கள்.
சித்திரமும் தெளிவாக உள்ளது. சிவபாபா, பிரம்மா மூலம் புது
உலகத்தின் ஸ்தாபனை செய்கிறார். கிருஷ்ணர் மூலம், விஷ்ணு மூலம்
ஸ்தாபனை செய்கிறார் என்பது கிடையாது. பாபா வருவதே பிரம்மா மூலம்
சொர்க்கத்தைப் படைப்பதற்காக. பாபா சாதாரண உடலில் வந்துள்ளார்.
இந்த உலகமே தூய்மையற்ற உலகம். தூய்மையானவர் ஒருவர் கூடக்
கிடையாது. ஏனெனில் முதல் நம்பரில் உள்ள லட்சுமி-நாராயணரோ
தூய்மையற்றவர் ஆகின்றனர். யார் தூய்மையாக இருந்தனரோ, அவர்களே
முழு அரச பரம்பரையோடு கூடவே தூய்மையற்றவர் ஆகியுள்ளனர். நீங்கள்
அறிவீர்கள், நாம் தெய்வீக தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம்.
இப்போது அவர்கள் அனை வரும் சூத்திர தர்மத்தினராக ஆகி
விட்டிருக்கிறோம். அமெரிக்கா முதலியவற்றில் பெரிய-பெரிய
பணக்காரர்கள் இருக்கலாம். ஆனால் சத்யுகத்தின் முன்னால்
அமெரிக்கா ஒன்றுமே இல்லை. இவை அனைத்தும் பின்னால் இது போல்
ஆகியிருக்கின்றன. இது அல்ப காலத்தின் பகட்டு. விநாசமோ
நடந்தேயாக வேண்டும். குழந்தைகள் உங்களுக்கு மிக அதிக நஷா
இருக்க வேண்டும். நம்மை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குபவர்
பாபா, அவரைக் குழந்தைகள் நினைவு செய்வதில்லை என்பது எவ்வளவு
பெரிய அதிசயம்! மாயா நினைவு செய்ய விடுவ தில்லை. குழந்தைகள்
நீங்கள் இப்போது இது போல் சொல்கிறீர்கள் - பாபா, மாயா எங்களை
நினைவு செய்ய விடுவதில்லை. அட, பாபா உங்களை 21 பிறவிகளுக்கு
சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகிறார். அவரை நீங்கள் நினைவு
செய்ய முடியாதா? பிரஜைகளும் கூட சொர்க்கத்தின் எஜமானர்களாக
ஆகின்றனர் இல்லையா? அனைவரும் அங்கே சுகமாக இருப்பார் கள்.
இப்போதோ அனைவரும் துக்கத்தில் உள்ளனர். பிரதம மந்திரி, ஜனாதிபதி
முதலானவர் களுக்கோ இரவும் பகலும் கவலை இருந்து கொண்டுள்ளது.
யுத்தம் முதலியவற்றில் எவ்வளவு பேர் இறந்து கொண்டே
இருக்கின்றனர்! நீங்கள் அறிவீர்கள், மகாபாரத யுத்தமும் கூடப்
புகழ் பெற்றதாகும். ஆனால் அதில் என்ன நடந்தது என்பது யாருடைய
புத்தியிலும் இல்லை. உங்களுக்கு பாபா புத்தியில் பதிய
வைத்துள்ளார். மகாபாரத யுத்தத்தில் அனைவரும் இறந்து போயினர்.
எவ்வளவு பெரிய மனித சிருஷ்டி! ஆத்மாக்களின் மரமும் உள்ளது. மரம்
முதலில் புதியதாக இருந்தபோது மிகச் சிறியதாக இருக்கும், பிறகு
வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. நீங்கள் அறிவீர்கள்,
முதலில் தெய்வீக தர்மம் இருந்தபோது எவ்வளவு சிறிய மரமாக
இருந்தது! ஆதி சநாதன தேவதா தர்மம் இருந்தது. இப்போது எவ்வளவு
விதவிதமான தர்மங்கள் உள்ளன! இந்த மகாபாரத யுத்தத்தின் மூலம்
இங்குள்ள அனைத்தும் விநாசமாகி விடும். ஆனால் இந்த ஞானம்
யாரிடமும் இல்லை. இது அதே யுத்தம் தான் என்று அவர்கள் சொல்லலாம்.
ஆனால் இதனால் என்ன ஆகப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.
நீங்கள் இப்போது வெளிச்சத்தில் இருக்கிறீர்கள். நீங்கள்
அறிவீர்கள், விநாசம் ஆகப் போகிறது, அதனால் மகாபாரத
யுத்தத்திற்கு முன் நம்முடைய ஆஸ்தியையோ அடைந்து கொள்வோம்.
விஷயமோ மிகவும் சுலபமானது. தூய்மையாகுங்கள், பாபாவை நினைவு
செய்யுங்கள். அநேகப் பெண் குழந்தைகள் மீது கொடுமைகள்
நடைபெறுகின்றன. மாதாக்களாகிய உங்களுக்குள் ஒருவர் மற்றவரைப்
பாதுகாப்பதற்காக உங்களுடைய ஒரு குழு உருவாக வேண்டும். ஆனால்
ஆத்ம அபிமானியாக அவசியம் ஆக வேண்டும். நாம் தூய்மையாக அவசியம்
ஆக வேண்டும் - இந்தப் பக்கா நஷா இருக்க வேண்டும். அத்தகைய
நஷாவில் இருப்பவர்கள் தான் மற்றவர் களுக்குப் புரிய வைக்க
முடியும். நாம் பாபாவை நினைவு செய்ய வேண்டும், தூய்மையானவர்
களாக ஆக வேண்டும். நாம் சுயதரிசனச் சக்கரதாரி - இந்த நஷாவோ
இருக்க வேண்டும். நாம் படைப்பவராகிய தந்தையையும் படைப்பின்
சக்கரத்தையும் அறிவோம். இப்போது நாம் தந்தையிடமிருந்து புது
உலகமாகிய சத்யுகத்தின் ஆஸ்தியைப் பெற வேண்டும். நாம் 84 பிறவி
களை எப்படி எடுக்கின்றோம் என்பதைப் புரிய வைத்துக் கொண்டே
இருங்கள். பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால்
உங்களுடைய பாவங்கள் அழிந்து விடும். தூய்மையானவர்களாக அவசியம்
ஆக வேண்டும். பாவனம் என்றால் தூய்மை (புனிதம்). காமம்
மிகப்பெரிய விரோதி. நாம் 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்து
விட்டோம். இப்போது பாபாவிட மிருந்து ஆஸ்தி பெற வேண்டும். பாபா
சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் விகர்மங்கள்
விநாசமாகி விடும். இங்கு நீங்கள் வருவதே புத்துணர்ச்சி
பெறுவதற்காக. தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் - 21
பிறவிகளுக்கான ஆஸ்தி பெற வேண்டும். யார் மீதும் மோகத்தின்
நாட்டம் இருக்கக் கூடாது. பற்றற்றவராக ஆக வேண்டும். இந்த
சரீரத்தின் மீதும் மோகம் கூடாது. இதுவோ பழைய தோல். ஆனால் இதைப்
பராமரிக்க வேண்டும். இதன் மூலம் தான் படிப்பைப் படிக்க
வேண்டியுள்ளது. கஷ்டம் வந்தால் சமாளிக்க வேண்டியுள்ளது. நீங்கள்
அறிவீர்கள், இது பழைய இற்றுப் போன சரீரம். இதற்கு ஏதேனும் ஒன்று
நடந்து கொண்டே இருக்கிறது. துக்கம் ஆத்மாவுக்கு ஏற்படுகின்றது.
நீங்கள் அறிவீர்கள், இப்போது இந்த சரீரத்தை விட வேண்டும்.
யோகபலத்தின் மூலம் இதை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். பாபாவை
நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னை ஆத்மா என உணர்ந்து
பாபாவை நினைவு செய்தால் போதும். வேறு எந்த லௌகிக சம்மந்தங்களும்
நினைவு வரக் கூடாது. நான் தேகமல்ல, ஆத்மா. பாபா சொல்கிறார்,
நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு ஆஸ்தி தருவதற்காக வந்துள்ளேன்.
ஆத்மா தூய்மையாகி விட்டால் பிறகு சரீரமும் கூட நல்லதாகக்
கிடைக்கும்.
நீங்கள் அறிவீர்கள், இப்போது ஆத்மா நாம் தூய்மையாக வேண்டும்.
நாம் தூய்மையாக இருந்த போது லட்சுமி-நாராயணரைப் போல் இருந்தோம்.
இந்த லட்சுமி-நாராயணர் 84 பிறவிகளை எடுத்துள்ளனர். சூரியவம்சி
அரச பரம்பரை முழுவதுமே 84 பிறவிகள் எடுத்துள்ளனர். சந்திர
வம்சிகளுக்கு 84 பிறவிகள் எனச் சொல்ல மாட்டார்கள். ஆம்,
சூரியவம்சியில் யார் முதல்-முதலில் பணியாளர்களாக
ஆகியிருப்பார்களோ, அவர்கள் பிறகு திரேதா யுகத்தில் ஏதாவதொரு
பதவி பெறுவார்கள். அவர்களுக்கு 84 பிறவிகள் எனச் சொல்வார்கள்.
இராஜா-ராணி, பிரஜைகள், தாச-தாசிகள் முதலான யாரெல்லாம்
சூரியவம்சியில் வருகிறார்களோ, அவர்கள் தான் 84 பிறவிகள்
எடுக்கிறார்கள். இப்படி-இப்படி தனக்குத் தான் உரையாடல் செய்ய
வேண்டும். நாம் 84 பிறவிகளை ஏன் எடுக்கிறோம்? விசார் சாகர்
மந்தன் செய்ய வேண்டும். எவ்வளவு முடியுமோ, தந்தை மற்றும்
ஆஸ்தியை நினைவு செய்து கொண்டே இருங்கள். நடமாடும் போதும் கூட
நாம் பாபாவின் குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
யாராவது சந்தித்தால் பாபாவின் அறிமுகம் கொடுக்க வேண்டும்.
இந்தச் சித்திரங்களில் முழு ஞானம் உள்ளது. அனைத்தையும் சொல்ல
வேண்டும். பாபா பிரம்மாவின் உடலில் வந்துள்ளார். நாம் அனைவரும்
பிரம்மாகுமார்-குமாரிகள் இல்லையா? பி.கே.க்களாகிய நம்மை
சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குவதற்காக பாபா வந்துள்ளார்.
அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒருவர் தான். நாம்
பிரம்மாகுமார்-குமாரிகள். அவரவருடைய அடையாள அட்டையை நீங்கள்
காட்ட முடியும். எங்காவது அலுவலகங்களிலும் கூட அட்டையைக்
கொடுங்கள். ஆனால் பி.கே. என்றால் யார் என்று அவர்களால் புரிந்து
கொள்ள முடியாது. அநேக விதமான தடைகள் வருகின்றன.
அரசாங்கத்திற்கும் கூட புரிய வைக்கப்படுகின்றது - இது
எங்களுடைய குடும்பம். தாதா மற்றும் பாபா உள்ளனர். தாதா (மூத்த
சகோதரர்) மூலம் நாம் ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதை
நினைவு வைப்பதால் குஷி இருக்க வேண்டும். ஆஸ்தியோ
தாத்தாவினுடையது. பேரக் குழந்தைகள் அதைப் பெறுவதற்கு உரிமை
உள்ளது. முழு பாகத்தையும் பங்கிட்டுப் பெற்றுக் கொள்கின்றனர்.
நீங்களும் அறிவீர்கள் - சிவபாபாவிடமிருந்து பிரம்மா மூலம் நாம்
ஆஸ்தி பெறுகிறோம். இதை நினைவு வைக்க வேண்டும், படிக்க வேண்டும்.
பிறகு மற்றவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். இது தந்தையின்
கடமை-குழந்தைகளுக்குப் பாலனை செய்வது. குமார்-குமாரி இளமைப்
பருவம் அடையாத வரை அவர்களைப் பராமரிப்பது. குழந்தைகளின் கடமை
படிப்பது. தங்களின் கால்களில் நிற்பதற்காகப் படிக்கின்றனர்.
நீங்கள் அறிவீர்கள், பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து
கொண்டிருக்கிறார், 21 பிறவிகளுக்காக. பிறகு நாம் நம்முடைய
கால்களில் நின்று கொள்வோம். எவ்வளவு படிக்கிறீர்களோ, அவ்வளவு
உயர்ந்த பதவி பெறுவீர்கள். நீங்கள் தாங்களே சொல்கிறீர்கள்,
நாங்கள் இங்கே வருவது ஸ்ரீலட்சுமி அல்லது ஸ்ரீநாராயணன் ஆவதற்
காக. இது சத்திய நாராயணனின் கதை இல்லையா? இந்த லட்சுமி-நாராயணன்
எப்படி 84 பிறவி கள் எடுக்கின்றனர் என்பது பற்றி யாருக்கும்
தெரியாது. இராதையின் பக்தர்களாக இருப்பார் களானால் சொல்வார்கள்,
இராதை இங்கே நம் முன் உள்ளார் என்று. எங்கே பார்த்தாலும்
இராதையே இராதை! கிருஷ்ணரே கிருஷ்ணர்! சிவனே சிவன்! இந்தக்
குழப்பத்தை உருவாக்கி விட்டுள்ளனர். ஈஸ்வரன், இராதை, கிருஷ்ணர்
அனைவரும் சர்வவியாபி. இவை அனைத்தும் ஈஸ்வரனின் ரூபங்கள். பகவான்
இந்த ரூபத்தை தாரணை செய்துள்ளார். எங்கே பார்த்தாலும் நீயே தான்.....
எனச் சொல்கின்றனர். முற்றிலும் புத்தியற்றவர்களாக ஆகி
விட்டுள்ளனர். இது விகாரி பதித் உலகம். சத்யுகம் என்பது
நிர்விகாரி தூய்மையான உலகம். விகாரமற்ற உலகம் என்பதன் அர்த்தமே
சொர்க்கம் என்பது தான். அங்கே குழந்தைகளோ உள்ளனர் இல்லையா,
அவர்கள் எப்படிப் பிறப்பார்கள் எனக் கேட்கின்றனர். இதைத் தான்
கேள்வியாகக் கேட்பார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை என்றால்
சிருஷ்டி எப்படி விருத்தியாகும் எனக் கேட்பார்கள். ஒவ்வொரு
வருடமும் ஜனத்தொகைக் கணக்கை எடுக்கின்றனர்-எவ்வளவு
அதிகப்படியான மனிதர்கள் உருவாகியுள்ளனர்? இவ்வளவு பேர் இறந்து
விட்டனர் என்பதைச் சொல்ல மாட்டார்கள். ஆக, குழந்தைகள் முதலிலோ
தங்களுக்கு நன்மை செய்து கொள்ள வேண்டும். நான் ஆத்மா - முதலிலோ
இந்த நிச்சயம் செய்யுங்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும்.
கடைசிக் காலத்தில் யார் நாராயணனை நினைக் கிறார்களோ...........இப்போது
நாரயணனை நினைப்பது என்று பொய்யாக எழுதியுள்ளனர். கடைசிக்
காலத்தில் சிவபாபாவை நினைக்க வேண்டும்.........அதே கவலையில்
யார் இறக்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தின் நாராயணனாக ஆவார்கள்.
கடைசிக் காலத்தில் நாராயணன் என்று ஏன் சொல்கிறார்கள்? கிருஷ்ணர்
ஞானம் கொடுத்திருந்தார் என்றால் கிருஷ்ணரை நினைப்போமே என்று
புரிந்து கொண்டுள்ளனர். அதனால் கிருஷ்ணரை நினைவு செய்கின்றனர்.
நாராயணர் பற்றி யாருக்கும் தெரியாது. கிருஷ்ணருக்கு ஜெயந்தி
கொண்டாடுகின்றனர். சரி. இராதையின் ஜெயந்தி எங்கே? கிருஷ்ணரின்
ஜென்மத்தைக் கொண்டாடுகின்றனர். நாராயணருடையது எங்கே? உலகத்தின்
இராஜா-ராணி லட்சுமி-நாராயணர் பற்றி யாருக்கும் தெரியாது.
பிரஜாபிதா பிரம்மாவின் முகவம்சாவளி இருப்பார்கள் இல்லையா?
அவர்கள் எங்கே சென்றார்கள்? பிராமண் தேவி-தேவதாய நமஹ எனச்
சொல்கின்றனர். பிரம்மாவுக்கு முகவம்சாவளி இருந்தனர் இல்லையா?
பிரம்மா மூலம் சிவபாபா பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார்
என்பதைக் குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர். பிராமண தர்மத்தை
பிரம்மா படைக்கவில்லை. ஆனால் சிவபாபா படைத்தார். இவரோ இப்போது
தான் பிரம்மா ஆகியிருக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இந்தப் பழைய சரீரத்தில் வாழ்ந்து கொண்டே படிப்பைப் படித்து
21 பிறவிகளுக்கான வருமானத்தைச் சம்பாதிக்க வேண்டும். அதனால்
இந்த சரீரத்தைப் பராமரிக்க வேண்டும். மற்றப்படி இதன் மேல் மோகம்
வைக்கக் கூடாது.
2) கடைசிக் காலத்தில் ஒரு சிவபாபாவின் நினைவு மட்டுமே இருக்க
வேண்டும்-அந்த மாதிரியான பயிற்சி செய்ய வேண்டும். வேறு எந்த ஒரு
சிந்தினையிலும் செல்லக் கூடாது. தனக்கு நன்மை செய்துக் கொள்ள
வேண்டும்.
வரதானம்:
மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகி அறியாமையை
நீக்கக் கூடிய ஞான சொரூபம், யோகயுக்த் ஆகுக.
மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகக் கூடியவர்களிடம் எந்த விதமான
அறியாமையும் இருக்காது. இந்த விசயம் பற்றி எனக்குத் தெரியாது
என்று கூறி அவர்கள் தன்னை விடுவித்துக் கொள்ளமாட்டார்கள். ஞான
சொரூப குழந்தைகளிடம் எந்த விசயத்திற்கான அஞ்ஞானமும் இருக்க
முடியாது. மேலும் யோகயுக்த் ஆக இருப்பவர்களுக்கு முன் கூட்டியே
அனைத்தையும் அறிந்தவர் என்ற அனுபவம் ஏற்படும். மாயாவின் ஒ-,
மழைத்தூரல் ஒன்றும் குறைந்தது அல்ல. மாயாவும் மிகவும்
அலங்காரத்துடன் இருக்கிறது. ஆகையால் அதிருந்து பாதுகாப்பாக
இருங்கள். யார் அனைத்து ரூபங்களின் மாயாவை புரிந்து கொண்டார்களோ,
அவர்கள் தோல்வி அடைவது என்பது அசம்பவமாகும்.
சுலோகன்:
சதா மகிழ்ச்சியாக இருப்பவர்கள் ஒருபோதும் கேள்விகளில் வர
முடியாது.
அவ்யக்த இஷாரே: ஜுவாலா சொரூப ஸ்திதியில் இருந்து சக்திசாலி
நினைவின் அனுபவம் செய்யுங்கள்
யோகாவில் சதா லைட் ஹவுஸ் மற்றும் மைட் (சக்தி) ஹவுஸ் ஸ்திதி
அனுபவம் செய்யுங்கள். ஞானம் என்பது லைட், யோகா என்பது மைட்.
ஞானம் மற்றும் யோகா - இரண்டு சக்திகளும் லைட் மற்றம் மைட்
நிறைந்து இருக்க வேண்டும். இது தான் மாஸ்டர் சர்வசக்திவான்
என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சக்திசா- ஆத்மாக்கள் எந்த
ஒரு சூழ்நிலையையும் விநாடியில் கடந்து சென்று விடுவார்கள்.
நேரம் தேவைப்படாது.