24-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே!
எல்லைக்கப்பாற்பட்ட அளவில்லா குஷியின் அனுபவத்தை செய்வதற்காக
ஒவ்வொரு நொடியும் பாபாவுடன் இருங்கள்.
கேள்வி:
தந்தையிடமிருந்து எந்த
குழந்தைகளுக்கு மிக அதிகமான சக்தி கிடைக்கிறது?
பதில்:
யாருக்கு நாம்
எல்லைக்கப்பாற்பட்ட உலகை மாற்றம் செய்பவர்கள், நாம் எல்லைக்
கப்பாற்பட்ட உலகின் எஜமான் ஆக வேண்டும், நமக்க கற்பிப்பவர்
சுயம் உலகின் எஜமான் என்ற நிச்சயம் உள்ளதோ அப்படிப்பட்ட
குழந்தைகளுக்கு மிகவும் அதிகமான சக்தி கிடைக் கிறது.
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளை அல்லது ஆத்மாக்களை
ஆன்மீகத் தந்தை பரமபிதா பரமாத்மா அமர்ந்து கற்பிக்கிறார்,
மேலும் புரிய வைக்கிறார் ஏனெனில் குழந்தைகள்தான் தூய்மையடைந்து
மீண்டும் சொர்க்கத்தின் எஜமான் ஆகக்கூடிய வர்கள். முழு உலகின்
தந்தை ஒருவர் மட்டும் தான். குழந்தைகளுக்கு இந்த நம்பிக்கை
ஏற்படுகிறது. முழு உலகின் தந்தை, அனைத்து ஆத்மாக்களின் தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்கு கற்று தந்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வளவு புத்தியில் அமர்கிறதா? ஏனென்றால் புத்தி தமோபிரதானமாக,
இரும்புப் பாத்திரமாக, இரும்பு யுகத்தினுடையதாக உள்ளது. புத்தி
ஆத்மாவில் உள்ளது. ஆக, இவ்வளவு புத்தியில் பதிகிறதா?
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நம்மைப் படிக்க வைத்துக்
கொண்டிருக்கிறார், நாம் எல்லைக்கப்பாற்பட்ட உலகை சீராக்கு
கிறோம் என்று புரிந்து கொள்ளும் அளவு சக்தி கிடைக்கிறது. இந்த
சமயத்தில் எல்லைக்கப் பாற்பட்ட சிருஷ்டி நரகம் என்று
சொல்லப்படுகிறது. ஏழைகள் நரகத்தில் இருக்கின்றனர், சன்னியாசிகள்,
செல்வந்தர்கள், உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சொர்க்கத்தில்
இருப்பதாக புரிந்து கொள்கிறீர்களா என்ன? தந்தை புரிய வைக்கிறார்
- இந்த சமயம் மனிதர்களாக இருக்கும் அனைவருமே நரகத்தில்
இருக்கின்றனர். இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஆகும். ஆத்மா எவ்வளவு சிறியதாக உள்ளது. இவ்வளவு சிறிய ஆத்மாவில்
முழுமையாக ஞானம் முழுவதும் நிலைக்கிறதா அல்லது மறந்து
விடுகிறீர்களா? உலகின் அனைத்து ஆத்மாக்களின் தந்தை உங்கள்
முன்னால் அமர்ந்து உங்களுக்கு பாடம் கற்றுத் தந்துக்
கொண்டிருக்கிறார். பாபா நம்முடன் இங்கே இருக்கிறார் என முழு
நாளும் நினைவி லிருக்கிறதா? எவ்வளவு நேரம் அமர்கிறார்? ஒரு மணி
நேரமா, அரை மணி அல்லது முழு நேரமா நாளுமா? இதை புத்தியில்
வைப்பதற்கும் கூட சக்தி தேவை. ஈஸ்வரன் பரமபிதா பரமாத்மா
உங்களுக்கு கற்பிக்கிறார். வெளியில் உங்கள் வீடுகளில்
இருக்கும்போது அங்கே உடன் இருப்பதில்லை. இங்கே நடை முறையில்
உங்களுடன் இருக்கிறார். கணவர் வெளி யிலும் மனைவி இங்கும்
இருந்தால் என்னுடன் இருக்கிறார் என்று மனைவி சொல்வதில்லை யல்லவா,
அது போல. எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஒருவர்தான் ஆவார். தந்தை
அனைவருக் குள்ளும் இல்லையல்லவா. தந்தை கண்டிப்பாக ஒரு இடத்தில்
அமர்ந்திருப்பார். ஆக, எல்லைக் கப்பாற்பட்ட தந்தை நம்மை புதிய
உலகின் எஜமான் ஆக்குவதற்காக தகுதி மிக்கவர்களாக ஆக்கிக்
கொண்டிருக்கிறார் என்பது புத்தியில் வருகிறதா? நாம் முழு உலகின்
எஜமான் ஆகக் கூடியவர்கள் என்று இந்த அளவு தன்னை தகுதி
மிக்கவர்களாக மனதில் புரிந்து கொள்கிறீர் களா? இதில் மிகவும்
குஷியின் விஷயம் ஆகும். இதை விட குஷியின் பொக்கிஷம் வேறு
யாருக்கும் கிடைப்பதில்லை. இப்படி ஆகக் கூடியவர்கள் என்று
இப்போது உங்களுக்குத் தெரிந்துள்ளது. இந்த தேவதைகள் எந்த
இடத்தின் எஜமான் என்பதையும் கூட புரிந்துள்ளீர்கள். பாரதத்தில்
தான் தேவதைகள் இருந்து சென்றுள்ளனர். இவர்கள் முழு உலகின்
எஜமான் ஆகக் கூடியவர்கள். இவ்வளவு புத்தியில் உள்ளதா? அந்த
நடத்தை உள்ளதா? பேசக்கூடிய விதம் அப்படி உள்ளதா? ஏதாவது
விசயத்தில் சட்டென்று கோபித்துக் கொள்வது, பிறருக்கு நஷ்டத்தை
ஏற்படுத்துவது, பிறரை நிந்திப்பது போன்ற நடத்தை நடப்பதில்லைதானே?
சத்யுகத்தில் இவர்கள் யாரையும் நிந்தனை செய்வதில்லை. அங்கே
நிந்தனை செய்யக் கூடிய அசுத்தமான சிந்தனை செய்பவர்கள் யாரும்
இருப்பதில்லை. தந்தை குழந்தைகளை எவ்வளவு நன்றாக உயர்த்து கிறார்?
நீங்கள் தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவங்கள் நீங்கும்.
நீங்கள் கை உயர்த்துகிறீர்கள், ஆனால் உங்களுடைய நடத்தை அப்படி
உள்ளதா? தந்தை வந்து கற்பிக்கிறார் என்பது புத்தியில் நன்றாக
பதிகிறதா? பலருடைய போதை சோடா நீர் போல ஆகிவிடுகிறது என்பதை
தந்தை அறிவார். அனைவருக்கும் இவ்வளவு குஷியின் அளவு
அதிகரிப்பதில்லை. புத்தியில் பதியும்போது போதை ஏறும். உலகின்
எஜமான் ஆக்குவதற்காக தந்தைதான் படிப்பிக்கிறார்.
இங்கே அனைவரும் தூய்மையற்று இராவண சம்பிரதாயமாக உள்ளனர். ராமர்
குரங்கு களின் சேனையை பயன்படுத்தி இப்படி இப்படி செய்தார் என்று
கதை உள்ளதல்லவா. இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள் - பாபா
இராவணன் மீது வெற்றி அடையச் செய்து நம்மை லட்சுமி நாராயணன்
ஆக்குகின்றார். இங்கே குழந்தைகளாகிய உங்களிடம் யாராவது கேட்டால்
நீங்கள் உடனே சொல்வீர்கள் - எங்களுக்கு பகவான் கற்றுத்
தருகிறார். நான் உங்களை வக்கீலாக ஆக்குவேன் அல்லது இன்னாராக
ஆக்குவேன் என்று ஆசிரியர் சொல்வது போல இங்கேயும் பகவானுடைய
மகாவாக்கியம் உள்ளது. நிச்சயத்துடன் கற்றுத் தரும்போது அவர்கள்
அப்படி ஆகிவிடுகின்றனர். படிப்பவர்களும் வரிசைக்கிரமமாக
இருக்கின்றனர். பிறகு பதவி கூட வரிசைக்கிரமமாக அடைகின்றனர். இது
கூட படிப்பாகும். பாபா லட்சியத்தை முன்னால் காட்டிக்
கொண்டிருக்கிறார். இந்தப் படிப்பின் மூலம் நாம் இப்படி ஆவோம்
என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மகிழ்ச்சியின் விசயம்
அல்லவா. ஐ.சி.எஸ் படிப்பவர்களும், நாம் இதைப் படித்து இப்படி
ஆவோம், வீடு கட்டுவோம், இப்படி செய்வோம் என்று புரிந்து கொள்
கிறார்கள். புத்தியில் இப்படி சிந்தனை ஓடுகிறது. இங்கே
குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை அமர்ந்து கற்பிக்கிறார்.
அனைவரும் படிக்க வேண்டும், தூய்மை ஆக வேண்டும். தந்தையிடம்
உறுதிமொழி கொடுக்க வேண்டும் - நாங்கள் எந்த ஒரு தூய்மையற்ற
காரியமும் செய்ய மாட்டோம். பாபா சொல்கிறார் - ஏதேனும் தலைகீழான
காரியம் செய்துவிட்டால் வருமானம் நின்றுபோய்விடும். இந்த
மரணலோகம் பழைய உலகமாகும். நாம் புதிய உலகத்திற்காக படிக்கிறோம்.
இந்தப் பழைய உலகம் முடிந்து போக வேண்டும். சூழ்நிலை அப்படி
இருக்கிறது. பாபா நம்மை அமரலோகத்திற்காக கற்பிக்கிறார். முழு
உலகத்தின் சக்கரத்தையும் பாபா அமர்ந்து புரிய வைக்கிறார்.
கையில் எந்தப் புத்தகமும் இல்லை. பாபா வாய் வழியாக சொல்லிப்
புரிய வைக்கிறார். முதன்மையான விசயத்தை பாபா புரிய வைக்கிறார்
- தன்னைத் தான் ஆத்மா என்று நிச்சயம் செய்யுங்கள். ஆத்மா பகவான்
தந்தையின் குழந்தை ஆகும். பரம்பிதா பரமாத்மா பரந்தாமத்தில்
இருக்கிறார். ஆத்மாக்களாகிய நாமும் அங்கே இருக் கிறோம். பிறகு
அங்கிருந்து வரிசைக்கிரமமாக இங்கு நடிப்பை நடிக்க வந்து
செல்கிறோம். இது பெரிய எல்லைக்கப்பாற்பட்ட மேடை ஆகும். மேடை
மீது நடிப்பை நடிக்க முதலில் நடிகர்கள் பாரதத்தில் புதிய
உலகத்தில் வருகின்றனர். இது அவர்களுடைய செயலாகும். நீங்கள் அவர்
களுடைய மகிமையும் பாடுகின்றீர்கள். அவர்களை கோடீஸ்வரர்கள் என்று
சொல்லலாமா? அவர்களிடமோ கணக்கிலடங்காத அளவற்ற செல்வம் இருக்கிறது.
தந்தை இப்படி சொல்கிறார். ஏனெனில் தந்தை
எல்லைக்கப்பாற்பட்டவராக இருக்கிறார். இது கூட நாடகத்தில்
உருவாக்கப்பட்டுள்ளது. சிவபாபா இவர்களை இப்படி பணக்காரராக
ஆக்குகிறார். ஆகையால் பக்திமார்க்கத்தில் பிறகு பூஜை
செய்வதற்காக அவருடைய கோயில் கட்டுகின்றனர். யார் பூஜைக்குரிய
வராக ஆக்கினாரோ முதலில் அவருடைய பூஜை செய்கின்றனர். பாபா தினந்
தோறும் போதையை அதிகரிப்பதற்காக நிறைய நிறைய புரிய வைக்கிறார்.
ஆனால் வரிசைக் கிரமமான முயற்சியின்படி யார் புரிந்து
கொள்கிறார்களோ, அவர்கள் சேவையில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
புத்துணர்வோடு இருக்கிறார்கள். இல்லையானால் வாடிப் போய்விடு
கிறார்கள். குழந்தைகள் தெரிந்திருக்கின்றனர் - இவர்கள்
பாரதத்தில் இராஜ்யம் செய்திருந்தபோது வேறெந்த தர்மமும் இல்லை.
தேவதா தர்மம் மட்டும் இருந்தது. பிறகு மற்ற மற்ற தர்மங்கள்
வந்தன. இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்று
இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர் கள். பள்ளிக்கூடத்தில்
லட்சியம் இருக்க வேண்டும் அல்லவா. சத்யுகத்தின் ஆரம்பத்தில்
இவர்கள் இராஜ்யம் செய்தனர். பிறகு 84 பிறவிச் சக்கரத்தில்
வருகின்றனர். இது எல்லைக்கப் பாற்பட்ட படிப்பு என்று குழந்தைகள்
தெரிந்திருக்கின்றனர். பல பிறவிகளாக எல்லைக்குட்பட்ட படிப்பை
படித்து வந்தீர்கள், இதில் மிக உறுதியான நிச்சயம் வேண்டும்.
முழு சிருஷ்டியையும் மாற்றக்கூடிய, புதியதாக்கக்கூடிய, அதாவது
நரகத்தை சொர்க்கமாக்கக்கூடிய தந்தை நமக்கு கல்வி கற்றுக்
கொடுக்கிறார். அனைவரும் முக்திதாமத்திற்கு கண்டிப்பாக செல்ல
முடியும். அனைவரும் சொர்க்கத்திற்கு வர முடியாது. இப்போது
நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள் - பாபா நம்மை இந்த விஷக்கடல்
வேஷ்யாலத்திலிருந்து விடுவிக்கிறார். இப்போது இது வேஷ்யாலய
மாகும். இது எப்போதிருந்து ஆரம்பமாகிறது என்பதையும் நீங்கள்
தெரிந்து கொண்டீர்கள். 2500 வருடங்கள் ஆனபிறகு இந்த இராவண
இராஜ்யம் ஆரம்பமானது. பக்தி ஆரம்பமானது. அந்த நேரம் தேவி தேவதா
தர்மத்தினராக இருந்தார்கள், பிறகு வாம மார்க்கத்தில்
வந்துவிட்டனர். பக்திக்காகத் தான் கோயில்களைக் கட்டுகின்றனர்.
சோம நாத் கோயில் எவ்வளவு பெரியதாக உருவாக்கப் பட்டுள்ளது.
வரலாறையும் கேட்டுள்ளீர்கள். கோயிலில் என்ன இருந்தது! ஆக அந்த
நேரத்தில் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்திருப்பார்கள். ஒரே ஒரு
கோயில் மட்டும் இருந்திருக்காது. வரலாற்றில் ஒரு கோயிலின் பெயரை
மட்டும் போட்டுள்ளார்கள். நிறைய ராஜாக்கள் கோயில்
கட்டுகிறார்கள். ஒருவர் மற்றொருவரைப் பார்த்து அனைவரும் பூஜை
செய்வார்கள் அல்லவா! நிறைய கோயில்கள் இருக்கும். ஒரு கோயிலை
மட்டும் கொள்ளை யடிக்கவில்லை. அருகில் மற்ற கோயில்களும்
இருந்திருக்கும். அங்கே கிராமங்கள் தூர தூரமாக இருப்பதில்லை.
ஒவ்வொரு கிராமமும் அருகாமையில் தான் இருக்கும், ஏனெனில் அப்போது
ரயில் போன்றவை கிடையாது. ஒன்றுக்கொன்று மிக அருகாமையில்
இருக்கும், பிறகு மெதுமெதுவாக உலகம் விரிவடைகிறது.
இப்போது குழந்தைகளாகிய நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பெரியதிலும் பெரிய தந்தை உங்களுக்கு கற்றுத் தந்துக்
கொண்டிருக்கிறார். இந்த போதை இருக்க வேண்டு மல்லவா. வீட்டில்
ஒருபோதும் சண்டையிடவோ அழவோ கூடாது. இங்கே நீங்கள் தெய்வீக
குணங்களை தாரணை செய்ய வேண்டும். இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில்
குழந்தை களாகிய உங்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இந்த
இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் மாற்றமடை கிறீர்கள். பழைய
உலகத்திலிருந்து புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும். இப்போது
நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் படித்துக்
கொண்டிருக்கிறீர்கள். பகவான் உங்களுக்கு கற்பிக்கிறார். முழு
உலகத்தையும் மாற்றுகிறார். பழைய உலகத்தை புதிய உலகமாக
மாற்றுகிறார். அந்த புதிய உலகத்திற்கு நீங்கள் எஜமானராக ஆக
வேண்டும். உங்களுக்கு அதற்கான யுக்தி சொல்ல பாபா
கட்டுப்பட்டிருக்கிறார். ஆக குழந்தை களாகிய நீங்களும் அதை
நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் இங்கே வசிப்பவர்களே அல்ல என்று
நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நம்முடைய இராஜ்யம்
இருந்தது என்று நாம் தெரியாமல் இருந்தோம். இப்போது பாபா புரிய
வைத்துள்ளார் - இராவண இராஜ்யத்தில் நீங்கள் மிகவும் துக்கமாக
இருக்கின்றீர்கள். இதை விகார உலகம் என்று சொல்லப்படுகிறது.
இந்த தேவதைகள் சம்பூர்ண நிர்விகாரிகள் ஆவர். மனிதர்கள் தன்னை
விகாரி என்று சொல்லிக் கொள்கின்றனர். இந்த இராவண இராஜ்யம்
எப்போது ஆரம்பமானது? என்ன ஆனது? எதுவும் யாருக்கும் தெரியாது.
புத்தி முற்றிலும் தமோபிரதானம் ஆகிவிட்டது. சத்யுகத்தில்
தங்கபுத்தியாக இருந்தது. அப்போது உலகத்தின் எஜமானர்களாக
இருந்தோம். அளவற்ற சுகத்தில் இருந்தோம். அதனுடைய பெயரே சுகதாமம்
ஆகும். இங்கேயோ அளவற்ற துக்கம் உள்ளது. சுகத்தின் உலகம்
எப்படிப்பட்டது, துக்கத்தின் உலகம் எப்படிப்பட்டது என்பதையும்
பாபா புரியவைக்கிறார். சுகம் எவ்வளவு காலம், துக்கம் எவ்வளவு
காலம் நடக்கிறது என்ற எதுவும் மனிதர்களுக்குத் தெரியாது.
உங்களில் கூட வரிசைக்கிரமமாக புரிந்துகொள்கிறீர்கள். புரிய
வைக்கக்கூடியவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆவார். கிருஷ்ணரை
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை என்று சொல்ல மாட்டார்கள். அப்படி
மனதில் நினைப்பதில்லை. ஆனால் யாரை தந்தை என்று சொல்ல வேண்டும்
என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. எனக்கு நிந்தனை செய்கிறார்கள்
என்று பகவான் புரிய வைக்கிறார். நான் உங்களை தேவதை ஆக்குகிறேன்.
எனக்கு எவ்வளவு நிந்தனை செய்து விட்டார்கள், தேவதைகளையும்
எவ்வளவு நிந்தனை செய்துவிட்டார்கள், அந்தளவு மந்தபுத்தி
மனிதர்களாகிவிட்டனர். பஜ கோவிந்தம்... என்று சொல்கிறார்கள்.
பாபா சொல்கிறார் - ஹே மந்தபுத்தி மனிதர்களே,
கோவிந்தம்-கோவிந்தம், ராம்-ராம் என்று சொல்லும் போது நாம் யாரை
பூஜிக்கின்றோம் என்பது புத்தியில் வருகிறதா? கல்புத்தியை
மந்தபுத்தி என்று தான் சொல்வார்கள். பாபா சொல்கின்றார் -
இப்போது நான் உங்களை உலகத்தின் எஜமானர் ஆக்குகின்றேன். பாபா
அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஆவார்.
நீங்கள் உங்களுடைய குடும்பம் முதலானவற்றில் எவ்வளவு சிக்கிக்
கொண்டிருக்கிறீர்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். பகவான்
சொல்பவற்றை புத்தியில் கொண்டு வர வேண்டும், ஆனால் அசுர வழியில்
நடந்து மறந்து விட்டுள்ளனர் எனும்போது ஈஸ்வரிய வழியில் எப்படி
நடப்பார்கள்! கோவிந்தன் என்பவர் யார்? என்னவாக இருக்கிறார்
என்பதைக் கூட தெரிந்து கொள்ளவில்லை. தந்தை புரிய வைக்கிறார் -
பாபா தாங்கள் பல முறை எங்களுக்குப் புரிய வைத்திருக்கிறீர்கள்
என்று நீங்கள் சொல்வீர்கள். இதுவும் கூட நாடகத்தில்
பதிவாகியுள்ளது, பாபா நாங்கள் மீண்டும் தங்களிடமிருந்து இந்த
ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நரனிலிருந்து
நாராயணனாக கண்டிப்பாக ஆவோம். மாணவர்களுக்கு படிப்பு குறித்த
போதை கண்டிப்பாக இருக்கும் - நாம் இப்படி ஆகப் போகிறோம்.
நிச்சயம் இருக்கும். நீங்கள் அனைத்து குணங்களிலும் நிரம்பியவர்
ஆக வேண்டும் என்று இப்போது தந்தை கூறுகிறார். யாரிடமும் கோபம்
முதலானது இருக்கக் கூடாது. தேவதைகளிடம் 5 விகாரங்கள் இருப்ப
தில்லை. ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். முதன் முதலாக ஸ்ரீமத்
சொல்கிறது - தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள்.
ஆத்மாக்களாகிய நீங்கள் பரமதாமத்திலிருந்து நடிப்பை நடிக்க
வந்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த சரீரம் அழியக் கூடியது.
ஆத்மா அழிவற்றது. ஆக நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து
கொள்ளுங்கள் - நான் ஆத்மா பரந்தாமத்திலிருந்து இங்கே
நடிப்பதற்காக வந்திருக்கிறேன். இப்போது இங்கே
துக்கமுற்றவர்களாக ஆகும்போது முக்தி தாமத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால் உங்களை யார்
தூய்மையாக்குவார்கள்? ஒருவரைத்தான் அழைப்பதும் கூட, எனவே தந்தை
வந்து கூறுகிறார் - என்னுடைய இனிமையிலும் இனிமையான குழந்தைகளே,
தன்னை ஆத்மா என புரிந்து கொள்ளுங்கள், தேகம் என்று புரிந்து
கொள்ளாதீர்கள். நான் ஆத்மாக்களுக்கு வந்து புரிய வைக்கிறேன்.
ஆத்மாக்கள்தான் அழைக்கின்றனர் - ஓ பதித பாவனரே வந்து
தூய்மையாக்குங் கள். பாரத்த்தில்தான் தூய்மையாக இருந்தனர்.
இப்போது மீண்டும் அழைத்துக் கொண்டிருக் கின்றனர் -
பதீதத்தி-ருந்து பாவனமாக்கி சுக தாமத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள். கிருஷ்ணருடன் உங்களுடைய அன்பு இருக்கவே செய்கிறது.
கிருஷ்ணருக்காக அனைத்திலும் அதிகமாக விரதம், நியமங்கள்
முதலானவற்றை கடைப்பிடிக்கின்றனர். நீங்களும் இவ்வளவு செய்வது
பிறருக்கு சொல்வதற்காக அல்ல, நீங்கள் கிருஷ்ணபுரிக்குச்
செல்வதற்காக செய் கின்றீர்கள். உங்களை யாரும் நிறுத்துவதில்லை.
அந்த மனிதர்கள் அரசாங்கத்திற்கு முன்பாக உண்ணாவிரதம் முதலானவை
களை செய்கின்றனர், தொந்தரவு செய்வதற்காக பிடிவாதம்
பிடிக்கின்றனர். நீங்கள் யாரிடமும் மறியல் போராட்டம் செய்ய அமர
வேண்டியதில்லை. யாரும் உங்களுக்கு அதை கற்றுக் கொடுக்கவில்லை.
ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசர். ஆனால் இது
யாருக்கும் தெரிவதில்லை. கிருஷ்ணரை அவர்கள் துவாபர யுகத்திற்கு
கொண்டு சென்று விட்டனர். தந்தை புரிய வைக்கிறார் - இனிமையிலும்
இனிமையான குழந்தைகளே, பக்தி மற்றும் ஞானம் இரண்டும் தனித்
தனியானதாகும். ஞானம் பகல் மற்றும் பக்தி இரவாகும். யாருடைய இரவு?
பிரம்மா வுடைய இரவு மற்றும் பகல். ஆனால் இதனுடைய அர்த்தத்தை
குருவும் புரிந்து கொள்வ தில்லை, சீடர்களும் புரிந்து
கொள்வதில்லை. ஞானம், பக்தி மற்றும் வைராக்கியத்தின் ரகசியத்தை
பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைத்துள்ளார். ஞானம்
பகல், பக்தி இரவு மற்றும் அதன் பிறகு வைராக்கியம் வருகிறது.
மனிதர்கள் தெரிந்து கொள்வதில்லை. ஞானம், பக்தி, வைராக்கியம்
என்ற வார்த்தைகள் துல்லியமானவையாகும். ஆனால் மனிதர்கள்
அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இப்போது குழந்தைகளாகிய
நீங்கள் புரிந்து கொண்டீர் கள், ஞானத்தை தந்தை கொடுக்கின்றார்,
அதன் மூலம் பகல் ஏற்படுகிறது. ஞானத்தின் மூலம் பகல், பக்தியின்
மூலம் இரவு ஆகும். இரவில் நீங்கள் வனவாசத்தில்
அம்ர்ந்திருக்கிறீர்கள், பிறகு பகலில் நீங்கள் எவ்வளவு
செல்வந்தர்களாக ஆகி விடுகிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
தன்னுடைய மனதிடம் கேட்க வேண்டியவை: -
1. பாபாவிடமிருந்து இவ்வளவு குஷியின் பொக்கிஷம் கிடைக்கிறது,
அது புத்தியில் அமர்கிறதா?
2. பாபா நம்மை உலகின் எஜமானராக ஆக்க வந்துள்ளார். ஆக,
அப்படிப்பட்ட நடத்தை இருக்கிறதா? பேசக்கூடிய விதம் அப்படி
இருக்கிறதா? ஒருபோதும் யாரையும் திட்டு வதில்லை தானே?
3. தந்தையிடம் உறுதி மொழி கொடுத்தப் பிறகு, எந்த ஒரு
தூய்மையற்ற காரியமும் செய்வதில்லைதானே?
வரதானம்:
நீங்கள் சாட்சி ஸ்திதியில் நிலைத்து சூழ்நிலைகளை விளையாட்டாக
பார்க்கும் சாட்சி ஆத்மா ஆகுங்கள்.
எவ்வளவு ஆட்டுவிக்கும் சூழ்நிலையாக இருந்தாலும், சாட்சி
நிலையில் நிலைத்துவிடுங்கள். அப்பொழுது பொம்மலாட்டம் போல்
அனுபவம் செய்வீர்கள். உண்மை இல்லை. உங்கள் சுய பெருமையில்
இருந்து கொண்டே விளையாட்டைப் பாருங்கள். சங்கமயுகத்தின் மிகப்
உயர்ந்த பெருமை திருப்திமணியாக ஆவது மற்றும் சாட்சியாக
இருப்பதாகும். இந்த சுவமானத்தில் இருக்கும் ஆத்மா எந்த
குழப்பத்திலும் இருக்க முடியாது. சங்கமயுகத்தில் பாப்தாதாவின்
சிறப்புப் பரிசு திருப்தியாகும்.
சுலோகன்:
மகிழ்ச்சி நிறைந்தவராக இருந்தால் உங்கள் மனதின் மகிழ்ச்சி
முகத்தில் தெளிவாகத் தெரியும்