25.01.26    காலை முரளி            ஓம் சாந்தி 02.04.2008      பாப்தாதா,   மதுபன்


இந்த வருடம் நான்கு பாடத்திலும் அனுபவத்தின் அதிகாரி ஆகுங்கள், இலட்சியம் மற்றும் இலட்சணத்தில் சம்மானவர் ஆகுங்கள்.

இன்று பாப்தாதா நாலாபக்கத்திலுமுள்ள தன்னுடைய திருப்தி மணிகளை பார்த்துக் கொண்டி ருக்கிறார். ஒவ்வொருவரின் முகத்திலும் திருப்தியின் ஜொலிப்பு தென்படுகிறது. திருப்தி மணிகள் தனக்கும் அன்பானவர்களாக இருப்பார்கள், தந்தைக்கும் அன்பானவர்களாக இருப்பார்கள். குடும்பத் திற்கு அன்பானவர்களாக இருப்பார்கள். ஏனெனில் திருப்தி என்பது மகான் சக்தியாகும். அனைத்து பிராப்திகளும் நிறைந்து இருக்கும் பொழுது தான் திருப்தி தாரணை ஆகும். ஒருவேளை பிராப்திகள் குறைவாக இருந்தால் திருப்தியும் கூட குறைவாக இருக்கிறது. திருப்தி மற்றும் சக்தி களையும் கூட தூண்டிவிடப்படுகிறது. திருப்தியான சூழ்நிலை மற்றவர்களுக்கும் கூட சக்திக்கு தகுந்தவாறு திருப்தியின் வைப்ரேஷனை கொடுக்கிறது. யார் திருப்தியாக இருக்கிறார்களோ, அவர்களின் அடையாளம், மகிழ்ச்சியாக தென்படுகிறார்கள். எப்பொழுதுமே முகம் இயல்பாகவே புன்முறுவலுடன் இருக்கும். திருப்தியான ஆத்மாவிற்கு முன்னால் எந்தவொரு பிரச்சனையும் சுயத்தின் மனநிலையை அசைக்க முடியாது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், திருப்தியான ஆத்மாவிற்கு அது ஒரு கார்ட்டூன் ஷோவின் (பொம்மலாட்டமாக) விளையாட்டாக தென்படும். ஆகையால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழப்பத்தில் வருவதில்லை, மேலும் பிரச்சனைகள் அவர்கள் மீது போர் புரியாது. அது தோல்வி அடைந்து விடுகிறது. ஆகையால் அதீந்திரிய சுகத்தின் மனதிற்கு இதமான வாழ்க்கையை அனுபவம் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு வரும் தன்னை சோதனை செய்யுங்கள், சோதனை செய்ய வருகிறதல்லவா. வருகிறதா? யாருக்கு தன்ன்னை சோதனை செய்ய வருகிறது, மற்றவர்களை அல்ல, தன்னை சோதனை செய்ய தெரிகிறதா, அவர்கள் கையை உயர்த்துங்கள். சோதனை செய்ய வருகிறதா? நல்லது . வாழ்த்துக்கள்.

பாப்தாதாவின் வரதானமும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தினந்தோறும் அமிர்தவேளையில் வித விதமான ரூபத்தில் குஷியாக இருங்கள், ஆசீர்வாதங்களை பெறுங்கள், இதை தான் கிடைக்கிறது. தினந்தோறும் கொடுக்கும் வரதானம் அனைவருக்கும் கிடைக்கிறது. பாப்தாதா அனைவருக்கும் ஒன்று போலவே, ஒன்றாகவே வரதானம் கொடுக்கிறார். ஆனால் எதில் வித்தியாசம் ஏற்படுகிறது.? நம்பர்வார் ஏன் ஏற்படுகிறது? வள்ளலும் (கொடுப்பதும்) ஒருவரே, பரிசு பொருளும் ஒன்று தான். சிலருக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் கொடுப்பது கிடையாது. பரந்த மனதோடு தான் கொடுக்கிறார், ஆனால் என்ன வித்தியாசம் ஏற்படுகிறது? இதனுடைய அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் இதுவரை பாப்தாதாவிடம் இந்தவொரு சப்தம் வருகிறது. என்னவென்று தெரியு மல்லவா? அவ்வப்பொழுது சிறிதளவு, இந்தவொரு சப்தம் இதுவரையும் கூடவே வருகிறது? பிராமண ஆத்மாக்களின் வாழ்க்கை என்ற அகராதியில் இந்த இரண்டு வார்த்தைகள் நீக்க வேண்டும் என்று பாப்தாதா சொல்கிறார். அழிவற்ற பாபா இருக்கிறார், அழிவற்ற பொக்கிஷம் இருக்கிறது, நீங்கள் அனைவரும் கூட அழிவற்ற சிரேஷ்ட ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். அந்த வார்த்தை என்னவாக இருக்கும்? அவ்வபொழுது அல்லது சதா? ஒவ்வொரு பொக்கிஷத்தையும் சோதனை செய்யுங்கள் - சர்வசக்திகள் சதா இருக்கிறதா? அனைத்து குணங்களும் சதா இருக்கிறதா? உங்களுடைய பக்தர்கள் - உங்கள் குணங்களை பாடும் பொழுது என்னவென்று சொல்லி பாடுகிறார்கள்? அவ்வப்பொழுது குணத்தின் வள்ளல் என்று பாடுகிறார்களா? பாப்தாதா ஒவ்வொரு வரதானத்திலும் சதா என்ற வார்த்தையை தான் பாடுகிறார். சதா சர்வச்க்திவான், சில நேரம் சர்வசக்திவான், சில நேரம் சர்வசக்திவான் என்று கூறுகிறாரா? ஒவ்வொரு நேரமும் இரண்டு வார்த்தைகள் நீங்களும் சொல்கிறீர்கள், பாபாவும் சொல்கிறார். சமமானவர் ஆகுங்கள். சிறிதளவு சமமானவர் ஆகுங்கள் என்று சொல்வது கிடையாது. சம்பன்னம் மற்றும் சம்பூரணம், குழந்தைகள் அவ்வப்பொழுது என்ன செய்கிறீர்கள்? பாப்தாதாவும் கூட விளையாட்டை பார்க்கிறார் அல்லவா. குழந்தைகளின் விளையாட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறார். குழந்தைகள் என்னவெல்லாம் செய்கிறார்கள், ஒரு சிலர் தான், அனைவரும் அல்ல. என்ன வரதானம் கிடைக்கிறதோ, அதைப் பற்றி சிந்தனை செய்கிறார்கள், வர்ணனை செய்து நோட்டு புத்தகத்திலும் எழுதிக் கொள்கிறார்கள், நினைவும் செய்கிறார்கள், ஆனால் வரதானம் என்ற விதைக்கு பலனை அறுவடை செய்வதில்லை. விதையிலிருந்து பழம் (பலன்) வருவதில்லை. வர்ணனை மட்டும் செய்து மிக நல்ல வரதானம் என்று குஷியை அடைந்து விடுகிறார்கள். வரதானம் என்பது விதையாகும். ஆனால் எந்தளவு பலனளிக்கக் கூடியதாக இருக்கிறதோ, அந்தளவு வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும். பலன் அளிப்பதற்கான இரகசியம் என்ன? நேரத்திற்கு தகுந்தப்படி காரியத்தில் பயன்படுத்துவது.. நோட்புத்தகத்தில் எழுதுவது, மிக நன்றாக இருகிறது, மிக நன்றாக இருக்கிறது என்று மட்டும் வர்ணனை செய்கிறார்கள், ஆனால் நடைமுறையில் பயன்படுத்த மறந்துவிடுகிறார்கள். பாபா மிக நன்றாக வரதானம் கொடுத்து இருக்கிறார், ஆனால் எதற்காக கொடுத்திருக்கிறார். அதை பலனுள்ளதாக மாற்றுவதற்காக கொடுத்திருக்கிறார். விதையின் மூலம் தான் ப,லன் அதிகரிக்கிறது. வரதானத்தை சிந்தனை செய்கிறீர்கள், ஆனால் வரதான சொரூபம் ஆவதில் நம்பர்வார் ஆகிவிடு கிறார்கள். மேலும் பாப்தாதா ஒவ்வொருவரின் பாக்கியத்தை பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறார். பாப்தாதாவின் மனதின் ஆசையை சொல்லி இருக்கிறார். அனைவரும் கையையும் தூக்கி இருந்திருந்தீர்கள். நாம் காரணத்தை நிவாரணம் செய்து சமாதானம் சொரூபம் ஆவோம் என்பது நினைவில் இருக்கிறதா.! வீட்டு பாடம் (ட்ர்ம்ங் ஜ்ர்ழ்ந்) நினைவில் இருக்கிறதா? சில குழந்தைகள் ஆன்மீக உரையாடலில், கடிதங்கள் மூலம் இ-மெயில் மூலம் ரிசல்டை எழுதியும் அனுப்புகிறார்கள். நல்லது கவனம் இருக்கிறது, ஆனால் பாபாவின் வார்த்தை என்னவாக இருக்கிறது, சதா. அவ்வாறு இருக்கிறதா? உங்கள் அனைவரில் யாரெல்லாம் வந்தீர்களோ, கேட்டும் இருக்கலாம், படித்தும் இருக்கலாம், ஆனால் இந்த ஒரு மாத ஹோம் வொர்க்கில், ஒரு மாதம் தான் ஆனது. அதிகம் ஆகவில்லை. ஒரு மாதத்திற்கு குறிக்கொள் வைக்கப்படுகிறது. ஒருவர் மற்றவரிடத்தில் வர்ணனையும் கூட செய்கிறீர்கள். யார் இந்த ஒரு மாத வீட்டு பாடத்தில் நல்ல மதிபெண்களை பெறக்கூடிய வர்களாக இருக்கிறீர்களோ, அவர்கள் கையை உயர்த்துங்கள். யார் வெற்றி பெறுவீர்கள், வெற்றி பெறுவீர்களா. பாஸ் வித் ஆனர். பாஸ் வித் ஆனர் ஆனவர்கள் - எழுந்திருங்கள். பாஸ் வித் ஆனர் தர்ஷனம் செய்ய (பார்க்க) வேண்டும் அல்லவா. தாய்மார்கள் இல்லையா. சகோதரிகளில், டீச்சர்ஸ் (ஆசிரியர்கள்) கை தூக்க இல்லையா. யாரும் இல்லையா? மதுபனை சேர்ந்தவர்கள். இது மிகவும் குறைவான ரிசல்ட்டாக இருக்கிறது. (மிகவும் குறைவானவர்கள் தான் கையை உயர்த்தினார்கள். நல்லது. செண்டரிலும் இருப்பார்கள். வாழ்த்துக்கள், கையை தட்டுங்கள். பாப்தாதாவிடம் யாருக்கு (எவ்வளவு) அன்பு இருக்கிறது? என்று பாப்தாதா கேட்கிறார்? பாப்தாதா புன்முறுவல் செய்கிறார். என்ன பதில் கொடுக்கிறார். பாபா, இந்தளவு என்று சொல்ல முடியாது. நல்ல பதிலை கொடுக்கிறார். பாப்தாதாவும் குஷி அடைகிறார். அன்பினுடைய நிரூபணம் இருக்கிறது? யாரிடம் அன்பு இருக்கிறதோ? இன்றைய உலகத்தில் தேக உணர்வின் அன்பில் பலியாகி விடுகிறார்கள். பரமாத்ம அன்பிற்கு பின்னால், பாபா சொல்கிறார் என்றால் குழந்தைகளுக்கு செய்ய கட்டினமா என்ன? நல்ல நல்ல பாடலை தான் பாடுகிறார்கள்! பாபா நாங்கள் உங்களிடம் தீபத்தில் பலியாகும் விட்டில் பூச்சியாக இருக்கிறோம். எனவே காரணம் என்ற வார்த்தையை சுவாஹா (அர்பணம்) செய்ய முடியவில்லையா?

எனவே இப்பொழுது இந்த வருடத்தின் கடைசி சுற்று (பமதச) வந்துவிட்டது. அடுத்த வருடம் என்ன நடக்கும் என்பதை நீங்களும் பாபா பார்த்துக் கொண்டியிருக்கிறீர்கள், பார்ப்பீர்கள். இந்த சமயத்தை பார்த்து, குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஒரு வார்த்தையை சொல்கிறீர்கள் அல்லவா. நேரத்தின் கூக்குரல். பக்தர்களின் குரல், நேரத்தின் குரல், துக்கமான ஆத்மாக்களின் கூக்குரல், உங்களுக்கு அன்பானவரின் குரல், உதவி செய்த ஆத்மாக்களின் குரல், நீங்கள் நிறைவேற்ற முடியும். உங்களூடைய டைட்டில் (பட்டபெயர்) என்ன? உங்களுடைய கடமை என்ன? எந்தவொரு கடமை செய்வதற்காக பிராமணர் ஆகியுள்ளீர்கள்? உலகத்தை மாற்றம் செய்பவர் என்ற டைட்டில் உங்களுடையதாகும். உலகத்தை மாற்றம் செய்யக்கூடிய உங்களுடைய கடமைக்கு துணையாக இருப்பது யார்? பாப்தாதாவுடன் இந்த காரியத்தில் நிமித்தமாக இருக்கிறீர்கள். எனவே என்ன செய்ய வேண்டும்? இப்பொழுதும் கூட கையை தூக்குவீர்கள், செய்தீர்க்கள் என்றால், அனைவரும் கையை தூக்கிவிடுகிறீர்கள். இலட்சியம் வைக்கிறீர்கள், பாப்தாதா பார்க்கிறார், முழுவதுமாக இந்த வருடத்தின் சீசனில் அனைவரும் சங்கல்பம் (எண்ணம்) செய்தீர்கள், வெற்றிக்கான சாவி திடத்தன்மை - செய்தே ஆக வேண்டும். அதற்கு பதிலாக அவ்வப்போது செய்துக் கொண்டிருக் கிறோம், போய் கொண்டிருக்கிறது. செய்து விடுவோம். . இந்த எண்ணம் திடத்தன்மையை சாதாரணமாக ஆக்கிவிடும். திடத்தன்மையில் காரணம் என்ற வார்த்தையே வராது. நிவாரணம் கிடைத்து விடும். காரனம் வந்தாலும் கூட சோதனை செய்யும் பொழுது, காரணம் நிவரானம் ஆகிவிடும்.

பாப்தாதா ரிசல்ட்டை சோதனை செய்யும் பொழுது என்ன பார்த்தார்? ஞானம், யோகா, தாரணை சொரூபம், சேவாதாரி, இந்த 4 பாடத்திலும் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு ஞானத்தை, யோகத்தை, தாரணையையும் செய்துக் கொண்டிருக்கிறார்கள், சேவையும் கூட செய்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் நான்கு பாடத்திலும் அனுபவ சொரூபத்தில், அனுபவத்தின் அத்தாரிட்டியில் - அதில் குறைபாடு தென்படுகிறது. அனுபவ சொரூபம், ஞான சொரூபத்திலும் கூட, அனுபவ சொரூபம் என்றால், ஞானத்தை நாலஞ் (ஃசஞரகஊஉஏஊ) என்று சொல்லப்படுகிறது. எனவே அனுபவ மூர்த்தில் என்றால் ஞானம், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, ஞானத்தின் லைட் மற்றும் மைட், ஆகும். எனவே அனுபவ சொரூப என்றாலே, ஞானம் நிறைந்த ஆத்மாவின் ஒவ்வொரு செயலும் லைட் மற்றும் மைட் (லேசானத்தன்மை, சக்தி) இயல்பாக இருக்க வேண்டும். ஞானி என்றாலே ஞானம் நிறைந்தவர். ஞானத்தை தெரிந்துக் கொள்வது, வர்ணனை செய்வதன் கூடவே ஒவ்வொரு செயலிலும் லைட் மைட்டாக இருக்க வேண்டும். அனுபவ சொரூபத்தின் மூலம் ஒவ்வொரு செயலும், இயல்பாக, சிரேஷ்டமானதாக மற்றும் வெற்றி பெறும். கடின உழைப்பு செய்ய வேண்டியிருக்காது. ஏனென்றால் ஞானத்தின் அனுபவசாலியாக இருக்கிறீர்கள். அனுபவத்தின் அத்தாரிட்டி அனைத்து அத்தாரிட்டியை விட சிறந்தது. ஞானத்தை தெரிந்துக் கொள்வதற்கும், ஞானசொரூபத்தின் அத்தாரிட்டியில் இருந்து ஒவ்வொரு செயலை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அனுபவசலியாக இருக்கிறீர்களா? சோதனை செய்யுங்கள். நான்கு பாடத்திலும், ஆத்மாவாக இருக்கிறேன். ஆனால் அனுபவ சொரூபமாக இருந்து அனுபவ சொரூபமாக இருந்து செயல் புரிகிறீர்களா? அனுபவத்தின் அத்தாரிட்டி என்ற இருக்கையில் அம்ர்ந்திருந்தால் சிரேஷ்ட காரியம், வெற்றி சொரூபம் நிறைந்த செயலின் அத்தாரிட்டிக்கு முன்னால் இயல்பாகவே தென்படும். யோசிக்கிறீர்கள், ஆனால் அனுபவ சொரூபம் ஆக வேண்டும். யோக யுக்த், இராஜ யுக்த் இயல்பாக இருக்கும். தாரணையிலும் கூட அனைத்து குணங்களும், தானாகவே ஒவ்வொரு செயலிலும் தென்படும். அப்படிப்பட்ட அனுபவ சொரூபத்தில் சதா இருக்க வேண்டும். அனுபவம் என்ற சீட்டில் செட் ஆக வேண்டும். இதில் கவனம் வைக்க வேண்டும். இது அவசியமாக இருக்கிறது. அனுபவத்தின் அத்தாரிட்டி என்ற இருக்கை மிகவும் மகான் தன்மை நிறைந்தது. அனுபவசாலியை மாயா அழிக்க முடியாது. மாயாவின் அதிகாரத்தை விட அனுபவ சாலியின் அதிகாரம் கோடி மடங்கு உயர்ந்தது. யோசிப்பது தனி, சிந்தனை செய்வது தனி, அனுபவம் நிறைந்தவராக இருந்து நடந்துக் கொள்வது. இப்பொழுது இதனுடைய அவசியம் இருக்கிறது.

இந்த வருடத்தில் என்ன செய்வீர்கள்? பாப்தாதா பார்க்கிறார். ஒரு பாடத்தில் அதிகபடியாக தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த பாடம் என்ன? சேவை என்ற பாடத்தில். நாலா புறத்திலிருந்தும் பாப்தாதா விடம் சேவைக்கான மிக நல்ல நல்ல செய்திகள் வருகின்றன. மேலும் ஊக்க உற்சாகமான செய்திகள் இந்த வருடத்தின் கணக்குப்படி நன்றாக காண்பித்துள்ளீர்கள். ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொரு ஜோனும் வித விதமான ரூபத்தில் சேவையில் வெற்றி அடைந்துள்ளார்கள். இதற்காக பாப்தாதா ஒவ்வொரு ஜோனிற்கும் ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் பலகோடி மடங்கு வாழ்த்துக் களை கொடுத்துக் கொண்டிருகிறார். வாழ்த்துக்கள். நல்ல நல்ல திட்டங்களை உருவாக்குகிறீர்கள். ஆனால் இப்பொழுது நேரத்திற்கு தகுந்தபடி அஷானக் (எதிர்பாரவிதமாக) சீசனாக (காலக்கட்டமாக) இருக்கிறது. இந்த வருடத்தில் எத்தனை பிராமணர்கள் தீடிரென்று சென்றுவிட்டனர் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம், கேட்டிருக்கலாம், திடீரென்று ஒலிக்கும் மணி இப்பொழுது மிக வேகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி இப்பொழுது இந்த வருடத்தில் நான்கு பாடத்திலும் அனுபவ சொரூபமாக எந்தளவு ஆகியிருக்கிறேன். ஏனென்றால் நான்கு பாடத்திலும் நல்ல மதிப் பெண் பெற வேண்டும் ஒருவேளை ஏதாவதொரு பாடத்தில் தேர்ச்சிக்கான மதிப்பெணை (பாஸ் மார்க்) விட குறைவாக இருந்தால், பாஸ்வித் ஆனரின் மாலை, பாப்தாதாவின் கழுத்து மாலை எப்படி ஆவீர்கள்? ஏதாவதொரு விதத்தில் தோல்வி அடைபவர் கள், பாபாவின் கழுத்து மணி மாலை ஆக முடியாது. மேலும் இங்கு கையை உயர்த்தும் பொழுது அனைவரும் என்ன சொல்கிறீர்கள்? இலட்சுமி நாராயணன். ஆவோம். இலட்சுமி நாராயணராக அல்லது இலட்சுமி நாரயணரின் குடும்பத்தில் உறுப்பினராக இருப்பது, அப்படி ஆவது கூட உயர்ந்த பதவியாக இருக்கிறது. ஆகையால் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சொல்கிறார், இப்பொழுது மிக வேகமாக பறக்கும் கலையில் பறந்துக் கொண்டே இருங்கள். மற்றும் தனது பறக்கும் கலையின் வைப்ரேஷன் மூலம் வாயுமண்டலத்தில் (சுற்றுப்புற சுழலில்) உதவியின் நிறைந்த சுழலை பரப்புங்கள்., இயற்கையை மாற்றம் செய்து காட்டுவோம் என்று நீங்கள் அனைவரும் இயற்கைக்கு சவால் விட்டீர்கள். உறுதிமொழி செய்துள்ளீர்கள் அல்லவா. உறுதிமொழி செய்துள்ளீர்கள் தானே/ தலையை ஆட்டுங்கள், கையை அல்ல. எனவே தன் இனத்தை சேர்ந்த மனித ஆத்மாக்களை துக்கம் மற்றும் அசந்தியிலிருந்து மாற்றத்தை கொண்டு வர முடியாதா? முதலாவது நீங்கள் உறுதி மொழி செய்துள்ளீர்கள், இரண்டாவது பாப்தாதாவிற்கும் கூட உறுதிமொழி செய்திருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் உங்களுடைய காரியத்திற்கு கூடவே இருக்கிறோம், பரந்தாமத்திலும் கூடவே இருக்கிறீர்கள். மேலும் இராஜ்யத்திலும் கூட பிரம்மா கூடவே இருக்கிறோம். இந்த உறுதிமொழியை செய்தீர்கள் இல்லையா! எனவே கூடவே வருவோம், கூடவே இருப்போம் மேலும் இப்பொழுதும் கூடவே இருக்கிறோம். எனவே பாபாவின் இஷார நேரத்திற்கு ஏற்றவாறு நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். - அஷானக், எவரெடி. தாதிஜி அவர்கள் சென்றுவிடு வார்கள் என்று நினைத்தீர்களா என்ன! திடீரென்று விளையாட்டை பார்த்தீர்கள். தானே.

இந்த வருடத்தில் எவரெடி. பாபாவின் மனதின் ஆசைகளை நிறைவேற்றக்கூடிய ஆசைகளின் தீபம் ஆகியே தீர வேண்டும். பாபாவின் ஆசைகளை தெரிந்துள்ளீர்கள். ஆக வேண்டுமா.? ஆகிவிடலாம், பார்த்துக் கொள்ளலாம். யார் ஆகியே தீர வேண்டும் என்று புரிந்துள்ளீர் களோ, அவர்கள் கையை உயர்த்துங்கள். கேமரா வில் வந்துக் கொண்டுள்ளீர்கள் பாருங்கள். பாப்தாதாவை மிகவும் நன்றாக குஷிப்படுத்துகிறீர்கள். பாப்தாதாவும் கூட குழந்தைகள் இல்லாமல் தனியாக செல்ல முடியாது. பாருங்கள் - பிரம்மா பாபாவும் கூட குழந்தைகளாகிய உங்களுக்காக முக்தியின் கதவை திறப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அட்வான்ஸ் பார்டியை சேர்ந்தவர் களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏற்பாடு செய்யக்கூடியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் காத்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல, ஏற்பாடு செய்பவர்கள். அதனால் இந்த வருடம் இலட்சியம் வையுங்கள். ஆனால் இலட்சியம் மற்றும் இலட்சணத்தை சமமாக வையுங்கள். இலட்சியம் உயர்ந்தாக இருக்கிறது, ஆனால் இலட்சணத்தில் குறைபாடு இருக்கிறது என்பது போல் அல்ல. இலட்சியம் மற்றும் இலட்சணத்தை சமமாக இருக்க வேண்டும். உங்களுடைய மனதின் ஆசை சமமானவர் ஆவது. இலட்சியம் மற்றும் இலட்சணத்தை சமமாக இருக்கும் பொழுது தான் இந்த ஆசை நிறைவேறும். இப்பொழுது . இலட்சியம் மற்றும் இலட்சத்தில் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. மிக நன்றாக திட்டங்களை உருவாக்குகிறீர்கள். தங்களுக்குள் மிக நன்றாக ஆன்மிக உரையாடல் செய்கிறீர்கள். ஒருவர் மற்றவருக்கு கவனத்தையும் கொடுக்கிறீர் கள். இப்பொழுது திடத்தன்மை நம்முடைய பிறப்புரிமை. இந்த எண்ணத்தை அனுபவ சொரூபத்தில் கொண்டு வாருங்கள். எதை சொல்கிறேனோ, அதை அனுபவத்தில் கொண்டு வருகிறேனா என்பதை சோதனை செய்யுங்கள். நான் ஒர் ஆத்மா என்ற முதல் வார்த்தை சோதனை செய்யுங்கள். ஆத்ம சொரூபத்தின் அனுபவ பூர்வமாக அத்தாரிட்டி சொரூபமாக இருக்கிறேன். ஏனெனில் அனுபவ அத்தாரிட்டி தான் நம்பர் ஒன்றாக இருக்கிறது. நல்லது. எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் சுய நிலையில் நிலைத்திருக்க முடியுதா?

மனதினுடைய ஒருமுகப்படுத்தும் தன்மை (டிரில்) நன்றாக இருக்கிறது. மூன்று புள்ளிகளின் நினைவு சொரூபத்தில் இருக்க முடியுமல்லவா. முற்றுப்புள்ளி போதும் நல்லது.

இப்பொழுது ஒரு நொடியில் நான் பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரி என்ற சிரேஷ்ட சுயமரியாதையில் இருக்கிறேன். இந்த ஆன்மீக சுயமரியாதையின் நஷாவில் நிலைத்திருங்கள். இதய சிம்மாசனதாரி ஆத்மா . இந்த அனுபவத்தின் அன்பில் முழ்கிவிடுங்கள். நல்லது.

நாலா பக்கத்திலுமுள்ள மிகவும் அன்பான சதா பாபாவின் அன்பில் முழ்கியிருக்கக்கூடிய சதா சுய மரியாதையில் இருக்கக்கூடிய, சுயராஜ்ய அதிகாரியான விசேஷ ஆத்மாக்களுக்கு, நாலா பக்கத்திலுமுள்ள என்ற சிறகுகளால் பறக்கக்கூடிய மேலும் தன்னுடைய மனதின் வைப்ரேஷன் மூலம் வாயுமண்டலத்தை (சூழ்நிலை) அமைதி நிறைந்தாக, உயர்ந்ததாக உருவாக்கக் கூடிய, அனைவருக்கும் பாபாவின் செய்தியை கொடுத்து துக்கத்திலிருந்து விடுபட்டு, முக்தியின் ஆஸ்தியை கொடுக்கக் கூடிய, சதா திடத்தன்மையின் மூலம் வெற்றியை அடையக்கூடிய, அது போல நாலா பக்கத்திலுமுள்ள இதயங்களுக்கு நெருக்கத்திலுள்ள மற்றும் நெருக்கதிலுள்ள கொண்டு வரக்கூடிய, அனைத்து குழந்தைகளுக்கும் மனதார, இதய பூர்வமான ஆசீர்வாதங்கள், அன்பு நினைவுகள் மற்றும் நம்ஸ்காரம்.

ஆசீர்வாதம்:
தர்மம் மற்றும் கர்மம் இரண்டும் சரியாக சமநிலையில் வைக்கக்கூடிய திவ்ய மற்றும் சிரேஷ்ட புத்திநிறைந்தவர் ஆகுக.

செயல் செய்யும் பொழுது தர்மம் அதாவது தாரணையும் கூட சம்பூரணமாக இருந்தால், தர்மம் மற்றும் கர்மத்தின் இரண்டும் சமமாக சரியாக இருப்பதால் பிரபாவம் (தாக்கம்) அதிகரிக்கும். செயல் முடிந்த பிறகு தாரணை நினைவில் வருகிறது என்பது அல்ல. புத்தியில் இரண்டு விஷயங்களும் சமமாக சரியாக இருந்தால், சிரேஷ்ட திவ்ய புத்தியுடைவர் என்று சொல்லாம். இலையென்றால் சாதாரண புத்தி, செயலும் சாதாரணமாக, தாரணை சாதாரணமாக இருக்கும். எனவே சாதாரண தன்மையில் சமமான நிலையை கொண்டு வர முடியாது ஆனால் சிரேஷ்ட தன்மையில் தான் சமமானத் தன்மை இருக்கும். காரியம் சிரேஷ்டமாக இருப்பதை போன்று தாரணையும் கூட சிரேஷ்டமாக இருக்கும்.

சுலோகன்:
தன்னுடைய மனம் புத்தியை அனுபவம் என்ற இருக்கையில் அமர்ந்துவிட்டால், ஒருபொழுதும் அப்செட் வராது.


அவ்யக்த இசாரே: இந்த அவ்யக்த மாதத்தில் பந்தனத்திலிருந்து விடுபட்டு ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்

ஞான சொரூபம், மாஸ்டர் ஞானம் நிறைந்தவர், மாஸ்டர் சர்வசக்திவான் ஆன பிறகும் ஒருவேளை யுக்த் யுக்தாக செயல் செய்யவில்லையென்றால், இந்த கர்மபந்தனம், அஞ்ஞான காலத்தில் கர்மபந்தனத்தை விடவும் பல கோடி மடங்கு அதிகமாக இருக்கும். இந்த காரணத்தினால் பந்தன் முக்த் ஆத்மா சுதந்திரம் இல்லாத காரணத்தினால், எதை விரும்புகிறார்களோ, அதை செய்ய முடிவதில்லை, ஆகையால் யுக்த் யுக்த் கர்மத்தின் மூலம் முக்தியை அடையுங்கள்.