25-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் பாபாவின்
குழந்தை எஜமானர். நீங்கள் ஒன்றும் பாபாவிடம் சரணடையவில்லை.
குழந்தை ஒருபோதும் தந்தையிடம் சரணடைவதில்லை.
கேள்வி:
எந்த விஷயத்தின் சிந்தனை சதா
நடைபெற்றுக் கொண்டிருக்குமானால் மாயா தொந்தரவு செய்யாது?
பதில்:
நாம் பாபாவிடம் வந்துள்ளோம். அவர்
நம்முடைய தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராக வும் உள்ளார்,
சத்குருவாகவும் உள்ளார், ஆனால் அவர் நிராகார். நிராகார்
ஆத்மாக்களாகிய நமக்குக் கற்றுத் தருபவர் நிராகார் பாபா. இது
புத்தியில் நினைவிருக்குமானால் குஷி அதிகரித்துக் கொண்டே
இருக்கும். பிறகு மாயா தொந்தரவு செய்யாது.
ஓம் சாந்தி.
திரிமூர்த்தி தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைத்துள்ளார்.
திரிமூர்த்தி தந்தை அல்லவா? மூவரையும் படைப்பவர் அனைவரின் தந்தை
ஆகிறார். ஏனென்றால் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் அந்த தந்தை தான்.
நாம் அவருடைய குழந்தைகள் என்பது குழந்தைகளின் புத்தியில் உள்ளது.
எப்படி பாபா பரந்தாமத்தில் வசிக்கிறாரோ, அதுபோல் ஆத்மாக்கள்
நாமும் அங்கே வசிப்பவர்கள். பாபா இதையும் புரிய வைத்துள்ளார் -
இது டிராமா, நடக்கின்ற அனைத்தும் டிராமாவில் (கல்பத்தில்) ஒரு
முறை மட்டுமே நடைபெறுகின்றது. பாபாவும் ஒரு தடவை மட்டுமே
படிப்பு சொல்லித் தருவதற்காக வருகிறார். நீங்கள் ஒன்றும்
சரணாகதி அடைவதில்லை. நான் உங்களைச் சரணடைந்தேன் என்று சொல்வது.
இந்த வார்த்தை பக்தி மார்க்கத்தினுடைய தாகும். குழந்தை
எப்போதாவது தந்தையிடம் சரணைடைவானா என்ன? தந்தை உங்களைத்
தம்முடையவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளார். குழந்தைகள் தந்தையைத்
தம்முடையவராக ஆக்கிக் கொண்டுள்ளனர். குழந்தைகள் நீங்கள் தந்தையை
அழைப்பதே பாபா வாருங்கள், எங்களை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்
செல்லுங்கள் அல்லது இராஜ்யத்தைக் கொடுங்கள் என்று தான். ஒன்று
சாந்திதாம், இன்னொன்று சுகதாம். சுகதாமம் என்பது பாபாவின் ஆஸ்தி,
மற்றும் துக்கதாமம் இராவணனின் ஆஸ்தி. 5 விகாரங்களில்
சிக்குவதால் துக்கத்தின் மேல் துக்கம் தான். இப்போது குழந்தைகள்
அறிவார்கள், நாம் பாபாவிடம் வந்துள்ளோம். அவர் தந்தையாகவும்
உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார். ஆனால் அவர் நிராகார். நிராகாரி
ஆத்மாக்களாகிய நமக்குக் கற்றுத் தருபவரும் கூட நிராகார். அவர்
ஆத்மாக்களின் தந்தை. இது சதா புத்தியில் நினைவிருக்கு மானால்
குஷி அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதை மறப்பதால் தான் மாயா
தொந்தரவு செய்கிறது. இப்போது நீங்கள் பாபாவிடம்
அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் பாபா மற்றும் ஆஸ்தி நினைவு
வருகிறது. நோக்கம் புத்தியில் உள்ளது இல்லையா? சிவபாபாவைத் தான்
நினைவு செய்ய வேண்டும். கிருஷ்ணரை நினைப்பதோ மிகவும் சுலபம்.
சிவபாபாவை நினைவு செய்வதில் தான் முயற்சி உள்ளது. தன்னை ஆத்மா
என உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். கிருஷ்ணர்
இருப்பாரானால் அவர் மீது அனைவரும் மோகம் கொண்டு விடுவார்கள்.
குறிப்பாக மாதர்களோ நமக்குக் கிருஷ்ணரைப் போல் குழந்தை வேண்டும்,
கிருஷ்ணரைப் போல் கணவர் வேண்டும் என விரும்புகின்றனர். இப்போது
பாபா தந்தை சொல்கிறார், நான் வந்து விட்டேன். உங்களுக்குக்
கிருஷ்ணரைப் போல் குழந்தை அல்லது கணவர் கூடக் கிடைப்பார்.
அதாவது இவரைப் போல் (பிரம்மா) குணவான், சர்வகுண சம்பன்னமாக, 16
கலை சம்பூர்ணமாக சுகம் தருபவர் உங்களுக்குக் கிடைப்பார்.
சொர்க்கம் அல்லது கிருஷ்ணபுரியில் சுகத்தின் மேல் சுகம்
இருக்கும். குழந்தைகள் அறிவார்கள், இங்கே நாம் படிக்கிறோம் -
கிருஷ்ணபுரி செல்வதற்காக. சொர்க்கத்தைத் தான் அனைவரும் நினைவு
செய்கின்றனர் இல்லையா? யாராவது இறந்து போனால் இன்னார்
சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று சொல்கின்றனர். அப்படியானால்
குஷியாகி விட வேண்டும். கைதட்ட வேண்டும். நரகத்திலிருந்து
விடுபட்டு சொர்க்கத்திற்குச் செல்வ தென்பதோ மிகவும்
நல்லதாயிற்று. யாராவது இன்னார் சொர்க்கத்திற்குச் சென்று
விட்டார் எனச் சொன்னால் அவர் எங்கிருந்து சென்றார்? என்று
கேளுங்கள். நிச்சயமாக நரகத்திலிருந்து தான் சென்றுள்ளார். இதில்
தான் மிகுந்த குஷியின் விசயம் உள்ளது. அனைவரையும் அழைத்து
இனிப்பு வழங்க வேண்டும். ஆனால் இதுவோ புரிந்து கொள்ள வேண்டிய
விசயம். அவர்கள் 21 பிறவிகளுக்கு சொர்க்கம் சென்று விட்டனர்
எனச் சொல்ல மாட்டார்கள். சொர்க்கத்திற்குச் சென்று விட்டார்
என்று மட்டுமே சொல்கின்றனர். நல்லது, பிறகு அவருடைய ஆத்மாவை
இங்கே ஏன் அழைக்கிறீர்கள்? நரகத்தின் உணவை உண்ணச் செய்வதற்கா?
நரகத்திற்கோ அழைக்கக் கூடாது. இதை பாபா வந்து புரிய வைக்கிறார்.
ஒவ்வொரு விசயமும் ஞானத்தினுடையது இல்லையா? எங்களைப்
தூய்மையற்றதி-ருந்து தூய்மையாக்குங்கள் என்று பாபாவை
அழைக்கின்றனர் என்றால் நிச்சயமாக தூய்மை இழந்த சரீரங்களை
முடித்துவிட வேண்டும். அனைவரும் இறந்து விடுவார் கள். பிறகு
யார் யாருக்காக அழுவார்கள்? இப்போது நீங்கள் அறிந்து
கொண்டிருக்கிறீர்கள், நாம் இந்த சரீரத்தை விட்டு நம்
வீட்டுக்குப் போகப்போகிறோம். இப்போது இந்தப் பயிற்சியைச் செய்து
கொண்டுள்ளோம் - எப்படி சரீரத்தை விடுவது? அப்படிப்பட்ட
முயற்சியை உலகத்தில் யாராவது செய்திருப்பார்களா?
குழந்தைகள் உங்களுக்கு இந்த ஞானம் உள்ளது, அதாவது இந்த சரீரம்
பழையது. பாபாவும் சொல்கிறார், நான் பழைய செருப்பைக் (சரீரத்தை)
கடனாகப் பெற்றுக் கொள்கிறேன். டிராமாவில் இந்த ரதம் தான்
நிமித்தமாக ஆக்கப் பட்டுள்ளது. இது மாறாது. இவரை மீண்டும்
நீங்கள் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பீர்கள். டிராமாவின்
இரகசியத்தைப் புரிந்து கொண்டீர்கள் இல்லையா? இதைப் புரிய
வைப்பதற்கு பாபாவைத் தவிர வேறு யாருக்கும் சக்தி கிடையாது.
இந்தப் பாடசாலை அதே அற்புதமானதாகும். இங்கே நாங்கள்
பகவான்-பகவதி ஆவதற்காக பகவானின் பாடசாலைக்குச் செல்கிறோம் என்று
முதியவர்களும் சொல்வார்கள். அட, முதியவர்கள் ஒரு போதும்
பாடசாலையில் படிப்பதில்லை. உங்களிடம் யாராவது எங்கே
செல்கிறீர்கள் எனக் கேட்டால் ஈஸ்வரியப் பல்கலைக்கழகத்திற்குச்
செல்கிறோம் என்று சொல்லுங்கள். அங்கே நாங்கள் இராஜயோகம் கற்றுக்
கொள்கிறோம். அந்த மாதிரி வார்த்தைகளைச் சொல்லுங்கள், அவர்கள்
கேட்டதும் தலை சுற்ற வேண்டும். முதியவர்களும் நாங்கள் பகவானின்
பாடசாலைக்குச் செல்கிறோம் என்று சொல்வார்கள். இதுபோல் வேறு
யாரும் சொல்ல முடியாது. நிராகார் பகவான் பிறகு எங்கிருந்து
வந்தார் எனக் கேட்பார்கள். ஏனென்றால் அவர்களோ பகவான் பெயர்
வடிவத் திற்கு அப்பாற்பட்டவர் என நினைக்கின்றனர். இப்போது
நீங்கள் புரிதலுடன் சொல்கிறீர்கள். ஒவ்வொரு மூர்த்தியின்
செயல்பாடுகள் பற்றியும் நீங்கள் அறிவீர்கள். புத்தியில் இது
பக்காவாக உள்ளது, அதாவது உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் சிவபாபா.
அவருடைய குழந்தைகள் நாம். நல்லது, பிறகு சூட்சுமவதனவாசி
பிரம்மா-விஷ்ணு-சங்கர், நீங்கள் வெறுமனே சொல்வதில்லை. பிரம்மா
மூலம் எப்படி ஸ்தாபனை செய்கிறார் என்பதை நீங்களோ மிக நன்றாகவே
அறிவீர்கள். உங்களைத் தவிர வேறு யாராலும் அவரது வாழ்க்கை
வரலாற்றைச் சொல்ல முடியாது. தங்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றியே
தெரியாது எனும்போது மற்றவர்களுடையதைப் பற்றி எப்படி அறிவார்கள்?
நீங்கள் இப்போது அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டீர்கள். பாபா
சொல்கிறார், நான் என்ன அறிந்திருக்கிறேனோ, அதை குழந்தைகளாகிய
உங்களுக்குப் புரிய வைக்கிறேன். இராஜ்யத்தையும் பாபாவைத் தவிர
வேறு யாராலும் கொடுக்க முடியாது. இந்த லட்சுமி-நாராயணர் எந்த
ஒரு சண்டையினாலும் இந்த இராஜ்யத்தை அடையவில்லை. அங்கே சண்டை
நடப்ப தில்லை. இங்கோ எவ்வளவு சண்டையிட்டுக் கொள்கின்றனர்!
எவ்வளவு ஏராளமான மனிதர்கள்! - நாம் பாபாவிடமிருந்து தாதா
மூலமாக ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்று இப்போது
குழந்தைகளாகிய உங்கள் மனதினுள் இது வர வேண்டும். தந்தை
சொல்கிறார் - என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். அப்படி
யில்லாமல் நான் யாருக்குள் பிரவேசமாகிறேனோ, அவரையும் நினைவு
செய்யுங்கள் எனச் சொல்வதில்லை. என்னை மட்டுமே நினைவு
செய்யுங்கள் என்று தான் சொல்கிறார். அந்த சந்நியாசிகள் தங்கள்
நிழற்படத்தைப் பெயருடன் கூடவே கொடுக் கின்றனர். சிவபாபாவின் ஃபோட்டோ
எப்படி எடுப்பார்கள்? பிந்தியின் மீது பெயர் எப்படி எழுது
வார்கள்? பிந்தி மீது சிவபாபாவின் பெயர் எழுதுவார்களானால்
பிந்தியைக் காட்டிலும் பெயர் பெரிதாகி விடும். புரிந்து கொள்ள
வேண்டிய விசயம் இல்லையா? ஆக, குழந்தைகளுக்கு மிகுந்த குஷி
இருக்க வேண்டும், நமக்கு சிவபாபா படிப்பு சொல்லித் தருகிறார்.
ஆத்மா படிக்கிறது இல்லையா? சம்ஸ்காரங்களை ஆத்மா தான் எடுத்துச்
செல்கிறது. இப்போது பாபா ஆத்மாவுக்குள் சம்ஸ்காரங்களை நிரப்பிக்
கொண்டிருக்கிறார். அவர் தந்தையாகவும் இருக்கிறார்,
ஆசிரியராகவும் இருக்கிறார், குருவாகவும் இருக்கிறார். எதை பாபா
உங்களுக்குக் கற்றுத் தருகிறாரோ, அதை நீங்கள் மற்றவர்களுக்கும்
கற்றுக் கொடுங்கள். சிருஷ்டிச் சக்கரத்தை நினைவு செய்யுங்கள்
மற்றும் செய்வியுங்கள். அவரிடம் என்ன குணங்கள் உள்ளனவோ,
அவற்றைக் குழந்தைகளுக்கும் கொடுக்கிறார். அவர் சொல்கிறார், நான்
ஞானக்கடலாக, சுகக்கடலாக இருக்கிறேன். உங்களையும் அதுபோல்
ஆக்குகிறேன். நீங்களும் அனைவருக்கும் சுகம் கொடுங்கள். மனம்,
சொல், செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். அனைவரின்
காதுகளிலும் இதே இனிமையிலும் இனிமை யான விசயத்தைச் சொல்லுங்கள்,
அதாவது சிவபாபாவை நினைவு செய்வீர்களானால் நினை வினால்
விகர்மங்கள் விநாசமாகும். அனைவருக்கும் இந்த செய்தியைக்
கொடுக்க வேண்டும் - பாபா வந்திருக்கிறார், அவரிடமிருந்து இந்த
ஆஸ்தியை அடைந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் இந்த செய்தியைக்
கொடுக்க வேண்டும். கடைசியில் செய்தித்தாள்களிலும் இந்த
செய்தியைப் போடுவார்கள். இதையோ அறிவீர்கள், கடைசியில் அனைவரும்
சொல்வார்கள், அஹோ பிரபு, உங்கள் லீலை!........... தாங்கள் தாம்
அனைவருக்கும் சத்கதி அளிக்கிறீர்கள். துக்கத்திலிருந்து
விடுவித்து அனைவரையும் சாந்திதாமத்திற்கு அழைத்துச்
செல்கிறீர்கள். இதுவும் கூட மாயஜாலம் ஆகிறது இல்லையா?
அவர்களுடையது அல்பகாலத்திற்கான மாயாஜாலம். இவரோ மனிதரி லிருந்து
தேவதை ஆக்குகிறார், 21 பிறவிகளுக்கு. இந்த மன்மனாபவ என்ற
மாயமந்திரத்தின் மூலம் நீங்கள் லட்சுமி-நாராயணன் ஆகிறீர்கள்.
மந்திரவாதி, இரத்தின வியாபாரி என்ற பெயர் களெல்லாம்
சிவபாபாவுக்கு வைக்கப்பட்டவையாகும். பிரம்மாவுக்கல்ல. இந்த
பிராமணர்-பிராமணிகள் அனைவரும் படிக்கின்றனர். படித்துப் பிறகு
மற்றவர்களுக்குப் படிப்பிக்கின்றனர். பாபா உங்களனைவருக்கும்
ஒன்றாகப் படிப்பு சொல்லித் தருகிறார். நீங்கள் பிறகு மற்றவர்
களுக்குச் சொல்லித் தருகிறீர்கள். பாபா இராஜயோகம் கற்றுத் தந்து
கொண்டிருக்கிறார். அதே தந்தை தான் படைப்பவர், கிருஷ்ணரோ படைப்பு
அல்லவா? ஆஸ்தி படைப்பவரிடமிருந்து கிடைக்கும், படைப்பிடமிருந்து
அல்ல. கிருஷ்ணரிடமிருந்து ஆஸ்தி கிடைப்பதில்லை. விஷ்ணு வின்
இரண்டு ரூபங்கள் இந்த லட்சுமி நாராயணன் ஆவர். சிறு வயதில்
அவர்கள் இராதை-கிருஷ்ணர். இந்த விசயங்களையும் கூடப் பக்காவாக
நினைவு செய்து கொள்ளுங்கள். முதியவர் களும் கூட இதில்
தீவிரமாகச் (முனைப்புடன்) செல்வார்களானால் உயர்ந்த பதவி பெற
முடியும். முதியவர்களுக்குப் பிறகு கொஞ்சம் மோகம் கூட உள்ளது.
தங்களின் சொந்தப் படைப்பு என்ற வலையிலேயே சிக்கிக் கொண்டு
விடுகின்றனர். எத்தனைப் பேருடைய நினைவு வந்து விடுகிறது!
அவர்களிடமிருந்து புத்தியோகத்தை விடுவித்துப் பிறகு ஒரு
தந்தையிடம் இணைப்பதில் தான் முயற்சி உள்ளது. உயிருடன் இருந்து
கொண்டே இறந்தவராக ஆக வேண்டும். புத்தியில் ஒரு முறை அம்பு
தைத்து விட்டால் அவ்வளவு தான். பிறகு யுக்தியுடன் நடந்து கொள்ள
வேண்டியுள்ளது. யாரிடமும் பேசக்கூடாது என்பதெல்லாம் கிடையாது.
இல்லற விவகாரங்களில் இருங்கள், அனைவரிடமும் பேசுங்கள்.
அவர்களிடமும் உறவு வைத்துக் கொள்ளுங்கள். பாபா சொல்கிறார் -
தர்மம் என்பது வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். உறவே வைத்துக்
கொள்ள வில்லை என்றால் அவர்களை எப்படி உயர்த்த முடியும்? இரண்டு
பக்கமும் இணக்கமாக இருக்க வேண்டும். பாபாவிடம் கேட்கின்றனர்,
திருமணம் செய்து கொள்ளலாமா என்று. பாபா சொல்வார், ஏன் கூடாது,,
போ (போய்த் திருமணம் செய்துகொள்) என்று. பாபா, காமம் மகாசத்ரு
என்று மட்டுமே சொல்கிறார். அதன் மீது வெற்றி பெறுவீர்களானால்
உலகை வென்றவர் ஆவீர்கள். நிர்விகாரிகள் இருப்பது சத்யுகத்தில்.
யோகபலத்தின் மூலம் அங்கே பிறப்பு நிகழ்கின்றது. பாபா சொல்கிறார்,
நிர்விகாரி ஆகுங்கள். ஒன்று, இதைப் பக்கா ஆக்குங்கள் - நாம்
சிவபாபாவின் அருகில் அமர்ந்துள்ளோம். சிவபாபா நமக்கு 84
பிறவிகளின் கதையைச் சொல்கிறார். இந்த சிருஷ்டிச் சக்கரம்
எப்படிச் சுற்றுகிறது? முதல்-முதலில் தேவி-தேவதைகள்
சதோபிரதானமாக வருகின்றனர், பிறகு புனர்ஜென்மம்
எடுத்து-எடுத்துத் தமோபிரதானமாக ஆகின்றனர். உலகம் பழையதாக
அசுத்தமாக ஆகின்றது. ஆத்மா தான் தூய்மை இழக்கிறது இல்லையா?
இங்குள்ள எந்த ஒரு பொருளிலும் சாரம் கிடையாது. எங்கே
சத்யுகத்தின் பழங்கள்-பூக்கள், எங்கே இங்குள்ளவை! அங்கே
ஒருபோதும் புளிப்பான, பழைய பொருட்கள் இருப்பதில்லை. நீங்கள்
அங்குள்ளதைப் பற்றிய சாட்சாத்காரமும் பார்த்து வருகிறீர்கள்.
அந்தப் பழங்கள்-பூக்களைக் கொண்டு வர வேண்டும் என்று உங்களுக்கு
எண்ணம் வருகிறது, ஆனால் இங்கே வந்ததும் அது மறைந்து விடுகின்றது.
இவை அனைத்தையும் சாட்சாத்காரம் செய்வித்து பாபா மனமகிழ்ச்சி
அடையச் செய்கிறார். இவர் ஆன்மிகத் தந்தை. அவர் உங்களுக்குப்
படிப்பு சொல்லித் தருகிறார். இந்த சரீரத்தின் மூலம் படிப்பது
ஆத்மா. சரீரமல்ல. ஆத்மாவுக்கு சுத்தமான பெருமிதம் உள்ளது-நானும்
இந்த ஆஸ்தியை அடைந்து கொண்டிருக்கிறேன். சொர்க்கத் தின் மாலிக்
ஆகிக் கொண்டிருக் கிறேன். சொர்க்கத்திற்கோ அனைவரும் செல்வார்கள்,
ஆனால் அனைவரின் பெயர்களோ லட்சுமி-நாராயணன் என்று இருக்காது
இல்லையா? ஆஸ்தியை ஆத்மா அடைகின்றது. இந்த ஞானத்தை பாபாவைத்
தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது. இதுவோ பல்கலைக்கழகம்.
இதில் சின்னக் குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் படிக்கின்றனர்.
இது போன்ற கல்லூரியை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள்
மனிதரிலிருந்து வக்கீல், டாக்டர் முதலானவர்களாக ஆகின்றனர்.
இங்கே நீங்கள் மனிதரில் இருந்து தேவதை ஆகிறீர்கள்.
நீங்கள் அறிவீர்கள் - பாபா நம்முடைய ஆசிரியர், சத்குருவாக
உள்ளார், அவர் நம்மை உடன் அழைத்துச் செல்வார். பிறகு நாம்
படிப்பின் அனுசாரம் வந்து சுகதாமத்தில் பதவி பெறுவோம். பாபாவோ
ஒருபோதும் உங்கள் சத்யுகத்தைப் பார்ப்பதும் கூட இல்லை. சிவபாபா
கேட்கிறார், நான் சத்யுகத்தைப் பார்க்கிறேனா? பார்ப்பதோ
சரீரத்தின் மூலம் நடைபெறுவது. அவருக்குத் தம்முடைய சரீரமோ
கிடையாது. அப்போது எப்படிப் பார்ப்பார்? இங்கே குழந்தைகளாகிய
உங்களோடு பேசுகிறார். பார்க்கிறார், இது முழுவதும் பழைய உலகம்.
சரீரம் இல்லாமலோ எதையும் பார்க்க முடியாது. பாபா சொல்கிறார்,
நான் தூய்மை இல்லாத உலகத்தில் தூய்மையற்ற சரீரத்தில் வந்து
உங்களைப் தூய்மையாக்குகிறேன். நான் சொர்க்கத்தைப் பார்ப்பது
கூட இல்லை. யாருடைய சரீரத்தின் மூலமாகவாவது மறைந்திருந்து
பார்ப்பேன் என்பது கிடையாது. அத்தகைய பாகமே கிடையாது. நீங்கள்
எவ்வளவு புதுப்புது விசயங்களைக் கேட்கிறீர்கள்! ஆகவே இப்போது
இந்தப் பழைய உலகின் மீது மனதை ஈடுபடுத்தக் கூடாது. பாபா
சொல்கிறார், எவ்வளவு தூய்மை அடைகிறீர்களோ, அதற்கேற்ப உயர்ந்த
பதவி கிடைக்கும். முழுவதும் நினைவு யாத்திரையின் பந்தயமாகும்.
யாத்திரையிலும் மனிதர்கள் தூய்மையாக உள்ளனர். பிறகு திரும்பி
வந்து விட்டால் தூய்மை இழக்கின்றனர். குழந்தைகளாகிய உங்களுக்கு
மிகுந்த குஷி இருக்க வேண்டும். நீங்கள் அறிவீர்கள், எல்லையற்ற
தந்தையிடமிருந்து நாம் எல்லையற்ற சொர்க்கத்தின் ஆஸ்தி
பெறுகிறோம் என்றால் அவருடைய ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
பாபாவின் நினைவின் மூலம் தான் சதோபிரதானமாக ஆக வேண்டும். 63
பிறவிகளின் கறை படிந்துள்ளது. அதை இந்தப் பிறவியிலேயே நீக்க
வேண்டும். வேறு எந்த ஒரு கஷ்டமும் கிடையாது. விஷத்தை
அருந்துவதற்கான பசியை விட்டுவிட வேண்டும். அதைப் பற்றிய
சிந்தனையே செய்யாதீர்கள். பாபா சொல்கிறார், இந்த விகாரங்களினால்
தான் நீங்கள் ஜென்ம-ஜென்மாந்தரமாக துக்கமடைந்து
வந்திருக்கிறீர்கள். குமாரிகள் மீதோ அதிக இரக்கம் வருகின்றது.
சினிமாவுக்குச் செல்வதாலும் கூடக் கெட்டுப் போகின்றனர். இதனால்
தான் நரகத்தில் போய் விடுகின்றனர். பாபா சிலருக்குச் சொல்லலாம்,
பார்ப்பதற்குத் தடை இல்லை என்று. ஆனால் உங்களைப் பார்த்து
மற்றவர்களும் போகத் தொடங்குவார்கள். அதனால் நீங்கள் போகக்
கூடாது. இவர் பாகீரதம். பாக்கியசாலி ரதம் இல்லையா? - டிராமாவில்
தனது ரதத்தைக் கடனாக வழங்குவதற்கு அவர் நிமித்தமாக
ஆகியிருக்கிறார் . நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பாபா
இவருக்குள் வருகிறார், இவர் ஹுசேனின் குதிரை. பாபா தாமே
அழகானவர். ஆனால் இந்த ரதத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.
டிராமாவில் இவருடைய பாகமே இப்படி உள்ளது. இப்போது ஆத்மாக்கள்
கருப்பாகி விட்டுள்ளன. அதை கோல்டன் ஏஜ்டாக ஆக்க வேண்டும்.
பாபா சர்வசக்திவானா, அல்லது டிராமாவா? டிராமா உள்ளது, பிறகு
அதில் உள்ள நடிகர்களுக்குள் சர்வசக்திவான் யார்? சிவபாபா.
மேலும் பிறகு இராவணன். அரைக்கல்பம் இராமராஜ்யம். அரைக் கல்பம்
இராவண இராஜ்யம். , நாங்கள் பாபாவின் நினைவை மறந்து போகிறோம்
என்று அடிக்கடி பாபாவுக்கு எழுதுகின்றனர். மனம் தளர்ந்து
போகின்றனர். அட, உங்களை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குவதற்காக
வந்துள்ளேன். பிறகு நீங்கள் ஏன் மனம் தளர்ந்து விடுகிறீர்கள்?
முயற்சியோ செய்ய வேண்டும். தூய்மையாக வேண்டும். அப்படியே
இராஜதிலகம் கொடுத்து விடுவேனா என்ன? ஞானம் மற்றும் யோகத்தின்
மூலம் தானாகவே தனக்கு இராஜ திலகம் கொடுத்துக் கொள்வதற்கான
தகுதியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பாபாவை நினைவு செய்து
கொண்டே இருப்பீர்களானால் நீங்கள் தாமாகவே இராஜ திலகத்திற்குத்
தகுதியுள்ளவர்களாக ஆகி விடுவீர்கள். புத்தியில் உள்ளது, சிவபாபா
நம்முடைய இனிமையான தந்தை, ஆசிரியர், சத்குருவாக இருக்கிறார்.
நம்மையும் மிக இனிமையானவர்களாக ஆக்குகிறார். நீங்கள் அறிவீர்கள்,
நாம் கிருஷ்ணபுரிக்கு அவசியம் செல்வோம். ஒவ்வோர் 5000
ஆண்டுகளுக்குப் பிறகும் பாரதம் நிச்சயமாக சொர்க்க மாகும். பிறகு
நரகமாக ஆகின்றது. செல்வந்தர்களுக்கு இங்கேயே சொர்க்கம் என்றும்
ஏழைகள் நரகத்தில் உள்ளனர் என்றும் மனிதர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் அப்படி இல்லை. இது நரகமே தான். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சினிமா என்பது நரகத்திற்குச் செல்வதற்கான வழியாகும். அதனால்
சினிமாவைப் பார்க்கக் கூடாது. நினைவு யாத்திரை மூலம் தூய்மையாகி
உயர்ந்த பதவி பெற வேண்டும். இந்தப் பழைய உலகின் மீது மனதை
ஈடுபடுத்தக் கூடாது.
2) மனம்-சொல்-செயலால் யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது.
அனைவரின் காதுகளிலும் இனிமையிலும் இனிமையான சொற்களைச் சொல்ல
வேண்டும். அனைவருக்கும் பாபாவை நினைவுப் படுத்த வேண்டும்.
புத்தியோகத்தை ஒரு பாபாவிடம் இணைக்க வேண்டும்.
வரதானம்:
நினைவு என்ற சுவிட்சை ஆன் செய்து ஒரு நொடியில் அசரீரி நிலையை
அனுபவம் செய்யக்கூடிய அன்பான புத்தி உடையவர் ஆவீர்களாக.
எங்கு இறை அன்பு இருக்கிறதோ அங்கு அசரீரி ஆவது ஒரு நொடியின்
விளையாட்டிற்கு சமானம் ஆகும். எப்படி சுவிட்ச் ஆன் செய்த உடனேயே
இருள் நீங்கி விடுகிறது. அதேபோல அன்பான புத்தி உடையவர் ஆகி
நினைவு என்ற சுவிட்ச் ஆன் செய்தீர்கள் என்றால் தேகம் மற்றும்
தேகத்தின், உலகத்தின் நினைவு என்ற சுவிட்ச் ஆஃப் ஆகி விடும்.
இது ஒரு நொடியின் விளையாட்டு ஆகும். வாயால் பாபா என்று
கூறுவதற்கு கூட நேரம் பிடிக்கும். ஆனால் நினைவில் கொண்டு
வருவதற்கு நேரம் பிடிக்காது. இந்த பாபா என்ற வார்த்தைதான் பழைய
உலகை மறப்பதற்கான ஆத்மீக அணு குண்டு ஆகும்.
சுலோகன்:
தேக உணர்வு என்ற மண்ணின் சுமையிலிருந்து அப்பாற்பட்டு
இருந்தீர்கள் என்றால் டபுள்லைட் ஃபரிஷ்தா ஆகி விடுவீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை: சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை
கடைபிடியுங்கள்.
சத்தியத்தை பகுத்தறிதல் என்பது எண்ணம் சொல் செயல் சம்பந்தம்
தொடர்பு அனைத்திலும் தெய்வீகத் தன்மையின் உணர்வு ஏற்படுவது. ஒரு
சிலர் நானும் எப்பொழுதும் உண்மையே பேசுகிறேன் என்பார்கள். ஆனால்
பேச்சு அல்லது செயலில் தெய்வீகத் தன்மை இல்லை என்றால்
உங்களுடைய உண்மை மற்றவர்களுக்கு உண்மை என்று தோன்றாது. எனவே
சத்தியத்தின் சக்தி மூலமாக தெய்வீகத் தன்மையை தாரணை செய்யுங்கள்.
ஏதாவது சகித்துக் கொள்ள வேண்டி வந்தாலும் பயப்படாதீர்கள்.
சத்தியம் காலத்திற்கு ஏற்ப சுயம் நிரூபிக்கப்பட்டு விடும்