25-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பாபா தூரதேசத்தில்
இருந்து வந்துள்ளார், குழந்தைகள் உங்களுக்காகப் புதிய
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக. நீங்கள் இப்போது
சொர்க்கத்திற்குத் தகுதி உள்ளவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
கேள்வி:
எந்தக் குழந்தைகளுக்கு
சிவபாபாவிடம் அசைக்க முடியாத நிச்சயம் உள்ளதோ, அவர்களின்
அடையாளம் என்னவாக இருக்கும்?
பதில்:
என்ன கட்டளை கிடைக்கிறதோ, அவர்கள்
கண்ணை மூடிக் கொண்டு பாபா வின் ஸ்ரீமத்படி நடந்துக் கொண்டே
இருப்பார்கள். இதனால் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டு விடக் கூடாதே
என்று ஒருபோதும் சிந்தனை கூட வராது. ஏனென்றால் அப்படிப்பட்ட
நிச்சய புத்தி உள்ள குழந்தை களுக்குப் பொறுப்புள்ளவராக பாபா
இருக்கிறார். அவர்களுக்கு நிச்சயத்தின் பலம் கிடைத்துவிடு
கின்றது. நிலையும் கூட ஆடாத, அசையாததாக ஆகிவிடுகின்றது.
பாடல்:
நீங்கள் தான் தாய், தந்தையாகவும்
நீங்களே இருக்கிறீர்கள்........
ஓம் சாந்தி.
யாருடைய இந்த மகிமையைக் கேட்டீர்கள்? இதைக் குழந்தைகள் உங்களைத்
தவிர உலகத்தில் வேறு யாரும் அறிந்துக் கொள்ளவில்லை. இது
உயர்ந்த வரிலும் உயர்ந்தவராகிய தந்தையின் மகிமை. வேறு யாருக்கு
மகிமை செய்தாலும் அது தவறாக ஆகிவிடுகின்றது. உயர்ந்த வரிலும்
உயர்ந்தவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே! ஆனால் தந்தையின் அறிமுகத்தை
யார் கொடுப்பது? அவர் தாமே வந்து ஆத்மா மற்றும் தம்மைப் பற்றிய
அறிமுகம் கொடுக்கிறார். எந்த ஒரு மனிதருக்கும் ஆத்மாவைப்
பற்றிய அறிமுகமும் கூட இல்லை. மகான் ஆத்மா, ஜீவாத்மா என்று
அவர்கள் சொல்லலாம். சரீரம் விட்டுப் போகும் போது சொல்கின்றனர்
- ஆத்மா வெளியேறி விடுகிறது என்று. சரீரம் பிணமாகி விடுகின்றது.
ஆத்மா அவிநாசி. அது ஒருபோதும் அழிவ தில்லை. நட்சத்திரம் போல்
இருக்கும் ஆத்மா மிகவும் சூட்சுமமானது. இந்தக் கண்களால் அதைப்
பார்க்க முடியாது. காரியங்கள் அனைத்தையும் ஆத்மா செய்கின்றது.
ஆனால் அடிக்கடி தேக அபிமானத்தில் வந்துவிடு கின்றனர் என்றால்
சொல்கின்றனர், நான் இன்னார், நான் இதைச் செய்கிறேன். உண்மையில்
செய்வ தெல்லாம் ஆத்மா தான். சரீரமோ உறுப்புகள். இந்த சாது
முதலானவர்களும் அறிவார்கள், ஆத்மா மிகவும் சூட்சுமமானது. அது
புருவ மத்தியில் அமர்ந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு இந்த ஞானம்
கிடையாது, அதாவது ஆத்மாவில் இந்தப் பார்ட்டை நடிப்பதற்கான
சம்ஸ்காரம் உள்ளது. சிலர் சொல்கின்றனர், ஆத்மாவில் சம்ஸ்காரம்
இருப்பதில்லை, ஆத்மா நிர்லேப் (அதில் பாவ-புண்ணியம் ஒட்டாது)
மற்றும் சிலர் சொல்கின்றனர், சம்ஸ்காரங்களின் அனுசாரம் ஜென்மம்
கிடைக்கிறது என்று. அபிப்பிராய பேதங்கள் நிறைய உள்ளன. இதுவும்
யாருக்கும் தெரியாது - எந்த ஆத்மாக்கள் 84 பிறவிகளை
எடுக்கிறார்கள்? நீங்கள் அறிவீர்கள், சூரியவம்சி தான் 84
பிறவிச் சக்கரத்தைச் சுற்ற வேண்டி உள்ளது. ஆத்மா தான் 84
பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்து தூய்மை இழந்துவிடுகின்றது.
அதை இப்போது யார் தூய்மை யாக்குவது? பதீத-பாவனர் உயர்ந்தவரிலும்
உயர்ந்த ஒரு தந்தை மட்டுமே! அவருடைய மகிமை அனைவரைக் காட்டிலும்
மிக உயர்ந்தது. அனைவருமோ 84 பிறவிகளை எடுப்பதில்லை. பின்னால்
வருபவர்களோ 84 பிறவிகளை எடுக்க முடியாது. அனைவரும் ஒன்றாக
சேர்ந்தாற்போல் வருவ தில்லை. யார் முதன்-முதலில் சத்யுகத்தில்
வருகிறார்களோ, சூரியவம்சி இராஜாக்கள் மற்றும் பிரஜைகள்,
அவர்களுக்கு 84 பிறவிகள் இருக்கும். பின்னாலோ மனிதர்களின்
எண்ணிக்கை (மக்கள் தொகை) அதிகமாக ஆகிவிடு கிறது இல்லையா? பிறகு
சிலருக்கு 83, சிலருக்கு 80 பிறவிகள் இருக்கும். அங்கே சத்யுகத்
திலோ முழுமையாக 150 வருட ஆயுள் இருக்கும். யாரும் குறைந்த
வயதில் இறந்து போவ தில்லை. இந்த விஷயங்களை பாபா தான் வந்துப்
புரிய வைக்கிறார். இப்போது யாருமே பரமபிதா பரமாத்மா பற்றி
அறிந்திருக்கவில்லை. பாபா சொல்கிறார், எப்படி உங்களுக்கு ஆத்மா
உள்ளதோ, அதுபோல் எனக்கும் ஆத்மா உள்ளது. நீங்கள் தான்
பிறப்பு-இறப்புகளில் வருகிறீர்கள், நான் வருவதில்லை. எப்போது
தூய்மையற்றவராக ஆகின்றனரோ, அப்போது தான் என்னை அழைக்கின்றனர்.
எப்போது அதிக துக்கத்தில் வருகின்றனரோ, அப்போது என்னை அழைக்
கின்றனர். இச்சமயம் குழந்தைகளாகிய உங்களுக்கு சிவபாபா படிப்பு
சொல்லித் தந்துக் கொண்டிருக்கிறார்.
பரமாத்மா வருகிறார் என்பதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது
என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்குச் சொல்லிப் புரிய
வையுங்கள், அதாவது அனைவரும் அழைக் கின்றனர் - ஹே பதீத-பாவனரே
வாருங்கள் என்று. இப்போது அவர் நிராகார். அவருக்குத் தம்முடைய
சரீரம் என்பது கிடையாது. வருவதும் தூய்மை இல்லாத உலகத்தில் தான்.
தூய்மையான (சத்யுகம்) உலகத் திலோ வரமாட்டார். இதுபோல் புரிய
வைக்க வேண்டும். இதையும் புரிய வைக்க வேண்டும், அதாவது ஆத்மா
எப்படி சிறியதாக உள்ளதோ, அது போல் பரமாத்மாவும் மிகச் சிறிய
அளவில் தான் இருக்கிறார். ஆனால் அவர் மனித சிருஷ்டியின் விதை
வடிவமாக, ஞானம் நிறைந்தவராக உள்ளார். பாபா சொல்கிறார், நீங்கள்
என்னைப் பரமபிதா பரமாத்மா எனச் சொல்கிறீர்கள். அழைக் கிறீர்கள்
எனும்போது நிச்சயமாக வருவேன் இல்லையா? பாடலும் உள்ளது - தூர
தேசத்தில் (பரந்தாமம்) வசிப்பவர் வேறொரு தேசத்தில் வந்தார்.
இப்போது பாபாவின் மூலம் தெரிய வந்துள்ளது, அதாவது இப்போது நாம்
வேறொரு தேசம், அதாவது இராவண தேசத்தில் இருக் கிறோம்.
சத்யுக-திரேதாவில் நாம் ஈஸ்வரிய தேசத்தில் அதாவது தங்களுடைய
தேசத்தில் இருந்தோம். பிறகு துவாபர யுகத்திலிருந்து நாம் வேறொரு
தேசத்தில், வேறொரு இராஜ்யத்தில் வந்துவிடுகிறோம். வாம
மார்க்கத்தில் வந்துவிடுகிறோம். பிறகு பக்தி
ஆரம்பமாகிவிடுகின்றது. முதன்-முதலில் சிவபாபாவுக்கு பக்தி
செய்ய ஆரம்பிக்கின்றனர். அவர்கள் சிவபாபாவுக்கு இவ்வளவு பெரிய
லிங்கத்தை அமைக்கின்றனர். ஆனால் அவரோ இவ்வளவு பெரிய அளவுள்ள
வராக இல்லை. இப்போது நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள், ஆத்மா
மற்றும் பரமாத்மாவுக்கிடையில் என்ன வேறுபாடு என்று. அவர் ஞானம்
நிறைந்தவர், சதா தூய்மையானவர், சுகத்தின் கடல், ஆனந்தத்தின்
கடலாக இருப்பவர். இது பரம ஆத்மாவுக்கான மகிமை இல்லையா? இப்போது
அழைக்கின்றனர், ஹே பதீத-பாவனா வாருங்கள் என்று. அவர் பரமாத்மா,
கல்ப-கல்பமாக வருபவர். தூரதேசத்தில் வசிக்கும் பயணியை
அழைக்கின்றனர். அவருடைய மகிமையைப் பாடுகின்றனர். பிரம்மா,
சரஸ்வதியையோ அழைப்பதில்லை. நிராகார் பரமாத்மாவைத் தான்
அழைக்கின்றனர். ஆத்மா அழைக்கின்றது, பரந்தாமத்தில் வசிப்பவரே,
இப்போது இராவண இராஜ்யத்தில் வாருங்கள். ஏனென்றால் அனைவரும்
தூய்மை யற்றவர்களாகிவிட்டுள்ளனர். நானும் கூட, எப்போது இராவண
இராஜ்யம் முடிவடைய இருக்கிறதோ, அப்போது தான் வருகிறேன். நான்
வருவதும் சங்கம யுகத்தில் தான். இது யாருக்குமே தெரியாது.
சொல்லவும் செய்கின்றனர், அவர் பரம ஆத்மா, பிந்தியாக இருப்பவர்.
தற்போது இப்படியும் சொல்கின்றனர், ஆத்மாவே தான் பரமாத்மா,
பரமாத்மாவே தான் ஆத்மா என்று. ஆத்மாவே பரமாத்மாவாக இருக்க
முடியாது. ஆத்மா, பரமாத்மா இரண்டும் வேறு வேறாகும். ரூபம்
இருவருக்கும் ஒன்றாகவே உள்ளது. ஆனால் ஆத்மா தூய்மையற்றதாகின்றது..
84 பிறவிகளின் பாகத்தை நடிக்க வேண்டி உள்ளது. பரமாத்மா
பிறப்பு-இறப்பு இல்லாதவர். ஆத்மாவே தான் பரமாத்மா எனச்
சொல்கின்றனர் என்றால், சதோபிரதான பரமாத்மா, தமோபிர தானத்தில்
வருகிறாரா என்ன? இல்லை, இது நடக்க முடியாது. பாபா சொல்கிறார்,
சர்வ ஆத்மாக்களுக்கும் சேவை செய்வதற்காக நான் வருகிறேன்.
என்னுடைய பிறவி என்று எதுவும் பேசப்படுவதில்லை. நான் வருவதே
நரக வாசிகளை சொர்க்கவாசி ஆக்குவதற்காக. வேறொரு தேசத்தில்
வந்துள்ளார், நமக்கு சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக. பாபா
தான் வந்து நம்மை சொர்க்கத்திற்குத் தகுதி உள்ளவர்களாக
ஆக்குகிறார். இதையும் புரிய வைத்துள்ளார், அதாவது ஆத்மாக்களின்
பாகம் அவரவருடையதாகும். பரமாத்மா பிறப்பு-இறப்பு இல்லாதவர்.
அவர் வருவதும் நிச்சயம், அதனால் தான் சிவராத்திரி
கொண்டாடுகின்றனர். ஆனால் அவர் எப்போது வந்தார் என்பது பற்றி
யாருக்கும் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளாமலே சிவ ஜெயந்தி
கொண்டாடியே வந்துள்ளனர். நிச்சயமாக சொர்க்க ஸ்தாபனைக்காக
சங்கமயுகத்தில் வந்திருப்பார். தூய்மையற்றவர் தூய்மை
யாக்குவதற்காக அவசியம் சங்கமயுகத்தில் வருவார் இல்லையா?
சொர்க்கம் என்பது தூய்மையான சிருஷ்டியாகும். பதீத பாவனா
வாருங்கள் என அழைக்கின்றனர். பிறகு நிச்சயமாக தூய்மையே இல்லாத
உலகத்தின் சமயமாக இருக்கும், அப்போது தான் தூய்மையான உலகத்தை
ஸ்தாபனை செய்வார். ஒவ்வொரு யுகத்திலுமோ வருவ தில்லை. பாபா
சொல்கிறார் - நான் சரியான சமயத்தில் தான் வந்து தூய்மையில்லாத
உலகத்தை தூய்மை யானதாக்க வேண்டும். இது வேறொரு தேசமாகும்,
இராவணனுடைய தேசம். ஆனால் இராவணனுடைய இராஜ்யம் நடைபெற்றுக்
கொண்டுள்ளது என்பதை யாரும் அறிந்துக் கொள்ள வில்லை.
எப்போதிருந்து இந்த இராவண இராஜ்யம் ஆரம்பமானது என்பது எதுவும்
தெரியாது. முதல்-முதல் முக்கிய விஷயம் ஆத்மா மற்றும் பரமாத்மா
பற்றிய இரகசியத்தைப் புரிய வைக்க வேண்டும். பிறகு அவர்
கல்பத்தின் சங்கமயுகத்தில் பாவனமாக்குவதற்காக வருகிறார்
என்பதைப் புரிய வைக்க வேண்டும். இந்தக் காரியம் அவருடையது,
ஸ்ரீகிருஷ்ணருடைய தல்ல. ஸ்ரீகிருஷ்ணரோ, தாமே 84 பிறவிகளை
எடுத்துக் கீழே இறங்குகிறார். சூரியவம்சி அனைவருமே கீழே
இறங்குகின்றனர். மரம் பாதி வரை புதியதாகவும், பாதி பழையதாகவும்
இருக்கும். இற்றுப் போன நிலை அனைவருக்கும் ஏற்படுகின்றது.
கல்பத்தின் ஆயுள் பற்றியும் மனிதர்களுக்குத் தெரியாது.
சாஸ்திரங்களில் மிக நீண்ட ஆயுள் எனச் சொல்லிவிட்டுள்ளனர். இதை
பாபா தான் வந்துப் புரிய வைக்கிறார். இதில் மற்றவர்கள் கேள்வி
எழுப்ப முடியாது. படைப் பவராகிய பாபா உண்மையைத் தான் சொல்கிறார்.
நாம் இவ்வளவு பேர் பி.கே. இருக்கிறோம். அனைவரும் ஏற்றுக்
கொண்டுள்ளோம் என்றால், அது நிச்சயம் என்பதால் ஏற்றுக் கொண்டுள்
ளோம். இன்னும் போகப் போக எப்போது நிச்சயம் ஏற்படுகிறதோ, அப்போது
புரிதலும் ஏற்படும். முதல்-முதலில் மனிதர் களுக்கு இதைப் புரிய
வைக்க வேண்டும் - பரமபிதா பரமாத்மா நிராகார் தூரதேசத்தில்
இருந்து வந்துள்ளார். ஆனால் எந்த சரீரத்தில் வருவது?
சூட்சுமவதனத்தில் வந்து என்ன செய்வார்? நிச்சயமாக இங்கே (ஸ்தூல
உலகத்திற்கு) வர வேண்டும். பிரஜாபிதா பிரம்மாவும் இங்கே இருக்க
வேண்டும். பிரம்மா யார்? இதையும் பாபா வந்துப் புரிய வைக்கிறார்.
யாருக்குள் பிரவேசமா கிறாரோ, அவர் தம்முடைய பிறவிகள் பற்றி
அறிந்திருக்கவில்லை என்றால் குழந்தைகளும் அறிந்திருக்கவில்லை.
நான் எப்போது தத்தெடுக்கிறேனோ, அப்போது குழந்தைகளாகவும்
ஆகின்றனர். நான் இவரோடு (பிரம்மா) கூடவே குழந்தை களுக்குப்
புரிய வைக்கிறேன் - நீங்கள் என்ன உங்களுடைய பிறவிகளை
மறந்துவிட்டீர்களா? இப்போது சிருஷ்டியின் சக்கரம்
முடிவடைகின்றது. பிறகு திரும்பவும் நடைபெறும். தூய்மையானதாக
ஆக்குவதற்காக.
இராஜயோகம் கற்பிப்பதற்காக நான் வந்துள்ளேன். தூய்மை ஆவதற்கு
வேறு எந்த ஒரு வழியும் கிடையாது. இந்த இரகசியத்தை மனிதர்கள்
அறிந்திருப்பார்களேயானால் கங்கை முதலியவற்றில் குளிப்பதற்காக,
திருவிழா முதலியவற்றிற்குச் செல்லமாட்டார்கள். இந்தத் தண்ணீர்
ஓடுகின்ற நதிகளிலோ சதா குளித்தே வந்துள்ளனர். துவாபர யுகம்
தொடங்கி இதைச் செய்து கொண்டே வந்துள்ளனர். கங்கையில் மூழ்கி
எழுவதால் பாவங்கள் அழிந்துவிடும் என நினைக்கின்றனர்.
முதன்-முதலில் ஆத்மா மற்றும் பரமாத்மா பற்றிய இரகசியத் தையே
சொல்லுங்கள். ஆத்மாக்கள் தான் பரமாத்மா தந்தையை அழைக்கின்றனர்.
அவர் நிராகார், ஆத்மாவும் நிராகார். இந்த உறுப்புகள் மூலம்
ஆத்மா அழைக்கின்றது. பக்திக்குப் பிறகு பகவான் வர வேண்டும்.
இதுவும் டிராமாவில் பாகம் உள்ளது.
பாபா சொல்கிறார் - நான் புதிய உலகை ஸ்தாபனை செய்வதற்காக வர
வேண்டி உள்ளது. சாஸ்திரங்களிலும் எழுதப்பட்டுள்ளது - பகவானுக்கு
சங்கல்பம் எழுந்தது என்றால் நிச்சயமாக டிராமா பிளான் படி
சங்கல்பம் எழுந்திருக்கும். முன்பு இவ்விஷயங்களைப் புரிந்துக்
கொண்ட தில்லை. நாளுக்கு நாள் புரிந்துக் கொண்டே செல்வீர்கள்.
பாபா சொல்கிறார் - நான் உங்களுக்கு புதுப்புது, ஆழத்திலும்
ஆழமான விஷயங்களைச் சொல்கிறேன். கேட்டுக் கேட்டுப் புரிந்துக்
கொண்டே செல்வீர்கள். முன்பு இதுபோல் சிவபாபா படிப்பு சொல்லித்
தருகிறார் என்றெல்லாம் சொன்னது கிடையாது. இப்போதோ நல்லபடியாகப்
புரிந்துக் கொண்டீர்கள். இன்னும் புரிந்துக் கொள்வதற்கு நிறைய
உள்ளது. தினந்தோறும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் -
யாருக்கு எப்படிப் புரிய வைக்க வேண்டும் என்று. முதலில் இந்த
நிச்சயம் செய்ய வேண்டும் - எல்லையற்ற தந்தைப் புரிய வைக்கிறார்
என்றால் அவர் நிச்சயமாக சத்தியத்தைத் தான் சொல்வார். இதில்
குழம்புவதற்கான விஷயம் எதுவும் இல்லை. குழந்தைகளில் சிலர்
பக்குவம் அடைந்தவர்களாக உள்ளனர், சிலர் பக்குவமில்லாதவர்களாக
உள்ளனர். பக்குவம் இல்லை என்றால் யாருக்கும் புரிய வைக்க
முடியாது. பள்ளிக்கூடத்திலும் கூட வரிசைக்கிரமமாக உள்ளனர்.
அநேகருக்கு இந்த சந்தேகம் வருகின்றது - நாம் எப்படிப்
புரிந்துக் கொள்வது, பரமபிதா பரமாத்மா வந்து படிப்பிக்கிறார்
என்று? ஏனென்றால் அவர்களின் புத்தியில் உள்ளது, ஸ்ரீகிருஷ்ணர்
ஞானம் சொன்னதாக. இப்போது தூய்மையற்ற உலகத்திலோ கிருஷ்ணர் வர
முடியாது. இதை அவர்களுக்குத் தெளிவுப்படுத்துங் கள், அதாவது
பரமாத்மா தான் வர வேண்டி உள்ளது, தூய்மையில்லா உலகம் மற்றும்
தூய்மை யற்ற சரீரத்தில். பாபா இதையும் புரிந்துக் கொண்டுள்ளார்
- ஒவ்வொருவருக்கும் அவரவர் புத்தி உள்ளது. சிலரோ உடனே
புரிந்துக் கொண்டுவிடுகின்றனர். முடிந்த வரை புரிய வைக்க
வேண்டும். பிராமணர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்.
ஆனால் தேக அபிமானம் குழந்தை களிடம் அதிகம் உள்ளது. நம்பர்வார்
உள்ளனர் என்பதை இந்த பாபாவும் அறிந்துள்ளார். கட்டளைப் படி
குழந்தைகள் நடக்க வேண்டும். பெரிய பாபா (சிவபாபா) என்ன
சொல்கிறாரோ, அதை ஏற்று நடக்க வேண்டும். குருமார் முதலானவர்கள்
சொல்வதையோ ஏற்றுக் கொண்டே வந்திருக் கிறீர்கள். இப்போது பாபா
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்பவர் ஆகையால் அவர் சொல்வதையே
கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும். ஆனால் அத்தகைய
நிச்சயபுத்தி இல்லை. அதில் நஷ்டம் வந்தாலும் சரி, லாபம்
வந்தாலும் சரி, ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகும் கூட பாபா
சொல்கிறார் இல்லையா - எப்போதுமே சிவபாபா தான் சொல்கிறார் எனப்
புரிந்து கொள்ளுங்கள். பிரம்மா எனப் புரிந்து கொள்ள வேண்டாம்.
பொறுப்பு சிவபாபாவுடையதாக இருக்கும். இது அவருடைய இரதமாகும்.
அவர் சரி செய்து விடுவார். நான் இருக்கிறேன் எனச் சொல்வார்.
எப்போதுமே புரிந்து கொள்ளுங்கள், சிவபாபா தான் சொல்கிறார்,
இவருக்கு எதுவும் தெரியாது. இவ்வாறே புரிந்துக் கொள்ளுங் கள்.
ஒரு பக்கமோ நிச்சயம் வைக்க வேண்டும். சிவபாபா சொல்கிறார், நான்
சொல்வதை ஏற்று நடந்துக் கொண்டே இருங்கள். அப்போது உங்களுக்கு
நன்மை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த பிரம்மாவும் ஏதாவது
சொல்கிறார் என்றால் அதற்கும் நானே பொறுப்பு. குழந்தைகள் நீங்கள்
கவலை கொள்ள வேண்டாம். சிவபாபாவை நினைவு செய்வதன் மூலம் மனநிலை
இன்னும் பக்குவம் அடைந்துவிடும். நிச்சயத்தில் விகர்மங் களும்
விநாசமாகிவிடும். பலமும் கிடைக்கும். எவ்வளவு பாபாவை நினைவு
செய்கிறீர்களோ, அவ்வளவு பலம் அதிகமாகக் கிடைக்கும். யார்
ஸ்ரீமத் படி நடந்து சேவை செய்கின்றனரோ, அவர்கள் தான் உயர்ந்த
பதவி பெறுவார்கள். அநேகரிடம் தேக அபிமானம் அதிகம் உள்ளது. பாபா
பாருங்கள் அனைத்துக் குழந்தைகளிடமும் எப்படி அன்போடு நடந்துக்
கொள்கிறார்! அனை வரிடமும் உரையாடிக் கொண்டே இருக்கிறார்.
குழந்தைகளிடம் கேட்கிறார், சரியாக அமர்ந்திருக் கிறீர்களா?
எந்த ஒரு கஷ்டமும் இல்லையே? குழந்தைகளுக்காக அன்பு உள்ளது.
எல்லையற்ற தந்தைக்கு குழந்தைகள் மீது மிக-மிக அன்பு உள்ளது.
யார் எவ்வளவு ஸ்ரீமத் படி சேவை செய்கின்றனரோ, அதன் அனுசாரம்
அன்பு உள்ளது. சேவையில் தான் நன்மை உள்ளது. எலும்பு தேய சேவை
வேண்டும். எந்த ஒரு காரியம் செய்தாலும் அது பிறகு உள்ளத்தில்
தான் உள்ளது - அதாவது இந்தக் குழந்தை முதல்தரமான குழந்தை. ஆனால்
போகப் போக சிலர் மீது கிரகச்சாரம் அமர்ந்து கொள்கிறது. மாயாவின்
எதிர்ப்பு உள்ளது இல்லையா? கிரகச்சாரியின் காரணத்தால் பிறகு
ஞானத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அநேகரோ பிறகு கர்மனா
சேவையைக் களைப்பின்றிச் செய்கின்றனர். உங்களுடைய வேலை
அனைவரையும் சுகதாமத்திற்கு மாலிக்காக ஆக்குவது. யாருக்கும்
துக்கம் தரக் கூடாது.
ஞானம் இல்லை என்றால் பிறகு அதிக துக்கம் தருகின்றனர். பிறகு
எவ்வளவு தான் புரிய வைத்தாலும் புரிந்துக் கொள்வதில்லை.
முதன்-முதலில் புரிய வைக்க வேண்டும் - ஆத்மா மற்றும் பரமாத்மா
பற்றி. எப்படி ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் அடங்கியுள்ளது,
அது அழிவற்ற பாகமாக உள்ளது. ஒருபோதும் மாறுவதில்லை. டிராமாவில்
விதிக்கப் பட்டுள்ளது. இந்த நிச்சயம் உள்ளவர்கள் ஒருபோதும்
அசைந்துக் கொடுக்கமாட்டார்கள். அநேகர் அசைந்துவிடுகின்றனர்.
கடைசியில் இந்தப் பழைய உலகம் என்ற வைக்கோல் போரை நெருப்புப்
பற்றிக் கொள்ளும்போது ஆடாதவர்களாக ஆகிவிடுவார்கள். இப்போதோ
மிகவும் யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். நல்ல-நல்ல
குழந்தைகளோ, சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பாபாவின் மனதில்
இடம் பிடித்துள்ளனர். மிகத் தீவிரமாகச் சென்றுக் கொண்டுள்ளனர்.
அதிக முயற்சி செய்கின்றனர். அவர் களுக்கு சேவையில் மிகுந்த
ஆர்வம் உள்ளது. யாரிடம் என்ன குணங்கள் உள்ளனவோ, அதை பாபா வர்ணனை
செய்கிறார். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. எலும்பு தேய சேவை செய்ய வேண்டும். (கடின உழைப்பு) . எந்த ஒரு
விஷயத்திலும் சந்தேகம் எழக் கூடாது. அனைவருக்கும் சேவையின்
மூலம் சுகம் கொடுக்க வேண்டும். துக்கம் தரக் கூடாது.
2. நிச்சயத்தின் பலத்தின் மூலம் தனது மனநிலையை ஆடாததாக ஆக்கிக்
கொள்ள வேண்டும். என்ன ஸ்ரீமத் கிடைக்கின்றதோ, அதில் நன்மை
அடங்கியுள்ளது. ஏனென்றால் பாபா பொறுப் பேற்றுக் கொள்கிறார்.
அதனால் கவலை கொள்ளக் கூடாது.
வரதானம்:
யோக யுக்த் மனநிலை மூலம் சூட்சம மற்றும் கடுமையான
பந்தனத்தை கடந்து செல்லக்கூடிய பந்தனமுக்த் ஆகுக.
யோகயுக்ததாக இருப்பவரின் அடையாளம் - பந்தனமுக்த் (பற்றறவர்)
ஆவது. யோகயுக்த ஆவதில் அனைத்தையும் விட பெரிய கடைசி பந்தனம் -
தன்னை புத்தி சாலியாக புரிந்து கொண்டு ஸ்ரீமத்தில் தனது
புத்தியின் அதிசயம் என புரிந்துக் கொள்வது என்றாலே ஸ்ரீமத்தில்
தனது புத்தியை கலப்பது. இதைத் தான் புத்தியின் அபிமானம் என்று
சொல்லப்படுகிறது. எப்பொழுதாவது யாராவது பலவீனத்தின் இஷாரா (சைகை)
தருகிறார்கள் அதாவது கெடுதல் செய்கிறார்கள் - அந்த நேரத்தில்
வீணான எண்ணங்கள் வருவது கூட பந்தனம் தான். இந்த
பந்தனங்களையெல்லாம் கடந்து, வெற்றி-தோல்வி, நிந்தனை-புகழ், இவை
அனைத்திலும் சமமான மனநிலை உருவாக்கும் பொழுது தான் சம்பூரண
பந்தனமுக்த் என்று சொல்ல இயலும்.
சுலோகன்:
முதலில் சிந்தித்து அதன் பின் செயல்படுவது தான் -
ஞானம் நிறைந்த ஆத்மாவின் குணம்.
அவ்யக்த சமிக்கை: மகான் ஆகுவதற்கு மதுரதா (இனிமை) மற்றும்
பணிவு என்ற குணங்களை தாரணை செய்யுங்கள்.
எதுவும் தெரியாத நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய பொருளை பொம்மை எனப்
புரிந்துக் கொண்டால் அதை அந்த குழந்தையிடமிருந்து ஏதாவது
கொடுத்து விடுவிக்க வேண்டி யிருக்கும். அதுபோல யார் குறுகிய
காலத்திற்காக புகழ், கௌரவம், மற்றும் அற்ப காலத்திற்கான ஆசை
வைக்கிறார் களோ, அவர்களுக்கு மதிப்பளித்து சுயம் பணிவுடையவர்
களாக ஆகுங்கள். ஒருவேளை அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏதாவது
அறிவுரை கொடுத்தால் மோதல்கள் தான் எற்படும். ஆகையால் அந்த
நேரத்தில் மிகவும் நுணுக்கமான (யுக்தி யுக்த்) செயல்பாட்டின்
மூலம் நன்மை செய்பவராகி, மன்னிக்கும் உணர்வோடு, மதிப்பளித்து
முதலில் அவர்களுக்கு புரிய வையுங்கள், இதன் மூலம் இது நஷ்டத்தை
ஏற்படுத்தும் என்பதை அவர்களே உணர்ந்துக் கொள்வார்கள்.