25-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! தன்னைத் தான்
கேட்டுக் கொள்ளுங்கள் - நான் கர்மேந்திரியங்களை வென்றவர்களாக
ஆகியிருக்கிறேனா? எந்த ஒரு கர்மேந்திரியமாவது என்னை ஏமாற்றாமல்
இருக்கிறதா?
கேள்வி:
கர்மாதீத் ஆவதற்காக,
குழந்தைகளாகிய நீங்கள் தனக்குத் தானே எந்த ஓர் உறுதிமொழியை
எடுத்துக் கொள்ள வேண்டும்?
பதில்:
தனக்குத் தான் உறுதி எடுத்துக்
கொள்ளுங்கள்-எந்த ஒரு கர்மேந்திரியமும் ஒரு போதும் சஞ்சல
முள்ளதாக ஆக முடியாது. நான் என்னுடைய கர்மேந்திரியங்களை எனது
கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பாபா என்னென்ன கட்டளைகள்
கொடுத்துள்ளாரோ, அவற்றை நடை முறைப்படுத்தியே ஆக வேண்டும். பாபா
சொல்லியிருக்கிறார் - இனிமையான குழந்தை களே, கர்மாதீத் ஆக
வேண்டுமானால் எந்த ஒரு கர்மேந்திரியத்தின் மூலமாகவும் விகர்மம்
செய்யா தீர்கள். மாயா மிகவும் சக்தி வாய்ந்தது. கண்கள் ஏமாற்றக்
கூடியவை. அதனால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
ஓம் சாந்தி.
குழந்தைகளே, ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருக்கிறீர்களா? தன்னைத்
தான் கேளுங்கள். ஒவ்வொரு விஷயத்திலும் தனக்குத் தானே கேட்க
வேண்டி உள்ளது. பாபா யுக்தி சொல்கிறார்- தன்னைத் தான் கேட்டுக்
கொள்ளுங்கள்-ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருக்கிறேனா? பாபாவை
நினைவு செய்கிறேனா? ஏனென்றால் இது உங்களது ஆன்மிக சேனை. அந்தச்
சேனை யிலோ எப்போதுமே இளைஞர்கள் தான் நியமனம்
செய்யப்படுகிறார்கள். இந்த சேனையில் இளைஞர்கள் 14-15 வயதினர்
உள்ளனர் என்றால் 90 வயது முதியவர்களும் கூட உள்ளனர். சிறு
குழந்தைகளும் உள்ளனர். இந்தச் சேனை மாயையை வெல்வதற்காக உள்ளது.
ஒவ்வொருவரும் மாயா மீது வெற்றி பெற்று பாபாவிடமிருந்து
எல்லையற்ற ஆஸ்தி பெற வேண்டும். ஏனென்றால் மாயா மிகவும் கொடியது
(பகைவன்). குழந்தைகள் தாங்களே கூட அறிந்துள்ளனர், மாயா மிகவும்
சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு கர்மேந்திரியமும் மிகவும் ஏமாற்றம்
தருவதாக உள்ளது. அனைத்தையும் விட முதலில் அதிகமாக ஏமாற்றுவது
எந்தக் கர்மேந்திரியம்? கண்கள் தான் அனைத்தையும் விட அதிகமாக
ஏமாற்றம் தருகின்றன. தன்னுடைய துணைவி இருந்த போதும் அழகான
மற்றவர் யாரையாவது பார்த்தால் உடனே கவரப் படுவார்கள். கண்கள்
அதிகமாக ஏமாற்றுகின்றன. அவர்களைத் தொடுவதற்கு மனம் எண்ணு
கின்றது. குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் படுகின்றது-சதா புத்தி
மூலம் இதைப் புரிந்து கொள்ளுங்கள்- நாம்
பிரம்மாகுமார்-குமாரிகள், சகோதர-சகோதரிகள். இதில் மாயா மிகவும்
குப்தமாக ஏமாற்றி விடுகின்றது. அதனால் அதைச் சார்ட்டிலும் கூட
எழுத வேண்டும்-இன்று நாள் முழுவதும் எந்த-எந்த
கர்மேந்திரியங்கள் நமக்கு ஏமாற்றம் தந்தன? அனைத்திலும் அதிக
விரோதியாக இருப்பது இந்தக் கண்கள். ஆகவே இதை எழுத வேண்டும் -
இன்னாரைப் பார்த்தேன், எனது பார்வை சென்றது. சூர்தாஸின்
உதாரணமும் உள்ளது இல்லையா? தம்முடைய கண்களைத் தோண்டி எடுத்து
விட்டார். தன்னைத் தான் சோதித்துப் பார்த்தால் தெரியும்-கண்கள்
அதிகமாக ஏமாற்றுகின்றன. தன் மனைவியையும் கூட விட்டுவிட்டு
யாராவது நன்றாக இருப்பவரைப் பார்த்தால் அதில் சிக்கி
விடுகின்றனர். சிலர் பாடுவதில் திறமைசாலியாக இருப்பார்கள்.
அலங்காரம் நன்றாக இருக்குமானால் கண்கள் உடனே சஞ்சலமடைந்து
விடும். அதனால் பாபா சொல்கிறார்-இந்தக் கண்கள் மிகவும் ஏமாற்றம்
தருகின்றன. சேவையும் கூடச் செய்கின்றனர். ஆனால் கண்கள் மிகவும்
ஏமாற்றத்தைத் தருகின்றன. இந்த விரோதியை முழுமையாகச் சோதிக்க
வேண்டும். இல்லையென்றால் நாம் நமது பதவியை மிகவும் கீழானதாக
ஆக்கிக் கொள்வோம் எனப் புரிந்து கொள்ளுங்கள். யார் புத்திசாலிக்
குழந்தைகளோ, அவர்கள் தங்களிடமுள்ள டயரியில் குறித்து வைக்க
வேண்டும்-இன்னாரைப் பார்க்கும் போது எமது பார்வை சென்றது. பிறகு
தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள வேண்டும். பக்தி
மார்க்கத்திலும் கூட பூஜை நேரத்தில் புத்தி வேறு-வேறு பக்கம்
அலைகின்றது. அப்போது தன்னைத் தான் கைவிரல் நுனியினால் கிள்ளிக்
கொள்கின்றனர். ஆக, எப்போது அது போன்ற யாராவது பெண் முதலியவர்கள்
முன்னால் வந்தால் அவர்களிடம் இருந்து விலகி விட வேண்டும்.
நின்று கொண்டு பார்க்கக் கூடாது. கண்கள் மிகவும் ஏமாற்றம் தரக்
கூடியவை. அதனால் சந்நியாசிகள் கண்களை மூடிக் கொண்டு
அமர்கின்றனர். பெண்களைப் பின்னாலும் ஆண்களை முன்னாலும் அமரச்
செய்கின்றனர். அநேகர் இது போலவும் இருக் கின்றனர்-பெண்களை ஒரு
சிறிதும் பார்ப்பதே இல்லை. குழந்தைகளாகிய நீங்களோ, மிகுந்த
முயற்சி செய்ய வேண்டும். உலகத்தின் இராஜ்ய பாக்கியத்தைப்
பெறுவதென்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. அந்த மனிதர்களோ, 10,
12, 20 ஆயிரம், ஓரிரு லட்சம், கோடி என்று சேர்த்து வைப்பார்கள்.
பிறகு அனைத்தும் அழிந்து போகும். குழந்தைகளாகிய உங்களுக்கோ
அழியாத ஆஸ்தி கிடைக்கின்றது. அனைத்துப் பிராப்திகளும் கிடைத்து
விடுகின்றன. எந்த ஒரு பொருளுக் காகவும் கஷ்டப்பட வேண்டும் என்ற
நிலையே இருக்காது. கலியுக இறுதிக்கும் சத்யுக ஆரம்பத் திற்கும்
இரவு--பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. இங்கோ எதுவுமே கிடையாது.
இது உங்களுடைய புருஷோத்தம சங்கமயுகம். புருஷோத்தம் என்ற சொல்லை
அவசியம் எழுத வேண்டும். மனிதரிலிருந்து தேவதை ஆக்குவதற்கு
இறைவனுக்கு அதிக நேரம் பிடிப்ப தில்லை.......... (சீக்கியர்களின்
கிரந்தம்). நீங்கள் இப்போது பிராமணர் ஆகியிருக்கிறீர்கள்.
மனிதர் களோ, முற்றிலும் பயங்கர இருளில் உள்ளனர். சொர்க்கத்தையே
பார்க்க முடியாது என்ற நிலையில் அநேகர் உள்ளனர். பாபா
சொல்கிறார்-குழந்தைகளே, உங்கள் தர்மம் மிகுந்த சுகம் தரக்
கூடியது. மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. சொர்க்கம் என்பது
என்னவென்பதை பாரதவாசிகள் மறந்து விட்டுள்ளனர். கிறிஸ்தவ மக்களே
கூட சொல்கின்றனர்-சொர்க்கம் இருந்தது என்று. இந்த
லட்சுமி-நாராயணரை பகவான் - பகவதி (காட்-காடெஸ்) எனச்
சொல்கின்றனர் இல்லையா? ஆகவே நிச்சயமாக கடவுள் தான் இது போல்
ஆக்குவார். ஆக, பாபா புரிய வைக்கிறார்-அதிக முயற்சி செய்ய
வேண்டும். தினமும் தனது கணக்கைப் பாருங்கள். எந்த
கர்மேந்திரியம் நம்மை ஏமாற்று கிறது? வாயும் கூட அதிகமாக
ஏமாற்றம் தருகின்றது. முன்பு கச்சேரி (கர்மேந்திரியங்களின்
தர்பார்) நடைபெற்றது. அனைவரும் தங்களின் தவறுகளைச் சொல்லிக்
கொண்டிருந்தன. நான் இன்ன பொருளை மறைத்து உண்டு விட்டேன்.
நல்ல-நல்ல பெரிய வீடுகளின் பெண் குழந்தைகள் சொல்லி விடுகின்றனர்
- இப்படி-இப்படி மாயா போராடுகிறது. மறைத்து உண்பதும் கூட
திருட்டாகும். சிவபாபாவின் யக்ஞத்தில் திருடுவது மிகவும் கெட்ட
பழக்கம். ஒரு பைசா திருடினாலும் ஒரு லட்சம் திருடியதற்குச் சமம்.
மாயா ஒரேயடியாக மூக்கைப் பிடித்து விடுகிறது. இந்தப் பழக்கம்
மிகவும் கெட்டதாகும். கெட்ட பழக்கம் இருக்குமானால் நாம்
என்னவாக ஆவோம்? சொர்க்கத்திற்குச் செல்வது ஒன்றும் பெரிய விஷயம்
கிடையாது. ஆனால் அதில் பிறகு பதவியும் கூட உள்ளது இல்லையா?
எங்கே ராஜா, எங்கே பிரஜை! எவ்வளவு வேறுபாடு! ஆக, கர்மேந்திரி
யங்களும் கூட அதிகம் ஏமாற்றம் தருபவை ஆகும். அவற்றை கவனமாகக்
கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உயர்ந்த பதவி பெற
வேண்டுமானால் பாபாவின் கட்டளைப் படி முழுமையாக நடக்க வேண்டும்.
பாபா வழிகாட்டுதல் தருவார், மாயா பிறகு இடையில் வந்து விக்னத்தை
ஏற்படுத்தும். பாபா சொல்கிறார்-மறக்காதீர்கள். இல்லையென்றால்
பிறகு கடைசியில் அதிக வருத்தப்படுவீர்கள். ஃபெயிலாவதற்கான
சாட்சாத்காரம் கூடக் கிடைக்கும். இப்போது நீங்கள் சொல்கிறீர்கள்,
நாம் நரனில் இருந்து நாராயண் ஆவோம் என்று. ஆனால் தன்னைத் தான்
கேளுங்கள்-தனது கணக்கை வெளிப்படுத்துங்கள். அநேகருக்கு இதைப்
புரிந்து கொண்டு நடை முறைப் படுத்துவது கடினமாக உள்ளது. ஆனால்
பாபா சொல்கிறார், இதனை நடைமுறைப் படுத்து வதால் உங்களுக்கு
முன்னேற்றம் அதிகம் ஏற்படும். முழு நாளின் கணக்கை வெளிப்படுத்த
வேண்டும். இந்தக் கண்கள் மிகவும் ஏமாற்றம் தருகின்றன. யாரையாவது
பார்ப்பீர்களானால் சிந்தனை வரும்-இவரோ மிக நன்றாக இருக்கிறார்
என்று. பிறகு பேசுவீர்கள். மனதில் எண்ணம் வரும்-அவருக்கு
ஏதேனும் பரிசு கொடுப்போம், இதனை உண்ணக் கொடுப்போம். அதே சிந்தனை
ஓடிக் கொண்டே இருக்கும். குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர்,
இதில் மிகுந்த முயற்சி தேவை. கர்மேந்திரியங்கள் அதிகமாக
ஏமாற்றுகின்றன. இராவண இராஜ்யம் இல்லையா? பாபா சொல்கிறார்- அங்கே
கவலைக்கான எந்த ஒரு விஷயமும் கிடையாது. ஏனென்றால் இராவண
இராஜ்யமே அங்கே கிடையாது. கவலைப்படுவதற்கான விஷயமே இருக்காது.
அங்கேயும் கூட கவலை இருக்குமானால் பிறகு நரகம் மற்றும்
சொர்க்கத்திற்கு இடையில் வித்தியாசம் தான் என்ன இருக்கும்?
குழந்தைகள் நீங்கள் மிகமிக உயர்ந்த பதவி பெறுவதற்காக பகவானிடம்
படிக்கிறீர்கள். பாபா புரிய வைக்கிறார் - மாயா பெயரைக்
கெடுக்கச் செய்து விடுகிறது. நீங்கள் அபகாரம் செய்தீர்கள். நான்
உபகாரம் செய்கிறேன். குழந்தைகளே, நீங்கள் தீய பார்வை வைப்பீர்
களானால் தனக்குத் தானே நஷ்டம் ஏற்படுத்திக் கொள்வீர்கள். அடைய
வேண்டிய குறிக்கோள் மிகவும் உயர்வானது. அதனால் பாபா
சொல்கிறார்-தனது கணக்கைப் பாருங்கள். எந்த ஒரு விகர்மமும்
செய்யவில்லை தானே? யாருக்கும் ஏமாற்றம் கொடுக்கவில்லையே?
இப்போது விகர்மங்களை வென்றாக வேண்டும். விகர்மங்களை வென்ற
புதிய சகாப்தத்தைப் பற்றிக் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு
யாருக்கும் தெரியாது. பாபா புரிய வைத்துள்ளார். விகர்மங்களை
வென்று இப்போது 5000 ஆண்டுகள் ஆகின்றன. பிறகு விகர்மம்
செய்கின்றனர் என்றால் வாமமார்க்கத்தில் செல்கின்றனர். கர்மம்,
அகர்மம், விகர்மம் என்ற சொல்லோ உள்ளது இல்லையா? மாயாவின்
இராஜ்யத்தில் மனிதர்கள் என்ன கர்மம் செய்தாலும் அது விகர்மமாகவே
ஆகின்றது. சத்யுகத்தில் விகாரம் இருப்பதில்லை. அதனால் விகர்மம்
எதுவும் ஏற்படுவதில்லை. இதையும் நீங்கள் அறிவீர்கள், ஏனெனில்
உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. நீங்கள்
திரிநேத்திரி ஆகியிருக்கிறீர்கள். ஆக, திரிகாலதரிசி,
திரிநேத்திரி ஆக்குபவர் பாபா. நீங்கள் ஆஸ்திகர்
ஆகியிருக்கிறீர்கள். அதனால் திரிகாலதரிசி ஆகியிருக்கிறீர்கள்.
முழு டிராமாவின் இரகசியமும் புத்தியில் உள்ளது. மூலவதனம்,
சூட்சுமவதனம், ஸ்தூலவதனம், 84 பிறவிகளின் சக்கரம், பிறகு மற்ற
தர்மங்கள் விருத்தி அடைகின்றன. அவர்கள் ஒன்றும் சத்கதி
அடைவதில்லை. அவர்களை குரு என்றும் சொல்ல முடியாது. அனைவருக்கும்
சத்கதி அளிப்பவர் ஒரு பாபா. இப்போது அனைவருக்குமே சத்கதி
கிடைக்கப் போகிறது. அவர்கள் தர்ம ஸ்தாபகர்கள் எனச்
சொல்லப்படுகின்றனர். குரு இல்லை. தர்ம ஸ்தாபகர்கள், தர்ம
ஸ்தாபனை செய்வதற்கு நிமித்தமாக ஆகியிருக்கிறார்கள். மற்றப்படி
சத்கதி அளிப்பதில்லை. அவர்களை நினைவு செய்வதால் சத்கதி எதுவும்
கிடைப்பதில்லை. விகர்மங்கள் விநாசமாவதில்லை. அவை அனைத்துமே
பக்தியாகும். ஆக, பாபா புரிய வைக்கிறார், மாயா மிகவும் கொடியது.
இதன் மீது தான் யுத்தம் நடைபெறுகின்றது. நீங்கள்
சிவசக்தி-பாண்டவ சேனை. நீங்கள் அனைவரும் வழி காட்டிகள் (பண்டாக்கள்).
சாந்திதாமம் மற்றும் சுகதாமத் திற்கான வழி சொல்கிறீர்கள்.
நீங்கள் வழிகாட்டிகள். நீங்கள் சொல்கிறீர்கள்-பாபாவை நினைவு
செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். ஆனால் மீண்டும்
பாவகர்மம் செய்வீர்களானால் நூறு மடங்கு பாவமாக ஆகி விடும்.
எவ்வளவு முடியுமோ, எந்த ஒரு விகர்மமும் செய்யாமல் இருக்க
வேண்டும். கர்மேந்திரி யங்கள் மிகவும் ஏமாற்றம் தருகின்றன. பாபா
ஒவ்வொருவரின் நடத்தை மூலம் புரிந்து கொண்டு விடுகிறார். குழந்தை
களுக்கு மாயாவின் புயல்கள் வருகின்றன. ஆண்-பெண் எனப் புரிந்து
கொள்வதால் தான் புயல்கள் வருகின்றன. ஆக, இந்தக் கண்கள் மீது
எவ்வளவு கட்டுப்பாடு வைக்க வேண்டும்! நாமோ சிவபாபாவின்
குழந்தைகள். பாபாவிடம் உறுதிமொழி கொடுத்து ராக்கியும் கூடக்
கட்டுகின்றனர். பிறகும் கூட மாயா ஏமாற்றம் தந்து விடுகின்றது.
அதன் பிறகு விடுபட முடியாது. கர்மேந்திரியங்கள் எப்போது
வசப்படுகின்றனவோ, அப்போது தான் கர்மாதீத் நிலை ஏற்பட முடியும்.
சொல்வதோ எளிது, நான் லட்சுமி-நாராயணராக ஆவேன் என்று. ஆனால்
புத்திசாலித் தனமும் வேண்டும் இல்லையா? பாபா
சொல்கிறார்-கட்டளைப்படி நடைமுறைப் படுத்துங்கள். பாபா-பாபா எனச்
சொல்லிக் கொண்டே இருங்கள். பாபாவிடம் இருந்து நான் முழு
ஆஸ்தியைப் பெறுவேன். இப்படிப்பட்ட ஆசிரியர் எங்கும் எப்போதும்
கிடைக்க மாட்டார். இந்த அனைத்து விஷயங்களையும் தேவதைகள் கூட
அறிந்திருக்கவில்லை எனும்போது பின்னால் வரக்கூடிய தர்மத்தினர்
எப்படி அறிந்து கொள்ள முடியும்? பாபா சொல்கிறார் - நான் எதைச்
சொன்னாலும் சிவபாபா தான் சொல்கிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த தாதா சொல்கிறார் எனப் புரிந்து கொள்ள வேண்டாம். இவரோ எனது
ரதம். இவர் என்ன செய்கிறார்? குழந்தை களாகிய உங்களுக்கு
இராஜ்யத்தை நான் தருகிறேன். இந்த ரதம் தருவதில்லை. இவரோ
முற்றிலும் அனைத்தையும் இழந்தவர். இவரும் கூட பாபாவிடமிருந்து
ஆஸ்தி பெறுகிறார். எப்படி நீங்கள் புருஷார்த்தம் செய்கிறீர்களோ,
அதுபோல் இவரும் செய்கிறார். இவரும் கூட மாணவ வாழ்க்கையில்
இருக்கிறார். இந்த ரதத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். அது
தமோபிரதான நிலை யில் உள்ளது. நீங்கள் பூஜைக்குரிய தேவதை
ஆவதற்காக, மனிதரில் இருந்து தேவதை ஆவதற் காகப் படிக்கிறீர்கள்.
யாருடைய அதிர்ஷ்டத்திலாவது இல்லை என்றால் சொல்கின்றனர்-எனக்கோ
சந்தேகம் உள்ளது-சிவபாபா எப்படி வந்து படிப்பு சொல்லித்
தருகிறார்? என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தந்தையை
நினைவு செய்யவில்லை எனில் விகர்மம் எப்படி விநாசம் ஆகும்.
முழுமையான தண்டனை பெற வேண்டியதிருக்கும். இராஜ்யம் ஸ்தாபனை
ஆகிக் கொண்டிருக்கிறது. இராஜாக்களுக்கு எவ்வளவு தாசிகள் உள்ளனர்!
(பிரம்மா) பாபாவோ இராஜாக்களின் தொடர்பில் இருந்திருக் கிறார்.
தாசிகளை சீதனமாகக் கொடுக்கின்றனர். இங்கேயே இவ்வளவு தாசிகள்
உள்ளனர் என்றால் சத்யுகத்தில் எவ்வளவு பேர் இருப்பார்கள்!
இதுவும் ராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. என்னென்ன
செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பாபா அறிந்துள்ளார்.
ஒவ்வொருவரின் கணக்கிலிருந்தும் (பதிவுகளி-ருந்து) பாபா சொல்ல
முடியும். இந்தச் சமயம் இறந்து போனால் என்னவாக ஆவார்கள்?
கர்மாதீத் அவஸ்தாவைக் கடைசியில் அனைவரும் நம்பர்வார் அடைவார்கள்.
ஆக, இது வருமானமாகும். வருமானத்தில் மனிதர்கள் எவ்வளவு பிஸியாக
உள்ளனர்! சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள், டெலிஃபோன் காதில்
இருக்கும். அப்படிப்பட்ட மனிதரோ ஞானத்தை அறிந்து கொள்ள முடியாது.
இங்கே ஏழைகள், சாதாரணமானவர்கள் தான் வருகின்றனர். பணக்காரர்களோ,
நேரம் எங்கே உள்ளது எனக் கேட்பார்கள். அட, பாபாவை நினைவு
செய்தாலே போதும், விகர்மங்கள் விநாசமாகி விடும். ஆகவே தான் பாபா
இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அடிக்கடி புரிய வைக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் இந்த செய்தியைக் கொடுக்க வேண்டும்-சிவபாபா
வந்துள்ளார் என்பது எங்களுக்கு எப்படித் தெரியும் என்று யாரும்
சொல்லக் கூடாது. நாள் முழுவதும் பாபா-பாபா என்றே சொல்லிக்
கொண்டிருங்கள். அநேக பெண் குழந்தைகள் அதிகம் நினைவு
செய்கின்றனர். சிவபாபா என்று சொல்லும் போதே அநேகக்
குழந்தைகளுக்கு அன்பின் கண்ணீர் வந்து விடு கின்றது. எப்போது
சென்று பாபாவைச் சந்திப்போம்? பார்த்ததில்லை என்றாலும் கூட,
துடித்துக் கொண்டுள்ளனர். பார்த்து விட்டவர்கள் பிறகு உரிய
மதிப்பளிப்பதில்லை. அவர்கள் தூரத்தில் இருந்தவாறே கண்ணீர்
வடித்தபடி உள்ளனர். அதிசயம் இல்லையா? பிரம்மாவின்
சாட்சாத்காரமும் கூட அநேகருக்கு ஏற்படுகின்றது. இன்னும்
போகப்போக அநேகருக்கு சாட்சாத்காரம் ஏற்படும். மனிதர் இறக்கும்
தருவாயில் அனைவரும் வந்து சொல்கின்றனர்-பகவானை நினைவு
செய்யுங்கள் என்று. நீங்களும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள்.
பாபா சொல்கிறார்-குழந்தைகளே, புருஷார்த்தத்தில் மேக்கப் (ஈடு)
செய்து கொண்டே (குறைவை நிறைவாக்கிக் கொண்டே) செல்லுங்கள்.
வாய்ப்புக் கிடைத்தால் மேக்கப் செய்யுங்கள். வருமானம் எவ்வளவு
பெரியது! ஒரு சிலரோ இப்படியும் உள்ளனர்-எவ்வளவு தான் புரிய
வைத்தாலும் கூட புத்தியில் பதிவதில்லை. பாபா சொல்கிறார்- அது
போல் ஆகக் கூடாது. தனக்குத் தான் நன்மை செய்து கொள்ளுங்கள்.
பாபாவின் ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள். உங்களை பாபா
ஆத்மாக்களுக்குள் உத்தமமானவர் களாக ஆக்குகிறார். இது நோக்கம்
மற்றும் குறிக்கோளாகும். பாபா சேவைக்காக எவ்வளவு யுக்திகள்
சொல்லிக் கொண்டே இருக்கிறார்! செய்தியோ அனைவருக்கும் கொடுக்க
வேண்டும். இவர்களோ உண்மையைத் தான் சொல்கின்றனர் என அவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும். இந்த யுத்தத்தின் மூலம் தான்
குறிப்பாக பாரதத்தில், பொதுவாக உலகத்தில் சுகம்-சாந்தி
ஏற்படுகின்றது. இது போன்று துண்டு பிரசுரங்கள் அனைத்து
மொழிகளிலும் அச்சிடப்பட வேண்டும். பாரதம் எவ்வளவு பெரியது!
இந்தச் செய்தியை ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
எங்களுக்குத் தெரியவே தெரியாது என்று யாருமே சொல்லிவிடக் கூடாது.
நீங்கள் சொல்வீர்கள், அட, ஏரோப்ளேனில் இருந்து நோட்டீஸ்களைப்
போட்டோம். செய்தித்தாள்களில் வெளியிட்டோம். நீங்கள் தூக்கத்தில்
இருந்து விழித்தெழவில்லை. இதுவும் காட்டப் பட்டுள்ளது. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தன்னிடம் என்னென்ன கெட்ட பழக்கங்கள் உள்ளனவோ, அவற்றை
வெளியேற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தனது உண்மையிலும்
உண்மையான (தினசரி) கணக்கு வழக்கை வைக்க வேண்டும்.
2) பாபாவின் பெயரைக் கெடுக்கின்ற மாதிரி அப்படி எந்த ஒரு
கர்மத்தையும் செய்துவிடக் கூடாது. தனது முன்னேற்றத்திற்கான
சிந்தனை வைக்க வேண்டும். ஒரு சிறிதும் தீய பார்வை என்பதே
இருக்கக் கூடாது.
வரதானம்:
ஸ்தூலமும் சூட்சுமத்திலும் ஒவ்வொரு கட்டளையும்
கடைப்பிடிக்கக் கூடிய முழுமையான கட்டளைக்கு கீழ்படிந்தவர் ஆகுக.
ஸ்தூல கட்டளைகளை பின்பற்றும் சக்தி எந்த குழந்தைகளுக்கு
இருக்குமென்றால், யார் சூட்சும கட்டளை களை பின்பற்றுபவர்களுக்கு
மட்டுமே இருக்கும்.. சதா நினைவில் இருப்பது மற்றும்
மனம்-சொல்-செயலில் தூய்மையாக இருங்கள். எண்ணத்திலும் கூட
அசுத்தம் அல்லது தூய்மை யின்மை இருக்கக் கூடாது. ஒருவேளை
ஏதேனும் எண்ணங்களில் பழைய அசுத்தமான சம்ஸ்காரங்கள் வந்தால் (டச்)
அது சம்பூரண வைஷ்ணவம் சம்பூரண தூய்மை என்று சொல்ல முடியாது,
ஆகவே, எந்த ஒரு எண்ணமும் கட்டளைக்கு எதிராக இல்லாமல் இருப்பது
- அப்போதுதான் முழுமையான கட்டளைக்கு கீழ்படிந்தவர் என்று
கூறலாம்.
சுலோகன்:
பாபாவை தெரிந்துக்கொண்டு இதயத்திலிருந்து பாபா என்று கூறுவது,
இது தான் மிகப்பெரிய விசேஷத்தன்மை.
அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான),
ஒரே சீரான மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.
ஏக்ரஸ் நிலையை உருவாக்க, கர்மயோகியாக ஆகுங்கள். கர்மயோகியின்
முன்னால் எப்படிப்பட்டவராக யாரேனும் வந்தாலும், அவர் எப்போதும்
இயல்பாகவே விடுபட்டவராகவும், அன்பானவராகவும் இருப்பார்கள். -
இவருக்கு நாடகத்தின் இது நடிப்பு என்று ஞானத்தின் மூலம் அவர்
புரிந்துகொள்வார் அவர் நல்லதை நல்லது என்று புரிந்து கொண்டு
சாட்சியாக பார்ப்பார்; மேலும், தவறானதை மாற்ற வேண்டும் என்ற
நல்ல எண்ணத்துடன், கருணைமிகுந்த பார்வை யுடன் சாட்சியாக
பார்த்து மாற்ற முயற்சிப்பார்கள். இதுதான் ஏக்ரஸ் நிலையை
உருவாக்கும் சாதனமாகும்.