25-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தையின் ஒரே ஒரு கடைக் கண் பார்வை கிடைத்ததும் முழு உலகிலுள்ள மனிதர்களும் திருப்தி அடைந்து விடுகின்றனர், அதனால் தான் பார்வையின் மூலம் முழு திருப்தி அளிக்கக் கூடியவர் ...... என்று கூறப்படுகின்றார்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களது உள்ளத்தில் குஷியின் முரசு ஒலிக்கப்பட வேண்டும், ஏன்?

பதில்:
ஏனெனில் அனைவரையும் கூடவே அழைத்துச் செல்ல பாபா வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நாம் நமது தந்தையின் கூடவே வீட்டிற்குச் செல்வோம். ஐயோ ஐயோ என்ற கூக்குரலுக்குப் பின் வெற்றி முழக்கம் ஏற்படும். தந்தையின் ஒரே ஒரு பார்வையின் மூலம் முழு உலகிற்கும் முக்தி, ஜீவன் முக்திக்காக ஆஸ்தி கிடைக்கப் போகிறது. முழு உலகத்திலும் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்பட்டு விடும்..

ஓம் சாந்தி.
ஆன்மீக சிவபாபா அமர்ந்து தனது ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக் கின்றார். மூன்றாவது கண் இருக்கிறது என்பதையும் அறிவீர்கள். உலகில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆஸ்தி கொடுப்பதற்காக நான் வந்திருக்கிறேன் என்பதை தந்தை அறிவார். தந்தையின் உள்ளத்தில் ஆஸ்தியின் நினைவு தான் இருக்கும். லௌகீக தந்தையின் உள்ளத் திலும் ஆஸ்தியின் நினைவு தான் இருக்கக் கூடும். குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுப்பேன். குழந்தை இல்லையெனில் யாருக்கு கொடுப்பது என்று குழப்பமடைவார். பிறகு தத்தெடுத்து விடுகிறார். இங்கு தந்தை அமர்ந்திருக்கின்றார், இவருக்கு முழு உலகிலுள்ள அனைத்து ஆத்மாக்களின் மீதும் பார்வை செல்கிறது. அனைவருக்கும் நான் ஆஸ்தி கொடுக்க வேண்டும் என்பதை அறிவார். இங்கு அமர்ந்திருக்கலாம், ஆனால் முழு உலகம் மற்றும் முழு உலகிலுள்ள மனிதர்களின் மீது பார்வை இருக்கிறது. ஏனெனில் முழு உலகையும் திருப்திபடுத்த வேண்டி யிருக்கிறது. இது புருஷோத்தம சங்கமயுகம் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். அனைவரை யும் சாந்திதாமம், சுகதாமம் அழைத்துச் செல்ல பாபா வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைவரும் விடுவிக்கப்படக் கூடியவர்கள். நாடகத்தின் திட்டப்படி கல்ப கல்பத் திற்கு விடுவிக்கப்பட்டு விடுவார்கள். தந்தை அனைத்து குழந்தைகளையும் நினைவு செய் கின்றார். பார்வை செல்கிறது அல்லவா! அனைவரும் படித்து விடமாட்டார்கள். நாடகப்படி அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். ஏனெனில் நாடகம் முடிவடைகிறது. சிறது காலம் கழித்து இப்பொழுது விநாசம் ஆகப்போகிறது என்பதை சுயம் புரிந்து கொள்வர். இப்பொழுது புது உலக ஸ்தாபனை ஆக வேண்டும். ஏனெனில் ஆத்மா சைத்தன்யமானது அல்லவா! ஆக தந்தை வந்திருக்கின்றார் என்பது புத்தியில் வந்து விடும். சொர்க்கம் ஏற்பட்டு விடும், பிறகு நாம் சாந்திதாமம் சென்று விடுவோம். அனைவருக்கும் நல்ல நிலை ஏற்படும் அல்லவா! மற்றபடி உங்களுக்கு சத்கதி ஏற்படும். இப்பொழுது பாபா வந்திருக்கின்றார். நாம் சொர்க்கத் திற்குச் செல்வோம். வெற்றி முழக்கம் ஏற்பட்டு விடும். இப்பொழுது அதிக துக்கத்தின் அழு குரல் உள்ளன. சில இடங்களில் அகால மரணங்கள் ஏற்படுகின்றன, சில இடங்களில் யுத்தம் நடைபெறுகின்றன, சில இடங்களில் பூகம்பம் ஏற்படுகின்றன. ஆயிரக் கணக்கில் இறந்து கொண்டே இருக்கின்றனர். மரணம் ஏற்பட்டே ஆக வேண்டும். சத்யுகத்தில் இந்த விசயங்கள் இருக்காது. நான் இப்பொழுது செல்கிறேன், பிறகு முழு உலகிலும் வெற்றி முழக்கம் ஏற்பட்டு விடும் என்பதை தந்தை அறிவார். நான் பாரதத்திற்குத் தான் செல்வேன். முழு உலகிலும் பாரதம் ஒரு சிறிய ஊர் கிராமம் போன்று இருக்கிறது. பாபாவிற்கு சிறிய ஊராகத் தான் தெரிகிறது. மிகக் குறைந்த மனிதர்கள் இருப்பர். சத்யுகத்தில் முழு உலகமும் ஒரு சிறிய ஊர் போன்று இருந்தது. இப்பொழுது எவ்வளவு விரிவடைந்து விட்டது. தந்தையின் புத்தியில் அனைத்தும் இருக்கிறது அல்லவா! இப்பொழுது இந்த சரீரத்தின் மூலம் குழந்தைகளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். கல்ப கல்பத்திற்கு என்ன முயற்சி செய்தீர்களோ அதையே இப்பொழுதும் செய்கிறீர்கள். தங்தையும் கல்ப விருட்சத்தின் விதையாக இருக் கின்றார். இது உலகாய மரமாகும். மேலே இருப்பது சூட்சுமமான மரமாகும். இது எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த அறிவு வேறு எந்த மனிதர் களிடத்திலும் கிடையாது. புத்தியற்றவர்கள் மற்றும் புத்திசாலிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்! புத்திசாலிகள் சொர்க்கத்தை இராஜ்யம் செய்தனர், அது சத்திய கண்டம், சொர்க்கம் என்று கூறப்பட்டது.

இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குள் மிகுந்த குஷி ஏற்பட வேண்டும். பாபா வந்திருக்கின்றார், இந்த பழைய உலகம் அவசியம் மாறும். எந்த அளவிற்கு யார் முயற்சி செய்வார்களோ அந்த அளவிற்கு பதவி அடைவர். தந்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றார். உங்களது இந்த பள்ளியானது மிகவும் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். அதிகமான வர்களாக ஆகிவிடுவார்கள். அனைவருக்கும் பள்ளி ஒன்றாக இருக்காது. இவ்வளவு பேர் எங்கு இருப்பார்கள்? இப்பொழுது நாம் சுகதாமத்திற்குச் செல்கிறோம் என்ற நினைவு குழந்தை களாகிய உங்களுக்கும் கூட இருக்கிறது. அயல்நாட்டிற்கு யாராவது செல்கின்றனர் எனில் 8-10 ஆண்டுகள் வரை இருக்கின்றனர் அல்லவா! பிறகு மீண்டும் பாரதத்திற்கு வருகின்றனர். பாரதம் ஏழையாக இருக்கிறது. அயல்நாட்டினருக்கு இங்கு சுகம் கிடைக்காது, எவ்வாறு குழந்தை களாகிய உங்களுக்கு இங்கு சுகம் இல்லையோ அதுபோன்று! நாம் இப்பொழுது உயர்ந்த கல்வியை கற்றுக் கொண்டிருக்கிறோம், இதன் மூலம் நாம் சொர்க்கத்திற்கு எஜமான், தேவதை களாக ஆகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு எவ்வளவு சுகம் இருக்கும்! அந்த சுகத்தை அனைவரும் நினைவு செய்கின்றனர். இந்த கலியுகத்தின் நினைவு வரவே வராது, இதில் அளவற்ற துக்கம் இருக்கிறது. இந்த இராவண இராஜ்யத்தில், தூய்மையற்ற உலகில் இன்று அளவற்ற துக்கம் இருக்கிறது, பிறகு நாளை அளவற்ற சுகம் இருக்கும். நாம் யோக பலத்தின் மூலம் அளவற்ற சுகம் நிறைந்த உலகை ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறோம்.இது இராஜயோகம் அல்லவா! நான் உங்களை இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறேன் என்று தந்தை சுயம் கூறுகின்றார். ஆக இவ்வாறு ஆக்கக் கூடிய ஆசிரியரை நினைவு செய்ய வேண்டும் அல்லவா! ஆசிரியரின்றி வக்கீல், இன்ஜினியர் போன்று ஆக முடியாது. இது புது விசயமாகும். ஆத்மாக்கள் பரமாத்ம தந்தையிடத்தில் (நினைவின் தொடர்பு) வைத்துக் கொள்ள வேண்டும், அவரைப் பிரிந்து அதிக காலம் இருந்து விட்டோம். எவ்வளவு காலம்? என்பதையும் தந்தை வந்து தானாகவே புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். மனிதர் கள் லட்சம் ஆண்டுகள் என்று கூறிவிட்டனர். தந்தை கூறுகின்றார்: அவ்வாறு கிடையாது, இது ஒவ்வொரு 5 ஆண்டிற்குப் பின்பும் யார் முதன் முத-ல் பிரிந்தார்களோ அவர்களே வந்து தந்தையை சந்திக்கின்றனர். நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும். இனிமையிலும் இனிய குழந்தைகளுக்கு எந்த கஷ்டமும் கொடுப்பது கிடையாது. தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ளுங்கள் என்று மட்டுமே கூறுகின்றார். ஜீவ ஆத்மா அல்லவா! ஆத்மா அழிவற்றது, உடல் அழியக் கூடியது. ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறது. ஆத்மா ஒரு பொழுதும் பழையதாக ஆவது கிடையாது. ஆச்சரியம் அல்லவா! கற்பிப்பவரும் ஆச்சரிய மானவர், படிப்பும் ஆச்சரியமானது! யாருக்கும் நினைவில் இல்லை, மறந்து விடுகின்றனர். முந்தைய பிறப்பில் என்ன படித்தோம்? யாருக்காவது நினைவில் இருக்கிறதா என்ன? இந்த பிறவியில் நீங்கள் படிக்கிறீர்கள், பலன் (ரிசல்ட்) புது உலகில் கிடைக்கும். இது குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே தெரியும். இப்பொழுது இது புருஷோத்தம சங்கமயுகமாகும், நாம் புது உலகிற்கு செல்லக் கூடியவர்கள் என்பது நினைவில் இருக்க வேண்டும். இது நினைவில் இருந்தாலும் உங்களுக்கு தந்தையின் நினைவு இருக்கும். நினைவிற்காக தந்தை பல உபாயங் களைக் கூறுகின்றார். தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், சத்குரு வாகவும் இருக்கின்றார். மூன்று ரூபத்திலும் நினைவு செய்யுங்கள். நினைவு செய்வதற்கு எவ்வளவு யுக்திகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆனாலும் மாயை மறக்க வைத்து விடுகிறது. எந்த தந்தை புது உலகை ஸ்தாபனை செய்கிறாரோ, அவரே புருஷோத்தம சங்கம யுகம் என்று கூறியிருக்கின்றார், இதை நினைவு செய்யுங்கள், இருப்பினும் ஏன் நினைவு செய்ய முடிவது கிடையாது? நினைவிற்கு யுக்திகளை கூறுகின்றார். கூடவே மாயையும் மிக சாதுர்யமானது என்றும் கூறுகின்றார். அடிக்கடி உங்களை மறக்க வைத்து விடும் மற்றும் தேக அபிமானிகளாக ஆக்கிவிடும். ஆகையால் எவ்வளவு முடியுமோ நினைவு செய்து கொண்டே இருங்கள். எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும், காரியங்கள் செய்தாலும் தேகம் என்று நினைப்பதற்குப் பதிலாக தன்னை ஆத்மா என்று நினையுங்கள். இது தான் முயற்சியாகும். ஞானம் மிகவும் எளியது. நினைவு நிலைத்திருப்பது கிடையாது என்று அனைத்து குழந்தைகளும் கூறுகின்றனர். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள், மாயை தன் பக்கம் கவர்ந்து விடுகிறது. இதில் தான் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. எனது புத்தியோகம் தந்தையுடன் மற்றும் படிப்பின் பாடங்களில் இருக்க வேண்டும், ஆனால் இருப்பது கிடையாது, மறந்து விடுகிறேன் என்பதை நீங்களும் புரிந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மறந்து விடக் கூடாது. உண்மையில் இந்த சித்திரங்களும் அவசியமில்லை. ஆனால் படிக்கின்ற நேரத்தில் எதிரில் ஏதாவது இருக்க வேண்டும் அல்லவா! எவ்வளவு சித்திரங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன! பாண்டவ அரசாங்கத்தின் திட்டங்கள் எப்படி இருக்கின்றன! என்பதைப் பாருங்கள். அந்த அரசாங்கத்திடமும் திட்டங்கள் உள்ளன. புது உலகில் பாரதம் மட்டுமே இருந்தது, மிகவும் சிறியதாக இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். முழு பாரதமும் உலகிற்கு எஜமானாக இருந்தது. அனைத்தும் புதியதாக இருந்தது. உலகம் ஒன்று தான், நடிகர்களும் அவர்களே, சக்கரம் மட்டும் சுற்றிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் கணக்கு எடுக்க முடியும், இவ்வளவு விநாடிகள், இவ்வளவு மணிநேரம், நாட்கள், ஆண்டுகள் முடிவடைந்து விட்டது, பிறகு மீண்டும் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும். இன்றைய நாள் இன்றைய நாள் என்று கூறி கூறி 5 ஆயிரம் ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. அனைத்து விதமான காட்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெற்று வந்தன. எவ்வளவு பெரிய எல்லையற்ற மரமாகும்! மரத்தின் இலைகளைக் கணக்கெடுக்க முடியாது. இது மரமாகும். இதற்கு அஸ்திவாரம் தேவி தேவதா தர்மமாகும். பிறகு இந்த மூன்று முக்கிய தர்மங்கள் வெளிப்படுகின்றன. மற்றபடி மரத்தின் இலைகள் எவ்வளவு இருக்கின்றன! கணக்கெடுக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. இந்த நேரத்தில் அனைத்து தர்மத்தின் மரமானது வளர்ச்சியடைந்து விட்டது. இது எல்லையற்ற பெரிய மரமாகும். இந்த அனைத்து தர்மங்களும் பிறகு இருக்காது. இப்பொழுது முழு மரமும் இருக்கிறது, ஆனால் அஸ்திவாரம் இல்லாமல் இருக்கிறது. ஆல மரத்தின் உதாரணம் முற்றிலும் சரியாக இருக்கிறது. இது ஒன்று மட்டுமே ஆச்சரியமான மரம் ஆகும், உதாரணம் கூறி புரிய வைப்பதற்காகவே தந்தை நாடகத்தில் இதை வைத்திருக்கின்றார். அஸ்திவாரம் கிடையாது. ஆக இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். தந்தை உங்களை எவ்வளவு புத்திசாலிகளாக ஆக்கியிருக்கின்றார்! இப்பொழுது தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் கிடையாது. மற்றபடி சிறிது அடையாளங்கள் - மாவில் உப்பு போன்று இருக்கிறது. இந்த அடையாளங்கள் மட்டுமே இருந்து கொண்டிருக்கிறது. ஆக குழந்தைகளின் புத்தியில் இந்த முழு ஞானமும் வர வேண்டும். தந்தையின் புத்தியிலும் ஞானம் இருக்கிறது அல்லவா! உங்களுக்கும் முழு ஞானம் கொடுத்து தனக்குச் சமமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். தந்தை விதை ரூபமாக இருக்கின்றார், மேலும் இது தலைகீழான மரம் ஆகும். இது பெரிய எல்லை யற்ற நாடகமாகும். இப்பொழுது உங்களது புத்தி மேலே சென்று விட்டது. நீங்கள் தந்தை மற்றும் படைப்புகளை அறிந்து கொண்டீர்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருந்தாலும் ரிஷி, முனிவர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? ஒருவர் அறிந்திருந்தாலும் பரம்பரையாக அறிந்திருக்கக் கூடும். அவசியமும் கிடையாது. அனைவருக்கும் சத்கதி ஏற்பட்டு விடுகிறது, இடையில் யாரும் திரும்பிச் செல்ல முடியாது. நாடகம் முடிவடையும் வரை அனைத்து நடிகர்களும் இங்கு இருக்க வேண்டும், எதுவரை தந்தை இங்கு இருக்கின்றாரோ, எப்பொழுது அங்கு (பரந்தாமம்) முற்றிலும் காலியாகி விடுகிறதோ அப்பொழுது தான் சிவபாபாவின் மண ஊர்வலம் நடைபெறும். முன் கூட்டியே சென்று அமர்ந்து விடமாட்டார்கள். ஆக தந்தை வந்து முழு ஞானமும் கொடுக்கின்றார். இந்த உலகச் சக்கரம் எவ்வாறு திரும்பவும் சுற்றுகிறது! சத்யுகம், திரேதா, துவாபர், கலியுகம்...... பிறகு சங்கமம் ஏற்படுகிறது. புகழ் பாடப்படுகிறது, ஆனால் சங்கமயுகம் எப்பொழுது ஏற்படுகிறது? என்பது யாருக்கும் தெரியாது.

4 யுகங்கள் உள்ளன என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது லீப் யுகமாகும், இது நுழைவாயில் (ஙண்க் ஞ்ஹற்ங்) என்றும் கூறப்படுகிறது. கிருஷ்ணரையும் நுழைவாயிலாகக் காண்பிக்கின்றனர். ஆக இது ஞானமாகும். ஞானத்தைத் துண்டித்து உடைத்து பக்தியில் எப்படியெல்லாம் ஆக்கிவிட்டனர்! அதைப் புரிய வைக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். பழமையான இராஜயோகம் கற்பிப்பதற்கு அயல்நாடுகளுக்குச் செல்கின்றனர். அதுவும் கூட இதே தான் அல்லவா! பழமையான என்றால் முதலானது. எளிய இராஜயோகம் கற்பிப்பதற்கு தந்தை வந்திருக்கின்றார். எவ்வளவு கவனம் இருக்கிறது! சொர்க்கம் ஸ்தாபனை ஆகிவிட வேண்டும் என்பதில் நீங்களும் கவனம் செலுத்துகிறீர்கள். ஆத்மாவிற்கு நினைவு வருகிறது அல்லவா! தந்தை கூறுகின்றார் - எந்த ஞானத்தை உங்களுக்கு நான் இப்பொழுது கொடுக்கிறேனோ அதை மீண்டும் நானே வந்து கொடுப்பேன். புது உலகிற்கான புது ஞானம் இதுவாகும். இந்த ஞானம் புத்தியில் வைத்துக் கொள்ளும் பொழுது அதிக குஷி ஏற்படும். இன்னும் குறுகிய காலம் தான் இருக்கிறது. இப்பொழுது செல்ல வேண்டும். ஒருபுறம் குஷியும் ஏற்படுகிறது, மறுபுறம் உணர்ச்சியும் (சிறிது வருத்தமும்) ஏற்படுகிறது. அட, இப்படிப்பட்ட இனிய பாபாவை நாம் மீண்டும் கல்பத்திற்குப் பிறகு தானே பார்ப்போம். தந்தை தான் குழந்தை களுக்கு இந்த அளவிற்கு சுகம் கொடுப்பார் அல்லவா! சாந்திதாமம், சுகதாமம் அழைத்துச் செல்வதற்காகவே தந்தை வந்திருக்கின்றார். நீங்கள் சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்தால் தந்தையின் நினைவும் வந்து விடும். இந்த துக்கதாமத்தை மறந்து விடுங்கள். எல்லையற்ற தந்தை எல்லையற்ற விசயங்களைக் கூறுகின்றார். பழைய உலகிலிருந்து உங்களது பற்றுதல் நீங்கிவிடும் பொழுது குஷி ஏற்படும். திரும்புகையில் நீங்கள் சுகதாமத் திற்குச் செல்கிறீர்கள். சதோ பிரதானம் ஆகிச் செல்வீர்கள். கல்ப கல்பத்திற்கு யார் ஆனார் களோ அவர்களே ஆவார்கள். மேலும் அவர்களுக்குத் தான் குஷி ஏற்படும், பிறகு இந்த பழைய சரீரத்தை விட்டு விடுவர். பிறகு புது சரீரத்தை எடுத்துக் கொண்டு புது உலகிற்கு வருவார்கள். இந்த ஞானம் அழிந்து விடும். விசயங்கள் எளிதானது தான். இரவு தூங்கும் நேரத்தில் இப்படிப்பட்ட சிந்தனைகள் செய்தால் குஷி ஏற்படும். நாம் இவ்வாறு ஆகிக் கொண்டிருக் கிறோம். முழு நாளும் நான் எந்த சாத்தான் காரியமும் செய்யவில்லை தானே? 5 விகாரங் களில் எந்த விகாரமும் என்னைத் தொந்தரவு செய்ய வில்லை தானே? பேராசை வரவில்லை தானே? தன் மீது கவனம் செலுத்த வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) யோக பலத்தின் மூலம் அளவற்ற சுகம் நிறைந்த உலகை ஸ்தாபனை செய்ய வேண்டும். இந்த துக்கமான பழைய உலகை மறந்து விட வேண்டும். நான் சத்திய உலகத்திற்கு எஜமானாக ஆகிக் கொண்டிருக்கிறேன் என்ற குஷி இருக்க வேண்டும்.

2) முழு நாளும் எந்த விகாரமும் தொந்தரவு செய்யவில்லை தானே? எந்த சாத்தான் காரியமும் செய்யவில்லை தானே? பேராசைக்கு வசமாகவில்லை தானே? என்று தினமும் தன்னை சோதிக்க வேண்டும்.

வரதானம்:
வரதாதாவின் மூலம் சர்வசிரேஷ்ட செல்வத்திற்கான வரதானத்தை பிராப்தியாக அடையக் கூடிய செல்வந்தர் ஆகுக.

ஒருவரிடம் ஸ்தூல செல்வம் இருந்தாலும் சதா திருப்தியாக இருக்க முடியாது. ஸ்தூல செல்வத்தின் கூடவே தெய்வீக குணங்கள் என்ற செல்வம், சர்வசக்திகள் என்ற செல்வம் மற்றும் ஞானம் என்ற சிரேஷ்ட செல்வம் இல்லையெனில் சதா திருப்தியாக இருக்க முடியாது. உங்கள் அனைவரிடத்திலும் இவை அனைத்து சிரேஷ்ட செல்வங்களும் இருக்கின்றன. உலகத்தினர் ஸ்தூல செல்வம் உடையவர்களைத் தான் செல்வந்தர் என்று நினைக்கின்றனர். ஆனால் வரதாதா தந்தையின் குழந்தைகளாகிய உங்களுக்கு சர்வசிரேஷ்ட செல்வந்தர் ஆகுக என்ற வரதானம் கிடைத்திருக்கிறது.

சுலோகன்:
உண்மையான சாதனையின் மூலம் ஐயோ ஐயோ என்பதை ஆஹா ஆஹா என்று மாற்றி விடுங்கள்.