26.01.25    காலை முரளி            ஓம் சாந்தி  15.12.2003      பாப்தாதா,   மதுபன்


பிரத்யட்சம் செய்வதற்கு சாதாரணத்தன்மையை அலௌகீக தன்மையாக மாற்றி காட்சி தரும் முர்த்தியாக ஆகுங்கள்.

இன்று பாப்தாதா தன்னுடைய நாலாபுறமும் உள்ள பிராமணக் குழந்தைகளின் நெற்றியின் நடுவில் பாக்கியத்தின் முன்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றார். எத்தனை சிரேஷ்டமான பாக்கியம் மேலும் எவ்வளவு சுலபமாக கிடைத்துள்ளது. ஒன்று அலௌகீக சிரேஷ்ட பிறவியின் பாக்கியம், இரண்டாவது - சிரேஷ்ட சம்பந்தங்களின், முன்றாவது - அனைத்து பிராப்தி களின் பாக்கியம். முன்று பாக்கியத்தின் ஜொலிக்கக் கூடிய நட்சத்திரங்களைப் பார்த்து, பாப்தாதாவும் புன்முறுவல் பூத்துக் கொண்டேயிருக்கின்றார். பிறவியின் பாக்கியத்தைப் பாருங்கள் - சுயம் பாக்கிய விதாதா தந்தை மூலம் உங்கள் அனைவருக்கும் பிறப்பு. பிறவி கொடுத்தவரே பாக்கியவிதாதா எனில் பிறவி எவ்வளவு அலௌகீகமான மற்றும் சிரேஷ்டமானது. உங்கள் அனைவருக்கும் கூட இந்த பாக்கியத்தின் பிறவிக்கான நஷா (ஆன்மீக போதை) மற்றும் குஷி இருக்கின்றதல்லவா! கூடக்கூடவே சம்பந்தத்தின் விசேஷத்தன்மையைப் பாருங்கள் - முழு கல்பத்தில் இப்படிப்பட்ட சம்பந்தம் மற்ற எந்த ஆத்மாவுக்குமே கிடைக்காது. விசேஷ ஆத்மாக் களான உங்களுக்கே ஒருவர் மூலமாக மூன்று சம்பந்தங்களின் பிராப்தி உள்ளது. ஒருவரே தந்தையாகவும், ஆசிரியராகவும் மேலும் சத்குருவாகவும் இருக்கின்றார். அப்படி ஒருவர் மூலமாகவே மூன்று சம்பந்தங்கள் பிராமண ஆத்மாக்களைத் தவிர வேறு யாருக்குமே இல்லை. அனுபவம் இருக்கிறதல்லவா? தந்தையின் சம்பந்தத்தில் ஆஸ்தியும் கொடுத்துக்கொண்டிருக் கின்றார், பாலனையும் செய்து கொண்டிருக்கின்றார். ஆஸ்தியும் பாருங்கள் எத்தனை உயர்ந்த மற்றும் அழிவற்றதாக இருக்கின்றது. உலகினர் சொல்கின்றனர் - நம்மைக் காப்பவர் கடவுள் என்று, ஆனால் நீங்களோ நம்பிக்கை மற்றும் போதையுடன் (நஷா) கூறுகிறீர்கள் - சுயம் பகவனே நம்மை பாலனை செய்து கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட பாலனை, பரமாத்ம வளர்ப்பு, பரமாத்ம அன்பு, பரமாத்ம ஆஸ்தி யாருக்கேனும் பிராப்திமாகியுள்ளதா! ஆகவே ஒருவரே தந்தையாக, காப்பவராக மேலும் ஆசிரியராகவும் இருக்கின்றார்.

ஒவ்வொரு ஆத்மாவின் வாழ்க்கையில் விசேஷமாக முன்று சம்பந்தங்கள் அவசியமானதாகும். ஆனால் மூன்று சம்பந்தங்களும் தனித்தனியாக இருக்கின்றது. உங்களுக்கு ஒருவரிடமே முன்று சம்பந்தங்களும் உள்ளது. படிப்பும் பாருங்கள் - மூன்று காலங்களின் படிப்பு. திரிகாலதரிசி ஆகுவதற்கான படிப்பு. படிப்பு வருமானத்திற்கான ஆதாரம் என சொல்லப்படுகிறது. படிப்பின் மூலம் பதவியின் பிராப்தியாகின்றது. முழு உலகத்திலும் பாருங்கள் - அனைத்தை விட உயர்ந்த திலும் உயர்ந்த பதவி, இராஜ்ய பதவி என புகழ் பாடப் பட்டுள்ளது. எனவே உங்களுக்கு இந்த படிப்பின் மூலமாக என்ன பதவி கிடைக்கிறது? இப்பொழுதும் இராஜா மேலும் எதிர்காலத்திலும் இராஜ்ய பதவி. இப்போது சுய - இராஜ்ய, இராஜயோக சுயராஜ்ய அதிகாரி மேலும் எதிர்கால இராஜ்ய பாக்கியமும் அழிவற்றது. இதை விடப் பெரிய பதவி வேறு எதுவுமில்லை. ஆசிரியர் மூலமாக கல்வியும் மூன்று காலத்திற்கான மேலும் பதவியும் தெய்வீக ராஜ்ஜிய பதவி கிடைக் கிறது. அப்படிப்பட்ட ஆசிரியர் என்ற சம்பந்தம் பிராமண வாழ்க்கையைத் தவிர வேறு யாருக்கும் ஏற்படவில்லை, ஏற்படவும் முடியாது. கூடவே சத்குரு என்ற சம்பந்தம், சத்குரு முலமாக ஸ்ரீமத், அந்த ஸ்ரீமத்திற்குத் தான் இன்றளவும் பக்தியில் மகிமை நடந்து கொண்டு வருகின்றது. நீங்கள் நம்பிக்கையுடன் கூறுகிறீர்கள், நம்முடைய ஒவ்வொரு அடியும் எதனுடைய ஆதாரத்தில் நடக்கின்றது? ஸ்ரீமத்தின் ஆதாரத்தில் ஒவ்வொரு அடியும் நடக்கின்றது. ஆகவே ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி நடக்கின்றோமா? சோதனை செய்யுங்கள். பாக்கியம் பிராப்தமாகியுள்ளது, ஆனால் பாக்கியத்தின் பிராப்தி வாழ்க்கையில் அனுபவமாகிறதா? ஒவ்வொரு அடியும் ஸ்ரீமத்படி இருக்கிறதா அல்லது அவ்வப்போது மன்மத் (மன வழி) அல்லது பரமத் (பிற - பிறர் வழி) என்பது கலக்கவில்லை தானே? ஒருவேளை ஸ்ரீமத்படி நடக்கிறோம் எனில் ஒவ்வொரு அடியில் பலகோடி மடங்கு சேமிப்பு ஏற்படும் - என்பதை வைத்து கண்டறிய முடியும். அடி ஸ்ரீமத்படி இருக்கின்ற தெனில் சகஜமாக வெற்றி உண்டு. கூடக்கூடவே சத்குரு மூலமாக வரதானங்களின் சுரங்கமும் பிராப்தியாகிறது. வரதானம் இருக்கிறது எனில் அதன் அடையாளம் - எங்கு வரதானம் இருக்குமோ அங்கு உழைப்பு இருக்காது. எனவே சத்ருகுவின் சம்பந்தத்தில் சிரேஷ்ட வழியும் மற்றும் சதா வரதானமும் கிடைக்கின்றது. மேலும் விசேஷத்தன்மை சகஜ மார்க்கத்திற்கானதாகும், எப்பொழுது ஒருவரிடத்திலேயே முன்று சம்பந்தங்களும் இருக்குமோ அப்பொழுது நினைவு செய்வதும் எளிதாகும். மூவரையும் தனித்தனியாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையால் நீங்கள் அனைவரும் ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை என சொல்கிறீர்கள். இது சகஜமானது, ஏனெனில் ஒருவருக்குள் விசேஷ சம்பந்தங்கள் வந்துவிடுகின்றது. ஆக பாக்கியத்தின் நட்சத்திரம் ஜொலித்துக்கொண்டிருக்கின்றது. ஏனெனில், பாபா முலம் அனைவருக்கும் பிராப்திகள் என்னவோ இருக்கத்தான் செய்கின்றது.

முன்றாவது பாக்கியத்தின் நட்சத்திரம் - அனைத்து பிராப்திகள். பிராமணர்களின் பொக்கிஷத்தில் எந்த ஒரு பொருளின் குறைவும் இல்லை என மகிமை இருக்கிறது. தனது அனைத்து பொக்கிஷங்களையும் நினைவு செய்யுங்கள். இப்படிப்பட்ட பொக்கிஷங்களோ அல்லது சர்வ பிராப்திகளோ யார் முலமாகவாவது கிடைக்கமுடியுமா என்ன! உளமார என்னுடைய பாபா என்று சொல்லுங்கள், பொக்கிஷங்கள் முன் வந்துவிடும், ஆகையால் இவ்வளவு சிரேஷ்ட பாக்கியத்தை சதா நினைவில் இருக்கவேண்டும், இதில் வரிசைக்கிரமமாக இருக்கின்றனர். பாப்தாதா இப்பொழுது இதையே விரும்புகிறார், யாதெனில் ஒவ்வொரு குழந்தையும் கோடியில் சிலர் அந்த சிலரிலும் சிலர் என்றால் அனைவரும் நம்பர்வார் அல்ல, நம்பன் ஒன்னாக இருக்கவேண்டும். ஆகவே தன்னிடம் கேளுங்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறோமா அல்லது முதல் எண்ணில் இருக்கிறோமா? என்னவாக இருக்கிறோம்? டீசர்ஸ் நம்பர்ஒன்னா அல்லது நம்பர்வாரா? பாண்டவர் கள் நம்பர் ஒன்னா அல்லது நம்பர்வாரா? என்னவாக இருக்கிறீர்கள்? யார் நம்பர் ஒன்னாக நாங்கள் இருக்கிறோம், மேலும் சதா இருப்போம் என புரிந்து கொள்கிறீர்களோ, இன்று நம்பர் ஒன் நாளை நம்பர்வாரில் வந்துவிடுவது அப்படியிருக்கக்கூடாது. அந்தளவு நிச்சயபுத்தியாக நாம் சதா எப்படி பிரம்மாபாபா நம்பர்ஒன்னோ, அதேபோல பிரம்மா பாபாவைப் பின்பற்றி நம்பர்ஒன்னாக இருப்போம் என நினைப்பவர்கள் கையை உயர்த்துங்கள். வெறுமனே அப்படி கையை உயர்த்தி விடக்கூடாது, யோசித்து புரிந்து உயர்த்தவேண்டும். நீளமாக உயர்த்துங்கள், பாதி பேர் பாதி உயர்த்துகிறீர்கள் என்றால் பாதிதான் உள்ளது. கையை பலர் உயர்த்தினீர்கள், பாருங்கள், தாதி பார்த்தார்கள். இப்போது இவர்களின் (நம்பர் ஒன்னாக இருப்பவர்கள்) கணக்கெடுக்க வேண்டும். இரட்டை அயல்நாட்டவர் கை உயர்த்தினார்கள். உயர்த்துங்கள், நம்பர் ஒன்னா? பாப்தாதாவை கையை உயர்த்தி உள்ளத்தை மகிழ்வித்தீர்கள். வாழ்த்துக்கள்! நல்லது - கையை உயர்த்தியதன் அர்த்தம் உங்களுக்கு தன்னிடத்தில் தைரியம் இருக்கிறது. மேலும், தைரியம் இருக்கிறதெனில் பாப்தாதாவும் உதவியாளராக இருக்கவே செய்வார். ஆனால் இப்போது பாப்தாதா விரும்புவது என்ன? நம்பர் ஒன், இது குஷிக்கான விசயம். ஆனால்...., ஆனால் சொல்வீர்களா அல்லது ஆனால் என்பது இல்லைதானே? பாப்தாதாவிடம் ஆனால் இல்லை.

பாப்தாதா பார்த்தார்கள் - அதாவது மனதில் நிறைத்துள்ளனர் ஆனால் மனம் வரை உள்ளது, முகம் மற்றும் நடத்தை வரை வெளிப்படவில்லை (எமர்ஜ்). இப்போது பாப்தாதா நம்பர் ஒன்னிற்கான நிலை நடத்தை மற்றும் முகத்தில் காண விரும்புகின்றார். இப்பொழுது நேரம் அனுசாரம் நம்பர் ஒன் என்று சொல்பவர்களின் ஒவ்வொரு நடத்தையிலும் காட்சி தரும் மூர்த்தியாக தென்பட வேண்டும். உங்கள் முகம் இவர்கள் காட்சியளிக்கும் மூர்த்தி என சொல்ல வேண்டும். இறுதிப் பிறவி வரை கூட, இறுதி காலம் வரையும் உங்கள் ஜட சித்திரத்தில் காட்சியளிக்கும் மூர்த்தியாக அனுபவமாகிறது. ஆக சைதன்யத்தில் கூட எப்படி பிரம்மாபாபாவைப் பார்த்தார்கள், சாகார சொரூபத்தில், ஃபரிஸ்தா பின்னால் ஆனார், ஆனால் சாகார சொரூபத்தில் இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் என்னவாக தென்பட்டார்? சாதாரணமாகத் தென்பட்டாரா என்ன? அந்திம 84-வது பிறவி, பழைய பிறவி, 60 வயதுக்குப் பின், இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சி யளிக்கும் மூர்த்தியாக அனுபவம் செய்தீர்கள். செய்தீர்கள் அல்லவா! சாகார ரூபத்தில் செய்தீர்கள் அல்லவா! அப்படி யாரெல்லாம் நம்பர் ஒன்னிற்கு கை உயர்த்தினீர்களோ, டி.வி.யில் காட்டப்பட்ட தல்லவா! பாப்தாதா அவர்களுடைய கோப்பு (ஃபைல்) பார்ப்பார், ஃபைல் பாப்தாதாவிடம் இருக்கின்றது தானே. ஆகவே இப்பொழுதிலிருந்து உங்களின் ஒவ்வொரு நடத்தையின் முலம் அனுபவமாக வேண்டும், கர்மம் சாதாரணமானதாக இருந்தாலும், எந்த வேலை செய்தாலும் வியாபாரம் செய்கிறீர்கள், மருத்துவம் செய்கிறீர்கள், வழக்கறிஞர் பணி செய்கிறீர்கள், என்ன செய்தாலும் ஆனால் எந்த இடத்தில் உங்கள் சம்பந்தம் தொடர்பில் வருகிறீர்களோ அவர்கள் உங்களுடைய நடத்தையால் இவர்கள் விடுபட்ட மற்றும் அலௌகிகமானவர்கள் என உணர் கின்றார்களா? அல்லது இவர்கள் லௌகீகத்தில் இருப்பது போல இருக்கின்றார்கள் என சாதாரணமாக புரிந்துகொள்கிறார்களா? காரியத்திற்கு விசேஷத்தன்மை இல்லை ஆனால் நடைமுறை வாழ்விற்குத்தான் விசேஷத்தன்மை. மிக நல்ல வியாபாரம், மிக நல்ல வழக்கறிஞர், மிக நல்ல மருத்துவர்..., இவ்வாறு பலர் இருக்கின்றனர். விசேஷ ஆத்மாக்களின் பெயர் அடங்கிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. எவ்வளவு பேருடைய பெயர் வருகிறது, அதிகம் இருக்கிறது. இவர் இத்தகைய சிறப்புத்தன்மை செய்தார், இவர் இத்தகைய சிறப்புத்தன்மை செய்தார், பெயர் வந்து விட்டது. ஆகவே யாரெல்லாம் கை உயர்த்தினீர்களோ, அனைவருமே உயர்த்த வேண்டும். அப்போது உங்கள் நடைமுறை வாழ்க்கையில் மாற்றத்தை பார்ப்பார்கள். இந்த சப்தம் இப்போது வெளி வரவில்லை, தொழிற்சாலையில் வேலை செய்தாலும், எங்கு வேலை செய்தாலும், ஒவ்வொரு ஆத்மாவும் இவர்கள் சாதாரண செயல் செய்தாலும் காட்சியளிக்கும் முர்த்தியாக இருக்கின்றார்கள் என சொல்ல வேண்டும். இவ்வாறு செய்ய முடியுமா? முடியுமா? முன்னால் அமர்ந்திருப்பவர்கள் கூறுங்கள் முடியுமா? இப்பொழுது ரிசல்டில் குறைவாகவே கேட்கிறது. சாதாரணத்தன்மை அதிகம் தெரிகிறது. ஆம் எப்போதாவது ஏதாவது விசேஷ காரியம் செய்கின்றீர்கள், விசேஷ கவனம் வைக்கின்றீர்கள் எனில் சரியாகத் தென்படுகிறது ஆனால் உங்களுக்கு பாபா மீது அன்பு இருக்கின்றது, பாபா மீது அன்பு இருக்கின்றதா? எவ்வளவு சதவீதம்? டீச்சர்ஸ் கை உயர்த்துங்கள். அதிகமான டீச்சர்ஸ் வந்துள்ளனர். முடியுமா? அவ்வப்போது சாதாரணம் அவ்வப்போது விசேஷமாகவா? எந்த காரியம் செய்தாலும் பேச்சு கூட அலௌகீக மானதாக இருக்கவேண்டும் என்று வார்த்தை கூட சொல்கிறீர்கள், சாதாரண சொல்லாகக் கூடாது.

இப்பொழுது பாப்தாதாவிற்கு அனைத்து குழந்தைகளிடமும் இருக்கும் விசேஷமான ஆசை யாதெனில் - பிறகு தந்தையின் பிரத்தியட்சம் ஏற்படும். உங்களின் செயல், நடத்தை, முகம் தானாகவே தெளிவுபடுத்தும், வார்த்தை தெளிவுபடாது. உங்கள் சொற்கள் ஒரு அம்பு போல் தைக்கின்றது. ஆனால் இவர்களை உருவாக்கியது யார் என்ற வெளிப்பாடு ஏற்படும். தானாக தேடுவார்கள், கேட்ப்பார்கள் உங்களை உருவாக்கியவர் யார்? படைப்பு படைப்பவரை பிரத்தியட்சம் செய்கின்றது.

இந்த வருடம் என்ன செய்வீர்கள்? தாதிகள் கிராம சேவை செய்யுங்கள் என்று கூறினார்கள். அதை தாராளமாக செய்யுங்கள். ஆனால் பாப்தாதா இந்த மாற்றத்தை பார்க்க விரும்புகின்றார். ஒரு வருடத்தில் முடியுமா? ஒரு வருடத்தில்? இரண்டாவது முறை எப்பொழுது சீசன் ஆரம்பமாகுமோ அப்பொழுது வித்தியாசம் தென்படவேண்டும், அனைத்து சென்டர்களிலிருந்து குரல் வரவேண்டும், அதாவது பெரிய மாற்றம், பிறகு பாடல் பாடுவார்கள் பரிவர்த்தனை. பரிவர்த்தனை... சாதாரணமான பேச்சு இப்பொழுது உங்கள் பாக்கியத்திற்கு முன் நல்லதாக இருக்காது. காரணம் நான் என்பதாகும். இந்த நான், நான் என்ற தன்மை, நான் யோசித்தேன், நான் கூறினேன், நான் என்ன செய்கிறோனோ... அதுவே சரி. இந்த நான் என்பதால் அபிமானம் வருகிறது, கோபம் வருகிறது. இரண்டும் தனது வேலையைச் செய்துவிடுகிறது. பாபாவின் பிரசாதமாகும், நான் எங்கிருந்து வந்தது! பிரசாதமாக கிடைத்ததை யாராவது எனது என்று கொண்டு வரமுடியுமா என்ன? ஒருவேளை புத்தி யும் இருக்கிறது, ஏதாவது கலைகள், விசேஷத்தன்மைகளும் இருக்கிறது, பாப்தாதா விசேஷத்தன்மை களை, புத்தியை வழங்கி உள்ளார். ஆனால் அதை நான் என்று கொண்டுவராதீர்கள். இந்த நான் என்பதை அழித்து விடுங்கள். இது சூட்சும நான் ஆகும். அலௌகீக வாழ்க்கையில் இந்த நான் என்ற தன்மை காட்சியளிக்கும் மூர்த்தி ஆகவிடாது. ஆகவே தாதிகள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்? மாற்றம் செய்யமுடியுமா? மூன்று பாண்டவர்கள் (நிர்வயர் சகோதரர், ரமேஷ் சகோதரர், பிரிஜ்மோகன் சகோதரர்) கூறுங்கள். விசேஷமாக மூவர் இருக்கின்றீர்கள் அல்லவா! மூவரும் கூறுங்கள் முடியுமா? முடியுமா? நல்லது - இப்போது இதற்கான கமாண்டர் ஆகவேண்டும் மேலும் விசயங்களில் கமாண்டர் ஆகக்கூடாது. மாற்றம் செய்வதில் ஆகவேண்டும். மதுபன்வாசிகள் ஆகுவீர்களா? ஆகுவீர்களா? மதுவனத்தினர் கை உயர்த்துங்கள். நல்லது - ஆகுவீர்களா? மும்பை வாசிகள் கை உயர்த்துங்கள், யோகினி தீதியும் (யோகினி தீதி - பார்லா) அமர்ந்துள்ளார்கள். மும்மையினர் ஆகுவீர்களா? ஒருவேளை ஆகுவீர்கள் எனில் கையை அசையுங்கள். நல்லது டில்லியினர் கை உயர்த்துங்கள். டில்லிவாசிகள் செய்வீர்களா? டீச்சர்ஸ் கூறுங்கள். பார்க்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பாப்தாதா ரிபோர்ட் பார்ப்பார். தைரியம் இருக்கிறதா? வாழ்த்துக்கள்!

நல்லது இந்தூர்வாசிகள் கை உயர்த்துங்கள். இந்தூரின் டீச்சர்ஸ் கை உயர்த்துங்கள். டீச்சர்ஸ் என்ன செய்வீர்கள்? இந்தூர் செய்வீர்களா? கை அசையுங்கள். முழு சபையும் அசைக்கவில்லை. செய்வீர்களா, மாட்டீர்களா? தாதிகள் பார்க்க வேண்டும். டி.வி.யில் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். குஜராத்வாசிகள் செய்வீர்களா? கை அசைப்பதோ எளிது. இப்பொழுது மனதை அசைக்கவேண்டும். ஏன் உங்களுக்கு, இவ்வளவு துக்கத்தைப் பார்க்கும் போது கருணை வரவில்லையா? இப்போது மாற்றம் ஏற்பட்டால் நல்லதல்லவா! ஆகவே இப்பொழுது பிரத்யட்சதாவின் திட்டம் - நடைமுறை வாழ்க்கை. மற்றபடி நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்கள், இது பிஸியாக இருப்பதற்காக மிக நல்லது. ஆனால் உங்கள் நடத்தை மற்றும் முகத்தினால் பிரத்யட்சம் ஏற்படும். மேலும் வேறு ஏதாவது ஜோன் மீதமிருக்கிறதா? யூ.பி. வாசிகள் கை உயர்த்துங்கள். கொஞ்சம் பேர் இருக்கின்றனர். நல்லது யூ.பி. செய்வீர்களா? மகாராஷ்ட்ரவினர் கை உயர்த்துங்கள். நீளமாக உயர்த்துங்கள். நல்லது. மகாராஷ்டவினர் செய்வீர்களா? வாழ்த்துக்கள். இராஜஸ்தான் உயர்த்துங்கள். டீச்சர்ஸ் கை அசையுங்கள். கர்நாடகத்தினர் தூக்குங்கள். நல்லது கர்நாடகத்தினர் செய்வீர்களா? ஆந்திரப்பிர தேசத்தினர் கை உயர்த்துங்கள். இது கலந்துரையாடல் செய்தீர்கள். இரட்டை அயல்நாட்டவர் கை உயர்த்துங்கள். ஜெயந்தி தீதி எங்கிருக்கின்றனர்? இரட்டை அயல்நாட்டவர் செய்வீர்களா? இப்போது பாருங்கள் சபையின் நடுவில் கூறினீர்கள். அனைவரும் நல்ல தைரியததைக் காட்டினீர்கள், இதற்காக பலகோடி வாழ்த்துக்கள். வெளியிலும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர், தனது தேசத்திலும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்களும்; கை உயர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல சிரேஷ்ட ஆத்மாக்களாக இருப்பவர்களின் வார்த்தைகளை சத்திய வாக்கு (சத் வசன்) என சொல்லப்படுகிறது. சத்திய வாக்கு மகாராஜ் என சொல்கிறார்கள் அல்லவா. நீங்களோ மகாராஜ் ஆவீர்கள். உங்கள் அனைவருடைய ஒவ்வொரு வார்ததையும் கேட்பவர்கள் உள்ளத்தில் இது சத்திய வாக்கு என அனுபவம் செய்யவேண்டும். மனதில் நிறைய நிறைந்துள்ளது, பாப்தாதாவிடம் மனதைப் பார்ப்பதற்கான டி.வி. இருக்கிறது. இந்த டி.வி. வெளித் தோற்றத்தைக் காட்டுகிறது அல்லவா! ஆனால் பாப்தாதாவிடம் ஒவ்வொருவரின் ஒவ்வொரு நேரத்திற்கான மனதின் வேகத்திற்கான எந்திரம் உள்ளது. எனவே மனதில் நிறைய தென்படுகிறது, மனதின் டி.வி. பார்க்கும்போது குஷி ஆகிவிடுகிறார், அதிக பொக்கிஷங்கள் இருக்கின்றன, சக்திகள் இருக்கின்றன. ஆனால் கர்மத்தில் இயன்ற சக்தியின் அளவு என்றாகி விடுகிறது. இப்போது கர்மம் வரை கொண்டு வாருங்கள், வார்த்தை வரை கொண்டுவாருங்கள், முகம் வரை கொண்டுவாருங்கள், நடத்தை வரை கொண்டுவாருங்கள். அப்போது அனைவரும் உங்களுடைய ஒரு பாடல் கூட இருக்கின்றதல்லவா, சக்திகள் தோன்றினர்.... என சொல்வார்கள். அனைவரும் சிவ சக்திகள். பாண்டவர்கள் சக்திகளே ஆவார்கள். சக்திகள் சிவ தந்தையை பிரத்யட்சம் செய்வீர்கள். இப்போது சிறு - சிறு விளையாட்டை முடித்துவிடுங்கள். இப்போது வானப்பிரஸ்த நிலையை எமர்ஜ் செய்யுங்கள். ஆக பாப்தாதா அனைத்துக் குழந்தைகளுக்கும் , இந்த நேரம் பாப்தாதாவின் ஆசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஆசைகளின் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றார். எந்த விசயம் வந்தாலும் இந்த சுலோகனை நினைவில் கொள்ளுங்கள் - பரிவர்தன் (மாற்றம்), பரிவர்தன், பரிவர்தன்

இன்று பாப்தாதாவின் வார்த்தையான ஒரு சப்தத்தை மறக்கக்கூடாது, அது எது? பரிவர்தன். நான் மாற வேண்டும். மற்றவர்கள் மாறவேண்டும் என்றல்ல, நான் மாறவேண்டும் மற்றவர்களை மாற்ற வேண்டும். பிறர் மாறினால் நான் மாறுவேன், என்றல்ல. நான் நிமித்தமாக வேண்டும். நான் தான் அர்ஜுன் ஆகவேண்டும் அப்போதே பிரம்மா பாபாவுக்குச் சமம் நம்பர் ஒன் ஆவீர்கள். (பின்னால் இருப்பவர்கள் கை தூக்குங்கள்) பின்னால் இருப்பவர்களுக்கு பாப்தாதா முதலில் அன்பு நினைவுகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். நல்லது.

நாலாபுறத்தில் உள்ள மிகமிக பாக்கியசாலி ஆத்மாக்களுக்கு, முழு உலகத்திற்கு மத்தியில் கோடியில் சிலர், அந்த சிலரிலும் சில விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா தனது நடத்தை மற்றும் முகத்தின் மூலம் பாப்தாதாவை பிரத்தியட்சம் செய்யக்கூடிய விசேஷ குழந்தைகளுக்கு, சதா சகயோகம் மற்றும் அன்பு பந்தனததில் இருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா பிரம்மா பாபாவுக்கு சமமாக ஒவ்வொரு காரியத்திலும் அலௌகீக காரியம் செய்யக் கூடிய அலௌகீக அத்மாக்களுக்கு, பாப்தாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

விங்க் சேவைகளை பற்றிய பாப்தாதாவின் பிரேரணைகள் : விங்கின் சேவையில் நல்ல ரிசல்ட் தென்படுகின்றது. ஏனெனில் ஒவ்வொரு வர்க்கமும் உழைப்பு செய்கின்றார்கள். தொடர்பை அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்கள். ஆனால் பாப்தாதா விரும்புகின்றார், எப்படி மருத்துவத் துறைச் சார்ந்தவர்கள் தியானத்தின் மூலம் இருதயத்திற்கான நடைமுறையை செய்து காட்டினார் கள். தியானத்தின் மூலம் இருதய கஷ்டத்தை சரி செய்ய முடியும் என்று செய்து காட்டினார்கள் மற்றும் உதாரணம் கொடுத்தார்கள். கொடுத்தார்கள் அல்லவா உதாரணம்!. நீங்கள் அனைவரும் கேட்டீர்கள் அல்லவா! இப்படியாக உலகத்தவர்கள் நடைமுறை உதாரணத்தை விரும்புகின்றார்கள். இந்த விதத்தில் எந்தெந்த விங்க் வந்துள்ளீர்களோ, நிகழ்ச்சிகளை செய்து தான் ஆகவேண்டும், செய்கின்றீர்கள், ஆனால் இப்படி ஏதாவது திட்டத்தை உருவாக்குங்கள். இதன் மூலம் நடைமுறை ரிசல்ட் அனைவருக்கும் வரும். அனைத்து வர்க்கத்தினருக்கும் பாப்தாதா கூறிக்கொண்டுள்ளார். இது அரசாங்கம் வரை சென்று கொண்டிருக்கின்றது தானே! மேலும் அங்காங்கே உங்கள் சப்தம் பரவியுள்ளது எனவே தியானத்தின் வாயிலாகவும் முடியும். இப்பொழுது இதை மேலும் அதிகரிக்க வேண்டும்.

இப்பொழுது நடைமுறை சான்று கொடுங்கள், தியானத்தின் மூலமாக அனைத்தை பரப்ப முடியும். அனைவரின் கவனமும் தியானத்தின் பக்கமும் ஆன்மிகத்தின் பக்கமும் திரும்பவேண்டும், நல்லது!

வரதானம்:
அமைதியின் சக்தியின் மூலம் உலகத்தில் பிரத்யட்சத்தின் முரசு கொட்டக்கூடிய சாந்தி சொரூபமானவர்கள் ஆகுக!

அறிவியல் மீது அமைதிக்கே வெற்றி, வார்த்தைக்கல்ல என்ற புகழ் உள்ளது. எவ்வளவு சமயம் அல்லது சம்பூர்னத்தன்மை சமீபமாக வருகின்றதோ அவ்வளவு தானாக சப்தத்தில் அதிகமாக வருவதிலிருந்து வைரக்கியம் ஏற்படும். இப்பொழுது விரும்பினாலும் பழக்கம், சப்தத்தில் கொண்டு வந்துவிடுகின்றது, அதேபோன்று விரும்பியதும் சப்தத்திற்கு அப்பால் சென்றுவிடுவார்கள். நிகழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டு சப்தத்தில் வருவார்கள். எப்பொழுது இந்த மாற்றம் தென்படுமோ, புரிந்து கொள்ளுங்கள் - இப்பொழுது வெற்றி முரசு கொட்டும். இதற்காக எவ்வளவு சமயம் கிடைக்கின்றதோ சாந்த சொரூபத்தில் இருப்பதற்கான பயிற்சியாளராக ஆகுங்கள்.

சுலோகன்:
ஜீரோ பாபாவின் கூடவே இருப்பவர்களே ஹீரோ பாகத்தை நடிப்பவர்கள்

தனது சக்திசாலி மனதின் மூலம் சக்தியை கொடுக்கும் சேவை செய்யுங்கள்

நிகழ்கால சமயத்தில் உலக நன்மையைச் செய்யும் சகஜ சாதனம் - தனது சிரேஷ்ட சகங்கல்பங் களின் ஒருமுகப்பாடு மூலம், அனைத்து ஆத்மாக்களின் அலைந்து கொண்டிருக்கும் புத்தியை ஒருநிலைப்படுத்த வேண்டும். அலைந்து கொண்டிருக்கும் புத்தி ஒன்றுபடவேண்டும் மற்றும் மனம் குழப்பங்களிலிருந்து ஒருமுகப் படவேண்டும் என்பதே முழு உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களின் விசேஷமாக விருப்பமாக உள்ளது. எப்பொழுது ஒருமுகப்பட்டு மனதின் சக்திகளை தானம் கொடுகின்றோமோ அப்பெழுது இந்த உலகத்தினரின் யாசகம் மற்றும் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியும்.