26-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள் தந்தையின்
கையைப் பிடித்துள்ளீர்கள், குடும்ப விவகாரங்களில் இருந்தாலும்
தந்தையை நினைவு செய்து கொண்டே தமோபிரதானத்திலிருந்து
சதோபிரதானமாக ஆகி விடுவீர்கள்
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு
உள்ளுக்குள் எந்தவொரு மகிழ்ச்சி இருக்க வேண்டும்? இதய
சிம்மாசனதாரியாக ஆவதற்கான விதி என்ன?
பதில்:
ஞானக்கடலான தந்தை தினமும் நமக்கு
ஞான ரத்தினங்களினால் தட்டுகளை நிரப்பிக் கொடுக்கின்றார் என்ற
மகிழ்ச்சி எப்போதும் இருக்க வேண்டும். எந்தளவிற்கு யோகத்தில்
இருப்பீர் களோ, அந்தளவிற்கு புத்தி தங்கமாகிக் கொண்டே செல்லும்.
இந்த அழிவற்ற ஞான ரத்தினங்கள் தான் கூடவே வருகிறது. இதய
சிம்மாசனதாரியாக ஆக வேண்டும் என்றால் தாய் தந்தையரை முழுமையாகப்
பின்பற்றுங்கள். அவர்களுடைய ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள்,
மற்றவர்களையும் தனக்குச் சமமாக ஆக்குங்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீகக் குழந்தைகள் இப்போது எங்கே அமர்ந்துள்ளீர்கள்?
ஆன்மீகத்தந்தையின் பல்கலைக் கழகம் அல்லது பாடசாலையில்
அமர்ந்துள்ளோம் என்று சொல்வீர்கள். நாம் ஆன்மீகத் தந்தையின்
முன்னால் அமர்ந்துள்ளோம் என்று புத்தியில் உள்ளது. அந்த தந்தை
நமக்கு படைப் பினுடைய முதல், இடை, கடைசியின் இரகசியத்தை அதாவது
பாரதத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி எப்படி நடக்கிறது என்பதை
புரிய வைக்கின்றார். தூய்மையாக இருந்த பாரதம் இப்போது தூய்மை
இழந்து விட்டது என்பதையும் சொல்கிறார். பாரதம் தலை கிரீடமாக
இருந்தது, பிறகு வெற்றி பெற்றது யார்? இராவணன். இராஜ்யத்தை
இழந்ததும் வீழ்ச்சி ஏற்பட்டது, ராஜாக்கள் யாரும் இல்லை. ஒருவேளை
ராஜாக்கள் இருந்தாலும் தூய்மையற்றவர்களாகவே இருப்பார்கள். இதே
பாரதத்தில் தான் சூரியவம்ச மகாராஜா- மகாராணிகள் இருந்தனர்.
சூரியவம்ச மகாராஜாக்கள் மற்றும் சந்திரவம்ச மகாராஜாக்கள்
இருந்தனர். இந்த விசயங்கள் இப்போது உங்களுடைய புத்தி யில்
உள்ளது. உலகத்தில் இந்த விசயங்கள் யாருக்கும் தெரியாது.
நம்முடைய ஆன்மீக தந்தை நமக்கு கற்பித்துக் கொண்டிருக்கிறார்
என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆன்மீக
தந்தையின் கரத்தை நாம் பிடித்துள்ளோம். நாம் குடும்ப
விவகாரங்களில் இருந்தாலும், நாம் சங்கமயுகத்தில் இருக்கின்றோம்,
என்பது புத்தியில் இருக்கிறது. தூய்மையற்ற உலகத் திலிருந்து
நாம் தூய்மையான உலகத்திற்குச் செல்கின்றோம். கலியுகம்
தூய்மையற்ற யுகம், சத்யுகம் தூய்மையான யுகமாகும். தூய்மையற்ற
மனிதர்கள் தூய்மையான மனிதர்களின் முன் சென்று வணங்குகின்றனர்.
அவர்களும் பாரதத்தின் மனிதர்களே ஆவர், ஆனால் அவர்கள் தெய்வீக
குணம் நிறைந்தவர்களாவர். இப்போது நாமும் தந்தையின் மூலம்
அப்படிப்பட்ட தெய்வீக குணங்களை தாரணை செய்து கொண்டிருக்கிறோம்
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சத்யுகத் தில் இந்த முயற்சி
செய்ய மாட்டோம். அங்கே இதனுடைய பலனாகும். இங்கே முயற்சி செய்து
தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். நாம் எந்தளவிற்கு
பாபாவை நினைவு செய்து தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்பதை எப்போதும் சோதனை செய்ய வேண்டும்.
எந்தளவிற்கு பாபாவை நினைவு செய்கிறீர்களோ, அந்தளவிற்கு
சதோபிரதானமாக ஆவீர்கள். பாபா எப்போதும் சதோபிரதானமாக
இருக்கின்றார். இப்போது தூய்மையற்ற உலகமாக இருக்கிறது,
தூய்மையற்ற பாரதமாக இருக்கிறது. தூய்மையான உலகத் தில்
தூய்மையான பாரதமாக இருந்தது. உங்களிடம் கண்காட்சி போன்றவற்றில்
வித-விதமான மனிதர்கள் வருகிறார்கள். எப்படி உணவு அவசியமோ,
அதுபோல் இந்த விகாரங்கள் கூட உணவாகும், இது இல்லையென்றால்
இறந்து போய்விடுவோம் என்று சிலர் சொல்கிறார்கள். விசயம் அப்படி
ஒன்றும் இல்லை. சன்னியாசிகள் தூய்மையாக இருக்கிறார்கள் என்றால்
இறந்து போகிறார்களா என்ன? இப்படி பேசுபவர்களை அஜாமிலன் போன்ற
பாவிகள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது, ஆகையினால் அப்படி
பேசுகிறார்கள். இது இல்லையென்றால் நீங்கள் இறந்து விடுவீர்களா
என்ன, இதை உணவோடு ஒப்பிடுகிறீர்களே? என்று அவர்களிடம் கேட்க
வேண்டும். யார் சொர்க்கத்திற்கு வரக்கூடியவர்களோ, அவர்கள்
சதோபிரதானமாக ஆவார்கள். பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருவார்கள்.
பின்னால் வரக்கூடிய ஆத்மாக்கள் நிர்விகார உலகத்தை பார்த்ததே
இல்லை. அந்த ஆத்மாக்கள், விகாரம் இல்லாமல் இருக்க முடியாது
என்று சொல்வார்கள். யார் சூரியவம்சத்தைச் சேர்ந்தவர் களோ
அவர்களுக்கு, இது சத்தியமான விசயம் என்பது உடனே புத்தியில்
வரும். சொர்க்கத்தில் விகாரம் என்பதன் பெயர்- அடையாளமே இல்லை.
வித-விதமான மனிதர்கள், வித-விதமான விசயங்களைப் பேசுகிறார்கள்.
யார் மலராக ஆகக்கூடியவர்கள் என்பதை நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். சிலர் முள்ளாகவே இருந்து விடுகிறார்கள்.
சொர்க்கத்தின் பெயரே மலர்களின் தோட்டம் என்பதாகும். இது
முட்களின் காடாகும். அனேக விதமான முட்களும் இருக்கின்றன. நாம்
மலர்களாக ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். இந்த லஷ்மி - நாராயணன் எப்போதும் ரோஜா
மலராகவே இருக்கின்றனர். இவர்களை மலர்களின் அரசன் என்று
சொல்லலாம். தெய்வீக மலர்களின் இராஜ்யம் அல்லவா. கண்டிப்பாக
அவர்களும் முயற்சி செய்திருப்பார்கள். படிப்பின் மூலம் அப்படி
ஆகியுள்ளார்கள். இப்போது நாம் ஈஸ்வரிய குடும்பத்தவர்களாக
ஆகியுள்ளோம், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். முன்பு
ஈஸ்வரனையே அறியாமல் இருந்தோம். பாபா வந்து இந்த குடும்பத்தை
உருவாக்கி யுள்ளார். முதலில் தந்தை மனைவியை தத்தெடுக்கின்றார்,
பிறகு அவரின் மூலம் குழந்தைகளைப் படைக்கின்றார். பாபா கூட
இவரை(பிரம்மா) தத்தெடுத்தார் பிறகு இவர் மூலமாக குழந்தைகளைப்
படைத்தார். இவர்கள் அனைவரும் பிரம்மாகுமார-குமாரிகள் அல்லவா.
இது குடும்ப மார்க்கத்தின் சம்மந்தமாகி விடுகிறது.
சன்னியாசிகளுடையது துறவறமார்க்கமாகும். அதில் யாரும் தாய்-தந்தை
என்று சொல்வதில்லை. இங்கே நீங்கள் மம்மா-பாபா என்று
சொல்கிறீர்கள். மற்ற சத்சங்கங்கள் அனைத்தும் துறவற
மார்க்கமாகும். இந்த ஒரேயொரு தந்தையைத் தான் தாய்-தந்தை என்று
அழைக்கிறோம். பாரதத்தில் தூய்மையான இல்லறமார்க்கம் இருந்தது,
இப்போது தூய்மையிழந்து விட்டது என்பதை பாபா வந்து புரிய
வைக்கின்றார். நான் மீண்டும் அதே இல்லற மார்க்கத்தை ஸ்தாபனை
செய்கின்றேன். நம்முடைய தர்மம் மிகவும் சுகம் அளிக்கக் கூடியது
என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு ஏன் நாம் மற்ற பழைய
தர்மத்தினரோடு தொடர்பு வைக்க வேண்டும்! சொர்க்கத்தில் நீங்கள்
எவ்வளவு சுகமாக இருந்தீர்கள், வைர-வைடூரியங்களினால் ஆன
மாளிகைகள் இருக்கின்றன. இங்கே அமெரீக்கா ரஷ்யா போன்ற நாடுகளில்
எவ்வளவு செல்வந்தர் கள் இருக்கிறார்கள், ஆனால் சொர்க்கத்தைப்
போன்ற சுகம் இருக்க முடியாது. தங்கக் கற்களினால் யாரும்
மாளிகைகளை உருவாக்க முடியாது. தங்க மாளிகை சத்யுகத்தில் தான்
இருக்கும். இங்கே தங்கம் எங்கே இருக்கிறது. அங்கே ஒவ்வொரு
இடத்திலும் வைர-வைடூரியங்கள் பதிக்கப் பட்டிருக்கும். இங்கே
வைரங்களுக்கு எவ்வளவு விலை ஏறிவிட்டது. இவையனைத்தும் மண்ணோடு
மண்ணாகி விடும். புதிய உலகத்தில் அனைத்து சுரங்கங்களும்
நிரம்பிவிடும் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். இப்போது இவை
யனைத்தும் காலியாகிக் கொண்டே இருக்கும். கடல் தேவதை
வைர-வைடூரியங்களின் தட்டை நிரப்பி கொடுத்தது என்று
காட்டுகிறார்கள். வைர-வைடூரியங்கள் அங்கே நிறைய கிடைக்கும்.
கடலைக் கூட தேவதையாக நினைக்கிறார்கள். பாபா ஞானக்கடல் என்று
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஞானக்கடல் தந்தை தினமும் ஞான
ரத்தினங் கள், வைடூரியங்களினால் தட்டை நிரப்பிக் கொடுக்கின்றார்
என்ற மகிழ்ச்சி எப்போதும் இருக்க வேண்டும். மற்றபடி அவை
தண்ணீரின் கடலாகும். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு ஞான
ரத்தினங்களைக் கொடுக்கின்றார், நீங்கள் அதை புத்தியில்
நிரப்புகிறீர்கள். எந்தளவிற்கு யோகத்தில் இருக்கிறீர்களோ
அந்தளவிற்கு உங்களுடைய புத்தி தங்கம் போல் ஆகிக் கொண்டே
செல்லும். இந்த அழிவற்ற ஞானரத்தினங்களைத் தான் நீங்கள் உடன்
எடுத்துச் செல்கிறீர்கள். பாபாவின் நினைவு மற்றும் இந்த ஞானம்
தான் முக்கியமாகும்.
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி இருக்க
வேண்டும். பாபாவும் மறைமுக மானவர், நீங்களும் கூட மறைமுகமான
சேனையை சேர்ந்தவர்கள். மறைமுகமான அஹிம்சை வாதியான போர் வீரர்கள்
என்று சொல்கிறார்கள் அல்லவா, இன்னார் மிகவும் சக்திமிக்க
போர்வீரன் என்று சொல்கிறார்கள் அல்லவா. ஆனால் அவர்களுடைய
பெயர்-அடையாளம் யாருக்கும் தெரியாது. இப்படி யாரும் இருக்க
முடியாது. அரசாங்கத் திடம் ஒவ்வொருவருடைய பெயர்-அடையாளம்
முழுமையாக இருக்கும். மறைமுகமான, அஹிம்சாவாதி போர் வீரர்கள்
என்பது உங்களுடைய பெயராகும். அனைத்திலும் முதலாவதான ஹிம்சை
இந்த விகாரமாகும், இது தான் முதல்-இடை-கடைசி வரை துக்கம்
கொடுப்பதாக இருக்கிறது, எனவே தான் ஹே தூய்மை யற்றவர்களை
தூய்மையாக்குபவரே தூய்மையற்ற எங்களை தூய்மையாக்குங்கள் என்று
சொல் கிறார்கள். தூய்மையான உலகத்தில் தூய்மையற்றவர்கள் ஒருவர்
கூட இருக்க முடியாது, என்பதை குழந்தைகளாகிய நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்கு
இப்போது (சங்கமயுகத்தில்) தான் நாம் பகவானுடைய குழந்தைகளாக
ஆகியுள்ளோம். ஆனால் மாயை ஒன்றும் குறைந்ததில்லை. மாயை அப்படி
ஒரு அறையை கொடுத்து ஒரேயடியாக குழியில் விழ வைத்து விடுகிறது.
யார் விகாரத்தில் விழுகிறார்களோ, அவர்களுடைய புத்தி ஒரேயடியாக
கெட்டுப்போய் விடுகிறது. தேகதாரிகள் தங்களுக்குள் அன்பு
வைக்காதீர்கள் என்று பாபா எவ்வளவு முறை புரிய வைத்துள்ளார்.
நீங்கள் ஒரு பாபாவிடம் அன்பு கொள்ள வேண்டும். எந்தவொரு
தேகதாரியிடமும் அன்பு வைக்கக் கூடாது, நேசம் கொள்ளக் கூடாது.
தேகம் அல்லாமல் விசித்திரமாக இருக்கும் தந்தையினிடத்தில் அன்பு
வைக்க வேண்டும். பாபா எவ்வளவு புரிய வைக்கின்றார், இருந்தாலும்
புரிந்து கொள்வதேயில்லை. அதிர்ஷ்டத்தில் இல்லையெனும் போது
ஒருவர் மற்றவருடைய தேகத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். நீங்களும்
கூட ஒளிப்புள்ளி என்று பாபா எத்தனை முறை புரிய வைத்துள்ளார்.
ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபம் ஒன்று தான். ஆத்மா சிறியதாகவோ
அல்லது பெரியதாகவோ ஆவதில்லை. ஆத்மா அழிவற்றதாகும். நாடகத்தில்
ஒவ்வொருவருக்கும் நடிப்பு பதிவாகியுள்ளது. இப்போது எவ்வளவு
அதிகமான மனிதர்கள் இருக்கிறார்கள், பிறகு 9-10 லட்சமாக ஆகி
விடுவார்கள். சத்யுகத்தில் மரம் எவ்வளவு சிறியதாக இருக்கிறது.,
பிரளயம் ஒருபோதும் நடப்பதில்லை. இருக்கின்ற மனிதர்களுடைய ஆத்மா
அனைத்தும் மூல வதனத்தில் இருக்கின்றன என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள். அதனுடைய மரமும் இருக்கிறது. விதை போடும்போது
அதிலிருந்து முழு மரமும் வெளிவருகிறது. முதலில் இரண்டு இலைகள்
வருகிறது. இது கூட எல்லையற்ற மரமாகும். சக்கரத்தை வைத்து புரிய
வைப்பது எவ்வளவு சகஜமாக இருக்கிறது, சிந்தனை செய்து பாருங்கள்.
இப்போது கலியுகமாகும். சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருந்தது.
எவ்வளவு குறைவான மனிதர்கள் இருந்திருப்பார்கள். இப்போது எவ்வளவு
மனிதர்கள், எவ்வளவு தர்மங்கள் வந்து விட்டன. இவ்வளவு தர்மங்கள்
முன்பு இருந்ததில்லை. முதலில் இல்லாத இவ்வளவு பேர் பிறகு எங்கு
செல்வார்கள்? அனைத்து ஆத்மாக்களும் பரந்தாமத்திற்கு சென்று
விடுகின்றன. உங்களுடைய புத்தியில் ஞானம் முழுவதும் இருக்கிறது.
பாபா எப்படி ஞானக்கடலாக இருக்கிறாரோ, அதுபோல் உங்களையும்
மாற்றுகின்றார். நீங்கள் படித்து லஷ்மி- நாராயண பதவியை
அடைகிறீர்கள். பாபா சொர்க்கத்தை படைப்பவர் ஆவார். சொர்க்கத்தின்
ஆஸ்தியை பாரதவாசிகளுக்குத் தான் கொடுக்கின்றார். மற்ற அனைவரை
யும் வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்கிறார். நான்
குழந்தைகளாகிய உங்களுக்கு பாடம் கற்றுத்தருவதற்காக வந்துள்ளேன்
என்று பாபா கூறுகின்றார். எந்தளவிற்கு முயற்சி செய்கின்றீர் களோ,
அந்தளவிற்கு பதவியை அடைவீர்கள். எந்தளவிற்கு ஸ்ரீமத்படி
நடப்பீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்தவர்களாக ஆவீர்கள். அனைத்தும்
முயற்சியில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. மம்மா-பாபாவின்
இதயசிம்மாசனதாரியாக ஆக வேண்டும் என்றால் முழுமையாக தாய்-தந்தையை
பின்பற்ற வேண்டும். இதய சிம்மாசனதாரியாக ஆவதற்கு அவர்களின்
வழிப்படி நடந்து செல்லுங் கள். மற்றவர்களையும் தனக்குச் சமமாக
மாற்றுங்கள். பாபா பலவிதமான யுக்திகளை கூறு கின்றார். ஒரு
பேட்ஜை வைத்துக் கூட நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் நன்றாகப்
புரிய வையுங்கள். புருஷோத்தம மாதமாக இருந்தால் படத்தை இலவசமாக
கொடுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபா பரிசு கொடுக்கின்றார்.
பணம் கையில் வந்தவுடன் பாபாவிற்கும் செலவு இருக்கிறது அல்லவா
என்று புரிந்து கொண்டு விரைவாக அனுப்பி வைத்து விடுவார்கள்.
வீடு ஒன்று தான் அல்லவா. இந்த டிரான்ஸ்லைட் மூலம் படங்களை
உருவாக்கி கண்காட்சி வைத்தால் எவ்வளவு பேர் பார்க்க வருவார்கள்.
புண்ணிய காரியமாகிறது அல்லவா. மனிதர்களை முள்ளிலிருந்து மலராக,
பாவாத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாக்களாக மாற்ற வேண்டும், இதை
தீவிர வேக சேவை என்று சொல்லப்படுகிறது. கண்காட்சியில் ஸ்டால்
வைப்பதின் மூலம் நிறைய பேர் வருகிறார்கள், செலவு குறைவாகத்தான்
ஆகிறது. பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் இராஜ்யத்தைப்
பெறுவதற்காக இங்கே வருகிறீர்கள். சொர்க்கத்தின் இராஜ்யத்தைப்
பெற கண் காட்சிக்கும் வருவார்கள். இது கடை அல்லவா.
இந்த ஞானத்தின் மூலம் உங்களுக்கு மிகுந்த சுகம் கிடைக்கும்
என்று பாபா கூறுகின்றார், ஆகை யினால் நல்ல விதத்தில் படித்து,
முயற்சி செய்து முழுமையாக தேர்ச்சி பெற வேண்டும். தன்னுடைய
மற்றும் படைப்பினுடைய முதல்-இடை- கடைசியின் அறிமுகத்தை பாபாவே
வந்து தருகின்றார், வேறு யாரும் கொடுக்க முடியாது. இப்போது
பாபாவின் மூலம் நீங்கள் முக்காலத் தையும் உணர்ந்தவர்களாக (திரிகாலதரிசி)
ஆகின்றீர்கள். நான் என்னவாக இருக்கின்றேனோ, எப்படி
இருக்கின்றேனோ அப்படி யதார்த்தமான விதத்தில் யாரும்
தெரிந்திருக்கவில்லை. உங்களில் கூட வரிசைக்கிரமமாக
இருக்கின்றீர்கள். ஒருவேளை யதார்த்தமான விதத்தில்
தெரிந்திருந்தால் ஒருபோதும் விட மாட்டீர்கள். இது படிப்பாகும்.
பகவான் அமர்ந்து கற்பிக் கின்றார். நான் உங்களுடைய கீழ்படிந்த
சேவகன் என்று பாபா கூறுகின்றார். தந்தை மற்றும் ஆசிரியர்
இருவருமே கீழ்படிந்த சேவகர்களாக இருக்கிறார்கள். நாடகத்தில்
என்னுடைய நடிப்பே அப்படித் தான் இருக்கிறது, பிறகு அனைவரையும்
என்னோடு அழைத்துச் செல்வேன். ஸ்ரீமத்படி நடந்து மதிப்புடன்
தேர்ச்சி பெற வேண்டும். படிப்பு மிகவும் சகஜமானதாகும். இதை
படிக்க வைப்பவர் (பிரம்மா) தான் அனைவரிலும் வயதானவர் ஆவார்.
நான் வயதானவன் அல்ல என்று சிவபாபா கூறுகின்றார். ஆத்மா
ஒருபோதும் வயோதிகம் அடைவதில்லை. ஆத்மா கல்புத்தி யுடையதாக
ஆகிறது. என்னுடையது தங்க புத்தியாகும் எனவே தான் உங்களை தங்க
புத்தியுடையவர்களாக்க வருகின்றேன். ஒவ்வொரு கல்பமும்
வருகின்றேன். எண்ணற்ற முறை உங்களுக்கு கற்றுத் தருகின்றேன்
இருந்தாலும் மறந்து விடுவீர்கள். சத்யுகத்தில் இந்த
ஞானத்திற்கான அவசியம் இருக்காது. பாபா எவ்வளவு நன்றாகப் புரிய
வைக்கின்றார். இப்படிப் பட்ட தந்தையை கைவிட்டு விடுகிறார்கள்.
ஆகையினால் தான் மகா முட்டாளைப் பார்க்க வேண்டும் என்றால் இங்கே
வந்து பாருங்கள் என்று சொல்லப்படுகிறது. எந்த தந்தையிடமிருந்து
சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறதோ, அவரையே கைவிட்டு
விடுகிறார்கள். நீங்கள் என்னுடைய வழிப்படி நடந்தீர்கள் என்றால்
அமரலோகத்தில் விஷ்வ மகாராஜா- மகாராணியாக ஆவீர்கள் என்று பாபா
கூறுகின்றார். இது மரணலோகமாகும். நாம் பூஜிக்கத்தக்க
தேவி-தேவதைகளாக இருந்தோம் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளீர்கள்.
இப்போது நாம் என்னவாக ஆகிவிட்டோம்? தூய்மையற்ற
ஒன்றுமில்லாதவர்களாக ஆகிவிட்டோம். இப்போது மீண்டும் நாம் தான்
இளவரசர் களாக ஆகப்போகிறோம். அனைவருடைய முயற்சியும் ஒரேமாதிரி
இருக்க முடியாது. சிலர் பிரிந்து சென்று விடுகிறார்கள், சிலர்
துரோகிகளாக ஆகிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட துரோகிகள் நிறைய
இருக்கிறார்கள், அவர்களிடம் பேசக்கூட கூடாது. ஞானத்தின்
விஷயங்களைத் தவிர வேறு எதையாவது கேட்டார்கள் என்றால்
சைத்தான்கள் என்று புரிந்து கொள்ளுங்கள். நல்ல சகவாசம் கரை
சேர்க்கும், தீய சகவாசம் மூழ்கடித்து விடும். யார் ஞானத்தில்
புத்திசாலிகளோ, பாபாவின் மனதில் அமர்ந்திருக்கிறார்களோ,
அவர்களிடம் சகவாசம் வையுங்கள். அவர்கள் உங்களுக்கு ஞானத்தின்
இனிமையிலும் இனிமையான விசயங்களைச் சொல்வார்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட சேவை
செய்யும், நன்றியுள்ள, கட்டளைக்கு கீழ் படியும் செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) யார் தேகமில்லாமல் விசித்திரமாக (அசரீரி) இருக்கிறாரோ அந்த
தந்தையின் மீது அன்பு வைக்க வேண்டும். எந்த ஒரு தேகதாரியின்
பெயர்-ரூபத்திலும் புத்தி மாட்டி விடக் கூடாது. மாயையின் அடி
விழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
2) ஞானத்தின் விசயங்களைத் தவிர மற்ற விசயங்களைப் பேசுபவரிடம்
சகவாசம் வைக்கக் கூடாது. முழுமையாக தேர்ச்சி பெறுவதற்கு முயற்சி
செய்ய வேண்டும். முட்களை மலர் களாக்கும் சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:
ஒரு பாபாவைத் தவிர எனக்கு வேறு யாரும் இல்லை -- இந்த நினைவு
மூலம் சதா பந்தன்முக்த் (பந்தனங்களில் இருந்து விடுபட்டவர்)
மற்றும் யோகயுக்த் (சதா யோக நிலையில் இருப்பவர்) ஆகுக.
இப்போது வீட்டுக்குத் திரும்புவதற்கான நேரம். எனவே பந்தன்முக்த்
மற்றும் யோகயுக்த் ஆகுங்கள். பந்தன்முக்த் என்றால் தளர்வான ஆடை
இறுக்கமானதன்று. கட்டளை கிடைத்ததும் ஒரு விநாடியில் சென்றுவிட
வேண்டும். அந்த மாதிரி பந்தன்முக்த், யோகயுக்த் ஸ்திதியின்
வரதானம் பெறுவதற்காக சதா இந்த உறுதிமொழி நினைவில் இருக்க
வேண்டும் -- ஒரு பாபா தவிர எனக்கு வேறு யாரும் இல்லை. ஏனென்றால்
வீட்டுக்குச் செல்வதற்கு மற்றும் சத்யுக ராஜ்யத்தில்
வருவதற்காக இந்தப் பழைய சரீரத்தை விட வேண்டியதிருக்கும். எனவே
சோதித்துப் பாருங்கள் -- அந்த மாதிரி எவர்-ரெடி ஆகியிருக்கிறேனா?
அல்லது இது வரையிலும் சில கயிறுகள் நம்மைக் கட்டிப்
போட்டிருக்கின்றனவா? இந்தப் பழைய உடல் என்ற ஆடை இறுக்கமாக இல்லை
தானே?
சுலோகன்:
வீண் சங்கல்பம் என்ற அதிகப்படியான (எக்ஸ்ட்ரா) உணவை
உட்கொள்ளாமல் இருப்பீர்களானால் அதிக எடையின் நோய்களில் இருந்து
தப்பித்துக் கொள்வீர்கள்.
அவ்யக்த இஷாரா : சத்தியதா மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தைத்
தனதாக்கிக் கொள்ளுங்கள்
பாபாவுக்கு அனைத்திலும் பெரிய பொருளாகத் தோன்றுவது -- உண்மை.
எனவே பக்தியில் கூட சொல்கின்றனர் -- காட் இஸ் ட்ரூத் (கடவுள்
உண்மையாகவே இருக்கிறார்) அனைத்திலும் பிரிய மான பொருள் உண்மை
ஆகும். ஏனென்றால் யாரிடம் உண்மை உள்ளதோ, அவரிடம் தூய்மை
இருக்கும். சுத்தமாக, தெளிவாக (க்ளீன் மற்றும் கிளியர்)
இருப்பார். எனவே உண்மையின் விசேஷத் தன்மையை விட்டுவிடக் கூடாது.
சத்தியத்தின் சக்தி ஒரு லிஃப்ட்டினுடைய வேலையைச் செய்யும்.