26-05-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! சுயம் பகவான்
நமக்கு ஆசிரியராக இருந்து படிக்க வைக்கிறார், நாம் அவரிடம்
இராஜயோகத்தை கற்றுக் கொண்டிருக்கிறோம், பிரஜா யோகம் கிடையாது
என்ற குஷியில் எப்போதும் இருங்கள்.
கேள்வி:
இந்த படிப்பின் சிறப்புத் தன்மை
என்ன? நீங்கள் எதுவரை முயற்சி செய்ய வேண்டும்?
பதில்:
இந்த படிப்பை நீண்ட காலமாக
படித்து கொண்டிருப்பவர்களை விட புதிய குழந்தைகள் வேகமாக
முன்னேறிச் சென்று விடுகிறார்கள். மூன்று மாத கூர்மையான புத்தி
உடைய (தீவிர முயற்சியாளர்கள்) குழந்தைகள் பழையவர்களை விட
முன்னேறி போக முடியும் இதுவும் சிறப்புத் தன்மையாகும்.
முழுமையாக தேர்ச்சி அடையாத வரை கர்மாதீத் நிலையை அடையாத வரை
கணக்கு வழக்கு முடியாத வரை நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
ஓம் சாந்தி.
குழந்தைகள் எங்கே அமாந்திருக்கிறீர்கள்? எல்லையற்ற தந்தையின்
பள்ளிக் கூடத்தில். மிகவும் உயர்ந்த போதை குழந்தைகளுக்கு
இருக்க வேண்டும். யாருடைய குழந்தைகளுக்கு? எல்லையற்ற தந்தையின்
குழந்தைகள் அல்லது ஆன்மீகக் குழந்தைகளுக்கு. பாபா ஆத்மாக்களை
தான் படிக்க வைக்கிறார். குஜராத்தி, அல்லது மராட்டியர்களை
மட்டும் படிக்க வைக்கவில்லை. அது பெயர் ரூபம் ஆகிவிட்டது. பாபா
ஆத்மாக்களை தான் படிக்க வைக்கின்றார். நம்முடைய எல்லையற்ற தந்தை
அவரே. அவரை பகவான் என்கிறோம் என குழந்தைகள் புரிந்துக்
கொள்கிறீர் கள். பகவான் வாக்கு என்று கூட நிச்சயம் இருக்கிறது.
ஆனால் பகவான் என்று யாருக்கு கூறப் படுகிறது. இதை புரிந்துக்
கொள்ளவில்லை. சிவபரமாத்மாய நமஹ! என்று கூட கூறுகிறார்கள்.
பரமாத்மா ஒருவரே ஆவார். அவர் உயாந்ததிலும் உயர்ந்த நிராகாரர்
ஆவார். உங்களுக்கு கிருஷ்ண பகவான் படிக்க வைக்கவில்லை.
படிப்பித்ததும் இல்லை. ஆத்மாக்களாகிய நம்முடைய தந்தை நம்மை
படிக்க வைக்கின்றார் என நீங்கள் அறிகிறீர்கள். பகவான் நிராகாரர்
ஆக இருக் கிறார். சிவனுடைய கோவிலுக்குச் செல்கிறார்கள்.
அவருக்கு பூஜையும் செய்கிறார்கள் என்றால் நிச்சயம் ஏதாவது ஒரு
பொருள் (விசயம்) இருக்கும். பெயர் ரூபத்தி-ருந்து விடுபட்ட
எந்த ஒரு பொருளும் இருக்காது. இதையும் நீங்கள் தான் புரிந்துக்
கொள்கிறீர்கள். முழு உலகத்திலும் வேறு யாரும் அறியவில்லை.
நீங்களும் இப்போது அறிந்துக் கொண்டிருக் கிறீர்கள். நீண்ட
காலமாக அறிந்துக் கொண்டு வந்துள்ளீர்கள். நீண்ட காலமாக
வருபவர்களை காட்டிலும் புதியவர்கள் வேகமாக போக முடியாது என்பது
கிடையாது. இதுவே சிறப்புத்தன்மையாகும். மூன்று மாத புதிய
குழந்தைகள் கூட மிகவும் புத்தி கூர்மை உடையவர்களாக
விடுகிறார்கள். பாபா இந்த ஆத்மாவின் புத்தி மிகவும் கூர்மையாக
இருக்கிறது என்று கூறுகிறார்கள். புதியவர்கள் கேட்கும் போது
மகிழ்ச்சி யால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு போகிறார்கள்.
அனைவருமே இறைவனுடைய மாணவர்கள். நிராகார் தந்தை ஞானக் கடல்
படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பகவான் வாக்கு என்று
பாடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அதை மறந்து விட்டார்கள்.
சிலருடைய தந்தையே ஆசிரியராகவும் இருப்பார். இவ்வாறும் சிலர்
இருக்கிறார்கள். இதை குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். ஆனால்
அவர் ஒரு பாடத்தை மட்டும் படிக்க வைப்பார். இன்னொரு பாடத்தை
மற்றொரு ஆசிரியர் தான் படிக்க வைப்பார். இங்கேயோ பாபா அனைத்து
குழந்தைகளுக்கும் ஆசிரியராக இருக்கிறார். இது அதிசயமான விஷயம்
ஆகும். நிறைய குழந்தை கள் இருக்கிறார்கள். சிவபாபா நம்மை
படிக்க வைக்கின்றார் என்ற நிச்சயம் அவர்களுக்கு இருக் கின்றது.
ஸ்ரீகிருஷ்ணரை பாபா என்று கூற முடியாது. கிருஷ்ணரை டீச்சர்,
குரு என்றும் நினைக்க முடியாது. இங்கே நடைமுறையில் படித்துக்
கொண்டிருக்கிறார். நீங்கள் பல விதமான மாணவர் கள்
அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் தேர்ச்சி அடையும் வரை பாபா
ஆசிரியர் படிக்க வைக்கிறார். கர்மாதீத நிலையை அடையும் வரை
முயற்சி செய்ய வேண்டும். கர்மங்களின் கணக்கு வழக்கிலிருந்து
விடுபட வேண்டும். உங்களுக்கு உள்ளுக்குள் மிகவும் குஷி இருக்க
வேண்டும்- பாபா நம்மை இப்படிப்பட்ட உலகத்திற்கு அழைத்து
செல்கிறார், குழந்தைகள் அமர்ந்திருக்கிறீர்கள், பரந்தாம நிவாசி
பாபா வந்து நம்மை படிக்க வைக்கிறார் என நினைப்பது போன்று
வேறெந்த பள்ளியிலும் எதுவும் இல்லை. இப்போது நீங்கள் இங்கே
அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் நம்முடைய எல்லையற்ற தந்தை நம்மை
படிக்க வைப்பதற்காகவே வருகின்றார் என புரிந்துக் கொள்கிறீர்கள்.
எனவே உள்ளுக்குள் மிகவும் குஷி இருக்க வேண்டும். பாபா நமக்கு
இராஜ யோகத்தை கற்பித்துக் கொண்டிருக்கின்றார். இது பிரஜா (பிரஜை
ஆவதற்கான) யோகம் கிடையாது. இது இராஜ யோகம் ஆகும். இந்த
நினைவினால் தான் குழந்தைகளுக்கு குஷியின் அளவு அதிகரிக்க
வேண்டும். எவ்வளவு பெரிய தேர்வு (பரிட்சை). நீங்கள் எவ்வளவு
சாதாரணமாக அமர்ந்திருக்கிறீர்கள். முஸ்லிம்கள் குழந்தைகளை
ஜமுக்காளத்தில் அமர வைத்து படிக்க வைக்கிறார்கள். நீங்கள்
நிச்சயத்தோடு இங்கே வருகிறீர்கள். இப்போது பாபாவின் முன்பு
அமர்கிறீர்கள். நான் ஞானக் கடல் என பாபாவும் கூறுகின்றார். நான்
கல்ப கல்பமாக வந்து இராஜ யோகத்தை கற்பிக்கிறேன். கிருஷ்ணரின்
84 பிறவிகள் என்றாலும் பிரம்மாவின் 84 பிறவிகள் என்றாலும்
விஷயம் ஒன்று தான். பிரம்மா தான் கிருஷ்ணர் ஆகிறார். இதை
புத்தியில் நன்கு உறுதியாக பதியவைத்துக் கொள்ள வேண்டும்.
பாபாவுடன் மிகவும் அன்பாக இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம்
அந்த தந்தையின் குழந்தைகள் ஆவோம். பரம்பிதா பரமாத்மா வந்து
நம்மை படிக்க வைக்கின்றார். கிருஷ்ணர் செய்ய முடியாது. இவ்வாறு
கிருஷ்ணர் படிக்க வைத்திருக்க முடியாது. கிரீடம் போன்றவைகளை
இறக்கி வைத்து விட்டு வந்திருக்கலாம். இப்போது படிக்க வைப்பவர்
முதியவராக இருக்க வேண்டும். நான் வயதான உடலில் இருக் கிறேன்.
இது நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது என்று பாபா கூறுகிறார்.
சிவபாபா பிரம்மா மூலமாக தான் படிக்க வைக்கிறார். பரம்பிதா
பரமாத்மா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என்கிறார்கள்.
இப்போது பிரம்மா எங்கிருந்து வந்தார் இதை புரிந்துக்
கொள்ளவில்லை. பாபா அமர்ந்து அடிக்கடி குழந்தைகளை விழித்தெழச்
செய்கிறார். பிறகு மாயை தூங்க வைத்துவிடு கிறது. இப்போது
நீங்கள் எதிரில் அமாந்திருக்கிறீர்கள். நான் உங்களுடைய ஆன்மீகத்
தந்தை எனப் புரிந்துக் கொள்கிறீர்கள். என்னை அறிந்துக்
கொண்டீர்கள் அல்லவா. பரம்பிதா பரமாத்மா ஞானக் கடல், பதீத பாவனர்,
துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என பாடுகிறார்கள்.
கிருஷ்ணருக்கு ஒரு போதும் இவ்வாறு கூற முடியாது. அனைவரையும்
ஒன்று சேர்த்து படிக்க வைக்க முடியாது. மதுபனில் முரளி
நடக்கிறது. அது பிறகு அனைத்து சென்டர்களுக்கும் செல்கிறது.
இப்போது நீங்கள் எதிரில் இருக்கிறீர்கள். போன கல்பத்தில் கூட
பாபா இவ்வாறு படிக்க வைத்தார் என அறிகிறீர்கள். இதுவே கடந்து
போன அதே நேரம் ஆகும். இப்போது மீண்டும் அது நிகழ்கிறது. பக்தி
மார்க்கத்தின் விஷயங்களை இப்போது விட்டு விட வேண்டும். இப்போது
உங்களுக்கு ஞானத்தின் மீது அன்பு, படிக்க வைப்பவர் மீது அன்பு
இருக்கிறது. சிலர் ஆசிரியரிடம் படிக்கும் போது அவர் களுக்கு
பரிசு கொடுக்கிறார்கள். இந்த தந்தையோ அவரே பரிசளிக்கிறார்.
இங்கே வந்த குழந்தை களை பார்க்கிறார். இவர்கள் நம்முடைய
குழந்தைகள். குழந்தைகள் அனைவரும் 84 பிறவிகள் எடுப்பதில்லை,
அதுவும் குழந்தைகளுக்காக ஞானமாகும்.. ஒரு சிலர் ஒரு பிறவிலேயே
கூட சுக துக்கத்தை அனுபவித்து கடந்துவிடுகிறார்கள். இப்போது
நீங்கள் இந்த விஷயங்கள் அனைத்தை யும் புரிந்துக் கொண்டீர்கள்.
இது மனித வம்சத்தின் குலம் ஆகும். முதல் நம்பரில்
பிரம்மா-சரஸ்வதி, ஆதிதேவ்-ஆதிதேவி. பிறகு பல தர்மங்கள்
உருவாகிக் கொண்டே போகிறது. அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் விதை
ஆவார். மற்ற அனைத்தும் இலைகள் ஆகும். பிரஜா பிரதா பிரம்மா
அனைவருக்கும் தந்தை ஆவார். இச்சமயம் பிரஜா பிதா இருக்கிறார்.
இவர் அமர்ந்து சூத்திரனிலிருந்து மாற்றி பிராமணன் ஆக்குகிறார்.
இவ்வாறு யாரும் செய்ய முடியாது. பாபா தான் உங்களை
சூத்திரனிலிருந்து பிராமணன் ஆக்கி பிறகு தேவதையாக மாற்ற படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவே, சகஜ இராஜ யோகத்தின்
படிப்பாகும். ராஜா ஜனகர் கூட நொடியில் ஜீவன் முக்தி அடைந்தார்.
அதாவது சொர்க்கவாசி ஆகிவிட்டார். மனிதர்கள் பாடிக் கொண்டே
இருக்கிறார்கள். ஆனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
குழந்தைகளே இப்போது ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள் என பாபா
கூறுகின்றார். நீங்கள் அசரீரியாக வந்தீர்கள் பிறகு சரீரத்தை
எடுத்து நடித்தீர்கள். சரியாக 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். பாபா
உண்மையானவர். அவர் சத்தியமானதைத் தான் தெரிவிக்கிறார். இராஜ்யம்
அல்லவா. இராஜயோகத்தை வேறொருவர் கற்பிக்க முடியாது. இப்போது
நீங்கள் முள்ளிலிருந்து மலராகிக் கொண்டிருக்கறீர்கள். முள்
மற்றும் மலர் என்று எதை கூறுகின்றோம். இதை கூட இப்போது நீங்கள்
புரிந்துக் கொள்கிறீர்கள். இது மோசமான முட்களின் உலகம் ஆகும்.
நாம் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுழன்று நரகவாசி
ஆகியிருக்கின்றோம். மீண்டும் உலகின் வரலாறு புவியியல் ரிபீட்
ஆகும். நாம் மீண்டும் சொர்க்க வாசியாக கண்டிப்பாக மாறுவோம்.
கல்ப கல்பமாக நாம் மாறுகிறோம். ஒவ்வொரு நொடியும் இதை நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஞானத்தைப் புரிய வைக்க
வேண்டும். இந்த இலஷ்மி நாராயணன் சூரிய வம்சத்தினர். கிறிஸ்து
வந்தார். அவரை ஆரம்பத்தில் மிகக் குறைவாக பின்பற்றுபவர்கள்
இருந்தனர். இராஜ்யம் கிடையாது. இப்போது பாபா வந்து சத்யுக
இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். சங்கமயுகத்தில் தான் ஸ்தாபனை
நடக்கிறது. இதுவே உண்மையிலும் உண்மையான கும்பமேளா என்பது
உங்களின் புத்தியில் இருக்கிறது. ஆத்மாக்கள் பலர்
இருக்கிறார்கள். பரமாத்மா ஒருவரே ஆவார். பரமாத்மா தந்தை
தூய்மையாக்குவதற்காக குழந்தைகளிடம் வருகிறார். இதற்கு தான்
சங்கமயுகம் கும்பமேளா என்று கூறப்படுகிறது. இப்போது உங்களுக்கு
ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. தந்தை வந்து
சொர்க்க வாசியாக மாற்றுகிறார். பிறகு நரகம் பழைய உலகத்தின்
அழிவு நிச்சயம் நடக்க வேண்டும். கல்ப கல்பமாக வினாசம் நடக்கிறது.
புதியதிலிருந்து பழையது பழையதிலிருந்து புதியதாகிறது. இது
நிச்சயம் நடக்கும். புதியது சொர்க்கம், பழையது நரகம் என
கூறப்படுகிறது. இப்போது மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்
கொண்டு இருக்கிறது. தானியம் கிடைக்க வில்லை என்றால் நான் நிறைய
உற்பத்தி செய்வோம் என நினைக்கிறார்கள். ஆனால் குழந்தைகள்
எவ்வளவு பேர் பிறந்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கிருந்து
தானியத்தை கொண்டு வருவார்கள்.
இப்போது குழந்தைகளாகிய உங்களைப் பொருத்தவரை இந்த முழு உலகமும்
அழியப் போகிறது என்பது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகும்.
மனிதர்களுக்கு இந்த ஞானம் பிடிக்கிறது. ஆனால் புத்தியில்
எதுவும் பதிவதில்லை நரகத்திற்கு பிறகு சொர்க்கம் வரும் என்பது
உங்களுடைய புத்தியில் இருக்கிறது. சத்யுகத்தின் தேவி தேவதைகள்
வாழ்ந்திருந்து போய்விட்டனர். இந்த இலஷ்மி நாராயணன் பாரதத்தின்
அதிபதியாக இருந்தனர். சித்திரங்கள் இருக்கின்றது. சத்யுகத்தில்
ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. இப்போது தன்னை தேவதா
தர்மம் என கூற முடியாது. அதற்கு பதிலாக இந்து என கூறிக்
கொள்கிறார்கள். நாம் இப்போது இவ்வாறு (தேவி தேவதா) மாறிக்
கொண்டிருக்கிறோம் என குழந்தைகள் அறிகிறார்கள். பாபா இந்த உடல்
மூலமாக படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இல்லை எனில் நான்
உங்களை எப்படி படிக்க வைப்பேன் என்று பாபா கூறகின்றார்.
ஆத்மாக்களைத் தான் படிக்க வைக்கிறார். ஏனென்றால் ஆத்மாவில் துரு
படிந்திருக்கிறது. இப்போது நீங்கள் உண்மையான தங்கமாக மாற
வேண்டும். சத்யுகத் திலிருந்து திரேதாயுகத்திற்கு வந்தீர்கள்.
அதாவது வெள்ளியின் துரு பிடித்ததால் சந்திர வம்சி ஆகிறீர்கள்.
சத்யுகத்தில் பொன் யுகத்தில் இருந்தீர்கள். நீங்களே பிறகு கீழே
இறங்குகிறீர்கள். பிறகு வளர்ச்சி அடைகிறது. இப்போது நாம் தங்கம்
வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய யுகங்களில் 84ன் சக்கரத்தை
சுழன்று விட்டோம் என்பது புத்தியில் இருக்கிறது. பல முறை இந்த
நடிப்பை நடித்திருக்கிறோம். இந்த நடிப்பிலிருந்து யாரும்
விடுபட முடியாது. அவர்கள் எங்களுக்கு மோட்சம் வேண்டும்
என்கிறார்கள். ஆனால் உண்மையில் உங்களுக்குத் தான் துன்பமாக
இருக்க வேண்டும். நீங்கள் தான் 84 சக்கரத்தில் வந்துள்ளீர்கள்.
வருவது போவது என்பது நடந்துக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து
நாம் ஏன் விடுபட்டு விடக் கூடாது என மனிதர்கள் நினைக் கிறார்கள்.
ஆனால் அவ்வாறு நடக்காது. நீங்கள் மோட்சத்தை பெறுவீர்கள் என
குருக்கள் சொல்லி விடுகிறார்கள். பிரம்மத்தை நினைத்தால்
பிரம்மத்தில் கலந்து விடலாம் என்கிறார்கள். பாரதத்தில் தான் பல
வழி முறைகள் இருக்கின்றது. வேறு எந்த கண்டத்திலும் இவ்வாறு
கிடையாது. நிறைய வழிகள் இருக்கின்றது. ஒன்று இன்னொன்று போன்று
கிடையாது. ரித்தி சித்தி கூட நிறைய கற்கிறார்கள். சிலர்
குங்குமபூ, வர வைக்கிறார்கள். சிலர் வேறு..... இதில் மனிதர்கள்
மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது ஆன்மீக ஞானம் ஆகும்.
ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை என நீங்கள்
அறிகிறீர்கள். ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களுடன் பேசுகின்றார்.
சத்திய நாராயணனின் கதையை கூறுகிறார் அல்லது அமர கதையை
கூறுகிறார். இதன் மூலம் அமர உலகத்திற்கு அதிபதி ஆக்குகிறார்.
நரனிலிருந்து நாராயணன் ஆக்குகின்றார். பிறகு சோழியை போல
மாறிவிடுகிறார்கள். இப்போது வைரம் போன்ற விலை மதிப்பற்ற பிறவி
உங்களுக்கு கிடைத்திருக்கிறது. பிறகு சோழிகளுக்குப் பின் சென்று
ஏன் இழக்கிறீர்கள். இந்த உலகம் தான் இன்னும் எவ்வளவு வருடம்
இருக்கும்! எவ்வளவு சண்டை சச்சரவுகள் நடந்துக் கொண்டிருக்கிறது.
அனைத்தும் முடிந்து போகும். மரணம் எதிரில் நிற்கிறது. பிறகு
இத்தனை இலட்சம், கோடியை யார் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். ஏன்
இதை பயன்படுத்தக் கூடாது. இந்த ஆன்மீகக் கல்லூரியை திறந்தால்
மனிதர்கள் சதா ஆரோக்கியமாகவும் செல்வந்தராகவும்
மகிழ்ச்சியாகவும் மாறிவிடு வார்கள். மருத்துவ மனை மற்றும்
பல்கலைக் கழகம் இரண்டும் இணைந்ததாகும். ஆரோக்கியம், செல்வம்,
மகிழ்ச்சியும் இருக்கிறது. உண்மையில் யோகத்தினால் ஆயுள்
அதிகரிக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக மாறுகிறீர்கள்.
குபேரனின் பொக்கிஷம் கிடைக்கிறது. அல்லா அலாவுதினீன் நாடகத்தைக்
கூட காண்பிக்கிறார்கள். அல்லா ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை
ஸ்தாபனை செய்கிறார். அதில் நிறைய சுகம் இருக்கிறது என நீங்கள்
அறிகிறீர்கள். பெயரே சொர்க்கம் ஆகும். நீங்கள் சாந்தி தாமத்தில்
வசிக்கக் கூடியவர்கள். பிறகு நீங்கள் முதன் முதலில்
சுகதாமத்தில் வந்தீர்கள். பிறகு 84 பிறவிகள் எடுத்து கீழே
விழுந்து விட்டீர்கள். கல்ப கல்பமாக நான் குழந்தை களாகிய
உங்களுக்கு இவ்வாறு வந்து புரிய வைக்கிறேன். நீங்கள் உங்களின்
பிறவிகளை பற்றியும் அறியவில்லை. நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். இந்த உடல் பதீதமாக
இருக்கிறது. ஆத்மாவும் தமோபிரதானமாகி விட்டது. பாபா சரியானதைத்
தான் கூறுகின்றார். பாபா ஒரு போதும் தவறானவற்றை கூறுவது
கிடையாது. அவரே சத்தியமானவர். சத்யுகம் நிர்விகார உலகம் ஆகும்.
சரியான உலகம் ஆகும். பிறகு இராவணன் தவறானவற்றை உருவாக்குகிறான்.
இது பொய்யான கண்டமாகும். பொய்யான மாயை, பொய்யான உடல்..... எனப்
பாடுகிறார்கள். எப்படிப்பட்ட உலகம்? இந்த முழு பழைய உலகமும்
பொய்யானது. சத்யுகத்தில் உண்மையான உலகம் இருந்தது. உலகம் ஒன்று
தான். இரண்டு உலகம் கிடையாது. புதியதிலிருந்து பிறகு
பழையதாகிறது. புதிய கட்டடம், பழைய கட்டடத்தில் வித்தியாசம்
இருக்கிறது. புதியதை உருவாக்கி தயார் செய்தால் புதியதில் சென்று
விடுவோம் என நினைப்பார்கள். இங்கே கூட குழந்தைகளுக்காக புதிய
கட்டடத்தை உருவாக்கு கின்றார். நிறைய குழந்தைகள் வந்து
போகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு நிறைய குஷி இருக்க
வேண்டும். ஞானக் கடல் ஆகிய என்னுடைய குழந்தைகள் அனைவரும் காமச்
சிதையில் அமர்ந்து பாவம் ஒரேயடியாக எரிந்துவிட்டீர்கள் என பாபா
கூறுகின்றார். இப்போது மீண்டும் அவர்களை ஞான சிதையில் உட்கார
வைக்கிறார். ஞான சிதையில் உட்கார வைத்து சொர்க்கத்திற்கு
அதிபதியாக்குகின்றார். காம சிதையில் அமர்வதால் முற்றிலும்
கருப்பாகி விட்டனர். கிருஷ்ணருக்கு சியாம் சுந்தர் என பெயர்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் பொருளை யாரும் புரிந்துக்
கொள்ளவில்லை. இப்போது நீங்கள் என்னவாக இருந்து என்னவாக
மாறுகிறீர்கள்? பாபா சோழியிலிருந்து வைரமாக மாற்றுகிறார்
என்றால் அவ்வளவு கவனம் கொடுக்க வேண்டும். பாபாவை நினைக்க
வேண்டும். நினைவினால் தான் நீங்கள் சொர்க்கத்திற்கு
அதிபதியாவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக்
குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த வைரம் போன்ற விலைமதிப்பற்ற வாழ்க்கையை சோழிகளுக்கு
பின்னால் சென்று இழக்கக் கூடாது. மரணம் எதிரில் நிற்கிறது. ஆகவே,
தன்னுடைய அனைத்தையும் ஆன்மீக சேவையில் பயன்படுத்த வேண்டும்.
2. படிப்பு மற்றும் படிக்க வைப்பவரிடம் உண்மையான அன்பு வைக்க
வேண்டும். பகவான் நம்மை படிக்க வைக்க வருகின்றார். இந்த
மகிழ்ச்சியில் இருக்க வேண்டும்.
வரதானம்:
பிடித்துக் கொள்ளும் சக்தி மூலமாக தனது அசல் சம்ஸ்காரங்களை
பிடித்துக் கொண்டு அதனை செயல் படுத்தி சக்திசாலி ஆகுக
முயற்சிக்கான முக்கிய ஆதாரம் பிடித்துக் கொள்ளும் சக்தி. எப்படி
விஞ்ஞானம் முதன்மையான ஒ-யை பிடித்துக் கொள்கிறதோ, அவ்வாறே
நீங்கள் அமைதி சக்தியால் தனது முதன்மையான தெய்வீக சம்ஸ்காரத்தை
பிடித்துக் கொள்ளுங்கள். அதற்காக எப்போதும் நான் தேவதையாக
இருந்தேன், மீண்டும் மாறிக் கொண்டி ருக்கிறேன் என்பதை நினைவில்
வையுங்கள். எந்தளவு அந்த சம்ஸ்காரங்களை பிடித்துக் கொள்வீர்களோ
அந்தளவு அதன் செயல் வடிவமாவீர்கள். ஐயாயிரம் ஆண்டுகளின் விசயம்
நேற்றைய விசயமாக மிகத் தெளிவாக அனுபவம் ஆக வேண்டும். தனது
நினைவை அத்தகைய உயர்ந்தரமாக தெளிவாக வைக்கும் போதே சக்தி சா-
ஆவீர்கள்.
சுலோகன்:
பிராமண வாழ்வின் சுவாசமே குஷி தான் -
உடலே போனாலும் குஷிமட்டும் போகக்கூடாது.
அவ்யக்த சமிக்கை: சதா ஆடாத-அசையாத (உறுதியான),
ஒரே சீரான மனோநிலையை அனுபவம் செய்யுங்கள்.
ஒரு நொடியில் முடிவெடுப்பவர்கள் ஒருவருடையவராக ஆகி காரணத்தால்
சதா ஏக்ரஸ் நிலை யிருப்பர். மாறாக மெல்ல மெல்லமாக
முடிவெடுப்பவர். ஒன்றுக்கு பதிலாக இருபடகில் கால் வைப்பவர்,
அவர்கள் எப்போதும் ஏதேனும் ஒரு குழப்பத்தால் ஏக்ரஸ் நிலை
பெறுவதில்லை. எனவே ஒரு நொடியில் முடிவெடுங்கள். உள்ளத்தை துண்டு
போடாதீர்கள்.