26-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையான குழந்தைகளே! இந்த முதலும் முடிவுமற்ற நாடகம் சுற்றிக் கொண்டே இருக்கிறது, டிக்-டிக் என்று சென்று கொண்டிருக்கிறது, இதில் ஒருவருடைய நடிப்பு மற்றவரோடு சேராது, இதனை யதார்த்தமாக புரிந்து கொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்"

கேள்வி:
பகவான் வந்து விட்டார் என்பதை எந்தவொரு யுக்தியின் மூலம் நிரூபித்து சொல்வீர்கள்?

பதில்:
பகவான் வந்துவிட்டார் என்று யாருக்கும் நேரடியாக சொல்லக் கூடாது, அப்படி சொன்னீர் கள் என்றால் மக்கள் நகைப்பார்கள், கேலி செய்வார்கள் ஏனென்றால் இன்றைக்கு தன்னை பகவான் என்று சொல்லிக் கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், ஆகையினால் நீங்கள் யுக்தியோடு முதலில் இரண்டு தந்தைகளின் அறிமுகத்தைக் கொடுங்கள். ஒருவர் எல்லைக்குட்பட்டவர், மற்றொருவர் எல்லைக்கு அப்பாற் பட்டவர். எல்லைக்குட்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்குட் பட்ட ஆஸ்தி கிடைக்கிறது, இப்போது எல்லைக்கு அப்பாற்பட்ட தந்தை எல்லைக்கு அப்பாற்பட்ட ஆஸ்தியை கொடுக்கின்றார், எனும்போது புரிந்து கொள்வார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீக தந்தை ஆன்மீக குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், இது தான் உலகமாகும். பாபா புரிய வைப்பதற்கு இங்கு வரவேண்டியுள்ளது. மூலவதனத்தில் புரிய வைக்கப் படுவதில்லை. ஸ்தூலவதனத்தில் தான் புரிய வைக்கப்படுகிறது. குழந்தைகள் அனைவரும் தூய்மையற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதை பாபா தெரிந்துள்ளார். எந்த வேலைக்கும் உதவாதவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகத்தில் துக்கமே துக்கம் தான் உள்ளது. நீங்கள் விஷக் கடலில் இருக்கின்றீர்கள் என்று பாபா புரிய வைத்திருக்கிறார். உண்மையில் நீங்கள் பாற்கடலில் இருந்தீர்கள். விஷ்ணுபுரியை பாற்கடல் என்று சொல்லப்படுகிறது. இங்கே இப்போது பாற்கடல் கிடைக்க முடியாது. எனவே குளத்தை உருவாக்கி விட்டார்கள். அங்கே பாலாறு ஓடுகிறது என்று சொல்கிறார்கள், பசுக்கள் கூட அங்கே முதல்தரமானதாக பெயர் பெற்றதாக இருக்கிறது. இங்கே மனிதர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள், அங்கே பசுக்கள் கூட நோய்வாய்ப்படுவதில்லை. நலமுடன் இருக்கும். விலங்குகள் கூட நோய்வாய்ப் படுவதில்லை. இதற்கும் அதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதை பாபா தான் வந்து கூறுகின்றார். உலகத்தில் யாரும் தெரிந்திருக்கவில்லை. இது சங்கமயுகம் என்று உங்களுக்குத் தெரியும், இப்போது பாபா வந்து அனைவரையும் திரும்பி அழைத்து செல்கின்றார். பாபா கூறுகின்றார், உலகில் உள்ள குழந்தைகளில் சிலர் அல்லாவையும், சிலர் இறைவனையும், சிலர் பகவானையும் அழைக்கின்றார்கள். எனக்கு நிறைய பெயர் வைத்து விட்டார்கள். நல்ல-கெட்ட பெயர் என்ன வருகிறதோ அதை வைத்து விட்டார்கள். இப்போது பாபா வந்திருக்கின்றார், என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். உலகம் இதை புரிந்துக் கொள்ள முடியாது. யார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புரிந்திருந்தார்களோ அவர்கள் தான் புரிந்துக் கொள்வார்கள், ஆகையினால் தான் கோடியில் சிலர், அந்த சிலரிலும் சிலர், என்ற புகழ் இருக்கிறது. நான் எப்படி இருக்கின்றேன், என்னவாக இருக்கின்றேன், குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்கின்றேன், என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள், வேறுயாரும் புரிந்து கொள்ள முடியாது. நாம் எந்த சாகார மனிதனிடமும் படிக்கவில்லை, என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நிராகாரமானவர் படிப்பிக்கின்றார். நிராகாரமானவர் மேலே இருக்கின்றார், அவர் எப்படி படிப்பிப்பார், என்று மனிதர்கள் கண்டிப்பாக குழம்புவார்கள். நிராகார ஆத்மாக்களாகிய நீங்களும் மேலே இருக்கின்றீர்கள். பிறகு இந்த சிம்மாசனத்திற்கு வருகின்றீர்கள். இந்த சிம்மாசனம் (இரு புருவங்களின் மத்தி) அழியக்கூடியதாகும், ஆத்மா அழிவற்றது. சரீரம் இறக்கிறது. இது உயிருள்ள சிம்மாசனமாகும். அமிர்தசரில் கூட அழிவற்ற சிம்மாசனம் இருக்கிறது அல்லவா. அந்த சிம்மாசனம் கட்டையினால் செய்யப்பட்டதாகும். அழிவற்றது ஆத்மா, இதை ஒரு போதும் காலன் அழிக்க முடியாது, என்பது பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை. அழிவற்ற மூர்த்தியான ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறது. அதற்கும் கூட ரதம் வேண்டும் அல்லவா. நிராகார பாபாவிற்கும் மனித ரதம் வேண்டும், ஏனென்றால் பாபா ஞானக்கடல், ஞானேஷ்வர் ஆவார். இப்போது ஞானேஷ்வரன் என்ற பெயர் நிறைய பேருக்கு இருக்கிறது. தன்னை ஈஸ்வரன் என்று புரிந்து கொள்கிறார்கள் அல்லவா. பக்தி சாஸ்திரங்களின் விஷயங்கள், என்று கூறுகிறார்கள். ஞானேஷ்வரன் என்று பெயர் வைக்கிறார்கள் அதாவது ஞானத்தைக் கொடுக்கக் கூடிய ஈஸ்வரன் என்பதாகும். அதற்கு ஞானக் கடலானவர் வேண்டும். அவரைத் தான் இறைதந்தை என்று சொல்லப்படுகிறது. இங்கே நிறைய பகவான்களாகி விட்டனர். எப்போது மிகுந்த நிந்தனை ஏற்படுகிறதோ, நிறைய ஏழைகளாகி விடுகின்றார்களோ, துக்கமுடையவர்களாகி விடுகிறார்களோ, அப்போது தான் பாபா வருகின்றார். பாபாவை ஏழைப்பங்காளன் என்று சொல்லப் படுகிறது. கடைசியாக அந்த நாளும் வருகிறது, அப்போது ஏழைப் பங்காளன் பாபா வருகின்றார். குழந்தைகளும் தெரிந்துள்ளார்கள், பாபா வந்து சொர்க்கத் தின் ஸ்தாபனையை செய்கின்றார். அங்கே அளவற்ற செல்வம் இருக்கிறது. பணம் ஒருபோதும் எண்ணப்படுவதில்லை. இத்தனை கோடி செலவானது என்று, இங்கே கணக்கு வைக்கிறார்கள். அங்கே இந்த பெயரே இல்லை, அளவற்ற செல்வம் இருக்கிறது.

பாபா நம்மை நம்முடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்து விட்டார், என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது தெரிந்து விட்டது. குழந்தைகளுக்கு தங்களுடைய வீடு மறந்து விட்டது. பக்தி மார்க்கத்தில் ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள், இதனை இரவு என்று சொல்லப் படுகிறது. பகவானை தேடிக் கொண்டே தான் இருக்கிறார்கள், ஆனால், பகவான் யாருக்கும் கிடைப்பதில்லை. இப்போது பகவான் வந்திருக்கிறார், இதைக் கூட குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள், நம்பிக்கையும் இருக்கிறது. அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது என்பதும் கிடையாது. ஏதாவது ஒரு நேரம் மாயை மறக்கச் செய்து விடுகிறது, அப்போது தான் பாபா கூறுகின்றார், ஆச்சரியமாக என்னை பார்த்தார்கள், என்னுடையவர்களாக ஆனார்கள், மற்றவர்களுக்கு சொன்னார்கள், அய்யோ மாயையே நீ எவ்வளவு பலசாலி இருக்கிறாய் மீண்டும் வெளியே செல்ல வைத்து விட்டாய். நிறைய பேர் வெளியே சென்று விட்டார்கள். கையை விட்டு சென்று விட்டார்கள். பிறகு அவர்கள் எங்கே சென்று பிறவி எடுப்பார்களோ! அங்கு மிகவும் தாழ்ந்த நிலையில் பிறவி எடுப்பார்கள். பரீட்சையில் தேர்ச்சி பெறாதவர்களாக ஆகிவிட்டார்கள். இது மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான பரீட்சையாகும். அனைவரும் நாராயணன் ஆவீர்கள் என்று சொல்லவில்லை. இல்லை, யார் நன்றாக முயற்சி செய்வார்களோ, அவர்கள் உயர்ந்த பதவி அடைவார்கள். யார் நல்ல முயற்சியாளர்கள் என்று பாபா புரிந்து கொள்கிறார் - யார் மற்றவர் களையும் கூட மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுவதற்கான முயற்சி செய்விக்கிறார்களோ அதாவது பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்கிறார்களோ, அவர்கள் தான் நல்ல முயற்சியாளர்கள். இதற்கு மாறாக இன்றைக்கு எவ்வளவு மனிதர்கள் தங்களையே பகவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உங்களை அபலைகள் என்று புரிந்து கொள்கிறார்கள். இப்போது அவர் களுக்கு எப்படி புரிய வைப்பது, பகவான் வந்திருக்கின்றார் என்று, நேரடியாக யாருக்காவது பகவான் வந்திருக்கின்றார், என்று சொன்னால் அப்படி ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகையினால் புரிய வைப்பதற்கு யுக்தி வேண்டும். அப்படியே பகவான் வந்திருக்கின்றார், என்று யாருக்கும் சொல்லக் கூடாது. உங்களுக்கு இரண்டு தந்தை என்று முதலில் புரிய வைக்க வேண்டும். ஒருவர் பரலௌகீக எல்லையற்ற தந்தை, மற்றொருவர் லௌகீக எல்லைக்குட்பட்ட தந்தை. இவர்கள் சரியாக சொல்கிறார்கள், என்று புரிந்து கொள்ளுமளவிற்கு நல்ல விதத்தில் அறிமுகம் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தையிடமிருந்து எவ்வாறு ஆஸ்தி கிடைக்கிறது, என்பது யாருக்கும் தெரியாது. தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. இப்படி மனிதர்களுக்கு இரண்டு தந்தை இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நீங்கள் நிரூபித்து கூறுகின்றீர்கள், எல்லைக்குட்பட்ட லௌகீக தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தியும், பரலௌகீக எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற அதாவது புதிய உலகத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. புதிய உலகம் சொர்க்கமாகும், அதுவும் எப்போது பாபா வருகின்றாரோ, அப்போது தான் வந்து கொடுக்க முடியும். அந்த தந்தை தான் புதிய உலகத்தை படைக்கக் கூடியவராவார். மற்றபடி நீங்கள் வெறுமனே பகவான் வந்திருக்கின்றார், என்று சொன்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னும் தான் பரிகாசம் செய்வார்கள். கேட்கவே மாட்டார்கள். சத்யுகத்தில் புரியவைப்பதில்லை. எப்போது புரிய வைக்கப்படுகிறது என்றால், பாபா எப்போது வந்து படிப்பினை கொடுக்கிறாரோ, அப்போது. சுகத்தில் யாரும் சிந்தனை செய்வ தில்லை, துக்கத்தில் அனைவரும் செய்கிறார்கள். எனவே அந்த பரலௌகீக தந்தையைத் தான் துக்கத்தைப் போக்கி சுகத்தை வழங்குபவர், என்று சொல்லப்படுகிறது. துக்கத்திலிருந்து விடுவித்து வழிகாட்டியாகி பிறகு நம்முடைய இனிமையான வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அதனை இனிய அமைதியான வீடு என்று சொல்லப்படுகிறது. நாம் அங்கே எப்படி செல்வது, என்பதை யாரும் தெரிந்திருக்கவில்லை. படைப்பவரையும் தெரியாது படைப்பினுடைய முதல்-இடை-கடைசியும் தெரியாது. நம்மை பாபா சப்தமில்லா உலகத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக் கின்றார், என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அனைத்து ஆத்மாக்களையும் அழைத்துச் செல்வார். ஒருவரையும் விடமாட்டார். அது ஆத்மாக்களின் வீடாகும், இது சரீரத்தின் வீடாகும். எனவே முதல்-முதலில் பாபா அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். அவர் நிராகார தந்தையாவார், அவரை பரமபிதா என்று சொல்லப்படுகிறது. பரமபிதா என்ற வார்த்தை சரியானதாகும் மேலும் இனிமை யானதும் கூட. வெறுமனே பகவான், ஈஸ்வரன் என்று சொல்வதின் மூலம் ஆஸ்தியின் வாசம் வருவதில்லை. நீங்கள் பரமபிதாவை நினைவு செய்கிறீர்கள் எனும்போது ஆஸ்தி கிடைக்கிறது. தந்தையல்லவா. சத்யுகம் சுகதாமம் என்பதும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. சொர்க்கத்தை சாந்திதாமம் என்று சொல்ல முடியாது. ஆத்மாக்கள் எங்கு வசிக்கின்றார்களோ, அது தான் சாந்திதாமமாகும். இதை தீர்மானமாக உறுதி செய்யுங்கள்.

பாபா கூறுகின்றார் : குழந்தைகளே, இந்த வேத-சாஸ்திரங்கள் போன்றவை படிப்பதினால் உங்களுக்கு எந்த பிராப்தியும் ஏற்படுவதில்லை. பகவானை அடைவதற்காகத் தான் சாஸ்திரங்கள் படிக்கிறார்கள், பகவான் கூறுகின்றார், சாஸ்திரங்கள் படிப்பதின் மூலம் நான் கிடைப்பதில்லை. என்னை இங்கே அழைப்பதே வந்து இந்த தூய்மையற்ற உலகத்தை தூய்மையாக்குங்கள் என்று தான். இந்த விஷயங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை, கல் புத்தியல்லவா? பள்ளியில் குழந்தை படிக்கவில்லை என்றால், நீ கல் புத்தியுடையவன் என்று சொல்கிறார்கள் அல்லவா. சத்யுகத்தில் அப்படி சொல்ல மாட்டார்கள். தங்கபுத்தியாக மாற்றக் கூடியவர் பரமபிதா எல்லையற்ற தந்தையாவார். இந்த சமயத்தில் உங்களுடைய புத்தி தங்கமாகும், ஏனென்றால் நீங்கள் பாபாவோடு இருக்கின்றீர்கள். பிறகு சத்யுகத்தில் கண்டிப்பாக கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். 1250 ஆண்டுகளில் 2 கலைகள் குறைகிறது. வினாடி வினாடியாக 1250 வருடங்களில் கலை குறைந்து கொண்டே செல்கிறது. நீங்கள் பாபாவைப்போல் ஞானக்கடலாக, சுக-அமைதிக் கடலாக ஆகும்போது உங்களுடைய வாழ்க்கை இந்த சமயத்தில் முற்றிலும் ஒரேயடியாக முழுமையானதாகிறது. அனைத்து ஆஸ்தியையும் அடைந்து விடுகிறீர்கள். பாபா ஆஸ்தி கொடுப்பதற்காகத் தான் வருகின்றார். முதல்-முதலில் நீங்கள் சாந்திதாமத்திற்கு செல்கிறீர்கள், பிறகு சுகதாமத்திற்கு செல்கிறீர்கள். சாந்திதாமத்தில் அமைதி தான் இருக்கிறது. பிறகு சுகதாமத் திற்குச் செல்கிறீர்கள், அங்கே அசாந்தியின் விஷயம் கொஞ்சம் கூட இல்லை. பிறகு கீழே இறங்க வேண்டியுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் உங்களுடைய வீழ்ச்சி நடக்கிறது. புதிய உலகத்திலிருந்து பழைய உலகமாகி கொண்டே செல்கிறது. அப்போது தான் பாபா சொல்லியிருந்தார் கணக்கெடுங் கள், 5 ஆயிரம் ஆண்டுகளில் எவ்வளவு மாதம், எவ்வளவு மணிகள்......... அப்போது மனிதர்கள் அதிசயப்படுவார்கள். இந்த கணக்கு முழுமையாக சொல்லியிருக்கிறேன். துல்லியமான கணக்கு எழுத வேண்டும், இதில் கொஞ்சம் கூட வித்தியாசப்பட முடியாது. நிமிடம் நிமிடமாக டிக்-டிக் சென்று கொண்டே இருக்கிறது. முழு ரீலும் திரும்பவும் ஓடுகிறது, சுற்றி-சுற்றி பிறகு ரோலாகி விடுகிறது, பிறகு அதுவே தான் திரும்பவும் நடக்கும். இது பெரிய ரோல் மிகவும் அதிசயமான தாகும். இதை எல்லாம் அளக்க முடியாது. முழு உலகத்தின் நடிப்பு என்ன நடக்கிறதோ, அது டிக்-டிக் சென்று கொண்டே இருக்கிறது. ஒன்று மற்றொன்றைப் போல் இருக்காது. இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அது எல்லைக்குட்பட்ட நாடகம், இது எல்லைக்கு அப்பாற்பட்ட நாடகமாகும். இது அழிவற்ற நாடகம் என்று முன்னால் நீங்கள் தெரிந்திருக்கவில்லை. உருவாக் கப்பட்ட, உருவாக்கப்படுகின்ற நாடகம் எது நடக்க வேண்டுமோ அது தான் நடக்கிறது. புதிய விஷயம் ஒன்றும் இல்லை. அனேக முறை வினாடி வினாடியாக இந்த நாடகம் திரும்ப நடந்து வந்திருக்கிறது. வேறு யாரும் இந்த விஷயங்களைப் புரிய வைக்க முடியாது. முதல்-முதலில் பாபாவினுடைய அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும், எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தி கொடுக்கின்றார். அவருக்கு ஒரேயொரு பெயர் சிவன் என்பதாகும். பாபா கூறுகின்றார், எப்போது தர்ம நிந்தனை அதிகமாக ஏற்படுகிறதோ, அப்போது தான் நான் வருகின்றேன், இதை தான் கருமையான கலியுகம், என்று சொல்லப்படுகிறது. இங்கே நிறைய துக்கம் இருக்கிறது. கருமை யான கலியுகத்தில் எவ்வாறு தூய்மையாக இருக்க முடியும், என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தூய்மையாக்குபவர் யார்? என்பது தெரியவில்லை. பாபா தான் சங்கமயுகத்தில் வந்து தூய்மையான உலகத்தை ஸ்தாபனை செய்கின்றார். அங்கே கணவன்-மனைவி இருவரும் தூய்மையாக இருக்கிறார்கள். இங்கே இருவரும் தூய்மையற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த உலகமே தூய்மையற்றதாகும். அது தூய்மையான உலகம் சொர்க்கமாகும். இது நரகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் வரிசைக்கிரமமான முயற்சியின் படி புரிந்து கொண்டி ருக்கிறீர்கள். புரிய வைப்பதிலும் கஷ்டம் இருக்கிறது. ஏழைகள் உடனே புரிந்து கொள்கிறார்கள். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது, பிறகு கட்டடமும் அவ்வளவு பெரியது வேண்டும். அவ்வளவு குழந்தைகள் வருவார்கள், ஏனென்றால் இப்போது பாபா எங்கேயும் செல்ல மாட்டார். முன்னால் யாருக்கும் சொல்லாமலே பாபா அவராகவே சென்று விடுவார். இப்போது குழந்தைகள் இங்கே வந்து கொண்டே இருப்பார்கள். குளிரிலும் வர வேண்டியிருக்கும். ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும். இந்தந்த சமயத்தில் வாருங்கள், பிறகு கூட்டம் இருக்காது. அனைவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் வர முடியாது. குழந்தைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். இங்கே சிறிய-சிறிய கட்டடங்கள் குழந்தைகள் உருவாக்குகிறார்கள், அங்கே நிறைய மாளிகைகள் கிடைக்கும். பணம் அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும், என்பதை குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நிறைய பேர் இப்படி செய்கிறார்கள் குழி தோண்டி அதற்குள் வைத்து விடுகிறார்கள். பிறகு ஒன்று திருடன் கொண்டு செல்கிறான் அல்லது குழியின் உள்ளேயே இருந்து விடுகிறது, பிறகு வயலை உழும்போது வெளிவருகிறது. இப்போது வினாசம் நடக்கும், அனைத்தும் புதைந்து விடும். பிறகு அங்கே அனைத்தும் புதியதாக கிடைக்கும். அப்படி நிறைய இராஜாக்களின் கோட்டை இருக்கிறது, அங்கே நிறைய சாமான்கள் புதைந்திருக்கிறது. பெரிய-பெரிய வைரங்கள் கூட வெளிவருகிறது, அது ஆயிரங்கள்-லட்சங்கள் வருமானம் ஆகிவிடுகிறது. சொர்க்கத்தில் நீங்கள் உழுது அப்படி ஏதும் வைரங்கள் போன்றவை வெளிவரும் என்பது கிடையாது. இல்லை, அங்கே ஒவ்வொரு பொருளும், சுரங்கங்கள் போன்றவை புதியதாக நிரம்பிவிடும். இங்கே கல் பூமியாக இருக்கிறது, எனவே சக்தியே இல்லை. விதை போடுகிறார்களே அதில் சக்தி இல்லை. அழுக்கான அசுத்தமான பொருட்களை போட்டுவிடுகிறார்கள். அங்கேயோ அசுத்தமான பொருட் களின் பெயரே இருப்பதில்லை. ஒவ்வொன்றும் புதிதாக இருக்கும். சொர்க்கத்தின் காட்சிகளைக் கூட குழந்தைகள் பார்த்துவிட்டு வருகிறார்கள். அங்கே உள்ள அழகே இயற்கையானதாகும். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அந்த உலகத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்-தந்தையுமான பாப்-தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த சமயத்தில் தான் பாபாவிற்குச் சமமாக முழுமையானவர்களாகி முழு ஆஸ்தியும் எடுக்க வேண்டும். பாபாவின் அனைத்து படிப்பினைகளையும் தாரணை செய்து அவருக்கு சமமாக ஞானக்கடலாக, அமைதி-சுகத்தின் கடலாக ஆக வேண்டும்.

2. தங்க புத்தியாக மாற்றுவதற்காக படிப்பின் மீது முழு கவனம் கொடுக்க வேண்டும். நிச்சய புத்தியுடையவர்களாகி மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கான பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்.

வரதானம்:
நிச்சயிக்கப்பட்ட வெற்றிக்கான போதையில் இருந்து கொண்டு தந்தையின் பலமடங்கு உதவியை பலனாக அடையக் கூடிய மாயாஜீத் ஆகுக.

தந்தையின் பலமடங்கு உதவிக்கு பாத்திரமான குழந்தைகள் மாயாவின் சண்டையில் சவால் விடுவார்கள் - உன்னுடைய வேலை வருவது, என்னுடைய வேலை வெற்றி அடைவது. அவர்கள் மாயாவின் சிங்க ரூபத்தை சிட்டுக் குருவியாக நினைப்பர். ஏனெனில் மாயாவின் இராஜ்யம் இப்பொழுது முடிவடையப் போகிறது, நாம் அநேக முறை வெற்றியடைந்த ஆத்மாக்கள் நம்முடைய வெற்றி 100 சதவிகிதம் நிச்சயிக்கப்பட்டது என்பதை அறிவர். இந்த நிச்சயிக்கப்பட்ட போதை பாபாவின் பலமடங்கு உதவியின் அதிகாரத்தை கொடுக்கிறது. இந்த போதையின் மூலம் எளிதாக மாயாவை வென்று விடுவீர்கள்.

சுலோகன்:
எண்ணத்தின் சக்தியை சேமிப்பு செய்து தனக்காக மற்றும் உலகிற்காக இதனை பயன்படுத்துங்கள்.