26-10-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! சர்வசக்திவான் பாபா வந்திருக்கிறார், உங்களுக்கு சக்தியை வழங்க! எவ்வளவு நினைவில் இருப்பீர்களோ அவ்வளவு சக்தி கிடைத்துக் கொண்டே இருக்கும்.

கேள்வி:
இந்த டிராமாவில் அனைத்திலும் மிகமிக நல்ல பாகம் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளது. எப்படி?

பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் தான் எல்லையற்ற தந்தையுடையவர்களாக ஆகிறீர்கள். பகவான் ஆசிரியர் ஆகி, உங்களுக்குத் தான் கற்றுத் தருகிறார் என்றால் நீங்கள் பாக்யசாலிகள் இல்லையா? உலகத்தின் எஜமான் உங்களுடைய விருந்தாளி ஆகி வந்திருக்கிறார். அவர் உங்களின் உதவியுடன் உலகிற்கு நன்மை செய்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அழைத்தீர் கள், பாபா வந்தார். இதுவே இரு கை ஓசை. இப்போது பாபா மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு முழு உலகின் மீதும் ஆட்சி செய்வதற்கான சக்தி கிடைக்கிறது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையின் முன்னிலையில் அமர்ந்துள்ளனர். ஆசிரியரின் முன்னிலையிலும் அமர்ந்துள்ளனர். மேலும் இதையும் அறிவார்கள், இந்த பாபா குருவின் ரூபத்தில், குழந்தைகளாகிய உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். பாபாவும் சொல்கிறார் - ஹே ஆன்மீகக் குழந்தைகளே! நான் வந்திருக்கிறேன், உங்களை இங்கிருந்து அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். இது பழைய உலகமாக ஆகிவிட்டுள்ளது. மேலும் இதையும் அறிவீர்கள், இவ்வுலகம் மிகவும் மோசமாக ஆகிவிட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்களும் மோசமாக ஆகிவிட்டிருக்கிறீர்கள். எனவே நீங்களே கூறினீர்கள், பாபா, வந்து பதீதர்கள் எங்களை இந்த துக்க உலகிலிருந்து சுகமான உலகிற்குக் கொண்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் இது மனதில் வரவேண்டும். பாபாவும் சொல்கிறார், நீங்கள் அழைத்ததால் அழைப்பிற்கிணங்க வந்திருக்கிறேன். பாபா நினைவு படுத்துகிறார், நீங்கள் நிச்சயம் என்னை அழைத்தீர்கள் தானே, வாருங்கள் என்று? நாம் அழைத்தோம் என்று இப்போது உங்களுக்கு நினைவு வந்து விட்டது. இப்போது டிராமாவின் அனுசாரம், கல்பத்திற்கு முன் போலவே பாபா வந்திருக்கிறார். அந்த மனிதர்கள் திட்டமிடுகிறார்கள் இல்லையா? இதுவும் சிவபாபாவின் திட்டம். இச்சமயம் அனை வருக்கும் அவரவர் திட்டம் உள்ளது இல்லையா? ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்குகிறார்கள். அதில் இதை-இதைச் செய்வோம், விஷயங்கள் பாருங்கள் எப்படி வந்து சேர்கின்றன! முன்பெல்லாம் இந்தத் திட்டம் போன்றவற்றை உருவாக்கியதில்லை. இப்போது திட்டங்களைத் தயாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். நம்முடைய பாபாவின் திட்டம் இது என்று குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். டிராமாவின் திட்டப்படி 5000 ஆண்டுகளுக்கு முன் நான் இந்தத் திட்டத்தை உருவாக்கியிருந்தேன். இனிமையிலும் இனிமையான குழந்தைகள் நீங்கள் இங்கே மிகுந்த துக்கத்தில் வந்து விட்டீர்கள், வேஷ்யாலயத்தில் இருக்கிறீர்கள், இப்போது உங்களை சிவாலயத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நான் வந்திருக்கிறேன். அது சாந்திதாமம் - நிராகார சிவாலயம், சுகதாமம் என்பது சாகார சிவாலயம். ஆக, இச்சமயம் பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் பாபாவுக்கு முன்பு அமர்ந்திருக் கிறீர்கள் இல்லையா? பாபா வந்திருக்கிறார் என்பதில் புத்தியில் நிச்சயம் உள்ளது. பாபா என்ற சொல் மிகவும் இனிமையானது. இதையும் அறிவீர்கள், நாம் ஆத்மாக்கள் அந்தத் தந்தையின் குழந்தைகள், பிறகு இந்நாடகப் பாத்திரத்தில் நடிப்பதற்காக இந்தத் தந்தையினுடையவர்களாக ஆகிறோம். எவ்வளவு காலம் உங்களுக்கு லௌகிகத் தந்தையர் கிடைத்திருக்கிறார்கள். சத்யுகத்தில் தொடங்கி சுகம் மற்றும் துக்கத்தின் பாகத்தை நடித்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் அறிவீர்கள், நம்முடைய துக்கத்தின் பாகம் முடிவடைகின்றது. சுகத்தின் பாகமும் முழு 21 பிறவிகள் நடித்தோம். பிறகு அரைக்கல்பம் துக்கத்தின் பாகத்தை நடித்தோம். பாபா உங்களுக்கு நினைவு படுத்தியிருக்கிறார். பாபா கேட்கிறார், நிச்சயமாக இப்படித் தான் இல்லையா? இப்போது மீண்டும் நீங்கள் அரைக்கல்பம் சுகத்தின் பாகத்தை நடிக்க வேண்டும். இந்த ஞானத்தால் ஆத்மாக்களாகிய நீங்கள் நிறைவடைந்தவர்களாக ஆகிறீர்கள். பிறகு காலி ஆகிவிடுகிறது. பிறகு பாபா நிரப்புகிறார். உங்கள் கழுத்தில் விஜயமாலை (வெற்றி மாலை) உள்ளது. கழுத்தில் ஞானத்தின் மாலை உள்ளது. நிச்சயமாக நாம் சக்கரத்தில் சுற்றி வந்து கொண்டே இருக்கிறோம். சத்யுக, திரேதா, துவாபர, கலியுகம், பிறகு வருகிறோம் இனிய சங்கம யுகத்தில். இதை இனிமையானது என்பார்கள். சாந்திதாமம் ஒன்றும் இனிமையானதல்ல. அனைத்தையும் விட இனிமையானது புருஷோத்தம கல்யாண்காரி சங்கமயுகம். டிராமாவில் உங்களுக்கும் சிறந்ததிலும் மிகச் சிறந்த பாகம். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள்! எல்லையற்ற தந்தையுடைவர் களாக நீங்கள் ஆகிறீர்கள். அவர் வந்து குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்றுத் தருகிறார். எவ்வளவு உயர்ந்த, எவ்வளவு சுலபமான படிப்பு! எத்தகைய செல்வந்தர்களாக நீங்கள் ஆகிறீர்கள்! இதில் எந்த ஒரு கடின உழைப்பும் செய்ய வேண்டிய தில்லை. மருத்துவர், பொறியாளர் முதலானோர் எவ்வளவு முயற்சி செய்கிறார்கள்! உங்களுக்கோ ஆஸ்தி கிடைக்கின்றது. தந்தையின் வருமானத்தில் மகனுக்கு உரிமை உள்ளது இல்லையா? நீங்கள் இதைப் படித்து 21 பிறவிகளுக்கான உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். அங்கே உங்களுக்கு எந்த ஒரு நஷ்டமும் ஏற்படுவதில்லை. இதுவே (தொடர்ச்சியாக இருப்பது) அஜபாஜப் எனப்படும்.

பாபா வந்துள்ளார் என்பதை! நீங்கள் அறிவீர்கள், நான் வந்துள்ளேன் என்று. பாபாவும் சொல்கிறார், இரண்டு கைகள் சேரும் போது தான் ஓசை எழும் இல்லையா? பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் பலபிறவிகளின் பாவங்கள் பஸ்பமாகி விடும். 5 விகாரங்களாகிய இராவணன் உங்களைப் பாவாத்மாவாக ஆக்கி யிருக்கிறான். பிறகு புண்ணியாத்மாவாகவும் ஆகவேண்டும், இது புத்தியில் வர வேண்டும். நாம் பாபாவின் நினைவின் மூலம் பவித்திரமாகிப் பிறகு வீட்டிற்குச் செல்வோம், பாபாவுடன். பிறகு இந்தப் படிப்பின் மூலம் நமக்கு சக்தி கிடைக்கின்றது. தேவி-தேவதா தர்மத்திற்காகச் சொல்லப்படு கிறது - ரிலிஜன் இஸ் மைட் (தர்மமே சக்தி). பாபாவோ சர்வ சக்திவானாக இருக்கிறார். ஆகவே பாபாவிடமிருந்து நமக்கு உலகில் சாந்தி ஸ்தாபனை செய்வதற்கான சக்தி கிடைக்கின்றது. அந்த ராஜ்யத்தை நம்மிடமிருந்து யாராலும் அபகரிக்க முடியாது. அவ்வளவு சக்தி கிடைக் கின்றது. ராஜாக்களிடம் பாருங்கள், எவ்வளவு சக்தி வந்து விடுகின்றது! அவர்களிடம் எவ்வளவு பயப்படுகிறார்கள்! ஒரு ராஜாவுக்கு எத்தனைப் பிரஜைகள், சேனைகள் முதலானோர் உள்ளனர். ஆனால் அது அல்பகாலத்தின் சக்தி. இதுவோ 21 பிறவிகளுக்கான சக்தி. இப்போது நீங்கள் அறிவீர்கள், நமக்கு சர்வசக்திவான் பாபாவிடமிருந்து உலகத்தின் மீது ராஜ்யம் செய்வதற்கான சக்தி கிடைக்கின்றது. அன்பு இருக்கின்றது இல்லையா? தேவதைகள் நடைமுறையில் இங்கே இல்லை என்றாலும், அவர்களிடமும் அன்பு இருக்கின்றது இல்லையா? எப்போது முன்னிலை யில் இருக்கிறார்களோ, அப்போது பிரஜைகளுக்கு அவர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கும்! நினைவு யாத்திரையின் மூலம் நீங்கள் இந்த சக்திகளை எல்லாம் அடைந்து கொண்டிருக் கிறீர்கள். இவ்விஷயங்களை மறக்காதீர்கள். நினைவு செய்து-செய்தே நீங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக ஆகிவிடுகிறீர்கள். சர்வ சக்திவான் என்று வேறு யாரும் சொல்லப் படுவதில்லை. அனைவருக்கும் சக்தி கிடைக்கின்றது. இச்சமயம் யாரிடமும் சக்தி இல்லை. அனைவரும் தமோபிரதானமாக உள்ளனர். பிறகு ஆத்மாக்கள் அனைவருக்கும் ஒருவரிட மிருந்தே சக்தி கிடைத்து விடுகின்றது. பிறகு தங்கள் ராஜதானியில் வந்து அவரவர் பாத்திரத்தை ஏற்று நடிக்கின்றார்கள். தங்கள் கணக்கு-வழக்குகளை முடித்து விட்டுப் பிறகு அப்படியே வரிசைக்கிரமமாக சக்திவான் ஆகிறார்கள். முதல் நம்பரில் உள்ளது, இந்த தேவதை களிடம் உள்ள சக்தி. இந்த லட்சுமி-நாராயணர் நிச்சயமாக முழு உலகத்தின் எஜமானராக இருந்தார்கள் இல்லையா? உங்களுடைய புத்தியில் முழு சிருஷ்டியின் சக்கரம் உள்ளது. எப்படி உங்களுக்கு ஆத்மாவில் இந்த ஞானம் உள்ளதோ, அதுபோல் பாபாவின் ஆத்மாவில் முழு ஞானம் உள்ளது. இப்போது உங்களுக்கு ஞானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். டிராமா வில் பாகம் நிரம்பியுள்ளது, அது திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருக்கிறது. பிறகு அந்த பாகம் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் நடைபெறும். இதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சத்யுகத்தில் ராஜ்யம் செய்கிறீர்கள் என்றால், பாபா ஓய்வு வாழ்க்கை யில் இருக்கிறார். பிறகு எப்போது உலகிற்கு (ஸ்டேஜ் மீது) வருகிறார்? நீங்கள் துக்கத்தில் இருக்கும் போது. நீங்கள் அறிவீர்கள், அவருக்குள் முழு ரிக்கார்டும் நிரம்பியுள்ளது. எவ்வளவு சிறிய ஆத்மா, அதில் எவ்வளவு ஞானம் உள்ளது! பாபா வந்து எவ்வளவு ஞானம் தருகிறார்! பிறகு அங்கே சத்யுகத்தில் இவையனைத்தையும் மறந்து விடுகிறீர்கள். சத்யுகத்தில் உங்களுக்கு இந்த ஞானம் இருப்பதில்லை. அங்கே நீங்கள் சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கிறீர்கள். இதையும் நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள், சத்யுகத்தில் நாம் தான் தேவதையாகி சுகம் அனுபவிக்கிறோம். அப்படி இருந்த நீங்கள் இப்போது பிராமணர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தாம் பிறகு தேவதை ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஞானத்தை நல்லபடியாக புத்தியில் தாரணை செய்ய வேண்டும். யாருக்காவது சொல்லிப் புரிய வைப்பதில் குஷி ஏற்படுகிறது இல்லையா? நீங்கள் பிராண தானம் (உயிர்ப்பிச்சை) கொடுக்கிறீர்கள். சொல்கிறார்கள் இல்லையா, காலன் வந்து அனைவரையும் அழைத்துச் செல்கிறான் என்று? காலன் என்றெல்லாம் யாரும் கிடையாது. இதுவோ உருவாக்கப்பட்ட ஒரு நாடகம். ஆத்மா சொல்கிறது, நான் ஒரு சரீரத்தை விட்டுச் சென்று விடுகிறேன். பிறகு வேறொன்றை எடுத்துக் கொள்கிறேன். என்னைக் காலன் முதலிய யாரும் உண்பதில்லை. ஆத்மாவுக்கு உணர்வு வருகின்றது. ஆத்மா கர்பத்தில் இருக்கும் போது சாட்சாத்காரம் பார்த்து துக்கத்தை அனுபவிக் கின்றது. உள்ளுக்குள் தண்டனை அனுபவிக்கிறது. அதனால் அது கர்ப ஜெயில் எனப்படு கின்றது. எவ்வளவு அற்புதமாக இந்த டிராமா உருவாக்கப்பட்டுள்ளது! கர்ப ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டே தங்களின் சாட்சாத்காரம் (திவ்ய காட்சி) செய்து கொண்டே இருக்கிறார்கள். தண்டனைகள் ஏன் கிடைத்தன? சாட்சாத்காரமோ செய்விப்பார் இல்லையா? -- இன்னின்ன விதிமுறைக்குப் புறம்பான காரியங்களைச் செய்தாய், இவர்களுக்கெல்லாம் துக்கம் கொடுத்திருக்கிறாய். அங்கே அனைத்து சாட்சாத்காரங்களும் ஏற்படுகின்றன. பிறகும் வெளியில் வந்து பாவாத்மா ஆகிவிடுகின்றனர். அனைத்துப் பாவங்களும் எப்படி பஸ்பமாகும்? அதுவும் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைத்துள்ளார் - இந்த நினைவு யாத்திரை மூலம் மற்றும் சுயதரிசன சக்கரத்தைச் சுற்றுவதன் மூலம் உங்களுடைய பாவங்கள் நீங்குகின்றன. பாபா சொல்கிறார், இனிமையிலும் இனிமையான சுயதரிசன சக்கரதாரிக் குழந்தைகளே, நீங்கள் 84 பிறவிகளின் இந்த சுயதரிசன சக்கரத்தைச் சுற்றுவீர்களானால் உங்களுடைய பலபிறவிகளின் பாவங்கள் நீங்கி விடும். சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். யார் இந்த ஞானத்தைக் கொடுத்தாரோ அவரையும் நினைவு செய்ய வேண்டும். பாபா நம்மை சுயதரிசன சக்கரதாரி ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஆக்கிக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் நாள்தோறும் புதியவர்கள் வருகிறார்கள் என்றால், அவர்களுக்குப் புத்துணர்வு ஊட்ட வேண்டியுள்ளது. உங்களுக்கு முழு ஞானமும் கிடைத்துள்ளது. இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் இங்கே நம் பாத்திரத்தை நடிப்பதற்காக வந்துள்ளோம். 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்து விட்டோம். இப்பொழுது வீடு திரும்பிச் செல்ல வேண்டும். இதுபோல் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கிறீர்களா? பாபாவுக்குத் தெரியும், குழந்தைகள் அதிகமாக மறந்து விடுகிறார்கள். சக்கரத்தைச் சுற்றுவதில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை. நேரமோ அதிகம் கிடைக்கின்றது. கடைசி காலத்தில் உங்களுடைய இந்த சுயதரிசன சக்கரதாரி நிலை இருக்கும். நீங்கள் அதுபோல் ஆகவேண்டும். சந்நியாசிகளோ இந்தக் கல்வியைக் கற்றுத்தர முடியாது. சுயதரிசன சக்கரத்தைப் பற்றி குருமார்கள் தாங்களே அறிய மாட்டார்கள். அவர்களோ கங்கை நதிக்குச் செல்லுங்கள் என்று மட்டும் சொல்கிறார்கள். எவ்வளவு குளிக்கிறார்கள்! அதிகம் குளிப்பதால் குருக்களுக்கு வருமானம் கிடைக்கின்றது. அடிக்கடி யாத்திரை செல்கின்றனர். இப்போது அந்த யாத்திரைக்கும் இந்த யாத்திரைக்கும் எவ்வளவு வேறுபாடு பாருங்கள்! இந்த யாத்திரை அந்த யாத்திரைகள் அனைத்தையும் விட்டுவிடுமாறு செய்து விடுகின்றது. இந்த யாத்திரை எவ்வளவு சுலபமானது! சக்கரத்தையும் சுற்றுங்கள். பாடலும் இருக்கிறது இல்லையா - நாலாபுறமும் சுற்றி வந்து விட்டீர்கள், பிறகும் கூட வெகுதூரத்தில் இருந்து விட்டீர்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து தொலைவில் இருந்து விட்டீர்கள். இந்தப் புரிதல் உங்களுக்கு வந்து விட்டது. அந்த மனிதர்கள் இதன் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. இப்போது நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள், அதிகமாகச் சுற்றி வந்து விட்டோம். இப்போது இந்தச் சுற்றுதல் களிலிருந்து நீங்கள் விடுபட்டு விட்டீர்கள். சுற்றி யலைந்து யாரும் அருகில் வந்து விடவில்லை. இன்னும் கூட அதிக தூரத்திலேயே இருந்து விட்டீர்கள்.

இப்போது டிராமாவின் திட்டப்படி பாபா தாம் வரவேண்டியுள்ளது, அனைவரையும் உடன் அழைத்துச் செல்வதற்கு. பாபா சொல்கிறார், என்னுடைய வழிமுறைப்படி நீங்கள் நடந்தாக வேண்டும். தூய்மையாக வேண்டும். இந்த உலகத்தைப் பார்த்தும் பார்க்காதிருக்க வேண்டும். எதுவரை புதிய கட்டடம் தயாராகவில்லையோ, அதுவரை பழைய வீட்டில் இருக்க வேண்டி யுள்ளது. பாபா சங்கமயுகத்தில் தான் வருகிறார், ஆஸ்தியைத் தருவதற்கு. எல்லையற்ற தந்தையினுடையது எல்லையற்ற ஆஸ்தி. பாபாவின் ஆஸ்தி நம்முடையது என்பதை. குழந்தைகள் அறிவார்கள், அந்தக் குஷியில் இருக்கிறார்கள். தங்களுடைய வருமானத்தையும் சம்பாதிக்கிறார்கள், மேலும் தந்தையின் ஆஸ்தியையும் பெறுகிறார்கள். உங்களுக்கோ ஆஸ்தி தான் கிடைக்கிறது. சொர்க்கத்தின் ஆஸ்தி நமக்கு எப்படிக் கிடைத்தது என்று அங்கே உங்களுக்குத் தெரியாது, அங்கோ உங்களுடைய வாழ்க்கை மிகவும் சுகமானதாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் பாபாவை நினைவு செய்து சக்தி பெறுகிறீர்கள். பாவங்களைப் போக்குபவர் பதீதபாவனர் ஒரு பாபா மட்டுமே! பாபாவை நினைவு செய்வதாலும் சுயதரிசன சக்கரத்தைச் சுற்றுவதாலும் தான் உங்களுடைய பாவங்கள் நீங்குகின்றன. இதை நன்றாகக் குறித்துக் கொள்ளுங்கள். இதைப் புரிய வையுங்கள், போதும் - எல்லையற்ற தந்தையை நினைவு செய்வீர்களானால் பாவங்கள் நீங்கி விடும். நீங்கள் நரனிலிருந்து நாராயணனாக, நாரியிலிருந்து லட்சுமியாக ஆவதற்கு வந்திருக்கிறீர்கள். இதுவாவது நினைவிருக்கிறது இல்லையா? வேறு யாருடைய புத்தியிலும் இந்த விஷயங்கள் வருவதில்லை. இங்கே நீங்கள் வருகிறீர்கள், நாம் பாப்தாதாவிடம் செல்கிறோம், அவரிடமிருந்து புதிய உலகம் சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக என்பது புத்தியில் உள்ளது. பாபா சொல்கிறார், சுவதரிசன சக்கரதாரி ஆவதால் உங்களுடைய விகர்மங்கள் வினாசமாகி விடும்.

இப்போது யார் உங்களது வாழ்க்கையை வைரம் போல் ஆக்குகிறாரோ அவரைப் பாருங்கள். இதையும் நீங்கள் அறிவீர்கள், இதில் பார்ப்பதற்கான விஷயம் எதுவுமில்லை. இதை நீங்கள் திவ்ய திருஷ்டி மூலம் அறிந்து கொள்கிறீர்கள். ஆத்மா தான் இந்த சரீரத்தின் மூலம் படிக்கின்றது - இந்த ஞானம் இப்போது தான் கிடைத்துள்ளது. நாம் என்ன கர்மம் செய் கிறோமோ, அதை ஆத்மா தான் சரீரத்தை எடுத்துக் கொண்டு அதன் மூலம் கர்மம் செய்கின்றது. பாபாவும் கல்வியை கற்றுத்தர வேண்டும். அவருடைய பெயரோ எப்போதும் சிவா என்பது தான். சரீரத்தின் பெயர் மாறுகின்றது. இந்த சரீரமோ என்னுடையதல்ல. இது இவருடைய (பிரம்மாவின்) சொத்தாகும். சரீரம் என்பது ஆத்மாவின் சொத்தாக உள்ளது. அதன் மூலம் பாத்திரத்தை நடிக்கின்றது. இதுவோ முற்றிலும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய விஷய மாகும். ஆத்மாவோ அனைவரிடமும் உள்ளது. அனைவருடைய சரீரத்தின் பெயரும் தனித் தனியாக உள்ளது. இவர் பிறகு பரம ஆத்மா, சுப்ரீம் ஆத்மா. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் அவர். இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், பகவானோ ஒரே ஒரு படைப்பவர். மற்ற அனைவரும் படைப்புகள், பாகத்தை நடிப்பவர்கள். இதையும் அறிந்து கொண்டு விட்டீர்கள், எப்படி ஆத்மாக்கள் வருகின்றன, முதன்-முதலில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஆத்மாக்கள் கொஞ்சம் பேர் வருகின்றனர். பிறகு கடைசியில், முதலில் வருவதற்குத் தகுதி யுள்ளவர்களாக ஆகின்றார்கள். இது சிருஷ்டி சக்கரத்தின் மாலை போன்றது சுற்றிக் கொண்டே இருக்கின்றது. மாலையை நீங்கள் சுற்றுகிறீர்கள் என்றால், அனைத்து மணிகளின் சக்கரமும் சுற்றுகிறது இல்லையா? சத்யுகத்தில் ஒரு சிறிது கூட பக்தி என்பதே இருக்காது. பாபா சொல்லிப் புரிய வைத்துள்ளார் - ஏ ஆத்மாக்களே, என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள். நீங்கள் வீட்டிற்கு அவசியம் திரும்பிச் செல்ல வேண்டும். வினாசம் முன்னாலேயே உள்ளது. நினைவின் மூலம் தான் பாவங்கள் நீங்கும். பிறகு தண்டனைகள் அடைவதிலிருந்தும் விடு பட்டு விடுவீர்கள். பதவியும் நல்லதாகப் பெறுவீர்கள். இல்லையென்றால் தண்டனைகள் அதிக மாக அடைய நேரிடும். நான் குழந்தைகளாகிய உங்களிடம் வந்துள்ள எவ்வளவு நல்ல விருந்தாளி! நான் முழு உலகத்தையும் மாற்றுகின்றேன். பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குகின்றேன். நீங்களும் அறிவீர்கள், பாபா ஒவ்வொரு கல்பமும் வந்து உலகத்தை மாற்றிப் பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குகின்றார் இவ்வுலகம் புதியதிலிருந்து பழையதாக, பழைய திலிருந்து புதியதாக ஆகின்றது இல்லையா? நீங்கள் இச்சமயம் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். பாபாவின் புத்தியில் ஞானம் உள்ளது. உங்களது புத்தியிலும் சக்கரம் எப்படிச் சுற்றுகிறது என்று. வர்ணனை செய்கின்றார், நீங்கள் அறிவீர்கள், பாபா வந்திருக்கிறார், அவரது ஸ்ரீமத் படி நாம் பாவனமாகின்றோம். நினைவின் மூலம் தான் பாவனமாகிக் கொண்டே செல்வோம், பிறகு உயர்ந்த பதவி பெறுவோம். புருஷார்த்தமும் கூட செய்ய வைக்க வேண்டியது அவசியமாகும். முயற்சி செய்விப்பதற்காக எவ்வளவு சித்திரங்கள் முதலிய வற்றை உருவாக்குகின்றார்! வருவோர்க்கெல்லாம் நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பற்றிச் சொல்லிப் புரிய வைக்கிறீர்கள். பாபாவை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் பதீதத்திலிருந்து பாவனமாக ஆகிவிடுவீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானத்தை புத்தியில் நன்கு தாரணை செய்து அநேக ஆத்மாக்களுக்குப் பிராண (உயிர்) தானம் செய்ய வேண்டும். சுயதரிசன சக்கரதாரி ஆகவேண்டும்.

2. இந்த இனிய சங்கமயுகத்தில் தனது வருமானத்துடன் கூடவே பாபாவின் ஸ்ரீமத் படி நடந்து முழு ஆஸ்தியைப் பெற வேண்டும். தனது வாழ்க்கையை சதா சுகமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
அனைத்து வரதானங்களையும் சமயப்படி காரியத்தில் பயன்படுத்தி பலன்களை உருவாக்கக்கூடிய பலன் சொரூபம் ஆகுக.

பாப்தாதா மூலம் சமயத்திற்கு தகுந்தாற் போல என்ன வரதானம் கிடைத்துள்ளதோ, அவற்றை சமயப்படி காரியத்தில் பயன்படுத்துங்கள். வரதானத்தை கேட்டு இன்று மிகவும் நல்ல வரதானம் கிடைத்தது என்று மட்டும் குஷி அடையாதீர்கள். வரதானத்தை காரியத்தில் கொண்டு வரும் போது வரதானம் நிலையானதாக ஆகிவிடுகின்றது. வரதானமானது அழிவற்ற பாபாவுடையது. ஆனால் அதை பலனுள்ளதாக செய்ய வேண்டும். அதற்காக வரதானத்தை அடிக்கடி நினைவு என்ற தண்ணீரை ஊற்றுங்கள், சொரூபத்தில் நிலைத்திருப்பதற்காக வெயில் கொடுங்கள், அப்போது வரதானங்களின் பலன் சொரூபமாக ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:
விசேஷ தன்மைகள் பிரபுவினுடைய பிரசாதம் ஆகும். இதை சேவையில் பயன்படுத்துங்கள், பகிர்ந்து கொடுங்கள், அதிகப்படுத்துங்கள்.