26.10.25 காலை முரளி
ஓம் சாந்தி 15.10.2007 பாப்தாதா,
மதுபன்
சங்கமயுகத்தினுடைய ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்வதற்காக
அனைத்து சுமை மற்றும் பந்தனத்தை தந்தையிடம் கொடுத்துவிட்டு
டபுள் லைட் ஆகுங்கள்
இன்று விஷ்வத்தின் படைப்பாளர் பாப்தாதா தங்களுடைய முதல்
படைப்பான மிகவும் அன்பான (லவ்லி) மற்றும் அதிர்ஷ்டசாலி (லக்கி)
குழந்தைகளுடன் சந்திப்புத் திருவிழாவை கொண்டாடிக் கொண்டு
இருக்கின்றார்கள். பல குழந்தைகள் முன்னால் இருக்கின்றார்கள்,
கண்களால் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் மற்றும்
நாலாபுறங்களிலும் உள்ள பல குழந்தைகள் உள்ளத்தில் நிறைந்து
இருக்கின்றார்கள். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் நெற்றியில்
மூன்று பாக்கியத்தினுடைய மூன்று நட்சத்திரங்கள் ஜொலித்துக்
கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். முதலாவது
பாக்கியம் - பாப்தாதாவினுடைய சிரேஷ்ட பாலனை, இரண்டாவது ஆசிரியர்
மூலம் படிப்பு, மூன்றாவது சத்குரு மூலம் கிடைக்கப்பெற்ற அனைத்து
வரதானங்களுடைய ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம். நீங்கள்
அனைவரும் கூட தங்களுடைய நெற்றியில் ஜொலித்துக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை அனுபவம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா!
அனைத்து சம்பந்தங்கள் பாப்தாதாவுடன் இருக்கின்றன, பிறகும் கூட
வாழ்க்கையில் இந்த மூன்று சம்பந்தங் கள் அவசியமானதாக உள்ளன
மற்றும் தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தை களாகிய
உங்கள் அனைவருக்கும் சகஜமாகவே கிடைத்துள்ளன. கிடைத்துள்ளன
அல்லவா! போதை உள்ளது அல்லவா! ஆஹா! பாபா ஆஹா! ஆஹா! டீச்சர் ஆஹா!
ஆஹா! சத்குரு ஆஹா! என்று உள்ளத்தில் பாடல் பாடிக் கொண்டே
இருக்கின்றீர்கள் அல்லவா! உலகத்தினரோ லௌகீக குரு யாரை மகான்
ஆத்மா என்று அழைக்கின்றார்களோ, அவர் மூலம் ஒரு வரதானத்தைப்
பெறுவதற் காகக் கூட எவ்வளவு பிரயத்தனம் செய்கின்றார்கள் மற்றும்
நீங்கள் பிறப்பெடுத்ததுமே தந்தை உங்களை சகஜமாகவே வரதானங்களால்
நிறைத்துவிட்டார். பகவான் தந்தை இந்தளவு நம்மிடம் பலி ஆகுவார்
என்ற இப்பேற்பட்ட சிரேஷ்ட பாக்கியத்தை கனவிலும் கூட
யோசித்தீர்களா என்ன! பக்தர் கள் பகவானுடைய பாடல்
பாடுகின்றார்கள், மேலும், பகவான் தந்தை யாருடைய பாடல்
பாடுகின்றார்? அதிர்ஷ்டசாலி குழந்தைகளாகிய உங்களுடைய பாடல்
பாடுகின்றார்.
இப்பொழுதும் கூட நீங்கள் அனைவரும் வெவ்வேறு தேசங்களில் இருந்து
எந்த விமானத்தில் வந்திருக் கின்றீர்கள்? ஸ்தூல விமானங்களிலா
அல்லது பரமாத்மா அன்பு என்ற விமானத்தில் அனைத்து பக்கங்களில்
இருந்து வந்து சேர்ந்து இருக்கின்றீர்களா! பரமாத்ம விமானம்
எவ்வளவு சகஜமாக அழைத்து வருகிறது, எந்த கஷ்டமும் இல்லை. எனவே,
அனைவரும் பரமாத்ம அன்பு என்ற விமானத்தில் வந்து
சேர்ந்துவிட்டீர்கள், அதற் கான வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,
வாழ்த்துக் கள். பாப்தாதா ஒரு ஒரு குழந்தையும் பார்த்து,
அவர்கள் முதல் முறையாக வந்திருக்கலாம் அல்லது நீண்ட காலமாக
வந்துகொண்டு இருக்கலாம், ஆனால், பாப்தாதா ஒரு ஒரு குழந்தையின்
விசேஷத்தன்மையை அறிந்திருக்கின்றார்கள். பாப்தாதாவிற்கு
எந்தவொரு குழந்தையும், அவர்கள் சிறியவர்களோ, பெரியவர்களோ,
மகாவீரர்களோ, முயற்சியாளர்களோ, ஆனால், ஒவ்வொரு குழந்தையும்
செல்லமானவர், ஏன்? நீங்களோ தந்தையைத் தேடினீர்கள், அவர்
கிடைக்கவில்லை, ஆனால், பாப்தாதா குழந்தைகளாகிய உங்கள்
ஒவ்வொருவரையும் மிகுந்த அன்போடு, ஆழமான தீவிரமான சினேகத்தோடு,
மூலை மூலையில் இருந்தும் தேடினார்கள். எனவே, அன்பிற்குரியவர்
கள். ஆகையினாலேயே தேடினார்கள், ஏனெனில், எந்தவொரு
விசேஷத்தன்மையும் இல்லாத என்னுடைய எந்தவொரு குழந்தையும் இல்லை
என்பதை தந்தை அறிந்திருக்கின்றார். ஏதோ ஒரு விசேஷத்தன்மையே
அழைத்து வந்துள்ளது. குறைந்ததிலும் குறைந்தது மறைமுகமாக
வந்திருக்கும் தந்தையை அறிந்து கொண்டார்கள். என்னுடைய பாபா
என்று கூறினார்கள், அனை வரும் என்னுடைய பாபா என்று
கூறுகின்றீர்கள் அல்லவா! யாராவது என்னுடைய பாபா இல்லை,
உங்களுடைய பாபா என்று சொல்பவர்கள் இருக்கின்றீர்களா, யாராவது
இருக்கின்றீர்களா? அனை வரும் என்னுடைய பாபா என்று
கூறுகின்றீர்கள். எனவே, விசேஷமானவர்கள் அல்லவா. பெரிய பெரிய
விஞ்ஞானிகள், பெரிய பெரிய முக்கியஸ்தர்களால் அறிந்து கொள்ள
முடியவில்லை, ஆனால், நீங்கள் அனைவரும் அறிந்து கொண்டீர்கள்
அல்லவா. தன்னுடையவர் ஆக்கிவிட்டீர்கள் அல்லவா. எனவே, தந்தையும்
தன்னுடையவர் ஆக்கிவிட்டார். இந்த குஷியில் வளர்ந்துகொண்டும்,
பறந்து கொண்டும் இருக்கின்றீர்கள் அல்லவா! பறந்து
கொண்டிருக்கின்றீர்கள், நடந்து கொண்டி ருக்கவில்லை, பறந்து
கொண்டி ருக்கின்றீர்கள். ஏனெனில், நடப்பவர்கள் தந்தையுடன்
தன்னுடைய வீட்டிற்குச் செல்ல முடியாது. ஏனெனில், தந்தையோ
பறக்கக்கூடியவர், எனில், நடப்பவர்கள் எவ்வாறு சேர்ந்து
செல்வார்கள்! ஆகையினால், தந்தை அனைத்து குழந்தைகளுக்கும் என்ன
வரதானம் கொடுக்கின்றார்? ஃபரிஷ்தா சொரூபம் பவ. ஃபரிஷ்தா
பறக்கின்றது, நடக்காது, பறக் கின்றது. எனவே, நீங்கள் அனைவரும்
பறக்கும் கலையில் பறப்பவர்கள் அல்லவா! பறப்பவர்களா? யார்
பறக்கும் கலையில் பறப்பவர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். சில
நேரம் நடக்கும் கலை, சில நேரம் பறக்கும் கலை உள்ளதா? இல்லையா?
சதா பறக்கக் கூடியவர்கள், டபுள் லைட் அல்லவா! ஏன்? யோசித்துப்
பாருங்கள், எந்தவிதமான சுமை ஒருவேளை மனதில், புத்தியில் உள்ளது
என்றால் அதை தந்தையிடம் கொடுத்துவிடுங்கள் என்று தந்தை உங்கள்
அனைவரிடமும் உத்திரவாதம் பெற்றுள்ளார், தந்தை பெறுவதற்காகவே
வந்திருக்கின்றார். எனவே, தந்தைக்கு சுமையை கொடுத்துவிட்டீர்களா
அல்லது கொஞ்சம் கொஞ்சம் பாதுகாப்பாக வைத்துள்ளீர்களா? எப்பொழுது
பெறுபவர் கேட்டுக் கொண்டிருக்கின்றாரோ, அப்பொழுது சுமையை
கொடுப்பதில் கூட யோசிப்பதற்கான விசயம் உள்ளதா என்ன? அல்லது
சுமையை பாதுகாப்பாக வைப்பதற்கான 63 பிறவிகளின் பழக்கம் உள்ளதா?
விரும்பவில்லை ஆனால், பழக்கத்தால் நிர்பந்திக்கப்படுகின்றோம்
என்று சில குழந்தைகள் சில நேரங்களில் கூறு கின்றனர். இப்பொழுது
நிர்பந்திக்கப்படவில்லை அல்லவா! நிர்பந்திக்கப்படுகின்றீர்களா
அல்லது உறுதியானவர்களாக இருக்கின்றீர்களா? நிர்பந்திக்
கப்படுபவர்களாக ஒருபொழுதும் ஆகக்கூடாது. உறுதியானவர்கள்
ஆவீர்கள். சக்திகள் உறுதியான வர்களா அல்லது
நிர்பந்திக்கப்படுகின்றீர்களா? உறுதியானவர்கள் அல்லவா? சுமையை
வைத்துக் கொள்வது நன்றாக உள்ளதா என்ன? சுமை உள்ளத்திற்குப்
பிடித்துவிட்டதா என்ன? விட்டுவிடுங் கள், விட்டுவிட்டால் விடு
படலாம். விடுவதில்லை அதனால் விடுபடுவதில்லை. விடுவதற்கான சாதனம்
- திடமான எண்ணம். திடமான சங்கல்பமோ செய்கின்றோம் ஆனால் . . .
என்று சில குழந்தைகள் கூறுகின்றனர், ஆனால் . . . காரணம் என்ன?
திடசங்கல்பம் செய்கின்றீர்கள் ஆனால், செய்திருக்கும்
திடசங்கல்பத்தை ரிவைஸ் செய்வதில்லை. அடிக்கடி மனதால் ரிவைஸ் (மீண்டும்
நினைத்தல்) செய்யுங்கள் மற்றும் ரியலைஸ் (உணர்தல்) செய்யுங்கள்,
சுமை என்றால் என்ன மற்றும் டபுள் லைட்டின் அனுபவம் என்ன!
ரியலைசேஷன் கோர்ஸை இன்னும் அதிகமாக அடிக்கோடிடுங்கள். சொல்வது
மற்றும் யோசிப்பது என்பதை செய்கின்றீர்கள், ஆனால், உள்ளத்தால்
சுமை என்றால் என்ன மற்றும் டபுள் லைட் என்றால் என்ன என்பதை
ரியலைஸ் செய்யுங்கள். வேறுபாட்டை முன்னால் வைத்திடுங்கள்,
ஏனெனில், பாப்தாதா இப்பொழுது சமயத்தின் அருகாமையின் அனுசாரமாக
ஒவ்வொரு குழந்தையிடமும் எதை பார்ப்பதற்கு விரும்புகின்றார் கள்?
என்ன சொல்கின்றீர்களோ, அதை செய்து காண்பிக்க வேண்டும். என்ன
நினைக்கின்றீர்களோ, அதை சொரூபத்தில் கொண்டு வரவேண்டும், ஏனெனில்,
முக்தி மற்றும் ஜீவன்முக்தி தந்தையின் ஆஸ்தி ஆகும்,
பிறப்பதிகாரம் ஆகும். வருகை தந்து முக்தி, ஜீவன் முக்தியின்
ஆஸ்தியைப் பெறுங்கள் என்று அனைவருக்கும் இந்த அழைப்பையே
கொடுக்கின்றீர்கள் அல்லவா. எனவே, தன்னிடம் கேளுங்கள் -
முக்திதாமத்தில் முக்தியின் அனுபவம் செய்ய வேண்டுமா மற்றும்
சத்யுகத்தில் ஜீவன் முக்தியின் அனுபவம் செய்ய வேண்டுமா அல்லது
இப்பொழுது சங்கம யுகத்தில் முக்தி, ஜீவன்முக்தியின் சமஸ்காரத்தை
உருவாக்க வேண்டுமா? ஏனெனில், நாங்கள் இப்பொழுது எங்களுடைய
ஈஸ்வரிய சமஸ்காரத்தில் இருந்து தெய்வீக சமஸ்காரத்தை
உருவாக்கக்கூடியவர்கள் என்று கூறுகின்றீர்கள். தங்களுடைய
சமஸ்காரத்தால் புதிய உலகத்தை உருவாக்கிக் கொண்டு
இருக்கின்றீர்கள். எனவே, இப்பொழுது சங்கமயுகத்திலேயே முக்தி,
ஜீவன் முக்தியின் சமஸ்காரம் எமர்ஜ் ஆகியிருக்க வேண்டும் அல்லவா!
எனவே, அனைத்து பந்தனங் களில் இருந்தும் மனம் மற்றும் புத்தி
முக்தி (விடுபடுதல்) அடைந்துள்ளனவா? என்று சோதனை செய்யுங்கள்.
ஏனெனில், பிராமண வாழ்வில் கடந்த வாழ்க்கையின் சில விசயங்களின்
பந்தனம் என்ன உள்ளனவோ, அவற்றில் இருந்து விடுபட்டு
இருக்கின்றீர்கள். ஆனால், சர்வ பந்தனங்களில் இருந்தும் முக்தி
அடைந்துள்ளீர்களா அல்லது சில சில பந்தனம் இப்பொழுதும் கூட
தன்னுடைய பந்தனத்தில் கட்டிப் போட்டு விடுகின்றதா? இந்த பிராமண
வாழ்வில் முக்தி, ஜீவன்முக்தியின் அனுபவம் செய்வது தான் பிராமண
வாழ்க்கையின் சிரேஷ்டத்தன்மை ஆகும், ஏனெனில், சத்யுகத்தில்
ஜீவன்முக்தி, ஜீவன்பந்தனம் ஆகிய இரண்டைப் பற்றிய ஞானமும்
இருக்காது. ஜீவன் பந்தனம் எது, ஜீவன்முக்தி எது என்பதை
இப்பொழுது அனுபவம் செய்ய முடிகிறது. ஏனெனில், உங்கள் அனைவருடைய
வாக்குறுதி, அனேக முறை வாக்குறுதி அளித்துள்ளீர்கள், என்ன
வாக்குறுதி அளித்துள்ளீர்கள்? நினைவு உள்ளதா? உங்களுடைய இந்த
பிராமண வாழ்வின் இலட்சியம் என்ன? என்று யாரிடமாவது கேட்டால்
என்ன பதில் கொடுக்கின்றீர்கள்? தந்தைக்கு சமமாக ஆகவேண்டும். இது
உறுதி தானே? தந்தைக்கு சமமாக ஆகவேண்டும் அல்லவா? அல்லது கொஞ்சம்
கொஞ்சம் ஆகவேண்டுமா? சமம் ஆக வேண்டும் அல்லவா! சமம் ஆக வேண்டுமா
அல்லது கொஞ்சம் ஆகியிருந்தாலும் பரவாயில்லையா! பரவாயில்லையா?
அவர்களை சம மானவர்கள் என்று கூறமுடியாது அல்லவா. தந்தை
விடுபட்டு இருக்கின்றாரா அல்லது பந்தனம் உள்ளதா? ஒருவேளை,
எந்தவிதமான தேகத்தினுடைய, தேகத்தின் எந்தவொரு சம்பந்தம் - தாய்,
தந்தை, உறவு, நண்பர் அல்ல, தேகத்தோடு கர்மேந்திரியங்களுடனான
சம்பந்தம், இந்த எந்தவொரு கர்மேந்திரயங்களுடனான சம்பந்தம்,
பழக்கத்தின் பந்தனம், சுபாவத்தின் பந்தனம், பழைய சமஸ்காரத்தின்
பந்தனம் உள்ளது என்றால் தந்தைக்கு சமமானவர்கள் என்று எவ்வாறு
அழைக்க முடியும்? மேலும், தினமும் தந்தைக்கு சமமாக ஆகியே
தீரவேண்டும் என்று உறுதிமொழி செய்கின்றீர்கள். கை உயர்த்த
வைத்தால் அனைவரும் என்ன சொல்கின்றீர்கள்? இலட்சுமி, நாராயணர்
ஆகவேண்டும் என்று சொல்கின்றீர்கள். பாப்தாதாவிற்கும் மிகவும்
நல்ல நல்ல உறுதி மொழி செய்கின்றார்கள் என்ற குஷி ஏற்படுகின்றது,
ஆனால், உறுதிமொழியின் பயனைப் பெறுவ தில்லை. உறுதிமொழி மற்றும்
அதனுடைய பயனின் சமநிலையைப் பற்றி அறியவில்லை. வாக்குறுதிகளின்
ஃபைல் பாப்தாதாவிடம் மிக மிக மிகப் பெரியதாக உள்ளது, அனைவருடைய
ஃபைல் உள்ளது. இதுபோன்றே பயனுடைய ஃபைலும் இருக்க வேண்டும்,
சமநிலை இருந்த தென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
சேவை கேந்திரங்களின் டீச்சர்கள் அமர்ந்திருக்கின்றீர்கள் அல்லவா.
இவர்களும் கூட சேவை கேந்திரத்தில் வசிப்பவர்கள்
அமர்ந்திருக்கின்றீர்கள் அல்லவா? சமம் ஆகக்கூடியவர்கள் அல்லவா.
சென்டரில் வசிக்கும் நிமித்தமாகி யுள்ள குழந்தைகளோ
சமமானவர்களாக இருக்க வேண்டும் அல்லவா! இருக்கின்றீர்கள், ஆனால்,
அவ்வப்பொழுது கொஞ்சம் குறும்புத்தனம் செய்பவர்களாக
ஆகிவிடுகின்றீர்கள். பாப்தாதாவோ அனைத்து குழந்தைகளுடைய
முழுநாளின் நிலைமை மற்றும் சூழ்நிலை இரண்டையும் பார்த்துக்
கொண்டு இருக்கின்றார்கள். உங்களுடைய தாதியும் கூட வதனத்தில்
இருந்தார்கள் அல்லவா, தாதியும் பார்த்தார்கள், அப்பொழுது என்ன
கூறினார்கள் தெரியுமா? பாபா இப்படி கூட இருப்பார்களா என்ன?
என்று கூறினார்கள். அவ்வாறு நடக்கின்றது, அவ்வாறு செய்
கின்றார்கள், நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றீர்களா?
என்று கூறினார்கள். கேட்டீர்களா, உங்களுடைய தாதி என்ன
பார்த்தார்கள். ஒவ்வொரு குழந்தையும் முக்தி,
ஜீவன்முக்தியினுடைய ஆஸ்திக்கு அதிகாரி ஆகவேண்டும் என்ற இதையே
இப்பொழுது பாப்தாதா பார்க்க விரும்புகின்றார்கள், ஏனெனில்,
ஆஸ்தி இப்பொழுது கிடைக்கிறது. சத்யுகத்திலோ இயற்கை யான வாழ்க்கை
இருக்கும், இப்போதைய பயிற்சியின் பலனாக இயற்கையான வாழ்க்கை
இருக்கும், ஆனால், ஆஸ்திக்கான அதிகாரம் இப்பொழுது
சங்கமயுகத்தில் உள்ளது, ஆகையினால், ஒவ்வொருவரும் சுயம் சோதனை
செய்ய வேண்டும் என்பதையே பாப்தாதா விரும்புகின்றார்கள். ஒருவேளை,
ஏதாவது பந்தனம் ஈர்க்கிறது என்றால் அதற்கான காரணத்தை
யோசியுங்கள். காரணத்தை யோசியுங்கள் மற்றும் காரணத்தின் கூடவே
நிவாரணத்தையும் யோசியுங்கள். பாப்தாதா அனேக முறை விதவிதமான
ரூபத்தில் நிவாரணம் கொடுத்திருக்கின்றார்கள். சர்வசக்தி களின்
வரதானம் கொடுத்திருக்கின்றார்கள், சர்வ குணங்களின் பொக்கிஷங்கள்
வழங்கியுள்ளார்கள், பொக்கிஷங்களை பயன்படுத்துவதன் மூலம்
பொக்கிஷம் அதிகரிக்கிறது. பொக்கிஷம் அனைவரிட மும் உள்ளது என்பதை
பாப்தாதா பார்த்திருக்கின்றார்கள். ஒவ்வொருவருடைய ஸ்டாக்கையும்
கூட பார்க்கின்றார்கள். புத்தி ஸ்டாக் (இருப்பு) ரூம் ஆகும்.
பாப்தாதா அனைவருடைய ஸ்டாக்கை யும் பார்த்தார்கள். ஸ்டாக்கில்
உள்ளது, ஆனால், பொக்கிஷங்களை சமயத்தில் பயன்படுத்து வதில்லை.
பாயிண்ட்டாக (கருத்து) மட்டும் நினைக்கின்றீர்கள், ஆம் இதை
செய்யக்கூடாது, இதை செய்ய வேண்டும் என்று பாயிண்ட்டாக (கருத்தாக)
பயன்படுத்துகின்றீர்கள், யோசிக் கின்றீர்கள், ஆனால், பாயிண்ட்
(புள்ளி) ஆகி பாயிண்ட்டை பயன்படுத்துவதில்லை, ஆகையினால்,
பாயிண்ட் பாயிண்ட்டாகவே இருந்துவிடுகிறது, பாயிண்ட் (புள்ளி)
ஆகி பயன்படுத்தினீர்கள் என்றால் நிவாரணம் கிடைத்துவிடும். இதை
செய்யக்கூடாது என்பதை சொல்லவும் செய்கின்றீர்கள், பிறகு
மறந்தும் விடுகின்றீர்கள். சொல்வதன் கூடவே
மறந்தும்விடுகின்றீர்கள். இவ்வளவு சகஜமான விதியை
கூறியிருக்கின்றார், சங்கமயுகத்தில் மட்டுமே புள்ளியின்
அற்புதம் உள்ளது, புள்ளியை பயன்படுத்துங்கள், அவ்வளவுதான், வேறு
எந்த குறியீட்டின் அவசியம் இல்லை. மூன்று புள்ளிகளை
பயன்படுத்துங்கள். ஆத்மா புள்ளி, தந்தை புள்ளி மற்றும் டிராமா
புள்ளி. மூன்று புள்ளிகளை பயன்படுத்திக் கொண்டே இருந்தீர்கள்
என்றால் தந்தைக்கு சமமாக ஆகுவது ஒன்றும் கடினம் அல்ல. வைக்க
விரும்புவதோ புள்ளி, ஆனால், வைக்கும் சமயத்தில் கை ஆடிவிடுகிறது,
அதனால் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது அல்லது ஆச்சரியக்குறியாக
மாறிவிடுகிறது. அங்கே கை ஆடுகிறது, இங்கே புத்தி ஆடுகிறது.
இல்லையென்றால் மூன்று புள்ளிகளை நினைவில் வைப்பது என்ன கடினம்?
பாப்தாதாவோ இன்னொரு சகஜ யுக்தி கூறியுள்ளார்கள், அது என்ன?
ஆசீர்வாதம் கொடுங்கள் மற்றும் ஆசீர்வாதம் பெறுங்கள். நல்லது,
யோகா சக்திசாலியாக இல்லை, தாரணைகள் சிறிது குறைவாக உள்ளன,
சொற்பொழிவு செய்வதற்கான தைரியம் இல்லை, ஆனால், ஆசீர்வாதம்
கொடுங்கள் மற்றும் ஆசீர்வாதம் பெறுங்கள், இந்த ஒரு விசயத்தை
மட்டும் செய்யுங்கள், மற்ற அனைத்தையும் விட்டுவிடுங்கள், ஒரு
விசயத்தை செய்யுங்கள், ஆசீர்வாதம் பெற வேண்டும், ஆசீர்வாதம்
கொடுக்க வேண்டும். எது வேண்டுமானாலும் நடக்கட்டும், ஒருவர் எதை
வேண்டு மானாலும் கொடுக்கட்டும், ஆனால், நான் ஆசீர்வாதம்
கொடுக்க வேண்டும், பெற வேண்டும். இந்த ஒரு விசயத்தை பக்கா
செய்யுங்கள், இதில் அனைத்தும் வந்துவிடும். ஒருவேளை, ஆசீர்வாதம்
கொடுத்தீர்கள் மற்றும் ஆசீர்வாதம் பெற்றீர்கள் என்றால் இதில்
சக்திகள் மற்றும் குணம் வராதா என்ன? தானாகவே வந்துவிடும் அல்லவா!
ஒரே ஒரு இலட்சியம் வைத்திடுங்கள், செய்து காட்டுங்கள், ஒரு நாள்
பயிற்சி செய்து பாருங்கள், பிறகு ஏழு நாட்கள் செய்து பாருங்கள்,
மற்ற விசயங்கள் புத்தியில் வரவில்லை என்றாலும் பரவாயில்லை,
ஒன்றாவது வரும். எது வேண்டு மானாலும் நடக்கட்டும், ஆனால்,
ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும் மற்றும் பெற வேண்டும். இதை செய்ய
முடியுமா அல்லது முடியாதா? செய்ய முடியுமா? நல்லது, நீங்கள்
எப்பொழுது கிளம்பினாலும், இதை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
இதில் அனைவரும் யோக யுக்த்தாக தானாகவே ஆகிவிடுவீர்கள், ஏனெனில்,
வீணான செயல் செய்யவில்லை என்றால் யோகயுக்த்தாக ஆகிவிட்டீர்கள்
தானே. ஆனால், ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும், ஆசீர்வாதம் பெற
வேண்டும் என்ற இலட்சியம் வைத்திடுங்கள். ஒருவர் எது
வேண்டுமானாலும் கொடுக்கட்டும், சாபம் கூட கிடைக்கும், கோபத்தை
ஏற்படுத்தும் விசயங்களும் வரும், ஏனெனில், உறுதிமொழி
செய்துள்ளீர்கள் அல்லவா, எனவே, இவர்கள் இந்த உறுதிமொழி
செய்வார்கள் என்று மாயாவும் கேட்டுக் கொண்டி ருக்கிறது, அதுவும்
தன்னுடைய வேலையை செய்யும் அல்லவா. எப்பொழுது மாயாவை
வென்றவர்களாக ஆகுவீர்களோ, பிறகு செய்யாது, இப்பொழுதோ மாயாவை
வென்றவர்களாக ஆகிக்கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா, எனவே, அது
தன்னுடைய வேலையை செய்யும், ஆனால், நான் ஆசீர்வாதம் கொடுக்க
வேண்டும் மற்றும் ஆசீர்வாதம் பெறவேண்டும். இது முடியுமா?
முடியும் என்று யார் கூறுகின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள்.
நல்லது, சக்திகள் கை உயர்த்துங்கள். ஆம், முடியுமா? அனைத்து
தரப்பிலிருந்தும் டீச்சர்கள் வந்திருக்கின்றீர்கள் அல்லவா.
எப்பொழுது நீங்கள் தங்களுடைய நாட்டிற்குச் செல்வீர்களோ,
அப்பொழுது முதன் முதலில் அனைவரும் ஒரு வாரம் இந்த வீட்டுப்பாடம்
செய்ய வேண்டும் மற்றும் ரிசல்ட் அனுப்ப வேண்டும், எத்தனை
நபர்கள், வகுப்பின் உறுப்பினர் எத்தனை நபர்கள் உள்ளனர், எத்தனை
பேர் ஓ.கே. வாக உள்ளனர் மற்றும் எத்தனை பேர் சிறிது கச்சாவாக (பக்குமற்றவர்களாக)
மற்றும் எத்தனை பேர் பக்காவாக (உறுதியானவர்களாக) உள்ளனர்,
ஓ.கேவிற்கு நடுவில் கோடு போட வேண்டும், அப்படிப்பட்ட செய்தியைக்
கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். இத்தனை நபர்கள் ஓ.கே, இத்தனை
நபர்களில் ஓ.கே.வில் கோடு விழுந்துள்ளது. இதில் பாருங்கள்,
இரட்டை வெளி நாட்டினர் வந்திருக்கின்றனர் என்றால் இரண்டு வேலை
செய்வார்கள் அல்லவா. ஒரு வாரத்திற்கான ரிசல்ட் அனுப்ப வேண்டும்
பிறகு பாப்தாதா பார்ப்பார்கள், சகஜம் தானே, கடின மானதோ அல்ல.
மாயா வரும், பாபா, எனக்கு முன்னதாக அப்படிப்பட்ட சங்கல்பம்
ஒருபொழுதும் வந்ததில்லை, இப்பொழுது வந்து விட்டது என்று நீங்கள்
கூறுவீர்கள், இது நடக்கும், ஆனால், உறுதியான நம்பிக்கை
உள்ளவர்களுக்கு உறுதியான வெற்றி உள்ளது. உறுதித்தன்மையின் பலனே
வெற்றி ஆகும். வெற்றி கிடைக்காததற்கான காரணமாக இருப்பது
உறுதித்தன்மையின் குறைபாடே ஆகும். உறுதித்தன்மைக்கான வெற்றி
கிடைத்தே ஆகவேண்டும்.
எவ்வாறு சேவையை ஊக்கம், உற்சாகத்துடன் செய்து
கொண்டிருக்கின்றீர்கள், அவ்வாறு சுயத்தினுடைய, சுயத்திற்கான
சேவை, சுய சேவை மற்றும் விஷ்வ சேவை, சுய சேவை என்றால் சோதனை
செய்வது மற்றும் தன்னை தந்தைக்கு சமம் ஆக்குவது ஆகும். எந்தவொரு
குறை மற்றும் பலவீனத்தையும் தந்தையிடம் கொடுத்து விடுங்களேன்,
ஏன் வைத்துள்ளீர்கள், தந்தைக்கு பிடிக்கவில்லை. ஏன் பலவீனத்தை
வைத்துக் கொள்கின்றீர்கள்? கொடுத்துவிடுங்கள். கொடுக்கும் சமயம்
சிறு குழந்தை ஆகிவிடுங்கள். எவ்வாறு சிறிய குழந்தை எந்தவொரு
பொருளை பாதுகாக்க முடியவில்லை, எந்தவொரு பொருளாவது
பிடிக்கவில்லை என்றால் என்ன செய்கிறது? அம்மா, அப்பா இதை
நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. அதுபோன்றே
எந்த விதமான சுமை, பந்தனம் எது பிடிக்கவில்லையோ, ஏனெனில்,
பாப்தாதா பார்க்கின்றார்கள், இது நல்லதல்ல, இது சரியல்ல என்று
ஒருபுறம் இதை சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள், ஆனால்,
என்ன செய்வேன், எப்படி செய்வேன் . . . இதுவோ நன்றாக இல்லை என்று
யோசிக்கின்றார்கள். ஒருபுறம் நன்றாக இல்லை என்று கூறிக்கொண்டு
இருக்கின்றீர் கள், மறுபுறம் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு
இருக்கின்றீர்கள், எனில், இதை என்னவென்று சொல்வது! நல்லது என்று
சொல்லலாமா? நன்றாக இல்லை அல்லவா. எனவே, நீங்கள் என்னவாக
ஆகவேண்டும்? நல்லவரிலும் நல்ல வராக அல்லவா. நல்லவராக மட்டும்
அல்ல, நல்லவரிலும் நல்லவராக ஆகவேண்டும். என்னவெல்லாம்
அப்படிப்பட்ட விசயம் வந்தாலும், பாபா ஆஜராகி இருக்கின்றார்,
அவரிடம் கொடுத்துவிடுங்கள், மேலும், ஒருவேளை, திரும்ப
வந்துவிட்டால், அதை அடகுப் பொருள் எனப்புரிந்து கொண்டு மீண்டும்
கொடுத்துவிடுங்கள். அடகுப்பொருளில் உரிமை கொண்டாடப்படுவதில்லை,
ஏனெனில், நீங்கள் கொடுத்துவிட்டீர்கள், எனில் தந்தையினுடைய
பொருளாக ஆகிவிட்டது, தந்தையின் பொருள் அல்லது பிறருடைய பொருள்
உங்களிடம் தவறுதலாக வந்துவிட்டது, நீங்கள் அலமாரி யில்
வைத்துக்கொள்வீர்களா? வைத்துக்கொள்வீர்களா? வெளியே
எடுத்துவிடுவீர்கள் தானே, எப்படி யாவது வெளியேற்றிவிடுவீர்கள்,
வைத்துக் கொள்ளமாட்டீர்கள். பாதுகாக்கமாட்டீர்கள் அல்லவா. எனவே,
கொடுத்துவிடுங்கள். தந்தை பெறுவதற்காக வந்திருக்கின்றார்.
கொடுப்பதற்கு உங்களிடம் வேறு எதுவும் இல்லை, ஆனால், இதையோ
கொடுக்க முடியும் அல்லவா. எருக்கம் பூ உள்ளது, அதைக்
கொடுத்துவிடுங்கள். பாதுகாப்பது பிடிக்கிறதா என்ன? நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து பாப்தாதாவின் உள்ளத்திற்குப்
பிடித்தமான குழந்தைகளுக்கு, உள்ளத்தைக் கொள்ளை கொள்பவர் அல்லவா,
திலாராமின் உள்ளத்திற்குப் பிடித்தமான குழந்தை களுக்கு, அன்பின்
அனுபவங்களில் சதா மூழ்கியிருக்கும் குழந்தைகளுக்கு, ஒரு
தந்தையைத் தவிர வேறு எவரும் இல்லை, கனவிலும் கூட வேறு எவரும்
இல்லை, அப்பேற்பட்ட பாப்தாதாவிற்கு மிகவும் அன்பான மற்றும்
மிகவும் தேக உணர்விலிருந்து விடுபட்ட, தேடிக்கண்டெடுக்கப்பட்ட,
பல கோடி மடங்கு பாக்கியசாலி குழந்தைகளுக்கு உள்ளத்தின் அன்பு
நினைவுகள் மற்றும் கோடி, கோடி மடங்கு ஆசீர்வாதங்கள் உரித்தாகுக,
கூடவே பாலகனாகவும் எஜமானராகவும் இருக்கும் குழந்தைகளுக்கு
பாப்தாதாவின் நமஸ்காரம்.
ஆசீர்வாதம்:
ஈஸ்வரிய மரியாதைகளினுடைய ஆதாரத்தில் உலகத்திற்கு முன்பாக
உதாரணம் ஆகக்கூடிய சகஜயோகி ஆகுக.
உலகத்திற்கு முன்பாக உதாரணம் ஆகுவதற்காக அமிர்தவேளை முதல் இரவு
வரை ஈஸ்வரிய மரியாதைகள் என்ன உள்ளனவோ, அதன் அனுசாரம்
நடந்துகொண்டே இருங்கள். விசேஷமாக அமிர்தவேளையின் மகத்துவத்தை
அறிந்துகொண்டு அந்த சமயம் சக்திசாலி நிலையை உருவாக்குங்கள்,
அப்பொழுது முழு நாளின் வாழ்க்கை மகான் ஆகிவிடும். அமிர்த
வேளையில் விசேஷமாக தந்தையிடம் இருந்து எப்பொழுது சக்தியை
நிறைத்துக் கொள்வீர்களோ, அப்பொழுது சக்தி சொரூபமாகி நடப்பதனால்
எந்தவொரு காரியத்திலும் கடினத்தின் அனுபவம் ஏற்படாது மற்றும்
மரியாதைப்பூர்வமான வாழ்க்கை வாழ்வதால் சகஜயோகியின் நிலையும்
தானாகவே உருவாகிவிடும், பிறகு, உலகம் உங்களுடைய வாழ்க்கையைப்
பார்த்து தன்னுடைய வாழ்க்கையை உருவாக்கும்.
சுலோகன்:
தன்னுடைய நடத்தை மற்றும் முகத்தின் மூலம் தூய்மையின்
சிரேஷ்டத்தன்மையை அனுபவம் செய்வித்திடுங்கள்.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
பிரயோகி ஆத்மா சமஸ்காரங்களின் மீது, இயற்கை மூலம் வரக்கூடிய
சூழ்நிலைகளின் மீது மற்றும் விகாரங்களின் மீது சதா வெற்றியாளர்
ஆகுவார்கள். யோகி மற்றும் பிரயோகி ஆத்மா விற்கு முன்பு இந்த
ஐந்து விகாரங்கள் என்ற பாம்பு கழுத்து மாலையாக மற்றும் குஷியில்
நடனம் ஆடுவதற்கான மேடையாக ஆகிவிடுகிறது.