27-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே - படகோட்டி உங்களுடைய படகை கரையேற்ற வந்துள்ளார். நீங்கள் தந்தையிடம் உண்மையானவராக இருந்தீர்கள் என்றால், படகு ஆடலாம், அசையலாம் ஆனால் மூழ்கிப் போய் விட முடியாது.

கேள்வி:
தந்தையின் நினைவு குழந்தைகளுக்கு சரியாக (நிலையாக) இல்லாமலிருப்பதற்கான முக்கிய காரணம் என்ன?

பதில்:
சாகாரத்தில் (சரீரத்தில்) வந்து வந்து நான் ஆத்மா நிராகாரமானவன் மற்றும் நமது தந்தையும் நிராகாரமானவர் (சரீரமற்றவர்) என்பதை மறந்து விட்டுள்ளார்கள். சாகாரமாக இருக்கும் காரணத்தால் சாகாரமானவரின் நினைவு எளிதாக வந்து விடுகிறது. (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆகி தன்னை பிந்து (புள்ளி) என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்வது - இதில் தான் உழைப்பு உள்ளது.

ஓம் சாந்தி.
சிவபகவான் கூறுகிறார். இவருடைய பெயரோ சிவன் இல்லை தானே ! இவருடைய பெயர் பிரம்மா என்பதாகும். மேலும் இவர் மூலமாகப் பேசுகிறார் - சிவ பகவானுவாச் - சிவபகவான் கூறுகிறார். எந்த ஒரு மனிதனையோ அல்லது தேவதையையோ அல்லது சூட்சும வதனவாசி பிரம்மா, விஷ்ணு, சங்கரனையோ பகவான் என்று கூறப்படுவதில்லை என்பதை அநேக முறை புரிய வைத்துள்ளார். யாருக்கு ஆகார (சூட்சுமமான) அல்லது சாகார (ஸ்தூலமான) உருவம் உள்ளதோ அவர்களுக்கு பகவான் என்று கூற முடியாது. எல்லையில்லாத தந்தைக்குத் தான் பகவான் என்று கூறப்படுகிறது. பகவான் யார் என்பது யாருக்குமே தெரியாது. "நேத்தி-நேத்தி" அதாவது எங்களுக்கு தெரியாது, தெரியாது என்று கூறுகிறார்கள். உங்களிலும் கூட மிக குறை வானோரே சரியான முறையில் அறிந்துள்ளார்கள். "ஹே பகவான்" என்று ஆத்மா கூறுகிறது. இப்பொழுது ஆத்மாவோ (புள்ளி) பிந்துவாக உள்ளது. எனவே தந்தையும் பிந்துவாகத் தானே இருப்பார். இப்பொழுது தந்தை குழந்தை களுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார். நான் ஆத்மா எப்படி பிந்துவாக உள்ளேன் என்பது 30 - 35 வருடங்களாக புரியாமல் இருக்கும் குழந்தைகள் கூட பாபா விடம் இருக்கிறார்கள். ஒரு சிலரோ நல்ல முறையில் புரிந்துள்ளார்கள். தந்தையை நினைவு செய்கிறார்கள். எல்லையில்லாத தந்தை உண்மையான வைரம் ஆவார். வைரமானது மிகவும் நல்ல பெட்டியில் வைக்கப்படுகிறது. யாரிடமாவது நல்ல வைரங்கள் இருந்தது என்றால் அவற்றை யாருக்காவது காண்பிக்க வேண்டி இருந்தால் தங்கம் அல்லது வெள்ளி டப்பாவில் வைத்து பிறகு காண்பிப்பார்கள். வைரத்தை வைர வியாபாரி தான் அறிந்து கொள்ள முடியும். வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. போலி யானவையைக் காண்பித்தால் கூட யாருக்கும் தெரிய வராது. இது போல நிறைய பேர் ஏமாற்றி விடுகிறார்கள். எனவே இப்பொழுது உண்மையான தந்தை வந்துள்ளார். ஆனால் போலியானவர்களும் எப்படி எப்படி இருக்கிறார்கள் என்று மனிதர்களுக்கு எதுவுமே தெரிய வருவதில்லை. உண்மையின் படகு ஆடும், அசையும், ஆனால் மூழ்காது என்று பாடப்படுகிறது. பொய்யான படகு ஆடுவது இல்லை. இதை எவ்வளவு ஆடுமாறு செய்கிறார்கள். யார் இங்கு இந்த படகில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள் கூட ஆடுமாறு செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். துரோகி (ட்ரேட்டர்) என்று பாடப்படுகிறார்கள் அல்லவா? இப்பொழுது படகோட்டி யான தந்தை வந்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தோட்டத்தின் எஜமானராகவும் இருக்கிறார். இது முட்களின் காடு என்பதை தந்தை புரிய வைத்துள்ளார். எல்லோருமே (பதீதமாக) துய்மையற்று இருக்கிறார்கள் அல்லவா? எவ்வளவு பொய் உள்ளது. உண்மையான தந்தையை யாரோ ஒரு சிலர் தான் அறிந்துள்ளார்கள். இங்கு இருப்பவர்களில் கூட நிறைய பேர் முழுமையாக அறியாமல் உள்ளார்கள். முழுமையான அறிமுகம் இல்லை. ஏனெனில் (குப்தமாக) மறைமுகமாக இருக்கிறார் அல்லவா? பகவானை நினைக்கவோ எல்லோரும் செய்கிறார்கள். அவர் நிராகாரமானவர் என்பதையும் அறிந்துள்ளார்கள். பரந்தாமத்தில் இருக்கிறார் என்பதையும் அறிந்துள்ளார்கள். பரந்தாமத்தில் இருக்கிறார். நாம் கூட நிராகார ஆத்மா ஆவோம் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். சாகார உணர்வில் வந்து வந்து அதை மறந்து விட்டுள்ளார்கள். சாகாரத்தில் இருந்து இருந்து சாகாரமானவரின் நினைவு தான் வந்து விடுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது (தேஹி அபிமானி) ஆத்ம உணர்வுடையவர் ஆகிறீர்கள். பகவானுக்கு பரமபிதா பரமாத்மா என்று கூறப்படுகிறது. இதைப் புரிந்து கொள்வதோ மிகவும் சுலபம் ஆகும். பரமபிதா என்றால் (பரே) அப்பாற்பட்டு இருக்கும் பரம ஆத்மா. உங்களுக்கு ஆத்மா என்று கூறப்படுகிறது. உங்களை பரம என்று கூற மாட்டார்கள். நீங்களோ மறு பிறவி எடுக் கிறீர்கள் அல்லவா? இந்த விஷயங்களை யாருமே அறியாமல் உள்ளார்கள். பகவானைக் கூட சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று கூறி விடுகிறார்கள். பக்தர்கள் பகவானைத் தேடுகிறார்கள். மலைகள் மீது, தீர்த்தங்களுக்கு நதிகளிடம் கூட செல்கிறார்கள். நதி பதீத பாவனி (தூய்மை ஆக்கக் கூடியது) என்று நினைக்கிறார்கள். அதில் குளித்து நாம் தூய்மையாக ஆகி விடுவோம். பக்தி மார்க்கத்தில் நமக்கு என்ன வேண்டும் என்பது கூட யாருக்கும் தெரிவதில்லை. முக்தி வேண்டும், மோட்சம் வேண்டும் என்று மட்டும் கூறி விடுகிறார்கள். ஏனெனில் இங்கு துக்கமுற்றிருக்கும் காரணத்தால் சலித்துப் போய் விட்டுள்ளார்கள். சத்யுகத்தில் யாராவது மோட்சம் அல்லது முக்தி வேண்டுகிறார்களா என்ன? அங்கு பகவானை யாருமே அழைப்பது இல்லை. இங்கு துக்கம் இருக்கும் காரணத்தால் அழைக்கிறார்கள். பக்தியில் யாருடைய துக்கத்தையும் தீர்க்க முடியாது. ஒருவர் நாள் முழுவதும் அமர்ந்து ராம் ராம் என்று ஜபித்தாலும் கூட துக்கத்தை நீக்க முடியாது. இது இருப்பதே இராவண இராஜ்யமாக. துக்கமோ கழுத்தில் பிணைக்கப்பட்டது போல உள்ளது. துக்கத்தில் எல்லோரும் நினைவு செய்வார்கள் சுகத்தில் யாரும் செய்ய மாட்டார்கள்"" என்றும் பாடப்பட்டுள்ளது. இதன் பொருள் அவசியம் இவ்வுலகில் சுகம் இருந்திருக்க வேண்டும். இப்பொழுது துக்கம் உள்ளது. சுகம் இருந்தது சத்யுகத்தில். துக்கம் இருப்பது இப்பொழுது கலியுகத்தில். எனவே இதற்கு முட்களின் காடு என்று கூறப்படுகிறது. முதல் நம்பரில் இருப்பது தேக அபிமானத்தின் முள். பிறகு இருப்பது காமத்தின் முள்.

நீங்கள் இந்த கண்களால் பார்ப்பது அனைத்தும் அழியப் போகிறது என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். இப்பொழுது நீங்கள் சாந்திதாமம் செல்ல வேண்டி உள்ளது. உங்களது வீடு மற்றும் ராஜாங்கத்தை நினைவு செய்யுங்கள். வீட்டின் நினைவினுடன் கூடவே தந்தையின் நினைவு கூட அவசியம் ஆகும். ஏனெனில் வீடு ஒன்றும் பதீத பாவனர் கிடையாது. நீங்கள் பதீத பாவனர் என்று தந்தைக்குக் கூறுகிறீர்கள். எனவே தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டி உள்ளது. அவர் என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். பாபா வந்து எங்களை தூய்மை யாக்குங்கள் என்று என்னைத் தான் அழைக்கிறீர்கள் அல்லவா? ஞானத்தின் கடல் ஆவார். எனவே அவசியம் வந்து வாய் மூலமாகப் புரிய வைக்க வேண்டி உள்ளது. பிரேரணையோ (தூண்டுதல் மூலம்) செய்ய மாட்டார். ஒரு பக்கம் சிவஜெயந்தி கூட கொண்டாடுகிறார்கள். மறுபக்கம் பின்னர் பெயருக்கும் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுகிறார்கள். பெயர் ரூபத்திலிருந்து தனிப்பட்ட பொருள் எதுவும் இருப்பதில்லை. பிறகு கல் மண் எல்லாவற்றிலும் இருக்கிறார் என்று கூறி விடுகிறார்கள். அநேக வழிகள் உள்ளன அல்லவா? உங்களை 5 விகாரங்கள் என்ற இராவணன் துச்ச புத்தி உடையோராக ஆக்கி விட்டுள்ளான் என்று தந்தை புரிய வைக்கிறார். எனவே தேவதைகளுக்கு முன்னால் சென்று வணங்குகிறார்கள். ஒரு சிலரோ நாஸ்திகராக இருப்பார்கள். யாரையுமே ஏற்றுக் கொள்வது இல்லை. இங்கு தந்தையிடம் வருவதே பிராமணர் கள் ஆவார்கள். அவர்களுக்குத் தான் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரும் புரிய வைத்திருந்தார். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலமாக ஸ்தாபனை செய்கிறார் என்று எழுதப் பட்டும் உள்ளது. எனவே பிரம்மாவின் குழந்தைகள் ஆகிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவோ பிரசித்தமானவர் ஆவார். அவசியம் பிராமணர்கள், பிராமணிகள் கூட இருப்பார்கள். இப்பொழுது நீங்கள் சூத்திர தர்மத் திலிருந்து வெளியேறி பிராமண தர்மத்தில் வந்துள்ளீர்கள். உண்மையில் இந்து என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்களுடைய உண்மையான தர்மத்தை அறியாமல் உள்ளார்கள். எனவே ஒரு சமயம் ஒருவரை ஏற்றுக் கொள்வார்கள். இன்னொரு நேரம் இன்னொருவரை ஏற்றுக் கொண்டி ருப்பார்கள். அநேகரிடம் சென்று கொண்டு இருப்பார்கள். கிறிஸ்துவர்கள் ஒரு பொழுதும் யாரிடமும் செல்ல மாட்டார்கள். பகவான் தந்தை என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார் என்பதை இப்பொழுது நீங்கள் நிரூபித்து கூறுகிறீர்கள். என்னை நினைவு செய்தால் நீங்கள் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக (தூய்மை) ஆகி விடுவீர்கள் என்று பகவான் கூறுகிறார் என்பது ஒரு நாள் பத்திரிகைகளில் கூட வெளிவரும். விநாசம் நெருங்கும் பொழுது பத்திரிகைகள் மூலமாகக் கூட இந்த குரல் காதுகளில் விழும். பத்திரிகைகளிலோ எங்கெல்லாமோ இருந்து செய்திகள் வருகிறது அல்லவா? இப்பொழுது கூட நீங்கள் பத்திரிகைகளில் வெளியிட லாம். பகவான் கூறுகிறார் - (பகவானுவாச்) - நான் பதித பாவனன் ஆவேன், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தூய்மை ஆகி விடுவீர்கள்"" என்று பரமபிதா பரமாத்மா சிவன் கூறுகிறார். இந்த பதீதமான (தூய்மையற்ற) உலகத்தின் விநாசம் எதிரிலேயே உள்ளது. விநாசம் நிச்சயம் ஆகப் போகிறது. இதுவும் அனைவருக்கும் நிச்சயம் ஏற்பட்டு விடும். ரிஹர்சல் (ஒத்திகை) கூட ஆகிக் கொண்டே இருக்கும். ராஜதானி ஸ்தாபனை ஆகாதவரை விநாசம் ஆகாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். பூகம்பம் ஆகியவை கூட ஏற்படும் அல்லவா? ஒரு புறம் குண்டுகள் வெடிக்கும். மறுபுறம் இயற்கை சேதங்கள் கூட வரும். உணவு தானியங்கள் ஆகியவை கிடைக்காது. கப்பல்கள் வராது. பஞ்சம் ஏற்பட்டு விடும். பசியால் இறந்து இறந்து முடிந்து போய் விடுவார்கள். உண்ணாவிரதம் ஆகியவை மேற்கொள்கிறார்கள் என்றாலும் அவர்கள் பிறகும் கொஞ்சம் கொஞ்சம் நீர் அல்லது தேன் ஆகியவை உட்கொள்கிறார்கள். எடையில் லேசாக ஆகி விடுகிறார்கள். இதுவோ அமர்ந்த இடத்திலேயே திடீரென்று பூகம்பம் ஏற்படும். இறந்து விடுவார்கள். விநாசமோ அவசியம் ஏற்படும். விநாசம் ஆகப் போகிறது, எனவே ராம் ராம் என்று கூறுங்கள்" என்று சாது சந்நியாசி ஆகியோர் கூறமாட்டார்கள். மனிதர்களோ பகவானையே அறியாமல் உள்ளார்கள். பகவானோ சுயம் அவர் தான் அவரைப் பற்றி அறிந்துள்ளார். வேறு யாருக்கும் தெரியாது. அவர் வருவதற்கான குறிப்பிட்ட நேரம் உள்ளது. அப்பொழுது அவர் இந்த வயோதிக சரீரத்தில் வந்து முழு சிருஷ்டியின் முதல் இடை கடை பற்றிய ஞானத்தை கூறுகிறார். இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். இதிலோ மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். நாம் சாந்திதாமம் செல்கிறோம். மனிதர்கள் அமைதி தான் விரும்புகிறார்கள். ஆனால் யார் அமைதியை கொடுக்க முடியும்? சாந்தி தேவா என்று கூறுகிறார்கள் அல்லவா? இப்பொழுது தேவர்களுக்கெல்லாம் தேவனோ ஒரே ஒரு உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஆவார். நான் உங்கள் அனைவரையும் தூய்மை படுத்தி அழைத்துச் செல்வேன் என்று அவர் கூறுகிறார். ஒருவரை கூட விட மாட்டேன். நாடகப்படி அனைவரும் சென்றே ஆக வேண்டும். கொசுக் கூட்டம் போல அனைத்து ஆத்மாக்களும் செல்கிறார்கள் என்று பாடப் பட்டுள்ளது. சத்யுகத்தில் மிகவும் குறைவான மனிதர்கள் இருப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளீர் கள். இப்பொழுது கலியுகக் கடைசியில் எத்தனை ஏராளமான மனிதர்கள் உள்ளார்கள். பிறகு எப்படி குறைந்து போவார்கள்? இப்பொழுது இருப்பது சங்கமம். நீங்கள் சத்யுகம் செல்வதற்காக (புருஷார்த்தம்) முயற்சி செய்கிறீர்கள். விநாசம் ஆகும் என்பதை அறிந்துள்ளீர் கள். கொசுக்களைப் போல ஆத்மாக்கள் செல்வார்கள். முழு கூட்டமே சென்று விடும். சத்யுகத்தில் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள் என்று தந்தை கூறுகிறார். பார்த்தும் நாம் பார்ப்பதில்லை. நாம் ஆத்மாக்கள்,. நாம் நமது வீட்டிற்கு செல்வோம். குஷியுடன் பழைய சரீரத்தை விட்டு விட வேண்டும். தங்களது சாந்தி தாமத்தை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் அந்த் மதி சோ கதி (இறுதியில் புத்தி எப்படியோ அப்படியே கதி) ஆகி விடும். ஒரு தந்தையை நினைவு செய்வது. இதில் உழைப்பு உள்ளது. உழைப்பின்றி உயர்ந்த பதவி கிடைக்குமா என்ன? தந்தை வருவதே உங்களை நரனிலிருந்து நாராயணராக ஆக்குவதற்கு. இப்பொழுது இந்த பழைய உலகத்தில் எந்த நிம்மதியும் இல்லை. அமைதி இருப்பதே சாந்திதாமம் மற்றும் சுக தாமத்தில். இங்கோ வீட்டிற்கு வீடு அசாந்திதான் உள்ளது. அடிதடி உள்ளது. இப்பொழுது இந்த சீ - சீ உலகத்தை மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நான் உங்களுக்காக சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்ய வந்துள்ளேன். இந்த நரகத்தில் நீங்கள் பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி உள்ளீர்கள். இப்பொழுது சொர்க்கத் திற்குச் செல்ல வேண்டும். இப்பொழுது தந்தை மற்றும் சொர்க்கத்தை நினைவு செய்தீர்கள் என்றால் (அந்த் மதி சோ கதி) இறுதிகாலத்தில் புத்தி எவ்வாறோ அவ்வாறே கதி ஆகி விடும். திருமணம் ஆகியவற்றிற்குத் தாராளமாகச் செல்லுங்கள். ஆனால் நினைவு தந்தையை செய்யுங்கள். முழு ஞானமும் புத்தியில் இருக்க வேண்டும். தாரளமாக வீட்டில் இருங்கள். குழந்தைகள் ஆகியோரை பராமரியுங்கள். ஆனால் என்னை நினைவு செய்யுங்கள் என்பது பாபாவின் கட்டளை ஆகும் என்பதை புத்தியில் நினைவு கொள்ளுங்கள். வீட்டை விட வேண்டியது இல்லை. இல்லையென்றால், குழந்தை களை யார் பராமரிப்பார்கள். பக்தர்கள் வீட்டில் இருக்கிறார் கள். இல்லறத்தில் இருக்கிறார்கள். பிறகும் பக்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏனெனில் பக்தி செய்கிறார்கள். வீடு வாசல் பராமரிக்கிறார்கள். விகாரத்தில் செல்கிறார்கள். இருப்பினும் குருமார்கள் கிருஷ்ணரை நினைவு செய்யுங்கள். அப்பொழுது அவரைப் போல குழந்தை பிறகும் என்று அவர்களுக்குக் கூறுகிறார்கள், இந்த விஷயங்களில் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில் உங்களுக்கு இப்பொழுது சத்யுகத்திற்குச் செல்வதற்கான விஷயங்கள் கூறப்படுகின்றன. அந்த சத்யுகத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. வைகுண்டத்தின் ஸ்தாபனை ஒன்றும் கிருஷ்ணர் செய்வதில்லை. கிருஷ்ணரோ அதிபதி ஆகி இருந்தார். தந்தை யிடமிருந்து ஆஸ்தி அடைந்திருந்தார். சங்கமத்தின் நேரத்தில் தான் கீதையின் பகவான் வருகிறார். கிருஷ்ணரை பகவான் என்று கூற மாட்டார்கள். இவரோ படிப்பவராக இருந்தார். கீதையைக் கூறியவர் தந்தை மற்றும் கேட்பவர் குழந்தை ஆவார். பக்தி மார்க்கத்தில் பிறகு தந்தைக்குப் பதிலாக குழந்தையின் பெயரை போட்டு விட்டுள்ளார்கள். தந்தையை மறந்து விட்டுள்ளார்கள். எனவே கீதையும் குறையுள்ளதாக ஆகி விட்டது. அந்த குறையுள்ள கீதையைப் படிப்பதால் என்ன ஆகும்? தந்தையோ இராஜயோகம் கற்பித்துச் சென்றார். அதன் மூலம் கிருஷ்ணர் சத்யுகத்தின் அதிபதி ஆனார். பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணரின் கதை கேட்பதால் யாராவது சொர்க்கத்தின் அதிபதி ஆவார்களா என்ன? யாருமே இந்த சிந்தனையுடன் கேட்பதும் இல்லை. அதனால் எந்த லாபமும் கிடைப்பதில்லை. சாது சந்நியாசிகள் ஆகியோர் அவரவர் மந்திரத்தைக் கொடுக்கிறார்கள். அவர்களது போட்டோ கொடுக்கிறார்கள். இங்கு அந்த விஷயம் எதுவும் கிடையாது. மற்ற சத்சங்கங்களுக்கு சென்றார்கள் என்றால் அங்கு குறிப்பிட்ட இந்த சுவாமியின் கதை இருக்கிறது என்பார்கள். யாருடைய கதை? வேதாந்தத்தின் கதை, கீதையின் கதை, பாகவதத்தின் கதை. நமக்கு கற்ப்பிப்பவர் யாரும் தேகதாரி கிடையாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்துள்ளீர்கள். அவர் சாஸ்திரம் ஆகியவை ஒன்றும் படித்தவரும் அல்ல. சிவபாபா ஏதாவது சாஸ்திரம் படித்திருக்கிறாரா என்ன? மனிதர்கள் படிக் கிறார்கள். சிவபாபா கூறுகிறார், நான் கீதை ஆகியவை எதுவுமே படித்தது இல்லை. எந்த ரதத்தில் நான் அமர்ந்துள்ளேனோ அவர் படித்திருக்கிறார். நான் படித்தது இல்லை. எனக்குள்ளோ முழு சிருஷ்டி சக்கரத்தின் முதல் இடை கடை பற்றிய ஞானம் உள்ளது. இவர் தினமும் கீதை படித்துக் கொண்டிருந்தார். கிளிப்பிள்ளை போல மனப்பாடம் செய்து கொண்டிருந்தார். தந்தை எப்பொழுது பிரவேசம் செய்தாரோ பின் சட்டென்று உடனே கீதையை விட்டு விட்டார். ஏனெனில் இதுவோ சிவபாபா கூறுகிறார் என்பது புத்தியில் வந்து விட்டது.

நான் உங்களுக்கு சொர்க்கத்தின் அரசாட்சி அளிக்கிறேன். எனவே இப்பொழுது பழைய உலகத்தின் மீதுள்ள பற்றை நீக்கி விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். என் ஒருவனை மட்டும் நினைவு செய்யுங்கள். இந்த உழைப்பு செய்ய வேண்டும். உண்மையான பிரியதரிசினிக்கு அடிக்கடி பிரிய தரிசனின் நினைவு தான் வந்து கொண்டே இருக்கும். எனவே இப்பொழுது தந்தையின் நினைவு கூட அதே போல உறுதியாக இருக்க வேண்டும். குழந்தை களே என்னை நினைவு செய்யுங்கள், சொர்க்கத்தின் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள் என்று பரலோகத் தந்தை கூறுகிறார். இதில் வேறு எதுவும் ஒலி எழுப்பவும், வாத்தியம் ஆகியவை இசைக்கவும் அவசியமும் கிடையாது. பாடல்கள் கூட ஒரு சில நல்ல நல்ல பாடல்கள் இருந்தால், அவை பாடப்படுகின்றன. அவற்றினுடைய பொருள் கூட உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. சுயம் பாடல் தயாரிப்பவர் கள் எதுவுமே அறியாமல் உள்ளார்கள். மீரா பக்தையாக இருந்தார். நீங்களோ இப்பொழுது ஞானி ஆவீர்கள். குழந்தைகள் மூலமாக ஏதாவது காரியம் சரியாக நடக்கவில்லை என்றால் நீங்களோ பக்தர்கள் போல ஆகிவிடுவீர்கள் என்று பாபா கூறுவார். ஆக பாபா நமக்கு இவ்வாறு ஏன் கூறினார் என்று அவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். குழந்தைகளே ! இப்பொழுது தந்தையை நினைவு செய்யுங்கள். தூதர் (மெஸஞ்ஜர்) ஆகுங்கள், என்று தந்தை புரிய வைக்கிறார். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள்.அப்பொழுது பல பிறவிகளின் பாவங்கள் சாம்பலாகி விடும் என்ற இதே செய்தியை அனைவருக்கும் கொடுங்கள். இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நேரம் ஆகும். பகவான் ஒருவர் மட்டும் நிராகாரமானவர் ஆவார். அவருக்கு தனக் கென்று தேகம் இல்லை. தந்தை தான் அமர்ந்து தனது அறிமுகத்தை அளிக்கிறார். மன்மனாபவ என்ற மந்திரத்தை அளிக்கிறார். இப்பொழுது விநாசம் ஆகப் போகிறது. தந்தையை நினைவு செய்யுங்கள் என்று சாது சந்நியாசிகள் ஆகியோர் ஒரு பொழுதும் கூற மாட்டார்கள். தந்தை தான் பிராமண குழந்தைகளுக்கு நினைவூட்டுகிறார். நினைவினால் ஹெல்த் (ஆரோக்கியம்) படிப்பினால் வெல்த் (செல்வம்) கிடைக்கும். நீங்கள் காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். அங்கு ஒருபொழுதும் அகால மரணம் ஆவதில்லை. தேவதைகள் காலன் மீது வெற்றி அடைந்தவர்களாக இருப்பார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை மூலமாக பக்தர் என்ற பட்டம் (டைட்டில்) கிடைக்கும் வகையிலான எந்த செயலும் செய்யக் கூடாது. தூதர் ஆகி அனைவருக்கும் தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதற்கான செய்தியை அளிக்க வேண்டும்.

2. இந்த பழைய உலகத்தில் எந்த நிம்மதியும் இல்லை. இது சீ - சீ உலகம் ஆகும். இதை மறந்து கொண்டே செல்ல வேண்டும். வீட்டின் நினைவினுடன் கூடவே தூய்மை ஆவதற்காக தந்தையையும் அவசியம் நினைவு செய்ய வேண்டும்.

வரதானம்:
இல்லறத்தில் இருந்தாலும் விடுபட்ட உணர்வில் இருக்கும் நிரந்தர யோகி ஆகுக

நிரந்தர யோகி ஆவதற்கான எளிய விதி - இல்லறத்தில் இருந்தாலும் விடுபட்ட விருத்தியில் இருக்கவேண்டும். விடுபட்ட விருத்தி என்றால் ஆத்மீக ரூபமாகும். யார் ஆத்மீக ரூபத்தில் நிலைத் திருக்கின்றார்களோ அவர்கள் சதா விடுபட்ட மற்றும் பாபாவிற்கு அன்பானவர் ஆகிறார்கள். என்ன செய்தாலும், விளையாடினேன்...செய்யவில்லை என்ற அனுபவம் செய்வார்கள். எனவே இல்லறத் தில் இருந்தாலும் ஆத்மீக ரூபத்தில் இருப்பதால் அனைத்தும் விளையாட்டு போன்று சகஜமாக அனுபவம் ஆகும். பந்தனமாக தோன்றாது. அன்பு மற்றும் சகயோகத்துடன் சக்தியை மட்டும் சேருங்கள், உயரம் தாண்டிச்(ஹை ஜம்ப்) செல்லமுடியும்.

சுலோகன்:
புத்தியின் ஆழம் மற்றும் ஆத்மாவின் இலேசான தன்மை தான் பிராமண வாழ்வின் சிறப்பியல்பாகும்.

அவ்யக்த பிரேரணை - சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை தனதாக்குங்கள்

தைரிய சக்தி இருந்தால் சர்வசக்திவானின் உதவி கிடைக்கும். பெண் சிங்கம் ஒருபொழுது யாருக்கும் பயப்படாது, பயமற்று இருக்கும். என்னவாகும் தெரியாது என்ற பயமும் இருக்காது. சத்திய சக்தியின் சொரூபத்தில் இருந்து கொண்டு போதையில் பேசுங்கள், பாருங்கள். நாம் சர்வ சக்திவானின் அரசாங்கத்தின் அனுசாரம் செல்பவர்கள், இந்த நினைவினால் யதார்த்தமற்றதை யதார்த்தத்தில் கொண்டு வாருங்கள். சத்தியத்தை வெளிப்படுத்த வேண்டும், மறைக்கக்கூடாது, ஆனால் சத்தியத்தின் கூடவே இனிமை மற்றும் பண்பாடு அவசியம் இருக்க வேண்டும்.