27-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! பாபாவிற்கு சமமாக இரக்க மனமுடையவராகவும், கல்யாணகாரியாகவும் ஆகுங்கள். தானும் முயற்சி செய்து பிறரையும் முயற்சி செய்ய வைப்பவர்களே புத்திசாலிகளாவர்.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய படிப்பினால் எதை சோதிக்க முடியும்? உங்களுடைய முயற்சி என்ன?

பதில்:
நாம் உயர்ந்த நடிப்பை நடிக்கிறோமா, நடுத்தரமாக (சாதாரண) நடிக்கிறோமா அல்லது கீழான நடிப்பை நடிக்கிறோமா என்பதை படிப்பின் மூலம் சோதிக்க முடியும். யார் பிறரையும் உத்தமமாக மாற்றுகிறார்களோ அதாவது சேவையின் மூலமாக பிராமணர்களை முன்னேற்ற மடையச் செய்கிறார்களோ அவர்களுடைய நடிப்பே அனைவரையும் விட உயர்ந்தது. பழைய செருப்பை கழற்றி புதிய செருப்பை அடைவதே உங்களுடைய முயற்சி. ஆத்மா தூய்மையாகும் போது புதிய தூய்மையான செருப்பு (உடல்) கிடைக்கும்.

ஓம் சாந்தி.
குழந்தைகள் இரண்டு விதமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் நினைவு யாத்திரையினால் சம்பாதிக்கின்றார்கள் மற்றொரு பக்கம் 84 பிறவி சக்கரத்தின் ஞானத்தை நினைவு செய்து சம்பாதிக்கின்றார்கள். இதற்கு தான் டபுள் வருமானம் எனக்கூறலாம். அறியாமைக் காலத்தில் சிறிது காலத்திற்கான ஒரு வருமானம் கிடைத்தது. உங்களுடைய இந்த நினைவு யாத்திரையின் வருமானம் மிகவும் பெரியது. ஆயுளும் அதிகரிக்கிறது, தூய்மையாகவும் மாறுகிறீர்கள். அனைத்து துக்கத்திலிருந்தும் விடுபடுகிறீர்கள். மிகவும் பெரிய வருமானம். சத்யுகத்தில் ஆயுள் கூட நீண்டதாக இருக்கிறது. துக்கத்தின் பெயரே இல்லை, ஏனென்றால் அங்கே இராவண இராஜ்ஜியம் இல்லை. அஞ்ஞான காலத்தில் படிப்பினுடைய அல்பக்கால சுகம் இருந்தது மேலும் படிப்பினுடைய சுகம், சாஸ்திரங்களைப் படிப்பவர்களுக்குக் கிடைத்தது. அவர்களை பின்பற்றுபவர்களுக்கு எந்த பயனும் இல்லை. பின்பற்றுபவர்கள் என்றே கூறமுடியாது. ஏனென்றால் அவர்கள் உடை போன்றவைகளை மாற்றுவதும் இல்லை. வீடு, வாசலை துறப்பதும் இல்லை. அவர்களை பின்பற்றுபவர்கள் என்று கூறமுடியாது. அங்கே (புதிய உலகம்) அமைதி, தூய்மை அனைத்தும் இருக்கிறது. இங்கே தூய்மை இல்லாததின் காரணத்தால் ஒவ்வொரு வீட்டிலும் எவ்வளவு அசாந்தி நிலவுகிறது. உங்களுக்கு ஈஸ்வரனுடைய வழி கிடைக்கிறது. இப்போது நீங்கள் தன்னுடைய தந்தையை நினையுங்கள். தன்னை ஈஸ்வரிய கவர்மென்ட் என நினையுங்கள். ஆனால் ரகசியமாக இருக்கிறீர்கள். மனதில் எவ்வளவு குஷி அடைய வேண்டும். இப்போது நாம் ஸ்ரீமத்படி நடிக்கின்றோம். அவருடைய சக்தியினால் சதோபிரதானமாகிக் கொண்டிருக்கின்றோம். இங்கே யாரும் இராஜ்ய பாக்கியத்தை அடைய வேண்டியதில்லை. நம்முடைய இராஜ்ய பாக்கியம் புது உலகில் கிடைக்கிறது. இப்போது அதைப் பற்றி தெரிந்துக் கொள்ளப்படுகிறது. இந்த இலட்சுமி நாராயணனின் 84 பிறவிகளின் கதையை நீங்கள் கூற முடியும். வாருங்கள், நாங்கள் இவர்களுடைய 84 பிறவிகளின் கதையைக் கூறுகின்றோம் என எவ்வளவு படிக்கவைக்கக் கூடியவர்களாக இருந்தாலும், வேறு எத்தகைய மனிதர்களாக இருந்தாலும், யாராலும் கூறமுடியாது. உங்களுடைய புத்தியில் இப்போது நினைவு இருக்கிறது. விச்சார சாகர மந்தனமும் (ஞானத்தை சிந்தனை செய்தல்) செய்கிறீர்கள்.

இப்போது நீங்கள் ஞான சூரியவம்சத்தினர், பிறகு சத்யுகத்தில் விஷ்ணு வம்சம் எனப்படுவீர்கள். ஞான சூரியன் தோன்றியதும்..... இந்த நேரத்தில் உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டிருக் கிறதல்லவா, ஞானத்தினால் தான் சத்கதி கிடைக்கிறது. அரைக் கல்பமாக ஞானம் இருக்கிறது. பிறகு அரைக்கல்பத்திற்கு அஞ்ஞானம் ஆகிவிடுகிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக் கிறது. இப்போது நீங்கள் புத்திசாலி ஆகியிருக்கிறீர்கள். எவ்வளவுக்கெவ்வளவு புத்திசாலி ஆகிறீர்களோ, மற்றவர்களையும் தனக்கு சமமாக மாற்றுவதற்காக முயற்சி செய்வீர்கள். உங்களுடைய தந்தை இரக்க மனமுடையவர், கல்யாணகாரி என்றால் குழந்தைகளும் அவ்வாறு மாறவேண்டும். குழந்தைகள் கல்யாணகாரியாகவில்லை என்றால் அவர்களை என்ன கூறுவார் கள். "தைரியம் உடைய குழந்தைகளுக்கு தந்தையின் உதவி கிடைக்கும் என்றும் பாடப்பட்டிருக் கிறதல்லவா! இவர் (பிரம்மா) கூட நிச்சயம் தேவை. இல்லையென்றால் ஆஸ்தியை எப்படி அடைவீர்கள். சேவைக்கேற்ப ஆஸ்தியை அடைகிறீர்கள். ஈஸ்வரிய மிஷன் அல்லவா! கிறிஷ்துவ மிஷன், இஸ்லாமிய மிஷன் அவர்களுடைய தர்மத்தை வளர்க்கிறார்கள். நீங்கள் உங்களுடைய பிராமண தர்மம் மற்றும் தெய்வீக தர்மத்தை முன்னேற்றமடையச் செய்கிறீர்கள். நாடகத்தின் படி குழந்தைகளாகிய நீங்கள் நிச்சயமாக உதவியாளர் ஆவீர்கள். போன கல்பத்தில் யார் என்ன நடித்தார்களோ அதை நிச்சயம் நடிப்பார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய மேலான, நடுத்தர மான மற்றும் கீழான நடிப்பை நடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரையும் விட மேலான நடிப்பை யார் உயர்ந்தவராக மாற்று கிறார்களோ அவர்கள் நடிக்கிறார்கள். ஆகையால் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுங்கள். மேலும் முதல், இடை, கடை ரகசியத்தை புரிய வையுங்கள். ரிஷி முனிவர்களும் தெரியாது தெரியாது என கூறிவிட்டனர். பிறகு சர்வவியாபி என்றும் கூறிவிட்டனர். வேறு எதையும் அறியவில்லை. நாடகத்தின் படி ஆத்மாவின் புத்தி கூட தமோபிரதானம் ஆகிவிடுகிறது. சரீரத்தின் புத்தி என கூறமாட்டார்கள். ஆத்மாவில் தான் மனம், புத்தி இருக்கிறது. இதை நன்றாகப் புரிந்து கொண்டு பிறகு குழந்தைகள் சிந்திக்க வேண்டும். பிறகு புரியவைக்க வேண்டும்;. அந்த மனிதர்கள் சாஸ்திரங்களைக் கூறுவதற்காக எத்தனை கடைகளை சங்கங்களை உருவாக்கி அமர்ந்திருக்கிறார்கள். உங்களுடைய கடை கூட இருக்கிறது. பெரிய பெரிய நகரங்களில் பெரிய கடை வேண்டும். குழந்தைகள் யார் கூர்மையாக இருப்பார்களோ அவர்களிடம் பொக்கிஷங்கள் நிறைய இருக்கும். இத்தனை பொக்கிஷங்கள் இல்லையென்றால் யாருக்கும் கொடுக்க முடியாது. வரிசைக்கிரமத்தில் தாரணை நிகழ்கிறது. குழந்தைகள் நன்றாக தாரணை செய்தால் தான் யாருக்கு வேண்டுமானாலும் புரியவைக்கலாம். விஷயம் ஒன்றும் பெரியதல்ல, ஒரு நொடியின் விஷயம். பாபாவிடமிருந்து சொத்தை அடைய வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் பாபாவை அறிந்து கொண்டால் எல்லையற்ற அதிபதி ஆகிவிடுவீர்கள். எஜமானர்கள் கூட வரிசைக்கிரமத்தில் இருக்கிறார்கள். ராஜாவும் எஜமானன் என்பார், பிரஜைகள் நாங்களும் எஜமானன் என்பார்கள். இங்கு கூட அனைவரும் எங்களுடைய பாரதம் என்று கூறுகிறார்கள். ஸ்ரீமத்படி நடந்து நாங்கள் எங்களுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறோம் என நீங்களும் கூறுகிறீர்கள். பிறகு சொர்க்கத்திலும் கூட இராஜ்யம் இருக்கிறது. பலவகையான வகுப்புகளும் இருக்கிறது. உயர்ந்த பதவி அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எவ்வளவு இப்போது முயற்சி செய்து பதவி யடைவீர்களோ அதுவே கல்ப கல்பத்திற்கும் கிடைக்கும். தேர்வில் யாராவது குறைந்த மதிப் பெண்களை பெற்றால் மனமுடைந்து விடுகின்றனர். இது எல்லையற்ற விஷயம் முழுமையாக முயற்சி செய்யவில்லை என்றால் மனச்சோர்வும் அடைவார்கள், தண்டனையும் அடைய வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும், எதுவும் முடியாது. ஆத்மா என்ன செய்யும்? அந்த மக்கள் தற்கொலை செய்து கொண்டும், நீரில் மூழ்கியும் இறக்கிறார்கள். இதில் கொலை போன்ற விஷயம் இல்லை. ஆத்மாவை கொல்ல முடியாது. ஆத்மா அழியாதது. சரீர கொலை நடக்கிறது. இதன் மூலமாக நீங்கள் நடிக்கின்றீர்கள். இந்த பழைய செருப்பை கழற்றி புதிய தெய்வீகமான செருப்பை அணிவதற்காக இப்போது நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இதை யார் கூறுகின்றார். ஆத்மா. எங்களுக்கு புதிய உடையை கொடுங்கள் என குழந்தைகள் கூறுகின்றார்கள் அல்லவா! அதுபோல ஆத்மாக்களாகிய நமக்கும் புதிய ஆடை வேண்டும். உங்களுடைய ஆத்மா புதியதாக மாறினால் சரீரம் கூட புதியதாக வேண்டும். அப்போது அழகாக இருக்கும் என பாபா கூறுகின்றார். ஆத்மா தூய்மையாவதால் 5 தத்துவங்கள் கூட புதியதாக மாறுகின்றது. 5 தத்துவங்களால் தான் சரீரம் உண்டாகின்றது. ஆத்மா சதோபிரதானமாகும் போது சரீரமும் சதோபிரதானமாக கிடைக்கிறது. ஆத்மா தமோபிரதானமானால் சரீரமும் தமோபிரதானம் ஆகின்றது. இப்போது முழு உலகின் பொம்மைகளும் (மக்கள்) தமோபிரதானமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகம் பழையதாகிறது. விழுந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு பொருளும் புதியதிலிருந்து பழையதாகின்றது. பழையதானதும் அழிந்துவிடுகிறது. இது முழு சிருஷ்டிக்கும் சவாலாக இருக்கிறது. புதிய உலகத்தை சத்யுகம், பழையதை கலியுகம் என்றும் கூறுப்படுகிறது. மற்றபடி இந்த சங்கமயுகத்தைப் பற்றி யாரும் அறியவில்லை. இந்த பழைய உலகம் மாறுகின்றது என நீங்கள் அறிகிறீர்கள்;.

இப்பொழுது தந்தையாக, ஆசிரியராக, குருவாக இருக்கக்கூடிய எல்லையற்ற தந்தையின் கட்டளை: தூய்மையாகுங்கள் என்பதே. காமம் மிகப்பெரிய எதிரி, அதை வெற்றியடைந்து உலகத்தை வென்றவர் ஆகுங்கள். உலகத்தை வென்றவர் என்றால் விஷ்ணு வம்சத்தினர் -ஆகுங்கள். விஷயம் ஒன்றுதான். இந்த வார்த்தைகளின் பொருளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நம்மை படிக்கவைக்கக்கூடியவர் தந்தை என்பதை குழந்தைகள் அறிந்திருக்கிறீர்கள். முதலில் இதில் உறுதியான நிச்சயம் வேண்டும். குழந்தைகள் பெரியவர்களானதும் தந்தையை நினைக்க வேண்டும். பிறகு ஆசிரியரை, பிறகு குருவை நினைக்க வேண்டும். வெவ்வேறு நேரத்தில் மூவரை யும் நினைப்பார்கள். இங்கேயோ உங்களுக்கு மூவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் கிடைத்திருக் கிறார்கள். அப்பா, ஆசிரியர், குரு ஒருவரே. அந்த மக்கள் வானப்பிரஸ்தம் என்பதன் பொருளையும் அறியவில்லை. வானப்பிரஸ்தத்தில் செல்ல வேண்டும்; ஆகையால் குருவை வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக் கின்றார்கள். 60 வயதிற்குப் பின் குருவிடம் செல்கிறார்கள். இந்த முறை இப்போது தான் ஏற்பட்டிருக்கிறது. இவருடைய பலபிறவிகளின் கடைசியில் வானப்பிரஸ்த நிலையில் இவருடைய சத்குருவாக மாறுகிறேன் என பாபா கூறுகின்றார். 60 வயதிற்குப் பிறகு நிர்வாணதாமத்திற்கு (சப்தத்திற்கு அப்பாற்பட்ட உலகம்) போகக்கூடிய நேரத்தில் குருவை நியமித்துக் கொள்ள வேண்டும் என பாபா கூட கூறுகின்றார். தந்தை வந்திருப்பதே அனைவரை யும் நிர்வாணதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காகத் தான். முக்திதாமத்திற்குச் சென்று பிறகு நடிப்பதற்காக வரவேண்டும். பலர் வானப்பிரஸ்த நிலையை அடைந்ததும் குருவை நியமித்துக் கொள்கின்றனர். இன்றோ சிறிய குழந்தை உருவாகியதும் அவர்களுக்குக் கூட குருவை நியமிக் கிறார்கள். பிறகு குருவிற்கு தட்சணை கிடைக்கும். கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்வதற்காக மடியில் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் யாரும் நிர்வாண தாமத்திற்கு போவதில்லை. இந்த அனைத்து இரகசியங்களையும் பாபா புரியவைக்கின்றார். ஈஸ்வரனுடைய முடிவை ஈஸ்வரன் தான் தெரிவிப்பார். ஆரம்பத்திலிருந்து தெரிவித்துக் கொண்டே வந்துள்ளார். தன்னுடைய முடிவையும் கொடுக்கின்றார். மேலும் சிருஷ்டியினுடைய ஞானத்தையும் கொடுக் கின்றார். ஈஸ்வர், தானே வந்து ஆதிசனாதன தேவி தேவதா அதாவது சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். இதனுடைய பெயர் பாரதம் என அழைக்கப்பட்டு வருகிறது. கீதையில் கிருஷ்ணருடைய பெயரை மட்டும் போட்டு விட்டதால் எவ்வளவு சண்டை, சச்சரவு ஆகிவிட்டது. இதுவும் நாடகம். வெற்றி தோல்வியின் விளையாட்டு, இதில் வெற்றி தோல்வி எப்படி ஏற்படுகிறது என்பதை பாபாவைத் தவிர வேறு யாரும் கூறமுடியாது. இந்த இலட்சுமி நாராயணன் கூட நாம் பிறகு தோல்வி அடைவோம் என்பதை அறியவில்லை. பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் இதை அறிகிறீர்கள். சூத்திரர்களும் அறியவில்லை. பாபாதான் வந்து உங்களை பிராமணனிலிருந்து தேவதையாக மாற்றுகிறார். நாமே அது என்பதன் பொருள் முற்றிலும் தனி. ஓம் என்பதன் பொருள் தனிப்பட்டிருக்கிறது. மனிதர்களோ பொருள் புரியாமல் வாயில் எது வந்ததோ அதைக் கூறுகின்றார்கள். இப்போது நாம் எப்படி கீழே விழுந்தோம், எப்படி ஏறுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஞானம் இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு கிடைக்கிறது. நாடகத்தின் படி மீண்டும் அடுத்த கல்பத்தில் தான் பாபா வந்து தெரிவிப்பார். தர்ம ஸ்தாபனையாளர்கள் வந்து அவர்களின் தர்மத்தை அவர்களுடைய நேரத்தில் ஸ்தாபனை செய்வார்கள். வரிசைக்கிரமத்தில் முயற்சிக்கு ஏற்ப என்று கூறமுடியாது. வரிசைக்கிரமத்தில் நேரத்திற்கு ஏற்ப அவர்கள் வந்து அவரவர் தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார்கள். நான் எப்படி பிராமணன், சூரியவம்சி, சந்திரவம்சி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறேன் என்பதை ஒரு பாபா தான் புரியவைக்கின்றார். இப்போது நீங்கள்தான் ஞான சூரிய வம்சத்தினர். பிறகு விஷ்ணு வம்சத்தினராக மாறுகின்றீர்கள். வார்த்தை களை மிகவும் கவனமாக எழுதவேண்டும். எந்த தவறும் ஏற்பட்டுவிடக் கூடாது.

இந்த ஞானத்தின் ஒவ்வொரு மகாவாக்கியமும் ரத்தினம், வைரம் போன்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழந்தைகளுக்குப் புரியவைப்பதற்கு மிகவும் தெளிவு வேண்டும். ஏதாவது வார்த்தை தவறாக வெளிப்பட்டு விட்டால் உடனே சரி செய்து புரியவைக்க வேண்டும். அனைத்தையும் விட மிகப்பெரிய தவறு பாபாவை மறப்பது. என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கட்டளையிடு கின்றார். இதை மறக்க வேண்டாம். நீங்கள் மிகவும் பழைய பிரியதர்ஷினிகள் என பாபா கூறுகின்றார். அனைத்து மணப்பெண்களுக்கும் ஒரே ஒரு மணவாளன் தான். அவர்களோ ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து பிரியதர்சன், பிரியதர்ஷினி ஆகின்றார்கள். இங்கு ஒருவரே பிரியதர்சன். அவர் ஒருவர் எத்தனை பிரியதர்சனிகளை நினைவு செய்வார்; பலர் ஒருவரை நினைவு செய்வது எளிது. ஒருவர் எப்படி பலரை நினைவு செய்வார். பாபா நாங்கள் உங்களை நினைவு செய்கிறோம். நீங்கள் எங்களை நினைவு செய்கிறீர்களா? என பாபாவை கேட்கிறார்கள். அட! நீங்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாவதற்காக என்னை நினைக்க வேண்டும். நான் என்ன தூய்மையற்ற நிலையிலா இருக்கின்றேன் நினைப்பதற்கு. உங்களுடைய வேலை தான் நினைவு செய்வது, ஏனென்றால் தூய்மையானவர்களாக மாறவேண்டும். யார் எவ்வளவு நினைக்கின்றீர்களோ, நன்றாக சேவை செய்கிறீர்களோ அவர்களுக்கு தாரணையும் ஆகின்றது. நினைவு யாத்திரை மிகவும் கடினமானது, இதில் யுத்தம் நடக்கின்றது. மற்றபடி 84 சக்கரங்களை நீங்கள் மறந்து வீடுவீர்கள் என்பதல்ல. இந்த காது தங்கபாத்திரமாக வேண்டும். எவ்வளவு நினைக் கிறீர்களோ அவ்வளவு நன்றாக தாரணையாகும். இதில் சக்தி வரும். ஆகையால் தான் நினை வினுடைய கூர்மை வேண்டும் என்று கூறுகிறார்கள். ஞானத்தினால் வருமானம் இருக்கிறது. நினைவினால் அனைத்து சக்திகளும் வரிசைக்கிரமத்தில் கிடைக்கிறது. வாள்களில் கூட வரிசைக் கிரமத்தில் கூர்மைக்கு ஏற்ப வித்தியாசம் இருக்கிறது. அதுவோ ஸ்தூல விஷயம். முக்கியமான விஷயம் தந்தை ஒருவர்தான் கூறுகின்றார் - தந்தையை நினையுங்கள்; உலகத்தின் அழிவிற்காக இந்த ஒரு அணுகுண்டு போதும் வேறு எதுவும் தேவை யில்லை. அதில் சேனையும் வேண்டாம், கேப்டனும் வேண்டாம். இன்றோ எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டே அணுகுண்டை போடும் அளவிற்கு அணுகுண்டை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் இங்கே அமர்ந்த படியே இராஜ்யத்தை அடைகிறீர்கள். அவர்கள் அங்கே அமர்ந்த படியே அனைத்தையும் வினாசம் செய்து விடுவார்கள். உங்களுடைய ஞானம் மற்றும் யோகம், அவர்களுடைய மரணத்திற்கான பொருட் களும் சமமாகிவிடுகிறது. இதுவும் விளையாட்டு. அனைவரும் நடிகர்கள் தானே. பக்திமார்க்கம் முடிவடைந்ததும் தந்தையே வந்து தன்னைப்பற்றியும், படைப்பினுடைய முதல், இடை, கடையைப் பற்றியும் அறிமுகம் கொடுக்கின்றார். இப்போது பாபா கூறுகின்றார் வீண் விஷயங்களை நீங்கள் கேட்காதீர்கள். ஆகையால் கெட்டதை கேட்காதீர்கள். இவர்களுடைய சித்திரம் உருவாக்கப் பட்டிருக்கிறது. முன்பு குரங்கினுடைய சித்திரத்தை செய்தார்கள். இப்போது மனிதர்களுடைய சித்திரத்தை செய்கிறார்கள். ஏனென்றால் முகம் மனிதனைப் போலவும் நடத்தை குரங்கைப் போலவும் இருப்பதால் ஒப்பிடுகிறார்கள். இப்போது நீங்கள் யாருடைய சேனை. சிவதந்தை யினுடைய சேனை. குரங்கிலிருந்து நீங்கள் கோவிலில் அமரும் அளவிற்கு தகுதியடைந்து கொண்டிருக்கிறீர்கள். எங்கே நடந்த விஷயத்தை எங்கே கொண்டுவந்து விட்டார்கள். குரங்கு ஏதாவது பாலத்தை கட்ட முடியுமா! இவை அனைத்தும் வீண் கதைகள். எப்போதாவது யாராவது சாஸ்திரங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா எனக் கேட்டால் ஆஹா சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார் இருப்பார்கள் எனக்கூறுங்கள். நாங்கள் அனைவரையும் விட அதிகமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் எவ்வளவு படிக்கிறோமோ அவ்வளவு நீங்கள் படிக்க மாட்டீர்கள். அரைக்கல்பமாக நாங்கள் படித்திருக்கிறோம். சொர்க்கத்தில் சாஸ்திரம், பக்தி எதுவும் இருக்காது. எவ்வளவு எளிமையாக பாபா புரியவைக்கின்றார். இருப்பினும் தனக்குச் சமமாக மாற்ற முடிவதில்லை. குழந்தைகள் பந்தனத்தின் காரணமாக எங்கேயும் செல்ல முடியாது. இதையும் நாடகம் என்றே கூறுவார்கள். வாரத்தில், 15 நாட்களில் வகுப்பு எடுத்து பிறகு தனக்குச் சமமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என பாபா கூறுகின்றார். எங்கெங்கு பெரிய பெரிய நகரங்கள், தலை நகரங்கள் இருக்கிறதோ அங்கே சுற்றி வளையம் வந்தால் அவர்களின் ஒலி எழும்பும். பெரிய மனிதர்கள் இல்லாமல் மற்றவர்களின் ஒலி எழும்பாது. சக்தியுடன் சுற்றி வந்தால் பலர் வருவார்கள். பாபாவினுடைய கட்டளை கிடைக்கிறதல்லவா! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஞானம் மற்றும் யோகத்தால் தன்னுடைய புத்தியை சுத்திகரித்துக் கொள்ள வேண்டும். தந்தையை மறக்கக் கூடிய தவறு ஒருபோதும் செய்யக்கூடாது. பிரியதர்ஷனியாகி, பிரியதர்ஷனை நினைக்க வேண்டும்.

2. பந்தனத்திலிருந்து விடுபட்டு தனக்குச் சமமாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும். உயர்ந்த பதவி அடைவதற்காக முயற்சி செய்ய வேண்டும். முயற்சியில் ஒருபோதும் மனச்சோர்வு அடையக் கூடாது.

வரதானம்:
ஒரு நிமிடத்தில் ஒருமுகப்பட்ட ஸ்திதி மூலம் சக்திசாலியாக அனுபவம் செய்யக்கூடிய, செய்விக்கக்கூடிய ஏகாந்தவாசி ஆகுக.

ஏகாந்தவாசி ஆவது என்றால் ஏதாவதொரு சக்திசாலி ஸ்திதியில் நிலைத்திருப்பது. விரும்பும்பொழுது விதைரூப ஸ்திதியில் நிலைத்துவிடுங்கள், விரும்பும்பொழுது லைட் மைட் ஹவுஸ் (ஒளி மற்றும் சக்தி) ஸ்திதியில் நிலைத்திருந்து உலகத்திற்கு ஒளி மற்றும் சக்தியைக் கொடுங்கள், விரும்பும்பொழுது ஃபரிஷ்தா ஸ்திதி மூலம் பிறருக்கும் அவ்யக்த ஸ்திதியின் அனுபவத்தை செய்வித்திடுங்கள். ஒரு நொடி அல்லது ஒரு நிமிடமாவது ஒருவேளை இந்த ஸ்திதியில் ஒருமுகமாகி நிலைத்திருந்தீர்கள் என்றால் சுயத்திற்கும் மற்றும் பிற ஆத்மாக் களுக்கும் மிகுந்த இலாபத்தை ஏற்படுத்த முடியும். இதனுடைய பயிற்சி மட்டும் வேண்டும்.

சுலோகன்:
யாருடைய ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு வார்த்தையில் தூய்மையினுடைய அதிர்வலைகள் நிறைந்திருக்கிறதோ, அவர்களே பிரம்மாச்சாரி ஆவார்கள்