27.10.24 காலை முரளி
ஓம் சாந்தி 08.10.2002 பாப்தாதா,
மதுபன்
ஆன்மிக அன்பின் மூர்த்தியாகி கல்வி மற்றும் ஒத்துழைப்பை இணைத்து
கொடுங்கள் (விசேஷமாக மதுபன் நிவாசி சகோதர சகோதரிகளுடன்
சந்திப்பு)
இன்று அன்புக்கடல் பாப்தாதா தன்னுடைய மாஸ்டர் ஞானக்கடல்
குழந்தைகளுடன் சந்திப்பை கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்த பரமாத்ம அன்பே குழந்தைகளுடைய பாலனைக்கான ஆதாரம் ஆகும்.
எவ்வாறு பரமாத்ம அன்பு பிராமண வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளதோ,
அதுபோன்றே பிராமண குழுவின் ஆதாரம் ஆன்மிக அன்பு ஆகும். இந்த
ஆன்மிக அன்பை குழந்தைகளாகிய நீங்கள் தான் அனுபவம் செய்ய
முடியும். தற்கால விஷ்வத்தின் ஆத்மாக்கள் இந்த உண்மையான,
சுயநலமற்ற ஆன்மிக பரமாத்ம அன்பிற்காக தாகத்துடன் உள்ளனர்.
அப்பேற்பட்ட உண்மையான அன்பானது பிராமண ஆத்மாக்களாகிய உங்களைத்
தவிர எவருக்கும் கிடைக்க முடியாது. தாகமான ஆத்மாக்களின்
தாகத்தைத் தணிக்கக்கூடிய வர்கள் தங்களை ஒவ்வொரு சமயமும்
பரமாத்ம அன்பு மற்றும் ஆன்மிக அன்பில் மூழ்கி இருப்பதாக அனுபவம்
செய்கின்றீர்களா? அன்பை வழங்கும் வள்ளலாக அல்லது தேவதையாக சதா
இருக்கின்றீர்களா? போகும்போதும், வரும்போதும் ஆன்மிக அன்பு
நிறைந்த விருத்தி, திருஷ்டி, பேச்சு, சம்பந்தம்-தொடர்பு அதாவது
கர்மத்தை அனுபவம் செய்கின்றீர்களா? எப்பேற் பட்ட ஆத்மாவாக
நீங்கள் இருப்பினும் பிராமணர்களாகிய உங்களுடைய இயல்பான விருத்தி,
பிராமண சுபாவம் (நேச்சர்) உருவாகிவிட்டதா? உருவாக்க வேண்டுமா
அல்லது உருவாகி விட்டதா? தந்தையை பின்பற்றுங்கள், தாயை
பின்பற்றுங்கள். தனது பிராமண பிறவியின் ஆதி சமயத்தை நினைவு
செய்யுங்கள். வெவ்வேறு இயல்புடையவர்கள் தந்தையினுடையவர்கள்
ஆனார்கள். அன்புக் கடலான தந்தை, ஒரே ஒரு அன்புக் கடல் என்ற
சொரூபத்தின் அனாதி சுபாவத்தால் தன்னுடையவர் ஆக்கிவிட்டார்
அல்லவா. ஒருவேளை உங்கள் அனைவருடைய வெவ்வேறு சுபாவத்தைப்
பார்த்திருந்தால் தன்னுடையவர் ஆக்கி இருக்கமுடியுமா? எனவே,
என்னுடைய இயல்பான சுபாவம் என்ன? என்று தன்னிடம் கேளுங்கள்.
சிலருக்கு பலவீனமான சுபாவம் உள்ளது உண்மையில் பிராமண
வாழ்க்கையின் இயற்கையான சுபாவம் மாஸ்டர் அன்புக் கடல்
என்பதாகும். அன்பானது கல்லையும் தண்ணீர் ஆக்கிவிடுகிறது என்று
உலகத் தினரே கூறுகின்றனர் என்றால் ஆன்மிக அன்பு, பரமாத்ம
அன்பைப் பெற்று கொடுக்கக் கூடியவர்கள், வெவ்வேறு சுபாவத்தை
மாற்ற முடியாதா? முடியுமா? அல்லது முடியாதா? பின்னால்
இருப்பவர்கள் கூறுங்கள். செய்யமுடியும் என்று யார்
நினைக்கின்றீர்களோ, அவர்கள் ஒரு கை உயர்த்துங்கள். (அனைவரும்
கையை உயர்த்தினார்கள்) நல்லது, வாழ்த்துக்கள்! பிறகு,
சூழ்நிலைகள் வருகின்றன, சூழ்நிலைகள் வரத்தான் செய்யும். அவை
பிராமண வாழ்க்கையின் சாலையோரக் காட்சிகள் ஆகும். மேலும்,
சாலையோரக் காட்சி ஒருபோதும் ஒரே மாதிரி இருக்காது. சில
அழகாகவும் இருக்கும், சில அசுத்தமாகவும் இருக்கும். ஆனால்,
கடந்து செல்வது பயணிகள் வேலையாகும், சாலையோரக் காட்சி
மாற்றமடைவதற்கான விசயம் அல்ல. எனவே, பாப்தாதா என்ன விரும்பு
கின்றார்கள்? அனைத்தையும் தெரிந்து கொள்வதில் புத்திசாலி
ஆகிவிட்டீர்கள் அல்லவா!
இன்று மதுபன் நிவாசிகளுக்கு விசேஷமாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
பொன்னான வாய்ப்பு அல்லவா. நல்லது. இந்த பொன்னான வாய்ப்புக்கான
கைம்மாறு (ரிட்டர்ன்) என்ன? மிகுந்த ஊக்கம், உற்சாகத்துடன்
வாய்ப்பை எடுத்துள்ளீர்கள். கீழே இருப்பவர்களும் கூட மதுபன்
நிவாசிகள் தான். (மதுபன் நிவாசி சகோதரர்கள், சகோதரிகளைத் தவிர
மற்ற அனைவரும் பாண்டவ பவனில் முரளி கேட்டுக் கொண்டு
இருக்கின்றார்கள்) ஆனால், இன்று ஒவ்வொரு குழுவாக
சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்தனை பேரும் ஒன்று
சேர்ந்தால் துôர துôரமாக ஆகிவிடுவீர்கள், ஆகையினால், கொஞ்சம்
கொஞ்சம் பேர் கொண்ட குழுவாக பிரிக்கப் பட்டுள்ளது. மற்றபடி,
அனைவரும் மதுபன் நிவாசிகளே ஆவீர்கள். சென்டரில் இருப்பவர்
களுக்கும் கூட நிரந்தர முகவரி மதுபனே ஆகும் அல்லவா, பிராமணர்
என்றாலே அவர் களுக்கான நிரந்தர முகவரி மதுபன் ஆகும். மதுபன்
வீடு ஆகும், மற்றவை சேவை ஸ்தானம் ஆகும். ஆகையினால், இன்று
எங்களை மதுபன் நிவாசிகளில் இருந்து விலக்கிவிட்டார்கள் என்று
கீழே இருப்பவர்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் அனைவரும் மதுபன்
நிவாசிகளே. உங்களை மட்டும் முன்னால் பார்ப்பதற்கு பாப்தாதா
விரும்புகின்றார்கள். சிறிய குழுவில் பார்க்க முடிகிறது.
இப்பொழுது கூட பாருங்கள், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் கூட
அந்தளவு தெளிவாகத் தெரியவில்லை, அருகில் அமர்ந்திருப்பவர்கள்
தெளிவாகத் தெரிகின்றனர். ஆனால், பின்னால் உள்ளவர்கள் உள்ளத்தில்
இருந்து துôரமாக இல்லை. கீழே உள்ளவர்களும் உள்ளத்தில் இருந்து
துôரமாக இல்லை. நிகழ்கால சமயத்தின் அனுசாரம் அன்பு மற்றும்
சட்டம் (லவ் மற்றும் லா) - இவற்றின் சமநிலை வைக்கவேண்டும்
என்பதையே பாப்தாதா விரும்பு கின்றார்கள். ஆனால், சட்டம் மற்றும்
அன்பை சமம் ஆக்கிக்கொண்டு சட்டத்தை மட்டும் எடுக்கக்கூடாது.
சட்டத்திலும் கூட அன்பின் உணர்வு இருக்க வேண்டும். சாகார
சொரூபத்தில் தந்தையை பார்த்து இருக்கின்றீர்கள். சட்டத்தின்
கூடவே அன்பை அவ்வளவு கொடுத்தார், ஒவ்வொருவரின் வாயிலிருந்தும்
பாபாவிற்கு என் மீது அன்பு உள்ளது, என்னுடைய பாபா என்பதுவே
வெளிப்பட்டது. சட்டத்தை அவசியம் எடுங்கள், ஆனால், சட்டத்தின்
கூடவே அன்பையும் கொடுங்கள். சட்டத்தை மட்டும் உபயோகிக்கக்கூடாது.
சட்டத்தை மட்டும் பயன் படுத்துவதால் ஆங்காங்கே ஆத்மாக்கள்
பலவீனமாக இருக்கும் காரணத்தால் மனம் உடைந்து போய்விடுகின்றனர்.
எப்பொழுது சுயம் ஆன்மிக அன்பின் மூர்த்தி ஆகுவீர்களோ, அப்பொழுது
பிறருடைய அன்பினுடைய, (ஆன்மிக அன்பு, பிற அன்பு அல்ல) ஆன்மிக
அன்பு என்றால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில் சகயோகி
ஆகுவது என்பதாகும். கல்வி(அறிவுரை) மட்டும் கொடுக்கக் கூடாது,
அறிவுரை மற்றும் சகயோகம்(ஒத்துழைப்பு) இரண்டையும் சேர்த்து
கொடுக்க வேண்டும் - இதுவே ஆன்மிக அன்பின் மூர்த்தி ஆகுவது ஆகும்.
ஆகவே, இன்று விசேஷமாக பாப்தாதா ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும்,
அவர்கள் உள்நாடோ, வெளிநாடோ, நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து
குழந்தை களுக்கும் ஆன்மிக அன்பின் மூர்த்தி ஆகுங்கள் என்பதையே
விசேஷமாக அடிகோடு இடுகின்றார்கள். மேலும், ஆத்மாக் களுடைய
ஆன்மிக அன்பின் தாகத்தைத் தணிக்கக்கூடிய தேவி, தேவதை ஆகுங்கள்.
சரிதானே! நல்லது.
(பிறகு பாப்தாதா மதுபன் நிவாசிகளுடன் உரையாடல் செய்தார்கள்
மற்றும் அனைவரையும் பார்வையாலே அனைத்திற்கும் அப்பால் கொண்டு
சென்று திருஷ்டி கொடுத்தார்கள்)
மருத்துவமனை, அபு நிவாசிகள் மற்றும் பார்ட்டிகளுடன் அவ்யக்த
பாப்தாதாவின் சந்திப்பு
அனைவரும் தங்களை அதிர்ஷ்டசாலி என புரிந்து இருக்கின்றீர்களா?
முழு உலகில் அனை வரையும் விட பெரியதிலும் பெரிய அதிர்ஷ்டம்
யாருடையது? ஒவ்வொருவரும் என்ன நினைக் கின்றீர்கள்? அனைவரையும்
விட பெரியதிலும் பெரிய அதிர்ஷ்டம் என்னுடையது என்று
ஒவ்வொருவரும் புரிந்து இருக்கின்றீர்களா? அதிர்ஷ்டசாலியாக
இருக்கின்றீர்கள் எனில் குஷியாக இருக்கின்றீர்களா? சதா குஷியாக
இருக்கின்றீர்களா? சில நேரங்களில் மட்டும் இருப்ப தில்லை அல்லவா!
பாப்தாதா பாக்கியத்தின் நட்சத்திரத்தை பிரகாசிக்க
செய்துவிட்டார்கள் என்றால் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப்
பார்த்து மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா? உள்ளத்தில் சதா
குஷியின் இசை ஒலிக்கிறது. ஒலிக்கிறதா? என்ன பாடலை உள்ளம்
பாடுகிறது? ஆஹா! எனது சிரேஷ்ட பாக்கியம் - இந்தப் பாடலைப்
பாடுகின்றீர்களா? முழு கல்பமும் உங்களுடைய பாக்கியத்தின் மகிமை
பாடப்படுகின்றது. அரைகல்பத்திற்கு பாக்கியத்தின் பிராப்தியை
அனுபவிக்கின்றீர்கள் மற்றும் அரைகல்பத்திற்கு உங்களுடைய
பாக்கியத்தின் மகிமையை அனேக ஆத்மாக்கள் பாடிக்கொண்டே
இருக்கின்றனர். அனைத்தையும் விட விசேஷமான விசயம் என்னவென்றால்
தந்தைக்கு முழு உலகில் உள்ளவர்களில் யாரைப் பிடித்துள்ளது?
நீங்களே பிடித்திருக்கின்றீர்கள் அல்லவா! எத்தனை ஆத்மாக்கள்
உள்ளனர், ஆனால், உங்களை மட்டும் விரும்பினோம். பகவானே உங்களை
விரும்புகின்றார், இதைவிட உயர்ந்தது வேறு என்ன இருக்க முடியும்!
எனவே, சதா தந்தையின் கூடவே தன்னுடைய பாக்கியத்தையும் நினைவில்
வைத்திடுங்கள். பகவான் மற்றும் பாக்கியம். தினந்தோறும் அன்பு
நினைவு பெறும், பிரபுவின் அன்பைப் பெறும் ஆத்மா எவராவது முழு
கல்பத் திலும் இருப்பார்களா? தினந் தோறும் அன்பு நினைவுகள்
கிடைக்கிறது அல்லவா. அனைவரையும் விட அதிகமான செல்ல மானவர்கள்
யார்? நீங்களே செல்லமானவர்கள் அல்லவா. எனவே, சதா தன்னுடைய
பாக்கியத்தை நினைவு செய்வதனால் வீணான விசயங்கள் ஓடிவிடும்.
விரட்ட வேண்டிய திருக்காது, சகஜமாகவே ஓடிவிடும்.
இப்பொழுது நிகழ்கால சமயத்தின் அனுசாரம், சங்கமயுக சமயத்தின்
மகத்துவத்தை புரிந்துகொண்டு ஒவ்வொரு விநாடியும் தன்னுடைய
பிராப்தியை சிரேஷ்டமானதாக உருவாக்கி கொண்டே இருங்கள். ஒரு
வினாடியை கூட வீணாக்கக்கூடாது. ஏனென்றால், ஒரு ஒரு விநாடிக்கும்
மிகப் பெரிய மகத்துவம் உள்ளது. ஒரு விநாடி வீணாகக் கழியவில்லை,
ஆனால், அதிக சமயம் கழிந்துவிடுகிறது, மேலும், இந்த சமயம் பிறகு
கிடைக்காது. சமயத்தை பற்றிய அறிமுகம் நல்ல முறையில் உள்ளது
அல்லவா. நினைவில் உள்ளதா? பாருங்கள், இன்று உங்கள் அனைவருக்கும்
சிறப்பான நேரம் கிடைத்துள்ளது அல்லவா. ஒருவேளை, அனைவரும்
சேர்ந்து வந்திருந்தீர்கள் என்றால் தெரிந்து
இருக்கவேமாட்டீர்கள். இப்பொழுதோ யார் யார் வந்திருக்கின்றீர்கள்
என்பதை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். அனைவரும் விசேஷ
ஆத்மாக்கள் ஆவீர்கள். தன்னுடைய விசேஷத்தன்மையை அறிந்துகொண்டு
விசேஷத் தன்மையை காரியத்தில் மட்டும் ஈடுபடுத்துங்கள்.
நாடகத்தின் அனுசாரம் ஒவ்வொரு பிராமண ஆத்மாவிற்கும் ஏதாவது
ஏதாவது விசேஷத்தன்மை கிடைத்துள்ளது. இவரிடத்தில் எந்த
விசேஷத்தன்மையும் இல்லை எனும்படியாக எவரும் இல்லை. எனவே,
தன்னுடைய விசேஷத் தன்மையை சதா நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,
மேலும், அதை சேவையில் ஈடுபடுத்துங் கள். ஒவ்வொருவருடைய
விசேஷத்தன்மையானது பறக்கும் கலைக்கான மிகவும் தீவிரமான விதி
ஆகிவிடும். சேவையில் ஈடுபடுத்த வேண்டும், அபிமானத்தில்
வரக்கூடாது. ஏனென்றால், சங்கமயுகத்தில் ஒவ்வொரு
விசேஷத்தன்மையும் நாடகத்தின் அனுசாரம் பரமாத்ம பரிசு ஆகும்.
பரமாத்ம பரிசில் அபிமானம் வராது. எவ்வாறு பிரசாதம் உள்ளது
அல்லவா, அதை எவரும் தன்னுடையது என்றோ, என்னுடைய பிரசாதம் என்றோ
கூறமாட்டார்கள். பிரபுவின் பிரசாதம் ஆகும். பிரசாதமானது
தனக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை பகிர்ந்து
அளிக்கப்படுகிறது. பகிர்ந்து அளிக்கின்றீர்கள், மகாதானி
ஆவீர்கள், வரதானியும் ஆவீர்கள். பாண்டவர்களும் வரதானி, மகாதானி
ஆவார்கள். சக்திகளும் மகாதானிகளா? ஓரிரு மணி நேர மகாதானி அல்ல,
திறந்திருக்கும் களஞ்சியம், ஆகையினால் தந்தையை கள்ளங்கபடமற்ற
களஞ்சியம் என்று கூறுகின்றார்கள், திறந்திருக்கும் களஞ்சியம்
அல்லவா! ஆத்மாக் களுக்கு கை நிறைய கொடுத்துக் கொண்டே
செல்லுங்கள், யாசிப்பவர்களின் வரிசை எவ்வளவு நீளமாக உள்ளது! அது
குறையாத பொக்கிஷம் ஆகும், குறையக்கூடியதா என்ன?
பகிர்ந்தளிப்பதில் சிக்கனப்படுத்துவது இல்லைதானே? இதில் தாராள
உள்ளத்தோடு பகிர்ந்தளியுங்கள். வீணாக்கு வதில்
சிக்கனப்படுத்துங்கள், ஆனால், பகிர்ந்தளிப்பதில் திறந்த
உள்ளத்தோடு பகிர்ந்தளித் திடுங்கள்.
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்களா? சில நேரங்களில்
கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது. சில நேரம் மூட் ஆஃப்(சரியில்லாத
மனநிலை), சில நேரம் மிகவும் மகிழ்ச்சியான மூட்(மனநிலை), இவ்வாறு
இல்லைதானே? தந்தையை பின்பற்றுங்கள், பாப்தாதா மூட் ஆஃப்
ஆகின்றார்களா என்ன? தந்தையை பின்பற்ற வேண்டும் அல்லவா.
பாப்தாதாவிடம் விசேஷமாக பிராமண குழந்தைகளை பார்ப்பதற்காக டி.வி.
உள்ளது. அதில் அனைவருடைய விதவிதமான மூட் தெரிகிறது. அதை
பார்ப்பதற்கு எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்? சதா மகாதானியாக
இருப்பவர்களுடைய மனநிலை மாறாது. வள்ளல் அல்லவா, கொடுத்துக்
கொண்டே செல்லுங்கள். தேவதை ஆகப்போகிறவர்கள் என்றாலே
கொடுக்கக்கூடியவர்கள். பெறக்கூடிய வர்கள் (லேவதா) அல்ல,
கொடுக்கக்கூடியவர்கள்(தேவதா). எத்தனை முறை தேவதை
ஆகியிருக்கின்றீர்கள்! அநேகமுறை ஆகி இருக்கின்றீர்கள் அல்லவா!
தேவதை என்றாலே கொடுக்கும் சமஸ்காரம் கொண்டிருப்பவர்கள். ஒருவர்
என்ன வேண்டுமானாலும் கொடுக் கட்டும், ஆனால், நீங்கள் கை நிறைய
சுகம், கை நிறைய சாந்தி, கை நிறைய அன்பைக் கொடுங்கள்.
உலகத்தினரிடம் இருப்பதுவே துக்கம், அசாந்தி என்றால் அவர்கள்
என்ன கொடுப் பார்கள்? அதையேதான் கொடுப்பார்கள் அல்லவா. மேலும்,
உங்களிடம் என்ன உள்ளது? சுகம், சாந்தி. எல்லாம் சரிதானே! நல்லது.
சந்திப்பைக் கொண்டாடிவிட்டோம். நாங்கள் பின்னால்
வந்திருக்கிறோம் என்று நினைக்கவில்லையே. விசே‘மாக
வந்திருக்கின்றீர்கள். மதுவனத்திற்கு அருகாமையில்
இருக்கின்றீர்கள். மதுவனத்தை நன்றாக சுற்றி
வளைத்திருக்கின்றீர்கள்.
மருத்துவமனையில் உள்ளவர்களும் நன்றாக சேவை செய்து கொண்டு
இருக்கின்றார் கள். சாந்திவனத்தில் இருப்பவர்களும் நிறையபேர்
உள்ளனர். பார்ட்டியில் வந்திருப்பவர்கள் நீண்ட காலத்திற்கு பின்
தேடிக் கண்டெடுக் கப்பட்ட செல்லமானவர்கள். கொஞ்சம் பேர்
இருக்கின்றீர்கள், ஆகையினால், செல்லமானவர்கள். வெளிநாட்டினர்
இல்லாமல் அழகு இல்லை. ஆகையினால், ஒவ்வொரு குரூப்பில் தன்னுடைய
அழகை அதிகரிப்பதற்காக நன்றாக வந்துவிடுகின்றனர். நல்லது.
சேவாதாரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:
சேவைக்கு நிமித்தமான அனைவரும் தங்களுடைய பாக்கியத்தை
உருவாக்குபவர்கள் ஆவீர்கள், ஏனென்றால், இந்த யக்ஞ சேவையின்
புண்ணியமானது மிகப்பெரியது ஆகும். உடலால் சேவை செய்கின்றீர்கள்,
ஆனால், மனதாலும் சேவை செய்து கொண்டே இருங்கள், அப்போது இரட்டை
புண்ணியம் கிடைத்துவிடுகின்றது. மனதால் சேவை மற்றும் உடலால்
சேவை. யாரெல்லாம் வருகின்றார்களோ, அவர்கள் சேவாதாரிகளுடைய
சேவையினால் உருவான வாயுமண்டலத்தை பார்த்து இலாபம் அடைந்து
செல்கின்றார்கள். சேவையின் சமயத்தில் எத்தனை பேர்
வருகின்றார்களோ, அத்தனை ஆத்மாக்களுடைய புண்ணியம் மற்றும்
ஆசிர்வாதங்கள் சேமிப்பு ஆகிவிடுகின்றன. இவ்வாறு உடலாலும்
மற்றும் மனதாலும் சேவை செய்கின்றீர்கள். இரட்டை சேவாதாரியா
அல்லது ஒரு சேவை செய்பவரா, யார் நீங்கள்? டபுள். இரட்டை சேவை
செய்கின்றீர்களா? சேவைக்கான பிரத்யட்சபலனும் கிடைத்துக் கொண்டி
ருக்கிறது. எவ்வளவு சமயம் இருக்கின்றீர்களோ, அவ்வளவு எக்ஸ்ட்ரா
குஷி கிடைக்கிறது அல்லவா! பிரத்யட்ச பலனையும் அடைகின்றீர்கள்,
ஆசிர்வாதங்களும் சேமிப்பு ஆகிறது, எதிர்காலமும் உருவானது
மற்றும் நிகழ்காலமும் உருவானது. குழந்தைகள் தங்களுடைய
பிராப்தியை மிகவும் சுலபமாக மற்றும் சிரேஷ்டமாக உருவாக்கிக்
கொண்டிருக்கிறார்கள் என்பதில் பாப்தாதாவிற்கும் மகிழ்ச்சி
ஏற்படுகிறது. சேவை, சேவை மற்றும் சேவை, அவ்வளவு தான். வேறு
எந்த விசயங்களிலும் செல்லக்கூடாது. சேவை என்றால் சேமிப்பு
செய்வது என்பதாகும். எவ்வளவு சமயம் கிடைக்கிறதோ, அவ்வளவு இரட்டை
வருமானம் செய்யுங்கள். பிரத்யட்ச பலனையும், எதிர்காலத்தையும்
வருமானம் செய்யுங்கள். சேவைக்கான வாய்ப்பும் ஆத்மாக்களாகிய
உங்களுக்கு கிடைக்கிறது. சேவாதாரிகள் மீது பாப்தாதாவிற்கு
விசேஷ அன்பு உள்ளது. ஏனென்றால், பாப்தாதாவும் விஷ்வத்தின்
சேவகர் ஆவார்கள். எனில், சமம் ஆகிவிட்டீர் கள் அல்லவா! மனதை
பிஸியாக வைக்கின்றீர்களா அல்லது காலியாக வைக்கின்றீர்களா?
மதுபன் என்றாலே நினைவு மற்றும் சேவை. போகும்பொழுதும்,
வரும்பொழுதும் மனம் நினைவில் மற்றும் சேவையில் பிஸியாக இருக்க
வேண்டும். சதா குஷியாக இருக் கின்றீர்களா? அவ்வப்போது குஷியாக
இருப்பவர்கள் இல்லைதானே? சதா குஷியாக இருப்பவர் கள். உங்களுடைய
குஷியைப் பார்த்து பிறரும் குஷி அடைகின்றார்கள்.
சேவாதாரிகளுக்கும் கூட ஒரு டர்ன்(முறைழீவாய்ப்பு) கிடைத்துள்ளது,
மகிழ்ச்சிதானே! விசேஷமாக டர்ன் கிடைத்துள்ளது அல்லவா! மதுபன்
நிவாசிகளின் நிமித்தமாக உங்களுக்கும் பொன்னான வாய்ப்பு
கிடைத்துவிட்டது. சுயம் சதா சுவமானத்தில் இருந்து பறந்து கொண்டே
இருங்கள். சுவமானத்தை ஒருபோதும் விடாதீர்கள். வீடு பெருக்கிக்
கொண்டிருக்கிறீர்கள், ஆனால், சுவமானம் என்ன? விஷ்வத்தின்
அனைத்து ஆத்மாக்களிலும் நான் சிரேஷ்டமான ஆத்மா. தன்னுடைய
ஆன்மிக சுவமானத்தை எந்தவொரு வேலை செய்யும்போதும் மறக்கக்கூடாது.
போதை இருக்கிறது அல்லவா, ஆன்மிக போதை. நாம் யாருடையவர்களாக ஆகி
இருக் கின்றோம்! பாக்கியம் நினைவு உள்ளது அல்லவா? மறப்பதில்லையே?
சேவைக்காக எவ்வளவு சமயம் கிடைக்கிறதோ, அவ்வளவு சமயம் ஒரு ஒரு
வினாடியையும் வெற்றிகரமானதாக ஆக்குங்கள். வீணாக்கக்கூடாது,
சாதாரணமானதாகவும் இருக்கக்கூடாது. ஆன்மிக போதையில், ஆன்மிக
பிராப்திகளில் சமயம் கடக்கவேண்டும். அத்தகைய இலட்சியம்
வைத்திருக்கின்றீர்கள் அல்லவா. நல்லது, ஓம் சாந்தி.
வரதானம்:
அன்பின் விமானத்தின் மூலம் சதா அருகாமையின் அனுபவத்தை
செய்யக்கூடிய சினேகி மூர்த்தி ஆகுக.
அனைத்து குழந்தைகளிடத்திலும் பாப்தாதாவின் அன்பு
நிறைந்திருக்கிறது, அன்பின் சக்தி யினால் அனைவரும் முன்னோக்கி
பறந்து சென்று கொண்டு இருக்கிறார்கள். அன்பின் விமானம் உடல்
மற்றும் மனதால், உள்ளத்தால் தந்தைக்கு அருகாமையில் அழைத்து
வருகிறது. ஞானம், யோகம், தாரணையில் அனைவரும் அவரவர்
சக்திக்கேற்ப வரிசைக் கிரமமாக உள்ளனர், ஆனால், அன்பில்
ஒவ்வொருவரும் முதல் எண்ணில் உள்ளனர். இந்த அன்பு தான் பிராமண
வாழ்க்கை கிடைப்பதற்கான மூல ஆதாரம் ஆகும். அன்பின் அர்த்தமே
அருகாமையில் (பாஸ்) இருப்பது, தேர்ச்சி (பாஸ்) பெறுவது மற்றும்
ஒவ்வொரு சூழ்நிலையையும் மிகவும் சுலபமாக கடந்து (பாஸ்) செல்வது
என்பதாகும்.
சுலோகன்:
தன்னுடைய கண்களில் தந்தையை நிறைத்துக் கொண்டீர்கள் என்றால்,
மாயையின் பார்வையில் இருந்து தப்பித்துவிடுவீர்கள்.