28-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் உங்களுக்கு பாபாவின் நினைவைத் தவிர வேறு எந்த கவலையும் இல்லை, இந்த பாபாவிற்கு(பிரம்மா) நிறைய சிந்தனைகள் செல்கிறது

கேள்வி:
பாபாவிடம் இருக்கக் கூடிய நல்ல குழந்தைகளின் அடையாளம் என்ன?

பதில்:
அவர்கள் அனைவருடைய புத்தியின் தொடர்பையும் ஒரு பாபாவோடு இணைத்துக் கொண்டே இருப்பார்கள், சேவாதாரிகளாக இருப்பார்கள். தானும் நல்ல விதத்தில் படித்து மற்றவர்களுக்கும் கற்பிப்பார்கள். தந்தையினுடைய மனதில் இடம் பெற்றிருப்பார்கள். அப்படிப் பட்ட நல்ல குழந்தைகள் தான் தந்தையின் பெயரை விளங்கச் செய்வார்கள். யார் முழுமையாக படிப்பதில்லையோ அவர்கள் மற்றவர்களையும் கெடுக்கிறார்கள். இது கூட நாடகத்தில் பதிவாகி யிருக்கிறது.

பாடல்:
தாய்-தந்தையரின் ஆசிர்வாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.......

ஓம் சாந்தி.
ஒவ்வொரு வீட்டிலும் தாய்-தந்தை மற்றும் 2-4 குழந்தைகள் இருக்கிறார்கள் இருந்தாலும் ஆசிர்வாதம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது எல்லைக்குட்பட்ட விசய மாகும். இது எல்லைக்குட்பட்டவை களுக்காக பாடப் பட்டுள்ளது. எல்லையற்றதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. நாம் எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். அவர்கள் எல்லைக்குட்பட்ட தாய்-தந்தையர்களாக இருக்கிறார்கள், எல்லைக்குட்பட்ட தாய்-தந்தையரிடமிருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங் கள். இவர்கள் எல்லையற்ற தாய் தந்தையர் ஆவர். அந்த எல்லைக்குட்பட்ட தாய் தந்தையர் கூட குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கின்றனர், பிறகு டீச்சர் கற்பிக்கின்றார். இவர்கள் எல்லையற்ற தாய்-தந்தையர், எல்லையற்ற டீச்சர், எல்லையற்ற சத்குரு, பரம தந்தை, டீச்சர், பரம குருவாக இருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். சத்தியத்தை பேசக்கூடியவர், சத்தியத்தை கற்றுக் கொடுப்பவராக இருக்கின்றார். குழந்தைகளில் வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா. லௌகீக வீட்டில் 2-4 குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அவர்களை எவ்வளவு பாதுகாக்க வேண்டியிருக்கிறது. இங்கே எவ்வளவு அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள், எவ்வளவு செண்டர்களில் இருந்து குழந்தைகளுடைய செய்திகள் வருகிறது, இவர் சைத்தான் (தீய) காரியம் செய்கிறார்,தொல்லை தருகின்றார் தடை ஏற்படுத்துகின்றார் என்று எவ்வளவு செய்திகள் வருகிறது. இந்த பாபாவிற்குத் (பிரம்மா) தான் கவலை இருக்கும் அல்லவா? இவர் தான் பிரஜாபிதா அல்லவா? எவ்வளவு அதிகமான குழந்தைகளின் மீது கவனம் இருக்கிறது, ஆகையினால் தான் குழந்தைகளாகிய நீங்கள் நல்ல விதத்தில் பாபாவின் நினைவில் இருக்க முடியும் என்று பாபா கூறுகின்றார். எவ்வளவு அதிகமான குழந்தைகளைப் பராமரிக்க வேண்டி யிருக்கிறது.. மாயையும் மிகப்பெரிய எதிரி அல்லவா? சிலருடைய தோலை நன்றாகவே உரித்து அதாவது நையப்புடைத்து விடுகிறது. சிலரை மூக்கைப் பிடிக்கிறது, சிலரது குடுமியை பிடித்துக் கொள்கிறது. இவ்வளவு அனைவரைப் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. இருந்தாலும் எல்லை யற்ற தந்தையின் நினைவிலும் இருக்க வேண்டியுள்ளது. நீங்கள் எல்லையற்ற தந்தையினுடைய குழந்தைகளாவீர்கள். நாம் ஏன் பாபாவின் ஸ்ரீமத்படி நடந்து முழுமையாக ஆஸ்தியை எடுக்கக் கூடாது என்பதை தெரிந்துள்ளீர்கள். அனைவரும் ஒரேமாதிரி நடந்து கொள்ள முடியாது. ஏனென்றால், இங்கு இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது, இது வேறு யாருடைய புத்தியிலும் வர முடியாது. இது மிகவும் உயர்ந்த படிப்பாகும். இராஜ்யம் கிடைத்து விட்டது என்றால் பிறகு இந்த இராஜ்யம் எப்படி ஸ்தாபனை ஆனது என்பது தெரியாது. இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆவது மிகவும் அதிசயமானதாக இருக்கிறது. இப்போது நீங்கள் அனுபவமிக்க வர்களாக இருக்கிறீர்கள். நாம் என்னவாக இருந்தோம், பிறகு எப்படி 84 பிறவிகள் எடுக்கிறோம், என்பது முதலில் இவருக்குக் கூட தெரிந்திருந்ததா என்ன! இப்போது புரிய வருகிறது, நீங்களும் கூறுகிறீர்கள் - பாபா நீங்கள் அவரே தான், இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். இந்த சமயத்தில் தான் பாபா வந்து அனைத்து விசயங்களையும் புரிய வைக்கின்றார். இந்த சமயத்தில் யார் எவ்வளவு தான் லட்சாதிபதி, கோடீஸ்வரர்களாகவோ இருக்கலாம், பாபா கூறு கின்றார், இந்த பணம் போன்ற அனைத்தும் மண்ணோடு மண்ணாகப்போகிறது. மீதி இருக்கின்ற நேரம் எவ்வளவு? உலகத்தில் என்னென்ன நடந்து கொண்டி ருக்கிறது என்பதை நீங்கள் ரேடியோ அல்லது நாளேடுகளில் கேட்கின்றீர்கள். நாளுக்கு- நாள் சண்டைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நூல் சிக்கலாகிக் கொண்டே தான் இருக்கிறது. அனைவரும் தங்களுக்குள் சண்டை யிட்டுக் கொண்டே, இறக்கிறார்கள். அப்படி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது, இதன் மூலம் சண்டை ஆரம்பித்தே விட்டது என்பது புரிய வருகிறது. என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பதை உலகம் தெரிந்திருக்கவில்லை. உங்களில் கூட மிகக்குறை வானவர் களே முழுமையான விதத்தில் புரிந்துள்ளீர்கள் மற்றும் குஷியாக இருக்கிறீர்கள். இந்த உலகத்தில் நாம் இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கப் போகிறோம். இப்போது நாம் கர்மாதீத் நிலைக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தங்களுக் காக முயற்சி செய்கிறீர்கள். யார் எந்தளவிற்கு செய்வார்களோ, அந்தளவிற்கு பலனை அடைவார் கள். தங்களுடைய முயற்சியை செய்ய வேண்டும் மற்றும் பிறரையும் முயற்சி செய்ய வைக்க வேண்டும். வழியைச் சொல்ல வேண்டும். இந்த பழைய உலகம் அழிய வேண்டும். இப்போது பாபா புதிய உலகத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளார், எனவே இந்த வினாசத்திற்கு முன்பாக நீங்கள் புதிய உலகத்திற்கான படிப்பை படித்துக் கொள்ளுங்கள். பகவானுடைய மகாவாக்கியம், நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுக் கொடுக்கின்றேன். செல்லக் குழந்தைகளே ! நீங்கள் நிறைய பக்தி செய்துள்ளீர்கள். அரைக்கல்பம் நீங்கள் இராவண இராஜ்யத்தில் இருந்தீர்கள் அல்லவா? யாரை ராமன் என்று சொல்லப்படுகிறது என்பது கூட யாருக்கும் தெரியவில்லை. இராம இராஜ்யம் எப்படி ஸ்தாபனை ஆனது? இவையனைத்தையும் பிராமணர்களாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். உங்களில் கூட எதையும் தெரிந்திராதவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

யார் அனைவருடைய புத்தியின் தொடர்பையும் ஒரு பாபாவோடு இணைக்கிறார்களோ, அவர்கள் தான் பாபாவின் நல்ல குழந்தைகளாவர். யார் சேவாதாரிகளாக இருக்கிறார்களோ, யார் நல்ல விதத்தில் படிக்கிறார்களோ அவர்கள் பாபாவினுடைய மனதில் இடம் பெற்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் தகுதியற்றவர்களாகவும் இருக்கிறார்கள், சேவைக்குப் பதிலாக சேவைக்கு பங்கம் விளைவிக்கிறார்கள், அவர்கள் பாபாவிடமிருந்து தங்களுடைய புத்தியின் தொடர்பை துண்டித்து விடுகிறார்கள். இது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. நாடகத்தின் படி இது நடக்கத் தான் வேண்டும். யார் முழுமையாக படிக்கவில்லையோ அவர்கள் என்ன செய்வார்கள்? மற்றவர்களை யும் கெடுத்து விடுவார்கள் ஆகையினால் பாபாவைப் பின்பற்றுங்கள் மற்றும் யார் சேவாதாரி குழந்தைகள் இருக்கிறார் களோ, யார் பாபாவின் மனதில் உயர்ந்திருக்கிறார்களோ, அவர்களுடன் சேர்க்கை வையுங்கள் என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்படுகிறது. யாரோடு சேர்க்கை வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கேட்கலாம்? இவருடைய சேர்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்று பாபா உடனே சொல்லி விடுவார். நிறைய பேருடைய சேர்க்கையே அப்படித் தான் வைத்துக் கொள்கிறார்கள், அவர்களுடைய தலைகீழான நிறம் ஏறி விடுகிறது. நல்ல சேர்க்கை உயர்த்தும் தீய சகவாசம் விழ வைத்துவிடும் என்று பாடப்பட்டுள்ளது. தீய சகவாசம் ஏற்பட்டது என்றால், ஒரேயடியாக அழித்து விடும். வீட்டில் கூட தாச-தாசிகள் வேண்டும். பிரஜை களுக்கு கூட வேலைக்காரர்கள் போன்ற அனைவரும் வேண்டும். இங்கே முழு இராஜ்யமும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, இதில் மிகவும் பரந்த புத்தி வேண்டும் ஆகையினால் எல்லையற்ற தந்தை கிடைத்திருக்கிறார் என்றால், ஸ்ரீமத்தை பெற்றுக் கொண்டு அதன்படி நடந்து செல்லுங்கள். இல்லை என்றால் பதவி கீழானதாக ஆகி விடும். இது படிப்பாகும். இதில் இப்போது தேர்ச்சி பெறவில்லை என்றால் பல-பிறவிகளுக்கும், கல்ப-கல்பத்திற்கும் தேர்ச்சி பெறாமலே இருந்து விடுவீர்கள். நல்ல விதத்தில் படித்தீர்கள் என்றால் கல்ப-கல்பத்திற்கும் நல்ல விதத்தில் படித்துக் கொண்டே இருப்பீர்கள். இவர்கள் முழுமையாக படிப்பதில்லை என்றால் என்ன பதவி கிடைக்கும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. நாம் எந்த சேவையும் செய்வதில்லை என்று அவர்களாகவும் புரிந்து கொள்கிறார்கள். நம்மை விட புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள், புத்திசாலிகளைத் தான் சொற்பொழிவாற்ற அழைக்கிறார்கள். எனவே கண்டிப்பாக யார் புத்தி சாலிகளாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் உயர்ந்த பதவியும் அடைவார்கள். நான் அந்தளவிற்கு சேவை செய்ய வில்லை என்றால், உயர்ந்த பதவியும் அடைய முடியாது. டீச்சர் மாணவர்களையும் புரிந்துக் கொள்ள முடியும் அல்லவா? தினமும் படிப்பிக்கின்றார், அவரிடம் குறிப்பேடு இருக்கிறது. படிப்பினுடைய மற்றும் நடத்தையினுடைய குறிப்பேடும் இருக்கிறது. இங்கேயும் அப்படி இருக்கிறது, இதில் முக்கியமானது யோகத்தின் விசயமாகும். யோகம் நன்றாக இருந்தால் நடத்தையும் நன்றாக இருக்கும். படிப்பில் எங்கேயாவது அகங்காரம் வந்து விடுகிறது. இதில் நினைவினுடைய மறைமுகமான உழைப்பு தேவைப் படுகிறது, ஆகையினால் பாபா எங்களால் யோகத்தில் இருக்க முடியவில்லை என்று நிறைய பேருடைய புகார் வருகிறது. யோகம் என்ற வார்த்தையை நீக்கி விடுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். எந்த தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறதோ, அவரை உங்களால் நினைக்க முடியவில்லையா! அதிசயமாக இருக்கிறதே! ஹே ஆத்மாக்களே, நீங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்வ தில்லை, நான் உங்களுக்கு வழி சொல்ல வந்திருக்கின்றேன், நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால், இந்த யோக அக்னியின் மூலம் பாவம் அழிந்து விடும் என்று பாபா கூறுகின்றார். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைய செல்கிறார்கள். கும்ப மேளாவில் எவ்வளவு குளிர்ந்த நீரில் சென்று குளிக்கிறார்கள். எவ்வளவு கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்கிறார்கள். இங்கே எந்த கஷ்டமும் இல்லை. யார் முதல் தரமான குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு பிரியதர்ஷனுடைய (அன்பானவர்) உண்மையிலும் உண்மையான பிரியதர்ஷனியாக (அன்பானவளாக) ஆகி நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். நடைப்பயிற்சி செல்கிறார்கள் என்றால் தனிமையில் தோட்டத்தில் அமர்ந்து நினைவு செய்வார்கள். புறங்கூறுவது, வீணான பேச்சுக்களில் ஈடுபடுவதின் மூலம் வாயுமண்டலம் கெடுகிறது. ஆகையினால் எவ்வளவு நேரம் கிடைக்கிறதோ அதில் பாபாவை நினைவு செய்வதற்கான பயிற்சி செய்யுங்கள். முதல்தரமான உண்மையான பிரியதர்ஷனுடைய பிரியதர்ஷினிகளாக ஆகுங்கள். தேகதாரிகளின் புகைப்படங் களை வைத்துக் கொள்ளாதீர்கள் என்று பாபா கூறுகின்றார். யாரை நினைவு செய்ய வேண்டுமோ அந்த ஒரு சிவபாபாவின் புகைப்படத்தை மட்டும் வையுங்கள். சிருஷ்டி சக்கரத்தையும் நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால், திருமூர்த்தி மற்றும் சிருஷ்டி சக்கரம் முதல்தரமான தாகும், இதில் முழு ஞானமும் இருக்கிறது. சுயதரிசன சக்கரதாரி என்ற உங்களுடைய பெயர் அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. புதியவர்கள் யாரும் இந்த பெயரை கேட்டால் புரிந்து கொள்ள முடியாது, இதை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்து கொள்கிறீர்கள். உங்களில் கூட சிலர் நல்ல விதத்தில் நினைவு செய்கிறார்கள். நிறைய பேர் நினைவு செய்வதே இல்லை. தங்களுடைய (ஆத்மாவிற்கான) உணவையே கெடுத்துக் கொள்கிறார்கள். படிப்பு மிகவும் சகஜமானதாகும். அமைதியின் மூலம் நீங்கள் அறிவியலின் மீது வெற்றி அடைய வேண்டும் என்று பாபா கூறு கின்றார். அமைதி மற்றும் அறிவியல் ஜோதிட ராசி ஒன்றே ஆகும். இராணுவத்தில் கூட 3 நிமிடம் அமைதியில் இருக்க வைக்கிறார்கள். நமக்கு அமைதி வேண்டும் என்று மனிதர்களும் விரும்புகிறார்கள். அமைதியான இடம் பிரம்மாண்டம் தான் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். அந்த பிரம்ம மகா தத்துவத்தில் ஆத்மாக்களாகிய நாம் சிறு புள்ளியாக இருக்கின்றோம். அனைத்து ஆத்மாக்களின் மரமான அது மிகவும் அதிசயமானதாக இருக்கும் அல்லவா! இருபுருவங்களுக்கு மத்தியில் ஜொலிக்கும் அதிசயமான நட்சத்திரம் என்று மனிதர் களும் கூறுகிறார்கள். மிகவும் சிறிய தங்கத்தினால் ஆன திலகத்தை உருவாக்கி இங்கே வைக்கிறார்கள். ஆத்மாவும் புள்ளியாக இருக்கிறது, பாபாவும் அவருக்குப் பக்கத்தில் வந்து அமரு கின்றார். சாது-சன்னியாசிகள் போன்ற யாருமே தங்களுடைய ஆத்மாவை தெரிந்திருக்க வில்லை. ஆத்மாவையே தெரிந்து கொள்ளாத போது பரமாத்மாவை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் தான் ஆத்மா மற்றும் பரமாத்மாவை தெரிந்துள்ளீர்கள். எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களும் தெரிந்து கொள்ள முடியாது. இப்போது நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள், இவ்வளவு சிறிய ஆத்மா எப்படி அனைத்து நடிப்பையும் நடிக்கிறது. நிறைய சத்சங்கம் செய்கிறார்கள். எதையும் புரிந்து கொள்வதில்லை. இவர் (பிரம்மா) நிறைய குருமார் களைக் கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருமார்கள் என்று பாபா கூறுகின்றார். ஞானமார்க்கத்தின் குரு ஒருவரே ஆவார். இரண்டு கிரீடமுள்ள ராஜாக்களுக்கு முன்னால் ஒரு கிரீடமுள்ள இராஜாக்கள் தலை வணங்குகிறார்கள், நமஸ்கரிக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தூய்மையானவர்கள். அந்த தூய்மையான இராஜாக்களின் கோயில்கள் தான் உருவாக்கப்பட்டுள்ளன. தூய்மையற்ற வர்கள் சென்று அவர்களுக்கு முன்னால் தலை வணங்கு கிறார்கள், ஆனால் இவர்கள் யார், நாம் ஏன் தலை வணங்குகிறோம்? என்பதெல்லாம் தெரியுமா என்ன? சோமநாத் கோயில் கட்டினார்கள், பூஜை என்னவோ செய்கிறார்கள். ஆனால் புள்ளிக்கு எவ்வாறு பூஜை செய்வது? புள்ளிக்கு எப்படி கோயில் கட்ட முடியும்? இவை மிகவும் ஆழமான விசயங்களாகும். கீதை போன்றவற்றில் இந்த விசயங்கள் இருக்கிறதா என்ன? யார் எஜமானராக இருக்கிறாரோ, அவரே புரிய வைக்கின்றார். எப்படி இவ்வளவு சிறிய ஆத்மாவில் நடிப்பு பதிவாகியுள்ளது என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஆத்மாவும் அழிவற்றதாக இருக்கிறது, நடிப்பும் அழிவற்றதாக இருக்கிறது. அதிசயமாக இருக்கிறது அல்லவா.? இவை யனைத்தும் உருவாக்கப்பட்ட நாடகமாகும். உருவான, உருவாக்கப்பட்ட உருவாகிக் கொண்டிருக் கின்ற....... என்றும் சொல்கிறார்கள். நாடகத்தில் என்ன பதிவாகியிருக்கிறதோ, அது கண்டிப்பாக நடக்கும். கவலைப்பட வேண்டிய விசயம் இல்லை. என்ன நடந்தாலும் கண்ணீர் விடக்கூடாது என்று குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னார் இறந்து விட்டார்கள், ஆத்மா சென்று வேறொரு சரீரம் எடுத்தது, பிறகு அழுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது? திரும்பி வர முடியாது அல்லவா! கண்ணீர் வந்தால் தோல்வியுற்றதாகி விடும். ஆகையினால் நாங்கள் ஒருபோதும் அழ மாட்டோம் என்று உறுதி மொழி எடுங்கள் என்று பாபா கூறுகின்றார். தூரமான பிரம்மத்தில் இருக்கக் கூடிய தந்தையைப் பற்றி கவலை இருந்தது, அவர் கிடைத்து விட்டார் எனும்போது மீதி என்ன இருக்கிறது. நீங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். நான் ஒரு முறை தான் வருகின்றேன் - இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக. இதில் சண்டை போன்ற விசயங்கள் எதுவும் இல்லை. சண்டை நடந்தது பாண்டவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தார்கள் என்று கீதையில் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் நாயை உடன் அழைத்துக் கொண்டு மலையின் மீது சென்று கரைந்துவிட்டார்கள் என்று காட்டுகிறார்கள். வெற்றி அடைந்து பிறகு இறந்து விட்டார்கள். இந்த விசயம் மனதில் நிற்கவில்லை. இவையனைத்தும் கட்டுக் கதைகளாகும். இதைத் தான் பக்திமார்க்கம் என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகளாகிய உங்களுக்கு இதன்மீது வைராக்கியம் இருக்க வேண்டும் என்று பாபா கூறுகின்றார். பழைய பொருட்களின் மீது வெறுப்பு ஏற்படுகிறது அல்லவா? வெறுப்பு என்பது கடுமையான வார்த்தை. வைராக்கியம் என்பது இனிமையான வார்த்தையாகும். ஞானம் கிடைக்கிறது என்றால், பக்தியின் மீது வைராக்கியம் ஏற்பட்டு விடுகிறது. சத்யுகம் திரேதாவில் ஞானத்தின் பலன் 21 பிறவிகளுக்கு கிடைத்து விடுகிறது. அங்கே ஞானத்திற்கு அவசியம் இருப்பதில்லை. பிறகு நீங்கள் இறங்கும் மார்க்கத்தில் செல்கிறீர்கள் என்றால் ஏணிப்படியில் இறங்குகிறீர்கள். இப்போது கடைசியாகும். இப்போது இந்த பழைய உலகத்தின் மீது குழந்தை களாகிய உங்களுக்கு வைராக்கியம் வர வேண்டும் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் இப்போது சூத்திரனிலிருந்து பிராமணர்களாக ஆகியுள்ளீர்கள், மீண்டும் தேவதைகளாக ஆவீர்கள் என்று பாபா கூறுகின்றார். மற்ற மனிதர்கள் இந்த விசயங்களைப் பற்றி என்ன தெரிந்து கொள்வார்கள். விராட ரூப சித்திரத்தை உருவாக்குகிறார்கள் ஆனால் அதில் உச்சி குடுமி இருக்கிறது சிவன் இல்லை. தேவதை, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று சொல்லி விடுகிறார்கள். சூத்திரனி லிருந்து தேவதைகளாக எப்படி யார் மாற்றுகிறார், என்பது போன்ற எதையும் தெரிந்திருக்க வில்லை. தேவி- தேவதைகளாகிய நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள். பிறகு அந்த பணம் அனைத்தையும் எங்கே இழந்தீர்கள். தலை வணங்கி-வணங்கி தலை அவர்களுடைய பாதத்தில் விழுந்து தங்களுடைய பணத்தை இழந்தீர்கள். நேற்றைய விசயம் அல்லவா? உங்களை இப்படி (தேவதைகளாக) உருவாக்கிவிட்டுச் சென்றேன் பிறகு நீங்கள் என்னவாக ஆகி விட்டீர்கள்! நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மற்றவர்களைப் பற்றிய சிந்தனையின் வீண் பேச்சுக்களின் மூலம் சூழ்நிலையைக் கெடுக்கக் கூடாது. தனிமையில் அமர்ந்து உண்மையிலும் உண்மையான பிரியதர்ஷினிகளாக ஆகி, தங்களுடைய பிரியதர்ஷனை நினைவு செய்ய வேண்டும்.

2) ஒருபோதும் அழமாட்டேன், கண்களிலிருந்து கண்ணீர் விட மாட்டேன் என்று தங்களுக்கு தாங்களே உறுதிமொழி எடுக்க வேண்டும். யார் சேவாதாரிகளாக இருக்கிறார்களோ, பாபா வினுடைய மனதில் (இடம் பிடித்து) உயர்ந்திருக்கிறார்களோ, அவர்களுடன் தான் சகவாசம் வைக்க வேண்டும். தங்களுடைய குறிப்பேட்டை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வரதானம்:
சக்திசாலியான விருத்தியின் மூலம் மன சேவை செய்யக் கூடிய உலகிற்கு நன்மை செய்பவர் ஆகுக.

அலைந்து கொண்டிருக்கும் உலக ஆத்மாக்களுக்கு வழி கூறுவதற்காக சாட்சாத் பாபாவிற்குச் சமமாக லைட் ஹவுஸ், மைட் ஹவுஸ் ஆகுங்கள். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற இலட்சியம் வையுங்கள். முக்தி கொடுத்தாலும் சரி, ஜீவன்முக்தி கொடுத்தாலும் சரி. அனைவருக்காகவும் மகாதானி மற்றும் வரதானி ஆகுங்கள். இப்பொழுது அவரவர்களது இடத்தில் சேவை செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே மன சக்தியின் மூலம் வாயுமண்டலம், வைபிரேசன் மூலம் உலக சேவை செய்யுங்கள். அந்த அளவிற்கு சக்திசாலியான விருத்தி உருவாக்குங்கள் அதன் மூலம் வாயுமண்டலம் உருவாக வேண்டும். அப்பொழுது தான் உலகிற்கு நன்மை செய்யும் ஆத்மா என்று கூற முடியும்.

சுலோகன்:
அசரீரிக்கான பயிற்சி மற்றும் வீண் எண்ணங்கள் என்ற உணவு பத்தியத்தின் மூலம் தன்னை ஆரோக்கியமானவராக ஆக்குங்கள்.

அவ்யக்த இஷாரே - சத்தியம் மற்றும் பண்பாடு என்ற நாகரீகத்தை தாரணை செய்யுங்கள்

இப்பொழுது தனது சொற்பொழிவின் ரூபத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உலக அமைதிக்கான சொற்பொழிவு அதிகம் செய்து விட்டீர்கள். ஆனால் ஆன்மீக ஞானம் மற்றும் சக்தி என்றால் என்ன? மற்றும் அதற்கான வழி என்ன? இந்த சத்தியத்தை பண்பாட்டுடன் நிரூபணம் செய்யுங்கள். பகவானின் காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தாய்மார்கள் மிக நல்ல காரியம் செய்து கொண்டிருக்கின்றனர் - காலத்தின் அனுசார மாக இவ்வாறு பூமியை தயார் செய்ய வேண்டும். ஆனால் எப்படி தந்தை குழந்தைகளை வெளிப்படுத்தி இருக்கிறாரோ, அதே போன்று குழந்தைகள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் பிரத்யட்சதாவின் கொடி பறக்கும்.