28.09.25    காலை முரளி            ஓம் சாந்தி  15.02.2007      பாப்தாதா,   மதுபன்


இன்று பாப்தாதா விசேஷமாக தங்களுடைய நாலாபுறங்களிலும் உள்ள மிகவும் செல்லமான, மிகவும் தேடிக் கண்டெடுக்கப்பட்ட, பரமாத்ம அன்பிற்குப் பாத்திரமான குழந்தைகளோடு சந்திப்பதற் காக மற்றும் குழந்தைகளுடைய பிறந்தநாள் கொண்டாடுவதற்காக விசித்திரமான தந்தை வந்திருக்கின்றார். நீங்கள் அனைவரும் கூட இன்று விசேஷமாக விசித்திரமான பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வந்திருக்கின்றீர்கள் அல்லவா! இத்தகைய பிறந்தநாள் முழுகல்பத்தில் எவருக்கும் அமைவதில்லை. தந்தை மற்றும் குழந்தைகளுக்கு ஒரே நாளில் பிறந்தநாள் என்பதை ஒருபொழுதும் கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள். நீங்கள் அனைவரும் தந்தையினுடைய பிறந்தநாள் கொண்டாட வந்திருக்கின்றீர்களா அல்லது குழந்தைகளுடையதையும் கொண்டாட வந்திருக்கின்றீர்களா? ஏனெனில், முழுகல்பத்தில் பரமாத்ம தந்தை மற்றும் பரமாத்ம குழந்தை களுடைய அன்பானது அந்தளவு அளவற்றதாக உள்ளது, பிறப்பு கூட ஒன்றாக சேர்ந்தே இருக்கிறது. தந்தை தனியாக உலகமாற்ற காரியம் செய்யமாட்டார், குழந்தைகளோடு இணைந்து செய்ய வேண்டும். தந்தையுடன் இணைந்து இருப்பதற்கான இந்த அலௌகீக அன்பை, துணையாக இருப்பதற்கான அன்பை, இந்த சங்கமயுகத்தில் தான் அனுபவம் செய்கின்றீர்கள். தந்தை மற்றும் குழந்தைகளுக்கு இடையே அந்தளவு ஆழமான அன்பு உள்ளது, பிறப்பும் இணைந்தே இருக்கின்றது மற்றும் இருப்பதுவும் எங்கே? தனியாக இருக்கின்றீர்களா? அல்லது கூடவே இருக்கின்றீர்களா? ஒவ்வொரு குழந்தையும் ஊக்க உற்சாகத்தோடு நான் தந்தையுடன் இணைந்து இருக்கின்றேன் என்று கூறுகின்றார்கள். இணைந்து இருக்கின்றீர்கள் தானே! தனியாக இருப்பதில்லை தானே! பிறப்பும் இணைந்தே உள்ளது, கூடவே இருக்கின்றீர்கள் மற்றும் உறுதிமொழியும் வேறு என்ன கொடுத்துள்ளீர்கள்? துணையாக இருக்கின்றேன், துணையாக இருப்பேன் மற்றும் தன்னுடைய இனிமையான வீட்டிற்கு இணைந்தே செல்வேன். இப்பேற்பட்ட அன்பை வேறு எந்த தந்தைக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் பார்த்திருக்கின்றீர்களா? எந்தவொரு குழந்தையானாலும், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், எப்படி வேண்டு மானாலும் இருக்கட்டும், ஆனால், அவர்கள் துணையாக இருக்கின்றார்கள் மற்றும் இணைந்தே செல்பவர்கள் தான். அப்பேற்பட்ட இந்த விசித்திரமான மற்றும் அன்பிலும் அன்பான பிறந்தநாளைக் கொண்டாட வந்திருக்கின்றீர்கள். நேரில் கொண்டாடிக் கொண்டு இருந்தாலும், உள்நாடு, வெளிநாட்டில் கொண்டாடிக் கொண்டு இருந்தாலும், நாலாபுறங் களிலும் ஒரே நேரத்தில் சேர்ந்து கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

எவ்வாறு அனைத்து குழந்தைகளும் ஊக்கம் உற்சாகத்தோடு உள்ளத்தில் ஆஹா பாபா! ஆஹா பாபா! ஆஹா பிறந்தநாள்! என்ற பாடல் பாடிக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை பாப்தாதா நாலாபுறங்களிலும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். சுவிட்சை ஆன் செய்ததும் நாலா புறங்களின் சப்தம், உள்ளத்தின் சப்தம், ஊக்க உற்சாகத்தின் சப்தம் பாப்தாதாவின் காதுகளில் கேட்கின்றது. பாப்தாதா அனைத்து குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்த்து குழந்தைகளுக்கும் தங்களுடைய தெய்வீகப் பிறப்பிற்கான கோடி, கோடி, கோடி மடங்கு வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். உண்மையில் உற்சவம் என்பதன் அர்த்தமே ஊக்கம் உற்சாகத்தில் இருப்பது ஆகும். எனவே, நீங்கள் அனைவரும் உற்சாகத்தோடு இந்த உற்சவத்தைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள். பெயர் கூட பக்தர்கள் சிவராத்திரி என்று வைத்துள்ளனர்.

இன்று யார் உங்களுடைய இந்த விசித்திரமான பிறந்தநாளைக் கொண்டாடும் முறையை மிகவும் நன்றாக காப்பியடித்து இருக்கின்றார்களோ, அந்த பக்த ஆத்மாக்களுக்கு பாப்தாதா வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நீங்கள் ஞானம் மற்றும் அன்போடு கொண்டாடுகின்றீர்கள் மற்றும் அந்த பக்த ஆத்மாக்கள் பாவனை, சிரத்தையோடு நீங்கள் கொண்டாடுவதை காப்பி அடித்துள்ளார்கள். ஆகவே, இன்று அந்த குழந்தைகளுக்கு காப்பி அடிப்பதில் நல்ல பாகத்தை நடிப் பதற்கான வாழ்த்துக்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாருங்கள், ஒவ்வொரு விசயத்தை யும் காப்பி அடித்திருக்கின்றார்கள். காப்பி அடிப்பதற்கும் கூட அறிவாற்றல் வேண்டும் அல்லவா! முக்கிய விசயமோ, இந்த நாளில் பக்தர்கள் கூட விரதம் அனுஷ்டிக்கின்றார்கள், அவர்கள் உணவு முறையில் விரதம் இருக்கின்றார்கள், பாவனையோடு உள்ளுணர்வை சிரேஷ்டமானதாக ஆக்குவதற்காக விரதம் இருக்கின்றார்கள், அவர்கள் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்க வேண்டிய தாக இருக்கின்றது மற்றும் நீங்கள் என்ன விரதம் எடுத்துள்ளீர்கள்? ஒரே ஒரு முறை விரதத்தை மேற்கொள்கின்றீர்கள், வருடா வருடம் விரதம் இருப்பதில்லை. ஒரே முறை தூய்மைக்கான விரதம் எடுத்துள்ளீர்கள். அனைவரும் தூய்மைக்கான விரதம் எடுத்துள்ளீர்கள், பக்காவாக எடுத்துள்ளீர்களா? யாரெல்லாம் உறுதியாக எடுத்துள்ளீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள், பக்கா (உறுதியாக), கொஞ்சம் கூட கச்சாவாக (பலவீனமாக) அல்ல. பக்கா? நல்லது. இரண்டாவதாகவும் கேள்வி உள்ளது, நன்றாக விரதம் அனுஷ்டித்திருக்கின்றீர்கள், அதற்கான வாழ்த்துக்கள். ஆனால், தூய்மையற்ற நிலைக்கு முக்கியமாக ஐந்து நண்பர்கள் உள்ளனர், சரிதானே! தலை அசைத் திடுங்கள். நல்லது ஐந்தினுடைய விரதமும் எடுத்துள்ளீர்களா? அல்லது இரண்டு, மூன்றினுடைய விரதம் எடுத்துள்ளீர்களா? ஏனென்றால், எங்கே தூய்மை இருக்கின்றதோ, அங்கே ஒருவேளை அம்ச மாத்திரத்தில் கூட தூய்மையற்ற தன்மை இருக்கிறது என்றால் சம்பூரண தூய்மையான ஆத்மா என்று அழைக்கப்படுவார்களா என்ன? மேலும், பிராமண ஆத்மாக்களாகிய உங்களுடைய தூய்மையோ பிராமண பிறப்பின் சொத்து (ப்ராப்பர்டி), பெர்சனாலிட்டி, ராயல்டி ஆகும். ஆகவே, சோதனை செய்யுங்கள் - முக்கியமாக தூய்மையின் மீது கவனம் வைத்துள்ளீர்கள், ஆனால், சம்பூரண தூய்மையை கடைபிடிப்பதற்காக இன்னும் அதனுடைய (தூய்மையற்றதன்மை) நண்பர்கள் எவை உள்ளனவோ, அவற்றை இலேசானவை என்று விட்டுவிடவில்லையே? சிறியவர் கள் மீது அன்பு வைத்துள்ளீர்கள் மற்றும் பெரியவர்களை சரி செய்து விட்டீர்கள். மீதம் நான்கு என்ன உள்ளனவோ, அவற்றை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று பாபாவின் அனுமதி உள்ளதா என்ன? பிரம்மச்சரியத்தை மட்டும் பவித்ரதா என்று கூறப்படுவதில்லை, ஆனால், பிரம்மச்சரியத்தின் கூடவே பிரம்மாச்சாரி ஆக வேண்டும் அதாவது தூய்மையின் விரதத்தை பாலனை செய்துள்ளீர்கள். சில குழந்தைகள் உரையாடும்பொழுது கூறுகின்றனர், உரையாடலோ அனைவரும் செய்கின்றனர் அல்லவா. மிகவும் இனிமையிலும் இனிமையான விசயங்களைக் கூறுகின்றார்கள். பாபா, முக்கியமானதோ சரியாகிவிட்டது அல்லவா, மற்றபடி சின்ன சின்ன அப்படிப்பட்ட சங்கல்பங்கள் அவ்வப்பொழுது மனதில் வந்துவிடுகின்றன என்று கூறுகின்றார்கள். மனதில் வருகின்றன, வார்த்தையில் வரவில்லை மேலும், மனதையோ யாரும் பார்ப்பதில்லை. பிறகு இன்னும் சிலர் கூறுகின்றனர் - சின்னச்சின்ன பால்ய குழந்தைகளிடம் அன்பு இருக்கிறது அல்லவா. எனவே, இந்த நான்கின் மீதும் கூட அன்பு ஏற்பட்டுவிடுகிறது. கோபம் வந்துவிடுகிறது, மோகம் வந்துவிடுகிறது, விரும்பாமலேயே வந்துவிடுகிறது. யாராவது வருகின்றார்கள் என்றால் நீங்கள் கதவைத் திறந்து வைத்திருப்பதனால் வருகின்றார்கள் அல்லவா! என்று பாப்தாதா கூறு கின்றார்கள். எனவே, கதவுகளை ஏன் திறந்து வைத்துள்ளீர்கள்? பலவீனத்தின் கதவுகள் திறந்திருக் கின்றது, ஆக பலவீனத்தின் கதவைத் திறப்பது என்றால் வரவேற்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இன்றைய நாள் தந்தையினுடைய மற்றும் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள், ஆனால், பிறந்தவுடனேயே விரதத்திற்கான உறுதிமொழி செய்துள்ளீர்கள். முதன்முதலில் தந்தை வரதானம் என்ன கொடுத்தார், நினைவு உள்ளதா? பிறந்தநாளிற்கான வரதானம் நினைவு உள்ளதா? என்ன கொடுத்தார்? பவித்ர பவ, யோகி பவ. அனைவருக்கும் வரதானம் நினைவு உள்ளது அல்லவா? நினைவு உள்ளதா, மறந்துவிடவில்லையே? தூய்மையாக ஆகுக என்ற வரதானம் ஒன்றிற்காக கொடுக்கவில்லை, ஐந்திற்கும் கொடுத்துள்ளார். இன்று பாப்தாதா என்ன விரும்புகின்றார்கள்? பிறந்தநாள் கொண்டாட வந்துள்ளீர்கள், தந்தைக்கு கூட கொண்டாட வந்துள்ளீர்கள் தானே. சிவராத்திரி கொண்டாட வந்துள்ளீர்கள், பிறந்தநாளிற்கான பரிசு கொண்டுவந்துள்ளீர்களா? அல்லது வெறும் கையுடன் வந்திருக்கின்றீர்களா? ஸ்தாபனையாகி 70 வருடங்கள் நிறைவடைந்து கொண்டு இருக்கின்றன. நினைவு உள்ளது அல்லவா! 70 வருடங்கள் (2007-ல்) - யோசித்துப் பாருங்கள், நீங்கள் பின்னால் வந்திருக்கின்றீர்கள், ஆனால், ஸ்தாபனை ஆகியோ 70 வருடங்கள் ஆகிவிட்டன அல்லவா! இப்பொழுது நீங்கள் வந்திருக்கலாம், ஆனால், ஸ்தாபனையின் காரியத்தில் நீங்கள் அனைவரும் துணையாக இருக்கின்றீர்கள் அல்லவா! துணைவனாகவோ ஆகிவிட்டீர்கள் அல்லவா! இன்று முதன்முறையாக வந்திருந்தாலும் துணையாக இருக்கின்றீர்கள் அல்லவா. யார் மதுபனிற்கு முதன்முறையாக சந்திக்க வந்திருக் கின்றீர்களோ, அவர்கள் நீளமாக கை உயர்த்துங்கள். நல்லது. உங்கள் அனைவருக்கும் இப்பொழுது ஒரு வருடம் ஆகியிருக்கலாம், இரண்டு வருடம் ஆகியிருக்கலாம், ஆனால், தன்னை என்னவென்று கூறிக்கொள்கின்றீர்கள்? பிரம்மாகுமாரி, பிரம்மாகுமார் என்று கூறிக்கொள்கின்றீர்களா அல்லது புருஷார்த்தி குமார், குமாரி என்று கூறிக்கொள்கின்றீர்களா? என்ன கூறிக்கொள்கின்றீர்கள்? எவராவது தன்னை புருஷார்த்தி குமார் என்று கூறுகின்றீர்களா என்ன! பிரம்மாகுமார் என்று கையெழுத்து போடுகின்றீர்கள் தானே! அனைவரும் பி.கு என்று எழுதுகின்றீர்களா அல்லது புருஷார்த்தி குமார் என்று எழுதுகின்றீர்களா? புருஷார்த்தி குமார்களாகிய உங்களின் உறுதிமொழி என்ன? கூடவே இருப்போம், கூடவே செல்வோம், இணைந்தே இருப்போம், எனவே, இணைந் திருப்பதற்கு சமநிலை வேண்டும் அல்லவா!

இன்று 70 வருடத்திற்கான உற்சவத்தைக் கொண்டாடி வருகின்றீர்கள். பாப்தாதா பார்த்தார்கள், சேவைக்கான முறையை (டர்ன்) எந்த ஜோன் எடுத்திருக்கின்றார்களோ, அவர்கள் 70 வருடத் திற்கான கௌரவ விழா கொண்டாடு கின்றார்கள். அனைவரும் கொண்டாடுகின்றீர்கள் அல்லவா! அவ்வளவு தான், சின்னச்சின்ன பரிசுகள் மட்டும் கொடுக்கின்றீர்கள் அவ்வளவு தான். ஆனால், ஒன்றோ - இன்று பிறந்தநாள் ஆகும், கொண்டாட வந்திருக்கின்றீர்கள் அல்லவா, பக்கா தானே? மேலும், இரண்டாவதாக 70 வருடங்கள் முடிந்துவிட்டன, எனவே, கௌரவ விழாவும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள், பிறந்தநாளும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள், அதில் பரிசு என்ன கொடுப்பீர்கள்? ட்ரே கொடுப்பீர்களா, விரிப்பு கொடுப்பீர்களா? என்ன பரிசு கொண்டு வந்துள்ளீர்கள்? வெள்ளி டம்ளர் கொடுப்பீர்களா! ஆனால், இன்றைய தினம் தன்னுடைய ஆசைகளின் தீபமான குழந்தைகளுக்காக பாப்தாதாவிற்கு சுபமான ஆசை உள்ளது. அந்த சுபமான ஆசை என்ன, சொல்லட்டுமா? சொல்வது மற்றும் கேட்பது என்றால் என்ன? ஒன்று - காதின் மூலம் கேட்பது மற்றும் உள்ளத்தில் நிறைத்துக் கொள்வது, அப்படிதானே? வெளியேற்றிவிடவோ மாட்டீர் கள், இது மட்டுமல்ல, ஆனால், உள்ளத்திலே நிறைத்துக் கொள்கின்றீர்கள். இன்றைய தினம் அந்த சுப ஆசையை சொல்லட்டுமா, முதல் வரிசையில் உள்ளவர்கள் கூறுங்கள், தலை அசைத்திடுங்கள், டீச்சர்கள் தலை அசைத்திடுங்கள். நன்றாக கொடி அசைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சொல்லட்டுமா, இரட்டை அயல் நாட்டினர்? தன்னை அதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டி யிருக்கும், அப்பொழுதே சரி என்று சொல்லுங்கள், பெயருக்கு அவ்வாறு சொல்லாதீர்கள், ஏனெனில், 70 வருடங்களாக பாப்தாதா கவனக்குறைவு, அலட்சியம், சாக்கு போக்கினுடைய விளையாட்டைப் பார்த்துவிட்டார்கள். சரி, 70 அல்ல என்றாலும் 50, 40, 30, 20 வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால், இவ்வளவு சமயமாக குழந்தைகளுடைய இந்த மூன்று விளையாட்டை நன்றாகப் பார்த்து விட்டார்கள். இன்றைய தினம் பக்தர்கள் விழித்திருக்கின்றனர், தூங்குவதில்லை, குழந்தைகளாகிய உங்களுடைய விழித்தல் எது? எந்தவொரு உறக்கத்தில் அடிக்கடி தூங்கிவிடுகின்றீர்கள்? கவனக்குறைவு, அலட்சியம், சாக்குபோக்கு என்ற உறக்கத்தில் ஓய்வாகத் தூங்கிவிடுகின்றீர்கள். இன்று பாப்தாதா இந்த மூன்று விசயங்களில் இருந்து ஒவ்வொரு நேரமும் விழித்திருப்பதைப் பார்ப்பதற்கு விரும்புகின்றார்கள். சில நேரம் பாருங்கள், கோபம் வருகிறது, அபிமானம் வருகிறது, பேராசை வருகிறது, காரணம் என்ன சொல்கின்றார்கள்? பாப்தாதாவிற்கு ஒரு முத்திரை (டிரேட் மார்க்) தெரிகிறது, ஏதாவதொரு விசயம் நடக்கிறது அல்லவா, அப்பொழுது என்ன சொல்கின்றார் கள், இது நடக்கத் தான் செய்கிறது . . . , என்று சொல்கின்றார்கள். ஆனால், யார் நடந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இது இருக்கத்தான் செய்கிறது, இது நடக்கத்தான் செய்கிறது என்ற வார்த்தைகளைக் கூறுகின்றார்கள். இது ஒன்றும் புதிய விசயம் அல்ல, இது நடக்கிறது தான் என்று சொல்கின்றார்கள். இது என்ன? கவனக்குறைவு இல்லையா? இவரும் தான் செய்கின்றார், பெரும்பான்மையினர் கோபத்தில் இருந்து தப்பிப்பதற்காக இவர் செய்தார், அதனால் கோபம் வந்தது என்று கூறுகின்றனர். நான் தவறு செய்துவிட்டேன் என்று கூறுவதில்லை. இவர் இதைச் செய்தார் அல்லவா, இது நடந்தது அல்லவா, ஆகையினால், கோபம் வந்துவிட்டது என்று சொல் கின்றார்கள். பிறர் மீது குற்றம் சுமத்துவது மிகவும் சுலபம். இவர்கள் (இதை) செய்யாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது, மேலும், பாபா என்ன கூறினாரோ, அதுவும் நடந்திருக்காது. அவர்கள் அதை (பாபா கூறியதை) செய்திருந்தால் நடந்திருக்கும், தந்தையினுடைய ஸ்ரீமத்படி கோபத்தை அழிக்க முடியாதா என்ன? தற்சமயம் கோபத்தின் குழந்தை ஆவேசம், ஆவேசம் கூட வெவ்வேறு விதமாக உள்ளது. எனவே, இன்று நான்கினுடைய விரதம் எடுப்பீர்களா? எவ்வாறு முதல் விசயத்தின் மீது விசேஷமாக பெரும்பான்மையினர் திடசங்கல்பம் செய்துள்ளீர்கள். அதேபோன்று இந்த நான்கிற்காகவும் சங்கல்பம் செய்வீர்களா என்ன! இவர்கள் இதை செய்தார்கள், அதனால் என்னால் இப்படி நடந்து விட்டது, இந்த சாக்குபோக்கு சொல்லக்கூடாது. மேலும், தந்தை அடிக்கடி என்ன கூறுகின்றாரோ, அது நினைவு இல்லை, அவர் (பிறர்) என்ன செய்தாரோ, அது நினைவு வந்துவிட்டது, எனில், இது சாக்குபோக்கு சொல்வதாகி விட்டது அல்லவா! இன்று பாப்தாதா இந்த மூன்று விசயங்களை பிறந்தநாள் பரிசாகப் பெற விரும்புகின்றார்கள். இவை அந்த நான்கையும் இலகுவாகக் கடந்து செல்ல வைத்துவிடும். சமஸ்காரத்தை எதிர்கொள்ளத் தான் வேண்டும், சமஸ்காரத்தை எதிர்கொள்வது என்பது அல்ல, இது தேர்வு ஆகும். ஒரு பிறப்பின் தேர்வு மற்றும் முழுகல்பத்திற்கான பிராப்தி, அரைகல்ப இராஜ்ய பாக்கியம், அரைகல்பம் பூஜைக்குரிய நிலை, ஒரு பிறவியில் முழுகல்பத்திற்கான பிராப்தி, அதுவும் சிறிய பிறவி, முழு பிறவி அல்ல, சிறிய பிறவி ஆகும். தைரியம் உள்ளதா? கண்டிப்பாக தைரியம் வைப்போம் என்று யார் நினைக் கின்றீர்கள். முயற்சி செய்வோம், கவனம் வைப்போம் . . . இப்படி சொல்லக்கூடாது, இந்த போம், போம் (ங்ஞே, ங்ஞே) என்பது கூடாது. நீங்கள் சிறிய குழந்தைகள் அல்ல, 70 வருடங்கள் நிறைவடைந்து கொண்டிருக்கின்றது. மூன்று நான்கு மாதக் குழந்தைகளே போம், போம் (ங்ஞே, ங்ஞே) என்று கூறுவார்கள். நீங்கள் தந்தையின் துணை அல்லவா! விஷ்வ கல்யாணகாரி, உங்களுக்கு 70 வருடங்கள் பூர்த்தி ஆகிக்கொண்டு இருக்கின்றது. பாப்தாதா கை உயர்த்த வைக்க வில்லை, ஏனெனில், கை உயர்த்திய பிறகும் சில நேரங்களில் கவனக்குறைவு உடையவராக ஆகிவிடுகின்றார்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். என்ன நினைக்கின்றீர்கள் - என்ன வேண்டு மானாலும் நடக்கட்டும், மலை போன்ற பரிட்சையும் வரட்டும், ஆனால், மலையை பஞ்சு ஆக்கி விடுவோம் என்று நினைக்கின்றீர்களா? இந்தளவு திட எண்ணம் செய்வதற்கு தைரியம் உள்ளதா! ஏனென்றால், சங்கல்பம் மிகவும் நன்றாக செய்கின்றீர்கள், எந்த நேரம் சங்கல்பம் செய்கின்றீர்களோ, பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆனால், நடப்பது என்னவென்றால், 70 வருடத்தையோ இலேசாக புரிந்து கொண்டு விட்டுவிட்டீர்கள், ஆனால், சமயத்தின் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும், இந்த ஞானத்தின் ஆதாரத்தினால் ஒவ்வொரு முயற்சியின் விசயத்தில் நீண்டகாலத்திற்கான கணக்கு உள்ளது. நல்லது, இப்பொழுதே செய்துவிடுவீர்கள், ஆனால், நீண்டகாலத்திற்கான கணக்கு உள்ளது, ஏனென்றால், ஒவ்வொருவரும் என்ன பிராப்தி விரும்புகின்றார்கள்? இப்பொழுது பாப்தாதா கை உயர்த்தச் சொல்கின்றார்கள், யார் இராமர் சீதை ஆகுவீர்கள்? யார் இராமர் சீதையாக ஆகுவதற்கு விரும்புகின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள், இராஜ்யம் கிடைக்கும். சிலர் கையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றார்கள் - இராமர் சீதை ஆகப்போகிறீர்களா? இலட்சுமி நாராயணர் ஆக மாட்டீர்களா? இரட்டை வெளிநாட்டினரில் சிலர் கை உயர்த்தினார்களா? (யாரும் இல்லை) எப்பொழுது நீண்டகாலத்திற்கான பாக்கியத்தை அடைய விரும்புகின்றீர்களோ, இலட்சுமி நாராயணர் ஆகுவது என்றால் நீண்டகாலத்திற்கான இராஜ்ய பாக்கியத்தைப் பெறுவதாகும். எனவே, நீண்டகாலத்திற்கான பிராப்தி உள்ளது. ஒவ்வொரு விசயத்திலும் நீண்டகாலமோ வேண்டும் அல்லவா! இப்பொழுது 63 பிறவிகளுடைய நீண்டகாலத்தின் சமஸ்காரம் உள்ளது, ஆகையினால், எங்களுடைய கருத்து அதுவல்ல, எங்களுடைய பாவனை அதுவல்ல, 63 பிறவிகளின் சமஸ்காரம் அது என்று கூறுகின்றீர்கள் அல்லவா. எனவே, நீண்டகாலத்திற்கான கணக்கு உள்ளது அல்லவா, ஆகையினால், சங்கல்பத்தில் திடத்தன்மை வேண்டும் என்பதையே பாப்தாதா விரும்புகின்றார்கள், திடத்தன்மையில் தான் குறைவு ஏற்பட்டுவிடுகிறது, அது நடந்து விடும் . . . நடக்கின்றது, நடக்கவிடுங்கள், யார் ஆகியுள்ளார்கள், மேலும் அனைவருக்கும் ஒரு விசயம் மிகவும் நன்றாக வருகிறது, பாப்தாதா அந்த விசயங்களை குறிப்பு எடுத்திருக்கின்றார்கள், தனக்குள் தைரியம் இல்லையென்றால், மகாரதிகள் கூட அவ்வாறு செய்கின்றார்கள், நான் செய்தால் என்ன என்று கூறுகின்றார்கள்? ஆனால், பாப்தாதா கேட்கின்றார்கள் - எந்த சமயம் மகாரதி தவறு செய்கின்றார்களோ, அந்த சமயம் அவர்கள் மகாரதியா என்ன? மகாரதி என்ற பெயரை ஏன் கெடுக்கின்றீர்கள்? அந்த சமயம் அவர் மகாரதியே இல்லை, எனவே, மகாரதி என்று கூறி, தன்னை பலவீனமாக்குவது என்பது தனக்கு தானே ஏமாற்றத்தைக் கொடுப்பதாகும். பிறரைப் பார்ப்பது சுலபமாக உள்ளது, தன்னை பார்ப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். இன்று பாப்தாதா கணக்கு புத்தகத்தை முடிப்பதற்கான பரிசைப் பெற வந்திருக்கின்றார்கள். பலவீனம் மற்றும் சாக்குபோக்கின் கணக்குவழக்கினுடைய மிகப் பெரிய புத்தகம் உள்ளது, அதை முடிவடையச் செய்ய வேண்டும். நாம் செய்து காட்டுவோம், செய்தே ஆக வேண்டும், பணிந்தே ஆகவேண்டும், மாறியே தீரவேண்டும், மாற்றத்தின் விழாவைக் கொண்டாடியே ஆகவேண்டும் என்று யார் ஒவ்வொருவரும் புரிந்திருக்கின்றீர்களோ, சங்கல்பம் செய்வோம் என்று யார் புரிந்திருக் கின்றீர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். திடமான சங்கல்பம் செய்வீர்களா அல்லது புத்திசாலித்தனமாக சங்கல்பம் செய்வீர்களா? புத்திசாலித்தனமான சங்கல்பமும் உள்ளது மற்றும் திடமான சங்கல்பமும் உள்ளது. நீங்கள் அனைவரும் திடமான சங்கல்பத்துடன் உயர்த்தினீர்களா? திடமாக உயர்த்தினீர்களா? மதுபனைச் சேர்ந்தவர்கள் உயரமாக கை உயர்த்துங்கள். இங்கே முன்னால் மதுபனைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருக்கின்றீர்கள், மிகவும் அருகாமையில் அமருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் இருக்கை மதுபனைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்கின்றது, பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள். முதலில் அமர்ந்துள்ளீர்கள், முதலில் தான் இருக்க வேண்டும்.

இன்றைய பரிசோ மிகவும் சிறப்பாக உள்ளது அல்லவா. பாப்தாதாவிற்கும் மகிழ்ச்சியாக உள்ளது, ஏனென்றால், நீங்கள் ஒருவர் அல்ல. உங்களுக்குப் பின்னால் உங்களுடைய இராஜ்யத்தில் உங்களுடைய இராயல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உங்களுடைய இராயல் பிரஜைகள், பிறகு துவாபரயுகத்தில் இருந்து உங்களுடைய பக்தர்கள், சதோ, ரஜோ, தமோகுணமான, மூன்று விதமான பக்தர்கள், ஆக உங்களுக்குப் பின்னால் நீண்ட வரிசை உள்ளது. நீங்கள் என்ன செய்வீர்களோ, அதை உங்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் செய்கின்றார்கள். நீங்கள் சாக்குபோக்கு கூறுகின்றீர்கள் அதனால், உங்களுடைய பக்தர்களும் கூட அதிக சாக்குபோக்கு சொல்கின்றார்கள். இப்பொழுது பிராமண பரிவாரமும் உங்களைப் பார்த்து, தலைகீழான காப்பி அடிப்பதிலோ புத்திசாலியாக இருக்கின்றனர் அல்லவா. எனவே, இப்பொழுது திடசங்கல்பம் செய்யுங்கள், சமஸ்காரத்தின் மோதல் ஏற்பட்டாலும், சுபாவத்தின் வேறுபாடு ஏற்பட்டாலும், மூன்றாவது விசயம் பலவீனமானவர் களைப் பற்றியது - யாராவது எவரைப் பற்றியாவது பொய்யான விசயத்தைக் கூறினார்கள் என்றால் பொய்யைக் கேட்கும்போது எங்களுக்கு மிகுந்த கோபம் வருகிறது என்று சில குழந்தைகள் கூறுகின்றனர். ஆனால், உண்மையான தந்தையிடம் சரிபார்க்கப்பட்டது (வெரிஃபை), உண்மையான தந்தை உங்களுக்குத் துணையாக இருக்கின்றார், எனவே, முழு பொய்யான உலகம் ஒரு பக்கம் இருக்கட்டும் மற்றும் ஒரு தந்தை உங்களுடன் இருக்கின்றார், உங்களுடைய வெற்றி உறுதியானது. யாரும் உங்களை அசைக்க முடியாது, ஏனென்றால், தந்தை உங்களுக்குத் துணையாக இருக்கின்றார். அது பொய் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். எனவே, பொய்யை பொய்யாகவே இருக்க விடுங்கள், ஏன் பெரிதாக்குகின்றீர்கள்? எனவே, தந்தைக்கு சாக்கு போக்கு பிடிப்பதில்லை, இது நடந்துவிட்டது, இது நடந்துவிட்டது, இது நடந்துவிட்டது . . . இது, இது என்ற பாடல் இப்பொழுது முடிவடைய வேண்டும். நல்லதாகவே நடந்தது, நல்லதே நடக்கும், நன்றாக இருப்போம், அனைவரையும் நல்லவர்களாக ஆக்குவோம். நல்லது, நல்லது, நல்லது என்ற பாடல் பாடுங்கள். இது பிடித்திருக்கின்றதா? பிடித்திருக்கின்றதா? சாக்குபோக்கை முடிவடையச் செய்வீர்களா? செய்வீர்களா? இரண்டு கைகளையும் உயர்த்துங்கள். ஆம், நல்ல முறையில் அசையுங்கள். நல்லது, பார்க்கக் கூடியவர்களும் கை அசைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்தாலும் கை அசைத்திடுங்கள். நீங்களும் அசைத்துக் கொண்டிருக் கின்றீர்கள். நல்லது, இப்பொழுது கையை கீழே போடுங்கள், இப்பொழுது தங்களுடைய மாற்றத்திற் கான கைகளைத் தட்டுங்கள். (அனைவரும் ஜோராக கைகளைத் தட்டினார்கள்) நல்லது.

நல்லது. இப்பொழுது ஒவ்வொருவரும் சாக்குபோக்கு, அலட்சியம், கவனக்குறைவை ஒவ்வொரு நேரமும் திடசங்கல்பத்தின் மூலம் சமாப்தி செய்து நீண்டகாலத்திற்கான கணக்கை சேமிப்பு செய்தே ஆகவேண்டும் என்று ஒரு நிமிடம் திடசங்கல்ப சொரூபத்தில் அமருங்கள். எது வேண்டு மானாலும் நடக்கட்டும், எதையும் பார்க்க வேண்டாம், ஆனால், தந்தையின் இதய சிம்மாசனதாரி ஆகியே தீரவேண்டும், விஷ்வத்தின் சிம்மாசனதாரி ஆகியே தீரவேண்டும். இந்த திடசங்கல்ப சொரூபத்தில் அனைவரும் அமருங்கள். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள சதா ஊக்கம் உற்சாகத்தின் அனுபவத்தில் இருக்கக்கூடிய, சதா வெற்றியின் சாவியான திடத்தன்மையை காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய, சதா தந்தையின் துணையாக மற்றும் ஒவ்வொரு காரியத்திலும் துணைவனாகி இருக்கக்கூடிய, சதா ஏக்னாமி (ஒருவருடைய நினைவு) மற்றும் எக்கானமி (சிக்கனம்), ஏகாக்ரதா (ஒருமுகப்பாடு) சொரூபத்தில் முன்னோக்கி முன்னேறி பறந்து செல்லக்கூடிய, பாப்தாதாவிற்கு மிகவும் செல்லமான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட, விசேஷமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

ஆசீர்வாதம்:
எல்லைக்குட்பட்ட அனைத்து ஆசைகளை தியாகம் செய்யக்கூடிய உண்மையான தபஸ்வி மூர்த்தி ஆகுக.

எல்லைக்குட்பட்ட ஆசைகளை தியாகம் செய்து உண்மையிலும் உண்மையான தபஸ்வி மூர்த்தி ஆகுங்கள். தபஸ்வி மூர்த்தி என்றால் எல்லைக்குட்பட்ட ஆசையென்றால் என்னவென்றே அறியாத ரூபம் ஆகும். யார் பெறுவதற்கான சங்கல்பம் செய்கின்றார்களோ, அவர்கள் அல்பகாலத் திற்காகப் பெறுகின்றார்கள், ஆனால், சதாகாலத்திற்காக இழக்கின்றார்கள். தபஸ்வி ஆகுவதில் இந்த அல்பகால ஆசைகள் தான் விசேஷமாகத் தடை ரூபம் ஆகின்றது, ஆகையினால், இப்பொழுது தபஸ்வி மூர்த்தி ஆகுவதற்கான நிரூபணம் கொடுங்கள், அதாவது எல்லைக்குட்பட்ட மதிப்பு, கௌரவத்தைப் பெறுவதற்கான ஆசையைத் தியாகம் செய்து விதாதா (விதியை உருவாக்குபவர்) ஆகுங்கள். எப்பொழுது விதாதாவின் சமஸ்காரம் எமர்ஜ் ஆகுமோ, அப்பொழுது மற்ற அனைத்து சமஸ்காரங்களும் தானாகவே அமிழ்ந்துவிடும்.

சுலோகன்:
கர்மத்தின் பலனைப் பெறுவதற்கான சூட்சும விருப்பம் வைப்பது கூட பழம் கனிவதற்கு முன்னதாகவே சாப்பிடுவதாகும்.


அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை ஜூவாலா ரூபமாக்குங்கள்.

எப்பொழுது நினைவு ஜூவாலை சொரூபமாக ஆகுமோ, அப்பொழுதே பாபகடேஸ்வரர் மற்றும் பாவத்தை அழிப்பவர் ஆகமுடியும். இதே நினைவு மூலம் அனேக ஆத்மாக்களின் பலமற்றதன்மை தூரமாகிவிடும், இதற்காக ஒவ்வொரு வினாடி, ஒவ்வொரு சுவாசம் தந்தை மற்றும் நீங்கள் இணைந்து இருங்கள். எந்தவொரு சமயத்திலும் சாதாரண நினைவு இருக்கக் கூடாது. சினேகம் மற்றும் சக்தி இரண்டு ரூபமும் இணைந்து இருக்க வேண்டும்