28.12.25 காலை முரளி
ஓம் சாந்தி 18.03.2008 பாப்தாதா,
மதுபன்
காரணம் என்ற வார்த்தையை நிவாரணமாக பரிவர்த்தனை செய்து மாஸ்டர்
முக்தியை வழங்கும் வள்ளல் ஆகுங்கள், அனைவரின் மீதும்
தந்தையினுடைய தொடர்பின் வண்ணத்தைப் பூசி சமம் ஆகுவதற்கான ஹோலி
கொண்டாடுங்கள்
இன்று அனைத்து பொக்கிஷங்களுடைய எஜமானர் பாப்தாதா தங்களுடைய
நாலாபுறங் களிலும் உள்ள பொக்கிஷங்களில் சம்பன்னமான குழந்தைகளை
பார்த்துக் கொண்டு இருக்கின்றார் கள். ஒவ்வொரு குழந்தையின்
பொக்கிஷங்களில் எத்தனை பொக்கிஷங்கள் சேமிப்பாகி இருக்கின்றன,
இதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றார்கள்.
பொக்கிஷங்களோ அனைவருக்கும் ஒரே சமயத்தில் ஒன்றுபோல் தான்
கிடைத்திருக்கின்றன, பிறகும் கூட அனைத்து குழந்தைகளுடைய
சேமிப்பு கணக்கு வெவ்வேறாக இருக்கின்றது. ஆனால், நேரத்தின்
அனுசாரம், இப்பொழுது பாப்தாதா, அனைத்து குழந்தைகளும் அனைத்து
பொக்கிஷங்களிலும் நிறைந்திருப் பதைப் பார்க்க
விரும்புகின்றார்கள், ஏனெனில், இந்த பொக்கிஷங்கள் இந்த ஒரு
ஜென்மத்திற்கானது மட்டுமல்ல, இந்த அழிவற்ற பொக்கிஷங்கள் அனேக
ஜென்மங்கள் கூடவே வரக்கூடியவை ஆகும். இந்த சமயத்தினுடைய
பொக்கிஷங்களையோ அனைத்து குழந்தைகளும் அறிந்தும் உள்ளீர்கள்.
பாப்தாதா என்னென்ன பொக்கிஷங்கள் கொடுத்திருக்கின்றார்கள், அதை
சொல்லும்போதே அனை வருக்கும் முன்னால் வந்துவிட்டன. அனைவருக்கும்
முன்னால் பொக்கிஷங்களின் பட்டியல் எமர்ஜ் ஆகிவிட்டது அல்லவா!
ஏனெனில், பொக்கிஷங்களோ கிடைத்துவிட்டன, ஆனால், சேமிப்பு
செய்வதற்கான விதி என்ன? என்பதை பாப்தாதா முன்பே
கூறியிருக்கின்றார்கள். ஒருவர் எந்தளவு நிமித்தமாக மற்றும்
பணிவானவராக ஆகின்றாரோ, அந்தளவே பொக்கிஷங்கள் சேமிப்பாகின்றன.
எனவே, நிமித்தம் மற்றும் பணிவாக ஆகுவது என்ற விதி மூலம்
தங்களுடைய கணக்கில் எத்தனை பொக்கிஷங்கள் சேமிப்பாகி உள்ளன
என்பதை சோதனை செய்யுங்கள். எந்தளவு பொக்கி ஷங்கள் சேமிப்பு
ஆகுமோ, அந்தளவு அவர்கள் நிறைந்திருப்பார்கள். அவர்களுடைய நடத்தை
மற்றும் முகத்தின் மூலம் நிறைந்திருக்கும் ஆத்மாவாக இருப்பதன்
ஆன்மிக போதை தானாகவே தென்படும். அவர்களுடைய முகத்தில் சதா
ஆன்மிக போதை மற்றும் பெருமிதம் ஜொலிக்கின்றது மற்றும் எந்தளவு
ஆன்மிக பெருமிதம் இருக்குமோ, அந்தளவே கவலையற்ற சக்கரவர்த்தியாக
இருப்பார்கள். ஆன்மிக பெருமிதம் அதாவது ஆன்மிக போதையே கவலையற்ற
சக்கரவர்த்தியின் அடையாளம் ஆகும். என்னுடைய நடத்தை மற்றும்
முகத்தில் கவலையற்ற சக்கரவர்த்திக்கான நம்பிக்கை மற்றும் போதை
உள்ளதா? என்று தன்னை சோதனை செய்யுங்கள். கண்ணாடியோ அனைவருக்கும்
கிடைத்துள்ளது அல்லவா! எனவே, உள்ளம் என்ற கண்ணாடியில் தன்னுடைய
முகத்தை சோதனை செய்யுங்கள். எந்த விதமான கவலையும் இல்லை தானே?
என்ன ஆகும்! எப்படி ஆகும்! இது நடக்காதோ! இந்தமாதிரியான
எந்தவொரு சங்கல்பமும் இல்லையே? எது நடந்து கொண்டி ருக்கின்றதோ,
அது மிகவும் நல்லது மற்றும் எது நடக்கப் போகிறதோ, அது இன்னும்
நல்லதிலும் நல்லதாகவே நடக்கும் என்ற சங்கல்பமே கவலையற்ற
சக்கரவர்த்திக்கு இருக்கும். இதையே பெருமிதம், ஆன்மிக பெருமிதம்
அதாவது சுவமானதாரி (சுயபெருமையில் இருக்கும்) ஆத்மா என்று
கூறப்படுகிறது. அழியக்கூடிய செல்வம் உடையவர்கள் எந்தளவு
சம்பாதிக்கின்றார்களோ, சமயத்தின் அனுசாரம் அந்தளவு கவலையில்
இருக்கின்றார்கள். உங்களுக்கு தங்களுடைய ஈஸ்வரிய
பொக்கிஷங்களுக்கான கவலை உள்ளதா? கவலையற்ற வர்களாக
இருக்கின்றீர்கள் அல்லவா? ஏனெனில், யார் பொக்கிஷங்களுக்கு
எஜமானர் மற்றும் பரமாத்மாவிற்கு பாலகனாக இருக்கின்றார்களோ,
அவர்கள் எப்பொழுதுமே கனவிலும் கூட கவலையற்ற சக்கரவர்த்தியாக
இருக்கின்றார்கள், ஏனெனில், இந்த ஈஸ்வரிய பொக்கிஷங்கள் இந்த
பிறவியில் என்ன, ஆனால், அனேக பிறவிகள் கூடவே இருக்கின்றன, கூடவே
இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது, ஆகையினால்,
அவர்கள் நிச்சயபுத்தி உடையவர்களாக, கவலையற்றவர்களாக
இருக்கின்றார்கள்.
இன்று பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளின் சேமிப்புக்
கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். விசேஷமாக மூன்று விதமான
கணக்குகளை சேமிப்பு செய்துள்ளீர்கள் மற்றும் செய்ய முடியும்
என்பதை முன்பே கூறியிருந்தார்கள். ஒன்று - தன்னுடைய முயற்சியின்
அனுசாரம் பொக்கிஷங்களை சேமிப்பு செய்வது. இது ஒரு கணக்கு.
இரண்டாவது கணக்கு - ஆசீர்வாதங்களின் கணக்கு. சதா சம்பந்தம்,
தொடர்பு மற்றும் சேவையில் இருக்கும்பொழுதே சங்கல்பம், சொல்
மற்றும் கர்மம் ஆகிய மூன்றிலுமே சுயம் தனக்குத் தானே
திருப்தியாக இருப்பது மற்றும் பிறரும் கூட சர்வ மற்றும் சதா
திருப்தியாக இருப்பது என்ற இதுவே ஆசீர்வாதங்களின் கணக்கை
சேமிப்பு செய்வதற்கான சாதனம் ஆகும். திருப்தி ஆசீர்வாதங்களின்
கணக்கை அதிகரிக் கிறது. மேலும், மூன்றாவது கணக்கு -
புண்ணியத்தின் கணக்கு. எந்த சேவை செய்தாலும், மனதின் மூலம்
செய்தாலும், வார்த்தையின் மூலம் செய்தாலும், கர்மத்தின் மூலம்
செய்தாலும், சம்பந்தம், தொடர்பில் வந்தாலும் சதா சுயநலமற்ற
மற்றும் எல்லையற்ற விருத்தி (உள்ளுணர்வு), சுபாவம், கருத்து (பாவ்)
மற்றும் உணர்வோடு (பாவனை) சேவை செய்வதுவே புண்ணியத்தின்
கணக்கிற் கான சாதனம் ஆகும். இதன் மூலம் புண்ணியத்தின் கணக்கு
தானாகவே சேமிப்பாகிவிடுகிறது. எனவே, சோதனை செய்யுங்கள் - சோதனை
செய்ய வருகிறது அல்லவா! வருகிறதா? யாருக்கு வரவில்லையோ அவர்கள்
கை உயர்த்துங்கள். யாருக்கு வரவில்லை, எவருமே இல்லை என்றால்
அனைவருக்கும் வருகிறது என்று அர்த்தம். எனவே, சோதனை செய்தீர்களா?
சுய முயற்சியின் கணக்கு, ஆசீர்வாதங்களின் கணக்கு, புண்ணியத்தின்
கணக்கு ஆகிய மூன்றும் எத்தனை சதவிகிதம் சேமிப்பாகி உள்ளது?
சோதனை செய்தீர்களா? யார் சோதனை செய்கின்றீர்களோ, அவர்கள் கை
உயர்த்துங்கள். சோதனை செய்கின்றீர்களா? முதல் வரிசையில்
உள்ளவர்கள் செய்யவில்லையா? சோதனை செய்யவில்லையா? என்ன
சொல்கின்றீர்கள்? செய்கின்றீர்கள் தானே! ஏனெனில், பாப்தாதா
சொல்லியும்விட்டார்கள், சமிக்ஞை கொடுத்துவிட்டார்கள் -
இப்பொழுது சமயத்தின் அருகாமை தீவிரவேகத்தில் முன்னேறிக்
கொண்டிருக்கிறது, ஆகையினால், தன்னுடைய சோதனையை அடிக்கடி செய்ய
வேண்டும், ஏனெனில், பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும்
இராஜாயோகியாகவும் இராஜா குழந்தையாகவும் பார்க்க
விரும்புகின்றார்கள். ஒவ்வொரு குழந்தை யும் இராஜா குழந்தை,
சுயராஜ்ய அதிகாரியிலிருந்து விஷ்வ இராஜ்ய அதிகாரி பரமாத்ம
குழந்தை என்ற இந்த ஆன்மிக போதை பரமாத்ம தந்தைக்கு உள்ளது.
பொக்கிஷங்களோ பாப்தாதா மூலம் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
இந்த பொக்கிஷங்களை சேமிப்பு செய்வதற்கான மிகவும் சகஜமான விதி -
விதி என்றும் சொல்லலாம் அல்லது சாவி என்றும் சொல்லலாம், அதை
அறிந்துள்ளீர்கள் அல்லவா!. சேமிப்பு செய்வதற்கான சாவி எது?
அறிவீர்களா? மூன்று புள்ளிகள். அனைவரிடமும் சாவி இருக்கிறது
அல்லவா? மூன்று புள்ளிகள் வைத்திடுங்கள் அப்பொழுது பொக்கிஷங்கள்
சேமிப்பு ஆகிக்கொண்டே இருக்கும். தாய்மார்களுக்கு சாவியைப்
பயன்படுத்துவதற்கு வருகிறது அல்லவா, தாய்மார்கள் சாவியைப்
பராமரிப்பதில் புத்திசாலிகளாக இருக்கின்றீர்கள் அல்லவா! எனவே,
அனைத்து தாய்மார்களும் இந்த மூன்று புள்ளிகளின் சாவியைப்
பாதுகாப்பாக வைத்துள்ளீர்களா? பயன்படுத்தி இருக்கின்றீர்களா?
சொல்லுங் கள், தாய்மார்களே சாவி உள்ளதா? யாரிடம் உள்ளதோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். சாவி திருடு போவதில்லையே?
தாய்மார்களுக்கு வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளினுடைய சாவியைப்
பராமரிப்பதற்கு மிகவும் நன்றாக வருகிறது. எனவே, இந்த சாவியும்
சதா கூடவே உள்ளது அல்லவா!
நிகழ்கால சமயத்தில் பாப்தாதா இதையே விரும்புகின்றார்கள் -
இப்பொழுது சமயம் சமீபத்தில் வருவதற்கான கணக்கின்படி பாப்தாதா
ஒரு வார்த்தையை அனைத்து குழந்தைகளும் உள்ளத்தில், சங்கல்பத்தில்,
பேச்சில் மற்றும் நடைமுறை செயலில் மாற்றம் செய்வதை பார்ப்பதற்கு
விரும்பு கின்றார்கள். தைரியம் உள்ளதா? பாப்தாதா ஒவ்வொரு
குழந்தையிடமும் இந்த ஒரு வார்த்தை யையே பரிவர்த்தனை செய்விக்க
விரும்புகின்றார்கள். அந்த ஒரு வார்த்தை தான் அடிக்கடி தீவிர
முயற்சியில் இருந்து கவனக்குறைவு உடைய முயற்சியாளராக
ஆக்கிவிடுகிறது, மேலும், இப்பொழுது சமயத்தின் அனுசாரம்
எப்படிப்பட்ட முயற்சி தேவை? தீவிர முயற்சி. மேலும், அனைவரும்
தீவிர முயற்சியாளர்களின் வரிசையில் வருவதற்கு விரும்பவும்
செய்கின்றீர்கள், ஆனால், ஒரு வார்த்தை கவனக்குறைவை
ஏற்படுத்திவிடுகிறது. அந்த வார்த்தை எது என்று தெரியுமா?
பரிவர்த்தனை செய்வதற்குத் தயாராக உள்ளீர்களா? தயாரா? கை
உயர்த்துங்கள், தயாரா? பாருங்கள், உங்களுடைய ஃபோட்டோ டி.வி.யில்
வந்துகொண்டிருக்கிறது. தயாராக இருக்கின்றீர் களா? நல்லது
வாழ்த்துக்கள். நல்லது, தீவிர முயற்சியினால் பரிவர்த்தனை செய்ய
வேண்டும் அல்லது செய்ய வேண்டுமா அல்லது செய்துவிடுவோம்,
பார்த்துக் கொள்ளலாம் . . . இவ்வாறு இல்லை தானே? ஒரு வார்த்தையை
அறிந்திருப்பீர்கள், ஏனெனில், அனைவரும் புத்திசாலிகள் ஆவீர்கள்,
அந்த ஒரு வார்த்தை என்னவென்றால் காரணம் என்ற வார்த்தையை மாற்றி
நிவாரணம் என்ற வார்த்தையை முன்னால் கொண்டு வாருங்கள். காரணம்
முன்னால் வருவதால் அல்லது காரணத்தை யோசிப்பதால் நிவாரணம்
கிடைப்பதில்லை. பேச்சளவு மட்டுமல்ல, ஆனால், சங்கல்பம் வரை இந்த
காரணம் என்ற வார்த்தையை நிவாரணம் என்று பரிவர்த்தனை செய்ய
பாப்தாதா விரும்புகின்றார்கள், ஏனெனில், காரணம் பல்வேறு வகையாக
இருக்கின்றன மற்றும் அந்த காரணம் என்ற வார்தை சிந்தனையில்,
பேச்சில், கர்மத்தில் தீவிர முயற்சிக்கு முன்னால் பந்தனம்
ஆகிவிடுகிறது. ஏனெனில், நாங்கள் அனைவரும் கூட தந்தையினுடைய
உலகமாற்ற காரியத்தில் துணையாக இருக்கின்றோம் என்று
பாப்தாதாவிடம் நீங்கள் அனைவரும் உறுதிமொழி அளித்துள்ளீர்கள்,
அன்போடு உறுதிமொழி செய்திருக்கின்றீர்கள். தந்தைக்குத்
துணைவராக இருக்கின்றீர்கள், தந்தை தனியாக செய்வதில்லை,
குழந்தைகளைத் துணையாக அழைத்துக் கொள் கின்றார். எனவே, உலகமாற்ற
காரியத்தில் உங்களுடைய காரியம் என்ன? அனைத்து ஆத்மாக் களின்
காரணங்களையும் கூட நிவாரணம் செய்ய வேண்டும், ஏனெனில்,
தற்காலத்தில் பெரும்பான்மையினர் துக்கம் மற்றும் அசாந்தியில்
இருப்பதன் காரணத்தால் இப்பொழுது முக்தியை விரும்புகின்றார்கள்.
துக்கம், அசாந்தியில் இருந்து, அனைத்து பந்தனங்களில் இருந்து
முக்தியை விரும்புகின்றார்கள். மேலும், முக்தியை வழங்கும்
வள்ளல் யார்? தந்தையின் கூடவே குழந்தைகளாகிய நீங்களும் முக்தியை
வழங்கும் வள்ளல் ஆவீர்கள். உங்களுடைய ஜடச்சித் திரங்களிடம்
இருந்து இன்று வரை என்ன வேண்டுகின்றார்கள்? இப்பொழுது துக்கம்,
அசாந்தி அதிகரிப்பதைப் பார்த்து, பெரும்பாலும் அனைத்து
ஆத்மாக்களும் முக்தியை வழங்கும் வள்ளல் ஆத்மாக்களாகிய உங்களை
நினைவு செய்கின்றார்கள். ஹே! முக்தியை வழங்கும் வள்ளலே முக்தி
கொடுங்கள் என்று மனதில் துக்கத்தோடு கூக்குரலிடுகின்றார்கள்.
உங்களுக்கு ஆத்மாக் களின் துக்கம், அசாந்தியான கூக்குரல்
கேட்கவில்லையா என்ன? முக்தியை வழங்கும் வள்ளல் ஆகி முதலில்
இந்த காரணம் என்ற வார்த்தையை முடிவடையச் செய்யுங்கள். அப்பொழுது
தானாகவே முக்திக்கான கூக்குரல் உங்களுடைய காதுகளில் ஒலிக்கும்.
முதலில் தன்னுடைய உள்ளத்தில் இருந்து, இந்த வார்த்தையில்
இருந்து விடுபட்டீர்கள் என்றால் பிறரையும் கூட விடுவிக்க
முடியும். இப்பொழுதோ நாளுக்கு நாள் உங்கள் முன்னால் முக்தியை
வழங்கும் வள்ளலே முக்தி கொடுங்கள் என்ற வரிசை வரப்போகிறது.
ஆனால், இப்பொழுது வரை தன்னுடைய முயற்சியில் விதவிதமான காரணம்
என்ற வார்த்தை வரும் காரணத்தினால் முக்தியின் கதவுகள் மூடி
உள்ளன. ஆகையினால், இன்று பாப்தாதா இந்த வார்த்தையினுடைய, இதன்
கூடவே இன்னும் கூட பலவீனமான வார்த்தைகள் வருகின்றன. விசேஷமாக
இருப்பது காரணம் என்ற வார்த்தை, பிறகு அதில் இன்னும் பலவீனங்கள்
உள்ளன, அப்படி, இப்படி, எப்படி, இவை கூட இதற்குத் துணையான
வார்த்தைகள் ஆகும், இவை கதவுகள் மூடுவதற்கான காரணம் ஆகின்றன.
இன்று அனைவரும் ஹோலி கொண்டாடுவதற்காக வந்துள்ளீர்கள் அல்லவா!
அனைவரும் ஓடோடி வந்துள்ளீர்கள். அன்பின் விமானத்தில் ஏறி
வந்துள்ளீர்கள். தந்தை மீது அன்பு இருக் கின்றது, எனவே, தந்தை
யுடன் ஹோலி கொண்டாடுவதற்காக வந்தடைந்து விட்டீர்கள்.
வாழ்த்துக்கள், வரவேற்கின்றோம். பாப்தாதா வாழ்த்துக்கள்
கொடுக்கின்றார்கள். பாப்தாதா பார்த்துக் கொண்டு
இருக்கின்றார்கள், வீல் சேரில் செல்பவர்களும், ஆரோக்கியம்
சிறிது மேலும் கீழுமாக இருக்கும் போதிலும் தைரியத்துடன் வந்து
சேர்ந்துவிட்டீர்கள். பாப்தாதா இந்தக் காட்சியைப் பார்க்
கின்றார்கள், இங்கே வகுப்பிற்கு வருகின்றார்கள் அல்லவா.
நிகழ்ச்சிக்கு வரும்பொழுது வழி காட்டியைப் (கைடு)
பிடித்துக்கொண்டு சேரிலேயே வந்துவிடுகின்றார்கள். இதை
என்னவென்று சொல்வது? பரமாத்ம அன்பு. பாப்தாதா கூட அப்பேற்பட்ட
தைரியசாலியான, உள்ளத்தின் அன்பான குழந்தைகளுக்கு மிக மிக
உள்ளத்தின் ஆசீர்வாதங்கள், உள்ளத்தின் அன்பை விசேஷமாக
கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். தைரியம் வைத்து
வந்துள்ளீர்கள், தந்தையின் மற்றும் பரிவாரத்தின் உதவியும்
உள்ளது. அனைவருக்கும் தங்குமிடம் நன்றாகக் கிடைத்திருக்கிறதா?
கிடைத்திருக்கிறதா? யாருக்கு தங்குமிடம் நன்றாக கிடைத்துள்ளதோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். அயல்நாட்டினருக்கு நன்றாகக்
கிடைத்திருக்கிறதா? திருவிழாவே திருவிழா தான். அங்கே
திருவிழாவில் மணலும் பறந்து கொண்டிருக்கும், சாப்பாடும் நடந்து
கொண்டிருக்கும். உங்களுக்கு பிரம்மா போஜனம் நன்றாகக் கிடைத்ததா,
கிடைக்கின்றதா? நன்றாக கை அசைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
தூங்குவதற்கு மூன்றடி நிலம் கிடைத்துள்ளதா? இப்பேற்பட்ட
சந்திப்பு, பிறகு 5 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சங்கமயுகத்தில்
தான் நடக்கும். பிறகு, நடக்காது.
இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளுடைய சேமிப்பு கணக்கைப்
பார்க்க வேண்டும் என்ற சங்கல்பம் உள்ளது. பார்க்கவும்
செய்தார்கள், மேலும், பார்ப்பார்கள், ஏனெனில், சேமிப்பு கணக்கை
சேமிப்பு செய்வதற்கான சமயம் இந்த சங்கமயுகம் ஆகும் என்ற இந்த
தகவலை பாப்தாதா குழந்தைகளுக்கு முன்பே கொடுத்திருக் கின்றார்கள்.
இந்த சங்கமயுகத்தில் இப்பொழுது எவ்வளவு சேமிப்பு செய்ய
விரும்புகின்றீர்களோ, முழுகல்பத் தினுடைய கணக்கை இப்பொழுது
சேமிப்பு செய்ய முடியும். பிறகு, சேமிப்பு கணக்கை
சேமிப்பதற்கான வங்கியே மூடப்படும். பிறகு என்ன செய்வீர்கள்?
பாப்தாதாவிற்கு குழந்தைகள் மீது அன்பு உள்ளதல்லவா. குழந்தைகள்
கவனக் குறைவினால் சில சமயம் மறந்துவிடுகின்றார்கள் என்பதை
பாப்தாதா அறிவார்கள், நடந்துவிடும், பார்த்துக் கொள்ளலாம்,
செய்து கொண்டு தான் இருக்கின்றோம், நடந்து கொண்டு தான்
இருக்கிறது அல்லவா என்று மிகுந்த மஜாவோடு கூறுகின்றார்கள்,
நீங்கள் பார்க்கவில்லை, நாங்கள் செய்து கொண்டு இருக்கின்றோம்,
ஆம், நடந்து கொண்டு தான் இருக்கின்றோம், வேறு என்ன செய்ய
வேண்டும்? ஆனால், நடப்பது மற்றும் பறப்பதில் எவ்வளவு வேறுபாடு
உள்ளது? நடந்து கொண்டிருக் கின்றீர்கள், அதற்கான வாழ்த்துக்கள்.
ஆனால், இப்பொழுது நடப்பதற்கான சமயம் முடிவடைந்து கொண்டு
இருக்கிறது. இப்பொழுது பறப்பதற்கான சமயம் ஆகும், அப்பொழுதே
இலக்கை சென்றடைய முடியும். சாதாரண பிரஜையாக வரலாமா! இருப்பதோ
பகவானுடைய குழந்தையாக, ஆனால், சாதாரண பிரஜை! இது அழகாக உள்ளதா?
இன்று ஹோலி கொண்டாடுவதற்காகத் தானே வந்துள்ளீர்கள், எனவே,
ஹோலிக்கான அர்த்தம் முடிந்ததற்கு முற்றுப்புள்ளி வைப்பது
என்பதாகும். முடிந்தது முடிந்துவிட்டது, ஏதோவொரு காரணத்தினால்,
ஒருவேளை, ஏதாவது பலவீனம் இருந்தால் இந்த நொடியே முடிந்ததற்கு
முற்றுப்புள்ளி வைத்து தன்னுடைய சித்திரத்தை நினைவில் கொண்டு
வாருங்கள், தனக்குத் தானே ஓவியர் ஆகி தன்னுடைய ஓவியத்தை
வரையுங்கள் என்ற இதையே பாப்தாதா இன்றிலிருந்து,
விரும்புகின்றார்கள். பாப்தாதா இப்பொழுதும் கூட ஒவ்வொரு
குழந்தையின் எப்பேற்பட்ட சித்திரத்தைப் பார்த்துக் கொண்டு
இருக்கின்றார்கள் என்பது தெரியுமா? எப்பேற்பட்ட சித்திரத்தைப்
பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள், தெரியுமா? இப்பொழுது
நீங்கள் அனைவரும் கூட தங்களுடைய சித்திரத்தை வரைந்திடுங்கள்.
சித்திரத்தை வரைவதற்கு வருகின்றதா, வருகிறது அல்லவா! சிரேஷ்ட
சங்கல்பம் என்ற பேனாவினால் தன்னுடைய சித்திரத்தை இப்பொழுதே
முன்னால் கொண்டு வாருங்கள். முதலில் அனைவரும் டிரில்
செய்யுங்கள், மனதிற்கான டிரில். கர்மேந்திரியங்களுக்கான டிரில்
அல்ல, மனதின் டிரில் செய்யுங்கள். தயாரா, டிரில் செய்வதற்கு
தயாரா! தலையை அசைத்திடுங்கள். பாருங்கள், கிரீடம், சிம்மாசனம்,
திலகம் அணிந்தவராக இருக்கும் சித்திரமே அனைத்தையும் விட
சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமான சித்திரம் ஆகும். எனவே, தன்னுடைய
சித்திரத்தை முன்னால் கொண்டு வாருங்கள் மற்றும் அனைத்து
சங்கல்பத் தையும் ஒதுக்கிவிட்டு பாருங்கள், நீங்கள் அனைவரும்
பாப்தாதாவின் இதயசிம்மாசனதாரிகள். சிம்மாசனம் இருக்கிறது அல்லவா!
இப்பேற்பட்ட சிம்மாசனமோ எங்கேயும் கிடைக்காது. எனவே, முதலில்,
நான் விசே‘ ஆத்மா, சுவமானதாரி ஆத்மா, பாப்தாதாவின் முதல்
படைப்பான சிரேஷ்ட ஆத்மா, பாப்தாதாவின் இதயசிம்மாசனதாரி ஆத்மா
என்ற இந்த சித்திரங்களை வரைந்திடுங்கள். சிம்மாசனதாரியாக
ஆகிவிட்டீர்கள்! கூடவே, பரமாத்மாவின் படைப்பான இந்த
விருட்சத்தின் வேரில் அமர்ந்திருக்கும் பூர்வஜ் (மூதாதையர்)
மற்றும் பூஜைக்குரிய ஆத்மா என்ற இந்த நினைவின் திலகதாரி.
நினைவின் திலகம் வைத்துள்ளீர்களா! கூடவே, கவலையற்ற சக்கரவர்த்தி,
அனைத்து கவலைகளின் சுமைகளை பாப்தாதாவிற்கு அர்ப்பணம் செய்து
டபுள் லைட் கிரீடதாரி ஆத்மாவாக இருக்கின்றேன். எனவே, கிரீடம்,
திலகம் மற்றும் சிம்மாசனதாரி. அப்பேற்பட்ட தந்தை அதாவது
பரமாத்மாவின் அன்பிற்குரிய ஆத்மாவாக இருக்கின்றேன்.
தன்னுடைய இந்த சித்திரத்தை (ஓவியம்) வரைந்துவிட்டீர்கள். சதா
இந்த டபுள் லைட் கிரீடத்தை போகும்பொழுதும், வரும்பொழுதும் தாரணை
செய்ய முடியும். எப்பொழுது வேண்டுமானாலும், கிரீடம், திலகம்,
சிம்மாசனதாரி ஆத்மா என்ற தன்னுடைய சுவமானத்தை நினைவு
செய்யுங்கள், தன்னுடைய இந்த சித்திரத்தை திடசங்கல்பம் மூலம்
முன்னால் கொண்டு வாருங்கள். நினைவு இருக்கின்றதா - ஆரம்பத்தில்
அடிக்கடி ஒரு வார்த்தையின் நினைவில் இருக்கும் பயிற்சியை
நீங்கள் செய்தீர்கள், அந்த ஒரு வார்த்தை - நான் யார்? என்பது.
நான் யார்? இந்த வார்த்தையை அடிக்கடி நினைவில் கொண்டு வாருங்கள்
மற்றும் தன்னுடைய விதவிதமான சுவமானம், டைட்டில் (பட்டம்),
பகவானிடம் இருந்து கிடைத்திருக்கக்கூடிய டைட்டில். தற்காலத்தில்
மக்களுக்கு, மனிதருக்கு மனிதரிடம் இருந்து பட்டம்
கிடைக்கிறதென்றால் கூட எவ்வளவு மகத்துவமானதாக நினைக்கின்றார்கள்,
ஆனால், குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை மூலம் எத்தனை பட்டங்கள்
மற்றும் சுவமானங்கள் கிடைத்துள்ளன? சதா சுவமானத்தின் பட்டியலை
தன்னுடைய புத்தியில் சிந்தனை செய்துகொண்டே இருங்கள். நான் யார்?
பட்டியலை கொண்டு வாருங்கள். இதே போதையில் இருந்தீர்கள் என்றால்,
காரணம் என்ன இருக்கின்றதோ, அந்த வார்த்தை மறைந்து போய்விடும்
மற்றும் நிவாரணம் ஒவ்வொரு செயலிலும் தென்படும். எப்பொழுது
நிவாரண சொரூபம் ஆகிவிடுவீர்களோ, அப்பொழுது அனைத்து
ஆத்மாக்களுக்கும் நிர்வாணதாமம், முக்திதாமம் செல்வதற்கான
சகஜமான வழியைச் சொல்லி முக்தி அடையச் செய்வீர்கள்.
திடசங்கல்பம் செய்யுங்கள் - திடசங்கல்பம் செய்வதற்கு வருகின்றதா?
திடத்தன்மை எப்பொழுது இருக்கின்றதோ, அந்த திடத்தன்மையே
வெற்றிக்கான சாவி ஆகும். கொஞ்சம் கூட திடத் தன்மையில் குறைவு
ஏற்பட்டு விடக்கூடாது, ஏனெனில், மாயாவின் வேலை தோல்வி அடையச்
செய்வது மற்றும் உங்களுடைய வேலை என்ன? உங்களுடைய வேலை -
தந்தையினுடைய கழுத்து மாலை ஆகுவது, மாயாவிடம் தோல்லி அடைவதல்ல.
எனவே, அனைவரும் நான் சதா தந்தையினுடைய கழுத்தின் வெற்றி மாலை
ஆவேன் என்ற இந்த சங்கல்பம் செய்யுங்கள். கழுத்து மாலை ஆவேன்.
கழுத்தின் மாலை வெற்றி மாலை ஆகும்.
நீங்கள் என்னவாக ஆகப்போகின்றீர்கள்? என்று பாப்தாதா கை உயர்த்த
வைக்கின்றார்கள் என்றால் அனைவரும் என்ன பதில் கொடுக்கின்றீர்கள்?
இலட்சுமி நாராயணர் ஆகுவோம், இராமர் சீதையாக அல்ல என்ற ஒரே
பதிலைத் தான் கொடுக்கின்றீர்கள். இலட்சுமி நாராயணராக ஆகக்கூடிய
நாம் பாப்தாதாவின் வெற்றி மாலையின் மணிகள் ஆவோம், பூஜைக்குரிய
ஆத்மாக்கள் ஆவோம். பக்தர்கள் உங்களுடைய மாலையின் மணியை ஜெபித்து
ஜெபித்து தங்களுடைய பிரச்சனைகளை முடிவடையச் செய்கின்றார்கள்.
அப்பேற்பட்ட சிரேஷ்ட மணிகள் ஆவீர்கள். எனவே, இன்று
பாப்தாதாவிற்கு என்ன கொடுப்பீர்கள்? ஹோலிக்காக ஏதாவதொரு பரிசு
கொடுப்பீர்கள் தானே! இந்த காரணம் என்ற வார்த்தை, இந்த அதனால்
தான், அதனால் தான் (ஹிந்தியில் - த்தோ, த்தோ), மற்றும் காரணம்,
அதனால் தான்(த்தோ), அதனால் தான்(த்தோ) என்று கூறினீர்கள்
என்றால் கிளி (ஹிந்தியில் - தோத்தா) ஆகிவிடுவீர்கள் அல்லவா.
அதனால் தான், அதனால் தான் என்பதுவும் கூடாது, அப்படி, இப்படி
என்பதுவும் கூடாது, எந்தவிதமான காரணமும் கூடாது, நிவாரணம்
இருக்க வேண்டும். நல்லது.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் சமம் ஆகுவதற்கான, சிரேஷ்ட
சங்கல்பம் செய்வதற்கான கோடி, கோடி மடங்கு வாழ்த்துக்கள்
கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வாழ்த்துக்கள்,
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். நம்மை போன்று கோடி, கோடி மடங்கு
பாக்கியவான் யார்? என்ற போதை இருக்கின்றது அல்லவா. இதே போதையில்
இருங்கள். நல்லது.
இப்பொழுது ஒரு நொடியில் அனைத்து பிராமணர்களும் தன்னுடைய
இராஜயோகப் பயிற்சியை செய்து கொண்டே மனதை ஒருமுகப்படுத்துவதில்
எஜமானர் ஆகி மனதை எங்கு விரும்புகின்றீர் களோ, எவ்வளவு நேரம்
விரும்புகின்றீர்களோ, எப்படி விரும்புகின்றீர்களோ அப்படியே,
இந்த நொடியே மனதை ஒருமுகப் படுத்துங்கள். ஒருபொழுதும் மனம்
இங்கே, அங்கே என்று சஞ்சலம் அடையக் கூடாது. என்னுடைய பாபா,
இனிமையான பாபா, அன்பான பாபா என்ற இந்த அன்பான தொடர்பின்
வண்ணத்தினுடைய, ஆன்மிக ஹோலி கொண்டாடுங்கள். (டிரில்) நல்லது.
நாலாபுறங்களிலும் உள்ள சிரேஷ்டமான விசேஷமான புனிதமான மற்றும்
உயர்வான குழந்தை களுக்கு, சதா தன்னை பாப்சமான் சர்வசக்திகளிலும்
நிறைந்திருக்கும் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற அனுபவம் செய்யக்
கூடிய, சதா ஒவ்வொரு பலவீனத்தில் இருந்தும் விடுபட்ட, பிற
ஆத்மாக் களுக்கும் கூட முக்தி அளிக்கக்கூடிய முக்தியை வழங்கும்
வள்ளல் குழந்தைகளுக்கு, சதா சுவமானம் என்ற சீட்டில் செட்டாகி
இருக்கக்கூடிய, சதா அமர் பவ என்ற வரதானத்தின் அனுபவ சொரூபமாக
இருக்கக்கூடிய, அப்பேற்பட்ட நாலாபுறங்களிலும் உள்ள, முன்னால்
அமர்ந்திருப் பவர்களாக இருந்தாலும், தூரத்தில்
அமர்ந்திருந்தாலும் அன்பில் மூழ்கியிருக்கக் கூடிய குழந்தை
களுக்கு அன்பு நினைவுகள் மற்றும் தன்னுடைய ஊக்கம், உற்சாகம்,
புருஷார்த்தத்தின் செய்தியை கொடுக்கக் கூடியவர்களுக்கு
பாப்தாதாவின் மிக மிக உள்ளத்தின் அன்பு நினைவுகள் மற்றும்
உள்ளத்தின் கோடி, கோடி மடங்கு அன்பு நினைவுகளை சுவீகாரம் செய்து
கொள்ளுங்கள் மற்றும் அனைத்து இராஜயோகியில் இருந்து இராஜ்ய
அதிகாரி ஆகும் குழந்தைகளுக்கு நமஸ்காரம்.
ஆசீர்வாதம்:
சர்வ சக்திகளின் ஆதாரத்தில் ஆத்மாக்களை செல்வந்தர் ஆக்கக்கூடிய
புண்ணிய ஆத்மா ஆகுக.
எவ்வாறு தானம், புண்ணியத்தின் சக்தி கொண்டிருக்கும், பிரதிபலனை
எதிர்பார்க்கும் இராஜாக்களிடத்தில் சக்தியினுடைய முழு அதிகாரம்
இருந்தது, அந்த சக்தியின் ஆதாரத்தில் யாரை வேண்டுமானாலும்
என்னவாக வேண்டுமானாலும் ஆக்கினார்கள். அதுபோல், மகாதானி
புண்ணிய ஆத்மாக்களாகிய உங்களுக்கு நேரடியாக தந்தை மூலம்
இயற்கையை வென்றவர், மாயாவை வென்றவர் ஆகுவதற்கான விசேஷமான சக்தி
கிடைத் திருக்கின்றது. நீங்கள் தன்னுடைய சுத்த எண்ணங்களின்
ஆதாரத்தினால் எந்தவொரு ஆத்மாவையும் தந்தை யுடனான சம்பந்தத்தில்
இணைத்து செல்வந்தர் ஆக்கமுடியும். இந்த சக்தியை மட்டும்
யதார்த்தமான முறையில் பயன்படுத்துங்கள்.
சுலோகன்:
எப்பொழுது நீங்கள் சம்பூரணத்தன்மையின் வாழ்த்துக்களைக்
கொண்டாடுவீர்களோ, அப்பொழுது நேரம், இயற்கை மற்றும் மாயா
விடைபெற்றுவிடும்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
எப்பொழுது மனம், புத்தி, செயலில் மிகவும் பிஸியாக
இருக்கின்றீர்களோ, அந்த சமயம் ஃபுல்ஸ்டாப் என்று டைரக்ஷன்
கொடுங்கள். கர்மத்தைப் பற்றிய எண்ணம் கூட நின்றுவிட வேண்டும்.
இந்த பயிற்சியை ஒரு நொடியேனும் கூட செய்யுங்கள், ஆனால், பயிற்சி
செய்துகொண்டே செல்லுங்கள், ஏனெனில், கடைசி சான்றிதழ் ஒரு
நொடியில் முற்றுப்புள்ளி வைப்பதற்குத் தான் கிடைக்கிறது.
நொடியில் விஸ்தாரத்தை அடக்கிவிடுங்கள், சார சொரூபம்
ஆகிவிடுங்கள், இந்த பயிற்சி தான் கர்மாதீத்தாக ஆக்கும்.