29-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு
ஞானத்தினால் நல்ல விழிப்புணர்வு வந்திருக்கிறது. நீங்கள்
உங்களுடைய 84 பிறவிகள், நிராகார மற்றும் சாகார தந்தையை
அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் அலைந்து திரிவது முடிந்து
விட்டது.
கேள்வி:
ஈஸ்வரனின் வழி தனிப்பட்டது என ஏன்
பாடப்பட்டிருக்கிறது?
பதில்:
ஏனென்றால், பிராமணர்களாகிய
நீங்கள் அனைத்திலிருந்தும் விடுபடக்கூடிய வழியை அவர் கொடுக்
கின்றார். உங்கள் அனைவருடைய வழி. ஒரே வழியாகிவிட்டது. 2. ஈஸ்வர்
தான் அனை வருக்கும் சத்கதி அளிக்கிறார். பூஜாரியிலிருந்து
பூஜைக்குரியவர் ஆக்குகிறார். ஆகவே அவருடைய வழி தனிப்பட்டதாகும்.
குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாரும் புரிந்துக் கொள்ள
முடியாது.
ஓம் சாந்தி.
குழந்தைகளுக்கு ஒருவேளை உடல் நிலை சரியில்லை என்றால் இங்கேயே
தூங்குங் கள் என்று பாபா கூறுவார் என குழந்தைகளுக்குத் தெரியும்.
இதில் எந்தத் தடையும் இல்லை. ஏனென்றால் செல்லமான குழந்தைகள்
அதாவது 5000 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வந்து
சந்திக்கின்றனர். யாரை சந்திக்கின்றனர்? எல்லையற்ற தந்தையை.
நாம் எல்லையற்ற தந்தையை சந்திக்கின்றோம் என்ற நிச்சயம்
இருக்கிறது. ஏனென்றால் ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தை,
இன்னொருவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை என குழந்தைகளாகிய
உங்களுக்குத் தெரியும். துக்கத்தில் அனைவரும் எல்லையற்ற தந்தையை
நினைக்கிறார்கள். சத்யுகத்தில் ஒரேயொரு லௌகீக தந்தையை
நினைக்கிறார்கள். ஏனென்றால், அது சுகதாமம் ஆகும். இந்த
உலகத்தில் பிறப்பு கொடுத்தவருக்கு லௌகீக தந்தை என கூறப்படுகிறது.
பரலௌகீக தந்தை வந்து ஒரு முறை தான் உங்களைத் தன்னுடையவராக
மாற்றுகிறார். நீங்கள் பாபாவுடன் அமர லோகத்தில் இருக்கிறீர்கள்.
அதற்கு பரலோகம், பரந்தாமம் எனக் கூறப்படுகிறது. அது அனைத்தையும்
கடந்த இடம் ஆகும். சொர்க்கத்தை அனைத்தையும் கடந்தது எனக் கூற
முடியாது. இங்கே தான் சொர்க்கமும் நரகமும் இருக்கிறது. புது
உலகிற்கு சொர்க்கம், பழைய உலகிற்கு நரகம் என்று பெயர். இப்போது
இது பதீத உலகம் ஆகும். ஓ, பதீத பாவனா வாருங்கள் என
அழைக்கிறார்கள். சத்யுகத்தில் இவ்வாறு கூற மாட்டார்கள். இராவண
இராஜ்யம் ஆரம்பமானதும் பதீதமாகிறார்கள். இதற்கு 5 விகாரங்களின்
இராஜ்யம் என கூறுகிறார்கள். சத்யுகம் நிர்விகாரி இராஜ்யம் ஆகும்.
பாரதத்திற்கு எவ்வளவு உயர்ந்த மகிமைகள் இருக்கிறது. ஆனால்
விகாரியாக இருக்கும் காரணத் தினால் பாரதத்தின் மகிமை பற்றித்
தெரியவில்லை. பாரதம் சம்பூரண நிர்விகாரியாக இருந்தது. அப்போது
இந்த இலஷ்மி நாராயணர் ஆட்சி செய்தனர். இப்போது அந்த இராஜ்யம்
இல்லை. அந்த இராஜ்யம் எங்கே சென்றது? இது கல்புத்தி
உடையவர்களுக்குத் தெரிவதில்லை. மற்ற அனைவரும் அவரவர் தர்ம
ஸ்தாபகர்களை அறிந்திருக்கிறார்கள். ஒரேயொரு பாரதவாசிகள் தனது
தர்மத்தை யும் அறியவில்லை. தர்ம ஸ்தாபகர்களையும் அறியவில்லை.
மற்ற தர்மத்தினர் தனது தர்மத்தை அறிந்திருக்கிறார்கள். ஆனால்
அவர்கள் மீண்டும் எப்போது ஸ்தாபனை செய்ய வருவார்கள் என்பதை
அறியவில்லை. சீக்கியர்களுக்குக் கூட நம்முடைய சீக்கிய தர்மம்
முதலில் இல்லை எனத் தெரியவில்லை. குரு நானக் வந்து நிறுவினார்
என்றால், சுக தாமத்தில் இருக்க முடியாது. குரு நானக் வந்து
ஸ்தாபனை செய்கிறார். ஏனென்றால் உலகத்தின் வரலாறு புவியியல்
திரும்ப நடக்கிறது. முதலில் கிறிஸ்துவ தர்மம் கூட கிடையாது.
பிறகு ஸ்தாபனையாகியது. முதலில் புது உலகம் இருந்தது. ஒரு தர்மம்
இருந்தது. பாரதவாசிகளாகிய நீங்கள் மட்டும் தான் இருந்தீர்கள்.
ஒரு தர்மம் தான் இருந்தது. பிறகு நீங்கள் 84 பிறவிகள் எடுத்து
எடுத்து நாம் தேவதையாக இருந்தோம் என்பதை மறந்து விட்டீர்கள்.
நாமே மீண்டும் 84 பிறவிகளை எடுக்கின்றோம். நீங்கள் உங்களுடைய
பிறவிகளைப் பற்றி அறிய வில்லை. நானே தெரிவிக்கிறேன் என பாபா
கூறுகின்றார். அரைக் கல்பம் இராம இராஜ்யம் இருந்தது. பிறகு
இராவண இராஜ்யம் ஆரம்பமாகி விட்டது. முதலில் சூரிய வம்சம்
இருந்தது. பிறகு சந்திர வம்சத்தின் இராம இராஜ்யம் இருந்தது.
சூரிய வம்சத்தில் இலஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. யார்
சூரிய வம்சத்தின் லஷ்மி நாராயணனாக இருந்தனரோ அவர்களே 84
பிறவிகள் எடுத்து இப்போது இராவணனின் வம்சமாக மாறியிருக்கின்றனர்.
முன்பு புண்ணிய ஆத்மாக்களின் வம்சம் இருந்தது. இப்போது பாவ
ஆத்மாக்களின் வம்சம் ஆகிவிட்டது. 84 பிறவிகள் எடுக்கின்றனர்.
அவர்களோ 84 லட்சம் எனக் கூறுகின்றனர். இப்போது 84 இலட்சம்
என்பதை யார் சிந்திப்பார்கள். ஆகவே யாரும் சிந்திப்ப தில்லை.
இப்போது நீங்கள் பாபா முன்பு அமர்ந்திருக்கிறீர்கள். நிராகார
தந்தை மற்றும் சாகார தந்தை இருவருமே பாரதத்தில்
பிரசித்தமானவர்கள் என்பதை பாபா உங்களுக்குப் புரிய
வைத்திருக்கிறார். பாடுகிறார்கள், ஆனால் பாபாவை தெரிந்துக்
கொள்ளவில்லை. அறியாமை தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஞானத்தினால் விழிப்புணர்வு ஏற்படுகிறது. வெளிச் சத்தில்
மனிதர்கள் மோதிக் கொள்வதில்லை. இருளில் தான் விழுகின்றனர்.
பாரத வாசிகள் பூஜைக்குரியவராக இருந்தனர். இப்போது பூஜாரி
ஆகிவிட்டனர். இலஷ்மி நாராயணன் பூஜைக் குரியவராக இருந்தனர்
அல்லவா? யாருடைய பூஜை செய்வார்கள்? தனது சித்திரத்தையே வைத்து
தனது பூஜையே செய்ய மாட்டார்கள். அவ்வாறு நடக்காது. நாம் தான்
பூஜைக்குரியவராக இருந்தோம். எப்படி பூஜாரி ஆகிவிட்டோம் என
குழந்தைகள் அறிகிறீர்கள். இந்த விசயங்களை வேறு யாரும்
புரிந்துக் கொள்ள முடியாது. ஆகவே தான் ஈஸ்வரனின் வழி
தனிப்பட்டது எனக் கூறுகிறார்கள். இதையும் பாபாதான் புரிய
வைக்கிறார்.
இப்போது பாபா இந்த முழு உலகத்திலிருந்தும் தனிப்பட்ட வழியைக்
கொடுத்திருக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். உலகம்
முழுவதிலும் பல வழிகள் இருக்கின்றன. இங்கே பிராமணர்களாகிய
உங்களுடையது ஒரு வழியே, ஈஸ்வரனுடைய வழியும் கதியும் தனி. கதி
என்றால் சத்கதி. சத்கதியை அளிக்கும் வள்ளல் ஒரு தந்தை தான்.
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் இராமர் எனப் பாடுகிறார்கள்.
ஆனால் யாரை இராமர் என்று கூறுகிறோம் என தெரியவில்லை. எங்கே
பார்த்தாலும் இராமரே இராமர் இருக்கிறார் எனக் கூறுகிறார்கள்.
இதற்கு அறியாமை இருள் என்று பெயர். இருளில் துக்கம் இருக்கிறது.
வெளிச்சத்தில் சுகம் இருக்கிறது. இருளில் தான் அழைக்கிறார்கள்
அல்லவா? வழிபடுகிறார்கள் என்றால் பாபாவை அழைக்கிறார்கள் அல்லவா!
யாசிக்கிறார்கள் அல்லவா? தேவதைகளின் கோவிலுக்குச் செல்லுதல்
யாசிப்பது போல் அல்லவா? சத்யுகத்தில் யாசிக்க வேண்டிய அவசியம்
இல்லை. யாசிப்பவர்களுக்கு ஒன்றும் இல்லாத ஏழை என்று
கூறப்படுகிறது. சத்யுகத்தில் நீங்கள் எவ்வளவு பணக்காரர்களாக
இருந்தீர் கள்! அவர்களுக்கு செல்வந்தர்கள் என்று பெயர். பாரதம்
இப்போது ஏழையாகி விட்டது. இதையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.
கல்பத்தின் ஆயுளை தவறுதலாக எழுதியதால் மனிதர்களின் தலை திரும்பி
விட்டது. பாபா மிகவும் அன்போடு புரிய வைக்கின்றார். போன
கல்பத்தில் கூட குழந்தைகளுக்குப் புரிய வைத்தார்- பதீத பாவனர்
தந்தையாகிய என்னை நினைத்தால் நீங்கள் துய்மையாகி விடுவீர்கள்.
எப்படி பதீதமாகியிருக்கிறீர்கள். விகாரங்களின் துரு
படிந்திருக்கிறது. அனைத்து மனிதர்களுக் குள்ளும் துரு
படிந்திருக்கிறது. இப்போது அந்தத் துருவை எப்படி நீக்குவது?
என்னை நினையுங்கள். தேக உணர்வை விட்டு ஆத்ம உணர்வுடையவராக
ஆகுங்கள். தன்னை ஆத்மா என உணருங்கள். முதலில் நீங்கள் ஆத்மா,
பிறகு சரீரத்தை எடுக்கிறீர்கள். ஆத்மா அழிவற்றது, சரீரம்
மரணத்தை அடைகிறது. சத்யுகத்திற்கு அமரலோகம் என்று பெயர்.
கலியுகத்திற்கு மரண லோகம் என்று பெயர். முதலில் அமரலோகம்
இருந்தது. பிறகு எப்படி மரண லோகமாகியது என்பது உலகத்தில்
யாருக்கும் தெரியவில்லை. அமர லோகம் என்றால் அகால மரணம் கிடையாது.
அங்கே நீண்ட ஆயுள் இருக்கிறது. அது பரிசுத்தமான உலகம் ஆகும்.
நீங்கள் இராஜரிஷி. தூய்மையானவர்களுக்கு ரிஷி என்று
கூறப்படுகிறது. உங்களை தூய்மையாக யார் மாற்றியது? அவர்களை
சங்கராச்சாரியர் மாற்றுகிறார். உங்களை சிவாச்சாரியர் மாற்றிக்
கொண்டிருக்கிறார். இவர் எதையும் படிக்கவில்லை. இவர் மூலமாக
சிவபாபா வந்து உங்களைப் படிக்க வைக்கின்றார். சங்கராச்சாரியர்
கர்ப்பத்தின் மூலமாக பிறவி எடுத்தார். யாரும் மேலிருந்து
அவதாரம் எடுக்கவில்லை. பாபா இவருக்குள் பிரவேசம் செய்கிறார்.
வருகிறார், போகிறார். அதிபதி யாக இருக்கிறார். யாருக்குள்
வேண்டுமோ அவருக்குள் செல்ல முடியும். யாருக்காவது நன்மை
செய்வதற்காக நான் நுழைகிறேன் என பாபா புரிய வைக்கிறார். பதீத
உடலில் தான் வருகிறேன் அல்லவா? பலருக்கும் நன்மை செய்கிறேன்.
மாயா ஒன்றும் சாதாரணமானது அல்ல. குழந்தை களுக்குப் புரிய
வைத்திருக்கிறார். ஒரு சில நேரங்களில் தியானத்தில் மாயை
நுழைந்து தவறுதலாக பேச வைக்கிறது. ஆகவே, குழந்தைகள் கவனமாக
இருக்க வேண்டும். சிலருக்குள் மாயை நுழைந்து விட்டால் நான்
சிவன், நான் இன்னார் எனக் கூறுகின்றனர். மாயை பெரிய சைத்தான்
ஆகும். புத்திசாலிக் குழந்தைகள் யாருடைய பிரவேசம் என நன்கு
புரிந்து கொள்வார் கள். அவருக்கான சரீரம்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது அல்லவா?. பிறகு மற்றவர்களுடையதை
நாம் ஏன் கேட்க வேண்டும். ஒரு வேளை கேட்கிறீர்கள் என்றால் இந்த
விசயம் சரியா தவறா என பாபாவைக் கேளுங்கள். பாபா உடனடியாகப்
புரிய வைப்பார். பல பிராமணிகள் கூட இந்த விசயங்களை இது என்ன
என்று புரிந்து கொள்ள முடியாது. ஒரு சிலர் அடிக்கவும்
செய்கிறார்கள், திட்டவும் கூட செய்கின்றனர். இப்படியும்
சிலருக்குள் நுழைந்து விடுகிறது. இப்போது பாபா திட்ட மாட்டார்.
இந்த விசயங்களை பல குழந்தைகள் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதல் இரகமான குழந்தைகள் கூட அவ்வப்போது மறந்து போகிறார்கள்.
அனைத்து விசயங்களையும் கேட்க வேண்டும். ஏனென்றால் பலருக்குள்
மாயை பிரவேசம் ஆகிறது. பிறகு தியானத்தில் சென்று என்னென்ன
பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மிகவும் கவனமாக இருக்க
வேண்டும். பாபாவிற்கு முழுமையாக செய்திகளைக் கொடுக்க வேண்டும்.
இவருக்குள் மம்மா வந்திருக்கிறார், இவருக்குள் பாபா
வந்திருக்கிறார் என்பது போன்ற விசயங்களை விட்டுவிட்டு பாபாவின்
ஒரே கட்டளை அவரை மட்டும் நினையுங்கள். அப்பாவையும் சிருஷ்டி
சக்கரத்தையும் நினையுங்கள். படைக்கக் கூடிய மற்றும் படைப்பினை
நினைப்பவர்களின் முகம் தான் எப்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
நிறைய பேர் நினைப்பதே இல்லை. கர்ம பந்தனம் நிறைய இருக்கிறது.
எல்லையற்ற தந்தை கிடைத்து விட்டார். அவர் என்னை நினையுங்கள் என
கூறுகிறார். பிறகு ஏன் அவரை நினைக்கக் கூடாது என விவேகம்
கூறுகிறது. எதுவாக இருந்தாலும் தந்தையைக் கேளுங்கள். கர்ம போகம்
கூட இப்போது இருக்கிறது அல்லவா என பாபா புரிய வைப்பார்.
கர்மாதீத நிலையை அடைந்து விட்டால் நீங்கள் எப்போதும்
மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அது வரை ஏதாவது நடந்து
கொண்டிருக்கிறது. எலிக்கு திண்டாட்டம், பூனைக்கு கொண்டாட்டம்
என்பதைக் கூட அறிவீர்கள். அழிவு வரத்தான் போகிறது. நீங்கள்
பரிஸ்தா ஆகிறீர்கள். இன்னும் சில நாட்களே இந்த உலகில்
இருப்பீர்கள். பிறகு குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஸ்தூல உலகம்
பிடிக்காது. சூட்சும வதனம் மற்றும் மூல வதனம் தான் பிடிக்கும்.
சூட்சும வதன வாசிகளுக்கு பரிஸ்தா என்று பெயர். நீங்கள்
கர்மாதீத நிலையை அடையும் போது கொஞ்சம் காலத்திற்கு அவ்வாறு
நுழைகிறீர்கள். சூட்சும வதனத்தில் எலும்பு தசை கிடையாது.
எலும்பு தசை இல்லை என்றால் என்ன இருக்கும்? வெறும் சூட்சும உடல்
இருக்கும். நிராகாரர் ஆகிவிடுவார்கள் என்பது இல்லை. சூட்சும
ஆகார உடல் இருக்கிறது. அங்கே சைகை மொழி நடக்கிறது. ஆத்மா
சப்தத்திலிருந்து விடுபடுகிறது. அதற்கு சூட்சும வதனம் என்று
பெயர். சூட்சுமமான சப்தம் உருவாகிறது. இங்கே பேசுகிறார்கள்
பிறகு சைகை, பிறகு அமைதி. இங்கே பேச்சு நிகழ்கிறது. இது ஏற்கனவே
நிச்சயிக்கப்பட்ட நாடகத் தின் பாகம் ஆகும். அங்கே அமைதி
இருக்கிறது. அதுவோ சைகை, இதுவோ பேச்சின் உலகம் ஆகும். இந்த
மூன்று லோகங்களையும் நினைக்கக் கூடியவர்கள் ஒரு சிலரே
இருப்பார்கள். குழந்தைகளே தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக
குறைந்ததிலும் குறைந்தது 8 மணி நேரம் கர்ம யோகி ஆகி கர்மம்
செய்யுங்கள், 8 மணி நேரம் ஓய்வெடுங்கள். மற்றும் 8 மணி நேரம்
தந்தையை நினையுங்கள் என பாபா புரிய வைக்கின்றார். இந்த
பயிற்சியினால் நீங்கள் தூய்மையாகி விடுவீர்கள் உறங்குகிறீர்கள்
என்றால் அதை தந்தையின் நினைவு என்று கூற முடியாது. நாம்
பாபாவின் குழந்தைகள் அல்லவா? பிறகு என்ன நினைப்பது என்றும்
நினைக் காதீர்கள். இல்லை. என்னை அங்கு நினையுங்கள் என பாபா
கூறுகின்றார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து என்னை நினையுங்கள்.
யோக பலத்தினால் தூய்மையாகாத வரை அங்கே போக முடியாது.
இல்லையென்றால் தண்டனை அடைந்து போக வேண்டும். சூட்சும வதனம்,
மூல வதனத்திற்குப் போக வேண்டும். பிறகு சொர்க்கத்திற்கு வர
வேண்டும். இன்னும் போகப் போக செய்தி தாள்களில் வெளிவரும்.
இப்போது நிறைய நேரம் இருக்கிறது. என பாபா புரிய
வைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது.
தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என எவ்வளவு பாரதத்தில்
இருக்கிறது. இப்போது செய்திதாள்கள் மூலமாக தான் ஒலி எழும்.
என்னை நினைத்தால் உங்களின் பாவங்கள் விலகும் என பாபா கூறுகிறார்.
ஓ பதீத பாவனா, விடுவிப்பவரே எங்களை துக்கத்திலிருந்து
விடுவியுங்கள் என அழைக்கிறார்கள். நாடகத்தின் படி உலகம் அழிய
வேண்டும என குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இந்த
சண்டைக்குப் பிறகு அமைதி மயமாகி விடும். சுகதாமம் ஆகிவிடும்.
அனைத்தும் உள்ளுக்குள் போய்விடும். சத்யுகத்தில் ஒரு தர்மம்
தான் இருக்கிறது. கலியுகத்தில் பல தர்மங்கள் இருக்கின்றது. இதை
யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். முதன் முதலில் ஆதி
சனாதன தேவி தேவதா தர்மம் இருந்தது. சூரிய வம்சம் இருந்த போது
சந்திர வம்சம் இல்லை. பிறகு சந்திர வம்சம் தோன்றுகிறது. பிறகு
இந்த தேவி தேவதா தர்மம் மறைந்து போகிறது. பிறகு மற்ற
தர்மத்தினர் வருகிறார்கள். அவர்களுடைய அமைப்பு வளர்ச்சி அடையும்
வரை தெரிவதில்லை. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் சிருஷ்டியின்
முதல், இடை, கடையைப் புரிந்து கொள்கிறீர்கள். ஏணிப்படியில்
பாரதவாசிகளை மட்டும் ஏன் காண்பித்துள்ளீர் என உங்களைக்
கேட்பார்கள். இந்த விளையாட்டு பாரதத்தில் தான் எனக் கூறுங்கள்.
அரைக் கல்பம் அவர்களுடைய பார்ட், பிறகு துவாபர், கலியுகத்தில்
மற்ற தர்மங்கள் அனைத்தும் வருகின்றன. நாடக சக்கரத்தில் இந்த
ஞானம் இருக்கிறது. நாடகச் சக்கரம் மிக மிக நன்றாக இருக்கிறது.
சத்யுகம் திரேதா உயர்ந்த உலகம். துவாபர கலியுகம் கீழான உலகம்.
இப்போது நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். இது ஞான விசயங்கள்
ஆகும். இந்த 4 யுகங்களின் சக்கரம் எப்படி சுழல்கிறது என
யாருக்கும் தெரியவில்லை. சத்யுகத்தில் இந்த இலஷ்மி நாராயணனின்
இராஜ்யம் இருக்கிறது. சத்யுகத்திற்குப் பிறகு திரேதா வரும்.
திரேதாவிற்கு பிறகு துவாபர கலியுகம் வரும் என இவர்களுக்குத்
தெரியவில்லை. இங்கே கூட மனிதர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் கூறுகிறார்கள். சக்கரம் எப்படி சுழல்கிறது என்பது
யாருக்கும் தெரியவில்லை. ஆகவே முழு கீதையின் மீதும் கவனம்
வையுங்கள் என பாபா புரிய வைக்கிறார். உண்மையான கீதையைக்
கேட்பதால் சொர்க்கவாசி ஆகிறார்கள். இங்கே சிவதந்தையே
கூறுகின்றார். அங்கே மனிதர்கள் படிக்கிறார்கள். அனைவருக்கும்
முன் இந்த கீதையைக் கூட முத-ல் நீங்கள் படிக்கிறீர்கள்.
பக்தியில் கூட முதன் முதலில் நீங்கள் செல் கிறீர்கள் அல்லவா?
சிவனின் பூஜாரியாக முதலில் நீங்கள் ஆகிறீர்கள். நீங்கள் முதன்
முதலில் தூய்மையான ஒரு சிவபாபாவின் பூஜை செய்ய
வேண்டியிருக்கிறது. சோம்நாத் கோவிலைக் கட்ட வேறு யாருக்கும்
சக்தி கிடையாது. போர்டில் எத்தனை விதமான விசயங்களை எழுதலாம்.
பாரத வாசிகள் உண்மையான கீதையைக் கேட்பதால் உண்மையான
கண்டத்திற்கு அதிபதியாகலாம் என்று கூட எழுதலாம்.
நாம் உண்மையான கீதையைக் கேட்டு சொர்க்கவாசி ஆகிக்
கொண்டிருக்கிறோம் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். நீங்கள் புரிய வைக்கும் போது ஆம், சரி
என்கிறார்கள். பிறகு வெளியே சென்றதும் முடிந்தது. அங்கே கேட்டது
அங்கேயே இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானத்தை நினைத்து சதா
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நினைவு யாத்திரையினால் தனது
பழைய கர்ம பந்தனங்களை அழித்து கர்மாதீத் நிலையை அடைய வேண்டும்.
2. காட்சி தியானம் போன்றவைகளில் மாயை நிறைய நுழைகிறது. ஆகவே
கவனமாக இருக்க வேண்டும். பாபாவிற்கு செய்திகளைக் கூறி ஆலோசனை
பெற வேண்டும். எந்த தவறும் செய்யக் கூடாது.
வரதானம்:
தன்னுடைய சுபபாவனை மூலமாக பலமற்ற ஆத்மாக்களுக்குள் பலத்தை
நிறைக்கக்கூடிய சதா சக்தி சொரூபம் ஆகுக.
சேவாதாரி குழந்தைகளுடைய விசேஷ சேவையே - சுயம் சக்தி சொரூபமாக
இருப்பது மற்றும் அனைவரையும் சக்தி சொரூபம் ஆக்குவது அதாவது
பலமற்ற ஆத்மாக்களுக்குள் பலத்தை நிறைப்பது என்பதாகும். இதற்காக
சதா சுபபாவனை மற்றும் சிரேஷ்ட விருப்பத்தின் சொரூபம் ஆகுங்கள்.
யார் மீதாவது பாவனை வைத்து வைத்து அவர்களுடைய மனதிற்குப்
பிடித்தமான வராக ஆகிவிடுவது என்பது சுபபாவனையின் அர்த்தம் அல்ல.
இந்தத் தவறை செய்யக் கூடாது. சுபபாவனையும் கூட எல்லையற்றதாக
இருக்க வேண்டும். ஒருவருக்காக விசேஷமான பாவனை வைப்பது கூட
நஷ்டம் விளைவிப்பதாகும், ஆகையினால், எல்லையற்ற நிலையில்
நிலைத்திருந்து பலமற்ற ஆத்மாக்களை தனக்குக் கிடைத்துள்ள
சக்திகளின் ஆதாரத்தினால் சக்தி சொரூபம் ஆக்குங்கள்.
சுலோகன்:
அலங்காரம் பிராமண வாழ்க்கையின் சிருங்காரம் (ஒப்பனை, மேக்கப்)
ஆகும் - ஆகையினால், அலங்காரி ஆகுங்கள், தேக அகங்காரியாக அல்ல.
அவ்யக்த சமிக்ஞை - சத்தியம் மற்றும் பண்பு நிறைந்த கலாச்சாரத்தை
தனதாக்குங்கள்
தேவையில்லாமல் கோபம் வருவதில்லை, ஆனால், யாராவது பொய்
பேசுகின்றார்கள் என்றால் கோபம் வந்துவிடுகின்றது என்று சில
குழந்தைகள் கூறுகின்றார்கள். அவர் பொய் பேசினார், தாங்கள்
கோபத்துடன் பேசினீர்கள் என்றால் இருவரில் சரியானவர் யார்?
நாங்கள் கோபப்பட வில்லை, எங்களுடைய சப்தம் தான் பெரியதாக உள்ளது,
சப்தம் தான் அவ்வாறு வேகமாக இருக்கின்றது என்று சில குழந்தைகள்
சாதுரியமாகக் கூறுகின்றார்கள். ஆனால், அறிவியல் சாதனங்களால்
சப்தத்தை குறைக்கவும் மற்றும் அதிகப்படுத்தவும் முடிகின்றது
என்றால் அமைதி சக்தியினால் தன்னுடைய சப்தத்தின் வேகத்தை
குறைக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ முடியாதா என்ன?