29-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! பதீதமான
உலகத்திலிருந்து தொடர்பை விடுத்து ஒரு பாபாவுடன் புத்தி யோகத்தை
இணைத்தீர்களேயானால் மாயையிடம் தோல்வியடைய முடியாது.
கேள்வி:
சக்திசாலியான தந்தை இருந்தும்
கூட இந்த யக்ஞத்தில் ஏன் தடைகள் ஏற்படுகின்றது? அதற்கான காரணம்
என்ன?
பதில்:
இந்த தடைகளானது நாடகத்தின்படி
அவசியம் வரத்தான் வேண்டும். ஏனென்றால் எப்பொழுது இந்த
யஞ்யத்தில் அசுரர்கள் தடைகளை ஏற்படுத்துகின்றார்களோ,
அப்பொழுதுதான் பாவத்தின் பானை நிறையும். இதில் பாபா எதுவுமே
செய்ய முடியாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. தடைகள்
ஏற்படத்தான் செய்யும். ஆனால், நீங்கள் அதனைப் பார்த்து பயப்பட
வேண்டாம்.
பாடல்:
யார் தாயும் தந்தையுமாக
இருக்கின்றார்கள்..
ஓம் சாந்தி.
குழந்தைகள் எல்லையற்ற தந்தையின் கட்டளையைக் கேட்டீர்கள். அவர்
தான் இந்த உலகத்தின் தாய் தந்தையானவர். இங்கு உங்களுடைய
சம்மந்தம் தேகத்தினுடையதாக உள்ளது. ஏனென்றால், தேகத்தினுடைய
முதல் சம்மந்தம் தாயுடன் அதன் பிறகு தந்தையுடன் ஏற்படு கின்றது.
பிறகு சகோதரன், உறவுகள் வருகின்றது. இந்த உலகத்தின் தாய்
தந்தையிடமிருந்து புத்தி யோகத்தை அகற்றிவிடுங்கள். இந்த
உலகத்தில் சம்மந்தம் வைக்காதீர்கள். ஏனென்றால், இது
கலியுகத்தில் சீ, சீ உறவுகளே! ஜெகம் என்றால் உலகம். இந்த பதீத
உலகத்திலிருந்து புத்தியோகத்தை அகற்றி என் ஒருவரிடம் இணைத்து
விடவும். மேலும் புது உலகத்தின் பக்கம் இணைத்து விடவும்.
ஏனென்றால், நீங்கள் என்னிடம் வர வேண்டும். தொடர்பை இணைக்க
வேண்டிய விஷயம்தான் வேறு எதுவும் கிடையாது, வேறு எந்த கஷ்டமும்
கிடையாது. யாருக்கு பாபாவினுடைய கட்டளை கிடைக்கின்றதோ அவர்கள்
தொடர்பை இணைப்பார்கள். சத்யுகத்தில் முதல் சம்மந்தம் மிக
நன்றாக இருக்ககும். சதோபிரதானமாக இருக்கும். பிறகு மறுபிறவி
எடுத்து எடுத்து கீழே இறங்கிவிட்டீர்கள். பிறகு சுகத்தின்
சம்பந்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடுகின்றது. இப்பொழுது
இந்த பழைய உலகத்தின் சம்மந்தத்தை முழுமையாக அகற்ற வேண்டும்.
என்னுடன் சம்மந்தம் வையுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். மற்றபடி என்னவெல்லாம் தேக சம்மந்தம்
இருக்கின்றதோ அவை யனைத்தையும் விட்டுவிடுங்கள். வினாசம் என்பது
ஏற்படத்தான் போகின்றது. பாபா, யாரை பரம்பிதா என்று
கூறுகின்றார்களோ, அவரே நாடகத்தின்படி இப்பொழுது சேவை
செய்கின்றார் என்பது குழந்தை களுக்குத் தெரியும். அவரும் கூட
நாடகத்தின் பந்தனத்தில் கட்டுப்பட்டவராக உள்ளார். அவர் சர்வ
சக்திவான் என்று மனிதர்கள் நினைக்கின்றார்கள். எப்படி கிருஷ்ணரை
சர்வ சக்திவான் என்று கூறுகின்றார்கள். அவருக்கு சுயதரிசன
சக்கரத்தைக் காட்டியிருக் கின்றார்கள். இதன் மூலமாக அவர் தலையை
வெட்டினார்கள் என்று நினைக்கின்றார்கள். தேவதைகள் ஹிம்சைக் கான
காரியத்தை எவ்வாறு செய்வார்கள் என்பதை அவர்கள் புரிந்துக்
கொள்வதில்லை. அவர்கள் இதனை செய்ய முடியாது. அஹிம்சா பரமோதர்மம்
என்பது தேவதைகளின் மகிமையாக உள்ளது. அவர்களுக்கு துக்கம்
கொடுப்பதற்கான எண்ணம் எங்கிருந்து வர முடியும்? யாருக்கு என்ன
புத்தியில் வந்ததோ அதனை வந்து எழுதிவிட்டார்கள். எவ்வளவு
தர்மத்தின் (மதம்) நிந்தனையாகி விட்டது. இந்த சாஸ்திரங்களில்
மாவில் உப்பளவு தான் உண்மை உள்ளது என்று பாபா கூறுகின்றார்.
ருத்ர ஞான வேள்வி படைக்கப்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது. அதில்
அசுரர்கள் தடைகளை ஏற்படுத்தினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அபலைகளுக்கு கொடுமைகள் நடந்தது என்றும் கூறியுள்ளார்கள். இது
சரியாக எழுதப்பட்டது தான். சாஸ்திரங்களில் எது சத்தியம்? எது
பொய் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். இந்த ருத்ர ஞான
யக்ஞத்தில் தடைகள் வரத்தான் செய்யும் என்று பகவான் தானே கூறு
கின்றார். இது நாடகத்தில் பதிவானது. பரமாத்மா உடன் இருக்
கின்றார் என்றால் அனைத்து தடைகளையும் அகற்றலாமே என்று சொல்ல
முடியாது. இதில் பாபா என்ன செய்ய முடியும்? நாடகத்தில் இது
நடக்கத்தான் வேண்டும். அனைவரும் இதில் தடைகளை ஏற்படுத்தினால்
தானே பாவத்தின் பானை நிறையும். நாடகத்தில் எது பதிவாகி யுள்ளதோ
அது நடந்தே தீரும். அசுரர்களின் தடை அவசியம் ஏற்படும்.
தன்னுடைய இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. அரை கல்பம்
மாயையின் இராஜ்யத்தில் மனிதர்கள் எவ்வளவு தமோபிரதான
புத்தியுடையவராக, தாழ்ந்தவர்களாக ஆகி விட்டார்கள். பிறகு
அவர்களை சிரேஷ்டாச்சாரியாக்குவது (உயர்ந்தோர்) பாபாவினுடைய
காரியம். தாழ்ந்தவர்கள் ஆவதற்கு அரைக் கல்பம் ஆகின்றது. பிறகு
ஒரு வினாடியில் பாபா சிரேஷ்டாச்சாரி யாக்குகின்றார். நிச்சயம்
வருவதில் அதிக நேரம் ஆகின்றதா என்ன? அப்படியும் சில நல்ல
குழந்தைகளும் இருக்கின்றார் கள். அவர்களுக்கு நிச்சயம்
ஏற்பட்டவுடன் உறுதிமொழி செய்கின்றார்கள். ஆனால் மாயை பயில்வான்
அல்லவா? ஏதாவது மனதில் புயலை ஏற்படுத்துகின்றது. கர்மத்தில்
கொண்டுவராமல் இருக்க முயற்சி செய்யவும். அனைவரும் முயற்சி
செய்து கொண்டிருக்கின்றீர்கள். கர்மாதீத் நிலை (செயல்களுக்கு
அப்பாற்பட்ட) இன்னும் அடையவில்லை. ஏதாவது தவறுகள் கர்மேந்திரி
யங்கள் மூலமாக நடந்துவிடு கின்றது. கர்மாதீத் நிலையடைய இடை
இடையே ஏதாவது தடைகள் ஏற்படும். முயற்சி செய்து கடைசியில் தான்
கர்மாதீத் நிலை ஏற்படும். பிறகு இந்த சரீரத்தில்
இருக்கமாட்டீர்கள். எனவே நேரம் ஆகின்றது. தடைகள் ஏதாவது வந்துக்
கொண்டேதான் இருக்கும். எங்காவது மாயை தோல்வியடைய
வைத்துவிடுகின்றது. பாக்ஸிங் அல்லவா? பாபா நினைவில் இருக்க
விரும்புகின்றார்கள். ஆனால் இருக்க முடிவதில்லை. இருக்கின்ற
சிறிது நேரத்தில் இந்த நிலையை தாரணை செய்யவும். யாரும்
பிறவியிலேயே இராஜாவாக வருவதில்லை. சிறிய குழந்தை கொஞ்சம்
கொஞ்சமாக வளர்ந்து பெரியவன் ஆகின்றது. அதற்கும் சிறிது காலம்
ஆகுமல்லவா? இப்பொழுது இன்னும் சிறிது நேரமே உள்ளது. அனைத்து
ஆதாரமும் முயற்சி யில்தான் உள்ளது. நான் எப்படியாவது
பாபாவிடமிருந்து அவசியம் ஆஸ்தியை அடைய வேண்டும் இதில் கவனம்
வைக்க வேண்டும். மாயையை அவசியம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே
தான் உறுதிமொழி எடுக் கின்றார்கள். மாயை குறைவானது அல்ல. மிக
இலோசான நிலையில் கூட வருகின்றது. பலசாலி முன்னால் மிக நன்றாக
சண்டையிடுகின்றது. இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரங்களிலும்
கிடையாது. குழந்தை களுக்கு இப்பொழுது நான் தான் புரிய
வைக்கின்றேன். பாபா மூலமாக நீங்கள் சத்கதியை அடைகின்றீர்கள்.
பிறகு இந்த ஞானம் நிச்சயம் இருக்காது. ஞானத்தின் மூலமாக சத்கதி
கிடைக்கின்றது. சத்யுகத்தைத்தான் சத்கதி என்று
சொல்லப்படுகின்றது.
எனவே குழந்தைகளுக்கு இலட்சியம் கிடைத்துள்ளது. நாடகத்தின்படி
மரம் வளர்வதற்கு நேரம் ஆகின்றது. தடைகள் நிறைய வருகின்றது.
மாற்றம் ஏற்படத்தான் வேண்டும். சோழியிலிருந்து வைரத்தைப் போல
ஆக வேண்டும். இரவுக்கும் பகலுக்கும் இருக்கும் வேறுபாடு
இருக்கின்றது. தேவதைகளுக்கு கோவில்கள் இன்னும் உருவாக்கிக்
கொண்டே இருக்கின்றார்கள். பிராமணர்கள் நீங்கள் இப்பொழுது
கோவில்கள் கட்டுவதில்லை. ஏனென்றால் அது பக்தி மார்க்கம்.
இப்பொழுது பக்தி மார்க்கம் முடிந்து ஞான மார்க்கத்தின் மூலமாக
தெய்வீக உலகம் வரப் போகின்றது என்பது உலகத்தில் யாருக்கும்
தெரியாது. இது குழந்தைகளுக்கு மட்டும்தான் தெரியும். கலியுகம்
இன்னும் குழந்தையாக இருக்கின்றது என்று மனிதர்கள்
நினைக்கின்றார்கள். அவர்களுக்கு முழு ஆதாரமும் சாஸ்திரத்தில்
உள்ளது. குழந்தைகளுக்கு பாபா வந்து அனைத்து சாஸ்திரத்தின்
சாரத்தை புரிய வைக்கின்றார். இது வரையில் எதையெல்லாம்
படித்தீர்களோ அவையனைத்தையும் மறந்து விடுங்கள் என்று பாபா
கூறுகின்றார். அதன் மூலம் யாரும் சத்கதியடைவதில்லை. ஏதோ சிறிது
அல்பகால சுகம் கிடைத்தது. சதா சுகம் கிடைத்தது என்பதில்லை. இது
அல்பகால காக்கையின் கழிவுக்குச் சமமான சுகம். மனிதர்கள்
துக்கத்தில் தான் இருக்கின்றார்கள். சத்யுகத்தில் துக்கத்தின்
பெயர் அடையாளமே இருக்காது என்பது மனிதர் களுக்குத் தெரியாது.
அவர்கள் சத்யுகத்திலும் அதுபோன்ற விஷயங்களை எழுதிவிட்டார்கள்.
அங்கு கிருஷ்ண புரியில் கம்சன் இருந்தான் என்றெல்லாம்
எழுதிவிட்டார்கள். கிருஷ்ணர் சிறையில் பிறவி எடுத்தார்
என்றெல்லாம் எழுதி விட்டார்கள். இவை அனைத்தும் கட்டுகதைகள்
என்பதை பாபா வந்து இப்பொழுது சத்தியத்தைப் புரிய வைத்த பிறகு
நாம் புரிந்துக் கொண்டோம். பாபா வந்துதான் சத்திய கண்டத்தை
ஸ்தாபனை செய்கின்றார். சத்திய கண்டத்தில் எவ்வளவு சுகம்
இருந்தது. பொய்யான கண்டத்தில் எவ்வளவு துக்கம் இருக்கின்றது.
இவையனைத் தையும் மறந்துவிட்டார்கள். நாம் ஸ்ரீமத்படி நடந்து
சத்திய மான கண்டத்தை ஸ்தாபனை செய்து அதில் எஜமானன் ஆகின்றோம்
என்பது நமக்குத் தெரியும்.
இப்படி ஸ்ரீமத்படி நடப்பதன் மூலமாக நீங்கள் உயர்ந்த பதவியடைய
முடியும். நாம் இந்த கல்வியைக் கற்று சூரிய வம்சத்தில் மகாராஜா,
மகாராணி ஆகின்றோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியும். உயர்ந்த
பதவியடைய அனைவருடைய உள்ளத்திலும் ஆசை உள்ளது. அனைவரும் முயற்சி
செய்கின்றீர்கள். நல்ல பக்தர்கள் (தேவதைகளின்) சித்திரங்களை
தன்னுடன் வைத்துக் கொள்வார்கள். ஏனென்றால், அடிக்கடி அந்த
நினைவு இருக்கும் என்பதற்காக. திரிமூர்த்தி சித்திரத்தை
தன்னுடன் வைத்துக் கொண்டால் அடிக்கடி நினைவு வரும். பாபாவை
நினைவு செய்வதன் மூலமாக நாம் சூரிய வம்சத்தில் வர முடியும்.
காலை எழுந்ததும் பார்வை அதன் மீது செல்லும். இது கூட ஒரு
முயற்சி தான். பாபா வழி தருகின்றார். நல்ல நல்ல பக்தர்கள்
மிகுந்த முயற்சி செய்கின்றார்கள். கண்களை விழித்ததும் கிருஷ்ணரை
நினைக்க வேண்டும் என்பதற்காக அவருடைய போட்டோவை வைத்துக்
கொள்கின்றார்கள். உங்களுக்கு மேலும் சகஜமானது. சகஜமான நினைவு
வரவில்லை மாயை தொல்லை தருகின்றது என்றால், இந்த சித்திரங்கள்
உதவியாக இருக்கும். சிவபாபா நம்மை பிரம்மா மூலமாக
விஷ்ணுபுரிக்கு எஜமானன் ஆக்கு கின்றார். நாம் பாபா மூலமாக
உலகத்தின் எஜமானர் ஆகின்றோம். இந்த நினைவில் இருந்தாலே நிறைய
உதவி கிடைக்கும். பாபா உன் நினைவு அடிக்கடி மறந்து விடுகின்றது
என்று எந்த குழந்தைகள் கூறுகின்றார்களோ, அவர்களுக்கு
சித்திரத்தை முன்னால் வைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது பாபா
மற்றும் ஆஸ்தியின் நினைவு வரும் என்று பாபா வழி கூறுகின்றார்.
ஆனால் பிரம்மாவை நினைவு செய்யக் கூடாது. திருமணம்
நிச்சயமாகிவிட்டது. பிறகு இடைத்தரகரை யாராவது நினைவு
செய்வார்களா என்ன! நீங்கள் பாபாவை நன்றாக நினைவு செய்தீர்கள்
என்றால் அவரும் உங்களை நினைவு செய்வார். நினைவின் மூலமாகத் தான்
நினைவு கிடைக்கின்றது. இப்பொழுது நாயகனுடைய தொழில் என்னவென்பது
உங்களுக்குத் தெரியும். சிவனுக்கு எவ்வளவு பக்தர்கள் உள்ளார்கள்.
சிவ சிவா என்று கூறிக் கொண்டேயிருக்கின்றார்கள். ஆனால் அது
தவறானது. சிவகாசி, விஷ்வநாத் கங்கா, என்றெல்லாம்
கூறுகின்றார்கள். நதிக்கரையில் சென்று அமர்ந்துவிடுகின்றார்கள்.
ஞானக்கடல் பாபாதான் என்பதைப் புரிந்து கொள்வதில்லை. பனாரஸைப்
பார்பதற்காக நிறைய அயல்நாட்டவர் செல்கின்றார்கள்; பெரிய பெரிய
கால்வாய்கள், ஆறுகள் இருந்தாலும் பாபாவினுடைய கோவில் அனைவரையும்
கவர்ந்திழுக்கின்றது. அனைவரும் அவரிடம் செல்கிறார்கள். கோவில்
யாரிடமும் செல்லாது. கோவிலில் இருக்கும் தேவதைகள் கவர்ந்து
இழுக்கின்றார்கள். சிவபாபா கூட கவர்ந்து இழுக்கின்றார். நம்பர்
ஒன் சிவபாபா! பிறகு இந்த பிரம்மா, சரஸ்வதி தான் விஷ்ணு
ஆகின்றார்கள். விஷ்ணுவிலிருந்து பிரம்மா. பிராமண னிலிருந்து
விஷ்ணுபுரியின் தேவதைகள் ஆகின்றீர்கள். விஷ்ணுபுரி தேவதை
யிலிருந்து பிறகு பிராமணன் ஆகின்றீர்கள். நாம் தேவதையாகிக்
கொண்டிருக்கின்றோம் எனவே பிறருக்கும் வழி கூற வேண்டும். இதுதான்
நம்முடைய தொழில் ஆகும். மற்ற அனைவரும் காட்டிற்கு அழைத்துச்
செல்பவர்கள். நீங்கள் காட்டிலிருந்து விடுபட வைத்து
தோட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். சிவபாபா வந்து
முள்ளிலிருந்து மலராக ஆக்குகின்றார். நீங்களும் இந்த
தொழிலைத்தான் செய்கின்றீர்கள். இந்த விஷயங் களை நீங்கள்தான்
புரிந்திருக்கின்றீர்கள். யாரும் இராஜா இராணி இங்கில்லை நீங்கள்
அவர்களுக்கு புரியவைப் பதற்கு. பாண்டவர்களுக்கு 3 அடி நிலம்
கூட கிடைக்கவில்லை என்ற புகழ் இருக்கின்றது. பாபா
சக்திசாலியானவர் அவர் உலக இராஜ்யத்தை கொடுத்திருந்தார்.
இப்பொழுது அதே நடிப்பை மீண்டும் நடிக்கின்றார். பாபா குப்தமாக
உள்ளார். கிருஷ்ணருக்கு எந்த தடைகளும் வரமுடியாது. இப்பொழுது
பாபா வந்திருக்கின்றார், அவரிடம் வந்து ஆஸ்தியடைய வேண்டும்.
இதற்காகத்தான் முயற்சி செய்ய வேண்டி யுள்ளது. நாளுக்கு நாள்
புதுப் புது பாயிண்ட்ஸ் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது.
கண்காட்சியில் புரிய வைக்கும் போது நல்ல பிரபாவம்
வெளிப்படுகின்றது. அதனை நாம் பார்க்கின்றோம். கண்காட்சி யில்
நல்ல பிரபாவம் ஏற்படுகின்றதா? புரொஜக்டர் சேவையில் நல்ல
பிரபாவம் ஏற்படுகின்றதா? என்பதைப் பார்க்க வேண்டும்.
கண்காட்சியில் புரிய வைக்கும் போது முகத்தை பார்த்து புரிய
வைக்க முடியும். புரிந்திருக்கின்றீர்கள் பாபா தான் கீதையின்
பகவான். எனவே பாபாவிடமிருந்து சொர்க்க ஆஸ்தியடைய முயற்சி செய்ய
வேண்டும். 7 நாட்கள் கொடுக்க வேண்டும், எழுதி வாங்குங்கள்.
இல்லையென்றால் வெளியில் செல்லும்போது மாயை மறக்க வைத்துவிடும்.
நாம் தான் 84 பிறவிகள் எடுத்திருக் கின்றோம். இப்பொழுது
வீட்டிற்குச் செல்ல வேண்டும். தமோபிர தானத்திலிருந்து சதோபிர
தானமாக வேண்டும். இந்த சித்திரங்கள் உடன் இருக்க வேண்டும் மிக
நல்ல சித்திரங்கள். இலட்சுமி நாராயணன் இந்த இராஜ்யத்தை எப்படி?
எப்பொழுது? அடைந்தார்கள் என்பது பிர்லாவுக்குக் கூட தெரியாது.
ஆனால் உங்களுக்குத் தெரியும் எனவே மிகுந்த சந்தோஷம் இருக்க
வேண்டும். இலட்சுமி நாராயணனின் சித்திரத்தை எடுத்து உடனே
யாருக்காவது புரிய வைக்கவும். அவர்கள் இந்த பதவி எப்படி
அடைந்தார்கள்? இந்த விஷயங்கள் புத்தியின் மூலம் புரிந்துக்
கொண்டு புரிய வைப்பதற்கான விஷயங்கள். இலட்சியம் மிக உயர்ந்தது.
யாருக்கு எப்படி டீச்சர் இருக்கின்றார்களோ? அப்படித்தான் சேவை
செய்கின்றார்கள். தன்னுடைய நிலையின் அனுசாரமாக எந்தெந்த டீச்சர்
எப்படி பரிபாலனை செய்கின்றார்கள் என்பதை பாபா பார்க்கின்றார்.
போதை அனைவருக்கும் உள்ளது. ஆனால் புரிய வைப்பவர் எவ்வளவு
சக்திசாலியாக உள்ளார் களோ அவ்வளவு நல்ல சேவை நடக்கும் என்று நம்
புத்தி கூறுகின்றது. அனைவரும் புத்திசாலி யாக இருப்பதில்லை. அனை
வருக்கும் ஒரே மாதிரியான டீச்சர் கிடைப்பதில்லை. எப்படி
கல்பத்திற்கு முன்பு நடந்ததோ அப்படியே நடந்துக்
கொண்டிருக்கின்றது. தன்னுடைய ஸ்திதியை நிலைப்படுத்துங்கள் என்று
பாபா கூறுகின்றார். கல்ப கல்பத்திற்கான விளையாட்டு.
கல்பத்திற்கு முன்பு எப்படி முயற்சி செய்தோமோ அப்படியே செய்து
கொண்டிருக்கின்றோம் என்பதைப் பார்க் கின்றோம். எது நடந்தாலும்
கல்பத்திற்கு முன்பு மாதிரியே என்று கூறுகின்றோம் அல்லவா? பிறகு
குஷியும் இருக்கின்றது, அமைதியும் இருக்கின்றது. கர்மங்களை
செய்தாலும் பாபாவை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார்.
புத்தியின் தொடர்பு அங்கே மாட்டியிருந்தால் மிகுந்த நன்மை
கிடைக்கும். யார் செய்கின்றார்களோ? அவர்களே அடைவார்கள்.
நல்லதைச் செய்தால் நல்லதே கிடைக்கும். மாயையின் வழிப்படி அனை
வரும் தீயதையே செய்து வருகின்றார்கள். இப்பொழுது ஸ்ரீமத்
கிடைத்திருக்கின்றது. நல்லதை செய்தீர் களென்றால் நன்மை ஏற்படும்.
ஒவ்வொருவரும் தனக்காகவே முயற்சி செய்கின்றார்கள். எப்படி
செய்கின்றார்களோ அப்படியே அடைவார்கள். ஏன் நாம் யோகத்தில்
இருந்து சேவை செய்யக்கூடாது. யோகத்தின் மூலம் ஆயுள் அதிகமாகும்.
நினைவு யாத்திரையின் மூலம் ஆயுள் அதிகமாகின்றதென்றால் ஏன் நாம்
பாபாவின் நினைவில் இருக்கக்கூடாது? சரியான விஷயம் என்றால் ஏன்
நாம் அதற்கு முயற்சி செய்ய கூடாது? ஞானம் என்பது முற்றிலும்
சகஜமானது. சிறிய குழந்தைகள் கூட நன்றாகப் புரிந்துக் கொண்டு
புரிய வைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் யோகியாக இல்லையல்லவா?
பாபாவை நினைவு செய்யுங்கள் என்று பக்கா (உறுதி) செய்யுங்கள்.
அடிக்கடி மறந்து விடுகின்றது என்று கூறுபவர். சித்திரத்தை
வைத்துக் கொள்வது நல்லது. அதிகாலையில் சித்திரத்தைப்
பார்த்ததும் நினைவு வந்துவிடும். சிவபாபாவிடமிருந்து நாம்
விஷ்ணுபுரிக்கான ஆஸ்தியை அடைந்துக் கொண்டிருக்கின்றோம். இந்த
திரிமூர்த்தி சித்திரம் மிக முக்கியமானது. அதனுடைய அர்த்தத்தை
நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். உலகத்தில் இப்படிப்பட்ட
மும்மூர்த்திகள் படம் யாரிடமும் இல்லை. இது மிக சகஜமானது. நாம்
எழுதினாலும் எழுதாவிட்டாலும். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, விஷ்ணு
மூலமாக பாலனை இதனை அனைவருமே புரிந்துள்ளனர். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மாயையினுடைய யுத்தத்தில் ஒருபோதும் தோல்வியடையக் கூடாது
இதில் கவனம் தேவை.கல்பத்திற்கு முன்பு செய்த நினைவின் மூலமாக
தன்னுடைய நிலையை உறுதியாக ஆக்கவும். குஷி மற்றும் அமைதியாக
இருக்கவும்.
2. தனக்கு நன்மை செய்வதற்காக ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். இந்த
பழைய உலகத்திலிருந்து தொடர்பை விட்டுவிட வேண்டும். மாயையின்
புயலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சித்திரத்தை முன்னால்
வைத்து பாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யவும்.
வரதானம்:
சிந்தனை மூலம் பாபாவின் சொத்தைத் தனதாக்கிக்
கொள்ளக் கூடிய திவ்ய புத்திவான் ஆகுக.
பாபாவிடமிருந்து என்னென்ன கஜானாக்கள் கிடைத்திருக்கின்றனவோ,
அவற்றை மனனம் செய்வீர்களானால் உள்ளுக்குள் நிறைந்து கொண்டே
போகும். சொத்துகள் அனை வருக்கும் ஒரே மாதிரி தான் கிடைத்துள்ளன.
ஆனால் யார் மனனம் செய்து அதைத் தனதாக்குகிறாரோ, அவருக்கு அதன்
நஷா மற்றும் குஷி இருக்கும். எனவே சொல்லப் படுகிறது - தன்னுடைய
விசேஷ குணங்களை எந்த அளவுக்கு நினைவு செய்கிறீர்களோ, அந்த
அளவுக்கு போதை அதிகரிக்கும் (ஞான சிந்தனை செய்யும் போதும் போதை
அதிகரிக்கும்) யார் ஞான சிந்தனையின் போதையில் இருக்கிறாரோ, அவரை
உலகத்தின் எந்த ஒரு பொருளோ, பிரச்சினையோ கவர்ந்து இழுக்க
முடியாது. அவருக்கு திவ்ய புத்தியின் வரதானம் தானாகவே கிடைத்து
விடும்.
சுலோகன்:
மனதின் குழப்பத்தை முடித்து விடுவதற்கு
நிர்ணய சக்தியை அதிகப் படுத்துங்கள்.
அவ்யக்த சமிக்ஞை : மகான் ஆகவேண்டும் என்றால் இனிமை மற்றும்
பணிவின் குணத்தை தாரணை செய்யுங்கள்.
நாமே எப்போதும் வளைந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் என்று
அந்த மாதிரி நினைக்காதீர்கள். ஆனால் எனக்கு எந்த ஒரு
மரியாதையும் இல்லை. யார் வளைந்து கொடுப்ப தில்லையோ. அல்லது பொய்
பேசுகிறார்களோ, அவர்களுக்குத் தான் மதிப்பு உள்ளது என்று அந்த
மாதிரி இல்லை. இது அல்பகாலத்திற்கானது. ஆனால் நீங்கள்
தொலைநோக்கு புத்தி வையுங்கள். இங்கே எத்தனை பேருக்கு முன்னால்
வளைந்து கொடுக்கிறீர்களோ, அதாவது பணிவின் குணத்தை தாரணை
செய்கிறீர்களோ, அப்போது முழுக் கல்பத்திலும் அனைத்து
ஆத்மாக்களும் முன்னால்-முன்னால் வந்து வணங்குவார்கள்.
சத்யுக-திரேதாவில் ராஜாவின் மரியாதையில் தலையால் அல்லாமல்
மனதால் வணங்குவார்கள் மற்றும் துவாபர-கலியுகத்தில் தலை
வணங்குவார்கள்.