29-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! உங்களுக்கு ஞான இரத்தினங்களை கொடுப்பதற்காகவும், முரளியை சொல்வதற்காகவும் பாபா வந்திருக்கிறார். ஆகையால் நீங்கள் ஒருபோதும் முரளியை தவறவிடக்கூடாது. முரளி மீது அன்பு இல்லையென்றால் பாபாவிடம் அன்பு இல்லை.

கேள்வி:
நீங்கள் இந்த ஞானத்தினால் கடைபிடிக்கக் கூடிய எல்லாவற்றையும் விட நல்ல குணம் எது?

பதில்:
விகாரமற்றவர்களாக மாறுவதே எல்லாவற்றையும் விட நல்ல குணம். இந்த முழு உலகமும் விகாரமுடையதாக இருக்கிறது. விகாரம் என்றால் குணமற்றதாக இருக்கிறது என்ற ஞானம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. விகாரமற்ற உலகத்தை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்திருக்கிறார். விகாரமற்ற தேவதைகள் தான் குணமுடையவர்கள். தந்தையின் நினை வினால் குணங்களை திருத்திக் கொள்ளலாம்.

ஓம் சாந்தி.
குழந்தைகளே! நீங்கள் ஒருபோதும் படிப்பை தவறவிடக் கூடாது. படிப்பை தவறவிட்டால் பதவியும் தவறிவிடும். இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே, எங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்? இறைவனின் ஆன்மீகப் பல்கலைக்கழகத்தில். ஒவ்வொரு 5000 வருடத்திற்கு ஒரு முறை நான் இந்த பல்கலைக்கழகத்தில் சேருகின்றேன் என்பது குழந்தைக ளுக்குத் தெரியும். தந்தை தந்தையாகவும் இருக்கிறார், இருக்கிறார், குருவாகவும் இருக்கிறார் என்பதை குழந்தைகள் அறிந்திருக்கின்றீர்கள். குருவின் உருவம் தனி, அப்பாவினுடையது தனி, டீச்சருடையது தனி. இங்கு உருவம் ஒன்று தான். ஆனால் தந்தையாகவும், டீச்சராகவும், குருவாகவும் மூவருமாக இருக்கிறார். மனிதர்களின் வாழ்க்கையில் இந்த மூவரும் முக்கிய மானவர்கள். தந்தை, டீச்சர், குரு அவரே. மூவரின் பாகத்தையும் தானே நடிக்கின்றார். ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்வதால் குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் குஷி ஏற்பட வேண்டும். மேலும் இதுபோன்ற திரிமூர்த்தி பல்கலைக்கழத்தில் பல பேரை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். எந்ததெந்த பல்கலைக்கழகத்தில் படிப்பு நன்றாக இருக்கின்றதோ, அங்கே படிக்கக்கூடியவர்கள் மற்றவர்களையும் இந்தப் பல்கலைக்கழகத்தில் படியுங்கள். இங்கே நாலேஜ் நன்றாகக் கிடைக்கிறது, குணங்களும் நன்றாக மாறுகின்றது எனக் கூறுவார்கள். குழந்தைகளாகிய நீங்களும் பிறரை அழைத்து வரவேண்டும். தாய்மார்கள் தாய்மார்களுக்கும், ஆடவர்கள் ஆடவர் களுக்கும் புரிய வைக்க வேண்டும். வாருங்கள், இவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியரா கவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார். இவ்வாறு புரிய வைக்கின்றீர்களா? அல்லது இல்லையா? என ஒவ்வொருவரும் தன்னுடைய மனதிடம் கேளுங்கள். எப்போதாவது தன்னுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், தோழிகளுக்கும், இவர் சுப்ரீம் தந்தையாகவும், சுப்ரீம் டீச்சராகவும், சுப்ரீம் குருவாகவும் இருக்கிறார் என புரிய வைக்கிறார்கள். தந்தை மேலான தேவி தேவதைகளாக மாற்றுகின்றார். தந்தை தனக்குச் சமமாக தந்தையாக மாற்றுவதில்லை. மற்றபடி அவருக்கு என்ன மகிமைகள் இருக்கிறதோ அவற்றில் தனக்குச் சமமாக மாற்றுகின்றார். பரிபாலனை செய்வதும், அன்பு செலுத்துவதும் பாபாவினுடைய வேலை. இப்படிப் பட்ட தந்தையை கண்டிப்பாக நினைக்க வேண்டும். அவரை வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. குருவிடம் அமைதி கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இவரோ உலகத்திற்கே அதிபதியாக மாற்றுகின்றார். நான் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கின்றேன் என்று யாரும் கூறமுடியாது. அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக யார் இருக்க முடியும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஒரு எல்லையற்ற தந்தையை தான் இந்து, முஸ்ஸீம், கிறிஸ்துவர் அனைவரும் காட்ஃபாதர் என்று கூறுகின்றார்கள். புத்தி நிச்சயமாக நிராகாரரின் பக்கம் செல்கிறது. இதை யார் கூறியது? ஆத்மா தான் காட்ஃபாதர் என்கிறது. நிச்சயமாக சந்திக்க வேண்டும். தந்தை என்று கூறுகின்றோம். ஆனால் ஒருபோதும் சந்திக்கவில்லை என்றால் எப்படி தந்தையாக இருக்க முடியும்? முழு உலகிலும் இருக்கக்கூடிய குழந்தை களின் ஆசையை அவர் நிறைவேற்றுகிறார். அனைவருக்கும் நாம் சாந்திதாமம் போகவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆத்மாவிற்கு வீட்டின் நினைவு வருகிறது. ஆத்மா இராவண இராஜ்யத்தில் களைத்துப் போயிருக்கிறது. ஆங்கிலத்திலும் ஓ! காட்ஃபாதர் விடுவியுங்கள் எனக் கூறுகின்றார்கள். தமோபிரதானமாகி பார்ட்டை நடித்துக் கொண்டே சாந்தி தாமத்திற்கு சென்று விடுவார்கள். பிறகு முதலில் சுகதாமத் திற்கு வருகிறார்கள். முதன் முதலில் வரும் போதே விகாரிகளாக இருப்பார்கள் என்பதில்லை. இல்லை. இது வேசியாலயம், இராவண இராஜ்யம் என்பதை பாபா புரியவைக்கின்றார். இது பயங்கரமான நரகம் என்று கூறப்படுகிறது.

பாரதத்தில் அல்லது இந்த உலகத்தில் எத்தனை சாஸ்திரங்கள், எத்தனை படிக்கக்கூடிய புத்தகங்கள் இருக்கிறதோ அனைத்தும் அழிந்து விடும். பாபா உங்களுக்கு கொடுத்துள்ள இந்தப் பரிசு ஒருபோதும் எரியக்கூடியதல்ல. இது தாரணை செய்யக்கூடியது. எது பயன்படாத பொருளோ அது எரிக்கப்படுகிறது. ஞானத்தை எரித்து விடுவதற்கு இது ஒன்றும் சாஸ்திரம் இல்லை. உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது. இதனால் நீங்கள் 21 பிறவிகளுக்கு பதவி அடைகிறீர்கள். இது இவர்களுடைய சாஸ்திரம் எரித்து விடலாம் என்பதெல்லாம் கிடையாது. இந்த ஞானம் தானாகவே மறைந்து விடுகிறது. படிப்பதற்கான புத்தகம் எதுவும் இல்லை. ஞான விஞ்ஞான பவனம் என்ற பெயர் கூட இருக்கிறது ஆனால் இந்த பெயர் ஏன் ஏற்பட்டிருக்கிறது என அவர் களுக்குத் தெரியாது. ஞானம்-விஞ்ஞானத்தின் மகிமைகள் எவ்வளவு பெரியது! ஞானம் என்றால் நீங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கக்கூடிய சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம். விஞ்ஞானம் என்றால் சாந்தி தாமம். ஞானத்திலிருந்தும் விடுபட்டு செல்கிறீர்கள். ஞானத்தில் படிப்பின் ஆதாரத்தில் மீண்டும் நீங்கள் இராஜ்ஜியம் செய்கிறீர்கள். ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை வந்து படிப்பிக் கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இல்லையென்றால் பகவான் வாக்கு என்பதே மறைந்துவிடும். பகவான் எந்த சாஸ்திரத்தையும் படித்துவிட்டு வருவதில்லை. பகவானுக்குள் ஞானம்-விஞ்ஞானம் இரண்டும் இருக்கிறது. யார் எப்படி இருக்கிறார்களோ அப்படியே மாறுகிறார்கள். இது மிகவும் சூட்சுமமான விஷயம். ஞானத்தை விட விஞ்ஞானம் மிகவும் சூட்சுமமாக இருக்கிறது. ஞானத்திலிருந்தும் விடுபட்டுப் போக வேண்டும். ஞானம் ஸ்தூலமாக இருக்கிறது. நாம் படிப்பிக் கின்றோம் என்றால் ஒலி எழும்புகின்றதல்லவா? விஞ்ஞானம் சூட்சுமமாக இருக்கிறது. இதில் சப்தத்திலிருந்து விடுபட்டு சாந்தியில் போக வேண்டும். அந்த அமைதிக்காகதான் அலைகின்றார்கள். சந்நியாசிகளிடம் செல்கின்றார் கள். ஆனால் எந்தப் பொருள் தந்தையிடம் இருக்கிறதோ அது வேறு யாரிடமும் இருக்காது. ஹடயோகம் செய்கிறார் கள். பள்ளத்தில் அமர்கிறார்கள். ஆனால் இதனால் யாருக்கும் சாந்தி கிடைக்காது. இங்கே துன்பத்தின் விஷயம் ஏதுமில்லை. படிப்பு கூட மிகவும் எளிதாக இருக்கிறது. ஏழு நாள் பாடம் எடுக்கப்படுகிறது. ஏழு நாள் கோர்ஸ் முடித்துவிட்டு வெளியே எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். இதுபோன்று வேறு எந்த உலகியல் கல்லூரியிலும் செய்ய முடியாது. உங்களுக்கான பாடமே இந்த ஏழுநாட்கள் தான். அனைத்தும் புரிய வைக்கப் படுகிறது. ஆனால் ஏழு நாள் யாரும் கொடுக்க முடியாது. புத்தியோகம் எங்காவது சென்றுவிடுகிறது. நீங்களோ பட்டியில் இருந்தீர்கள், யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை, யாரிடமும் பேசவில்லை, வெளியிலும் போகவில்லை. தவம் செய்வதற்காக கடற்கரையில் சென்று நினைவில் அமர்ந்தீர்கள். அந்த நேரத்தில் இந்த சக்கரம் புரியவைக்கப் படவில்லை. இந்த படிப்பை புரிந்து கொள்ளவில்லை. முதன் முதலில் தந்தையுடன் தொடர்பு வேண்டும். பாபாவின் அறிமுகம் வேண்டும். பிறகு டீச்சர் வேண்டும். முதலில் தந்தையுடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதைக் கூட கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஏனென்றால் இந்த தந்தை அசரீரியாக இருக்கிறார். வேறு யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காட்ஃபாதர் ஆம்னிபிரசன்ட் (இறைவன் சர்வ வியாபி) என்கிறார்கள். அவ்வளவு தான்! சர்வ வியாபி என்ற ஞானம் தான் இருந்து வருகிறது. இப்போது உங்களுடைய புத்தியில் இந்த விஷயம் இல்லை. நீங்கள் மாணவர்கள். தன்னுடைய வேலையை செய்யுங்கள். நிச்சயமாக படிப்பையும் படியுங்கள் என பாபா கூறுகின்றார். குடும்ப விவகாரத்தில் இருங்கள், பள்ளிக் கூடத்திற்கு செல்வதில்லை என்றால் பாபாவும் என்ன செய்ய முடியும்? அட! பகவான் பகவதியாக மாற்றுவதற்காக பகவான் படிக்க வைக்கின்றார். பகவான் வாக்கு - நான் உங்களை இராஜாக்களுக்கு இராஜாவாக மாற்றுகின்றேன் என்றால், பகவானிடம் இராஜயோகத்தினை கற்க மாட்டீர்களா? இது போன்று யார் இருப்பார்கள்? இதனால் தான் நீங்கள் ஓடவேண்டியதாயிற்று. விகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக ஓடினீர்கள். நீங்கள் யாரும் பார்க்கக்கூடாது, சந்திக்கக்கூடாது என்பதற்காக பட்டியில் வந்துவிட்டீர்கள். யாரையும் பார்க்கவே இல்லை. பிறகு மனதை எதில் ஈடுபடுத்துவது? பகவான் படிக்க வைக்கின்றார் என்பதில் குழந்தைகளுக்கு நிச்சயம் இருக்கிறது. இருப்பினும் நோய் இருக்கிறது, இந்த வேலை இருக்கிறது என சாக்குப் போக்கு கூறுகின்றனர். பாபா மிகவும் மாற்றத்தைக் கொடுக்க முடியும். இன்று பள்ளிக் கூடத்தில் கூட மாற்று முறைகள் (நட்ண்ச்ற்) மிகவும் கொடுக்கிறார்கள். இங்கே அதிகப்படிப்பு எதுவுமில்லை. அப்பா மற்றும் சொத்தைப் புரிந்து கொள்ள புத்தி நன்றாக இருக்க வேண்டும். அப்பா மற்றும் சொத்தை நினைவு செய்யுங்கள் என அனைவருக்கும் கூறுங்கள். திரிமூர்த்தி நிறைய செய்கிறார்கள். ஆனால் மேலே சிவபாபாவைக் காண்பிக்கவில்லை. கீதையினுடைய பகவான் சிவன், அவர் மூலமாக ஞானத்தை அடைந்து, விஷ்ணு ஆகிறார் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. இராஜயோகம் அல்லவா! இது பல பிறவிகளின் கடைசி பிறவியாக இருக்கிறது. எவ்வளவு எளிதாக புரியவைக்கப்படுகிறது! புத்தகம் போன்ற எதுவும் கையில் இல்லை. வெறும் ஒரு பேட்ஜ் இருக்கிறது. அதில் திரிமூர்த்தியின் சித்திரம் மட்டும் இருக்கிறது. தந்தை பிரம்மா மூலமாக எவ்வாறு படிப்பை படிக்க வைத்து விஷ்ணுவிற்கு சமமாக மாற்றுகிறார் என்று புரிய வைக்க வேண்டும்.

நாம் இராதையைப் போல மாறவேண்டும் என பலர் புரிந்து கொள்கிறார்கள். கலசம் தாய்மார்களுக்குக் கிடைக்கிறது. இராதையின் பல ஜென்மங்களின் கடைசியில் கலசம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த இரகசியம் கூட பாபா தான் புரிய வைக்க முடியும். வேறு எந்த மனிதரும் அறியவில்லை. உங்களிடம் சென்டருக்கு எத்தனை பேர் வருகிறார்கள்! சிலர் ஒரு நாள் வருகிறார்கள், பிறகு நான்கு நாட்கள் வருவதில்லை. இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள் எனக் கேட்க வேண்டும். தந்தையை நினைவு செய்தீர்களா? சுயதரிசன சக்கரத்தை சுற்றுனீர்களா? யார் மிகவும் தாமதமாக வருகிறார்களோ அவர்களிடம் எழுதிக் கேட்க வேண்டும். பலர் மாறுதல் அடைந்து செல்கிறார்கள். இருந்தாலும் ஏதாவதொரு சென்டருடையவராக இருப்பார்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும், சக்கரத்தை சுழற்ற வேண்டும் என்ற மந்திரம் கிடைத்திருக்கிறது. பாபா எவ்வளவு எளிய விஷயத்தை தெரிவிக்கிறார். மன்மனாபவ, என்னை நினையுங்கள் மற்றும் ஆஸ்தியை நினையுங்கள் என்ற இரண்டு வார்த்தைகள் தான். இதில் அனைத்து சக்கரமும் வந்துவிடுகிறது. யாராவது சரீரத்தை விடுகிறார்கள் என்றால் இன்னார் சொர்க்கத்திற்கு சென்று விட்டார்கள் எனக்கூறுகின்றார்கள். ஆனால் சொர்க்கம் என்பது என்ன என்று யாருக்கும் தெரிய வில்லை. அங்கே இராஜ்ஜியம் இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். மேலிருந்து கீழ் வரை, பணக்காரர்களிலிருந்து ஏழை வரை அனைவரும் சுகமாக இருக்கிறார்கள். இங்கே துக்க உலகமாக இருக்கிறது. அது சுக உலகம். பாபா மிகவும் நன்றாகப் புரிய வைக்கின்றார். கடைக் காரர்களாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் படிப்பிற்காக சாக்குப்போக்கு கூறுவது நன்றாக இல்லை. வரவில்லை என்றால் நீங்கள் எவ்வளவு தந்தையை நினைக்கின்றீர்கள்? சுயதரிசன சக்கரத்தை சுற்றுகின்றீர்கள் என அவர்களைக் கேட்க வேண்டும். சாப்பிடுங்கள், குடியுங்கள், சுற்றுங்கள் அதற்கு ஏதும் தடை கிடையாது. இதற்காகவும் நேரம் ஒதுக்குங்கள். பிறருக்கும் நன்மை செய்யுங்கள். சிலருக்கு துணி துவைக்கும் வேலை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள் பல பேர் வருகிறார்கள். முஸ்ஸீமாக இருந்தாலும், பாரஸியாக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும் கூறுங்கள் - நீங்கள் ஸ்தூல உடைகளைத் துவைக்கிறீர்கள். இந்த உடலானது மிகவும் பழைய ஆடையாக இருக்கிறது. ஆத்மாவும் தமோபிரதானமாகவும் இருக்கிறது. அதை சதோபிரதானமாக தூய்மையாக மாற்ற வேண்டும். இந்த முழு உலகமும் தமோபிரதானமாக, பதீத, கலியுகமாக பழையதாக இருக்கிறது. தமோபிரதானத்திலிருந்து சதோபிர தானமாக மாறுவதற்கான இலட்சியம் இருக்கிறதல்லவா? இப்போது செய்வதும் செய்யாமல் இருப்பதும், புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் உங்களுடைய விருப்பம். நீங்கள் ஆத்மா அல்லவா! ஆத்மா நிச்சயமாக தூய்மையாக வேண்டும். இப்போது உங்களுடைய ஆத்மா தூய்மையற்றதாக இருக்கிறது. ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் அழுக்காக இருக்கிறது. அவைகளை தூய்மையாக்குவதற்காக நீங்கள் பாபாவை நினைவு செய்தால் உங்களுடைய ஆத்மா 100 சதவீதம் தூய்மையான தங்கமாக மாறிவிடும் என்பது நிச்சயம். பிறகு நகை கூட நன்றாக இருக்கும். ஏற்பதும் ஏற்காததும் உங்களுடைய விருப்பம். இது கூட எவ்வளவு சேவையாகிறது! மருத்துவர்களிடம் செல்லுங்கள், கல்லூரிகளுக்கு செல்லுங்கள், பெரிய பெரியவர்களிடம் சென்று புரிய வையுங்கள். குணம் மிகவும் நன்றாக இருக்க வேண்டும் இங்கேயோ அனைவரும் குணமற்று இருக்கிறார்கள். விகாரமற்றவராக மாறவேண்டும் என பாபா கூறுகின்றார். விகாரமற்ற உலகம் இருந்ததல்லவா! இப்போது விகாரிகளாக இருக்கிறார்கள் என்றால் குணமற்றவர்களாக இருக்கிறார் கள். குணம் மிகவும் மோசமாகிவிட்டது. விகாரமற்றவர் தன்னை மாற்றிக் கொள்ளாமல் திருந்த மாட்டார்கள். இங்கே மனிதர்கள் அனைவரும் காமம் உடையவராக இருக்கிறார்கள். இப்போது விகார உலகத்தை விகாரமற்ற உலகமாக ஒரு தந்தை தான் ஸ்தாபனை செய்கிறார். மற்றபடி பழைய உலகம் அழிந்துவிடும். இது சக்கரம் அல்லவா! இந்த சக்கரத்தில் விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. இது நிர்விகார உலகமாக இருந்தது. அங்கே தேவி தேவதைகள் இராஜ்ஜியம் செய்தார்கள். இப்போது அவர்கள் எங்கே போனார்கள்? ஆத்மா அழிவதில்லை ஒரு உடலை விட்டு விட்டு மற்றொன்றை எடுக்கிறது. தேவி தேவதைகள் கூட 84 பிறவிகளை எடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்கள் புத்திசாலியாகியிருக்கிறீர்கள். முன்பு உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருந்தது. இப்போது இந்த பழைய உலகம் அழுக்காக இருக்கிறது. பாபா எதைக் கூறுகிறாரோ அது மிகவும் சரியாக இருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள். அங்கே பவித்திரமான உலகம் தான் இருக்கிறது. இது பவித்திரமான உலகமாக இல்லாத காரணத்தால் தன்னை தேவதை என்பதற்குப் பதிலாக இந்து என்ற பெயரை வைத்து விட்டனர். இந்துஸ்தானில் வசிக்கக்கூடியவர்கள் இந்து எனக்கூறிக்கொள்கிறார்கள். தேவதைகள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள். இப்போது நீங்கள் இந்த சக்கரத்தை புரிந்து கொள்கிறீர்கள். யார் யார் புத்திசாலிகளாக இருக்கிறார் களோ, அவர்கள் நன்றாகப் புரிந்து கொண்டால் பாபா எப்படி புரியவைக்கின்றாரோ அப்படியே மீண்டும் ரிபீட் செய்ய வேண்டும். முக்கியமான வாக்கியங்களை குறிப்பெடுத்துக் கொண்டே செல்லுங்கள். பிறகு பாபா இந்த கருத்தை கூறினார் எனக்கூறுங்கள். நான் கீதா ஞானத்தைக் கூறுகின்றேன் எனக் கூறுங்கள். கீதையினுடைய யுகம். நான்கு யுகம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்திருக்கின்றனர். இது லீப்யுகம். இந்த சங்கமயுகத்தைப் பற்றி யாரும் அறியவில்லை. இது புருஷோத்தம சங்கமயுகம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். மனிதர்கள் சிவஜெயந்தி கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் எப்போது வந்தார்? என்ன செய்தார்? என அறியவில்லை. சிவஜெயந்திக்குப் பிறகு கிருஷ்ண ஜெயந்தி, பிறகு இராம ஜெயந்தி. ஜெகதம்பா, ஜெகத்பிதாவினுடைய ஜெயந்தியை யாரும் கொண்டாடுவதில்லை. அனைவரும் வரிசைக்கிரமத்தில் வருகிறார்கள் அல்லவா! இப்போது உங்களுக்கு அனைத்து ஞானமும் கிடைக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நம்முடைய தந்தை சுப்ரீம் தந்தை, சுப்ரீம் டீச்சர், சுப்ரீம் சத்குருவாக இருக்கிறார். இந்த விஷயத்தை அனைவருக்கும் கூறவேண்டும். அப்பா மற்றும் ஆஸ்தியினுடைய படிப்பை படிப்பிக்க வேண்டும்.

2. ஞானம் அதாவது சிருஷ்டிச்சக்கரத்தின் ஞானத்தை கடைபிடித்து சுயதரிசன சக்கரதாரி ஆகவேண்டும். மேலும் விஞ்ஞானம் அதாவது சத்தத்திலிருந்து விடுபட்டு அமைதியில் செல்ல வேண்டும். ஏழு நாட்கள் கோர்ஸ் எடுத்த பிறகு எங்கேயிருந்தாலும் படிக்க வேண்டும்

வரதானம்:
சேவையில் மதிப்பு, புகழ் என்ற பழுக்காத பழத்தை (பலனை) தியாகம் செய்து, எப்பொழுதும் மகிழ்ச்சியுள்ளத்துடன் இருக்கக் கூடிய,அபிமானத்திலிருந்து விடுபட்டவர் ஆவீர்களாக.

ராயல் ரூபத்தின் இச்சையின் சொரூபமாவது, பெயர், புகழ் மற்றும் மதிப்பு ஆகும். யார் பெயருக்காக சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு குறுகிய காலத்திற்கு (அற்ப கால) பெயர் கிடைத்து விடுகிறது. ஆனால் உயர்ந்த பதவியில், பெயர் பின்னால் போய் விடுகிறது. ஏனெனில் பழுக்காத பழத்தை (பலன்) சாப்பிட்டு விட்டார்கள். ஒரு சில குழந்தைகள் சேவையின் ரிஸல்ட் - பலனாக, எனக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என்று யோசிக்கிறார்கள். ஆனால் இது மதிப்பு அல்ல, அபிமானம் ஆகும். எங்கு அபிமானம் இருக்கிறதோ, அங்கு மகிழ்ச்சி இருக்க முடியாது. எனவே அபிமானத்திலிருந்து விடுபட்டவர் ஆகி, எப்பொழுதும் மகிழ்ச்சியின் அனுபவம் செய்யுங்கள்.

சுலோகன்:
பரமாத்ம அன்பின் சுகமளிக்கும் ஊஞ்சலில் ஊஞ்சலாடுங்கள், அப்பொழுது துக்கத்தின் அலைகள் வர முடியாது.