29-10-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! நீங்கள்
ஒவ்வொருவரையும் (பரிஸ்தானியாக) சொர்க்கவாசியாக உருவாக்க
வேண்டும். நீங்கள் அனைவருக்கும் நன்மை செய்பவர்கள். உங்களுடைய
கடமை ஏழைகளை செல்வந்தராக்குவதாகும்.
கேள்வி:
தந்தையின் எந்த ஒரு பெயர்
சாதாரணமானது, ஆனால் காரியம் மிக உயர்ந்தது?
பதில்:
பாபாவை, தோட்டக்காரர், படகோட்டி
எனச் சொல்கின்றனர். இந்தப் பெயர் எவ்வளவு சாதாரணமானது! ஆனால் (விஷக்கட-ல்)
மூழ்குபவர்களை அக்கரை கொண்டு சேர்ப்பது என்பது எவ்வளவு உயர்ந்த
காரியம்! எப்படி நீச்சல் தெரிந்து நீந்துபவர்கள் ஒருவர் மற்றவரை
கை கொடுத்து அக்கரை கொண்டு செல்கின்றனர். அது போல் தந்தையின்
கையோடு கை இணைவ தால் நீங்கள் சொர்க்கவாசி ஆகி விடுகிறீர்கள்.
இப்போது நீங்களும் மாஸ்டர் படகோட்டிகள். நீங்கள் ஒவ்வொருவரின்
படகையும் அக்கரை கொண்டு செல்வதற்கான வழி சொல்கிறீர்கள்.
ஓம் சாந்தி.
நினைவிலோ குழந்தைகள் அமர்ந்திருக்கவே செய்வார்கள். தன்னை ஆத்மா
என உணர வேண்டும். தேகமும் உள்ளது. தேகம் இன்றி
அமர்ந்திருக்கிறீர்கள் என்பது கிடையாது. ஆனால் பாபா சொல்கிறார்,
தேக அபிமானத்தை விட்டு, ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருங்கள்.
ஆத்ம அபிமானம் சுத்தமானது, தேக அபிமானம் அசுத்தமானது. நீங்கள்
அறிவீர்கள், ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் புனிதமான தூய்மையாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். தேக அபிமானி ஆவதால் அசுத்தமாக
தூய்மையற்றவர்களாக ஆகி விட்டீர்கள். அழைக்கவும் செய்கின்றனர்,
ஹே! பதீத பாவனா வாருங்கள் என்று. தூய்மையான உலகம் இருந்தது.
இப்போது தூய்மையின்றி உள்ளது. மீண்டும் தூய்மையான உலகமாக
நிச்சயமாக ஆகும். சிருஷ்டியின் சக்கரம் சுற்றும். யார் இந்த
சிருஷ்டிச் சக்கரத்தை அறிவார்களோ, அவர்கள் சுயதரிசனச் சக்கரதாரி
எனச்சொல்லப் படுவார்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சுயதரிசனச்
சக்கரதாரி. சுயமாகிய ஆத்மாவுக்கு சிருஷ்டிச் சக்கரம் பற்றிய
ஞானம் கிடைத்துள்ளது. ஞானத்தை யார் கொடுத்தார்? நிச்சயமாக
அவரும் சுயதரிசனச் சக்கரதாரியாக இருப்பார். பாபாவைத் தவிர வேறு
மனிதர்கள் யாராலும் கற்றுத்தர முடியாது. சுப்ரீம் ஆத்மா வாகிய
தந்தை தான் குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார். அவர்
சொல்கிறார், குழந்தைகளே, நீங்கள் ஆத்ம அபிமானி ஆகுங்கள்.
சத்யுகத்தில் இந்த ஞானம் அல்லது அறிவுரை தருவதற்கான அவசியம்
இருக்காது. அங்கே பக்தியும் இருக்காது. ஞானத்தினால் ஆஸ்தி
கிடைக்கிறது. பாபா ஸ்ரீமத் தருகிறார், இதனால் நீங்கள்
சிரேஷ்டமானவராக ஆவீர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம்
சுடுகாட்டில் இருந்தோம். இப்போது பாபா சிரேஷ்ட சொர்க்கவாசியாக
ஆக்குகிறார். இந்தப் பழைய உலகம் சுடுகாடாக ஆகப் போகிறது. மரண
உலகத்தை சுடுகாடு என்று தான் சொல்வார்கள். (பரிஸ்தான்)
சொர்க்கம் எனச் சொல்லப் படுவது புது உலகம். டிராமாவின்
ரகசியத்தை பாபா புரிய வைக்கிறார். இந்த சிருஷ்டி முழுவதும்
அழியக் கூடிய வைக்கோல் போர் எனச் சொல்லப் படுகின்றது.
பாபா புரிய வைத்துள்ளார் - முழு சிருஷ்டி மீதும் தற்சமயம்
இராவணனின் இராஜ்யம் உள்ளது. தசராவும் கொண்டாடுகின்றனர். எவ்வளவு
குஷி அடைகின்றனர்! பாபா சொல்கிறார், குழந்தைகள் அனைவரையும்
துக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக நானும் கூட பழைய இராவண
இராஜ்யத்திற்கு வர வேண்டியுள்ளது. ஒரு கதை சொல்கின்றனர். யாரோ
கேட்டார்கள், முதலில் உங்களுக்கு சுகம் வேண்டுமா அல்லது துக்கம்
வேண்டுமா? அதற்கு சுகம் வேண்டும் என்று சொன்னார். சுகத்தில்
செல்வீர்களானால் அங்கே யமதூதர் முதலானோர் வர முடியாது. இதுவும்
ஒரு கதை. பாபா சொல்கிறார், சுகதாமத்தில் ஒருபோதும் காலன்
வருவதில்லை. அமரபுரி ஆகி விடுகின்றது. நீங்கள் மரணத்தின் மீது
வெற்றி கொள்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு சர்வசக்திவானாக
ஆகிறீர்கள்! இன்னார் மரணம் அடைந்துவிட்டார் என்று அங்கே
ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். மரணத்தின் பெயரே அங்கே இருக்காது.
ஒரு சரீரமாகிய ஆடையை மாற்றி வேறொன்றை அணிந்து கொண்டனர்.
பாம்புகள் கூட தோலை மாற்றிக் கொள்கின்றன இல்லையா? நீங்களும்
கூட பழைய தோலை விட்டுப் புதிய தோல் அதாவது சரீரத்தில்
வருவீர்கள். அங்கே 5 தத்துவங்களும் கூட சதோபிரதான மாக ஆகி
விடுகின்றன. ஒவ்வொரு பொருளும், பழம் முதலியன மிகச் சிறந்ததாக (அன்றையதாக)
இருக்கும். சத்யுகமே சொர்க்கம் என்று தான் சொல்லப்படுகின்றது..
அங்கே பெரும் செல்வந்தர்கள் இருந்தனர். இவர்களைப் போல சுகமான,
உலகத்தின் மாலிக் (எஜமானர்) வேறு யாரும் இருக்க முடியாது.
இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் தான் இதுபோல் இருந்தோம். ஆக,
எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! ஒவ்வொருவரையும் சொர்க்கவாசி
ஆக்க வேண்டும். அநேகருக்கு நன்மை செய்ய வேண்டும். நீங்கள்
பெரும் செல்வந்தராக ஆகிறீர்கள். அவர்கள் அனைவரும் ஏழைகள்.
எதுவரை உங்களது கையோடு கை இணைய வில்லையோ, அதுவரை சொர்க்கவாசி
ஆக முடியாது. தந்தையின் கையோ அனைவருக்கும் கிடைப்பதில்லை.
தந்தையின் கை உங்களுக்குத் தான் கிடைக்கின்றது. உங்களுடைய கை
பிறகு மற்றவர்களுக்குக் கிடைக்கின்றது. மற்றவர்களின் கை பிறகு
மற்ற-மற்றவர்களுக்குக் கிடைக்கும். எப்படி யாராவது நீச்சல்
தெரிந்தவர்கள் என்றால் மூழ்கியவர்கள் ஒவ்வொருவரையும் அக்கரை
கொண்டு சேர்ப்பார்கள். நீங்களும் கூட மாஸ்டர் படகோட்டியாக
இருக்கிறீர்கள். அநேகப் படகோட்டிகள் உருவாகிக் கொண்டுள்ளனர்.
உங்களுடைய தொழிலே இது தான். நாம் ஒவ்வொருவரின் படகையும் அக்கரை
கொண்டு சேர்ப்பதற்கான வழி சொல்ல வேண்டும்.
படகோட்டியின் குழந்தை படகோட்டியாக ஆக வேண்டும். பெயர் எவ்வளவு
சாதாரண மாக உள்ளது! - தோட்டக்காரர், படகோட்டி! இப்போது
நடைமுறையில் நீங்கள் பார்க்கிறீர்கள். நீங்கள் தேவதைகளின்
வசிப்பிடமாகிய சொர்க்கத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் நினைவுச் சின்னம் முன்னாலேயே (கண்ணெதிரில்) இருக்கிறது.
கீழே இராஜ யோகத்தின் தபஸ்யா, மேலே இராஜ்யம்
காண்பிக்கப்பட்டுள்ளது. பெயரும் கூட தில்வாடா - மிக நன்றாக
உள்ளது. பாபா அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறார். அனை
வருக்கும் சத்கதி அளிக் கிறார். மனதைக் கொள்ளை கொள்பவர் யார்?
இது யாருக்கும் தெரியாது. பிரம்மாவுக்கும் தந்தை சிவபாபா. அனை
வரின் மனதைக் கொள்ளை கொள்பவர் எல்லையற்ற தந்தையாகத் தான்
இருப்பார். தத்துவங்கள் முதலான அனைத்திற்கும் நன்மை செய்கிறார்.
இதுவும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது- மற்ற
அனைத்து தர்மத்தினரின் சாஸ்திரங்களும் நிரந்தரமாக (நிச்சயிக்
கப்பட்டதாக) உள்ளன. உங்களுக்கு ஞானம் கிடைப்பது சங்கம யுகத்தில்.
பிறகு விநாசமாகி விடுகிறது என்றால் எந்த ஒரு சாஸ்திரமும்
இருக்காது. சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தின் அடையாளமாகும். இது
ஞானம். வித்தியாசத்தைப் பார்த்தீர்கள் இல்லையா? பக்தி அளவற்றது,
தேவிகள் முதலானவர்களின் பூஜைக்காக எவ்வளவு செலவு செய்கின்றனர்!
பாபா சொல்கிறார், இவற்றால் அல்ப-கால சுகம் தான் கிடைக்கின்றது.
எப்படி- எப்படி பாவனை வைக்கின்றனரோ, அது நிறைவேறுகின்றது.
தேவிகளை அலங்கரித்து- அலங்கரித்து யாருக்காவது சாட்சாத்காரம்
ஆயிற்று என்றால் அவ்வளவு தான், குஷியாகி விடுகின்றனர். இதனால்
எந்தப் பயனும் கிடையாது. மீராவின் பெயரும் பாடப்பட்டுள்ளது.
பக்த மாலை உள்ளது இல்லையா? பெண்களில் மீரா, ஆண்களில் நாரதர்
சிரோமணி பக்தர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளாகிய
உங்களிலும் கூட நம்பர்வார் இருக்கிறீர்கள். மாலையின் மணிகளோ
அநேகம் உள்ளன. மேலே பாபா பூவாக உள்ளார். பிறகு யுகல் மேரு (பிரம்மா,
சரஸ்வதி) பூவுக்கு அனைவரும் வணக்கம் செய்கின்றனர். ஒவ்வொரு
மணிக்கும் வணக்கம் செய் கின்றனர். ருத்ர யக்ஞம் படைக்கின்றனர்
என்றால் அதிலும் கூட அதிகமாக பூஜை சிவனுக்குத் தான்
செய்கின்றனர். சாலிகிராம்களுக்கு அவ்வளவு செய்வ தில்லை. சிந்தனை
முழுவதும் சிவன் பக்கம் உள்ளது. ஏனென்றால் சிவபாபா வினால் தான்
சாலிகிராம்கள் (குழந்தைகள்) அவ்வளவு புத்தி கூர்மையானவர்களாக
ஆகியுள்ளனர். இப்போது நீங்கள் தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள்,
பதீத-பாவனர் தந்தையின் குழந்தைகள் நீங்களும் கூட மாஸ்டர்
பதீத-பாவனர். யாருக்காவது நீங்கள் வழி சொல்லவில்லை என்றால்
ஒன்றுக்கும் உதவாத பதவி தான் கிடைக்கும். இருந்தாலும் கூட
பாபாவுடனோ சந்தித்திருக்கிறீர்கள் இல்லையா? அதுவும்
குறைவானதல்ல. அனைவருக்கும் தந்தை அந்த ஒருவர் தான்.
கிருஷ்ணருக்கு அதுபோல் சொல்ல மாட்டார்கள். கிருஷ்ணர் யாருடைய
தந்தை ஆவார்? கிருஷ்ணரைத் தந்தை எனச் சொல்ல மாட்டார்கள்.
குழந்தைகளைத் தந்தை என்று சொல்ல முடியாது. எப்போது யுகல்
ஆகின்றனரோ, குழந்தை பிறக்கிறதோ, அப்போது தான் தந்தை எனச்
சொல்லப்படுவார்கள். குழந்தை அப்பா (பாபா) என்று சொல்லும். வேறு
யாரும் சொல்ல முடியாது. மற்றப்படி யாராவது வயதானவரை பாபுஜி எனச்
சொல்லி விடுகின்றனர். இவரோ அனைவரின் தந்தை ஆவார். சகோதரத்துவம்
எனப் பாடவும் செய் கின்றனர். ஈஸ்வரனை சர்வவியாபி எனச் சொல்வதால்
அனைவரும் தந்தை ஆகி விடுகின்றனர்.
குழந்தைகளாகிய நீங்கள் பெரிய-பெரிய சபைகளில் புரிய வைக்க
வேண்டியதிருக்கும். எப்போதுமே எங்காவது சொற்பொழிவு
செய்வதற்காகச் செல்வீர்களானால் எந்தத் தலைப்பில் சொற்பொழிவு
செய்ய வேண்டுமோ, அதனைப் பற்றி விசார் சாகர் மந்தன் செய்து எழுத
வேண்டும். பாபா விசார் சாகர் மந்தன் செய்ய வேண்டியதில்லை.
கல்பத்திற்கு முன் என்ன சொல்லியிருந் தாரோ, அதைச்
சொல்லிவிட்டுச் செல்வார். நீங்களோ தலைப்பைப் பற்றிப் புரிய
வைக்க வேண்டும். முதலில் எழுதிப் பிறகு படிக்க வேண்டும்.
சொற்பொழிவு செய்த பின் நினைவில் வருகின்றது- இந்த இந்தப்
பாயின்ட்டுகளைச் சொல்லவில்லையே என்று. இதைச் சொல்லியிருந்தால்
நன்றாக இருந்திருக்கும். இதுபோல் ஆகி விடுகின்றது, ஏதாவது
பாயின்ட் மறந்து போகிறது. முதல்-முதலிலோ சொல்ல வேண்டும் -
சகோதர-சகோதரிகளே, ஆத்ம அபிமானி ஆகி அமர்ந்திருங்கள். ஆத்மா
நீங்கள் அழிவற்றவர்கள். இப்போது பாபா வந்து ஞானத்தைக்
கொடுத்துக் கொண்டிருக் கிறார். பாபா சொல்கிறார், என்னை நினைவு
செய்வதன் மூலம் விகர்மங்கள் விநாசமாகும். எந்த ஒரு
தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். தன்னை ஆத்மா என உணருங்கள்,
நாம் அங்கே (ஆத்ம உலகில்) வசிப்பவர்கள். நம்முடைய பாபா
கல்யாண்காரி சிவன். நாம் ஆத்மாக்கள் அவருடைய குழந்தைகள். பாபா
சொல்கிறார், ஆத்ம அபிமானி ஆகுங்கள். நான் ஆத்மா. பாபாவின்
நினைவு மூலம் விகர்மங்கள் விநாசமாகும். கங்கா ஸ்நானம்
முதலியவற்றால் விகர்மங்கள் விநாசமாகாது. பாபாவின் கட்டளை -
நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள். அந்த மனிதர்கள் கீதை
படிக்கின்றனர்-யதா யதாஹி தர்மஸ்ய............ சொல்கின்றனர்.
ஆனால் அர்த்தம் எதையும் அறிந்திருக்கவில்லை. ஆக, பாபா
சேவைக்கான அறிவுரை தருகிறார் - சிவபாபா சொல்கிறார், தன்னை ஆத்மா
என உணர்ந்து சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அவர்கள் நினைக்
கின்றனர், கிருஷ்ணர் சொன்னார் என்று. நீங்கள் சொல்வீர்கள்,
சிவபாபா குழந்தைகளாகிய நமக்குச் சொல்கிறார், என்னை நினைவு
செய்யுங்கள் என்று. எவ்வளவு என்னை நினைவு செய்வீர்களோ, அவ்வளவு
சதோபிரதானமாகி உயர்ந்த பதவி பெறுவீர்கள். நோக்கம் குறிக்கோளும்
முன்னால் உள்ளது. புருஷார்த்தத்தினால் உயர்ந்த பதவி பெற
வேண்டும். அந்தப் பக்கம் உள்ளவர்கள் தங்களின் தர்மத்தில்
உயர்ந்த பதவி பெறுவார்கள். நாம் மற்றவர்களின் தர்மத்தில்
செல்வதில்லை. அவர்களோ வருவதே அரைக் கல்பத்திற்குப் பின் தான்.
அவர்களும் அறிந்துள்ளனர், நமக்கு முன்னால் பேரடைஸ் (சொர்க்கம்)
இருந்தது என்று. பாரதம் அனைத்திலும் பழைமையானது. ஆனால் எப்போது
இருந்தது, அதை யாருமே அறிந்து கொள்ளவில்லை. அவர்களை
பகவான்-பகவதி என்றும் சொல்கின்றனர். ஆனால் பாபா சொல்கிறார்,
அவர்களை பகவான்-பகவதி என்று சொல்ல முடியாது. பகவானோ நான் ஒருவன்
மட்டுமே. நாம் பிராமணர்கள். பாபாவையோ பிராமணர் எனச் சொல்ல
மாட்டார்கள். அவர் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான். அவருக்கு
சரீரத்தின் பெயர் கிடையாது. உங்கள் அனைவருக்கும் சரீரத்தின்
பெயர் வைக்கப் படுகின்றது. ஆத்மாவோ ஆத்மா தான். அவரும் பரம (மிக
மேலான) ஆத்மாவாக உள்ளார். அந்த ஆத்மாவின் பெயர் சிவன். அவர்
நிராகார். சூட்சும சரீரமோ, ஸ்தூல சரீரமோ கிடையாது. அவருக்கு
உருவமே கிடையாது என்பதல்ல. அவருக்குப் பெயரும் உள்ளது, உருவமும்
நிச்சயமாக உள்ளது. பெயர் வடிவம் இல்லாமல் எந்த ஒரு பொருளும்
கிடையாது. பரமாத்மா தந்தையைப் பெயர்-வடிவத்துக்கு அப்பாற்
பட்டவர் எனச் சொல்வது எவ்வளவு பெரிய அஞ்ஞானம்! தந்தையும்
பெயர்-வடிவத்திற்கு அப்பாற் பட்டவர், குழந்தைகளும் பெயர்-
வடிவத்திற்கு அப்பாற் பட்டவர்கள் என்றால் பிறகு சிருஷ்டியே
இல்லை. நீங்கள் இப்போது நல்லபடியாகப் புரிய வைக்க முடியும்.
குருமார்கள் கடைசியில் புரிந்து கொள்வார்கள். இப்போது
அவர்களுடைய இராஜ்யம்.
நீங்கள் இப்போது இரட்டை அஹிம்சையாளர் ஆகிறீர்கள். அஹிம்ஸா பரமோ
தேவி-தேவதா தர்மம் இரட்டை அஹிம்சை உள்ளதெனப் பாடப்பட்டுள்ளது.
யார் மீதாவது கை வைப்பது, துக்கம் கொடுப்பது - இதுவும் கூட
ஹிம்சை ஆகிறது. பாபா தினந்தோறும் புரிய வைக்கிறார் -
மனம்-சொல்-செயலால் யாருக்கும் துக்கம் தரக் கூடாது. மனதில்
நிச்சயமாக வரும். சத்யுகத்தில் (துக்கம் என்ற சொல்) மனதில் கூட
வராது. இங்கோ மனம்-சொல்-செயலில் வருகிறது. இந்தச் சொல்லை
நீங்கள் அங்கே கேட்கவும் மாட்டீர்கள். அங்கே எந்த ஒரு
சத்சங்கமும் இருக்காது. சத்சங்கம் நடைபெறுவது சத்தியமானவர்
மூலம் தான், சத்தியமாக ஆவதற்காக. சத்தியமானவர் ஒரே ஒரு தந்தை
மட்டுமே. பாபா அமர்ந்து நரனில் இருந்து நாராயணனாக ஆவதற்கான கதை
சொல்கிறார். இதன் மூலம் நீங்கள் நாராயணனாக ஆகி விடுகிறீர்கள்.
பிறகு பக்தி மார்க்கத்தில் சத்திய நாராயணனின் கதையை மிக அன்போடு
கேட்கிறார்கள். உங்கள் நினைவுச் சின்னம் தில்வாடா. பாருங்கள்,
எவ்வளவு நன்றாக உள்ளது! நிச்சயமாக சங்கமயுகத்தில் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டிருப்பார். ஆதி தேவர் மற்றும் தேவி, குழந்தைகள்
அமர்ந்துள்ளனர். இது தான் உண்மையான நினைவுச் சின்னம்.
அவர்களுடைய சரித்திரம்-பூகோளம் பற்றி உங்களைத் தவிர வேறு யாரும்
அறிந்திருக்கவில்லை, உங்களுடைய நினைவுச் சின்னம் தான் அது.
இதுவும் அதிசயமாகும். லட்சுமி-நாராயணனின் கோவிலுக்குச்
செல்வீர்களானால் நீங்கள் சொல்வீர்கள், இது போல் நாங்கள் ஆகிக்
கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவும் இங்கே தான் இருக்கிறார். அநேகர்
சொல் கின்றனர், கிறிஸ்து ஏழை ரூபத்தில் உள்ளார் என்று.
தமோபிரதான் என்றால் யாசிப்பவர் ஆகிறார் இல்லையா? புனர் ஜென்மமோ
நிச்சயமாக எடுப்பார் இல்லையா? ஸ்ரீகிருஷ்ணர் இளவரசராக இருந்தவர்
தான் இப்போது யாசிப்பவராக (ஏழையாக) உள்ளார். வெள்ளை மற்றும்
கருப்பு. நீங்களும் அறிவீர்கள் - பாரதம் என்னவாக இருந்தது,
இப்போது என்னவாக உள்ளது என்று. பாபாவோ ஏழைப் பங்காளனாகவே
இருக்கிறார். மனிதர்கள் தான-புண்ணியம் கூட ஏழைகளுக்கு ஈஸ்வரன்
பெயரால் கொடுக்கின்றனர். அநேகருக்கு உண்பதற்கு தானியம்
கிடைப்பதில்லை. இன்னும் போகப்போக நீங்கள் பார்ப்பீர்கள்,
பெரிய-பெரிய பணக்காரர்களுக்கும் கூட தானியம் கிடைக்காது.
ஒவ்வொரு கிராமத்திலும் கூட பணக்காரர்கள் வசிக்கின்றனர் இல்லையா?
அதைப் பிறகு கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள்.
பதவியில் வித்தியாசமோ உள்ளது இல்லையா? பாபா சொல்கிறார், நம்பர்
ஒன்னில் போகிற அளவிற்கு புருஷார்த்தம் செய்யுங்கள். ஆசிரியரின்
வேலை எச்சரிக்கை செய்வது. பாஸ் வித் ஆனர் ஆக வேண்டும். இது
எல்லையற்ற பாடசாலை. இது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதற்காக
இராஜயோகம். பிறகும் பழைய உலகத்தின் விநாசம் நடைபெற்றாக வேண்டும்.
இல்லையென்றால் இராஜ்யம் எங்கே செய்வீர்கள்? இதுவோ தூய்மையற்ற
பூமியாகவே (உலகம்) உள்ளது.
மனிதர்கள் சொல்கின்றனர் - கங்கை பதீத-பாவனி (தூய்மை ஆக்க வல்லது)
என்று. பாபா சொல்கிறார், இச்சமயம் 5 தத்துவங்கள் அனைத்தும்
தமோபிரதான் பதித்தாக உள்ளன. அனைத்துக் குப்பை-கூளங்களும் அங்கே
போய் விழுகின்றன. மீன்கள் முதலியனவும் அங்கே உள்ளன. கங்கை
தண்ணீரும், உலகமும் ஒரே மாதிரித் தான் உள்ளது. தண்ணீரில் எத்தனை
உயிர்கள் வாழ்கின்றன! பெரிய-பெரிய கடல்களில் இருந்தும் எவ்வளவு
உணவு கிடைக்கின்றது! அப்போது ஒரு கிராமம் போல ஆகிறது இல்லையா?
கிராமத்தைப் பிறகு பதித-பாவன் என்று எப்படிச் சொல்வார்கள்? பாபா
புரிய வைக்கிறார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே,
பதித-பாவனர் ஒரே ஒரு தந்தை தான். உங்களுக்கு ஆத்மா, சரீரம்
இரண்டுமே தூய்மை இழந்து விட்டது. இப்போது என்னை நினைவு
செய்வீர்களானால் தூய்மையாகி விடுவீர்கள். நீங்கள் உலகத்தின்
எஜமானர்களாக, அழகானவராக ஆகி விடுவீர்கள். அங்கே வேறொரு கண்டம்
(தேசம்) இருக்காது. பாரதத்திற்குத் தான் ஆல்ரவுண்ட் பார்ட்
உள்ளது. நீங்கள் அனைவரும் ஆல்ரவுண்டர்கள். நாடகத்தில் நடிகர்கள்
நம்பர்வார் வந்து போகின்றனர். இதுவும் அது போலத் தான். பாபா
சொல்கிறார், நமக்கு பகவான் படிப்பு சொல்லித் தருகிறார் எனப்
புரிந்து கொள்ளுங்கள். நாம் பதித-பாவனராகிய இறைத் தந்தை யின்
மாணவர்கள். இதில் எல்லாமே வந்து விட்டது. அவரே பதீத-பாவனரும்
ஆகிறார், குரு ஆசிரியரும் ஆகிறார். தந்தையும் ஆகிறார். அதுவும்
நிராகாராக உள்ளார். இது நிராகாரி இறைத் தந்தையின் உலகப்
பல்கலைக் கழகம். எவ்வளவு நல்ல பெயர்! ஈஸ்வரனுக்கு எவ்வளவு மகிமை
செய்கின்றனர்! அவர் ஒரு புள்ளி எனக் கேட்கும் போது ஆச்சரியம்
ஏற்படுகின்றது. ஈஸ்வரனுக்கு இவ்வளவு மகிமை செய்கின்றனர், ஆனால்
அவர் என்ன பொருளாக உள்ளார்! ஒரு புள்ளி! அவருக்குள் பார்ட்
எவ்வளவு நிறைந்துள்ளது! இப்போது பாபா சொல்கிறார், தேகம் இருந்த
போதும் இல்லறத்தில் இருந்து கொண்டே என்னை நினைவு செய்யுங்கள்.
பக்தி மார்க்கத்தில் தீவிர பக்தி செய்கின்றனர். அது சதோபிரதான்
தீவிர பக்தி எனச் சொல்லப்படுகின்றது. எவ்வளவு தீவிர பக்தியாக
உள்ளது! இப்போது பிறகு நினைவினுடைய தீவிர வேகம் வேண்டும்.
தீவிர நினைவு செய்பவர்களுக்குத் தான் உயர்ந்த பெயர் கிடைக்கும்.
விஜயமாலையின் மணியாக வருவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நரனிலிருந்து நாராயணனாக ஆவதற்கு தினந்தோறும் சத்தியமான தந்தை
சொல்வதைக் கேட்க வேண்டும். சத்யமானவருடன் தொடர்பு வைக்க
வேண்டும். ஒருபோதும் மனம்-சொல்-செயலால் யாருக்கும் துக்கம்
கொடுக்கக் கூடாது.
2) விஜயமாலையில் மணியாக, மற்றும் பாஸ் வித் ஆனர் ஆவதற்காக
நினைவின் வேகத்தைத் தீவிரமாக்க வேண்டும். மாஸ்டர் பதீத-பாவனர்
ஆகி அனைவரையும் பாவன மாக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:
பரமாத்ம நினைவு என்ற மடியில் நிறைந்துவிடக் கூடிய சங்கமயுக
சிரேஷ்ட பாக்கியவான் ஆத்மா ஆகுக.
சங்கமயுகம், சத்யுக சொர்க்கத்தை விடவும் உயர்ந்ததாகும்.
ஏனென்றால் பிராமணர் உலகத்தில் கிடைக்காத பொருள் என்று எதுவுமே
கிடையாது. ஒரு தந்தை கிடைத்து விட்டார் என்றால் அனைத்தும்
கிடைத்து விட்டன. இப்போது குழந்தைகள் நீங்கள் சில நேரம்
அதிந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். சில நேரம் குஷி,
சில நேரம் சாந்தி, சில நேரம் ஞானம், சில நேரம் ஆனந்தம், இன்னும்
சில நேரம் பரமாத்ம மடியின் ஊஞ்சலில் ஆடுகிறீர்கள். பரமாத்ம மடி
என்பது நினைவில் மூழ்கி இருக்கும் அவஸ்தா. இந்த மடி ஒரு
விநாடியில் அநேக ஜென்மங்களின் துக்கம்-வேதனையை மறக்கச் செய்து
விடும். ஆக, இந்த சிரேஷ்ட சம்ஸ்காரத்தை சதா ஸ்மிருதியில் வைத்து
பாக்கியவான் ஆத்மா ஆகுங்கள்.
சுலோகன்:
பாபா உங்கள் பாடலைப் பாடட்டும், நீங்கள் பாபாவின் பாடலைப்
பாடுங்கள் - அந்த மாதிரி நல்ல குழந்தை ஆகுங்கள்.
அவ்யக்த சமிக்கை: தங்களுக்காகவும் மற்றும் அனைவருக்காகவும்
மனதின் மூலமாக யோகத்தின் சக்திகளை பயன்படுத்துங்கள்.
முதலில் தன் மீது யோகத்தைப் பிரயோகம் செய்து பாருங்கள். ஒவ்வொரு
மாதம் அல்லது ஒவ்வொரு 15 நாளிலும் ஏதாவது ஒரு விசேஷ குணம்
அல்லது ஏதேனும் விசேஷ சக்தியைத் தன் மீது பிரயோகம் செய்து
பாருங்கள். ஏனென்றால் குழுவில் அல்லது சம்பந்தம்-தொடர்பில்
பேப்பர் (சோதனைத் தாள்) வரத் தான் செய்யும். எனவே முதலில் தன்
மீது பிரயோகம் செய்து சோதித்துப் பாருங்கள். எந்த ஒரு பேப்பர்
வந்தாலும் எந்த குணம் அல்லது சக்தியைப் பிரயோகம் செய்வதன் மூலம்
எவ்வளவு சமயத்தில் வெற்றி கிடைத்தது? எப்போது தன் மீது பிரயோகம்
செய்து வெற்றி பெறுகிறீர்களோ, அப்போது மற்றவர்கள் மீது பிரயோகம்
செய்வதற்கான ஊக்கம்-உற்சாகம் தானாக அதிகரித்துக் கொண்டே போகும்.