30.03.25    காலை முரளி            ஓம் சாந்தி  30.11.2004      பாப்தாதா,   மதுபன்


இப்பொமுது தனது நடத்தை மற்றும் முகத்தின் மூலம் பாபாவுக்கு சமமான அவ்யக்த ரூபத்தைக் காட்டுங்கள், சாட்சாத்கார மூர்த்தி ஆகுங்கள்

இன்று பாக்கிய விதாதா (வள்ளல்) பாபா தனது நாலாபுறங்களில் உள்ள சிரேஷ்ட பாக்கியவான் குழந்தைகளைப் பார்த்துப் புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார். முழு கல்பத்திலும் இப்படிப்பட்ட உயர்ந்த (சிரேஷ்ட) பாக்கியம் யாருக்குமே இருக்கமுடியாது. கல்ப கல்பத்திற்கான இந்த பாக்கியத் தின் அதிகாரத்தை குழந்தைகள் தான் அடைகின்றீர்கள். தனது கல்பகல்பத்திற்கான அதிகாரத்தின் பாக்கியம் நினைவு இருக்கின்றதா? இந்த பாக்கியம் அனைத்தைக்காட்டிலும் உயர்ந்த (சர்வ சிரேஷ்ட) பாக்கியம் ஏன்? ஏனெனில் சுயம் பாக்கியத்தை வழங்கும் வள்ளலே இந்த உயர்ந்த பாக்கியத்திற்கான பிறவியை குழந்தைகளாகிய உங்களுக்கு வழங்கியுள்ளார், ஒருவருடைய பிறவி, பாக்கிய விதாதாவின் மூலம் ஏற்படுகின்றது எனில் அதைவிட சிரேஷ்ட பாக்கியம் வேறேதும் உண்டோ! தனது பாக்கியத்தின் போதை நினைவில் இருக்கின்றதா? தனது பாக்கியத்தின் பட்டியலை எடுத்தால் எத்தனை பெரியதான பட்டியலாக இருக்கும்? பாக்கியசாலியான பிராமண வாழ்வில் கிடைக்கவில்லை என்ற பொருளே இல்லை! அனைவரின் மனதில் தனது பாக்கியத்தின் லிஸ்ட் நினைவில் வந்துவிட்டது! நினைவுகளில் கொண்டு வாருங்கள், வந்துவிட்டாதா? உள்ளம் என்ன பாடலைப் பாடுகின்றது? ஆஹா பாக்கிய விதாதாவே! ஆஹா எனது பாக்கியமே! ஒரு பாகவானுடன் மூன்று சம்பந்தங்களின் பலன் என்பதுவே இந்த பாக்கியத்தின் சிறப்பியல்பு. ஒருவர் மூலம் ஒருவரில் மூன்று சம்பந்தம், அப்பா, ஆசான், சத்குரு - இதுவே ஒருவர் வாழ்வில் விசேஷ சம்பந்தங்களாகும். யாருக்கும் ஒருவரிடம் மூன்று விசேஷமான இந்த சம்பந்தங்கள் மற்றும் பலன்கள் இருக்காது. நீங்கள் எங்களுக்கு தந்தையும் ஆசானும் சத்குருவாகவும் இருக்கின்றீர்கள் என்று மகிழ்ச்சியாக கூறுகின்றீர்கள். தந்தையின் மூலம் அனைத்து கஜானாக்களின் (பொக்கிசங் களின்) சுரங்கத்தையும் அடைகின்றோம். பொக்கிசங்களின் பட்டியலும் நினைவில் வந்துவிட்டது! நினைவுகளில் கொண்டு வாருங்கள் என்னென்ன கஜானா தந்தையின் மூலம் கிடைத்து விட்டது! கிடைத்துவிட்டதா? அல்லது கிடைக்க வேண்டுமா? என்ன கூறுவீர்கள்? பாலகனாகவும் எஜமானராக வும் இருக்கவே செய்கின்றீர்கள்! டீச்சர் மூலம் படிப்பின், உயர்ந்த பதவியின் பிராப்தி ஆகிவிட்டது. இப்படியாக பார்க்கபோனால் உலகத்தில் அனைத்தைக்காட்டிலும் உயர்ந்த பதவி என்றால் இராஜ்ஜியப் பதவி எனப் பாடப்பட்டுள்ளது, நீங்களோ இரட்டை இராஜா ஆகிவிட்டீர்கள். நிகழ்கால சுயராஜ்ஜிய அதிகாரி மற்றும் வருங்காலத்தில் அனேக ஜென்மங்கள் இராஜ்ஜிய பதவிக்கு அதிகாரிகள். படிப்பு ஒரு பிறவிக்கானது, அதுவும் சிறிய பிறவி மற்றும் பதவிக்கான பிராப்தி அனேக பிறவிக்கானது, மற்றும் இராஜ்ஜியமும் அகண்டது, அசைக்கமுடியாதது, தடைகளற்ற இராஜ்ஜியமாகும். இப்பொழுதும் சுய இராஜ்ஜிய அதிகாரி கவலையற்ற மகாராஜனாக இருக்கின்றீர் கள், இருக்கின்றீர்களா? கவலையற்ற மகாராஜன் ஆகிவிட்டீர்களா? யாரெல்லாம் கவலையற்று இருக்கினறீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். கவலையற்ற நிலை, சிறிதும் கவலை இல்லையா? பார்க்க வேண்டும் - எப்பொழுதேனும் ஏதாவது மொம்மை விளையாட்டு (பப்பட் சோ) எதிரில் வந்தால் பிறகு கவலை வருமா? மாயாவின் பொம்மை விளையாட்டு முன்னே வருகின்றதா இல்லையா? பிறகு சிறிது சிறிது கவலை ஏற்படுகின்றதா? ஏற்படவில்லையா? சிறது கவலை, சிந்தனை ஓடுகின்றதா அல்லது ஓடுவதில்லையா? இருப்பினும் உயர்ந்த பாக்கியம் இப்பொழுதிலிருந்தே கவலையற்ற இராஜாவாக ஆக்குகின்றது. இப்படி சிறியதாகவோ பெரியதாகவோ எந்த விசயங்கள் வந்தாலும் அது மேலும் வரும் காலத்திற்கான அனுபவியாக, பரிபக்குமாக்கக் கூடியதாகும்.

இப்பொழுது அனைவரும் இந்த விதவிதமான விசயங்களின் அனுபவி ஆகிவிட்டீர்கள் அல்லவா! பயம் கொள்வதில்லை தானே? ஓய்வாக சாட்சி என்ற சீட்டில் அமர்ந்து கொண்டு இந்த மொம்மலாட்டத்தை பாருங்கள். கார்ட்டூன் சோ பாருங்கள். இது ஒன்றுமே இல்லை, கார்ட்டூன் (அட்டை) தான். இப்போது உறுதியாக ஆகிவிட்டீர்கள் அல்லவா ! இப்போது திடமாக இருக்கின்றீர் களா? அல்லது அவ்வப்பொழுது பயப்படுகின்றீர்களா! காகிதப் புலியாகி வருகின்றது. காகித மானாலும் புலியாகி வருகின்றது. இப்பொழுது சமயத்தின் அனுசாரம் அனுபவி மூர்த்தியாகி சமயத்திற்கு, இயற்கைக்கு, மாயாவிற்கு சேலஞ்ச் செய்யுங்கள் - வா, நாங்களே விஜயன் (வெற்றி யாளர்கள்). வெற்றிக்கான சவால் விடுங்கள். (இடையிடையில் தொண்டையில் இருமல் வருகின்றது) இன்று குரல் வளம் சிறிது சீராக இல்லை (கெட்டுள்ளது), சந்திப்பு என்பது உள்ளது அல்லவா!

பாப்தாதாவிடம் இரண்டு குரூப் அடிக்கடி வருகின்றது, எதற்காக வருகின்றது? நாங்கள் தயார் என்ற இரண்டு குருப்பும் பாப்தாதாவிடம் கூறுகின்றது. ஒன்று சமயம், இயற்கை மற்றும் மாயாவாகும். இப்பொழுது நமது இராஜ்ஜியம் முடியப்போகின்றது என்று மாயா புரிந்துள்ளது. இரண்டாவது குரூப் - அட்வான்ஸ் பார்ட்டியாகும். இரண்டு குரூப்பும் தேதியை கேட்டுக்கொண்டிருகின்றார்கள். வெளிநாட்டில் ஒரு வருடத்திற்கு முன்னரே தேதி குறித்துவிடு கின்றீர்கள் அல்லவா? இங்கோ 6 மாதம் முன்னரே குறித்துவிடுகின்றார்கள். பாரதத்தில் வேகமாக செல்கின்றார்கள், 15 நாளிலும் கூட ஏதேனும் நிகழ்ச்சிக்கு தேதி குறித்து விடுகின்றார்கள். எனவே சமாப்தி, சம்பன்ன நிலை, பாபாவுக்கு சமமாக ஆகும் தேதி என்ன? இதை பாப்தாதா கேட்கின்றார். இந்த தேதியை நீங்கள் பிராமணர்கள் உறுதி செய்ய வேண்டும், முடியுமா? தேதியை நிர்ணயம் செய்ய முடியுமா? பாண்டவர்கள் கூறுங்கள், மூவரும் கூறுங்கள் (நிர்வையர். இரமேஷ் மற்றும் பிரிட்ஜ்மோகன் சகோதரர்களிடம் பாப்தாதா கேட்கின்றார்) தேதி உறுதி செய்ய முடியுமா? சொல்லுங்கள் முடியுமா? திடீர் என ஏற்படுமா? டிராமாவில் நிர்ணயக்கப்பட்டுள்ளது ஆனாலும் அதை நடை முறையில் கொண்டு வரவேண்டும் அல்லவா இல்லையா? அது என்ன? கூறுங்கள். ஏற்பட வேண்டுமா? திடிரென ஏற்படட்டுமா? தேதி குறிக்கமுடியாதா? முடியமா? முதல் வரிசையில் உள்ளவர்கள் முடியமா? கூறுங்கள். டிராமாவை நடைமுறையில் கொண்டு வருவதற்காக மனதில் தேதியின் சங்கல்பம் செய்யவேண்டும் எனக் கூறுபவர்கள் கை உயர்த்துங்கள். செய்தாக வேண்டுமா? இவர்கள் உயர்த்தவில்லையே, திடீர் என ஏற்படும்? தேதி குறிக்க முடியுமா? பின்னாடி அமர்ந்திருப்பவர்கள் புரிந்து கொண்டீர்களா? திடீர் என ஏற்படுவது சரிதான் ஆனால் தன்னை தயார் செய்வதற்கு இலட்சியம் அவசியம் வைக்கவேண்டியது உள்ளது. இலட்சியமின்றி சம்பன்ன நிலையை அடைவதில் அலட்சியம் வந்துவிடுகின்றது. எப்பொழுதெல்லாம் தேதியை குறிக்கின்றீர் களோ அப்பொழுது வெற்றி கிடைப்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஏதேனும் நிகழ்ச்சிக்கு தேதி குறிக்கின்றீர்கள் அல்லவா? ஆகியே தீரவேண்டும், இந்த சங்கல்பம் செய்கின்றீர்கள் அல்லவா! அல்லது இல்லை டிராமாவில் தானாகவே ஏற்பட்டுவிடுமா? என்ன புரிந்துள்ளீர்கள்? முதல் வரிசையில் உள்ளவர்கள் கூறுங்கள். பிரேம் (டெராடூன்) கூறுங்கள். செய்தாக வேண்டும், செய்தே தீரவேண்டும். ஜெயந்தி - செய்தாக வேண்டும். அது எப்போது ஏற்படும்? இறுதியில் ஏற்படும் என்றால் அப்பொழுது சமயம் வந்துவிடும்! சமயம் உங்களை சம்பன்னமாக ஆக்குமா அல்லது நீங்கள் சமயத்தை சமீபமாக கொண்டு வருவீர்களா? பாப்தாதா பார்த்தார் - நினைவில் ஞானமும் உள்ளது, போதையும் இருக்கின்றது, நம்பிக்கையும் உள்ளது ஆனால் இப்பொழுது எதை சேர்க்க வேண்டுமெனில், நடத்தை மற்றும் முகத்தில் தென்படவேண்டும். புத்தியில் நினைவு அனைத்தும் உள்ளது, நினைவிலும் வருகின்றது, ஆனால் இப்பொழுது சொரூபத்தில் வரவேண்டும். ஒருவேளை சாதாரண ரூபத்திலும் யாரேனும் பெரிய தொழில் செய்பவரானாலும் அல்லது பெரிய பணக் காரரின் படித்த குழந்தையானாலும் அவருடைய நடத்தையிலிருந்து ஏதோ உள்ளது எனத் தென்பட்டுவிடும். அவரிடம் ஏதாவது தனிப்பட்ட தன்மை தென்பட்டுவிடும். எனவே இவ்வளவு பெரிய பாக்கியமும், ஆஸ்தியும். படிப்பு மற்றும் பதவியும் இருக்கின்றது. சுயராஜ்ஜியம் இப்போதே உள்ளது அல்லவா! பிராப்திகள் அனைத்தும் உள்ளது, ஆனால் நடத்தை மற்றும் முகத்தில் பாக்கியத்தின் நட்சத்திரம் நெற்றியில் ஒளிருவது தென்படவேண்டும் என்பது இப்பொழுது கூட (அடிசன் ஆக) வேண்டும். இப்பொழுது பாக்கியவான் ஆத்மாக்களாகிய உங்கள் மூலம் மக்களுக்கு இந்த அனுபவம் ஏற்படவேண்டும், வேண்டும் என்பது கூட கிடையாது, இவர் நமது இஷ்ட தேவர், இஷ்ட தேவியர்கள் என்று இருக்க வேண்டும். இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள். எப்படி பிரம்மா பாபாவை பார்த்தோம் - சாதாரண உடலில் இருந்தாலும் ஆதி சமயத்திலும் பிரம்மா பாபாவிடம் என்ன தென்பட்டது, கிருஷ்ணர் தென் பட்டார் அல்லவா! ஆதியில் (ஆரம்பத்தில்) இருந்தவர்களுக்கு அனுபவம் உள்ளது அல்லவா! எனவே எப்படி ஆதியில் பிரம்மா பாபா மூலம் கிருஷ்ணர் தென்பட்டாரோ அதே போன்று இறுதியில் என்ன தென்பட்டுக் கொண்டிருந்தது? அவ்யக்த ரூபம் தென்பட்டது தானே! நடத்தையில், முகத்தில் தென்பட்டது அல்லவா! இப்பொழுது பாப்தாதா விசேஷமாக நிமித்தமான குழந்தைகளுக்கு இந்த வீட்டுப்பாடத்தை (ஹோம் ஒர்க்) தருகின்றார், இப்பொழுது பிரம்மா பாபாவுக்கு சமமாக அவ்யக்த ரூபம் தென்படவேண்டும். நடத்தை மற்றும் முகத்தில் குறைந்ததிலும் குறைந்தது 108 மாலையின் மணி தென்படவேண்டும். பாப்தாதா பெயர் விரும்பவில்லை, பெயர் கூறவில்லை - 108 யாராகினும் அவர்களின் நடத்தை மற்றும் முகம் மூலம் தானாகவே பிரத்யட்சம் ஆகும். இந்த ஹோம் ஒர்க்கை பாப்தாதா நிமித்தமான குழந்தை களுக்கு விசேஷமாக கொடுத்துக்கொண்டிருக்கின்றார். முடியுமா? நல்லது எவ்வளவு கால அவகாசம் (சமயம்) தேவை? நாங்கள் பின்னே வந்துள்ளோம் எனப் புரிந்து கொள்ள வேண்டாம், சிலர் கூறுகின்றார்கள் - நாங்கள் வந்து சிறிது வருடமே ஆகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டாம், நேரத்திற்கான விசயமில்லை, யார் வேண்டுமானலும் லாஸ்ட்டிலிருந்து (இறுதி) ஃபாஸ்ட்(வேகம்) மற்றும் ஃபாஸ்ட்டிலிருந்து ஃபஸ்ட் (முதலில்) வரமுடியும், இதுவும் பாப்தாதாவிற்கான சவாலாகும், செய்யமுடியும். யார் வேண்டுமானாலும் செய்யமுடியும். இறுதியில் வந்தவர்களாலும் முடியும். வெறும் இலட்சியத்தை உறுதியாக்கவேண்டும் - செய்தே ஆகவேண்டும், அப்படியாக இருக்கவேண்டும்.

இரட்டை அயல் நாட்டினர் கை உயர்த்துங்கள். இரட்டை அயல் நாட்டினர் என்ன செய்வீர்கள்? இரட்டை வாய்ப்பை எடுப்பீர்களா என்ன? பாப்தாதா பெயரை வெளியிடமாட்டார், ஆனால்- இப்படியாக உள்ளது என அவர்களின் முகம் கூறும். தைரியமுள்ளதா? முதல் வரிசையை பாப்தாதா பார்த்துக்கொண்டிருக்கின்றார். தைரியம் உள்ளதா? தைரியமுள்ளது எனில் கை உயர்த்துங்கள். தைரியம் உள்ளது அல்லவா! பின்னாடி இருப்பவர்களும் உயர்த்த முடியும். முதலில் வருபவர்களே அர்ஜூனர் ( ஜோ ஓட்டே சோ அர்ஜுன்). நல்லது - பாப்தாதா ரிசல்ட் பார்ப்பதற்காக, என்னென்ன புருஷார்த்தம் செய்கின்றீர்கள், யார் யார் செய்து கொண்டிருக் கின்றார்கள் என்ற ரிசல்ட் பார்ப்பதற்காக 6 மாதங்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். 6 மாதங் களில் ரிசல்ட் பார்ப்போம் பிறகு, முடிவு செய்வோம். சரியா? ஏனெனில் பார்க்கப்போனால் இப்பொழுது சமயத்தின் வேகம் தீவிரமாக சென்று கொண்டிருக் கின்றது, படைப்பு வேகமாக போகக்கூடாது, படைப்பவர் வேகமாக செல்லவேண்டும். இப்பொழுது சிறிது வேகப் படுத்துங்கள், இப்பொழுது பறந்து செல்லுங்கள். சென்று கொண்டிருக்கின்றோம் என்றல்ல, பறந்து கொண்டி ருக்கின்றேன். பதில் உரைக்கும் போது நன்றாகக் கூறுகின்றார்கள், நாங்கள் தானே இருப்போம் அல்லவா! வேறு யார் இருப்பார்கள்! பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார். ஆனால், இப்பொழுது ஆத்மாக்கள் சிறிது பார்க்க விரும்புகின்றார்கள். பாப்தாதாவிற்கு நினைவு இருக்கின்றது - அப்பொழுது நீங்கள் குழந்தைகள் ஆதியில் சேவையில் வெளிப்பட்டீர்கள். அப்பொழுது குழந்தைகளிடம் கூட சாட்சாட்காரம் ஏற்பட்டது, இப்போது சேவை மற்றும் சொரூபம் இரண்டின் பக்கம் கவனம் தேவை. எனவே என்ன கேட்டீர்கள்! இப்பொழுது சாட்சாத்கார மூர்த்தி ஆகுங்கள். சாட்சாத் பிரம்மா பாபா ஆகுங்கள். நல்லது!

இன்று புதிய புதிய குழந்தைகளும் அதிகமாக வந்துள்ளார்கள். தனது சினேகத்தின் சக்தியினால் அனைவரும் வந்தடைந்துவிட்டீர்கள், எனவே பாப்தாதா விசேஷமாக யாரெல்லாம் புதிய பதிய குழந்தைகள் வந்துள்ளீர்களோ, அவர்கள் ஒவ்வொருவருக்கும் பெயர் சகிதமாக பலமடங்கு வாழ்த்துக்கள் கொடுத்துக்கொண்டிருக்கின்றார், கூடவே வரதானம் கொடுத்துக்கொண்டிருக்கின்றார் - சதா பிராமண வாழ்வில் வாழ்ந்து கொண்டேயிருங்கள், பறந்து கொண்டேயிருங்கள். நல்லது!

சேவைக்கான வாய்ப்பு பஞ்சாப் : பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் எழுந்திருங்கள். மிகவும் நல்லது. இந்த விதியும் கூட நன்றாக உருவாகியுள்ளது, ஒவ்வொரு ஜோனிற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. ஒரு யக்ஞ சேவையின் மூலம் ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு வருமானம் சேமிப்பாகின்றது. ஏனெனில் அதிகபட்சம் எந்த காரியம் செய்தாலும் யக்ஞ சேவை நினைவு உள்ளது மற்றும் யக்ஞ சேவையின் நினைவு வந்தவுடன் யக்ஞத்தை படைப்பவர் தந்தையின் நினைவு வருகின்றது. எனவே சேவை அதிகத்திலும் அதிகமாக புண்ணியத்தின் கணக்கை சேமிப்பு செய்ய வைக்கின்றது. மற்றும் யார் சத்திய புருஷார்த்தி குழந்தைகளோ அவர்கள் தனது நினைவின் சார்ட்டை சகஜமாக வும் நிரந்தரமாகவும் உருவாக்க முடியும். ஏனெனில் இங்கு ஒன்று மகாரதிகளின் தொடர்பு இருக்கின்றது, தொடர்பின் நிறம் எளிதாக பிடித்துவிடுகின்றது. இங்கு கிடைத்த 8-10 நாட்களில் நல்ல முன்னேற்றம் செய்து விடமுடியும் என்ற கவனம் ஏற்படுகின்றது. பொதுவான விதத்தில் சேவை செய்தால் இவ்வளவு இலாபம் இராது, ஆனால் சகஜ நிரந்தர யோகியாக, புண்ணியக் கணக்கை சேமிக்க, பெரியதிலும் பெரிய பரிவாரத்தின் போதையில். குஷியாக இருக்க வாய்ப்பாக அமைகின்றது. எனவே பஞ்சாப்பைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, ஒவ்வொரு ஜோனிற்கும் கிடைக்கின்றது, ஆதனால், மூன்று இலாபம் எடுக்கும் இலட்சியம் வைக்கலாமே! எவ்வளவு புண்ணியத்தின் கணக்கை சேமிப்பு செய்தோம்? சகஜ நினைவிற்கான முன்னேற்றத்தை எவ்வளவு அடைந்தோம்? மேலும் குழுவின் அல்லது பரிவாரத்தின் அன்பு, சமீபத்திற்கான அனுபவம் எவ்வளவு செய்தோம்? இந்த மூன்று விசயங்களின் ரிசல்ட் ஒவ்வொருவரும் தனக்கு தானே வெளிப்படுத்த வேண்டும். டிராமாவில் வாய்ப்பு என்னவோ கிடைக்கின்றது ஆனால், வாய்ப்பு எடுக்கும் சான்ஸ்சலர் (துணைவேந்தர்) ஆகுங்கள். எனவே பஞ்சாப்பை சார்ந்தவர்கள் புத்திசாலிகள் தானே! நல்லது! அதிக எண்ணிக்கையிலும் வந்துள்ளீர்கள், மேலும் சேவையும் திறந்த உள்ளத்துடன் கிடைத்துள்ளது. வந்திருந்த கூட்டமும் நன்றாக வந்துள்ளார்கள். நல்லது தொடர்பு நன்றாக உள்ளது.

(இன்று இரண்டு விங்க் - கிராமபுர வளர்ச்சி பிரிவு மற்றும் மகளிர் பிரிவின் மீட்டிங்கிற்கு வந்துள்ளீர்கள்)

மகளிர் விங்கைச் சார்ந்தவர்கள் எழுந்திருங்கள்:- இதில் அதிகபட்சம் டீச்சர்கள் தானே? டீச்சர் கை உயர்த்துங்கள். நல்ல வாய்ப்பாக உள்ளது. சேவைக்கு சேவை மற்றும் சேவைக்கு முதலில் பலன். குழு மற்றும் பாபாவின் சந்திப்பிற்கான ஆனந்தத்தை எடுக்க வேண்டும். எனவே சேவையும் பலனும் கிடைத்துவிட்டது. நல்லது. இப்பொழுது எந்த விங்க் ஆனாலும் குழுவானாலும் ஏதாவது புதிய திட்டத்தை உருவாக்குங்கள். எனவே ஒவ்வொரு குரூப்பும் சிறப்பாக நடைமுறையில் நடத்தை மற்றும் முகத்தில் ஏதாவது ஏதாவது குணம் மற்றும் சக்திக்கான பொறுப்பை எடுங்கள். வெளிப்படையான விதத்தில் கொண்டு வருவோம். இப்படியாக ஒவ்வொரு பிரிவும் ஏதாவது விசேஷத்தை தீர்மானம் செய்யுங்கள் மற்றும் அதற்காக தங்களுக்குள் எப்படி சேவைக்கான ரிசல்ட்டின் குறிப்பு எடுத்திருப்பீர்கள் அல்லவா, அப்படி எழுதப்படிக்க தெரிந்தவர்கள், குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சோதனை செய்து கொண்டே யிருங்கள். எனவே முதலில் நீங்கள் இதை செய்து காட்டுங்கள். மகளிர் பிரிவு இதை செய்து காட்டுங்கள். சரிதானே! ஒவ்வொரு பிரிவும் ஏதாவது ஏதாவது திட்டம் உருவாக்க வேண்டும் மற்றும் சமயத்தை தீர்மானியுங்கள், இந்த கால நேரத்திற்குள் இவ்வளவு சதவீகிதம் நடைமுறையில் கொண்டு வரவேண்டும். பிறகு பாப்தாதா என்ன நடத்தை மற்றும் சித்திரத்தில் வர விரும்புகின்றாரோ, அது வந்துவிடும். சரிதானே! செய்து கொடுக்கவேண்டும். நல்லது சிறிய சிறிய குழுக்கள் அதிசயத்தை செய்து காட்ட முடியும். சரியாக உள்ளது. டீச்சர்கள் என்ன புரிந்துள்ளீர்கள்? செய்ய முடியுமா? செய்ய முடியுமா? திட்டம் தீட்டவேண்டும். நல்லது சேவைக்கு வாழ்த்துக்கள்.

கிராம வளர்ச்சி பிரிவு : இப்பொழுது வரை கிராம வளர்ச்சி பிரிவினர் எத்தனை கிராமங்களை மாற்றியுள்ளீர்கள்? எத்தனை கிராமங்களில் செய்துள்ளீர்கள்? (7கிராமங்கள் செய்துள்ளோம், ஒரு கிராமத்தில் 75 சதவீகிதம் வரை காரியம் நடந்தேறியுள்ளது. இந்த மீட்டிங்கில் நிகழ்ச்சி உருவாக்கியுள்ளோம் - சமயத்தின் அழைப்பு - தூய பொன்னான கிராமிய பாரதம் இந்த திட்டத்தின் கீழ் கிராமங்களில் தீயபழக்கவழக்களிலிருந்து விடுவிக்கும் மற்றும் சுத்தமாக்கும் சேவை செய்வோம்) நல்லது - நடைமுறையல்லவா. இதற்கான மொத்த முடிவுகள் ஐனாதிபதி மற்றும் பிரதம மந்திரியிடம் செல்கின்றதா? (இப்பொழுது அனுப்பவில்லை) அனுப்பு வேண்டும் ஏனெனில் இதை கிராம கிராமங்களில் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள், இது அரசாங்கத்திற் கான வேலை, ஆனால் நீங்கள் சகயோகியாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள் எனவே ரிசல்ட் பார்த்து நன்றாக ஏற்றுக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆவனத்தை உருவாக்குங்கள் அது அரசாங்கத்தின் பல முக்கிய மக்களுக்கு செல்லும், புத்தகம் அல்ல, பத்திரிக்கையல்ல, சுருக்கமாக முழு விசயங்களும் அனைத்து பக்கமும் அனுப்ப வேண்டும். நல்லது - வாழ்த்துக்கள். நல்லது - (இடையிடையில் இருமல் வருகின்றது) இன்று குரல் வளம் ஓய்வு விரும்புகின்றது. நல்லது. பாப்தாதாவிடம் நாலாபுறத்தின் சேவைக்கான முடிவுகளும் வருகின்றது மற்றும் விசேஷமாக இன்று எந்த மூலை முடுக்கும் இருந்து விடக்கூடாது - அனைவருக்கும் செய்தி கிடைக்கவேண்டும் மேலும் யாரெல்லாம் மெகா புரோக்கிரம் (பாரதம்) செய்தீர்களோ, அதன் செய்தி அனைத்தும் கிடைத்தது. நாலாபுரத்திலும் சேவையின் முடிவுகள் வெற்றிப் பூர்வமாக உள்ளது. குழந்தைகள் எப்படி சேவையில் செய்தி கொடுப்பதில் வெற்றியை அடைந்துள்ளீர்களோ அப்படியாக சொல் மூலம் தொடர்பு மூலம் மற்றும் கூடவே தனது முகத்தின் மூலமாகவும் சாட்சாத் பரிஸ்தா ரூபத்தை செய்வித்துக்கொண்டே செல்லுங்கள்.

நல்லது - யாரெல்லாம் முதல் முறை வந்தள்ளீர்களோ அவர்கள் கை உயர்த்துங்கள். அனேகம் உள்ளீர்கள். நல்லது, டூலேட் (மிக காலதாமதம்) பலகை போடுவதற்கு முன் வந்துவிட்டீர்கள், நல்லது வாய்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதிசயம் செய்து காட்டுங்கள். தைரியம் வைத்துள்ளீர் கள், பாப்தாதாவின் உதவி ஒவ்வொரு குழந்தைகளுடனும் உள்ளது. நல்லது

பாப்தாதா நாலாபுறத்திலுள்ள சாகாரத்தில் எதிரில் அமர்ந்திருக்கும் குழந்தைகளுக்கு, அவரவர் இடத்தில் உள்ள, உள்நாட்டில் பாபாவுடன் சந்திப்பு கொண்டாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, அதிகமான சேவை செய்ததற்கு, அன்பிற்கு மற்றும் புருஷார்த்தம் செய்ததற்கு வாழ்த்துக்கள் என்னவோ வழங்கிக்கொண்டுள்ளார் ஆனால் புருஷார்த்தத்தில் தீவிரமாக ஆகி இப்பொழுது ஆத்மாக்களை துக்கம் அசாந்தியிலிருந்து விடுவிப்பதற்கு மேலும் தீவிர புருஷார்த்தம் செய்யுங் கள். துக்கம் அசாந்தி கீழான தன்மை அதிகரித்துக்கொண்டுள்ளது, இப்பொழுது அதை முடிவிற்கு கொண்டு வந்து அனைவருக்கும் முக்திதாமத்திற்கான ஆஸ்தியை தந்தையிடமிருந்து வழங்குங் கள். அப்படிப்பட்ட சதா திடமான எண்ணங்கள் கொண்ட குழந்தைகளுக்கு அன்பு நினைவு மற்றும் நமஸ்தே. ஓம் சாந்தி

வரதானம்:
பணிவு மற்றும் அதிகாரத்தின் (அதாரிட்டி) சமமான நிலையின் மூலம் பாபாவை பிரத்தியட்சம் செய்யக்கூடிய விசேஷ சேவாதாரி ஆகுக

எங்கு சமநிலை (பேலன்ஸ்) இருக்குமோ அங்கு அதிசயம் தென்படுகிறது. எப்பொழுது நீங்கள் பணிவு மற்றும் சத்தியத்தின் அதிகாரத்தின் சமநிலையுடன் யாருக்கேனும் பாபாவின் அறிமுகத்தை கொடுத்தால் அதிசயம் தென்படும். இந்த ரூபத்தில் தந்தையை பிரத்தியட்சம் செய்ய வேண்டும். தங்களின் வார்த்தை தெளிவாக இருக்கவேண்டும், அதில் அன்பும் இருக்க வேண்டும், பணிவு மற்றும் இனிமையும் இருந்தால் மகான் தன்மை மற்றும் சத்தியமும் இருந்தால் பிரத்தியட்சம் ஏற்படும். பேசும்போதே இடையிடையில் அனுபவத்தை செய்வியுங்கள் இதன்மூலம் அன்பில் மூழ்கிய மூர்த்திய்ன அனுபவம் தேவை. அப்படிப்பட்ட சொரூபத்தினால் சேவை செய்யக் கூடியவர்கள் தான் விசேஷ சேவாதாரி ஆவர்கள்.

சுலோகன்:
சமயத்தில் எந்த சாதனமும் இல்லை எனினும் சாதனையில் தடை ஏற்படக்கூடாது

அவ்யக்த பிரேரணை - சத்தியம் மற்றும் பண்பாடு என்ற கலாச்சாரத்தை தனதாக்குங்கள்

சிலர் கோபம் என்பது உண்மையில் ஒரு விகாரம் அல்ல, அது ஒரு ஆயுதம் என்று கூறுகின்றார் கள். ஆனால் கோபம் ஞானம் நிறைந்த ஆத்மாவிற்கு மகா எதிரியாகும். ஏனெனில் கோபம் அனேக ஆத்மாக்களின் சம்பந்தம், தொடர்பில் வருவதனால் பிரசித்தியாகி விடுகின்றது. மேலும் கோபத்தை பார்த்து பாபாவின் பெயர் அவபெயராகி விடுகின்றது. பாருங்கள் ஞானம் நிறைந்த குழந்தைகளை பார்ப்பவர்கள் இதைதான் கூறுவார்கள், ஆகையால் இதன் அம்சத்தையும் சமாப்தி செய்து பண்புக் கலாச்சாரம் நிறைந்த விவகாரத்தை செய்யுங்கள்.