30-04-2026 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இது உங்களது
அதிசயமான பல்கலைக்கழகமாகும், இங்கு சீர்கெட்டவர்களை சீராக்கக்
கூடிய கள்ளங்கபடமற்ற தந்தை ஆசிரியராகி உங்களுக்கு
கற்பிக்கின்றார்.
கேள்வி:
இந்த கடைசி (விசாரணை) நேரத்தில்
குழந்தைகளாகிய நீங்கள் அனைவருக்கும் எந்த இலட்சியத்தை
கொடுக்கிறீர்கள்?
பதில்:
ஹே ஆத்மாக்களே! இப்பொழுது
பாவனமாக ஆகுங்கள், பாவனம் ஆகாமல் திரும்பிச் செல்ல முடியாது.
அரைக் கல்பமாக பீடித்திருந்த நோயிலிருந்து விடுபடுவதற்கு
அனைவரையும் நீங்கள் 7 நாள் பாடத்தில் (பட்டியில்) அமர
வைக்கிறீர்கள். பதீதமானவர்களின் சகவாசத்திலிருந்து தூர இருக்க
வேண்டும், யாருடைய நினைவும் வரக் கூடாது, அப்பொழுது தான்
புத்தியில் சிறிதளவாவது ஞானம் தாரணை ஆகும்.
பாடல்:
நீங்கள் இரவெல்லாம் கழித்தீர்கள்
...........
ஓம் சாந்தி.
இவ்வாறு குழந்தைகளுக்கு கூறியது யார்? ஏனெனில் பள்ளியில்
அமர்ந்திருக்கிறீர்கள் எனில் அவசியம் ஆசிரியர் கூறியிருப்பார்.
ஆசிரியர் கூறினாரா? தந்தை கூறினாரா? அல்லது சத்குரு கூறினாரா?
என்ற கேள்வி எழுகிறது. இந்த மகாவாக்கியம் கூறியது யார்? நமது
எல்லை யற்ற தந்தை தான் பரம்பிதா பரமாத்மா என்று
கூறப்படுகின்றார் என்ற விசயம் முதன் முதலில் குழந்தைகளின்
புத்தியில் வர வேண்டும். ஆக தந்தையும் கூறியிருக்கின்றார்,
ஆசிரியரும் கூறியிருக்கின்றார், கூடவே சத்குருவும்
கூறியிருக்கின்றார். மாணவர்களாகிய உங்களது புத்தியில் இது
இருக்கிறது. மற்ற கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில்
ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பர், அவர்களை யாரும் தந்தை என்றோ
அல்லது குரு என்றோ கூறமாட்டார்கள். இதையும் கூட பாடசாலை என்றோ,
பல்கலைக்கழகம் என்றோ அல்லது கல்லூரி என்றோ கூறலாம். படிப்பு
அல்லவா! பாடசாலையில் நமக்கு கற்பிப்பது யார்? என்பதை முதன்
முதலில் புரிந்து கொள்ள வேண்டும், அனைத்து ஆத்மாக்களுக்கும்
தந்தையானவர், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளலான அந்த
நிராகாரமானவர் தான் நமக்கு கல்வி கற்பிக்கின்றார் என்பதை
குழந்தைகள் அறிவீர்கள். இந்த முழு படைப்புகளும் அந்த ஒரு
படைப்பவரின் சொத்துக்கள் ஆகும். ஆக சுயம் அமர்ந்து படைப்புகளின்
முதல், இடை, கடையின் இரகசியத்தையும் புரிய வைக்கின்றார்.
குழந்தை களாகிய நீங்கள் தந்தையிடத்தில் பிறப்பு
எடுத்திருக்கிறீர்கள். அனைத்து ஆத்மாக் களாகிய நமது தந்தையாக
அவர் இருக்கின்றார், அவர் தான் ஞானக் கடல் என்றும், ஞானம்
நிறைந்தவர் என்றும் கூறப்படுகின்றார் என்று நீங்கள் புத்தியில்
புரிந்து கொண்டீர் கள். ஞானக் கடலாக, பதீத பாவனாக இருக்கின்றார்.
ஞானத்தின் மூலம் தான் சத்கதி ஏற்படுகிறது, மனிதர்கள்
பதீதத்திலிருந்து பாவன மாக ஆகின்றனர். இப்பொழுது குழந்தை
களாகிய நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். நமக்கு ஞானக்
கடலான நிராகாரமானவர் கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்று வேறு
எந்த பள்ளியிலும் யாருடைய புத்தியிலும் இருக்காது. இதை நீங்கள்
மட்டுமே அறிவீர்கள். நீங்கள் தான் புரிய வைக்கப்படுகிறீர்கள்.
நமக்கு நிராகார பரமாத்மா கற்பிக்கின்றார் என்பதை முழு
உலகத்தினர் குறிப்பாக பாரதத்தினர் புரிந்திருக்கமாட்டார்கள்.
அவர்களுக்கு (உலகத்தாருக்கு) படிப்பு கற்பிக்கக் கூடியவர் மனித
ஆசிரியர் ஆவார். மேலும் நான் ஆத்மா என்ற ஞானமும் யாரிடத்திலும்
கிடையாது. ஆத்மா தான் படிக்கிறது. ஆத்மா தான் அனைத்தும்
செய்கிறது. இந்த தொழிலை இந்த ஆத்மா இந்த கர்மேந்திரியங்களின்
மூலம் செய்கிறது. நான் இன்னாராக இருக்கிறேன் என்பது
அவர்களிடத்தில் இருக்கிறது. உடனேயே தனது பெயர், உருவம்
நினைவிற்கு வந்துவிடு கிறது. நான் இதை செய்கிறேன், நான் இவ்வாறு
செய்கிறேன், சரீரத்தின் பெயர் தான் நினைவிற்கு வருகிறது. இது
தவறாகும். முதலில் நாம் ஆத்மாக்கள் அல்லவா! பிறகு தான் இந்த
சரீரத்தை எடுத்திருக்கிறோம். சரீரத்தின் பெயர் மாறிக் கொண்டே
இருக்கிறது, ஆத்மா வின் பெயர் மாறுவது கிடையாது. ஆத்மா ஒன்றே
ஒன்று தான். ஆத்மாவாகிய எனக்கு சிவன் என்ற ஒரே ஒரு பெயர் தான்
இருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். இதை முழு உலகத்தினரும்
அறிவர். மற்றபடி இவ்வளவு பெயர்களையும் சரீரத்திற்குத் தான்
வைக்கப் படுகிறது. சிவபாபாவை சிவன் என்று தான் கூறுகின்றனர்.
அவருக்கு சரீரம் கிடையாது. மனிதர்களுக்குப் பெயர்
வைக்கப்படுகிறது - நான் இன்னாராக இருக்கிறேன். எனக்கு இந்த
ஆசிரியர் கல்வி கற்பித்துக் கொண்டிருக்கின்றார். பெயர்
கூறுவார்கள் அல்லவா! உண்மையில் ஆத்மா தான் சரீரத்தின் மூலம்
ஆசிரியருடைய வேலையை செய்கிறது. அவர் ஆத்மாக்களுக்குக்
கற்பிக்கின்றார். சம்ஸ்காரம் ஆத்மாவில் இருக்கிறது.
கர்மேந்திரியங் களின் மூலம் கற்பிக்கிறது, சம்ஸ்காரங்களின்
அனுசாரமாக நடிப்பு நடிக்கிறது. ஆனால் தேகத்தின் பெயர் எப்படியோ
அதன்படி முழு தொழிலும் நடைபெறுகிறது. நமக்கு நிராகார தந்தை
கற்பிக்கின்றார் என்பதை இங்கு குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
உங்களது புத்தி எங்கு சென்றுவிட்டது! நாம் ஆத்மாக்கள், அந்த
தந்தையினுடையவர்களாக ஆகி விட்டோம். நிராகார தந்தை வந்து இந்த
சாகாரத்தின் மூலம் நமக்கு கற்பிக்கின்றார் என்பதை ஆத்மா
புரிந்திருக்கிறது. அவரது பெயர் சிவன். சிவஜெயந்தியும்
கொண்டாடுகிறீர்கள். சிவன் எல்லையற்ற தந்தை ஆவார், அவர் தான்
பரம்பிதா பரமாத்மா என்று கூறப்படுகின்றார். அவர் அனைத்து
ஆத்மாக்களுக்கும் தந்தையானவர், அவருக்கு எப்படி ஜெயந்தி
கொண்டாடுவது? ஆத்மா சரீரத்தில் பிரவேசிக்கிறது அல்லது
கர்ப்பத்தில் வருகிறது. மேலிருந்து வருகிறது என்பது யாருக்கும்
தெரிவது கிடையாது. கிறிஸ்துவை தர்ம ஸ்தாபகர் என்று கூறுகின்றனர்.
அவரது ஆத்மா முதன் முதலில் மேலிருந்து வர வேண்டும். சதோபிரதான
ஆத்மா வருகிறது. எந்த விகர்மமும் செய்திருக்காது. முதலில்
சதோபிரதானம், பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகிறது, அப்பொழுது தான்
விகர்மங்கள் ஏற்படுகிறது. முதலில் வரக் கூடிய ஆத்மாக்கள்
சதோபிரதானமாக இருக்கின்ற காரணத்தினால் எந்த துக்கமும்
அனுபவிக்காது. அரைக் கல்பம் முடிவடைந்த பின்பு விகர்மம் செய்ய
ஆரம்பித்து விடுகிறது.
இன்றிலிருந்து 5 ஆண்டிற்கு முன்பு சூரியவம்ச இராஜ்யம் இருந்தது,
மற்ற தர்மங்கள் அனைத்தும் பிறகு தான் வருகின்றன. பாரதவாசிகள்
உலகிற்கு எஜமானர்களாக இருந்தனர். பாரதம் அழிவற்ற கண்டம் என்று
கூறப்படுகிறது, வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. ஆக சிவபாபா
சீர்கெட்டவர் களை சீராக்கக் கூடியவர் ஆவார். கள்ளங்கபடமற்றவர்
என்று சிவன் கூறப்படுகின்றாரே தவிர சங்கர் அல்ல. கள்ளங்கபடமற்ற
சிவன் சீர்கெட்டவர்களை சீராக்கக் கூடியவர். சிவன் மற்றும்
சங்கர் ஒன்று கிடையாது, தனித் தனியானவர்கள். பிரம்மா, விஷ்ணு,
சங்கருக்கு எந்த மகிமையும் கிடையாது. மகிமை ஒரே ஒரு சிவனுக்கு
மட்டுமே, அவர் தான் சீர்கெட்டவர்களை சீர்திருத்து கின்றார்.
நான் சாதாரண வயோதிக சரீரத்தில் வருகிறேன் என்று கூறுகின்றார்.
இவர் (பிரம்மா) 84 பிறவிகள் முடித்துவிட்டார், இப்பொழுது
விளையாட்டு முடிவடைந்துவிட்டது. இந்த பழைய சரீரம், பழைய
சம்மந்தங் களும் அழியப் போகின்றன. இப்போது யாரை நினைப்பது?
அழியப் போகும் பொருட்களை நினைப்பது கிடையாது. புது கட்டடம்
கட்டப்படுகிறது எனில் பழைய கட்டடத்திலிருந்து மனதின் நினைவு
நீங்கிவிடும். இது எல்லையற்ற விசயமாகும். அனை வருக்கும் சத்கதி
ஏற்படுகிறது, அதாவது இராவண இராஜ்யத் திலிருந்து அனைவருக்கும்
விடுதலை கிடைக்கிறது. இராவணன் அனைவரையும் கெடுத்துவிட்டான்.
பாரதம் முற்றிலும் ஏழையாக, அசுத்தமானதாக ஆகிவிட்டது. கலப்படம்,
லஞ்சம், திருட்டு, ஏமாற்றம் போன்றவை களைத் தான் மனிதர்கள்
அசுத்தம் (பிரேஷ்டாச்சாரம்) என்று நினைக்கின்றனர். ஆனால் முதல்
பிரேஷ்டாச்சாரம் அசுத்தம் ஆவது தான் என்று தந்தை கூறுகின்றார்.
சரீரம் விகாரத்தின் மூலம் உருவாகிறது, அதனால் தான் இதை விகார
உலகம் என்று கூறப்படுகிறது. சத்யுகம் விகாரமற்ற உலகம் என்று
கூறப்படுகிறது. சத்யுகத்தில் நாம் இல்லற மார்கத்தைச் சார்ந்த
தேவி தேவதை களாக இருந்தோம். தூய்மையாக ஆகிவிட்டால், பிறகு
விகாரமின்றி குழந்தை எப்படி பிறக்கும்? என்று கேட்கின்றனர்.
நாம் நமது இராஜ்யத்தை புஜ பலத்தினால் அன்றி யோகபலத்தின் மூலம்
ஸ்தாபனை செய்கிறோம் என்று கூறுங்கள். ஆக யோக பலத்தின் மூலம்
குழந்தை பிறக்காதா என்ன? அந்த உலகமே விகாரமற்ற உலகம், தூய
இல்லற ஆசிரமமாகும். இராஜா இராணியைப் போன்று பிரஜைகளும்
சம்பூர்ண நிர்விகாரி களாக இருந்தனர். இங்கு சம்பூர்ண
விகாரிகளாக இருக்கின்றனர். சத்யுகத்தில் விகாரம் இருக்கவே
இருக்காது. அது ஈஸ்வரிய இராஜ்யம் என்று கூறப்படுகிறது. தந்தை
ஈஸ்வரன் ஸ்தாபனை செய்ததாகும். இப்பொழுது இராவண இராஜ்ய மாகும்.
எந்த தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்தாரோ அவருக்கு பூஜை
நடைபெறுகிறது. நரகமாக மாற்றிய இராவணனை எரித்து வருகிறீர்கள்.
துவாபர யுகம் எப்பொழுது ஆரம்பமானது? என்பதும் யாருக்கும்
தெரியாது. இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். இது
தமோபிர தான அசுர உலகமாகும். அது ஈஸ்வரிய உலகமாகும். அது
சொர்க்கம், தெய்வீக பாவன உலகம் என்று கூறப்படுகிறது. இது நரகம்,
பதீத உலகம். இந்த விசயங்களையும் யார் தினமும் படிக் கிறார்களோ
அவர்கள் தான் புரிந்து கொள்வார்கள். இந்த இடத்தில் பள்ளிக்கூடம்
(சென்டர்) இல்லை என்று பலர் கூறுகின்றனர். அட தலைமை நிலையம்
இருக்கிறது அல்லவா! நீங்கள் வந்து அனுமதி பெற்று செல்லுங்கள்.
ஒன்றும் பெரிய விசயம் கிடையாது. சிருஷ்டிச் சக்கரம் விநாடியில்
புரிய வைக்கப்படுகிறது. சத்யுகம், திரேதா கடந்து
முடிந்துவிட்டது, பிறகு துவாபர், கலியுகமும் கடந்துவிட்டது. இது
சங்கமயுகமாகும். புது உலகம் செல்வதற்காக படிக்க வேண்டும்.
படிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. பாபா, நாம்
வேலைக்கு சென்று கொண்டிருக் கிறோம். பரவாயில்லை, ஒருவாரம் ஞானம்
பெற்று, பிறகு சென்று விடுங்கள், முரளி கிடைத்துக் கொண்டே
இருக்கும். முதலில் 7 நாட்கள் பாடம் அவசியம் கேட்க வேண்டும். 7
நாட்கள் வந்தாலும் அனைவரின் புத்தியும் ஒன்று போல் இருப்பது
கிடையாது. 7 நாள் வகுப்பு என்றால் யாருடைய நினைவும் வரக் கூடாது.
யாரிடத்திலும் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக் கூடாது.
அனைவரும் ஒன்று போல் புரிந்து கொள்ள முடியாது. இங்கு
பதீதமானவர்கள் பாவனம் ஆக வேண்டும். இந்த பதீத நிலையும்
வியாதியாகும், மனிதர்கள் அரைக் கல்பத்திற்கு தீரா நோயாளி களாக
இருக்கின்றனர். அவர்களை தனியாக அமரச் செய்ய வேண்டும். யாருடைய
சகவாசமும் இருக்கக் கூடாது. வெளியில் செல்வர், அசுத்த உணவுகளை
சாப்பிடுவர், பதீத மானவர்களின் கைகளினால் சமைக்கப்பட்ட உணவு
சாப்பிடுவர். சத்யுகத்தில் தேவதைகள் பாவனமானவர்கள் அல்லவா!
அவர்களுக்காக கோயில் கட்டுகின்றனர் அல்லவா! தேவதை களை
பதீதமானவர்கள் தொடவும் முடியாது. இந்த நேரத்தில் மனிதர்கள்
முற்றிலும் பதீதமாக, பிரஷ்டமானவர்களாக இருக்கின்றனர். சரீரம்
விகாரத்தின் மூலம் உருவாகிறது. அதனால் தான் இதை பிரஷ்டச்சாரம்
என்று கூறப்படுகிறது. சந்நியாசிகளின் சரீரமும் விகாரத்தின்
மூலம் உருவானது. முதன் முதலில் ஆத்மா தூய்மையாக ஆக வேண்டும்,
பிறகு தூய்மையான சரீரமும் தேவை என்று தந்தை கூறுகின்றார்.
ஆகையால் பழைய அசுத்த சரீரம் அனைத்தும் அழிந்துப் போய்விடும்.
அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். இது கடைசி நேரமாகும்.
அனைவரும் தூய்மையாக ஆகி திரும்பிச் செல்ல வேண்டும். பாரதத்தில்
தான் ஹோலி கொண்டாடுகின்றனர். இங்கு 5 தத்துவங்களின் சரீரம்
தமோபிரதானமாக இருக்கிறது. சத்யுகத்தில் சரீரமும் சதோபிரதானமாக
இருக்கும். ஸ்ரீகிருஷ்ணரின் சித்திரம் இருக்கிறது அல்லவா!
நரகத்தை எட்டி உதைக்க வேண்டும், ஏனெனில் சத்யுகத்திற்கு செல்ல
வேண்டும். பிணத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது
முதலில் முகத்தை ஊர் பக்கமும், காலை மயானத்தின் பக்கமும்
வைப்பர். பிறகு மயானத்தினுள் நுழையும் பொழுது முகத்தை
மயானத்தின் பக்கம் வைத்துவிடுகின்றனர். இப்பொழுது நீங்கள்
சொர்க்கத் திற்குச் செல்வதால் உங்களது முகம் அந்த பக்கம்
இருக்கிறது. சாந்திதாமம் மற்றும் சுகதாமம், கால்கள்
துக்கதாமத்தின் பக்கம் இருக்க வேண்டும். அது பிணத்தின் விசயம்,
இங்கு முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இனிய வீட்டை நினைவு
செய்து செய்து ஆத்மாக்களாகிய நீங்கள் இனிய வீட்டிற்குச் சென்று
விடுவீர்கள். இது புத்திக்கான பயிற்சியாகும். இந்த அனைத்து
இரகசியங் களையும் தந்தை வந்து புரிய வைக்கின்றார்.
ஆத்மாக்களாகிய நாம் இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும்
என்பதை நீங்கள் அறிவீர்கள். இது பழைய சரீரம், பழைய உலகமாகும்.
நாடகம் முடிவடைந்துவிட்டது எனில் 84 பிறவிக்கான நடிப்பு
நடித்துவிட்டோம். அனைவரும் 84 பிறவிகள் எடுத்து விடமாட்டார்கள்
என்பதை புரிய வைத்திருக்கின்றார். தாமதமாக வரக் கூடிய மற்ற
தர்மத்தினர் கள் அவசியம் குறைவான பிறவிகள் தான் எடுப்பர்.
இஸ்லாமியர்களை விட பௌத்த தர்மத்தினர் குறைவாகத் தான் எடுப்பர்.
கிறிஸ்துவர்கள் அவர்களை விட குறைவாக எடுப்பர். குருநானக்கின்
சீக்கியர்கள் இப்போது தான் வந்திருக்கின்றனர். குருநானக் வந்து
500 ஆண்டுகள் ஆகியிருக்கிறது எனில் அவர் 84 பிறவிகள் எடுத்து
விட முடியாது. கணக்கு இருக்கிறது. 5 ஆயிரம் ஆண்டுகளில் இவ்வளவு
பிறப்பு எனும்பொழுது 500 ஆண்டுகளில் எவ்வளவு பிறப்புகள்
இருக்கும்? 12-13 பிறப்புகள் இருக்கும். கிறிஸ்துவிற்கு 2000
ஆண்டுகள் எனில் அவர்களுக்கு எவ்வளவு பிறப்புகள் இருக்கும்?
பாதியை விட குறைவாக ஆகி விடும். கணக்கு இருக்கிறது அல்லவா!
இதில் இன்னார் இவ்வளவு பிறப்பு எடுக்கின்றனர் என்று மிகச்
சரியாக கூறிவிட முடியாது. இந்த விசயங்களில் அதிக வாக்குவாதம்
செய்து நேரத்தை வீணாக்கக் கூடாது. உங்களது காரியம் தந்தையை
நினைவு செய்வதாகும். தவறான விசயங்களில் புத்தி செல்லக் கூடாது.
தந்தையிடம் யோகா (நினைவு) வைக்க வேண்டும், சக்கரத்தை அறிந்துக்
கொள்ள வேண்டும். மற்றபடி நினைவின் மூலம் தான் பாவங்கள் அழியும்.
இதில் தான் உழைப்பு இருக்கிறது, அதனால் தான் பாரதத்தின்
பழமையான யோகா என்று கூறுகின்றனர், அதை தந்தை தான்
கற்பிக்கின்றார். சத்யுகம், திரேதாவில் யோகாவிற்கான விசயமே
கிடையாது. பிறகு பக்தி மார்க்கத்தில் ஹட யோகம் ஆரம்பமாகி
விடுகிறது. இது எளிய இராஜயோகம் ஆகும். என்னை நினைவு செய்தால்
தூய்மை ஆவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். மூல விசயம் நினைவு
ஆகும். எந்த பாவமும் செய்யக் கூடாது. தேவி தேவதைகளுக்கு கோயில்
இருக்கிறது, ஏனெனில் தூய்மையாக இருக் கின்றனர். பூஜாரிகள்
பதீதமாக இருக்கின்றனர். பாவனமான தேவதை களை குளிப்பாட்டவும்
செய்கின்றனர். உண்மையில் பதீதமானவர்களின் கைகள் கூட தொடவே
கூடாது. இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சடங்குகளாகும்.
இப்பொழுது நாம் பாவனம் ஆகிக் கொண்டிருக் கிறோம். தூய்மையாக
ஆகிவிட்டால் பிறகு தேவதை களாக ஆகிவிடுவோம். அங்கு பூஜை
போன்றவைகளின் அவசியம் கிடையாது. அனை வருக்கும் சத்கதி
கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். அவரைத் தான்
கள்ளங்கபடமற்றவர் என்று கூறுகிறோம். நான் வருவதே பதீத உலகில்
பதீத சரீரத்தில் பழைய இராவண இராஜ்யத்தில். ஆம், யாருடைய
சரீரத்திலாவது பிரவேசம் செய்து முரளி நடத்திவிட முடியும்.
இதற்காக சர்வவியாபி என்பது பொருள் கிடையாது. ஒவ்வொருவரிடத்தில்
அவரவர்களது ஆத்மா இருக்கிறது. உங்களது ஆத்மாவின் தந்தை யார்?
என்று படிவத்திலும் எழுதி வாங்கப்படுகிறது. ஆனால் புரிந்து
கொள்வது கிடையாது. ஆத்மாக் களின் தந்தை ஒரே ஒருவராகத் தான்
இருக்க வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்கள். தந்தை ஒரே ஒருவர்
ஆவார். அவரிடமிருந்து ஜீவன் முக்திக்கான ஆஸ்தி கிடைக்கிறது.
அவர் தான் விடுவிப்பவராகவும், வழி காட்டி யாகவும் இருக்கின்றார்.
அனைத்து ஆத்மாக்களையும் இனிய வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.
அதனால் தான் பழைய உலகம் விநாசம் ஆகிவிடும். ஹோலி
கொண்டாடப்படுகிறது அல்லவா! அனைத்து சரீரமும் அழிந்துவிடும்.
மற்றபடி அனைத்து ஆத்மாக் களும் திரும்பி சென்றுவிடும்.
சத்யுகத்தில் மிகக் குறைவானவர்கள் தான் இருப்பர். சொர்க்க
ஸ்தாபனை யார் செய்விக்கிறது? கலியுக விநாசம் செவிப்பது யார்?
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் தெளிவாக
எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தான் அன்பு செலுத்தினால் அன்பு
கிடைக்கும் என்று கூறுகின்றனர். யார் என் பொருட்டு மனிதனை தேவதை
ஆக்கக் கூடிய சேவை அதிகம் செய்கிறார்களோ அவர்கள் மிகவும்
பிரியமானவர்களாக ஆகின்றனர்.
யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் தான் உயர்ந்த ஆஸ்தி
அடைவார்கள். ஆத்மா தான் பரமாத்மா விடமிருந்து ஆஸ்தி அடைய
வேண்டும். ஆத்ம அபிமானியாக ஆக வேண்டும். சிலர் அதிக தவறுகள்
செய்து கொண்டே இருக்கின்றனர், பழைய பழக்கங்கள் உறுதியானதாக ஆகி
விட்டது. ஆக எவ்வளவு தான் புரிய வைத்தாலும் அதை விடுவதே
கிடையாது. அதன் மூலம் தனது பதவியை குறைத்துக் கொள்கின்றனர்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எந்த விசயத்திலும் வாக்குவாதம் செய்து தனது நேரத்தை
வீணாக்கக் கூடாது. வீணானவை களின் பக்கம் புத்தி அதிகம் செல்லக்
கூடாது. எவ்வளவு முடியுமோ நினைவு யாத்திரையின் மூலம் பாவங்களை
அழிக்க வேண்டும். ஆத்ம அபிமானியாக இருக்கும் பழக்கத்தை
உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
2) இந்த பழைய உலகிலிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்ள
வேண்டும். சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய
வேண்டும். புது கட்டடம் உருவாக்கப்பட்டுக் கொண்டி ருக்கிறது
என்பதால் பழையதிலிருந்து உள்ளத்தை நீக்கி விட வேண்டும்.
வரதானம்:
ஈஸ்வரிய குடும்பத்தின் நினைவின் மூலமாக
மாயையை எதிர்கொள்ளக்கூடிய சதா சக்தி சொரூபம் ஆகுக.
எந்தவொரு காரியத்திலும் வெற்றி பெற வேண்டுமென்றால், முதலில்
நினைவின் மூலம் சக்தி வாய்ந்தவராக ஆகுங்கள். சக்தி நிலையை
அடைந்துவிட்டால், மாயையை எதிர்கொள்வது எளிதாகி விடும். நினைவு
எப்படி இருக்கிறதோ, அப்படியே சொரூபமும் அமையும். எனவே, இந்த
ஈஸ்வரிய பிறப்பு இருக்கும் வரை - ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு
எண்ணமும், ஒவ்வொரு செயலும் - ஈஸ்வரிய சேவைக்கே என்ற
சக்திவாய்ந்த நினைவு இருக்கட்டும். நாம் ஈஸ்வரிய குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் என்ற இந்த நினைவினுடைய ஆசனம் அனைத்து
பலவீனங்களையும் முடிவுக்குக் கொண்டு வரும்.
சுலோகன்:
சத்தியம் (உண்மை) காலப்போக்கில் தானாகவே நிரூபணமாகும்,
அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவ்யக்த சமிக்ஞை : மகான் ஆகவேண்டும் என்றால்
இனிமை மற்றும் பணிவின் குணத்தை தாரணை செய்யுங்கள்.
அநேகருக்கு - சேவையில் தடையை போடக்கூடிய முக்கியமான தொந்தரவாக
இருக்கக்கூடியது - நான் இதைச் செய்தேன், என்னால் மட்டுமே இதைச்
செய்ய முடியும்... இந்த நான் என்ற தன்மை வருவது தான் -
ஞானத்தின் மீதான அகந்தை, புத்தி மீதான அகந்தை, சேவை மீதான
அகந்தை - இந்த (அகந்தை) ரூபங்களில் தான் தொந்தரவு கள்
வருகின்றது. இவற்றை நீக்க சதா ஒரு சப்தத்தை நினைவில் வையுங்கள்
- அதாவது நான் நிமித்தமாக (கருவியாக) இருக்கின்றேன் .
நிமித்தமாக இருக்கும்போது மட்டுமே நிராகாரியாக (உடல் உணர்வற்ற),
நிர்அங்காரியாக (அகந்தை யற்ற) மற்றும் பணிவாக, சங்கல்பமற்ற
நிலையில் இருக்க முடியும் - இத்தகைய தாரணைகள் வளிமண்டலத்தையே
தடைகளற்றதாக ஆக்கி விடும்.