30-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! துக்கத்தை நீக்கி
சுகம் அளிப்பவர் ஒரு தந்தை ஆவார். அவர் உங்களது எல்லா
துக்கங்களையும் நீக்கி விடுகிறார். மனிதர்கள் எவரொருவருடைய
துக்கத்தையும் நீக்க முடியாது.
கேள்வி:
உலகில் அசாந்திக்கான காரணம் என்ன?
சாந்தி எவ்வாறு ஸ்தாபனை ஆகும்?
பதில்:
பல தர்மங்கள் இருப்பதே உலகில்
அசாந்திக்கான காரணம் ஆகும். க-யுகக் கடைசியில் ஒற்றுமை யின்மை
ஏற்படும்பொழுது தான் அசாந்தி ஏற்படுகிறது. தந்தை ஒரு சத்திய
தர்மத்தினை ஸ்தாபனை செய்கிறார். அங்கு அமைதி ஏற்படுகிறது. இந்த
இலட்சுமி நாராயணரின் ஆட்சியில் அமைதி இருந்தது என்பதை உங்களால்
புரிந்து கொள்ள முடிகிறது. பவித்திர தர்மம், (தூய்மை யான)
பவித்திர கர்மம் இருந்தது. கல்யாணகாரி தந்தை மீண்டும் அந்த
புதிய உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் அசாந்தியின்
பெயரே இல்லை.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்கு புரிய
வைக்கிறார். ஆன்மீகத் தந்தை தான் ஞானக் கடல் என்று
அழைக்கப்படுகிறார். இது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்
பட்டுள்ளது. மும்பையில் கூட நிறைய சமூக ஊழியர்கள்
இருக்கிறார்கள். அவர்களுடைய கூட்டம் நடந்து கொண்டே இருக்கும்.
மும்பையில் குறிப்பாக கூட்டம் நடைபெறும் இடத்தின் பெயர் பாரதிய
வித்யா பவன். இப்பொழுது கல்வி (வித்யா) என்பது இரண்டு விதமானது.
ஒன்று பள்ளிகளில் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் ஸ்தூல கல்வி.
இப்பொழுது அதை வித்யா பவன் என்று கூறுகிறார்கள். அவசியம் அங்கு
வேறு ஏதோ விஷயம் உள்ளது. இப்பொழுது கல்வி (வித்யா) என்று எதற்கு
கூறப்படுகிறது என்பதையோ மனிதர்கள் அறியாமலேயே உள்ளார்கள். இதுவோ
ஆன்மீக வித்யா பவன் ஆகி இருக்க வேண்டும். வித்யா என்று
ஞானத்திற்கு கூறப்படுகிறது. பரமபிதா பரமாத்மா தான் ஞானக்கடல்
ஆவார். ஸ்ரீ கிருஷ்ணரை ஞானக்கடல் என்று கூறமாட்டார்கள்.
சிவபாபாவின் மகிமை தனி, ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமை தனி ஆகும்.
பாரத வாசிகள் குழம்பி இருக்கிறார்கள். கீதையின் பகவான் என்று
ஸ்ரீ கிருஷ்ணரை நினைத்துக் கொண்டு அமர்ந்துள்ளார்கள். ஆக வித்யா
பவன் ஆகியவை திறந்து கொண்டே இருக்கிறார்கள். ஒன்றுமே புரிந்து
கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். வித்யா என்பது கீதையின் ஞானம்
அந்த ஞானமோ ஒரே ஒரு தந்தையிடம் தான் இருக்கிறது. அவர் ஞானக்கடல்
என்று கூறப்படுகிறார். இதை முழு மனித குலமும் அறியாமல்
இருக்கிறது. பாரதவாசிகளின் தர்ம சாஸ்திரம் உண்மையில் ஒன்றே
ஒன்று தான், சர்வ சாஸ்திர சிரோமணி பகவத் கீதை. இப்பொழுது பகவான்
என்று யாரைச் சொல்லலாம்? என்பதையும் இச்சமயம் பாரதவாசிகள்
புரிந்து கொள்வதே இல்லை ஸ்ரீ கிருஷ்ணரை அல்லது இராமரை அல்லது
தங்களையையே பரமாத்மா என்று கூறி விடுகிறார்கள். இன்றைய காலமே
தமோபிரதானமானது.. இராவண ராஜ்யம் தானோ!
குழந்தைகளாகிய நீங்கள் யாருக்காவது புரிய வைக்கும்பொழுது சிவ
பகவான் வாக்கியம் என்று கூறுங்கள். முத-ல் ஞானக் கடல் ஒரே ஒரு
பரம பிதா பரமாத்மா ஆவார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவருடைய பெயர் சிவன் என்பதாகும் சிவ ராத்திரியும்
கொண்டாடுகிறார்கள் ஆனால் யாருக்குமே புரிவதில்லை அவசியம் சிவன்
வந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இராத்திரி
கொண்டாடுகிறார்கள். சிவன் யார் என்பது கூட தெரியாது. தந்தை
கூறுகிறார் பகவானோ அனைவருக்கும் ஒரே ஒருவர் தான். அனைத்து
ஆத்மாக்களும் சகோதர சகோதரர்கள் ஆவார்கள். ஆத்மாக்களின் தந்தை
ஒரே ஒரு பரம்பிதா பரமாத்மா ஆவார். அவரைத்தான் ஞானக் கடல் என்று
கூறுவார்கள் தேவதைகளிடம் இந்த ஞானம் இல்லை. எந்த ஞானம்?
படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடை பற்றிய ஞானம்
எந்த ஒரு மனிதரிடமும் கிடையாது. பழமையான ரிஷி முனிவர்களுக்கும்
தெரியவில்லை என்று கூறினார்கள் என்றும் சொல்கிறார்கள். பழமையான
என்பதற்கான பொருளும் அவர்களுக்குத் தெரியாது. சத்யுக, திரேதா
என்பது பழமையானது. சத்யுகம் என்பது புது உலகம் ஆகும். அங்கு
ரிஷி முனிவர்கள் இருக்கவே இல்லை. இந்த ரிஷி முனிவர்கள் ஆகிய
எல்லாரும் பின்னால் வந்துள்ளார்கள். அவர்களுக்குக் கூட இந்த
ஞானத்தைப் பற்றி தெரியாது. தெரியாது, தெரியாது என்று
கூறிவிடுகிறார்கள். அவர்களுக்கே தெரியவில்லை என்றால் இப்பொழுது
தமோகுணி ஆன பாரதவாசிகளுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்.
இச்சமயத்தில் விஞ்ஞானத்தின் அகம்பாவம் கூட எவ்வளவு உள்ளது!
இந்தஅறிவியல் மூலமாக பாரதம் சுவர்க்கம் ஆகி விட்டுள்ளது என்று
நினைக்கிறார்கள். இது மாயையின் பகட்டு என்று கூறப்படுகிறது. ஃபால்
ஆப் பாம்ப் (பகட்டின் வீழ்ச்சி) என்ற ஒரு நாடகம் கூட உள்ளது.
இச்சமயம் பாரதத்தின் வீழ்ச்சி ஆகும் என்று கூறவும்
செய்கிறார்கள். சத்யுகத்தில் மேன்மை இருந்தது இப்பொழுது
வீழ்ச்சி ஆகும். இது சொர்க்கமாக உள்ளதா என்ன? இதுவோ மாயையின்
பகட்டு ஆகும். இது அழியத்தான் போகிறது. மனிதர்கள்
கருதுகிறார்கள், விமானங்கள் உள்ளன பெரிய பெரிய அரண்மனைகள்
உள்ளன. மின்சாரங்கள் உள்ளது............ இதுவே சொர்க்கம்
யாராவது இறந்தாலும் கூட சொர்க்கம் சென்றதாக கூறுகிறார்கள்.
இறந்தவர் சொர்க்கம் சென்றார் என்றால் அந்த சொர்ககம் வேறொரு
உலகம் என்று கூட புரிந்து கொள்வதில்லை. இதுவோ இராவணனின் பகட்டு
ஆகும். எல்லையில்லாத தந்தை சொர்க்கத்தினை ஸ்தாபனை செய்து
கொண்டிருக்கிறார். இச்சமயம் மாயை மற்றும் இறைவனின், அசுர உலகம்
மற்றும் ஈசுவரிய உலகின் போட்டிக்கான சமயமாகும். இதுவும்
பாரதவாசிகளுக்கு புரிய வைக்க வேண்டி உள்ளது. துக்கமோ இன்னும்
அதிகமாக வரப் போகின்றது. அளவற்ற துக்கம் வரப் போகிறது.
சொர்க்கமே சத்யுகத்தில் தான் இருக்கும். க-யுகத்தில் இருக்க
முடியாது. புருஷோத்தம சங்கமயுகம் என்று எதற்கு கூறப்படுகிறது
என்பது கூட யாருக்கும் தெரியாது. இதுவும் தந்தை புரிய
வைக்கிறார், ஞானம் என்பது பகல் பக்தி என்பது இரவு. இருளில்
தடுமாறிக் கொண்டே இருக்கிறார்கள். பகவானை சந்திப்பதற்காக
எவ்வளவு வேத சாஸ்திரம் ஆகியவை படிக்கிறார்கள்! பிரம்மாவின் பகல்
மற்றும் இரவு, அதுவே பிராமணர்களின் பகல் மற்றும் இரவு.
உண்மையான முகவம்சாவளி பிராமணர்கள் ஆவீர்கள். அவர்கள் க-யுக
குகவம்சாவளி பிராமணர்கள் ஆவார்கள். நீங்கள் புருஷோத்தம
சங்கமயுகி பிராமணர்கள் ஆவீர்கள். இந்த விஷயங்கள் வேறு
யாருக்கும் தெரியாது இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பொழுது
தான் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பது புத்தியில்
வரும். பாரதம் சதோபிரதானமாக இருந்தது அது தான் சொர்க்கம் என்று
கூறப்படுகிறது. எனவே அவசியம் இது நரகம் ஆகும். அதனால் தான்
நரகத்தி-ருந்து சொர்க்கம் செல்கிறோம். அங்கு சாந்தியும் உள்ளது
சுகமும் உள்ளது, இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் ஆகும் அல்லவா!.
மனிதர்களின் பெருக்கம் (எண்ணிக்கை) எப்படி குறைய முடியும்
என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். அசாந்தி எப்படி குறைய
முடியும்? அசாந்தி இருப்பதே பழைய உலகமான க-யுகத்தில், புதிய
உலகத்தில் தான் சாந்தி இருக்கும். சொர்க்கத்தில் சாந்தி உள்ளது
அல்லவா? அதற்குத்தான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் என்று
கூறப்படுகிறது. ஹிந்து தர்மம் இப்பொழுது தான் உள்ளது. இதை ஆதி
சனாதன தர்மம் என்று கூற முடியாது. இதுவோ ஹிந்துஸ்தான் என்ற
பெயரில் இந்து என்று கூறி விடுகிறார்கள். ஆதி சனாதன தேவி தேவதா
தர்மம் இருந்தது. அங்கு முழுமையாக தூய்மை, சுகம், சாந்தி,
ஆரோக்கியம் எல்லாமே இருந்தது. இப்பொழுது கூப்பிடுகிறார்கள்,.
நாங்கள் பதீதமாக உள்ளோம், ஹே பதீத பாவனரே வாருங்கள். இப்பொழுது
கேள்வியாவது - பதீத பாவனர் யார்? ஸ்ரீ கிருஷ்ணரையோ கூறமாட் டோம்.
பதீத பாவனர் பரம பிதா பரமாத்மா தான் ஞானக் கடல் ஆவார். அவரே
வந்து படிப்பிக் கிறார், ஞானத்திற்கு படிப்பு என்று
கூறப்படுகிறது. முழு ஆதாரமும் கீதை மீது உள்ளது. இப்பொழுது
நீங்கள் கண்காட்சி, மியூசியம் ஆகியவை அமைக்கிறீர்கள். ஆனால் இது
வரையும் பி.கே என்பதன் பொருள் புரியாமல் உள்ளார்கள். இது ஏதோ
புதிய தர்மம் ஆகும் என்று நினைக்கிறார்கள். கேட்கிறார்கள்,
ஒன்றும் புரிந்து கொள்வது இல்லை. முற்றிலுமே தமோ பிரதானமான கல்
புத்தி என்று தந்தை கூறியுள்ளார். இச்சமயம் விஞ்ஞானத்தின்
அகங்காரம் உடையவர்களும் பெருகி விட்டனர். அறிவியல் மூலமாக
தங்களையே வினாசம் செய்து கொள்கிறார்கள் என்றால் கல் புத்தி
என்று தான் கூற வேண்டும் அல்லவா? தங்க புத்தி என்று கூறுவார்களா
என்ன? வெடிகுண்டுகள் ஆகியவை தங்களுடைய அழிவுக்காகத் தான்
தயாரிக் கிறார்கள். அப்படி இன்றி சங்கரன் ஏதோ அழிக்கிறார்
என்பதல்ல. இல்லை இவர்கள் தங்களுடைய அழிவுக்காக எல்லாம்
தயாரித்துள்ளார்கள். ஆனால் தமோபிரதான கல் புத்தியினர் புரிந்து
கொள்வதில்லை. எதெல்லாம் உருவாக்குகின்றனரோ இந்த பழைய
சிருஷ்டியின் விநாசத் திற்காகத் தான். வினாசம் ஆக வேண்டியே
உள்ளது. அப்பொழுதுதான் பின் புது உலகத்தின் வெற்றி முழக்கம்
ஏற்படும். அவர்கள் பெண்களின் துக்கத்தை எப்படி நீக்குவது என்று
நினைக் கிறார்கள். ஆனால் மனிதர்கள் எவரொருவருடைய துக்கத்தையும்
நீக்க முடியுமா என்ன? துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரோ ஒரே ஒரு
தந்தை ஆவார். தேவதைகளையும் சொல்ல முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரும்
தேவதை தான். பகவான் என்று சொல்ல முடியாது. இதுவும் புரிந்து
கொள்வதில்லை. யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் பிராமணர் ஆகி
மற்றவர்களுக்கும் புரிய வைத்துக் கொண்ட இருக்கிறார்கள். யார்
இராஜ்ய பதவியினுடையவர் அல்லது ஆதி சனாதன தேவி தேவதா
தர்மத்தினுடையவர்களோ அவர்கள் வெளிப்படுகிறார்கள் இலட்சுமி
நாராயணர் எப்படி சொர்க்கத்திற்கு எஜமானர் ஆனார்கள்?
விஷ்வத்திற்கு எஜமானர் ஆகும் வகையில் என்ன கர்மம் செய்தார்கள்?
இச்சமயம் க-யுக முடிவிலோ அநேக அநேக தர்மங்கள் உள்ளன. எனவே
அசாந்தி உள்ளது. புது உலகத்தில் இதுபோல ஆகுமா என்ன? இப்பொழுது
இது சங்கமயுகம் ஆகும். இப்பொழுது தந்தை வந்து இராஜயோகத்தைக்
கற்பிக்கிறார். தந்தை தான் கர்மம், அகர்மம், விகர்மம் பற்றிய
ஞானம் கூறுகிறார். ஆத்மா சரீரம் எடுத்து கர்மம் செய்ய வருகிறது.
சத்யுகத்தில் செய்யும் கர்மங்கள் அகர்மம் ஆகிவிடுகின்றன. அங்கு
விகர்மம் ஏற்படாது. துக்கமும் ஏற்படாது. கர்மம், அகர்மம்,
விகர்மம் பற்றிய நிலையை தந்தை தான் வந்து கடைசியில் கூறுகிறார்.
நான் இவருடைய அநேக பிறவியின் கடைசி பிறவியில் வருகிறேன். இந்த
இரதத்தில் பிரவேசம் செய்கிறேன். அகால மூர்த்தி ஆத்மாவினுடையது
இது இரதம் ஆகும். ஒரு அமிருதசரில் மட்டும் அல்ல எல்லா
மனிதர்களுடைய அகால பீடம் உள்ளது. ஆத்மா அகால மூர்த்தி ஆகும்.
இந்த சரீரம் அதன் மூலம் பேசுகிறது நடக்கிறது. அகால ஆத்மாவின்
இது சைதன்ய பீடம் ஆகும். அகால மூர்த்திகளோ அனைவரும் ஆவார்கள்.
மற்றபடி சரீரத்தை காலன் சாப்பிட்டு விடுகிறான். ஆத்மாவோ அகாலன்
அழியாதது ஆகும். பீடத்தையோ (சரீரத்தை-சிம்மாசனம்) அழித்து விடு
கிறார்கள். சத்யுகத்தில் பீடங்கள் (மனிதர்கள்) நிறைய
இருப்பார்களா என்ன? இச்சமயம் கோடிக் கணக்கான ஆத்மாக்களின் பீடம்
உள்ளது. அகால் என்று ஆத்மாவிற்கு கூறப்படுகிறது. ஆத்மா தான்
தமோபிரதானத்தி-ருந்து சதோபிரதானம் ஆகிறது, நானோ என்றைக்குமே
சதோபிரதானம், பவித்திரம் ஆவேன் பழமையான பாரதத்தின் யோகம் என்று
கூறுகிறார்கள். கீதையை பொய்யாக்கி விட்டார்கள். வாழ்க்கை
சரித்திரத்தில் பெயரை மாற்றிவிட்டுள்ளார்கள். தந்தைக்கு பதிலாக
குழந்தையின் பெயரை போட்டு விட்டுள்ளார்கள். சிவராத்திரி
கொண்டாடுகிறார்கள் ஆனால் அவர் எப்படி வருகிறார் என்பது
அவர்களுக்கு தெரியாது. சிவன் தான் பரம ஆத்மா ஆவார். அவரது மகிமை
முற்றிலும் வேறு. ஆத்மாக்களின் மகிமை வேறு. இராதை கிருஷ்ணர்
தான் இலட்சுமி, நாராயணர் ஆவார்கள் என்பது குழந்தைகளுக்குத்
தெரியும். இலட்சுமி நாராயணரின் இணைந்த ரூபம் தான் விஷ்ணு என்று
கூறப்படுகிறது. வித்தியாசமோ கிடையாது. மற்றபடி 4 புஜங்கள் உடைய,
8 புஜங்கள் உடைய மனிதர் யாரும் இருப்பதில்லை. தேவிகள்
ஆகியோருக்கு எவ்வளவு புஜங்கள் கொடுத்து விட்டுள்ளார்கள்! புரிய
வைப்பதற்கு நேரம் பிடிக்கிறது.
தந்தை கூறுகிறார் நான் இருப்பதே ஏழைப்பங்காளனாக. நான் வருவதும்
பாரதம் ஏழை ஆகி விடும் பொழுது ராகுவின் கிரகணம் ஏற்படும் பொழுது.
குருதசை இருந்தது. இப்பொழுது இராகுவின் கிரகணம் பாரதத்தில்
மட்டுமென்ன முழு உலகத்தின் மீதும் உள்ளது. எனவே தந்தை மீண்டும்
பாரதத்தில் வருகிறார், வந்து புது உலக ஸ்தாபனை செய்கிறார். அது
சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பகவான் கூறுகிறார் நான்
உங்களை இராஜாக்களுக்கு இராஜாவாக, இரட்டை கிரீடம் உடைய
சொர்க்கத்திற்கு எஜமானராக ஆக்குகிறேன். ஆதிசனாதன தேவி தேவதா
தர்மம் இருந்து 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. இப்பொழுது அது
இல்லை. தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளார்கள். தந்தை தானே வந்து
தனது அதாவது படைப்பவர் மற்றும் படைப்பின் அறிமுகம் அளிக்கிறார்.
உங்களிடம் கண்காட்சி, மியூசியம் ஆகியவற்றிற்கு இவ்வளவு பேர்
வருகிறார்கள். புரிந்து கொண்டு விடுகிறார்களா என்ன? யாராவது
ஒருவர்தான் புரிந்து கொண்டு கோர்ஸ் எடுக்கிறார்கள், படைப்பவர்
மற்றும் படைப்பை அறிகிறார்கள். படைப்பவர் எல்லையில்லாத தந்தை
ஆவார். அவரிடமிருந்து தான் எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்கிறது.
இந்த ஞானம் தந்தை தான் அளிக்கிறார். பின் இராஜ்யம் கிடைத்து
விடுகிறது ஆக அங்கு ஞானத்தின் அவசியம் இல்லை. அது புது உலகம்.
நரகத்திற்கு துர்கதி என்று கூறப்படுகிறது. தந்தை புரிய வைப்பதோ
மிகவும் நல்ல முறையில், குழந்தைகளும் இவ்வாறு புரிய வைக்க
வேண்டும். இலட்சுமி நாராயணரின் படத்தை காண்பிக்க வேண்டும்.
இந்த உலகில் சாந்தி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஆதி சனாதன
தேவி தேவதா தர்மத்தின் அஸ்திவாரம் இல்லை. அதை தந்தை ஸ்தாபனை
செய்து கொண்டிருக்கிறார். தேவதையினுடையது பவித்திர தர்மமாக,
பவித்திர கர்மமாக இருந்தது. இப்பொழுது இது இருப்பதே விகாரி
உலகமாக, புது உலகம் நிர்விகாரி உலகம் சிவாலயம் என்று
கூறப்படுகிறது. இப்பொழுது புரிய வைக்கவேண்டியுள்ளது.
அப்பொழுதுதான் பாவம், ஒன்றும் அறியாதோருக்கு கொஞ்சம் நன்மை
ஏற்படும். தந்தைதான் கல்யாணகாரி என்று கூறப்படுகிறார். அவர்
வருவதே புருஷோத்தம சங்கம யுகத்தில், கல்யாணகாரி யுகத்தில்.
கல்யாணகாரி தந்தை வந்து அனைவருக்கும் நன்மை செய்கிறார். பழைய
உலகத்தை மாற்றி புது உலகத்தை ஸ்தாபனை செய்து விடுகிறார்.
ஞானத்தினால் சத்கதி ஆகிறது. இது பற்றி தினமும் நேரம் எடுத்துப்
புரிய வைக்க முடியும். கூறுங்கள். படைப்பவர் மற்றும் படைப்பின்
முதல், இடை, கடை பற்றி நாம் தான் அறிந்துள்ளோம். இது கீதையின்
சரித்திரம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பகவான் வந்து
இராஜயோகம் கற்பித்துள்ளார். இரட்டை கிரீடம் உடையவராக
ஆக்கியுள்ளார். இந்த இலட்சுமி நாராயணர் கூட இராஜயோகத்தினால்
இதுபோல ஆகி உள்ளார்கள். இந்த புருஷோத்தம சங்கமயுகத்தில்
தந்தையிடமிருந்து இராஜயோகம் கற்கிறார்கள். பாபா ஒவ்வொரு
விஷயத்தையும் எவ்வளவு சுலபமாகப் புரியவைக்கிறார்! நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இராஜயோகத்தின் படிப்பு வருவாய்க்கான வழி ஆகும்.
ஏனெனில் இதன் மூலம் தான் நீங்கள் இராஜாக்களுக்கெல்லாம் இராஜா
ஆகிறீர்கள். இந்த ஆன்மீகப் படிப்பை தினமும் படிக்க வேண்டும்
மற்றும் படிப்பிக்க வேண்டும்.
2. நாம் பிராமணர்கள் உண்மையான முகவம்சாவளி ஆவோம் என்ற போதை
சதா இருக்கட்டும். நாம் க-யுக இரவி-ருந்து வெளியேறி பகலுக்கு
வந்துள்ளோம். இது கல்யாணகாரி புருஷோத்தம யுகம் ஆகும். இதில்
உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு சிரேஷ்ட சங்கல்பத்தையும் கர்மத்தில் கொண்டுவரக் கூடிய
மாஸ்டர் சர்வசக்திவான் ஆகுக.
மாஸ்டர் சர்வசக்திவான் என்றால் சங்கல்பம் மற்றும் கர்மம் சமமாக
இருக்க வேண்டும். சங்கல்பம் மிக சிரேஷ்டமாக உள்ளது மற்றும்
கர்மம் சங்கல்பத்திற்கேற்றவாறு இல்லை என்றால் மாஸ்டர்
சர்வசக்திவான் என்று சொல்ல மாட்டார்கள். எனவே சோதனை செய்துப்
பாருங்கள் -- சிரேஷ்ட சங்கல்பம் செய்கிறீர்கள் என்றால் அவை
கர்மம் வரை வருகின்றனவா இல்லையா? மாஸ்டர் சர்வசக்திவானின்
அடையாளம் -- எந்த சக்திக்கு எந்தச் சமயம் அவசியமோ, அந்த சக்தி
காரியத்தில் வர வேண்டும். ஸ்தூல மற்றும் சூட்சுமமான அனைத்து
சக்திகளும் அந்த அளவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் --
எந்தச் சமயம் எந்த சக்தி அவசியமோ, அந்தக் காரியத்தில்
ஈடுபடுத்த முடிந்திருக்க வேண்டும்.
சுலோகன்:
ஞானம் நிறைந்த ஆத்மா-குழந்தைகளிடம் கோபம் இருந்தது எனில் இதனால்
பாபாவின் பெயருக்கு நிந்தனை ஏற்படும்.
|
|
|