30-08-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஞானத்தை புத்தியில்
தாரணை செய்து தங்களுக்குள் ஒன்றுகூடி வகுப்பு நடத்துங்கள்.
தனக்கும் மற்றவர்களுக்காகவும் நன்மை செய்து உண்மையான
வருமானத்தைச் சம்பாதித்துக் கொண்டே இருங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்குள் எந்த
ஓர் அகங்காரம் ஒருபோதும் இருக்கக் கூடாது?
பதில்:
இந்தச் சின்னச்சின்னப் பெண்
குழந்தைகள் நமக்கு என்ன புரிய வைப்பார்கள்? என்பது போன்று
அநேகக் குழந்தைகளுக்கு அகங்காரம் வருகிறது. பெரிய சகோதரி சென்று
விட்டால் கோபித்துக் கொண்டு வகுப்பிற்கு வருவதை நிறுத்தி
விடுகின்றனர். இது மாயாவின் தடை என்று பாபா சொல்கிறார் -
குழந்தைகளே, நீங்கள் முரளி வாசிக்கின்ற ஆசிரியரின்
பெயர்-வடிவத்தைப் பார்க்காமல் பாபாவின் நினைவில் இருந்து முரளி
கேளுங்கள். அகங்காரத்தில் வராதீர்கள்.
ஓம் சாந்தி.
தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இப்போது தந்தை
என அழைக்கப் படும் போது இவ்வளவு குழந்தைகளுக்கு ஒரே ஒரு சரீரத்
தந்தை என்று இருக்க முடியாது. இவர் ஆன்மிகத் தந்தை. இவருக்கு
ஏராளமான குழந்தைகள். குழந்தைகளுக்காக இந்த டேப் (பதிவு
செய்யப்பட்ட) முரளி முதலியவை சாதனங்கள். குழந்தைகள் அறிவார்கள்,
இப்போது நாம் புருஷோத்தம் ஆவதற்காக. சங்கமயுகத்தில் உள்ளோம்,
இதுவும் குஷியின் விஷயம். பாபா தான் புருஷோத்தம் ஆக்குகிறார்.
இந்த லட்சுமி-நாராயண் புருஷோத்தமர்கள் அல்லவா? இந்த சிருஷ்டி
யில் தான் உத்தம ஆத்மாக்கள், மத்திமம், பிறகு கனிஷ்ட ஆத்மாக்கள்
உள்ளனர். ஆரம்பத்தில் உள்ளவர்கள் உத்தமம், இடையில் உள்ளவர்கள்
மத்திமம், கடைசியில் உள்ளவர்கள் கனிஷ்டம். ஒவ்வொரு பொருளும்
முதலில் உத்தமம், பிறகு மத்திமம், அதன் பிறகு கனிஷ்டம் அதாவது
பழையதாக ஆகின்றது. உலகத்திற்கும் அதுபோலவே நடைபெறுகின்றது. ஆக,
எந்தெந்த விஷயங்களில் சந்தேகம் ஏற்படுகின்றதோ, அதைப் பற்றி
மனிதர்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும். பெரும்பாலும்
பிரம்மாவைப் பற்றித் தான் கேட்கின்றனர், இவரை ஏன் படங்களில்
காண்பித்திருக்கிறீர்கள் என்று. அப்போது அவர்களை கல்ப
விருட்சத்தின் சித்திரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
பாருங்கள், கீழேயும் தவம் செய்து கொண்டிருக்கின்றனர், மேலும்
உயரத்தில் கடைசியில் அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மத்தில்
நின்று கொண்டுள்ளார். பாபா சொல்கிறார், நான் இவருக்குள்
பிரவேசமாகிறேன் என்று. இவ்விஷயங்களைப் புரிய வைப்பவர் மிகவும்
புத்திசாலியாக இருக்க வேண்டும். ஒரு புத்தியற்றவர்
வெளிப்பட்டாலும் கூட பி.கே.க்களின் பெயர் கெட்டுப் போகும்.
முழுமையாகப் புரிய வைக்க வருவதில்லை. முழுமை யாகப் பாஸாவதோ
கடைசியில் தான் இருக்கும். இச்சமயம் 16 கலை சம்பூர்ணமாக
யாராலும் ஆக முடியாது. ஆனால் புரிய வைப்பதில் நம்பர்வார்
நிச்சயமாக உள்ளனர். பரமபிதா பரமாத்மா விடம் அன்பு இல்லை என்றால்
விபரீத புத்தியுள்ளவர் ஆகிறார் இல்லையா? இதைப் பற்றி நீங்கள்
புரிய வைக்க முடியும். யார் அன்பான புத்தி உள்ளவரோ, அவர் வெற்றி
பெறுவார், விபரீத புத்தி உள்ளவர் அழிந்து போவார். இதிலும் கூட
அநேக மனிதர்கள் கோபப்படுகின்றனர். பிறகு ஏதாவதொரு ஏற்பாடு
செய்து விடுகின்றனர். சண்டை-கலகம் செய்வதற்குத் தயங்குவதில்லை.
யாராலும் என்ன தான் செய்ய முடியும்? சில நேரம் சித்திரங்களுக்கு
நெருப்பு வைக்கவும் தயங்கு வதில்லை. பாபா அறிவுரையும் தருகிறார்-
சித்திரங்களை இன்சூர் செய்து வையுங்கள். குழந்தை களின் நிலையை
பாபா அறிவார். குற்றமான பார்வை பற்றியும் கூட பாபா தினந்தோறும்
புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். குழந்தைகள்
எழுதுகின்றனர்-பாபா, குற்றமான பார்வை பற்றித் தாங்கள் என்ன
சொன்னீர்களோ, இது முற்றிலும் சரியானது என்று. இந்த உலகம்
தமோபிர தானமாக உள்ளது இல்லையா? நாளுக்கு நாள் தமோபிரதான் ஆகிக்
கொண்டே போகிறது. ஆனால் அவர்களோ, கலியுகம் இன்னும் தவழ்ந்து
செல்லும் குழந்தையாகவே இருப்பதாக நினைக் கின்றனர். அஞ்ஞான
உறக்கத்தில் முற்றிலும் உறங்கிப் போயுள்ளனர். சில நேரம்
சொல்லவும் செய்கின்றனர், இது மகாபாரத யுத்தத்தின் சமயம் என்றால்
பகவான் நிச்சயமாக ஏதேனும் வடிவத்தில் இருப்பார் என்று.
வடிவத்தையோ சொல்வதில்லை. அவர் நிச்சயமாக யாருக்குள் ளாவது
பிரவேசமாக வேண்டும். பாக்கியசாலி ரதம் என்று பாடப்பட்டுள்ளது.
ரதம் ஆத்மாவுக் குரியதாகத்தான் இருக்கும் இல்லையா? அதில் வந்து
பிரவேசமாவார். அது பாக்கியசாலி ரதம் என கூறப்படுகின்றது.
மற்றப்படி சிவபாபா ஜென்மம் எடுப்பதில்லை. இவருக்குப் பக்கத்தில்
அமர்ந்து கொண்டு ஞானம் தருகிறார். எவ்வளவு நன்றாகப் புரிய
வைக்கப் படுகின்றது! திரிமூர்த்தியின் சித்திரமும் உள்ளது.
திரிமூர்த்தி என்றோ பிரம்மா-விஷ்ணு-சங்கரைச் சொல்வார்கள்.
நிச்சயமாக இவர் ஏதோ செய்து விட்டுச் சென்றுள்ளார். அதனால் பிறகு
சாலைக்கும் கட்டடத்துக்கும் கூட திரிமூர்த்தி என்ற பெயர்
வைக்கப்பட்டுள்ளது. எப்படி இந்த சாலை சுபாஷ் தெரு என வைக்கப்
பட்டுள்ளது. சுபாஷின் வரலாறு அனைவருக்குமே தெரியும்.
அவர்களுக்குப் பின் சரித்திரத்தை எழுதுகின்றனர். பிறகு அவரை
பெரியவராக ஆக்கி விடுகின்றனர். எவ்வளவு பெருமைகளை
வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி குருநானக்கின் புத்தகத்தை
எவ்வளவு பெரியதாக உருவாக்கி யுள்ளனர்! இவ்வளவையும் அவர்
எழுதவில்லை. ஞானத்திற்குப் பதிலாக பக்தியின் விசயங்களை
எழுதியுள்ளனர். இந்தச் சித்திரங்கள் முதலியவையோ புரிய
வைப்பதற்காக உருவாக்கப் படுகின்றன. இதையோ அறிவீர்கள், இந்தக்
கண்கள் மூலமாக என்னென்ன தென்படு கின்றனவோ, இவை யனைத்தும்
சாம்பலாகிவிடப் போகின்றன. மற்றப்படி ஆத்மாவோ இங்கே இருக்க
முடியாது. நிச்சயமாக வீட்டுக்குச் சென்று விடும். இப்படி-இப்படி
விசயங்கள் ஒன்றும் அனைவருடைய புத்தியிலும் பதிவதில்லை. தாரணை
ஆகிறது என்றால், அது பற்றி ஏன் வகுப்பு நடத்துவதில்லை? அவ்வாறு
வகுப்பு நடத்தக் கூடியவர்கள் யாரும் 7-8 வருடங்களில் தயாராக
வில்லை. அநேக இடங்களில் இதுபோல் நடக்கவும் செய்கின்றனர். பிறகு
மாதாக்களின் பதவி உயர்ந்தது எனப் புரிந்து கொண்டுள்ளனர்.
சித்திரங்களோ அதிகம் உள்ளன. பிறகு முரளியை தாரணை செய்து அதைப்
பற்றிக் கொஞ்சம் சொல்லிப் புரிய வைக்கின்றனர். இதையோ யார்
வேண்டுமானாலும் செய்ய முடியும். மிகவும் சுலபம். பிறகு ஏன்
பிராமணிகள் வர வேண்டும் எனக் கேட்கின்றனர் எனத் தெரியவில்லை.
பிராமணி எங்காவது சென்று விட்டால் அவ்வளவு தான், கோபித்துக்
கொண்டு இருந்து விடு கின்றனர். வகுப்பிற்கு வருவதில்லை,
தங்களுக்குள் சச்சரவு ஆகி விடுகின்றது. முரளியோ யார்
வேண்டுமானாலும் அமர்ந்து சொல்ல முடியும் இல்லையா? நேரம் இல்லை
எனச் சொல்வார்கள். இது தனக்கும் நன்மை செய்துக் கொள்ள வேண்டும்
என்றால் மற்றவர்களுக்கும் கூட நன்மை செய்ய வேண்டும். மிகப்
பெரிய வருமானம். உண்மையான வருமானத்தைச் சம்பாதிக்க வைக்க
வேண்டும், அதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கை வைரம் போல் ஆகிவிட
வேண்டும். சொர்க்கத்திற்கு அனைவரும் செல்வார்கள் இல்லையா? அங்கே
சதா சுகமாக இருப்பார்கள். பிரஜைகளின் ஆயுள் குறைவாக இருக்கும்
என்ப தில்லை. பிரஜைகளுக்கும் ஆயுள் அதிகமாக இருக்கும். அதுவே
அமர உலகம். மற்றப்படி பதவி குறைந்ததாகவும் பெரியதாகவும்
இருக்கும். ஆகவே எந்த ஒரு தலைப்பினைப் பற்றியும் வகுப்பு நடத்த
வேண்டும். நல்ல பிராமணி வேண்டும் என ஏன் சொல்கின்றனர்?
தங்களுக்குள் வகுப்பை நடத்த முடியும். முன்னேற்பாடு எதுவும்
வேண்டாம். சிலருக்கு அகங்காரம் வந்து விடுகின்றது-இந்தச்
சின்னச் சின்னப் பெண் குழந்தைகள் என்ன புரிய வைப்பார்கள்?
மாயாவின் தடைகளும் அதிகம் வருகின்றன. புத்தியில் பதிவதில்லை.
பாபாவோ தினந்தோறும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்.
சிவபாபாவோ தலைப்பை வைத்துப் புரிய வைக்க மாட்டார் இல்லையா? அவரோ
கடல் ஆவார். உற்சாகம் கொடுத்துக் கொண்டே இருப்பார். சில நேரம்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், சில நேரம் வெளியில்
உள்ளவர்களுக்குப் புரிய வைக்கிறார். முரளியோ அனைவருக்கும்
கிடைக்கின்றது. வார்த்தை தெரியவில்லை என்றால் கற்றுக் கொள்ள
வேண்டும் இல்லையா? - தனது முன்னேற்றத்திற்காக முயற்சி செய்ய
வேண்டும். தனக்காக மற்றும் மற்றவர்களுக்காகவும் நன்மை செய்ய
வேண்டும். இந்த (பிரம்மா) பாபாவும் சொல்ல முடியும் இல்லையா?
ஆனால் குழந்தைகளின் புத்தியோகம் சிவபாபாவின் பக்கம் இருக்க
வேண்டும். அதனால் சொல்கிறார், எப்போதுமே சிவபாபா சொல்கிறார்
எனப் புரிந்து கொள்ளுங்கள். சிவபாபாவையே நினைவு செய்யுங்கள்.
சிவபாபா பரந்தாமத்திலிருந்து வந்துள்ளார், முரளி கூறிக்
கொண்டிருக்கிறார். இந்த பிரம்மாவோ பரந்தாமத்திலிருந்து வந்து
சொல்லவில்லை. சிவபாபா இந்த (பிரம்மாவின்) உடலில் வந்து நமக்கு
முரளி கூறுகிறார் எனப் புரிந்து கொள்ளுங்கள். இது புத்தியில்
நினைவிருக்க வேண்டும். யதார்த்த ரீதியில் இது புத்தியில்
இருந்தாலும் கூட நினைவு யாத்திரை இருக்கும் இல்லையா? ஆனால்
இங்கே அமர்ந்திருந்தாலும் அநேகரின் புத்தியோகம் இங்குமங்கும்
சென்று விடுகின்றது. இங்கே (மதுபனில்) நீங்கள் யாத்திரை யில்
நல்லபடியாக இருக்க முடியும். இல்லையென்றால் ஊர் நினைவு வந்து
விடும். வீடு-வாசல் நினைவு வந்து விடும். சிவபாபா இந்த
பிரம்மாவின் சரீரத்தில் வந்து நமக்குப் கல்வி கற்பிக்கிறார்
என்பது புத்தியில் நினைவிருக்கும். நாம் சிவபாபாவின் நினைவில்
முரளி கேட்டுக் கொண்டி ருந்தோம், பிறகு புத்தியோகம் எங்கோ
ஓடிப்போய் விட்டது. இதுபோல் அநேகருக்கு புத்தியோகம் சென்று
விடுகிறது. இங்கே நீங்கள் யாத்திரையில் நல்லபடியாக இருக்க
முடியும். சிவபாபா பரந்தாமத்திலிருந்து வந்துள்ளார் எனப்
புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வெளியில் கிராமங்கள்
முதலியவற்றில் இருக்கும் போது இந்தச் சிந்தனை வராது. ஒரு சிலர்
புரிந்து கொண்டுள்ளனர், சிவபாபாவின் முரளியை இந்தக் காதுகளால்
கேட்டுக் கொண்டிருக்கிறோம். பிறகு சொல்கிறவரின் (தேகதாரியின்)
பெயர்-வடிவம் நினைவிருக்காது. இந்த ஞானம் முழுவதும் உள்ளுக்குள்
இருப்பது. உள்ளுக்குள் சிந்தனை இருக்க வேண்டும், சிவபாபாவின்
முரளியை நாம் கேட்கிறோம். இன்ன சகோதரி கூறிக் கொண்டிருக்கிறார்
என்பதாக இருக்கக் கூடாது. சிவபாபாவின் முரளியைக் கேட்டுக்
கொண்டி ருக்கிறோம். இவை கூட நினைவில் இருப்பதற்கான
யுக்திகளாகும். எவ்வளவு நேரம் நாம் முரளி கேட்கிறோமோ, அவ்வளவு
நேரம் நினைவிலேயே இருக்கிறோம் என்பதல்ல. பாபா சொல்கிறார்,
அநேகரின் புத்தி எங்கெங்கோ சென்று விடுகின்றது. விவசாயம்-தொழில்
முதலியன நினைவு வந்து கொண்டே இருக்கும். புத்தியோகம் எங்காவது
வெளியில் அலைவது கூடாது. சிவபாபாவை நினைவு செய்வதில் எந்த ஒரு
கஷ்டமும் கிடையாது. ஆனால் மாயா நினைவு செய்ய விடுவதில்லை. முழு
நேரமும் சிவபாபாவின் நினைவு இருக்க முடியாது. வேறு-வேறு
சிந்தனைகள் வந்து விடுகின்றன. இது நம்பர்வார் புருஷார்த்தத்தின்
அனுசாரம் ஆகிறது. யார் மாலையில் வர மிக அருகில் இருப்பவர்களோ,
அவர்களின் புத்தியில் நன்கு பதியும். அனைவருமே 8 மணிகளின்
மாலையில் வந்துவிட மாட்டார்கள். ஞான, யோக, தெய்வீக குணங்கள்
இவையனைத்தையும் தனக்குள் உள்ளதா என பார்க்க வேண்டும். நம்மிடம்
எந்த ஓர் அவகுணமும் இல்லாதிருக்கிறதா? மாயா வின் வசமாகி ஏதேனும்
விகர்மம் செய்யாதிருக் கிறோமா? ஒரு சிலர் அளவுக்கு அதிகமாக
உண்பதில் மிகவும் பேராசைக்காரர்களாக ஆகி விடுகிறார்கள்.
பேராசையின் தவறும் நடக்கின்றது. ஆக, மாயாவின் பிரவேசம் அப்படி
நடந்து விடு கின்றது - பசி-பசி எனக் கூறிக் கொண்டே உள்ளனர் -
சாப்பிடுவேண்டும், -சாப்பிடுவேண்டும், வயிற்றை நிரப்பிக் கொள்ள
வேண்டும் என்கின்றனர். சிலரிடம் உண்பதற்கான அதிகப் பற்றுதல்
உள்ளது. உணவும் கூட விதிமுறைப்படி இருக்க வேண்டும். ஏராளமான
குழந்தைகள் உள்ளனர். இப்போது அநேகக் குழந்தைகள் உருவாகப்
போகின்றனர். எவ்வளவு பிராமண-பிராமணிகள் உருவாகுவார்கள்!
குழந்தைகளுக்கும் சொல்கிறேன்-நீங்கள் பிராமணராகி
அமர்ந்திருங்கள். தாய்மார்கள் முன்னிலையில் வைக்கப்படுகின்றனர்.
சிவசக்தி பாரதமாதாவுக்கு ஜே!
பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணருங்கள் மற்றும் தந்தையை
நினைவு செய்யுங்கள். சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்றிக் கொண்டே
இருங்கள். சுயதரிசனச் சக்கரதாரி பிராமணர்களாகிய நீங்கள் தான்.
இவ்விஷயங் களைப் புதிதாக யாரேனும் வந்தால் புரிந்து கொள்ள
இயலாது. நீங்கள் சர்வோத்தம பிரம்மா முகவம்சாவளி பிராமணகுல
பூஷணர்கள் (அணிகலன்கள்), சுயதரிசனச் சக்கரதாரிகள். புதிதாக
யாராவது கேட்பார் களானால் சுயதரிசனச் சக்கரமோ விஷ்ணுவுக்கு
உரியது, பிறகு இவர்களோ அனைவருக்கும் கூறிக் கொண்டே உள்ளனர் எனச்
சொல்வார்கள். ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால்
புதிது-புதிதாக வருபவர்களை சபையில் அனுமதிப்ப தில்லை. அவர்களால்
புரிந்து கொள்ள முடியாது. ஒரு சிலர் பிறகு கோபித்துக்
கொள்வார்கள்-நாம் என்ன புத்தியற்றவர்களா, நம்மை ஏன் வர
விடுவதில்லை? ஏனென்றால் பிற சத்சங்கங்களிலோ இதுபோன்ற சிலர்
சென்று கொண்டே இருக்கின்றனர். அங்கேயோ, சாஸ்திரங்களின் விசயங்
களைக் கூறிக் கொண்டே இருக்கின்றனர். அதைக் கேட்பது ஒவ்வொருவரின்
உரிமை. இங்கோ எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இந்த
ஈஸ்வரிய ஞானம் புத்தியில் பதியவில்லை என்றால் கோபித்துக்
கொள்கின்றனர். சித்திரங்களையும் பத்திரமாக வைக்க வேண்டியுள்ளது.
இந்த அசுர உலகத்தில் தங்களின் தெய்வீக இராஜதானியை ஸ்தாபனை
செய்ய வேண்டும். எப்படி கிறிஸ்து வந்தார், தம்முடைய தர்மத்தை
ஸ்தாபனை செய்வதற்காக. இந்தத் தந்தை தெய்விக ராஜதானியை ஸ்தாபனை
செய்கிறார். நீங்கள் காம கட்டாரியின் இம்சை அல்லது ஸ்தூல
இம்சையைச் செய்ய முடியாது. பாடவும் செய்கின்றனர், அசுத்தத்
துணியை (ஆத்மாவை) தோய்த்து சுத்தப் படுத்தினார் என்று.
மனிதர்களோ பயங்கர இருளில் உள்ளனர். பாபா வந்து பயங்கர
இருளிலிருந்து ஒளிப் பிரகாசமாக ஆக்குகிறார். பிறகும் கூட ஒரு
சிலர் பாபா-பாபா என்று கூறி விட்டுப் பிறகு முகத்தைத்
திருப்பிக் கொள்கின்றனர். படிப்பை விட்டு விடுகின்றனர். பகவான்
உலகத்தின் எஜமானர் ஆக்குவதற்காகப் கல்வி கற்றுத் தருகிறார்.
அப்படிப்பட்ட படிப்பை விட்டு விடுவார்களானால் அவர்கள் மகா
மூர்க்கர்கள் என அழைக்கப்படுவார்கள். எவ்வளவு பெரிய கஜானா
கிடைக்கிறது! அப்படிப்பட்ட தந்தையை ஒரு போதும் விட்டுவிடக்
கூடாது. ஒரு பாடலும் உள்ளது - நீங்கள் அன்பு செலுத்தினாலும் சரி,
எட்டி உதைத்தாலும் சரி, நாங்கள் உங்கள் வாசலை ஒருபோதும் விட
மாட்டோம். பாபா வந்திருப்பதே எல்லையற்ற ராஜ்யத்தைத் தருவதற்காக.
விட்டுவிடுவதற்கான விசயமே கிடையாது. ஆம், நல்ல இலட்சணங்களை
தாரணை செய்ய வேண்டும். பெண்களும் ரிப்போர்ட் அனுப்பு
கின்றனர்-இவர்(கணவர்) எனக்கு அதிகத் தொந்தரவு செய்கிறார் என்று.
இப்பொழுது மனிதர்கள் மிகமிகக் கெட்டவர்களாக உள்ளனர். மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சகோதரர்கள் சகோதரிகளைப்
பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஆத்மாக்கள் நாம் எந்த ஒரு
நிலையிலும் பாபாவிடமிருந்து அவசியம் ஆஸ்தியை அடைய வேண்டும்.
பாபாவை விட்டுவிடுவதால் ஆஸ்தி முடிந்து போகும். நிச்சயபுத்தி
வெற்றியைத் தரும். சந்தேக புத்தி அழிவைத் தரும். பிறகு பதவி
மிகவும் குறைந்து விடும். ஞானத்தை ஒரே ஒரு ஞானக்கடலான தந்தை
மட்டுமே கொடுக்க முடியும். பிற அனைத்துமே பக்தியாகும். ஒருவர்
தம்மை எவ்வளவு தான் ஞானியாக நினைத்துக் கொண்டாலும் சரி, பாபா
சொல்கிறார், அனைவரிடமும் சாஸ்திரங்கள் மற்றும் பக்தியின் ஞானம்
உள்ளது. உண்மையான ஞானம் என கூறப்படுவது எது என்பதைக் கூட
மனிதர்கள் அறிந்து கொள்ள வில்லை. நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) முரளி கேட்கும் போது புத்தியின் தொடர்பு வெளியில் அலையாமல்
இருக்கிறதா என்பதில் கவனம் வைக்க வேண்டும். நாம் சிவபாபாவின்
மகாவாக்கியங்களைக் கேட்டுக் கொண்டி ருக்கிறோம் என்பது சதா
நினைவிருக்க வேண்டும். இதுவும் கூட நினைவு யாத்திரையாகும்.
2) தன்னைத்தான் பார்க்க வேண்டும் - நம்மிடம் ஞான-யோகம் மற்றும்
தெய்வீக குணங்கள் உள்ளனவா? பேராசை என்ற பூதமோ இல்லை தானே? மாயா
வசமாகி எந்த ஒரு விகர்மமும் நடைபெறவில்லையே?
வரதானம்:
நிமித்த உணர்வின் நினைவினால் தடுமாற்றத்தை முடிவடையச்
செய்யக்கூடிய சதா ஆடாத, அசையாதவர் ஆகுக.
நிமித்த உணர்வினால் அனேகவிதமான நான், எனது என்பது சகஜமாகவே
அழிந்துவிடுகிறது. இந்த நினைவானது அனேகவிதமான தடுமாற்றங்களில்
இருந்து விடுவித்து ஆடாத, அசையாத ஸ்திதியின் அனுபவத்தை
செய்விக்கின்றது. சேவையில் கூட உழைக்க வேண்டியது இருக்காது.
ஏனெனில், நிமித்தமாக ஆகுபவர்களின் புத்தியில் நான் என்ன
செய்வேனோ, என்னை பார்த்து அனைவரும் செய்வார்கள் என்ற இந்த
நினைவு சதா இருக்கும். சேவைக்கு நிமித்தம் ஆகுவது என்றால்
மேடைக்கு வருவது என்று அர்த்தம். மேடையின் பக்கம் அனைவருடைய
பார்வை தானாகவே செல்கிறது. எனவே, இந்த நினைவு கூட பாதுகாப்பு
சாதனம் ஆகிவிடுகிறது.
சுலோகன்:
அனைத்து விசயங்களில் இருந்து விடுபட்டவர் ஆனீர்கள் என்றால்
பரமாத்ம தந்தையினுடைய உதவியின் அனுபவம் ஏற்படும்.
அவ்யக்த சமிக்ஞை: சகஜயோகி ஆகவேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
நிகழ்கால சமயம் அலைந்துகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு ஒன்று
சாந்தி தேவைப்படுகிறது, இரண்டாவது ஆன்மிக அன்பு தேவைப்படுகிறது.
அன்பு மற்றும் சாந்தி தான் அனைத்து இடங் களிலும்
பற்றாக்குறையாக உள்ளது. ஆகையினால், என்ன நிகழ்ச்சி செய்தாலும்,
அதில் முதலில் தந்தையுடனான சம்பந்தத்தினுடைய அன்பின் மகிமையைப்
பாடுங்கள் மற்றும் பிறகு அந்த அன்பினால் ஆத்மாக்களுடைய
சம்பந்தத்தை இணைத்த பிறகு சாந்தியினுடைய அனுபவத்தை
செய்வித்திடுங்கள். அன்பு சொரூபம் மற்றும் சாந்தி சொரூபம் ஆகிய
இரண்டின் சமநிலை இருக்க வேண்டும்.