31.05.26 காலை முரளி
ஓம் சாந்தி 15.03.2010 பாப்தாதா,
மதுபன்
பரமாத்ம அன்பிற்கு பாத்திரமான ஆத்மாக்கள் துக்கமான ஆத்மாக்கள்
மீது சுகத்தின் அஞ்சலி கொடுங்கள், வீணாணவைகளை அழித்துவிட்டு
சக்திசாலி ஆகுங்கள் மேலும் சமயத்தை அருகாமையில் கொண்டுவாருங்கள்.
இன்று பாப்தாதா தன்னுடைய நாலாபுறங்களிலும் உள்ள பரமாத்ம அன்பான
குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட
பரமாத்ம அன்புக்குரியவர்கள் கோடியில் சில குழந்தைகளே ஏனெனில்
இந்த நேரம் தான் பரமாத்ம அன்பின் அனுபவம் செய்ய முடியும், முழு
கல்பமும் ஆத்மாக்களின் அன்பு, மகாத்மாக்களின் அன்பு,
தர்மாத்மாக்களின் அன்பை அனுபவம் செய்தீர்கள். ஆனால்
பரமாத்மாவின் அன்பு இப்பொழுது சங்கமயுகத்தில் மட்டுமே
கிடைக்கின்றது, அதை குழந்தைகளாகிய நீங்கள் அனுபவம் செய்து
கொண்டிருக்கின்றீர்கள். யாரேனும் உங்களிடம் பரமாத்மா
எங்கிருக்கிறார் என்று கேட்டால் நீங்கள் பதில் கூறுவீர்கள்?
என்னுடன் இருக்கின்றார், என்னுடன் தான் இருக்கின்றார். என்
உள்ளத்தில் தான் இருக்கின்றார். அவ்வாறு அனுபவம்
செய்கின்றீர்கள் அல்லவா! இந்த அன்பைப் பற்றி நமக்குத் தான்
தெரியும். இந்த அன்பை நாம் தான் அனுபவமும் செய்கின்றோம் அதாவது
நம் உள்ளத்தில் பாபா மேலும் பாபாவின் உள்ளத்தில் நாம்
இருக்கின்றோம். இந்த பரமாத்ம அன்பின் போதையை அனுபவம் செய்யும்
பாக்கியம் நமக்குத் தான் பிராப்தமாகி யுள்ளது என்பதை
அறிந்துள்ளீர்கள். யாரிடமாவது அன்பு ஏற்பட்டுள்ளது எனில் அதன்
அடையாளம் என்ன? அவர்கள் மீது பலியாகுவது ஆகும். எனவே பரமபிதா
பரமாத்மா உங்களிடம் விரும்புவது என்ன என்பதை நீங்கள் அனைவரும்
அறிவீர்கள் அல்லவா! என்னுடைய ஒவ்வொரு குழந்தையும் எனக்கு சமமாக
ஆகவேண்டும் என்று தந்தை ஒவ்வொரு குழந்தை மீதும் இவ்விருப்பத்தை
வைத்துள்ளார். எப்படி தந்தையோ அப்படியே குழந்தைகளின் ஸ்திதி
சிரேஷ்டமாக இருக்கவேண்டும். அந்த சிரேஷ்ட ஸ்திதி எது? சம்பூரண
தூய்மையின் ஸ்திதி. கனவில் கூட அபவித்திரதா வர முடியாத அளவிற்கு
அப்படி தூய்மை இருக்க வேண்டும். அப்பேற் பட்ட சம்பூரண
தூய்மையான ஸ்திதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றீர்களா? அந்த
சம்பூரண தூய்மையில் அபவித்திரதாவின் பெயர் அடையாளம் என்பதும்
இருக்காது.
நிகழ்காலத்தில் நேரம் அருகாமையில் வருவதன் காரணமாக பாப்தாதா
இப்போது இந்த இசாரா கொடுத்துக் கொண்டிருக்கின்றார் அதாவது
நேரத்தின் அருகாமையின் (சமீபம்) அனுசாரம் வீணாண எண்ணங்கள் கூட
அபவித்திரதாவின் அடையாளம் ஆகும். முழு நாளில் இதை சோதனை
செய்யுங்கள் - எந்த ஒரு வீணாண எண்ணம் அபிமானம் அல்லது
அவமானத்தினுடையது தன் பக்கம் ஈர்க்கவில்லை தானே? ஏனெனில்
போகப்போக ஒருவேளை பாபா கொடுத்துள்ள விசேஷத் தன்மைகளை தன்னுடையது
என புரிந்து அபிமானத்தில் வருவதும் வீண் எண்ணம் ஆகிவிட்டது
மேலும் என்னடையது என்ற அசுத்த எண்ணம் - நான் குறைந்தவன் அல்ல,
நானும் அனைத்தும் அறிந்துள்ளேன், என்னுடைய இந்த எண்ணம் தான்
யதார்தமானது, உயர்ந்தது..., இது போன்ற எனது என்பதன்
அபிமானத்தின் சங்கல்பம் கூட சூட்சும அபவித்திரதாவின் அம்சமாகும்.
ஆகவே தன்னை சோதனை செய்யுங்கள் எவ்விதமான அபவித்திர வீண்
எண்ணங்களின் எந்த அம்சமும் தங்கி விடவில்லை தானே? ஏனெனில்
இப்போது தூய்மையான உலகின் ஸ்தாபனைக்கான நேரத்தை அருகில் கொண்டு
வருவதற்கு பரமாத்மா அன்பு குழந்தைகளான நீங்களே நிமித்தம்
ஆவீர்கள். ஆக யார் நிமித்த ஆத்மாக்களோ அவர்களுடைய அதிர்வலைகள்
நாலாபுறமும் பரவுகிறது. எனவே சோதனை செய்யுங்கள் எந்தவிதமான வீண்
எண்ணம் அதன் பக்கம் இழுக்கவில்லை தானே? ஏனெனில் இப்பொழுது
தூய்மையான உலகம், தூய்மையான இராஜ்ஜியம் அருகாமையில் வந்து
கொண்டிருக்கின்றது. துக்கம் மற்றும் அசாந்தி நாலாபுறமும்
விதவிதமான ரூபத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அதற்காக
தூய்மையின் வைப்ரேசன் (அதிர்வலைகள்) அவசியம் ஆகும். துக்கம்,
அசாந்திக்கான காரணம் அபவித்திரதா. எனவே அபவித்திர ஆத்மாக்கள்
மற்றும் பக்தி ஆத்மாக்கள் என இரட்டை சேவை செய்யவேண்டும்.
வார்த்தையின் சேவையானது நாலாபுறமும் கோலாகலமாக நடைபெறுவதை
பாப்தாதா பார்த்தார். தன்னுடைய புகார்களை போக்கிக்
கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் இப்போது ஆத்மாக்களுக்கு கூடுதல்
சக்தி (சகாஷ்) தேவை. அது மனதின் மூலமாக சக்தி கொடுக்க வேண்டும்.
தைரியம் கொடுக்க வேண்டும், ஊக்கம் உற்சாகம் கொடுக்க வேண்டும்.
ஆக இந்த நேரம் இரட்டை சேவையின் அவசியம் இருக்கின்றது. இதற்காக
ஒவ்வொரு குழந்தையும் தன்னை பூர்வஜ் (மூதாதையர்) என புரிந்து
கொள்ளுங்கள் என்று பாப்தாதா கூறுகிறார். நீங்கள் இந்த கல்ப
விருட்சத்தின் அடிப் பாகமான பூர்வஜ் மற்றும் பூஜைக்குரிய
ஆத்மாக்கள் ஆவீர்கள். பாப்தாதாவோ துக்கமான குழந்தைகளின்
கூக்குரலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார். குழந்தைகளான
உங்களிடமும் அவர்களின் கூக்குரலின் சத்தம் வந்தடைய வேண்டும்.
எந்தளவு சம்பூரண பவித்திர ஆத்மா ஆகுவீர்களோ, ஆகிக் கொண்டிருக்
கின்றீர்கள், ஆகியும் உள்ளீர்கள் ஆனால் கூடக்கூடவே இப்பொழுது
மனசா சேவையையும் அதிகரிக்க வேண்டும்.
இன்று உலகத்தில் சுகம் - சாந்தி, திருப்தி ஆத்மாக்களிடம்
குறைந்து கொண்டே இருக்கின்றது. பரமாத்மாவின் அன்பிற்குப்
பாத்திரமான ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அன்பின், திருப்தி
யின், குஷியின் அஞ்சலி கொடுப்பது அவசிமானதாகும்.
துக்கமானவர்களுக்கு சுகத்தின் அஞ்சலி கொடுங்கள். ஒன்று மனதின்
மூலமாக சக்தி (சகாஷ்) கொடுங்கள் மற்றொன்று தன்னுடைய முகம்
மற்றும் நடத்தை மூலம் பாபாவை பிரத்யட்சம் செய்யுங்கள்.
இப்பொழுது என்ன சேவை செய்து கொண்டிருக்கின்றீர்களோ மேலும்
செய்துள்ளீர்களோ அதாவது சேவையில் நாலாபுறமும் ஊக்கம் உற்சாகம்
இருக்கின்றது என பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார், ஆனால் இப்போது
ஒரு சேவை மீதம் உள்ளது. இப்பொழுது வரை பிரம்மாகுமாரிகள் மனித
ஆத்மாக்களை நன்றாக ஆக்குகின்றார் கள், எவையெல்லாம் அசுத்த
விவகாரங்களோ அவற்றிலிருந்து விடுவிக்கின்றனர், இளைஞர் களுக்காக
அரசாங்கம் எதனை விரும்புகிறதோ, அந்த சேவை மிக நன்றாக
செய்கின்றார்கள் என இது போன்ற சப்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால்
இப்பொழுது பாபா வந்துவிட்டார், பரமாத்மா வந்து விட்டார்,
பரமாத்மா ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், என்னுடைய தந்தை
ஆஸ்தி கொடுப் பதற்கு வந்துவிட்டார், இப்போது தந்தையின் பக்கம்
பார்வை செல்வதால் அவர்களுக்கும் பரமாத்ம அன்பு, பரமாத்மாவின்
கவர்ச்சி ஈர்க்கும். நல்லது- நல்லது என்பதெல்லாம்
முடிந்துவிட்டது ஆனால் பரமாத்மா தந்தையின் வெளிப்பாடு (பிரத்யட்சம்)
கவர்ச்சித்து நல்லதாக ஆக்கும். யாரை நினைவு செய்கின்றார்களோ
அவர் ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், அவரிடமிருந்து ஆஸ்தி
கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்று இப்பொழுது தந்தையை அறிந்து
கொள்ளட்டும். ஆகவே இப்பொழுது மனதின் மூலம் பாபாவின் அருகில்
கொண்டு வாருங்கள். தனது முகம் மற்றும் நடத்தை மூலமாக, தன்னுடைய
கண்களில் பாபா வெளிப்பட வேண்டும். ஆக இப்பொழுது தங்களுக்குள்
இதற்கான திட்டத்தை தீட்டுங்கள்.
பாப்தாதா நேரத்திற்கேற்ப கொடுத்திருந்த திட்டங்களை குழந்தைகள்
மிக விதிப்பூர்வமாக, ஊக்க – உற்சாகத்தோடு செய்ததை, செய்து
கொண்டும் இருப்பதைப் பார்த்தார், இதற்காக பாப்தாதா அனைத்து
குழந்தை களுக்கும் பல கோடி மடங்கு வாழ்த்துக்களைக் கொடுத்துக்
கொண்டிருக் கின்றார். இப்போது பகவான் ஆஸ்தி கொடுத்துக்
கொண்டிருக்கின்றார், இப்பொழுது ஆஸ்தி பெறவில்லை எனில் எப்பொழுது
பெறுவீர்கள்? என்பதை சேர்க்க வேண்டும் பாபாவுக்கு துக்கம்,
அசாந்தியான வாயுமண்டலத்தைப் பார்த்து குழந்தைகள் மீது இரக்கம்
வருகின்றது. மேலும் இவை அனைத்தும் உச்சத்திற்கு செல்லும் என்பது
பாபா மற்றும் குழந்தைகளுக்குத் தான் தெரியும். உச்சத்தை
எட்டாமல் முடிவு ஏற்படாது. ஆகையால் அப்படிப்பட்ட சமயத்தில்
ஆத்மாக்களுக்கு அனுபவம் செய்வியுங்கள், பகவான் ஆஸ்தி கொடுத்துக்
கொண்டிருக்கின்றார் என்று சொல்வது மட்டுமின்றி அனுபவம்
செய்வியுங்கள். நீங்கள் அனைவரும் பாபாவின் பிரத்யட்சம்
எப்பொழுது எப்படி ஏற்படும் என்று கேட்கின்றீர்கள் அல்லவா!
பிரம்மாகுமாரிகள் வரை சென்றடைந்துள்ளது ஆனால் பிரம்மா
குமாரிகளுக்கு கற்பிப்பவர் யார்? பிரம்மாகுமாரர்கள்,
பிரம்மாகுமாரிகளின் வள்ளல் யார்! இப்பொழுது நேரத்தை அருகில்
கொண்டு வரவேண்டும், முடிக்க வேண்டும் (சமாப்தி). முடிவை அருகில்
கொண்டு வருபவர் யார்? ஒவ்வொரு குழந்தையும் நாம் தான் நிமித்தம்
எனப் புரிந்திருக்கின்றீர்கள் அல்லவா! பாபாவோ தன்னோடு
குழந்தைகளுக்கும் இந்த பொறுப்பை கொடுத்திருக்கின்றார்.
குழந்தைகள் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் (சன் ஷோஸ் ஃபாதர்).
யாராவது தந்தையை அறிந்து கொள்ளும்போது, பாருங்கள் நீங்கள்
அனைவரும் பாபாவை அறிந்து கொண்டு என்ன செய்தீர்கள்? அறிமுகம்
பெற்றீர்கள், அறிந்தீர்கள், குழந்தை ஆகி ஆஸ்திக்கு அதிகாரி
ஆகிவிட்டீர்கள். இப்போது ஆஸ்தி அடையக்கூடிய ஆத்மாக்களின் வரிசை
ஏற்பட வேண்டும். வரிசையோ தடைபட்டுள்ளது ஏன்? ஏனெனில் சில சில
குழந்தைகள் இப்போது வரை வீண் எண்ணங்களின் வரிசையில் நின்று
கொண்டிருக் கின்றனர். ஏன், என்ன, எப்படி இப்போது இவற்றை
முடிப்பதில் நேரம் கொடுக்கின்றார்கள் ஆனால் வீணாணவை கள்
முடிவடையவில்லை. வீணாணவை சக்திசாலி ஆகுவதில் தடை
ஏற்படுத்துகின்றது.
இன்று பாப்தாதா வீண் எண்ணங்களை முடிவடையச் செய்வதற்காக
நாலாபுறமுள்ள அனைத்து குழந்தை களுக்கும் இப்பொழுதிலிருந்தே
வீணாணவைகளை முடித்துவிட்டு சதா சக்தியசாலி யாகி சக்திசாலி
ஆக்குங்கள். வெறும் செய்தி கொடுப்பது மட்டுமல்ல, சக்திசாலி
ஆகுங்கள், சக்திசாலி ஆக்குங்கள் என தைரியத்தைக் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். வீணாணவைகளுக்கு முடிவு நாள் கொண்டாடுங்கள்.
செய்ய முடியுமா? வீண் எண்ணங்கள் தனக்கு நஷ்டத்தை
விளைவிக்கின்றது, நேரத்தை கெடுக்கிறது, முகத்தில் சதா குஷி,
அதிர்ஷ்டத்தின் அனுபவத்தை குறைவாக்குகின்றது என்பதை புரிந்து
இருக்கின்றீர்கள். எனவே இப்போது முடிவு (சமாப்தி) நேரத்தை
அருகில் கொண்டு வரவேண்டும், யாருக்காக? உங்களுக்காகத்தான்.
இப்பொழுது முடிவுக் கான நேரத்தை அருகில் கொண்டு வரவேண்டும்,
அதற்காக வீண் எண்ணங்களை முடிவடைய செய்யத்தான் வேண்டும்.
செய்யவேண்டும் அல்ல, செய்யத்தான் வேண்டும், கனவில் கூட வரக்
கூடாது, எண்ணத்தை விடுங்கள் ஆனால் கனவில் கூட வரக்கூடாது,
அப்படி தைரியமுள்ள குழந்தைகளாக தன்னை நினைப்பவர்கள் கையை
உயர்த்துங்கள். மனதின் கையை உயர்த்திக் கொண்டிருக்கின்றீர்கள்
அல்லவா! உடலின் கையை உயர்த்துவது மிக எளிது ஆனால் மனதின் கையை
உயர்த்திக் கொண்டிருக்கின்றீர்களா? யார் மனதின் கையை
உயர்த்துகின்றீர்களோ அவர்கள் கைகை உயர்த்துங்கள், மனதின் கை.
நல்லது.
நீங்கள் அனைவரும் வரக்கூடிய புதிய உலகத்தில் 21 பிறவிகள் சதா
மகிழ்ச்சியாக (குஷி) இருப்பீர்கள். உழைக்க வேண்டியிருக்காது.
உலகத்தின் குழப்பங்களில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள்.
வாழ்க்கைக்கு என்னென்ன வேண்டுமோ உடல், மனம், செல்வம் அனைத்தும்
கிடைத்து விடும். உடல் ஆரோக்கியமாக, மன மகிழ்ச்சியாக, அளவற்ற
செல்வம் இவை உங்களுக்கு 21 பிறவிகளுக்கு உத்திரவாகும் என இன்று
பாப்தாதா நாலாபுறமுள்ள குழந்தைகளுக்கு வரதானம் கொடுத்துக்
கொண்டிருக்கின்றார். நல்லது, இன்றைய காலத்தின் கணக்குப்படி பல
விசயங்கள் மாற்றமடைகிறது. அரசாங்கத்தின் சட்டங்களும்
மாறவேண்டும், மனிதர்களின் உள்ளுணர்வும் மாற வேண்டும். எனவே
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் வீண் விசயங்கள் வரத்தான் செய்யும்,
ஆகவே வீண் எண்ணங்களை முடிப்பதற்கு சக்திசாலி எண்ணங்கள் வேண்டும்.
வீணாணவற்றை அழிப்பதற்கு சிறந்த எண்ணங்கள் வேண்டும். எனவே
தினந்தோறும் முரளியில் வரும் வரதானம், சுலோகனைக் கேளுங்கள்.
அந்த வரதானங்கள் தான் சிரேஷ்ட எண்ணங்கள் ஆகும். வீண் எண்ணங்கள்
வருகின்றது என்றால் சிரேஷ்ட எண்ணம் மனதிற்கு தேவையானதாக உள்ளது.
மனமானது காலியானதாக இருக்கமுடியாது. மனதிற்கு ஏதாவது ஏதாவது
சங்கல்பம் வேண்டும். எனவே வீணாணவைகளை சிரேஷ்டமாக்குவதற்காக
உங்களுக்கு வரதானம் மற்றும் சுலோகனில் வரக்கூடிய வார்த்தைகள்
மனதை மாற்றம் செய்வதற்கு தேவையாகின்றது. மற்றொன்று அதிகாலை கண்
விழித்ததும் முதன்முதலில் சிவபாபாவிற்கு காலை வணக்கம் (குட்
மார்னிங்) கூறுங்கள். செய்ய முடியுமா? பாருங்கள் பழமொழி கூட
இருக்கிறது, முழு நாளில் ஒருவேளை ஏதாவது நல்லதைப் பார்த்தார்கள்
எனில் முழு நாளும் நன்றாகவே கழிகின்றது, ஏதாவது கெட்டதைப்
பார்த்தார்கள் எனில் என்ன கூறுகின்றார்கள்? யார் முகத்தில்
முழித்தேனோ தெரியவில்லை முழு நாளும் கெட்டுவிட்டது எனக்
கூறுகின்றார்கள் அல்லவா! ஆக நல்லதிலும் நல்லவர் யார்? சிவபாபா
ஆவார். சிவபாபா மீது அன்பு இருக்கின்றதல்லவா! எனவே கண்
திறந்ததுமே சிவபாபா குட்மார்னிங் மற்றும் இரவு படுக்கைக்கு
சென்று கண் மூடும்போது சிவபாபா குட்நைட் (இரவு வணக்கம்)
கூறுங்கள். இது எளிது தான் அல்லவா! ஆகையால் முழு நாளும்
உங்களுக்கு நன்றாகவே இருக்கும் சுப எண்ணங்கள் எழுப்பினீர்கள்
அல்லவா! வரதானம் கேட்டீர்கள். இவ்வாறு செய்யவேண்டும். உங்கள்
மீது பாப்தாதாவிற்கு அன்பு உள்ளது. எனவே இதை செய்தால் நீங்கள்
முன்னேறிக்கொண்டே செல்வீர்கள். உங்களுடைய இந்த வாழ்க்கையை
குஷியாக அனுபவம் செய்வீர்கள். ஒருபோதும் துக்கத்தின் அலை வராது.
இதை ஏற்றுக்கொள் கின்றீர்களா? சகஜயோகி ஆகுங்கள், அவ்வளவு தான்.
நான் ஆத்மா, சிவபாபாவின் குழந்தை, அவ்வளவு தான், இவரே சகஜயோகி.
நடந்தாலும் சுற்றினாலும் நான் ஆத்மா, சிவபாபாவின் குழந்தை என்ற
நினைவு செய்யுங்கள். இதை நினைக்க முடியுமல்லவா! மிக்க நன்று.
நீங்கள் அனைவரும் வாரிசு ஆவீர்கள் மேலும் வாரிசு
ஆகக்கூடியவர்களும் இருக்கின்றார்கள். யார் தன்னை பாப்தாதாவின்
பக்கா வாரிசு என புரிந்து கொள்கின்றீர்களோ, அவர்கள் கையை
தூக்குங்கள். வாரிசு தானே? வி.ஐ.பி. கூட கையை உயர்த்திக்
கொண்டிருக்கின்றார்கள். கை தட்டுங் கள். நல்லது. இப்பொழுது
வாரிசு குவாலிடியானவர்கள் இன்று இந்த எண்ணத்தை தனக்குத்தானே
திடமாக மேற்கொள்ளுங்கள், பாப்தாதாவிற்கு இந்த சங்கல்பம்
கொடுங்கள் நாங்கள் இப்பொழுதி லிருந்தே, எப்பெழுதிலிருந்து அல்ல,
இப்பொழுதிலிருந்தே வீண் எண்ணங்களை அழித்து விட்டே தீருவோம்.
ஏற்றுக்கொள்கின்றீர்களா? சரி தானே? (ஓ.கே.) சரி எனில் கை
உயர்த்துங்கள். இரண்டு வேலைகள் செய்யவேண்டும் ஒன்று சக்திசாலி
ஆகவேண்டும் இரண்டாவது சமயத்தை அருகில் கொண்டு வரவேண்டும்.
ஏனெனில் பாப்தாதாவிடம் கூக்குரல் மற்றும் துக்கத்தின்
பெருமூச்சு அதிகமாகக் கேட்க வருகிறது. உங்களுக்கு ஏன்
கேட்கவில்லை எனத் தெரியவில்லை. பாப்தாதா வுக்கு இவ்வாறு
கேட்டுக் கொண்டே இருக்கின்றது எனில் குழந்தைகளாகிய நீங்கள்
தன்னை வாரிசு என நினைப்பவர்கள், ஆஸ்தி அடைபவர்களாக அதாவது ஆஸ்தி
அடைபவர்கள் மற்றவர்களுக்கு ஆஸ்தி அடையச் செய்வதற்கான இரக்கம்
வரவேண்டும் அல்லவா! கருணை ஏன் வரவில்லை? வைராக்கியம்,
எல்லையற்ற வைராக்கியம், இரக்கம் வரவேண்டும். சிறு சிறு
விசயங்களில் ஏன், என்ன என்ற வரிசையில் நேரத்தை கொடுக்கக்கூடாது.
இப்பொழுது ஹே பாப்தாதாவின் தேடிக் கண்டெடுக்கப்பட்ட பலகோடி
மடங்கு வரதானங்களின் வரதானி குழந்தை களே! இப்பொழுது எண்ணத்தை
உறுதியாக ஆக்குங்கள் மேலும் உறுதித்தன்மை (திடதா) என்ற சாவி
போடுங்கள். கர்மயோகி ஆகுங்கள். கர்மயோக வாழ்க்கை
வாழக்கூடியவர்கள். வாழ்க்கை என்பது சதா காலத்திற் கானது,
அவ்வப்போது அல்ல. எனவே இப்பொழுது தன்னுடைய இரக்கம், கருணை,
துக்கத்தைப் போக்கி சுகத்தைத் தரும் சொரூபத்தை
வெளிப்படுத்துங்கள் (எமர்ஜ்). பாப்தாதா திடீரென்ற நேரம் என்பதை
நீண்ட காலமாகக் கூறி வருகிறார். ஆகையால் திடீரென்று நடப்பதற்கு
முன்பாகவே பக்தர்களின் கூக்குரலை நிறை வேற்றுங்கள்.
துக்கமானவர்களின் துக்கத்தின் குரலைக் கேளுங்கள். இப்போது
ஒவ்வொரு சிறியவர், பெரியவர் அனைவரும் உலக மாற்றம் செய்பவர்,
உலகத்தின் துக்கத்தை மாற்றி சுகமான உலகத்தைக் கொண்டு வருவதற்கு
பொறுப்பாளர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.
பாப்தாதாவின் வருவதும் செல்வதும் எது வரை? எனவே அனைத்துமே
திடீரென்றே நடக்கும். ஆக இப்பொழுது வாரிசு குவாலிடியானவர்கள்
ஆஸ்தி பெறச் செய்யுங்கள், இரக்க உள்ளத்தின் பாகம் நடியுங்கள்.
எது வரை நடக்கும் என்று எண்ணாதீர்கள். திடீரென்று நடக்கும்,
ஆகையால் வீணாண வற்றை முடிக்கத்தான் வேண்டும். ஏற்படும் என்றல்ல,
செய்யத்தான் வேண்டும். பாப்தாதா முடிவு களை (ரிசல்ட்)
பார்த்தார் அனைவரின் கர்மங்களின் விளைவுகளை சோதனை செய்தார்,
முயற்சி யின் வேகத்தை சோதனை செய்தார், பொக்கிஷங்ளின்
சேமிப்புக்கணக்கை சோதனை செய்தார். ரிசல்டில் என்ன பார்த்தார்?
சேமிப்பு செய்வதற்கான முயற்சியை மிக நன்றாக செய்கின்றார்கள்,
ஆனால் சேமிப்பில் சதவிகிதம் விதவிதமாக இருந்தது. எவ்வளவு
சேமிப்பதற்கு யோசித்தார்களோ சேமித்தார்கள், சேமிப்பாகிறது ஆனால்
சதவிகிதத்தில் இருந்தது, சிறிது சேமிப்பாகிறது, எப்பொழுதும்
என்ற அளவில் (சதா) சேமிப்பாகவில்லை. எவ்வளவு சேமிக்கின்றீர்களோ
அந்தளவு சதா காலத்திற்கு சேமிப்பதில் வித்தியாசம் உள்ளது. ஆகவே
பாப்தாதா இப்பொழுது ஒவ்வொரு விசயத்தின் மீதும் திட சங்கல்பம்
செய்விக்கின்றார். கோபத்தின் மீது செய்வித்தார், மனதாலும் கூட
யாருக்காகவும் குழப்பம் ஆக்கமாட்டோம். ஏன் ஏன் இருக்கக்கூடாது.
ஆனால் வாய் மீது சில சிலர் கட்டுப்பாட்டை நன்றாக செய்தார்கள்,
ஆனால் மனதில் சில சில எழுகின்றது. நீக்குவதற்கான முயற்சியை
செய்து கொண்டிருக்கின்றனர், இருந்தாலும் அதில் கவனம் சென்றது
என்று பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார். இதனால் எனக்கு நஷ்டமே
என்பதைப் புரிந்து கொண்டார்கள். புரிந்ததா! நல்லது.
இப்பொழுது நாலாபுறமும் உள்ள பரமாத்மாவின் அன்பான குழந்தைகள்
யார் சதா பாபாவின் அன்பில் பறந்து கொண்டிருக்கின்றார்களோ,
தீவிர முயற்சியாளர்களோ மேலும் சேவையில் தடை களற்ற உண்மையான
சேவாதாரி ஆக இருக்கின்றனரோ, அப்படிப்பட்ட நாலாபுறமுள்ள குழந்தை
களை பாப்தாதாவும் பார்த்துக் கொணடிருக்கின்றார். கூடக்கூடவே
தூரமாக இருப்பவர்களையும் பார்த்துக் கொண்டிருக்கின்றார் மேலும்
இங்கு சாந்திவனில் கூட அங்காங்கே திரையில் பார்த்துக்
கொணடிருக்கின்றனரோ, கேட்டுக் கொண்டிருக்கின்றனரோ, அந்த அனைத்து
குழந்தைகளுக்கும் பாப்தாதா சதா காலத்திற்கு குஷியாக இருங்கள்
மேலும் குஷியை பகிர்ந்து அளியுங்கள் என்று இந்த வரதானம்
கொடுத்துக் கொண்டிருக்கின்றார். மகிழ்ச்சியான முகம், யார்
உங்கள் முகத்தைப் பார்த்தாலும் அந்த முகத்தைப் பார்த்து
குஷியாகி விடவேண்டும். எப்படிப்பட்டவராக இருந்தாலும் உங்களுடைய
முக மகிழ்ச்சியைப் பார்த்து தானும் மகிழ்ச்சி அடையவேண்டும்,
இந்த வரதானம் நாலாபுறமும் உள்ள குழந்தைகள் மற்றும் யார்
முன்னால் அமர்ந்திருக்கின்றனரோ அனைவருக்கு மான ஒரு வரதானம்
ஆகும். ஒருபோதும் முகம் வாடிப் போகக்கூடாது. ஒருவேளை நீங்கள்
வாடிப் போயிருந்தால் உலகத்தின் நிலை என்னவாகும்? நீங்கள் சதா
மகிழ்ச்சியான முகம் மற்றும் மகிழ்ச்சியான நடத்தையில் இருக்க
வேண்டும் மேலும் இருக்கச் செய்யவேண்டும். அப்படிப்பட்ட அனைத்து
தீவிர புருஷார்த்தம் செய்யும் குழந்தை களுக்கு பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு
நமஸ்காரம்.
ஆசீர்வாதம்:
தன்னுடைய தோற்றத்தின் மூலம் தந்தை மற்றும் ஆசிரியரின்
குணங்களை வெளிப்படுத்தக்கூடிய அனுபவி மூர்த்தி ஆகுக.
தன்னுடைய உண்மையான நிலையில் (பொசிசன்) நிலைக்கவேண்டும் - இதுவே
நினைவு யாத்திரை ஆகும், யாராக, எப்படிப்பட்டவராக இருக்கின்றேன்
- அதில் நிலைத்திருங்கள், இந்த உண்மையான ளசொரூபத்தின் நம்பிக்கை
மற்றும் பலமுறை வெற்றியடைந்த நினைவின் மூலம் சதா போதை என்ற
ஸ்திதியின் கடலில் ஆடிக்கொண்டே இருப்பீர்கள். சுகத்தை வழங்கும்
வள்ளலின் குழந்தைகள் எனும்போது துக்கத்தின் அலை எப்படி
வரமுடியும்? சர்வசக்திவானின் குழந்தைகள் சக்தியற்றவர்களாக
எப்படி இருக்கமுடியும்? இந்த நிலையின் அனுபவங்களில் இருங்கள்
அப்போது உங்களுடைய தோற்றத்தினால் தந்தை மற்றும் ஆசிரியரின்
குணங்கள் தானாகவே வெளிப்படும்.
சுலோகன்:
யாருடைய முகம் மற்றும் நடத்தையில் தெய்வீகத்தன்மை இருக்கின்றதோ
அவர்கள் தான் சத்தியவாதி (உண்மையுள்ளவர்கள்)
அவ்யக்த சமிக்ஞை: சதா ஆடாத, அசையாத, ஏக்ரஸ் ஸ்திதியின் அனுபவம்
செய்யுங்கள்
குழந்தைகளாகிய நீங்கள் தன்னுடைய இந்த புருவமத்தி என்னும்
ஆசனத்தில், அழிவற்ற மூர்த்தியாகி நிலைத்திருந்தீர்கள் எனில்
ஏக்ரஸ் ஸ்திதியின் ஆசனத்தில் மேலும் பாப்தாதாவின் உள்ளம் என்ற
ஆசனத்தில் வீற்றிருக்க முடியும். எப்போது இந்த தெய்வீக குழுவில்
ஏக்ரஸ் ஸ்திதி பிரத்யட்ச ரூபத்தில் சாட்சாத்காரம் ஆகின்றதோ
அப்போது பாப்தாதாவின் வெளிப்பாடு (பிரத்யட்சம்) அருகில் வரும்
இதற்காக ஒவ்வொருவரும் பாப்தாதாவின் சமஸ்காரங்களில் சமமாக
வேண்டியிருக்கும்.