31-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


"இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! நீங்கள் உங்களது நேரத்தை வீணாக்கக் கூடாது. உள்ளுக்குள் ஞான சிந்தனை செய்து கொண்டே இருப்பீர்களானால் தூக்கத்தை வென்றவர்களாக ஆகிவிடுவீர்கள், கொட்டாவி முதலியன வராது.

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் பாபா மீது பலியாவது ஏன்? பலியாவதன் அர்த்தம் என்ன?

பதில்:
பலியாவது என்றால் பாபாவின் நினைவில் மூழ்கி விடுதல். நினைவில் மூழ்கி விடும் போது ஆத்மா எனப்படுகின்ற பேட்டரி சார்ஜ் ஆகின்றது. விகர்மங்கள் வினாசமாகின்றன. வருமானம் சேமிப்பாகிக் கொண்டே போகின்றது.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை அமர்ந்து ஆன்மீகக் குழந்தைகளுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார், இப்போது இங்கே நீங்கள் சரீரத்துடன் கூட அமர்ந்திருக்கிறீர்கள். மரண உலகத்தில் இது கடைசி சரீரம் என்பதை அறிவீர்கள். பிறகு என்னவாகும்? பிறகு பாபாவுடன் கூட சாந்திதாமத்தில் ஒன்று சேர்வோம். இந்த சரீரம் இருக்காது. பிறகு சொர்க்கத்திற்கு நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் வருவீர்கள். அனைவருமே ஒன்றாக வர மாட்டார்கள். இராஜதானி ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது. பாபா எப்படி சாந்தியின், சுகத்தின் கடலாக இருக்கிறாரோ, அதுபோல் குழந்தை களையும் கூட சாந்தியின், சுகத்தின் கடலாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். பிறகு போய் சாந்தி தாமத்தில் அமர வேண்டும். ஆகவே பாபாவை, வீட்டை மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும். இங்கே நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு இந்த மன நிலையில் அமர்கிறீர்களோ, அந்த அளவு பல பிறவிகளுக்கான பாவங்கள் பஸ்மமாகின்றன. இது யோக அக்னி என்று சொல்லப் படுகின்றது. சந்நியாசிகள் சர்வ சக்திவானிடம் யோகம் வைப்பதில்லை. அவர்கள் வசிக்கும் இடமாகிய பிரம்மத்திடம் யோகம் வைக்கின்றனர். அவர்கள் தத்துவ யோகிகள், பிரம்மம் அல்லது தத்துவத்திடம் யோகம் வைப்பவர்கள். இங்கே ஜீவாத்மாக்களின் விளையாட்டு நடைபெறுகின்றது. அங்கே இனிமையான வீட்டில் ஆத்மாக்கள் மட்டுமே இருக்கின்றனர். அந்த இனிய வீட்டிற்குச் செல்வதற்காக முழு உலகமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. சந்நியாசிகளும் சொல்கிறார் கள், நாங்கள் பிரம்மத்தில் ஐக்கியமாகி விட வேண்டும் என்று. நாங்கள் பிரம்மத்தில் போய் வசிக்க (நிவாசம்) வேண்டும் என்று அவர்கள் சொல்வதில்லை. இதையோ குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொண்டு விட்டீர்கள். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு குழப்பமான விஷயங்களைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்! இங்கோ பாபா வந்து இரண்டு சொற்களைச் சொல்லிப் புரிய வைக்கிறார் - எப்படி மந்திரம் ஜெபிக்கிறார்கள் இல்லையா, அதுபோல. சிலர் குருவை நினைவு செய்கிறார்கள். சிலர் யார்-யாரையோ நினைக்கிறார்கள் மாணவர்கள் ஆசிரியரை நினைக்கிறார்கள். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா மற்றும் வீடு மட்டுமே நினைவு இருக்கிறது. பாபாவிடமிருந்து நீங்கள் சாந்திதாம் மற்றும் சுகதாமத்தின் ஆஸ்தியை அடைகிறீர்கள். அது தான் மனதில் நினைவிருக்கிறது. வாயினால் எதுவும் பேசத் தேவையில்லை. புத்தி மூலம் நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள், சாந்திதாமத்திற்குப் பிறகு சுகதாமம். நாம் முதலில் முக்தியில், பிறகு ஜீவன் முக்தியில் செல்வோம். முக்தி-ஜீவன் முக்தி அளிப்பவர் ஒரே ஒரு பாபா. பாபா குழந்தை களுக்கு அடிக்கடி சொல்லிப் புரிய வைக்கிறார் -- நேரத்தை வீணாக்கக் கூடா