31.08.25 காலை முரளி
ஓம் சாந்தி 15.12.2006 பாப்தாதா,
மதுபன்
நினைவு சொரூபம், அனுபவி மூர்த்தியாகி - ஒரு விநாடியில்,
தீவிரவேகத்தின் மூலம் - மாற்றத்தை கொண்டு வந்து கௌரவத்துடன்
தேர்ச்சி பெறுங்கள்
இன்று பாப்தாதா நாலா பக்கங்களிலும் உள்ள குழந்தைகளிடம் - மூன்று
விசேஷ பாக்கியத்தின் ரேகைகள் நெற்றியில் ஜொலிப்பதை (பிரகாசிப்பதை)
பார்த்துக் கொண்டு இருக்கின்றார். எல்லோருடைய நெற்றியும்
பாக்கியத்தின் ரேகைகளினால் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றது.
ஒன்று - பரமாத்ம பாலனை (வளர்ப்பு) என்ற பாக்கியத்தின் ரேகை.
இரண்டாவது - உயர்ந்த ஆசிரியர் மூலம் படிப்பு என்ற பாக்கியத்தின்
ரேகை. மூன்றாவது - சத்குரு மூலம் ஸ்ரீமத் என்ற பாக்கியத்தின்
ரேகை. அவ்வாறு உங்களின் பாக்கியமோ அளவற்றதாக இருக்கின்றது,
இருந்தாலும் கூட இன்று விசேஷமாக இந்த மூன்று ரேகைகளை
பார்த்துக்கொண்டு இருக்கின்றார். நீங்களும் கூட தங்களுடைய
நெற்றியில் ஜொலிக்கக்கூடிய ரேகைகளை அனுபவம் செய்து கொண்டு
இருக்கின்றீர்கள் தானே! அனைத்தையும் விட உயர்ந்த(பாக்கியம்) -
பரமாத்மாவின் அன்பான பாலனை என்ற பாக்கியத்தின் ரேகை. எப்படி
தந்தை உயர்ந்த திலும் உயர்ந்தவராக இருக் கின்றாரோ அப்படி
பரமாத்ம பாலனையும் உயர்ந்ததிலும் உயர்ந்தது. இந்த பாலனை எவ்வளவு
குறைவானவர்களுக்கு கிடைக்கின்றது, ஆனால் நீங்கள் அனைவரும் இந்த
பாலனையைப் பெற தகுதி யானவர்களாக ஆகியுள்ளீர்கள். இந்த பாலனை
முழு கல்பத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரே ஒரு முறை தான்
கிடைக்கின்றது. இப்பொழுது இல்லையென்றால் வேறு எப்பொழுதும்
கிடைக்க முடியாது. இந்த பரமாத்ம பாலனை, பரமாத்ம அன்பு, பரமாத்ப
பிராப்தி (பலன்கள்) கோடியில் ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே
அனுபவம் ஆகுகின்றது. நீங்கள் அனைவரும் அனுபவிகள் தானே! அனுபவம்
இருக்கின்றதா? பாலனையின் அனுபவமும், படிப்பு மற்றும்
ஸ்ரீமத்தின் அனுபவமும் -இருக்கின்றது தானே? அனுபவி மூர்த்தி
தானே? எனவே சதா தங்களுடைய நெற்றியில் இந்த பாக்கியத்தின்
நட்சத்திரம் ஜொலிப்புடன் தென்படுகின்றதா, சதா தென்படுகின்றதா?
அல்லது அவ்வபோது ஜொலிக்கக்கூடிய நட்சத்திரம் மங்கலாகவும் ஆகி
விடுகின்றதா? தளர்வாக (மந்தமாக) ஆக வேண்டாம். ஒருவேளை
ஜொலிக்கக்கூடிய நட்சத்திரம் மங்கலாக ஆகுகின்றது எனில் அதற்கு
காரணம் என்ன? தெரியுமா?
பாப்தாதா பார்த்தார் - காரணம் என்னவென்றால், நினைவு சொரூபமாக
ஆகவில்லை. யோசிக் கின்றீர்கள் - நான் ஆத்மா, ஆனால் யோசனையின்
சொரூபமாக ஆகுகின்றீர்கள், நினைவு சொரூபம் குறைவாக
ஆகுகின்றீர்கள். எது வரை சதா நினைவு சொரூபம் ஆகவில்லையோ அது வரை
சக்தி நிறைந்த நிலை (தங்களிடத்தில்) வர முடியாது. நினைவு தான்
சக்தியை கொடுக்கின்றது. நினைவு சொரூபம் தான் சக்தி சொரூபம்,
அதனால் தான் பாக்கியத்தின் நட்சத்திரம் குறைவாக ஜொலிக் கின்றது.
தன்னைத் தானே கேளுங்கள் - அதிகமான நேரம் யோசிக்கும் சொரூபம்
ஆகுகின்றேனா அல்லது நினைவு சொரூபம் ஆகுகின்றேனா? யோசிக்கும்
சுவரூபம் ஆகுவதனால், மிக நன்றாக யோசிக்கின்றீர்கள் அதாவது -
நான் இதுவாக இருக்கின்றேன், நான் இதுவாக இருக்கின்றேன், நான்
இதுவாக இருக்கின்றேன்..... (என்று எண்ணுகிறீர்கள்) ஆனால் நினைவு
சொரூபமாக ஆகாத காரணத்தினால் நல்லதை யோசித்தாலும் கூட வீணான
எண்ணங்கள், சாதாரண எண்ணங்கள் கலந்து விடுகின்றது. உண்மையில்
பார்க்கப்போனால் - உங்களுடைய அனாதி சொரூபம் என்பது சக்தி
சொரூபம் ஆகும் (அனாதி-பரந்தாமத்தில் இருந்த காலகட்டம்),
யோசிக்கக் கூடிய சொரூபம் அல்ல. மேலும் ஆதியிலும் (பூமியின்
ஆரம்ப கால கட்டத்திலும்) கூட இந்த நேரத்தினுடைய நினைவு
சொரூபத்திற்கான பலன் கிடைக்கின்றது. எனவே அனாதி மற்றும் ஆதி
சொரூபம் - நினைவு சொரூபம் ஆகும் மேலும் இந்த கடைசி நேரத்தில்
சங்கமத்தின் நேரத்தில் கூட நினைவு சொரூபமாக ஆகுகின்றீர்கள்.
எனவே ஆதி, அனாதி மற்றும் அந்திமம் என்ற மூன்று காலங்களிலும்
நினைவு சொரூபமாக இருக்கின்றீர்கள். யோசிக்கும் சொரூபம் அல்ல,
எனவே பாப்தாதா முன்பே கூட கூறினார் - அதாவது நிகழ்கால நேரத்தில்
அனுபவி மூர்த்தி ஆகுவது என்பது உயர்ந்த நிலை யாகும். நான் ஆத்மா
என்று யோசிக்கின்றீர்கள், பரமாத்மாவிடமிருந்து கிடைக்கும்
பிராப்திகளை (பலன்களை) யோசிக்கின்றீர்கள், ஆனால் புரிந்து
கொள்வது மற்றும் அனுபவம் செய்வது - இதில் (இந்த இரண்டிற்கும்)
மிகுந்த வித்தியாசம் இருக்கின்றது. அனுபவி மூர்த்தி ஒருபோதும்
மாயா விடம் ஏமாற்றம் அடைய முடியாது, துக்கத்தின் அனுபவத்தை பெற
முடியாது. இடை இடையில் எந்த ஒரு மாயாவின் விளையாட்டை
பார்க்கின்றீர்களோ அல்லது மாயாவுடன் விளையாட்டை விளையாடிக்
கொண்டு இருக் கின்றீர்களோ - அதற்கான காரணம், அனுபவி
மூர்த்தியாக ஆகுவதில் உள்ள குறைவு. அனுபவத்தின் அதிகாரம் என்பது
அனைத்தையும் விட உயர்ந்தது. எனவே பாப்தாதா பார்த்தார் - அனேக
குழந்தைகள் யோசிப்பவர்களாக இருக்கின்றார்கள் ஆனால் சொரூபத்தின்
அனுபவம் குறைவாக இருக்கின்றது.
இன்றைய உலகத்தில் பெரும்பான்மையான ஆத்மாக்கள் - பார்ப்பது
மற்றும் கேட்பதில் களைப் படைந்து விட்டார்கள் ஆனால் அனுபவத்தின்
மூலம் பலனடைய விரும்புகின்றார்கள். எனவே அனுபவத்தை
செய்வியுங்கள், அனுபவி மட்டுமே அதை (மற்றவர்களுக்கு) செய்விக்க
முடியும். மேலும் அனுபவி ஆத்மா சதா முன்னேறிக் கொண்டே
இருப்பார்கள், பறந்து கொண்டே இருப்பார் கள் ஏனெனில் அனுபவி
ஆத்மாவிடம் - ஊக்கம், உற்சாகம் என்பது சதா வெளிப்பாட்டு
ரூபத்தில் இருக்கும். எனவே சோதனை செய்யுங்கள், பாயின்ட்-னுடைய
(பாபா சொல்லக்கூடிய விஷயங் களின்) அனுபவி மூர்த்தியாக ஆகி
இருக்கின்றேனா? அனுபவத்தின் அதிகாரம் உங்களின் ஒவ்வொரு
செயலிலும் தென்படுகின்றதா? ஒவ்வொரு சொல், ஒவ்வொரு எண்ணம் –
அனுபவத் தின் அதிகாரத்தின் அடிப்படையில் இருக்கின்றதா அல்லது
வெறும் புரிந்து கொண்டதன் அடிப் படையில் இருக்கின்றதா? ஒன்று
புரிந்து கொள்வது, இரண்டாவது அனுபவம் செய்வது. (ஒவ்வொரு
பாடத்திலும் அனுபவி ஆகுவது-ஞானம், யோகம், தாரணை, சேவை)
ஞானத்தினுடைய விஷயங்களை வர்ணனை செய்வது - வெளி உலகத்தில் உள்ள
பேச்சாளர்கள் கூட நிறைய பேசுகின்றார்கள். ஆனால் ஒவ்வொரு
விஷயத்தின் (பாயின்டி-ன்) அனுபவி சொரூபம் ஆகுவது என்பது தான்
ஞானம் நிறைந்த ஆத்மா ஆகுவதாகும். யோகா செய்விப்பவர்கள் அநேகர்
இருக் கின்றார்கள், யோகத்தில் அமருபவர்கள் அநேகர்
இருக்கின்றார்க்ள் ஆனால் யோகத்தின் அனுபவம் அதாவது சக்தி
சொரூபம் ஆகுவது என்பது வேறு. சக்தி சுவரூபத்தில் இருக்கின்றோம்
என்பதை எப்படி கண்டறிவது - எந்த நேரத்தில் எந்த சக்தி அவசியமோ,
அந்த நேரத்தில் அந்த சக்திக்கு அழைப்பு விடுத்து தடையற்ற
சொரூபமாக ஆகுவது. ஒருவேளை ஏதேனும் ஒரு சக்தியின் குறைவு
இருக்கின்றது, வர்ணனை செய்கின்றோம் ஆனால் அதன் சொரூபமாக
ஆகவில்லை என்றால் சரியான நேரத்தில் ஏமாற்றம் ஏற்பட முடியும்.
சகிப்புத்தன்மையின் சக்தி வேண்டும் என்ற இடத்தில் நீங்கள்
எதிர்கொள்ளும் சக்தியை பயன்படுத்தினீர்கள் என்றால் - யோகம்
நிறைந்த அனுபவி சொரூபம் என்று அழைக்கப்பட மாட்டீர்கள்.
நான்கு பாடங்களிலும் நினைவு சொரூபம் அல்லது அனுபவி சொரூபத்தின்
அடையாளம் என்ன வாக இருக்கும்? (1) ஸ்திதியில் (மனோ நிலையில்) -
நான் கருவி என்று கருதுதல், (2) விருத்தியில் (உள்ளுணர்வில்) -
சதா சுபமான, ஆத்மீகமான மேலும் சுயநலமற்ற எண்ணங்களை சிந்தித்தல்.
(3) வாயுமண்டலத்தில் மற்றும் சம்மந்தம், தொடர்பில் - சதா
பணிவான நிலை, (4) பேச்சில் - சதா தூய்மையான வார்த்தைகள். இந்த
விசேஷங்கள், அனுபவி மூர்த்தியிடம் ஒவ்வொரு சமயமும் இயற்கையான
சுபாவமாக இருக்கும் (நேச்சுரல் நேச்சர்). இப்பொழுது அநேக
குழந்தைகள் அவ்வ போது சொல்கின்றார்கள் அதாவது நாங்கள்
விரும்பவில்லை - இவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆனால் என்னுடைய
பழைய சுபாவம் அப்படி இருக்கின்றது. இயற்கை தன்னுடைய காரியத்தை
இயற்கையாகவே (தானாகவே) செய்கின்றது, யோசிக்க வேண்டியதில்லை,
ஆனால் இயற்கை தன் காரியத்ததை இயற்கையாக செய்கின்றது. எனவே
உங்களை நீங்கள் சோதனை செய்யுங்கள் - என்னுடைய இயற்கையான சுபாவம்
என்ன? ஒருவேளை எந்தவொரு பழைய சுபாவம் அம்ச (இம்மி) அளவில்
இருந்தால் கூட, ஒவ்வொரு சமயமும் அது வெளியே வந்து, வந்து பக்கா
சன்ஸ்காரமாக ஆகிவிடுகின்றது. அந்த பழைய இயல்பு, பழைய சுபாவம்,
பழைய சன்ஸ்காரத்தை அழிப்பதற்கும் விரும்புகின்றீர்கள் ஆனால் அதை
முடிக்க முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அனைத்து
விஷயங்களிலும் ஞானம் நிறைந்தவராக ஆகி விட்டீர்கள், ஆனால் எதை
நடக்கக் கூடாது என்று விரும்புகின்றீர்களோ, அது நடந்து
விடுகின்றது, அதற்கான காரணம் என்ன? மாற்றம் செய்து கொள்ளும்
சக்தியில் குறைவு. பெரும்பான்மையானவர்களிடம் (பாப்தாதாவிற்கு)
தென்படுவது என்னவென்றால் - மாற்றத்தினுடைய சக்தியை பற்றி
புரிந்துள்ளீர்கள், வர்ணனையும் செய்கின்றீர்கள், ஒருவேளை
மாற்றத்தின் சக்தி என்ற தலைப்பில் - எழுதக் கூறினால் அல்லது
சொற்பொழிவு ஆற்றக் கூறினால், மிகவும் புத்திசாலிகளாகிய நீங்கள்
- மிக நல்ல சொற்பொழிவை செய்ய முடியும், எழுதவும் முடியும்
மேலும் மற்றவர்கள் யாரேனும் வந்தால் - அவர் களுக்கு மிக நல்ல
முறையில் புரிய வைக்கவும் முடியும் - இதில் சிரமம் எதுவும்
இல்லை, மாற்றம் அடைந்து விடுங்கள் (இவ்வாறு மற்றவர்களுக்கு
புரிய வைக்கின்றீர்கள்)-உங்களைப் பற்றிய இந்த புரிதல்
பாப்தாதாவிற்கு இருக்கின்றது (அதாவது மற்றவர்களுக்கு புரிய
வைப்பதில் நீங்கள் புத்திசாலி என்று புரிதல்). ஆனால் உங்களிடம்
(தன்னை) மாற்றம் செய்வதற்கான சக்தி எவ்வளவு இருக்கின்றது!
நிகழ்கால நேரத்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்ட நீங்கள் -
மாற்றம் செய்வதில் நேரத்தை ஈடுபடுத்தக் கூடாது. விநாடியில்
மாற்றம் செய்வதற்கான சக்தி காரியத்தில் வர வேண்டும் ஏனென்றால்
எப்பொழுது இது நடக்கக் கூடாது என்று ஒன்றை புரிந்துள்ளீர்கள்,
புரிந்து கொண்ட பிறகும் கூட அதை மாற்றம் செய்ய முடியவில்லை
எனில் அதற்கான காரணம் என்ன? யோசிக்கின்றீர்கள் ஆனால் சொரூபமாக
(அதுவாகவே) ஆகவில்லை. முழு நாளில் - யோசிக்கும் சொரூபமாக அதிக
நேரம் ஆகுகின்றீர்கள் (ஆனால்) நினைவின் மூலமாக சக்தி சொரூபமாக
ஆகுவதில் பெரும்பான்மையோரிடம் குறை இருக்கின்றது.
இந்த நேரம் - தீவிர வேகத்திற்கான நேரம், தீவிர புருஷார்த்தம்
செய்வதற்கான நேரம், சாதாரண புருஷார்த்தம் செய்வதற்கான நேரம்
அல்ல. விநாடியில் மாற்றம் செய்வதன் அர்த்தம் - நினைவு
சொரூபத்தின் மூலமாக ஒரு நொடியில் நிர்விகல்பம் (விகாரமான
எண்ணங்களற்ற நிலை) ஆக வேண்டும், வீணான எண்ணங்களிடமிருந்து
விடைபெற்ற நிலை வேண்டும். ஏன்? சமாப்திக்கான (முடிவுக்கான)
நேரத்தை நெருக்கத்தில் கொண்டுவர (நீங்களே) நிமித்தமானவர்கள்.
எனவே இப்போதைய நேரத்தின் மகத்துவத்தின் படி - ஒவ்வொரு அடியிலும்
பல மடங்கு நிறைந்துள்ளது -எனவே முன்னேறிச் செல்ல வேண்டும் என்று
புத்தியிலும் கூட வைத்திருக்கின்றீர்கள் ஆனால் இழப்பதையும் கூட
புத்தியில் வையுங்கள். ஒருவேளை ஒரு அடியில் பல மடங்கு உருவாகும்
என்றால், ஒரு அடியில் பல மடங்கு இழக்கவும் முடியும் இல்லையா?
எனவே இப்பொழுது நிமிடத்திற்கான விஷயம் கூட முடிந்து விட்டது,
மற்றவர்களுக்காக ஒரு நிமிடம் (மினிட்) அமைதியில் இருங்கள் என்று
சொல்கின்றீர்கள் ஆனால் தங்களுக்கு ஒரு வினாடி(செகன்ட்)க்கான
விஷயமாக (மாற்றம் செய்வது) இருக்க வேண்டும். ஆம் அல்லது இல்லை
என்று யோசிப்பதில் எவ்வளவு நேரம் ஆகுகின்றது? ஒரு வினாடி. எனவே
மாற்றத்திற்கான சக்தியில் இத்தனை வேகம் வேண்டும் (அதாவது
வினாடியில் மாற்றம்).
சரி எது, தவறு எது என்று புரிகின்றது என்றால், தவறு என்பதற்கு
முற்றுப்புள்ளி (பின்தி) வையுங்கள் மேலும் எது சரியோ அதை
உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். இப்பொழுது பின்தியின்
மகத்துவத்தை காரியத்தில் ஈடுபடுத்துங்கள். மூன்று பிந்திகளை (புள்ளிகளை-ஆத்மா,
பரமாத்மா, டிராமா) தெரிந்துள்ளீர்கள் தானே! ஆனால் பிந்தியை
சரியான நேரத்தில் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். எப்படி
அறிவியலைச் சார்ந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் தீவிரவேகத்தில்
சென்று கொண்டு இருக்கின்றார்கள் மேலும் மாற்றத்திற்கான
சக்தியையும் கூட அதிகமாக காரியத்தில் ஈடுபடுத்தி வருகின்றார்கள்.
எனவே அமைதியின் சக்தியை உடையவர்கள் இப்பொழுது லட்சியம்
வையுங்கள் - அதாவது, ஒருவேளை மாற்றம் செய்ய வேண்டும், நீங்கள்
ஞானம் நிறைந்தவர்கள் என்றால் - இப்பொழுது ஒரு வினாடியின்
வேகத்தில் சக்திசாலியாக ஆக வேண்டும். செய்து கொண்டு
இருக்கின்றேன், ஆகி விடும், செய்து விடுவேன் என்பது கூடாது.
செய்ய முடியுமா அல்லது கடினமா? ஏனெனில் கடைசி நேரத்தில் ஓர்
வினாடிக்கான(செகன்ட்) சோதனைத் தாள் வர வேண்டி இருக்கின்றது,
நிமிடத்திற்கானது(மினிட்) அல்ல. எனவே வினாடிக் கான பயிற்சி (முற்றுப்புள்ளி
வைப்பதில்) நீண்ட காலம் இருத்தல் வேண்டும் அப்பொழுதே வினாடியில்
கௌரவத்துடன் தேர்ச்சி பெற முடியும் இல்லையா. பரமாத்மாவின்
மாணவர்களாக இருக்கின்றீர்கள், பரமாத்மாவின் படிப்பை படித்துக்
கொண்டு இருக்கின்றீர்கள், அப்படியெனில் கௌரவத்துடன் தானே
தேர்ச்சி பெற வேண்டும். பாஸ் மார்க்ஸ் வாங்கினால் என்ன ஆகுவது!
கௌரவத்துடன் தேர்ச்சி பெற வேண்டும். என்ன லட்சியம்
வைத்திருக்கின்றீர்கள்? யார் கௌரவத்துடன் தேர்ச்சி பெற வேண்டும்
என்று புரிந்துள்ளீர்கள், அவர்கள் கைகளை உயர்த்துங்கள்,
கௌரவத்துடன் தேர்ச்சி பெறுவீர்களா? கௌரவம் என்ற வார்த்தையை
கோடிடுங்கள். நல்லது. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்.
நிமிடத்திற்கான(மினிட்) இயந்திரம் என்பது பொதுவானது, இப்பொழுது
வினாடியில் (செகன்ட்-ல்) முடிக்க வேண்டிய காரியம் ஆகும்.
பஞ்சாபை சேர்ந்தவர்களே (பாப்தாதா பஞ்சாபிலிருந்து வந்த
குழந்தைகளை சந்திக்கின்றார்), இது ஓர் வினாடிக்கான விஷயம்.
இதில் நம்பர் 1 யார் வருவீர்கள்? பஞ்சாப். இது என்ன பெரிய
விஷயம் என்று எவ்வளவு ஜொலிப்புடன் சொல்கின்றீர்கள், மிகவும்
நன்றாக சொல்கின்றீர்கள், ஜொலிப்புடன் சொல்கின்றீர்கள், பாப்தாதா
இதைக் கேட்கும் பொழுது மிகவும் குஷி அடைகின்றார், குழந்தைகள்
சொல்கின்றார்கள் (பாப்தாதாவிடம்) - இது என்ன பெரிய விஷயம்,
பாப்தாதா துணையாக இருக்கின்றார் என்கின்றார்கள்.. அதிகாரம்
உடையவர் துணையாக இருக்கின்றார் எனில், இப்பொழுது என்ன செய்ய
வேண்டும்? இப்பொழுது தீவிரமாக ஆகித்தான் தீர வேண்டும். சேவை
என்னவோ செய்து கொண்டு தான் இருக்கின்றீர்கள், சேவை இல்லாமல்
வேறு என்ன தான் செய்வீர்கள்? வெறுமென அமர்ந்திருப்பீர்களா என்ன?
சேவை என்பது பிராமண ஆத்மாக்களின் தர்மம்-ஆக இருக்கின்றது,
கர்மம்-ஆக (செயலாக) இருக்கின்றது. ஆனால் இப்பொழுது சேவையின்
கூட கூடவே, சக்தி சுவரூபம் ஆக வேண்டும், எவ்வளவு சேவைக்கான
ஊக்கம் உற்சாகம் காண்பிக் கின்றீர்கள், (அதை பார்த்து)பாப்தாதா
குஷி அடைகின்றார், வாழ்த்துக்களையும் கொடுக்கின்றார். ஆனால்
எப்படி சேவைக்கான கிரீடம் கிடைத்திருக்கின்றது இல்லையா! (பாப்தாதாவிற்கு
முன்னால் நடை பயணம்(பாத யாத்திரை) செய்து விட்டு வந்த இளைஞர்கள்
கிரீடம் அணிந்து அமர்ந்திருக்கின்றார்கள்). கிரீடம்
அணிந்துள்ளீர்கள், பாருங்கள்-எவ்வளவு அழகாக இருக்கின்றது.
இப்பொழுது நினைவு சுவரூபம் ஆகுவதற்கான கிரீடத்தை அணிந்து
காட்டுங்கள். இளைஞர்களின் கூட்டம் அல்லவா! அப்படி யெனில் என்ன
அதிசயத்தை செய்து காட்டுவீர்கள்? சேவையிலும் நம்பர் 1 மேலும்
சக்தி சொரூபத்திலும் நம்பர் 1. செய்தியை (இறை செய்தியை)
கொடுப்பதும் கூட பிராமண வாழ்க்கையின் தர்மம் மற்றும் கர்மம்-ஆக
இருக்கின்றது ஆனால் பாப்தாதா செய்கை கொடுத்துக் கொண்டு
இருக்கின்றார் அதாவது மாற்றத்திற்கான இயந்திரத்தை தீவிர
மாக்குங்கள். இல்லையெனில் கௌரவத்துடன் தேர்ச்சி பெறுவது என்பது
கடினமாகிவிடும். நீண்ட கால பயிற்சி தேவை. நினைத்தேன்,
முடித்தேன் (என்ற பயிற்சி). வெறும் யோசிப்பவர்களாக ஆகாதீர்கள்,
சக்திசாலியான நினைவின் மூலம் சக்திசாலி சுவரூபம் ஆகுங்கள்.
வீணானதை தீவிர வேகத்தில் முடித்துக் கட்டுங்கள். வீணான எண்ணம்,
வீணான பேச்சு, வீணான செயல், வீணான சமயம் மற்றும் சம்மந்தம்,
தொடர்பில் கூட வீணான வழி முறைகள் - இவை அனைத்தையும் முடித்து
விடுங்கள். எப்பொழுது பிராமண ஆத்மாக்கள் தீவிர வேகத்தில் -
தன்னுடைய வீணானவற்றினை முடித்துக் கட்டுகின்றீர்களோ அப்பொழுது
ஆத்மாக்களின் ஆசிர்வாதம் மேலும் தன்னுடைய புண்ணியத்தின் கணக்கை
தீவிர வேகத்தில் சேமிப்பு செய்வீர்கள்.
பாப்தாதா முன்பே கூட சொல்லியிருந்தார் அதாவது பாப்தாதா மூன்று
விதமான கணக்குகளை சோதனை செய்கின்றார். புருஷார்த்தத்தின்
வேகத்தினுடைய கணக்கு, ஆசிர்வாதங்களின் கணக்கு, புண்ணியத்தின்
கணக்கு ஆனால் பெரும்பான்மையினருடைய கணக்கு இப்பொழுது குறைவாக
இருக்கின்றது ஏனெனில் பாப்தாதா இன்று இந்த சுலோகனை நினைவு
படுத்திக் கொண்டு இருக்கின்றார் அதாவது இப்பொழுது தீவிரம்
ஆகுங்கள், தீவிர புருஷார்த்தி ஆகுங்கள். தீவிர வேகத்தில்
முடித்துக் கட்டுபவர்கள் ஆகுங்கள். தீவிர வேகத்தில் - மனதின்
மூலமாக வாயு மண்டலத்தை மாற்றம் செய்பவர்கள் ஆகுங்கள்.
பாப்தாதா ஒரு விஷயத்தில் எல்லா குழந்தைகளிடத்திலும் குஷி கூட
அடைகின்றார். எந்த விஷயத்தில்? எல்லோருக்கும் தந்தையிடத்தில்
ஆழமான அன்பு இருக்கின்றது, இதற்கான வாழ்த்துக்கள். ஆனால் என்ன
செய்ய வேண்டும் என்று சொல்லட்டுமா! இந்த சீசன் (பாப்தாதாவை
மதுபனில் சந்திக்கும் சீசன்) முடியும் வரை, இப்பொழுதோ நேரம்
இருக்கின்றது (சீசன் முடிவதற்கு), இந்த சீசன் முடிவதற்குள் (டிசம்பரில்
சொல்லப்பட்ட முரளி, மார்ச் மாதம் வரை - சீசன் முடிவதற் கான
நேரம்) தீவிர வேகத்தின் நெருப்பை ஏதாவது (எப்படியேனும்)
காட்டுங்கள். பிடித்திருக் கின்றதா (வீட்டுப்பாடம்)?
பிடித்திருக்கின்றதா? யார் - லட்சியம் மேலும் லட்சணம்
இரண்டையுமே நினைவில் வைப்பேன் என்று புரிந்துள்ளீர்கள் அவர்கள்
கைகளை உயர்த்துங்கள் (அனைவரும் கைகளை உயர்த்துகின்றார்கள்).
இரட்டை வெளிநாட்டினர், ஆசிரியர்கள் மேலும் இளைஞர்களும் கூட
நினைவில் வைப்பீர்கள் மற்றும் முதல் வரிசையில்
அமர்ந்துள்ளவர்களும் நினைவில் வைப்பீர்கள்! அப்படியெனில்
முன்கூட்டியே பல மடங்கு வாழ்த்துக்கள். நல்லது.
இப்பொழுது (இந்த நேரம்) அப்பியாசம் செய்யுங்கள் - ஒரு நொடியில்
நிர்விகல்ப, நிர்வியர்த்த சங்கல்பம் (விகாரமற்ற, வீணானவை
அல்லாத சங்கல்பம்) உடையவராகி, ஒரு பாபாவை தவிர எனக்கு வேறு
யாரும் இல்லை, இந்த ஒரே ஒரு சங்கல்பத்தில் மனதை
ஒருநிலைப்படுத்தி அமர முடியுமா! வேறு எந்த சங்கல்பமும் இருக்கக்
கூடாது. ஒரே ஒரு சங்கல்பத்தினுடைய ஒருநிலைப்பாட்டின்
சக்தியினுடைய அனுபவத்தில் அமருங்கள். நேரம் எடுத்துக்கொள்ளக்
கூடாது. ஒரு விநாடியில் செய்ய வேண்டும். நல்லது.
நாலா பக்கங்களிலும் உள்ள குழந்தைகள் யாரெல்லாம் விசேஷ அன்பு
நினைவுகள் அனுப்பியிருக் கின்றீர்களோ, அந்த ஒவ்வொரு
குழந்தைகளுக்கும் அவர்கள் பெயரை நினைவு கூர்ந்து, அன்பு
நினைவுகள் மற்றும் உள்ளத்தின் ஆசிர்வாதங்களை ஏற்றுக்
கொள்ளுங்கள். பாப்தாதா பார்த்துக் கொண்டு இருக்கின்றார் -
அனைவரின் உள்ளத்திலும் இந்த எண்ணம் வருகின்றது, அதாவது (பாப்தாதா)
என்னையும் நினைவு செய்ய வேண்டும், என்னையும் நினைவு செய்ய
வேண்டும் என்று. ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுது
சங்கல்பம் செய்கின்றீர்களோ, அப்பொழுதே அந்த சங்கல்பம்
பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து விடுகின்றது. எனவே அனைத்து
குழந்தை களுக்கும் - ஒவ்வொரு வரின் பெயரையும் நினைவு கூர்ந்து
மேலும் விசேஷமான, முழுமையான அன்பு நினைவுகளை கொடுத்துக் கொண்டு
இருக்கின்றார்.
எனவே, சதா நினைவு சுவரூபமாக, சக்தி சுவரூபமாக, அனுபவ சுவரூபமாக
இருக்கும் அனைத்து சிரேஷ்ட குழந்தைளுக்கு, சதா நினைப்பதை உடனே
முடிக்கும்(குழந்தைகளுக்கு), உடன் தானத்திற்கு எப்படி மகத்துவம்
இருக்கின்றதோ அப்படி உடன் மாற்றத்திற்கும் கூட மகத்துவம்
இருக்கின்றது. எனவே உடனேயே மாற்றம் செய்யக்கூடிய உலகத்தை
மாற்றம் செய்யும் குழந்தைகளுக்கு, சதா பரமாத்மாவின் வளர்ப்பு,
பரமாத்மாவின் அன்பு, பரமாத்மா வின் படிப்பு மேலும் பரமாத்மாவின்
ஸ்ரீமத்தை ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபடுத்தக் கூடிய மகாவீர்
குழந்தைகளுக்கு, சதா தைரியம் மற்றும் ஒருநிலைப்பாடு, ஒற்றுமை
மூலமாக நம்பர் 1 தீவிர புருஷார்த்தம் செய்யக் கூடிய
குழந்தைகளுக்கு பாப்தாதாவின் உள்ளத்தின் அன்பு நினைவுகள் மேலும்
உள்ளத்தின் ஆசிர்வாதங்கள் மற்றும் நமஸ்தே.
தாதிகளுடன் உரையாடல்:
அனைவரும் நன்றாக தனக்கான நடிப்பை நடித்து வருகின்றீர்கள்.
பாப்தாதா ஒவ்வொருவரின் நடிப்பையும் பார்த்து குஷி அடைகின்றார்.
சின்னஞ் சிறியவர்கள் கூட நன்றாக நடிப்பை நடித்து வருகின்றார்கள்.
நாம் சிறியவர்கள் (தானே) என்று புரிந்து கொள்ளா தீர்கள்.
பவித்ரமான சிறியவர்கள் (குழந்தைகள்) அல்லாவுக்கு சமமானவர்கள்.
சக்திகளுக் கான நடிப்பு வேறு, பாண்டவர்களுக்கான நடிப்பு வேறு.
பாண்டவர்கள் இல்லை என்றாலும் காரியம் நடந்தேறாது, சக்திகள்
இல்லை என்றாலும் காரியம் நடந்தேறாது, எனவே பாரதத்தில்
சதுர்புஜத்தின் (லட்சுமி நாராயணரின் இணைந்த சொரூபத்தின்)
நினைவுச் சின்னம் இருக்கின்றது. வேறு எந்த தர்மத்திலும்
சதுர்புஜம் காட்டப்படுவது இல்லை ஏனெனில் பாரதத்தின் நினைவு
சின்னத்தில் சதுர்புஜதத்திற்கான மகத்துவம் இருக்கின்றது. எனவே
இருவரும் (தாதிகள்) நன்றாக நடிப்பை நடித்து வருகின்றீர்கள்
ஆனால் இப்பொழுது விரைவு படுத்த வேண்டும், அவ்வளவு தான். அவ்வ
போது சற்று தளர்வாகி விடுகின்றது. இப்பொழுது தளர்வாக
இருப்பதற்கான நேரம் அல்ல. விஷயங்கள் வெவ்வேறு ரூபத்தில்
வருகின்றது ஆனால் நாம் விஷயங்களின் ரகசியங்களை புரிந்து
ராஜயுக்த் (இரகசியம் அறிந்தவராக), யோகயுக்த் (நினைவு
நிறைந்தவராக), சினேகயுக்த் (அன்பு நிறைந்தவராக), சகயோகயுக்த் (முழு
ஓத்துழைப்பு கொடுப்பவராக) ஆகி செல்ல வேண்டும். நல்லது தானே! (தாதிஜியிடம்)
மிகவும் நன்றாக உள்ளது தானே? பாருங்கள் எவ்வளவு பேர்
வந்திருக்கின்றார்கள்? ஏன் வந்திருக்கின்றார்கள்? இவர்கள்
அனைவரும் ஏன் வந்திருக்கின்றார்கள்? தங்களுடன் சந்திப்பு
செய்வதற்காக வந்துள்ளார்கள். பாப்தாதாவுடனும் சந்திப்பு
செய்வதற்காக வந்துள்ளார்கள் ஆனால் துணையாக தாதிகள்
இல்லையென்றால் மஜா வருவதில்லை என்று கூறுகின்றார்கள். மேலும்
தாங்கள் அனைவரும் (குழந்தைகள்) இல்லை என்றாலும் மஜா வருவதில்லை.
ஆசீர்வாதம்:
நினைவினுடைய சுவிட்ச் மூலமாக சுவ கல்யாண் (சுயத்திற்கு நன்மை
செய்யக் கூடிய) மற்றும் அனைவருக்கும் கல்யாண் (நன்மை செய்யக்
கூடிய) செய்யக் கூடிய சித்தி சொரூபம் ஆகுக.
ஸ்திதிக்கான (மனோநிலைக்கான) ஆதாரம் ஸ்மிருத்தி (நினைவு).
நினைவில் - நான் தந்தை யுடையவன் மேலும் தந்தை என்னுடையவர் என்ற
சக்திசாலியான நினைவு இருக்கட்டும். இந்த நினைவின் மூலம்
சுயத்தினுடைய மனோநிலை சக்திசாலியாக இருக்கும் மேலும் மற்றவர்
களையும் சக்திசாலியாக ஆக்குவீர்கள். எப்படி சுவிட்ச்-ஐ தட்டும்
போது வெளிச்சம் ஏற்படுகின்றது அப்படி இந்த நினைவும் கூட ஓர்
சுவிட்ச் போன்றதாகும். சதா நினைவு என்ற சுவிட்ச் மீது கவனம்
வையுங்கள் அப்பொழுது தனக்கான மற்றும் அனைவருக்குமான நன்மையை
செய்து கொண்டே இருப்பீர்கள். புதிய ஜென்மம் ஏற்படுகின்றது எனில்
நினைவுகளும் புதியதாக இருக்கட்டும். பழைய அனைத்து நினைவுகளும்
முடிவுக்கு வரட்டும்- இந்த விதியின்(முறையின்) மூலமாக சித்தி
சுவரூபத்தின் வரதானம் பலனாக கிடைக்கும்.
சுலோகன்:
அதீந்திரிய சுகத்தினுடைய அனுபவம் செய்வதற்காக தன்னுடைய சாந்த
சொரூபத்தின் நிலையில் நிலைத்து இருங்கள்.
அவ்யக்த சமிக்கை: சகஜயோகி ஆக வேண்டும் என்றால் பரமாத்ம அன்பின்
அனுபவி ஆகுங்கள்
பாப்தாதா - அன்பு என்னும் பந்தனத்தில் கட்டுப்பட்டு
இருக்கின்றார். விடுபட நினைத்தாலும், விடுபட முடியாது, எனவே
பக்தியில் கூட பந்தனத்தின் சித்திரத்தை காட்டியுள்ளார்கள். நடை
முறையில், அவ்யக்தம் ஆனாலும் கூட- அன்பென்னும் பந்தனத்தில்
கட்டுப்பட்டு இருக்க நேரிடு கின்றது. வியக்தத்திலிருந்து (கண்களுக்கு
புலப்படுபவைகளிடமிருந்து) விடுபட்டு விட்டாலும் கூட அன்பின்
பந்தனத்திலிருந்து விடுபட முடியவில்லை. இந்த அன்பினுடைய கயிறு
மிகவும் வலிமை நிறைந்ததாக இருக்கின்றது. அப்படிப்பட்ட அன்பின்
சொரூபமாகி (அத்தனை மகிமை உடைய அந்த அன்பின் சொரூபமாகி), ஒருவர்
மற்றவரை அன்பு என்னும் கயிறில் கட்டி சமீபமான சம்மந்தம் மற்றும்
தன்னுடையவர் என்ற அனுபவத்தை செய்வியுங்கள்.