01-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஆத்மாக்களாகிய
உங்களது சுய தர்மம் அமைதியாகும், உங்களது தேசம் சாந்திதாமம்
ஆகும், ஆத்மாக்களாகிய நீங்கள் சாந்த சொரூபமானவர்கள். ஆகையால்
நீங்கள் அமைதியை யாசிக்க முடியாது.
கேள்வி:
உங்களது யோக பலம் என்ன அதிசயம்
செய்கிறது?
பதில்:
யோக பலத்தின் மூலம் நீங்கள் முழு
உலகையும் தூய்மையாக ஆக்குகிறீர்கள். நீங்கள் மிகக் குறைந்த
குழந்தைகள் யோக பலத்தின் மூலம் இந்த முழு மலையையும் அகற்றி
விட்டு தங்க மலையை ஸ்தாபனை செய்கிறீர்கள். 5 தத்துவங்களும் சதோ
பிரதானம் ஆகிவிடுகிறது, நல்ல பழங்களை கொடுக்கும். சதோ பிரதான
சரீரத்தின் மூலம் இந்த சரீரமும் சதோ பிரதானமாக இருக்கும்.
அங்கிருக்கும் பழங்கள் பெரியதாகவும், மிக மிக சுவையானதாகவும்
இருக்கும்..
ஓம் சாந்தி.
எப்பொழுது ஓம்சாந்தி என்று கூறப்படுகிறதோ அப்பொழுது மிகுந்த
குஷி ஏற்பட வேண்டும். ஏனெனில் உண்மையில் ஆத்மாவானது சாந்தி
சொரூபமானது ஆகும், அதன் சுய தர்மமே அமைதியாகும். இதைப் பற்றி
சந்நியாசிகளும் கூறுகின்றனர் - அமைதி என்ற மாலை உங்களது
கழுத்தில் இருக்கிறது. அமைதியை எங்கு வெளியில் தேடுகிறீர்கள்?
ஆத்மா இயற்கை யாகவே சாந்தி சொரூமானது. இந்த சரீரத்தில் நடிப்பு
நடிக்க வரவேண்டியிருக்கிறது. ஆத்மா சதா சாந்தமாக இருந்தால்
பிறகு காரியங்கள் எப்படி செய்யும்? காரியங்கள் செய்தே ஆக
வேண்டும். ஆம், சாந்திதாமத்தில் ஆத்மாக்கள் சாந்தியாக இருக்கும்.
அங்கு சரீரம் கிடையாது, ஆனால் இதை எந்த சந்நியாசி போன்றவர்களும்
புரிந்து கொள்வது கிடையாது - நான் ஆத்மா, சாந்திதாமத்தில்
வசிக்கக் கூடியவன். குழந்தைகளுக்கு புரிய வைக்கப்பட்டிருக்கிறது
- சாந்திதாமம் நமது தேச மாகும், பிறகு நாம் சுகதாமத்திற்கு
வந்து நடிப்பை நடிக்கிறோம், பிறகு இராவண இராஜ்யத்தில் துக்கம்
ஏற்படுகிறது. இது 84 பிறவிகளின் கதையாகும். பகவானின்
மகாவாக்கியம் அர்ஜுனனுக் காக இருக்கிறது அல்லவா! - நீ உனது
ஜென்மங்களைப் பற்றி அறியவில்லை. ஒருவரை மட்டும் ஏன்
கூறுகின்றார்? ஏனெனில் ஒருவருக்குத் தான் உத்திரவாதம்
கொடுக்கலாம். இந்த இராதை கிருஷ்ணருக்கு உத்திரவாதம் இருக்கிறது
அல்லவா! ஆக இவர்களுக்குத் தான் கூறுகின்றார். இதை தந்தையும்
அறிவார், குழந்தைகளும் அறிவீர்கள் - அனைத்து குழந்தைகளும் 84
பிறவிகள் எடுக்கக் கூடியவர்கள் கிடையாது. சிலர் இடையில் வருவர்,
சிலர் கடைசியில் வருவர். இவருடையது நிச்சயிக்கப்பட்டது ஆகும்.
இவருக்குக் கூறுகின்றார்: - ஹே குழந்தையே! ஆக அர்ஜுன்
ஆகிவிடுகிறார் அல்லவா! இரதத்தில் அமர்ந்திருக்கிறார் அல்லவா!
நாம் எவ்வாறு பிறப்பு எடுப்போம்? என்பதை குழந்தைகளும் தானே
புரிந்து கொள்ள முடியும். சேவையே செய்ய வில்லையெனில் சத்யுக
புது உலகில் முத-ல் எப்படி வருவீர்கள்? இவர்களுக்கு அதிஷ்டம்
எங்கு இருக்கிறது? கடைசியில் பிறப்பு எடுக்கின்றவர்களுக்கு
பழைய வீடாக ஆகிக் கொண்டே போகும் அல்லவா! நான் இவருக்காக
கூறுகிறேன், அவருடையது நிச்சயமானது என்று நீங்களும்
கூறுகிறீர்கள். மம்மா, பாபா 84 பிறவிகள் எடுக்கின்றனர் என்பதை
நீங்களும் புரிந்து கொள்ள முடியும். குமார்கா, (பிரகாஷ் மணி
தாதி) ஜனக் (ஜானகி தாதி) போன்ற மகாரதிகளும் 84 பிறவிகள்
எடுக்கின்றனர். யார் சேவை செய்யவில்லையோ அவர்கள் அவசியம் சில
பிறவிகளுக்குப் பின் வருவார்கள். நாம் தோல்வியடைந்து விட்டோம்,
கடைசியில் வருவோம் என்பதைப் புரிந்து கொள்கின்றனர். பள்ளியில்
ஓட்டப் பந்தயத்தில் ஓடி எல்லை வரை சென்று விட்டு பிறகு மீண்டும்
திரும்பி வருவர் அல்லவா! அனைவரும் ஒன்று போல இருக்க முடியாது.
போட்டியில் சிறிதளவு கால் இன்ச் வித்தியாசம் ஏற்பட்டு விடும்
பொழுது முன்னேறி விடுகின்றனர், இதுவும் குதிரைப் பந்தயம் ஆகும்.
அஸ்வம் என்றால் குதிரையாகும். இரதமும் குதிரை என்று
கூறப்படுகிறது. மற்றபடி பிரஜாபிதா தட்சன் யாகம் வளர்த்தார்,
அதில் குதிரைகளை அர்பணித்தார் என்று கூறுவது போன்ற விசயம்
ஏதுமில்லை. பிரஜாபிதா தட்சனும் கிடையாது, எந்த யக்ஞத்தையும்
படைக்க வில்லை. புத்தகங்களில் பக்தி மார்க்கத்தின் எவ்வளவு
கட்டுக் கதைகள் இருக்கின்றன! அதன் பெயரே கதை. பல கதைகளைக்
கேட்கின்றனர். நீங்கள் இதைப் படிக்கிறீர்கள். படிப்பை ஒரு
பொழுதும் கதை என்று கூறுவது கிடையாது. பள்ளியில் படிப்பு
கற்பிக்கப்படுகிறது, இலட்சியம், குறிக்கோள் இருக்கிறது. நமக்கு
இந்த படிப்பின் மூலம் இந்த வேலை கிடைக்கும். ஏதாவது கிடைக்கவே
செய்கிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அதிகம் ஆத்ம
அபிமானிகளாக ஆக வேண்டும். இது தான் உழைப்பாகும். தந்தையை நினைவு
செய்வதன் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். குறிப்பாக
நினைவு செய்ய வேண்டியிருக்கிறது, நான் தான் சிவபாபா வின்
குழந்தையாக ஆகிவிட்டேன் அல்லவா! பிறகு ஏன் நினைவு செய்ய
வேண்டும் என்று இருந்து விடக்கூடாது. தன்னை மாணவன் என்று
உணர்ந்து நினைவு செய்ய வேண்டும். ஆத்மாக் களாகிய நமக்கு சிவபாபா
ஆன்ம கல்வியை கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என்பதையும் மறந்து
விடுகிறீர்கள். சிவபாபா என்ற ஒரே ஒரு ஆசிரியர் தான்
சிருஷ்டியின் முதல், இடை, கடையின் இரகசியத்தைக் கூறுகின்றார்
என்ற நினைவும் இருப்பது கிடையாது. ஒவ்வொரு குழந்தையும் தனது
உள்ளத்தில் கேட்டுக் கொள்ள வேண்டும் - எவ்வளவு நேரம் தந்தையின்
நினைவு நிலைத்திருக்கிறது? அதிக நேரம் வெளிநோக்கு முகத்தில்
செல்லக் கூடாது. இந்த நினைவு தான் முக்கியமானது. பாரதத்தின்
இந்த யோகாவிற்குத் தான் அதிக மகிமை இருக்கிறது. ஆனால் யோகா
கற்பிப்பது யார்? என்பது யாருக்கும் தெரியாது. கீதையில்
கிருஷ்ணரின் பெயர் வைத்து விட்டனர். இப்பொழுது கிருஷ்ணரை நினைவு
செய்வதன் மூலம் ஒரு பாவமும் கூட அழியாது. ஏனெனில் அவர் சரீரதாரி
ஆவார். ஐந்து தத்துவங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதை நினைவு
செய்வது என்பது மண்ணை நினைவு செய்வது போன்றதாகும், 5
தத்துவங்களை நினைவு செய்வதாகும். சிவபாபா அசரீரியாக
இருக்கின்றார். அதனால் தான் அசரீரி ஆகுங்கள், தந்தை யாகிய என்னை
நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார்.
ஹே பதீத பாவனனே! என்று கூறுகிறீர்கள் எனில் அவர் ஒருவர்
ஆகிவிடுகிறார் அல்லவா! கீதையின் பகவான் யார்? என்று யுக்தியாகக்
கேட்க வேண்டும். படைக்கக் கூடிய பகவான் ஒரே ஒருவராகத் தான்
இருக்க முடியும். ஒருவேளை மனிதன் தன்னை பகவான் என்று கூறிக்
கொண்டாலும் நீங்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என்று
ஒருபொழுதும் கூறமாட்டார். அப்படியே நடக்கட்டும் அல்லது ஈஸ்வரன்
சர்வவியாபி என்று தான் கூறுவார். நானும் பகவான் தான், நீங்களும்
பகவான் தான், எங்கு பார்த்தாலும் நீயாகத் தான் தென்படுகின்றாய்.
கல்-லும் நீ தான் என்று கூறி விடுகின்றனர். நீங்கள் என்னுடைய
குழந்தைகள் என்று கூற முடியாது. இவ்வாறு தந்தை தான்
கூறுகின்றார் - ஹே என்னுடைய செல்லமான ஆன்மீகக் குழந்தைகளே!
இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது. முஸ்லீம்களை யாராவது
என்னுடைய செல்லமான குழந்தைகளே! என்று யாராவது கூறினால் அடித்து
விடுவர். இவ்வாறு ஒரே ஒரு பரலௌகீகத் தந்தை மட்டுமே கூற முடியும்.
வேறு யாரும் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானத்தைக்
கொடுக்க முடியாது. நிராகார தந்தையைத் தவிர வேறு யாரும் 84
பிறவியின் இரகசியத்தைப் புரிய வைக்க முடியாது. அவரது உண்மையான
பெயர் சிவன். அவருக்கு மனிதர்கள் எண்ணிலடங்கா பெயர்களை வைத்து
விட்டனர். பல மொழிகள் உள்ளன. ஆக அவரவர்களது மொழியில் பெயர்
வைத்து விடுகின்றனர். மும்பையில் பபூல்நாத் என்று கூறுகின்றனர்,
ஆனால் அவர்கள் பொருள் புரிந்து கொள்வது கிடையாது. முட்களை
மலர்களாக ஆக்கக் கூடியவர் என்பதை நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். பாரதத்தில் சிவபாபாவிற்கு ஆயிரக் கணக்கில்
பெயர்கள் இருக்கின்றன, பொருள் அறிந்து கொள்வது கிடையாது. தந்தை
குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கின்றார். அதிலும் தாய்மார்களை
பாபா அதிகம் முன்னால் வைக்கின்றார். இன்றைய நாட்களில்
பெண்களுக்கு மகிமை இருக்கிறது, ஏனெனில் தந்தை வந்திருக்கின்றார்
அல்லவா! தந்தை தாய்மார்களின் மகிமையை உயர்வாக்குகின்றார்.
நீங்கள் சிவசக்தி சேனைகள், நீங்கள் தான் சிவபாபாவை அறிவீர்கள்.
சத்தியமானவர் ஒரே ஒருவர் ஆவார். சத்தியம் என்ற படகு ஆடும்,
அசையும், ஆனால் மூழ்காது என்று பாடப்பட்டிருக்கிறது. ஆக நீங்கள்
சத்தியமானவர்கள், புது உலகை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள்.
மற்றபடி பொய்யான படகுகள் அனைத்தும் அழிந்து விடும். நீங்களும்
இங்கு இராஜ்யம் செய்யக் கூடியவர்கள் கிடையாது. நீங்கள் அடுத்த
பிறவியில் வந்து இராஜ்யம் செய்வீர்கள். இது மிகவும் குப்தமான
விசயமாகும், இதை நீங்கள் தான் அறிகிறீர்கள். இந்த பாபா
கிடைத்திருக்காவிடில் எதையும் அறியாமல் இருந்திருப்பீர்கள்.
இப்பொழுது அறிந்திருக்கிறீர்கள்.
இவர் யுதிஷ்டர் ஆவார், யுத்த மைதானத்தில் குழந்தைகளை நிறுத்தக்
கூடியவர். இவர்கள் அகிம்சாதாரிகள் ஆவர். மனிதர்கள் சண்டையிடுவது
தான் இம்சை என்று நினைக்கின்றனர். ஆனால் தந்தை கூறுகின்றார் -
முதல் முக்கிய இம்சை காமத்தில் செல்வதாகும். அதனால் தான் காமம்
மிகப் பெரிய எதிரி என்று கூறுகின்றார். இதன் மீது தான்
வெற்றியடைய வேண்டும். முக்கிய விசயமே காம விகாரமாகும், பதீதம்
என்றால் விகாரியாகும். பதீதம் ஆகக் கூடியவர்கள் தான் விகாரி
என்று கூறப்படுகின்றனர், அவர்கள் விகாரத்தில் செல்கின்றனர்.
கோபப்படுகின்றவரை இவர் விகாரி என்று கூறுவது கிடையாது.
கோபப்படுபவரை கோபப்படுபவர், பேராசை உள்ளவரை பேராசைப்படுபவர்
என்று கூறுவர். தேவதைகள் விகாரமற்றவர்கள் என்று
கூறப்படுகின்றனர். தேவதைகள் பேராசையற்றவர்களாக, பற்றற்றவர்களாக,
விகாரமற்றவர்களாக இருப்பர். அவர்கள் ஒருபொழுதும் விகாரத்தில்
செல்லமாட்டார்கள். விகாரமின்றி குழந்தை எப்படி பிறக்கும்? என்று
உங்களிடத்தில் கேட்கின்றனர். அவர்களை விகாரமற்றவர்கள் என்று
ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லவா! அந்த உலகமே விகாரமற்ற உலகமாகும்.
துவாபர, க-யுகம் விகார உலகமாகும். தன்னை விகாரி என்றும்,
தேவதைகளை விகாரமற்றவர்கள் என்றும் கூறுகின்றனர் அல்லவா! நாமும்
விகாரிகளாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது
இவர்களைப் போன்று விகார மற்றவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம்.
இந்த இலட்சுமி நாராயணனும் கூட நினைவு பலத்தின் மூலம் இந்த பதவி
அடைந்திருக்கின்றனர், மீண்டும் அடைந்து கொண்டிருக்கின்றனர்.
நாம் தான் தேவி தேவதைகளாக இருந்தோம், நாம் கல்பத்திற்கு முன்பு
இவ்வாறு இராஜ்யம் அடைந்திருந் தோம், எதை இழந்தோமோ அதை மீண்டும்
அடைந்து கொண்டிருக்கிறோம். இந்த சிந்தனை மட்டுமே புத்தியில்
இருந்தால் குஷி ஏற்படும். ஆனால் இந்த நினைவை மாயை மறக்க வைத்து
விடுகிறது. உங்களால் நிலையான நினைவில் நிலைத்திருக்க முடியாது
என்பதை பாபா அறிவார். குழந்தைகளாகிய நீங்கள் உறுதியானவர்களாகி
நினைவு செய்து கொண்டே இருந்தால் விரைவில் கர்மாதீத நிலை
ஏற்பட்டு விடும் மற்றும் ஆத்மா திரும்பிச் சென்று விடும். ஆனால்
அவ்வாறு கிடையாது. முதல் நம்பரில் செல்லக் கூடியவர் இவர் ஆவார்.
பிறகு சிவபாபாவின் ஊர்வலம் நடைபெறும். திருமணத்தின் பொழுது
தாய்மார்கள் மண் பானையில் தீபம் ஏற்றி எடுத்துச் செல்வார்கள்
அல்லவா! இது அடையாளமாகும். சிவபாபா என்ற நாயகன் சதா சுடர்
விட்டுக் கொண்டிருக்கும் தீபமாவார். மற்றபடி நமது தீபம்
ஏற்றப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் விசயத்தை பிறகு பக்தி
மார்க்கத்தில் கொண்டு சென்று விட்டனர். நீங்கள் யோக பலத்தின்
மூலம் தனது தீபத்தை ஏற்றுகிறீர்கள். யோகா மூலம் நீங்கள்
தூய்மையாக ஆகிறீர்கள். ஞானத்தின் மூலம் செல்வம் கிடைக்கிறது.
படிப்பு தான் வருமானத்திற்கு வழி என்று கூறப்படுகிறது அல்லவா!
யோக பலத்தின் மூலம் நீங்கள் பொதுவாக முழு உலகையும் குறிப்பாக
பாரதத்தை தூய்மையாக ஆக்குகிறீர்கள். இதில் கன்னிகைகள் மிகவும்
நன்றாக உதவியாளர்களாக ஆக முடியும். சேவை செய்து உயர்ந்த பதவி
அடைய வேண்டும். வாழ்க்கையை வைரம் போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும்,
குறைந்தது கிடையாது. தாய், தந்தையைப் பின்பற்றுங்கள் என்று
கூறப்படுகிறது. தாய், தந்தை மற்றும் நெருக்கமான சகோதர
சகோதரிகளைப் பாருங்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளிலும் புரிய வைக்க முடியும்
- உங்களுக்கு இரண்டு தந்தைகள் உள்ளனர் - லௌகீகம் மற்றும்
பரலௌகீகம். இதில் உயர்ந்தவர் யார்? உயர்ந்தவர் கண்டிப்பாக
எல்லையற்ற தந்தையாவார் அல்லவா! ஆஸ்தி அவரிடமிருந்து அடைய
வேண்டும். இப்பொழுது ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்,
உலகிற்கு எஜமானர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். பகவானின்
மகாவாக்கியம் - உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன், பிறகு
நீங்கள் அடுத்த பிறவியில் உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள். தந்தை
ஒவ்வொரு கல்பத்திலும் பாரதத்தில் வந்து பாரதத்தை மிகவும்
செல்வந்த தேசமாக ஆக்குகின்றார். நீங்கள் இந்தப் படிப்பின் மூலம்
உலகிற்கு எஜமானர்களாக ஆகிறீர்கள். அந்தப் படிப்பின் மூலம் என்ன
கிடைக்கும்? இங்கு நீங்கள் 21 பிறவிகளுக்கு வைரம் போன்று
ஆகிறீர்கள். அந்தப் படிப்பில் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது.
இங்கு தந்தை, ஆசிரியர், குரு ஒரே ஒருவர் தான். ஆக தந்தையின்
ஆஸ்தி, ஆசிரியரின் ஆஸ்தி மற்றும் குருவின் ஆஸ்தி அனைத்தையும்
கொடுக்கின்றார். தேக சகிதமாக அனைத்தை யும் மறக்க வேண்டும் என்று
தந்தை இப்பொழுது கூறுகின்றார். நீங்கள் இறந்து விட்டால் உலகம்
இறந்து விடும். தந்தையின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாக
ஆகிவிட்ட பின்பு வேறு யாரை நினைவு செய்வீர்கள்! மற்றவர்களைப்
பார்த்தாலும் பார்க்காதது போன்று இருங்கள். நடிப்பை நடிப்பதற்கு
வந்தாலும் இப்பொழுது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், பிறகு
இங்கு வந்து நடிப்பை நடிக்க வேண்டும் என்பது புத்தியில்
இருக்கிறது. இது புத்தியில் இருந்தாலே அதிகக் குஷி ஏற்படும்.
குழந்தைகள் தேக உணர்வை விட்டு விட வேண்டும். இந்த பழைய பொருளை
இங்கு விட்டு விட வேண்டும். இப்பொழுது திரும்பிச் செல்ல
வேண்டும். நாடகம் முடிவடைகிறது, பழைய உலகம் எரிய ஆரம்பித்து
விட்டது. குருடனின் வம்சம் குருடர்களாக அஞ்ஞான நித்திரையில்
தூங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்
மனிதர்களைக் காண்பித்திருக் கின்றனர் என்று மனிதர்கள் நினைப்பர்.
ஆனால் இது அஞ்ஞான நித்திரையின் விசயமாகும். இதி-ருந்து நீங்கள்
எழுப்புகிறீர்கள். ஞானம் என்றால் பகல் சத்யுகமாகும், அஞ்ஞானம்
என்றால் இரவு க-யுகமாகும். இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய
விசயமாகும். கன்னியாவிற்கு திருமணம் ஆகிவிட்டால் அவருக்கு தாய்,
தந்தை, மாமியார், மாமனார் போன்றவர்களின் நினைவும் வரும்.
அவர்களை மறக்க வேண்டியிருக்கும். இப்படி கூட ஜோடியாக
வாழ்கின்றனர். அவர்கள் சந்நியாசி களுக்கும் கூறுகின்றனர் -
நாங்கள் கணவன் மனைவியாக இருந்தும் ஒருபொழுதும் விகாரத்தில்
செல்வது கிடையாது. ஞான அம்பு நடுவில் இருக்கிறது. தூய்மையாக
இருங்கள் என்பது தான் தந்தையின் கட்டளையாகும். இரமேஷ் - உஷாவைப்
பாருங்கள், ஒருபொழுதும் பதீதம் ஆக வில்லை. ஒருவேளை நாம் பதீதம்
ஆகிவிட்டால் 21 பிறவிக்கான இராஜ்யம் அழிந்து விடும், திவால்
ஆகிவிடுவோம் என்ற பயம் இருக்கிறது. கந்தர்வ விவாஹம் என்ற பெயர்
இருக்கிறது அல்லவா! இதில் சிலர் தோல்வி அடைந்து விடுகின்றனர்.
தூய்மையாக இருப்பதனால் பதவி மிகவும் உயர்ந்ததாக கிடைக்கும்
என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரே ஒரு பிறப்பிற்கு தூய்மையாக ஆக
வேண்டும். யோக பலத்தின் மூலம் கர்மேந்திரியங்களின் மீதும்
கட்டுப்பாடு வந்து விடுகிறது. யோக பலத்தின் மூலம் நீங்கள் முழு
உலகையும் தூய்மையாக ஆக்குகிறீர்கள். மிகக் குறைந்த
குழந்தைகளாகிய நீங்கள் யோக பலத்தின் மூலம் இந்த முழு மலையையும்
நீக்கி தங்க மலையை ஸ்தாபனை செய்கிறீர்கள். மனிதர்கள் இதைப்
புரிந்து கொள்வது கிடையாது, அவர்கள் கோவர்தன மலையைச் சுற்றிக்
கொண்டிருக்கின்றனர். தந்தை வந்து தான் இந்த முழு உலகையும் தங்க
யுகமாக ஆக்குகின்றார். அதற்காக இமயமலை தங்கம் போன்று ஆகிவிடும்
என்பது கிடையாது. அங்கு தங்கக் களஞ்சியம் நிறைந்து இருக்கும்.
5 தத்துவங்கள் சதோ பிரதானமாக இருக்கும். நல்ல பழங்களைக்
கொடுக்கும். சதோ பிரதான தத்துவத்தினால் இந்த சரீரமும் சதோ
பிரதானமாக இருக்கும். அங்கிருக்கும் பழங்களும் மிகப் பெரியதாக,
சுவையானதாக இருக்கும். பெயரே சொர்க்கம் ஆகும். ஆக தன்னை ஆத்மா
என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்தால் தான் விகாரங்கள்
நீங்கும். தேக அபிமானத்தில் வருவதன் மூலம் தான் விகாரத்தின்
சேஷ்டை ஏற்படுகிறது. யோகி ஒருபொழுதும் விகாரத்தில்
செல்லமாட்டார். ஞான பலம் இருக்கவே செய்கிறது, ஆனால் யோகியாக
இல்லையெனில் கீழே விழுந்து விடுவீர்கள். முயற்சி பெரியதா?
அல்லது பிராப்தி பெரியதா? என்று கேட்கப்படுகிறது. முயற்சி தான்
பெரியது என்று கூறுகிறோம். அதே போன்று இதில் பெரியது யோகா ஆகும்.
யோகா மூலம் தான் பதீதத்தி-ருந்து பாவனம் ஆகிறீர்கள். நாம்
எல்லையற்ற தந்தையிடத்தில் படிக்கிறோம் என்று இப்பொழுது குழந்தை
களாகிய நீங்கள் கூறுவீர்கள். மனிதர்களிடத்தில் படிப்பதனால்
என்ன கிடைக்கும்? மாதத்திற்கு என்ன வருமானம் கிடைக்கும்? இந்த
ஒவ்வொரு இரத்தினத்தையும் நீங்கள் தாரணை செய்கிறீர்கள். இது
இலட்சம் ரூபாய்க்கு சமமாகும். அங்கு பணத்தை கணக்கிடுவது
கிடையாது. அளவற்ற செல்வம் இருக்கும். அனைவருக்கும்
அவரவர்களுக்கென்று களஞ்சியங்கள் இருக்கும். நான் உங்களுக்கு
இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று இப்பொழுது தந்தை உங்களுக்குக்
கூறுகின்றார். இது தான் இலட்சியம், குறிக்கோள் ஆகும். முயற்சி
செய்து உயர்ந்த நிலையடைய வேண்டும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக்
கொண்டிருக்கிறது. இந்த இலட்சுமி நாராயணன் எப்படி பிராப்தி
அடைந்தனர்? இவர்கள் பிராப்தியை அறிந்து கொண்ட பின்பு வேறு என்ன
வேண்டும்? கல்பத்திற்கு பின் 5 ஆண்டிற்குப் பிறகு தந்தை
வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள், வந்து பாரதத்தை
சொர்க்கமாக ஆக்குகின்றார். ஆக குழந்தைகளுக்கு சேவை செய்ய
வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். எதுவரை யாருக்காவது வழி
காட்டவில்லையோ உணவு சாப்பிடமாட்டேன் - இந்த அளவிற்கு ஆர்வம்
உற்சாகம் இருக்கும் பொழுது தான் உயர்ந்த பதவியடைய முடியும்.
நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) ஈஸ்வரிய சேவை செய்து தனது வாழ்க்கையை 21 பிறவிகளுக்கு வைரம்
போன்று ஆக்கிக் கொள்ள வேண்டும். தாய், தந்தை மற்றும் பாபாவிற்கு
நெருக்கத்திலுள்ள மூத்த சகோதர சகோதரிகளை மட்டுமே பின்பற்ற
வேண்டும்.
2) கர்மாதீத நிலை அடைவதற்காக தேக சகிதமாக அனைத்தையும் மறக்க
வேண்டும். தனது நினைவை ஆடாது மற்றும் நிலையானதாக ஆக்கிக் கொள்ள
வேண்டும். தேவதைகளைப் போன்று பேராசையற்றவர்களாக,
பற்றற்றவர்களாக, விகாரமற்றவர்களாக ஆக வேண்டும்.
வரதானம்:
துடித்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு ஒரு நொடியில் கதி,
சத்கதி கொடுக்கக்கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.
எவ்வாறு யாருக்கும் எந்த கஷ்டமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று
ஸ்தூல சீசனுக்காக ஏற்பாடு செய்கின்றீர்களோ, சேவாதாரிகள்,
பொருட்கள் ஆகிய அனைத்தையும் தயார் செய்கின்றீர் களோ, அதுபோன்றே
இப்பொழுது அனைத்து ஆத்மாக்களுக்கும் கதி, சத்கதியைக்
கொடுப்பதற்கான இறுதி சீசன் வரப்போகின்றது, துடித்துக்
கொண்டிருக்கும் ஆத்மாக்கள் வரிசையில் நிற்பதற்கான கஷ்டத்தை
கொடுக்கக்கூடாது, வரவேண்டும் மற்றும் பெற்றுக் கொண்டு செல்ல
வேண்டும். இதற்காக எவரெடி ஆகுங்கள். புருˆôர்த்தியாக வாழ்வதை
விட மேலாக இப்பொழுது வள்ளல் தன்மையின் ஸ்திதியில் இருங்கள்.
ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு நொடியில் மாஸ்டர் வள்ளலாகி நடங்கள்.
சுலோகன்:
இறைவனை புத்தியில் நிறைத்து வைத்துக்கொண்டீர்கள் என்றால்
அனைத்து பிராப்திகளும் வந்தேன் எனது பிரபுவே என்று வந்துவிடும்.
அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும்
ஏகாக்ரதாவை தனதாக்குங்கள்
ஒற்றுமையின் கூடவே ஏகாந்தப்பிரியர் ஆகவேண்டும், யாருடைய
புத்தியோகம் அனேக பக்கங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு
இருக்குமோ மற்றும் ஒருவருக்கு மட்டும் பிரியமானவராக இருப்பாரோ,
அவரே ஏகாந்தப்பிரியராக இருப்பார். ஒருவர் மீது பிரியம்
கொண்டிருக்கும் காரணத் தினால் ஒருவருடைய நினைவில் மட்டும்
இருக்கமுடியும். ஏகாந்தப்பிரியர் என்றால் ஒருவரைத் தவிர வேறு
யாரும் இல்லை என்பதாகும். சர்வ சம்பந்தங்கள், சர்வ இரசனைகளை
ஒருவரிடம் இருந்து பெறக்கூடியவர்கள் தான் ஏகாந்தப்பிரியர்
ஆகமுடியும்.