02.02.25 காலை முரளி
ஓம் சாந்தி 31.12.2003 பாப்தாதா,
மதுபன்
இந்த ஆண்டில் நிமித்தம் மற்றும் நிர்மான் (பணிவுள்ளவர்) ஆகி,
சேமிப்புக் கணக்கை அதிகப் படுத்துங்கள் மற்றும் அகண்ட மகாதானி
ஆகுங்கள்
இன்று அநேக புஜங்கள் கொண்ட பாப்தாதா தம்முடைய நாலாபுறம் உள்ள
புஜங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். சில புஜங்கள்
சாகாரத்தில் முன்னால் இருக்கிறார்கள். மற்றும் அநேக புஜங்கள்
சூட்சும ரூபத்தில் காணப்படுகிறார்கள். பாப்தாதா தம்முடைய அநேக
புஜங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்.
புஜங்கள் அனைவரும் நம்பர்வார் மிகவும் ஆல்ரவுண்டர், எவர் ரெடி,
கட்டளைப்படி நடக்கும் கீழ்ப்படிதலான புஜங்களாக உள்ளனர்.
பாப்தாதா சமிக்ஞை கொடுக்கிறார் என்றால் வலது கரமாக இருப்பவர்கள்
சொல்கிறார்கள் -- ஆம் பாபா, ஆஜர் பாபா, இப்போதே பாபா. அத்தகைய
இனிமையான குழந்தைகளைப் பார்த்து பாபாவுக்கு எவ்வளவு குஷி
ஏற்படும்! பாப்தாதாவுக்கு ஆன்மிகப் பெருமை உள்ளது -
பாப்தாதாவைத் தவிர வேறு எந்த ஒரு தர்மாத்மாவுக்கு அல்லது மகான்
ஆத்மாவுக்கு இப்படிப்பட்ட மற்றும் இவ்வளவு சகயோகி புஜங்கள்
கிடைப்பதில்லை. பாருங்கள், முழுக் கல்பத்திலும் சுற்றி
வாருங்கள் இந்த மாதிரி புஜங்கள் யாருக்காவது
கிடைத்திருக்கிறார்களா? ஆக, ஒவ்வொரு புஜத்தின் விசேˆதாவைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார். முழு உலகத்தில் இருந்தும்
தேர்ந்தெடுக்கப் பட்ட விசேˆ புஜங்கள் நீங்கள். பரமாத்ம சகயோகி
புஜங்கள். பாருங்கள், இன்று இந்த ஹாலில் கூட எத்தனை பேர் வந்து
சேர்ந்திருக்கிறார்கள்! (இன்று ஹாலில் 18 ஆயிரத்துக்கும்
அதிகமாக சகோதர-சகோதரிகள் அமர்ந்துள்ளனர்) அனைவரும் தங்களைப்
பரமாத்ம புஜங்களாக அனுபவம் செய்கிறீர்களா? பெருமிதம் உள்ளது
இல்லையா?
பாப்தாதாவுக்குக் குஷி - நாலாபுறங்களில் இருந்தும் புத்தாண்டைக்
கொண்டாடுவதற்காக அனைவரும் வந்து சேர்ந்துள்ளனர். ஆனால்
புத்தாண்டு எதை நினைவு படுத்துகிறது? புதிய யுகம், புதிய பிறவி.
எவ்வளவு அதிகம் பழைய கடைசிப் பிறவியோ, அவ்வளவு புதிய முதல்
பிறவி எவ்வளவு அழகாக உள்ளது! இவர் ஷியாம், அவர் சுந்தர்.
இவ்வளவு தெளிவாக - எப்படி இன்றைய நாள் பழைய ஆண்டும் கூட
தெளிவாக உள்ளது மற்றும் புத்தாண்டும் முன்னால் தெளிவாக உள்ளது.
அது போல் தங்கள் புதிய யுகம், புதிய பிறவி தெளிவாக முன்னால்
வருகிறதா? இன்று கடைசிப் பிறவியில் இருக்கிறீர்கள். நாளை முதல்
பிறவியில் இருப்பீர்கள். தெளிவாக உள்ளதா? முன்னால் வருகிறதா?
ஆரம்பத்தில் இருந்த குழந்தைகள் பிரம்மா பாபாவை அனுபவம் செய்தார்
கள். பிரம்மா பாபாவுக்கு அவருடைய புதிய பிறவி புதிய பிறவியின்
ராஜ்யம், புதிய தெய்வீக சரீர ரூப ஆடை சதா தனக்கு முன்னால்
ஹேங்கரில் தொங்கிக் கொண்டு இருப்பதாகத் தென்பட்டது. பாபாவைச்
சந்திப்பதற்காகச் சென்ற குழந்தைகள் அனுபவம் செய்தார்கள் --
பிரம்மா பாபாவின் அனுபவம் இருந்தது, இன்று முதியவனாக
இருக்கிறேன். நாளை நான் சிறு குழந்தையாக ஆவேன். நினைவுள்ளது
இல்லையா? பழையவர்களுக்கு நினைவுள்ளதா? இன்று மற்றும் நாளை என்ற
விளையாட்டைப் போலத் தான் அவ்வளவு தெளிவாக வருங்காலம் அனுபவம்
ஆக வேண்டும். இன்று சுயராஜ்ய அதிகாரி, நாளை உலக ராஜ்ய அதிகாரி.
நஷா உள்ளதா? பாருங்கள், இன்று குழந்தைகள் கிரீடம் அணிந்து
அமர்ந்துள்ளனர். (ரிட்ரீட்டுக்கு வந்துள்ள இரட்டை வெளிநாட்டின்
சிறு குழந்தைகள் கிரீடம் அணிந்துள்ளனர். அப்போது நஷா உள்ளதா?
கிரீடம் அணிவதில் என்ன நஷா உள்ளது? இவர்கள் ஃபரிஸ்தாக்களின்
நஷாவில் உள்ளனர். கை அசைத்துக் கொண்டுள்ளனர் -- நாங்கள் நஷாவில்
இருக்கிறோம்.
ஆக, இந்த ஆண்டில் என்ன செய்வீர்கள்? புத்தாண்டில் என்ன புதுமை
செய்வீர்கள்? ஏதேனும் பிளான் உருவாக்கி இருக்கிறீர்களா? புதுமை
என்ன செய்வீர்கள்? புரோகிராமோ செய்து கொண்டு தான்
இருக்கிறீர்கள். லட்சமும் செய்திருக்கிறீர்கள். இரண்டு லட்சமும்
செய்திருக்கிறீர்கள். புதுமை என்ன செய்வீர்கள்? இன்றைய
மனிதர்கள் ஒரு பக்கம் சுய பிராப்திக்காக இச்சை கொண்டுள்ளனர்.
ஆனால் தைரியமற்றவராக உள்ளனர். கேட்க விரும்பவும் செய்கின்றனர்.
ஆனால் (கேட்ட பிறகு அது போல்) ஆவதற்கான தைரியம் இல்லை. அத்தகைய
ஆத்மாக்களை மாற்றுவதற்காக முதலிலோ ஆத்மாக்களுக்கு தைரியம் என்ற
இறக்கை கொடுங்கள். தைரியம் என்ற இறக்கைக்கு ஆதாரம் அனுபவம்
ஆகும். அனுபவம் செய்வியுங்கள். அனுபவம் என்பது அத்தகைய ஒரு
பொருள் -- கொஞ்சம் துளி கிடைத்த பிறகு அனுபவம் செய்தால்
அனுபவத்தின் இறக்கை என்று சொல்லுங்கள், அல்லது அனுபவத்தின் கால்
எனச் சொல்லுங்கள், அதன் மூலம் தைரியத்துடன் அவர்களால்
முன்னேறிச் செல்ல முடியும். இதற்காக விசேˆமாக, இவ்வருடம்
நிரந்தரமாக அகண்ட மகாதானி ஆக வேண்டும், அகண்ட (இடைவிடாத)
மகாதானி. மனதின் மூலம் சக்தி சொரூபம் ஆக்குங்கள். மகாதானி ஆகி
மனதின் மூலம், வைப்ரேˆன் மூலம் நிரந்தரமாக சக்திகளை அனுபவம்
செய்வியுங்கள். வாய்மொழி மூலம் ஞான தானம் கொடுங்கள். கர்மத்தின்
மூலம் குணங்களின் தானம் கொடுங்கள். நாள் முழுவதும், மனதால்,.
சொல்லால், செயலால், மூன்றின் மூலமாக அகண்ட மகாதானி ஆகுங்கள்.
சமயத்திற்கேற்றவாறு இப்போது தானி இல்லை, எப்போதாவது தான்
செய்தோம் என்று அப்படி இல்லை. அகண்ட தானி ஆக வேண்டும்.
ஏனென்றால் ஆத்மாக் களுக்கு அவசியமாக உள்ளது. எனவே மகாதானி
ஆவதற்கு முதலில் தனது சேமிப்புக் கணக்கை சோதித்துப் பாருங்கள்.
நான்கு பாடங்களிலும் சேமிப்புக் கணக்கு எவ்வளவு சதவிகிதம்
உள்ளது? தன்னிடம் சேமிப்புக் கணக்கு இல்லையென்றால் மகாதானி
எப்படி ஆவீர்கள்? மேலும் சேமிப்புக் கணக்கை சோதிப்பதற்கான
அடையாளம் என்ன? மனம், சொல், செயல் மூலம் சேவையோ செய்தீர்கள்.
ஆனால் சேமிப்பின் அடையாளம் -- சேவை செய்யும் போது முதலில்
தன்னுடைய திருப்தி. அதோடு கூடவே யாருக்கு சேவை செய்கிறீர்களோ,
அந்த ஆத்மாக்களிடம் குஷியின் திருப்தி வந்ததா? இரண்டு பக்கமும்
திருப்தி இல்லையென்றால் புரிந்து கொள்ளுங்கள் – சேவை யின்
கணக்கில் உங்கள் சேவையின் பலன் சேமிப்பாகவில்லை.
பாப்தாதா அவ்வப்போது குழந்தைகளின் சேமிப்புக் கணக்கைப்
பார்க்கிறார். அப்போது அங்கங்கே முயற்சி அதிகம் உள்ளது, ஆனால்
சேமிப்பின் பலன் குறைவாக உள்ளது. காரணம்? இரண்டு பக்கமும்
திருப்தியின் குறைவு. திருப்தியை அனுபவம் செய்யவில்லை என்றால்
-- சுயமாக இருந்தாலும் மற்றவராக இருந்தாலும், சேமிப்பின் கணக்கு
குறைந்து விடும். பாப்தாதா சேமிப்புக் கணக்கை மிக சுலபமாக
அதிகரிப்பதற்கான தங்கச் சாவியைக் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்
கிறார். அந்தச் சாவி எது என்பது உங்களுக்குத் தெரியும்.
கிடைத்திருக்கிறது இல்லையா? சகஜமாக சேமிப்புக் கணக்கை
நிறைப்பதற்கான தங்கச்சாவி - எந்த ஒரு மனம்-சொல்-செயல், எதில்
சேவை செய்தாலும் அச்சமயம் ஒன்று, தனக்குள் நிமித்த உணர்வின்
நினைவு. நிமித்த உணர்வு, பணிவு உணர்வு, சுப உணர்வு, ஆத்மிக
சிநேகத்தின் உணர்வு, இந்த உணர்வின் ஸ்திதியில் நிலைத்திருந்து
சேவை செய்வீர்களானால் சகஜமாக உங்கள் இந்த உணர்வினால்
ஆத்மாக்களின் பாவனை பூர்த்தியாகி விடும். இன்றைய மனிதர்கள்
ஒவ்வொருவரின் உணர்வும் என்னவாக உள்ளது என்பதைக் குறித்துக்
கொள்கிறார்கள். எந்த நிமித்த பாவத்தோடு செய்து
கொண்டிருக்கிறார்கள், அல்லது அபிமானத்தின் உணர்வோடு
செய்கிறார்களா எனப் பார்க்கிறார்கள். எங்கே நிமித்த உணர்வு
உள்ளதோ, அங்கே பணிவின் உணர்வு தானாகவே வந்து விடும். எனவே
சோதித்துப் பாருங்கள், என்ன சேமிப்பாகி இருக்கிறது? எவ்வளவு
சேமிப்பாகி இருக்கிறது? ஏனென்றால் இச்சமயம், சங்கமயுகம் தான்
சேமிப்பதற்கான யுகம். பிறகோ முழுக் கல்பமும் சேமிப்பின்
பிராலப்தம்.
ஆக, ஒவ்வோர் ஆண்டும் என்ன சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும்?
அவரவர் சேமிப்புக் கணக்கை சோதித்துப் பாருங்கள். செக்கரும் (சோதிப்பவர்)
ஆகுங்கள், மேக்கரும் (உருவாக்குபவர்) ஆகுங்கள். ஏனென்றால்
சமயத்தின் சமீபத்தின் காட்சியைப் பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள். மேலும் அனைவரும் பாப்தாதாவிடம் உறுதிமொழி
கொடுத்திருக்கிறீர்கள் - நான் பாபாவுக்கு சமமாக ஆவேன்.
உறுதிமொழி எடுத்திருக்கிறீர்கள் இல்லையா? யார் உறுதி எடுத்துக்
கொண்டிருக்கிறார் களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். பக்காவாக
செய்திருக்கிறீர்களா? அல்லது சதவிகிதத்திலா? பக்காவாக
செய்திருக்கிறீர்கள் இல்லையா? ஆக, பிரம்மா பாபாவுக்கு சமமாகக்
கணக்கு சேமிப்பு வேண்டும் இல்லையா? பிரம்மா பாபாவுக்கு சமமாக
ஆக வேண்டும் என்றால் பிரம்மா பாபாவின் விசேˆ சரித்திரம் என்ன
பார்த்தீர்கள்? ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒவ்வொரு
விˆயத்திலும், நான் சொன்னேனா, பாபா சொன்னாரா? நான் செய்து
கொண்டிருக்கிறேன் என்று அப்படி இல்லை. பாபா செய்வித்துக்
கொண்டிருக்கிறார். யாருடன் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள்?
பாபாவுடன் சந்திப்பதற்காக வந்திருக்கிறீர்கள். நான் என்பது
இல்லாமல், அது அறியாத ஒன்றாக இருந்தது என்பதைப் பார்த்தீர்கள்
இல்லையா? பார்த்தீர்களா? ஒவ்வொரு முரளியிலும் பாபா, பாபா என்று
எத்தனை தடவை நினைவு படுத்துகிறார்? ஆக, சமமாக ஆவது என்பதன்
அர்த்தமே -- முதலில் நான் என்ற உணர்வு இல்லாமல் இருக்க வேண்டும்.
முன்பு கேட்டிருக்கிறீர்கள் -- பிராமணர்களின் நான் என்பதும்
கூட மிகவும் ராயலானது. நினைவிருக்கிறது இல்லையா?
சொல்லியிருக்கிறார் இல்லையா? பாப்தாதா வெளிப்பட (பிரத்தியட்சம்)
வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். பாப்தாதாவை
வெளிப்படுத்த வேண்டும். அதற்கான பிளான் நிறையவே செய்கிறீர்கள்.
நல்ல பிளான்களை உருவாக்குகிறீர்கள். பாப்தாதா குஷியடைகிறார்.
ஆனால் இந்த ராயல் ரூபத்தின் நான் என்பது பிளான் செய்வதில்,
வெற்றி பெறுவதில் கொஞ்சம் சதவிகிதத்தைக் குறைத்து விடுகிறது.
இயல்பான சங்கல்பத்தில், பேச்சில், கர்மத்தில், ஒவ்வொரு
சங்கல்பத்திலும் பாபா, பாபா என்ற நினைவு இருக்க வேண்டும். நான்
என்பது இருக்கக் கூடாது. பாப்தாதா செய்விப்பவர் செய்வித்துக்
கொண்டிருக்கிறார். ஜெகதம்பாவுக்கு இதே விசேˆதாரணை இருந்தது.
ஜெகதம்பாவின் ஸ்லோகன் நினைவிருக்கிறதா? பழையவர்களுக்கு
நினைவிருக்கும். நினைவிருக்கிறதா? சொல்லுங்கள் - ஹுக்கமி
ஹுக்கம் சலா ரஹா ஹை (கட்டளையிடுபவர் உங்களை நடத்திக்
கொண்டிருக்கிறார்) இது தான் ஜெகதம்பாவின் விசேˆ தாரணையாக
இருந்தது. எனவே நம்பர் பெற வேண்டும், சமமாக ஆக வேண்டுமானால்
நான் என்பது முடிந்துவிட வேண்டும். வாயிலிருந்து தானாகவே
பாபா-பாபா என்ற சொல் வெளிப்பட வேண்டும். கர்மத்தில் உங்கள்
முகத்தில் பாபாவின் மூர்த்தி வெளிப்பட வேண்டும். பாப்தாதா இந்த
ராயல் ரூப நான்-நான் என்ற பாடலை அதிகம் கேட்கிறார். நான் என்ன
செய்தேனோ, அது தான் சரி, நான் என்ன யோசித்தேனோ, அது தான் சரி,
அது தான் நடந்தாக வேண்டும் - இந்த நான் என்பது ஏமாற்றி விடும்.
யோசியுங்கள், சொல்லுங்கள், ஆனால் நிமித்த மற்றும் நிர்மான் (பணிவு)
உணர்வுடன். பாப்தாதா இதற்கு முன்பும் ஓர் ஆன்மிக டிரில் கற்றுத்
தந்துள்ளார், என்ன டிரில்? அவ்வப்போது எஜமான், அவ்வப்போது
பாலகன். ஆலோசனை சொல்வதில் எஜமான் தன்மை, பெரும்பாலோர் மூலம்
இறுதி செய்த பிறகு குழந்தைத் தன்மை. இந்த எஜமான் மற்றும்
குழந்தை இந்த ஆன்மிக டிரில் மிக-மிக அவசியம். பாப்தாதாவின்
போதனைக்கான மூன்று சொற்களை மட்டும் நினைவு வையுங்கள் -
அனைவருக்கும் நினைவிருக்கிறதா? மனதில் நிராகாரி, சொல்லில்
நிரகங்காரி, கர்மத்தில் நிர்விகாரி. எப்போதெல்லாம் சங்கல்பம்
செய்கிறீர்களோ, அப்போது நிராகாரி ஸ்திதியில் நிலைத் திருந்து
சங்கல்பம் செய்யுங்கள். மற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள்.
ஆனால் இந்த மூன்று சொற்களை மறக்க வேண்டாம். இந்த சாகார்
ரூபத்தின் மூன்று சொற்களின் போதனை உங்களுக்குக் கிடைத்துள்ள
பரிசாகும். ஆக, பிரம்மா பாபாவிடம் சாகார ரூபத்திலும் அன்பு
இருந்துள்ளது. இப்போதும் இரட்டை வெளிநாட்டினர் அநேகர் அனுபவம்
சொல்கிறார்கள் -- பிரம்மா பாபாவிடம் மிகுந்த அன்பு உள்ளது.
பார்த்ததில்லை, ஆனாலும் அன்பு உள்ளது. உள்ளதா? ஆம், இரட்டை
வெளிநாட்டினருக்கு பிரம்மா பாபா மீது அதிக அன்பு உள்ளது இல்லையா?
இல்லையா? எனவே யாரிடம் அன்பு உள்ளதோ, அவர் தந்த பரிசை மறைத்து
வைத்திருப்பார்கள். மிகவும் பத்திரமாக வைத்திருப்பார்கள். சிறு
பரிசாகவும் இருக்கலாம், யார் மீது அதிக அன்பு உள்ளதோ, அவர்களின்
பரிசை மறைத்து வைத்திருப்பார்கள், பத்திரமாக வைத்திருப்பார்கள்.
ஆக, பிரம்மா பாபா மீது அன்பு உள்ளதென்றால் இந்த மூன்று
சொற்களின் படிப்பினை மீதும் அன்பு இருக்க வேண்டும். இதன்
சம்பன்னம் ஆவது அல்லது சமமாக ஆவதென்பது மிக சுலபமாகி விடும்.
நினைவு செய்யுங்கள் -- பிரம்மா பாபா என்ன சொன்னார்?
ஆக, புது வருடத்தில் பாபாவின் சேவை செய்யுங்கள், (ஆரவாரமாக)
விமரிசையாகச் செய்யுங்கள். ஆனால் அனுபவம் செய்விப்பதற்கான
சேவையை சதா கவனத்தில் வையுங்கள். அனைவரும் அனுபவம் செய்ய
வேண்டும் -- இந்த சகோதரி மூலம் எனக்கு சக்தியின் அனுபவம்
ஆயிற்று, சாந்தியின் அனுபவம் ஆயிற்று. ஏனென்றால் அனுபவம் ஒரு
போதும் மறப்பதில்லை. கேட்டது மறந்து போகும். கேட்பதற்கு நன்றாக
இருக்கும், ஆனால் மறந்து போகும். அனுபவம் அத்தகைய ஒரு பொருள்,
அது அவர்களை ஈர்த்து உங்கள் அருகில் கொண்டு வரும். தொடர்பில்
இருப்பவர்கள் சம்பந்தத்தில் வந்து கொண்டே இருப்பார்கள்.
ஏனென்றால் சம்பந்தம் இல்லாமல் ஆஸ்திக்கு அதிகாரி ஆக முடியாது.
ஆக, அனுபவம் சம்பந்தத்தில் கொண்டுவரக் கூடியதாகும்.
புரிந்ததா? என்ன செய்வீர்கள்? சோதித்துப் பாருங்கள்.
செக்கராகவும் ஆகுங்கள், மேக்கராகவும் ஆகுங்கள். அனுபவம்
செய்விக்கின்ற மேக்கர் ஆகுங்கள். சேமிப்புக் கணக்கை சோதிக்கும்
செக்கர் ஆகுங்கள். நல்லது.
இப்போது அனைவரும் என்ன செய்வீர்கள்? பாப்தாதாவுக்குப்
புத்தாண்டின் பரிசு தருவீர்களா இல்லையா? புத்தாண்டில் என்ன
செய்கிறீர்கள்? ஒருவர் மற்றவருக்குப் பரிசு கொடுக்கிறீர்கள்
இல்லையா? ஒருவர் கார்டு கொடுக்கிறார், ஒருவர் பரிசு
கொடுக்கிறார். ஆனால் பாப்தாதாவுக்குக் கார்டு தேவையில்லை.
ரிக்கார்டு வேண்டும். குழந்தைகள் அனைவரின் ரிக்கார்டு நம்பர்
ஒன்னாக இருக்க வேண்டும் -- இந்த ரிக்கார்டு வேண்டும்.
நிர்விக்னமாக வேண்டும், இப்போது இந்த ஏதேனும் விக்னத்தைப்
பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா? அப்போது பாப்தாதாவுக்கு ஒரு
சிரிப்பின் விளையாட்டு நினைவு வருகிறது. தெரியுமா அது எந்த
சிரிப்பின் விளையாட்டு என்று? அந்த விளையாட்டு - முதியவர்கள்
எல்லாம் பொம்மைகளின் விளையாட்டை விளையாடிக் கொண்டி
ருக்கிறார்கள். முதியவர்கள் தாம், ஆனால் அவர்கள் விளையாடுவது
பொம்மைகளை வைத்து. எனவே சிரிப்புக்கான விளையாட்டு இல்லையா? ஆக,
இப்போது என்ன சின்னச்சின்ன விˆயங்கள் கேட்கிறோமோ, பார்க்கிறோமோ,
அப்போது தோன்றுகிறது -- வானப்ரஸ்த அவஸ்தா மற்றும் விˆயம்
எவ்வளவு சிறியது! ஆக, இந்த ரிக்கார்டு பாபாவுக்குப்
பிடிக்கவில்லை. இதற்கு பதிலாக ரிக்கார்டு கொடுங்கள் -
நிர்விக்னம் ஆகி விட்டோம் மற்றும் சின்ன விˆயங்கள் முடிந்து
விட்டன. பெரியதைச் சிறியதாக்குவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்.
மற்றும் சிறியதை முடித்து விடுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள்.
பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் முகத்தையும், பாப்தாதாவின் முகம்
பார்ப்பதற்கான கண்ணாடியாக ஆக்க விரும்புகிறார். உங்கள்
கண்ணடியில் பாப்தாதா தென்பட வேண்டும். ஆக, அந்த மாதிரி
விசித்திர கண்ணடியை பாப்தாதாவுக்குப் பரிசாகக் கொடுங்கள்.
உலகத்திலோ பரமாத்மாவைக் காட்டக் கூடிய அத்தகைய கண்ணாடியே
கிடையாது. ஆக, நீங்கள் இந்தப் புது வருடத்தின் அத்தகைய ஒரு
பரிசு கொடுங்கள் -- அதாவது நீங்கள் விசித்திர கண்ணாடி ஆகிவிட
வேண்டும். யார் உங்களைப் பார்த்தாலும், யார் கேட்டாலும்,
பாப்தாதா மட்டுமே அவர் களுக்குக் காணப்பட வேண்டும். கேட்கப்பட
வேண்டும். பாபாவின் சப்தம் கேட்க வேண்டும். ஆக, பரிசு
கொடுப்பீர்களா? கொடுப்பீர்களா? யார் கொடுப்பதற்கான திட
சங்கல்பம் வைக்கிறார்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். இரட்டை
வெளிநாட்டினரும் கை உயர்த்துகிறார்கள். சிந்தி குரூப்பும்
உயர்த்துகிறார்கள். யோசித்து உயர்த்துகிறார்கள்.
நல்லது. பாப்தாதாவுக்கு சிந்தி குரூப்மீது நம்பிக்கை உள்ளது,
என்ன நம்பிக்கை என்று சொல்லவா? நம்பிக்கை இது தான் - சிந்தி
குரூப்பிலிருந்து அந்த மாதிரி ஒரு மைக் வெளிவர வேண்டும் --
என்னவாக இருந்தோம், இப்போது என்னவாக ஆகியிருக்கிறோம் என்று
சவால் விடுபவராக இருக்க வேண்டும். சிந்தி மக்களை
எழுப்பக்கூடியதாக அது இருக்க வேண்டும். பாவப்பட்டவர்கள்,
அவர்கள் பாவப்பட்டவர்கள். அறிந்து கொள்வதே இல்லை. தேசத்தின்
அவதாரத்தையே அறிந்து கொள்ளவில்லை. ஆக, சிந்தி குரூப்பில் அந்த
மாதிரி வெளிப்பட வேண்டும் -- அவர் சவாலாகச் சொல்ல வேண்டும் -
யதார்த்தம் என்னவென்று நான் சொல்கிறேன். சரியா? நம்பிக்கையை
நிறைவேற்றுவீர்களா? நல்லது.
நாலாபுறம் உள்ள சதா அகண்ட மகாதானி குழந்தைகளுக்கு, நாலாபுறம்
உள்ள பாபாவின் வலது கரமாக உள்ள, கட்டளைப்படி நடக்கும்
கீழ்ப்படிதலான புஜங்களுக்கு, நாலாபுறம் உள்ள சதா சர்வ
ஆத்மாக்களுக்கும் தைரியத்தின் இறக்கைகளைக் கொடுக்கக் கூடிய
தைரியவான் ஆத்மாக்களுக்கு, நாலாபுறம் உள்ள சதா பாபாவுக்கு
சமமாக ஒவ்வொரு கர்மத்திலும் பின்பற்றக்கூடிய பிரம்மா பாபா
மற்றும் ஜெகதம்பாவின் அறிவுரைகளை சதா நடைமுறை வாழ்க்கையில்
கொண்டு வரக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் மிக-மிக அன்பு
நினைவுகள், ஆசிர்வாதங்கள் மற்றும் நமஸ்தே.
இரட்டை வெளிநாட்டினர் மற்றும் பாரதத்தின் குழந்தைகளுக்கு டபுள்
குட்நைட் மற்றும் குட் மார்னிங் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
எப்படி இப்போது குஷியடைந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா,
எப்போது ஏதேனும் பிரச்சினை வருகிறதோ, அப்போது இன்றைய நாளை
நினைவு செய்து, குஷியில் வலம் வர வேண்டும். குஷியின் ஊஞ்சலில்
சதா ஆடிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு போதும் துக்கத்தின் அலை
வரக்கூடாது. துக்கம் கொடுப்பவர்களோ உலகில் அநேக ஆத்மாக்கள்
உள்ளனர். நீங்கள் சுகம் தரக்கூடிய, சுகம் பெறக்கூடிய, சுகம்
தரும் வள்ளலின் குழந்தைகள், சுக சொரூபமாக இருக்கிறீர்கள். சில
நேரம் சுகத்தின் ஊஞ்சலில் ஆடுங்கள் சில நேரம் அன்பின் ஊஞ்சலில்
ஆடுங்கள். சில நேரம் சாந்தியின் ஊஞ்சலில் ஆடுங்கள். ஆடிக்
கொண்டே இருங்கள். கீழே மண்ணின் மீது காலை வைக்கக் கூடாது.
ஊஞ்சலாடிக் கொண்டே இருக்க வேண்டும். குஷியாக இருக்க வேண்டும்,
அனைவரையும் குஷியாக வைத்திருக்க வேண்டும் மற்றும் மக்களுக்குக்
குஷியைப் பகிர்ந்தளிக்க வேண்டும். நல்லது. ஓம் சாந்தி.
வரதானம்:
ஃபரிஸ்தா நிலையின் ஸ்திதி மூலம் பாபாவின் அன்புக்குப் பிரதிபலன்
தரக்கூடிய தீர்வு சொரூபம் ஆகுக.
ஃபரிஸ்தா தன்மையின் ஸ்திதியில் நிலைத்திருப்பது பாபாவின்
அன்புக்கான பிரதிபலன் ஆகும். அந்த மாதிரி பிரதிபலன்
கொடுப்பவர்கள் தீர்வு சொரூபம் ஆகி விடுகின்றனர். ஆக, இப்போது
இத்தகைய சேவை செய்வதற்கான தருணம், பெறுவதோடு கூட தருவதற்கான
சமயம் ஆகும். எனவே இப்போது பாபாவுக்கு சமமாக உபகாரி ஆகி,
புகாரைக் கேட்டு, தனது ஃபரிஸ்தா ரூபத்தின் மூலம் அந்த
ஆத்மாக்களின் பக்கம் சென்று சேருங்கள் மற்றும் பிரச்சினைகளால்
களைப் படைந்துள்ள ஆத்மாக்களின் களைப்பைப் போக்குங்கள்.
சுலோகன்:
வீணானவற்றில் பொருட்படுத்தாதவர் ஆகுங்கள், நியமங்களில் அல்ல.
ஒற்றுமை மற்றும் ஒருமுகத்தன்மையைத் தனதாக்குங்கள்.
உங்களுக்குள் உள்ள சம்ஸ்காரங்களின் வேற்றுமையை நீக்கி
ஒற்றுமையில் கொண்டுவர வேண்டும். ஒற்றுமைக்காக நிகழ்காலத்தின்
வேற்றுமையை நீக்கி இரண்டு விˆயங்களைக் கொண்டுவர வேண்டும் -
ஒன்று - ஒருவரை மட்டும் (ஏக்நாமி) நினைப்பவராகி, சதா ஒவ்வொரு
விஷயத்திலும் ஒருவரின் பெயரையே உச்சரிப்பவர் ஆகுங்கள். அதோடு
சங்கல்பங்களின், சமயத் தின் மற்றும் ஞான கஜானாவின் சிக்கனம்
வையுங்கள். பிறகு நான் என்பது உள்ளடங்கி, ஒரு பாபாவில் அனைத்து
வேற்றுமைகளும் உள்ளடங்கிப் போகும்.