04-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே-பாபா உங்களுக்கு அழிவற்ற ஞான ரத்தினங்களை தானமாக அளிக்கிறார். பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுத்துக் கொண்டே இருங்கள். இந்த தானத்தினால் சத்கதி கிடைக்கும்.

கேள்வி:
எந்த புதிய வழி குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது?

பதில்:
வீட்டிற்குச் செல்வதற்கான வழி மற்றும் சொர்க்கத்திற்கான வழி தந்தை மூலமாக இப்போது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஆத்மாக்களாகிய நம்முடைய வீடு சாந்திதாமம், சொர்க்கம் தனி, சாந்திதாமம் தனியாகும். இந்த புதிய வழி உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. இப்போது கும்பகர்ணனின் தூக்கத்தை விடுங்கள், கண்களைத் திறங்கள், தூய்மையாகுங் கள் என நீங்கள் கூறுகிறீர்கள். தூய்மையாகினால் தான் வீட்டிற்குப் போக முடியும்.

பாடல்:
விழித்தெழுங்கள் பிரியதரிசினிகளே, விழித்தெழுங்கள்......

ஓம் சாந்தி.
பகவான் வாக்கு. மனிதர்களையோ அல்லது தேவதைகளையோ பகவான் என்று கூற முடியாது. ஏனென்றால் அவர்களுக்கென்று சாகார வடிவம் (சரீரம்) இருக்கிறது. இதை பாபா புரிய வைத்திருக்கிறார். மற்றபடி பரம்பிதா பரமாத்மாவிற்கு சாகார வடிவமும் இல்லை, சூட்சும ரூபமும் இல்லை. ஆகவே தான் அவருக்கு சிவபரமாத்மாய நமஹ! என்று கூறப்படுகிறது. ஞானக் கடல் அவர் ஒருவரே, எந்த மனிதருக்குள்ளும் ஞானம் இருக்க முடியாது. எதைப்பற்றிய ஞானம்? படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடை ஞானம், ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ஞானம் யாருக்குள்ளும் இல்லை. ஏ, மணப்பெண்களே, ஏ,பக்தைகளே விழித்தெழுங்கள் என தந்தை வந்து எழுப்புகிறார். அனைவரும் ஆண் மற்றும் பெண் பக்தர்கள். பகவானை நினைக்கிறார்கள். அனைத்து மணப்பெண்களும் ஒரு மணவாளனை நினைக்கிறார்கள். அனைத்து பிரியதர்ஷினி களாகிய ஆத்மாக்களும் பரம்பிதா பரமாத்மாவை பிரியதர்ஷனை நினைக்கிறது. அனைவரும் சீதைகள், இராமர் ஒரே ஒரு பரமாத்மா தான். இராமர் என்ற வார்த்தை ஏன் கூறப்படுகிறது? இராவண ராஜ்யம் அல்லவா, எனவே, அவனுடன் ஒப்பிடும் போது இராம இராஜ்யம் என கூறப்படு கிறது. இராமர் தந்தை, அவரை ஈஸ்வரன் என்றும் கூறுகிறார்கள். பகவான் என்றும் கூறுகிறார்கள். அவருடைய உண்மையான பெயர் சிவன். இப்போது புது யுகம் வரப் போகிறது, விழித்தெழுங்கள் என கூறுகிறார். பழையவை அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்த மகா பாரத போருக்கு பிறகு சத்யுகம் ஸ்தாபனையாகிறது. மேலும் லஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருக்கும். பழைய கலியுகம் முடிந்துக் கொண்டிருக்கிறது. ஆகவே தான் குழந்தைகளே ! கும்பகர்ண தூக்கத்தை விடுங்கள், இப்போது கண்களை திறங்கள், புதிய உலகம் வந்துக் கொண்டிருக் கிறது என பாபா கூறுகின்றார். புதிய உலகத்திற்கு சொர்க்கம், சத்யுகம் என்றும் கூறப்படுகிறது. இது புதிய வழியாகும். இந்த வீடு அல்லது சொர்க்கத்திற்குப் போவதற்கான வழி யாருக்கும் தெரியவில்லை. சொர்க்கம் தனி, ஆத்மாக்கள் வசிக்கும் இடம் சாந்திதாமம், அது தனியாகும். நீங்கள் இராவண இராஜ்யத்தில் அழுக்காகி விட்டீர்கள். இப்போது விழித்துக் கொள்ளுங்கள் என பாபா கூறுகின்றார். இச்சமயத்தில் ஒருவர் கூட தூய்மையான ஆத்மாவாக இருக்க முடியாது. புண்ணிய ஆத்மா என கூற மாட்டார்கள். மனிதர்கள் தான், புண்ணியங்கள் செய்கிறார்கள். ஆனால் தூய்மையான ஆத்மா யாரும் இல்லை. இங்கே கலியுகத்தில் தூய்மையற்ற ஆத்மாக்கள் இருக்கிறார்கள். சத்யுகத்தில் பரிசுத்த ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆகவே தான் சிவ பாபா வந்து எங்களை தூய்மையாக மாற்றுங்கள் என கூறுகிறார்கள். இது தூய்மையாக இருப்பதற்கான விசயம் ஆகும். இச்சமயம் தந்தையே வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அழிவற்ற ஞான ரத்தினங்களை தானமாக அளிக் கிறார். நீங்கள் மற்றவர்களுக்கு தானம் அளித்துக் கொண்டே இருந்தால் 5 விகாரங்களின் கிரகச் சாரம் விலகி போகும் என கூறுகிறார். தூய்மையாகி சுகதாமத்தில் சென்று விடுவீர்கள். 5 விகாரங் களில் முதல் நம்பரில் இருப்பது காமம். அதை விட்டு விட்டு தூய்மை யாகுங்கள். ஓ, பதீத பாவனா ! எங்களை தூய்மையாக்குங்கள் என்று கூறுகிறார்கள். தூய்மை இல்லாதவர்களுக்கு விகாரி என்று கூறப்படுகிறது. இந்த சுக துக்கத்தின் விளையாட்டு பாரதத்தில் தான். பாபா பாரதத்தில் தான் வந்து சாதாரண உடலில் பிரவேசிக்கிறார். அவருடைய வாழ்க்கை வரலாறையும் கூறுகின்றார். இவர்கள் அனைவரும் பிராமணன்-பிராமணிகள். பிரஜா பிதா பிரம்மாவின் வாரிசுகள். நீங்கள் அனைவரும் தூய்மையாவதற்கான வழியைக் கூறுகின்றீர்கள். பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரிகள் விகாரத்தில் ஈடுபட முடியாது. பிராமணர்களாகிய உங்களுக்கு இது ஒரு பிறவி தான். தேவதா வர்ணத்தில் நீங்கள் 20 பிறவிகள் எடுக்கிறீர்கள், வைசிய, சூத்திர வர்ணத்தில் 63 பிறவிகள். பிராமண வர்ணத்தில் இது ஒன்றே, கடைசி பிறவியாகும். இதில் தான் தூய்மையாக வேண்டும். தூய்மையாகுங்கள் என பாபா கூறுகின்றார். பாபாவின் நினைவு மற்றும் யோக சக்தியினால் விகர்மங்கள் எரிந்து போகும். இந்த ஒரு பிறவி தூய்மையாக வேண்டும். சத்யுகத்தில் யாரும் தூய்மையற்றவர்களாக இருக்க முடியாது. இப்போது இந்த கடைசி பிறவியில் தூய்மையானால் 21 பிறவிகள் தூய்மையாக இருக்கலாம். தூய்மையாக இருந்தீர்கள், இப்போது தூய்மையை இழந்து விட்டீர்கள். ஆகவே தான் அழைக்கிறீர்கள். யார் தூய்மையில்லாதவர்களாக மாற்றியது? இராவணனின் அசுர வழி தான். என்னைத் தவிர வேறு யாரும் குழந்தைகளகிய உங்களை இராவண இராஜ்யத்திலிருந்து, துக்கத்திலிருந்து விடுவிக்க முடியாது. அனைவரும் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து கிடக்கின்றனர். நான் தான் வந்து ஞானச் சிதையில் அமர வைக்க வேண்டியிருக்கிறது. ஞான தண்ணீரை ஊற்ற வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் சத்கதி அளிக்க வேண்டியிருக்கிறது. யார் நன்கு படிக்கிறார்களோ அவர்களுக்கு சத்கதி கிடைக்கிறது. மற்ற அனைவரும் சாந்திதாமத்திற்குச் செல்கிறார்கள். சத்யுகத்தில் தேவி தேவதைகள் மட்டும் இருக் கிறார்கள். அவர்களுக்குத் தான் சத்கதி கிடைத்திருக்கிறது. மற்ற அனைவருக்கும் கதி அல்லது முக்தி கிடைக்கிறது. 5000 வருடங்களுக்கு முன்பு இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இலட்சக்கணக்கான வருடங்கள் கிடையாது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! இப்போது தந்தையாகிய என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கூறுகிறார். மன்மனாபவ என்ற வார்த்தை இப்போது பிரசித்தமாக இருக்கிறது. எந்த ஒரு தேகதாரியையும் பகவான் என்று கூற முடியாது. இது பகவான் வாக்கு. ஆத்மாக்கள் ஒரு உடலை விட்டு இன்னொன்றை எடுக்கிறது. சில நேரத்தில் பெண், சில நேரத்தில் ஆணாக மாறுகிறது. பகவான் ஒரு போதும் பிறப்பு இறப்பு சக்கரத்தின் விளையாட்டில் வருவதில்லை. இது நாடகப்படி நிச்சயிக்கப்பட்டிருக்
கிறது. ஒரு பிறவி யைப் போல இன்னொரு பிறவி இருக்காது. பிறகு உங்களுடைய இந்த பிறவி மீண்டும் கிடைக்கும் போது இதே நடிப்பு, இதே தோற்றத்தை மீண்டும் எடுப்பீர்கள். இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும்.

ஸ்ரீ கிருஷ்ணருக்கு சத்யுகத்தில் எந்த சரீரம் கிடைத்ததோ அது மீண்டும் அங்கேயே (சத்யுகம் ஆரம்பம் ஆகும் போது) கிடைக்கும். அந்த ஆத்மா இப்போது இங்கே இருக்கிறது. நாம் அவ்வாறு மாறுவோம். என்பதை இப்போது நீங்கள் அறிகிறீர்கள். இந்த லஷ்மி நாராயணனின் தோற்றம் துல்லியமாக இவ்வாறு கிடையாது. மீண்டும் அவ்வாறே முன்போலவே மாறுவார்கள். இந்த விசயங்களை புதியவர்கள் யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. நல்ல விதமாக யாருக்காவது புரிய வைத்தீர்கள் என்றால் 84 பிறவிகளின் சக்கரத்தை புரிந்துக் கொள்வார்கள். மேலும் ஒவ்வொரு பிறவியிலும் பெயர், ரூபம், தோற்றம் வெவ்வேறாக இருக்கிறது என புரிந்துக் கொள்வார்கள். இப்போது இது இவருடைய கடைசி 84-வது பிறவியின் தோற்றம் ஆகும். எனவே தான் நாராயணனின் தோற்றத்தை கிட்டதட்ட இவ்வாறு காண்பிக்கிறார்கள். இல்லையென்ôறல் மனிதர் கள் புரிந்துக் கொள்ள முடியாது.

மம்மா- பாபா தான் இவ்வாறு லஷ்மி நாராயணனாக ஆகிறார்கள் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். இங்கேயோ 5 தத்துவங்களும் தூய்மையாக இல்லை. இந்த சரீரம் அனைத்தும் அசுத்தமாக இருக்கிறது. சத்யுகத்தில் சரீரம் கூட தூய்மையாக இருக்கின்றது. கிருஷ்ணரை மிக அழகானவர் என்று கூறுகின்றார்கள். இயற்கையான அழகு இருக்கின்றது. இங்கே வெளி நாட்டில் மனிதர்கள் வெள்ளையாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு தேவதை என்று கூற முடியாது. தெய்வீக குணங்கள் இல்லை அல்லவா? எனவே பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார். இது உயர்ந்ததிலும் உயர்ந்த படிப்பு, இதன் மூலம் நீங்கள் எவ்வளவு உயர்ந்த வருமானத்தை சம்பாதிக்கிறீர்கள். எண்ண முடியாத அளவிற்கு வைரம், வைடூரியங்கள், செல்வம் இருக்கிறது. அங்கே வைர வைடூரியங்களின் மாளிகை இருக்கிறது. இப்போது அது அனைத்தும் மறைந்து விட்டது. நீங்கள் எவ்வளவு பணக்காரர்களாக மாறுகிறீர்கள். 21 பிறவிகளுக்கு அளவற்ற வருமானம். ஆத்ம உணர்வுடையவராக மாற வேண்டும். நாம் ஆத்மா, இந்த பழைய உடலை விட்டு விட்டு இப்போது வீட்டிற்குத் திரும்பிப்போக வேண்டும். இப்போது பாபா அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறார். ஆத்மாக்களாகிய நாம் 84 பிறவிகள் முடித்தாயிற்று. இப்போது மீண்டும் தூய்மையாக வேண்டும். பாபாவை நினைக்க வேண்டும். இல்லையென்றால் விசாரணைக்கான நேரமாகும். தண்டனைகள் அடைந்து வீட்டிற்குத் திரும்பி போவார்கள். கணக்கு வழக்கை அனைவரும் முடிக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் காசியில் சென்று கிணற்றில் குதித்து தண்டனையை அனுபவித்தனர். இருப்பினும் யாரும் முக்தியைப் பெறவில்லை. அது பக்தி மார்க்கம் ஆகும். இது ஞான மார்க்கம் ஆகும். இதில் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது தற்கொலையாகும். இருப்பினும் முக்தியைப் பெற வேண்டும் என்ற பாவனை இருக்கிறது. ஆகவே பாவங்களின் கணக்கு வழக்கு முடிந்து மீண்டும் ஆரம்பம் ஆகிறது. இப்போது யாரும் காசியில் (காசி கல்வெட்) இறப்பதற்கான கடினமான, துணிவை வைத்தாலும் முக்தியோ ஜீவன் முக்தியோ கிடைக்காது. தந்தையைத் தவிர வேறு யாரும் ஜீவன் முக்தியை அளிக்க முடியாது. ஆத்மாக்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. பிறகு எப்படி திரும்பிப் போவார்கள்? தந்தை தான் வந்து அனைவருக்கும் சத்கதி அளித்து அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வார். சத்யுகத்தில் மிகச் சில மனிதர்களே இருக்கிறார்கள். ஆத்மா ஒரு போதும் அழிவதில்லை. ஆத்மா அழிவற்றது, சரீரம் அழியக் கூடியது. சத்யுகத்தின் ஆயுள் நீண்டதாக இருக்கிறது. துக்கத்தின் விசயம் எதுவும் இல்லை. ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறார்கள். பாம்பைப் போன்றாகும். அதற்கு மரணம் என்று கூற முடியாது. துக்கத்தின் விசயமும் கிடையாது. இப்போது நேரம் முடிந்து விட்டது. இந்த உடலை விட்டு இன்னொன்றை எடுக்க வேண்டும் என புரிந்துக் கொள்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த உடலில் இருந்து விடுபடுவதற்கான பயிற்சியை இங்கே தான் செய்ய வேண்டும். நாம் ஆத்மாக்கள், இப்போது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். பிறகு புது உலகத்தில் வருவோம், புதிய உடலை எடுப்போம் என பயிற்சி செய்யுங்கள். ஆத்மா 84 உடலை எடுக்கிறது என நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். மனிதர்கள் 84 இலட்சம் என கூறிவிட்டனர். பாபாவையோ எண்ண முடியாத அளவிற்கு கல்லிலும் முள்ளிலும் இருக்கிறார் என கூறி விட்டனர். இதற்குத் தான் தர்மத்தை நிந்தித்தல் என கூறப்படுகிறது. மனிதர்கள் தூய்மை யான புத்தியிலிருந்து முற்றிலும் அழுக்கான புத்தி உடையவராகி விட்டனர். இப்போது பாபா உங்களை தூய்மையான புத்தி உடையவராக மாற்றுகின்றார். நினைவினால் தூய்மையான புத்தி உடையவர் ஆகிறீர்கள். இப்போது புதிய யுகம் வருகிறது என பாபா கூறுகின்றார். அதனுடைய அடையாளம் இந்த மகாபாரத யுத்தமாகும். இது அதே அணுகுண்டு மழை யுத்தமாகும். இதில் பல தர்மங்கள் அழிந்து ஒரு தர்மம் உருவாகியது என்றால் நிச்சயம் பகவான் இருப்பார் அல்லவா? இங்கே கிருஷ்ணர் எப்படி வர முடியும்? ஞானக் கடல் நிராகாரரா அல்லது கிருஷ்ணரா? கிருஷ்ணருக்கு இந்த ஞானம் இருக்காது. இந்த ஞானம் மறைந்து போகிறது. பிறகு பக்தி மார்க்கத்தில் உங்களுடைய சித்திரங்களை உருவாக்குவார்கள். பூஜைக்குரியவராகிய நீங்களே பூஜாரி ஆகிறீர்கள். கலைகள் குறைந்துக் கொண்டே போகிறது. ஆயுளும் குறைகிறது. ஏனென்றால் போகிகளாகி விடுகிறீர்கள். அங்கே யோகி களாக இருக்கிறார்கள். யாரையாவது நினைவு செய்து யோகத்தில் இருப்பார்கள் என்பது கிடையாது. அங்கே தூய்மையாகத் தான் இருக்கிறார்கள். கிருஷ்ணரைக் கூட யோகேஸ்வரன் என்கிறார்கள். இச்சயமம் கிருஷ்ணருடைய ஆத்மா பாபா வுடன் யோகா செய்துக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணருடைய ஆத்மா இச்சமயம் யோகேஷ்வரராக இருக்கிறது. சத்யுகத்தில் யோகேஷ்வர் என்று கூற மாட்டார்கள். அங்கேயோ இளவரசன் ஆகிறார். எனவே கடைசியில் பாபாவைத் தவிர எந்த மனிதரையும் நினைக்காத அளவிற்கு நம்முடைய மன நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். சரீரம் மற்றும் பழைய உலகத்திலிருந்து பற்றுதலை விலக்க வேண்டும். சன்னியாசிகள் பழைய உலகத்தில் இருக்கிறார்கள். ஆனால் வீடு வாசல் போன்றவற்றிலிருந்து பற்றுதலை விலக்குகிறார்கள். பிரம்மத்தை ஈஸ்வரன் என புரிந்துக் கொண்டு அதனுடன் யோகம் (நினைவை) வைக்கிறார்கள். தன்னை பிரம்ம ஞானி, தத்துவ ஞானி என கூறுகிறார்கள். நாம் பிரம்மத்தில் கலந்து விடுவோம் என நினைக்கிறார்கள். இது அனைத்தும் தவறு என பாபா கூறுகிறார். நான் கூறுவதே சரியானது, என்னைத் தான் சத்தியமானவர் என்று சொல்லப்படுகிறது.

நினைவு யாத்திரை மிகவும் உறுதியாக வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். ஞானம் மிகவும் எளிது, ஆத்ம அபிமானியாக மாறுவதில் தான் கடின உழைப்பு தேவை. எந்த தேகத்தினுடைய நினைவும் வரக் கூடாது, இது பூதத்தின் நினைவு, பூத பூஜை என பாபா கூறுகிறார். நான் அசரிரீயாக இருக்கிறேன், நீங்கள் என்னை நினைக்க வேண்டும். இந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாலும் புத்தியால் பாபாவை நினைக்க வேண்டும். பாபாவின் டைரக்ஷன்படி நடந்தால் தர்மராஜின் தண்டனையிலிருந்து விடுபடலாம். தூய்மையானால் தண்டனைகள் முடிந்து போகும். மிகப் பெரிய குறிக்கோளாகும். பிரஜைகள் ஆவது மிகவும் எளிது, அதிலும் பணக்கார பிரஜை, ஏழை பிரஜையாக யார் யார் மாற முடியும் என அனைத்தையும் புரிய வைக்கிறார். கடைசியில் உங்களுடைய புத்தியின் தொடர்பு அப்பா, மற்றும் வீட்டில் இருக்க வேண்டும். நாடகத்தில் நடிகர்களின் நடிப்பு முடியும் போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என புத்தியில் தோன்றுவது போலாகும். இது எல்லையற்ற விசயம் ஆகும். அது எல்லைக்குட்பட்ட வருமானம், இது எல்லைக்கப்பாற்பட்ட வருமானம் ஆகும். சிறந்த நடிகர்களின் வருமானம் நிறைய இருக்கிறது அல்லவா? இல்லறத்தில் இருந்தாலும் புத்தியோகத்தை அங்கே வையுங்கள் என பாபா கூறுகிறார். அங்கே ஒருவருக் கொருவர் மணப்பெண் மணவாளன். இங்கேயோ அனைவரும் ஒரு மணவாளனுடைய மணப் பெண்கள். அவரைத் தான் அனைவரும் நினைக்க வேண்டும். அதிசயமான பயணி அல்லவா? அனைத்து துக்கத்திலிருந்தும் விடுவித்து, சத்கதிக்கு அழைத்துச் செல்வதற்காக இச்சமயம் வந்திருக்கிறார். அவருக்கு உண்மையிலும் உண்மையான மணவாளன் என்று பெயர். அங்கே ஒருவர் இன்னொருவரின் சரீரத்தை விரும்புகின்றனர். அது தேக உணர்வின் யோகம் ஆகும். அது பூதங்களின் நினைவாகி விட்டது. மனிதர்களை நினைத்தல் என்றால் பஞ்ச பூதங்களை, இயற்கையை நினைத்தல் என்பது பொருள். இயற்கையை மறந்து என்னை நினையுங்கள் என பாபா கூறுகிறார். கடின உழைப்பு முயற்சி செய்ய வேண்டியுள்ளது அல்லவா? தெய்வீக குணங் களைக் கடைப்பிடிக்க வேண்டும். யாரையாவது பழி வாங்குதல் என்பது கூட அசுர குணம் ஆகும். சத்யுகத்தில் ஒரு தர்மம் தான் இருக்கிறது. பழிவாங்கும் விசயம் கிடையாது. அந்த அத்வைத (பிளவு படாத) தேவதா தர்மத்தை சிவபாபாவைத் தவிர வேறு யாரும் உருவாக்க முடியாது. சூட்சும வதனவாசி தேவதைகளுக்கு பரிஸ்தா என கூறலாம். இச்சமயம் பிராமணர்களாகிய நீங்களே பிறகு பரிஸ்தாவாக மாறுவீர்கள். பிறகு வீட்டிற்குத் திரும்பிச் செல்வீர்கள். பிறகு புது உலகத்திற்கு வந்து தெய்வீக குணங்களை உடைய மனிதர்கள் அதாவது தேவதைகளாக மாறுவீர்கள். இப்போது சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகிறீர்கள். பிரஜா பிதா பிரம்மாவின் குழந்தை ஆகவில்லை என்றால் எப்படி சொத்து அடைவீர்கள். இந்த பிரஜா பிதா பிரம்மா மற்றும் மம்மா தான் லஷ்மி நாராயணன் ஆகிறார்கள். எங்களுடைய ஜைன தர்மம் அனைத்தையும் விட பழமையானது என உங்களிடம் ஜைனர்கள் கூறுகிறார்கள் பாருங்கள். இப்போது உண்மையில் ஆதி தேவ் பிரம்மாவைத் தான் மகாவீர் என்கிறோம். பிரம்மா தான் ஆனால் யாரோ ஜைன முனிவர் வந்து மகாவீர் என பெயர் வைத்து விட்டனர். இப்போது நீங்கள் அனைவரும் மகாவீரர் அல்லவா. மாயாவை வெற்றி அடைந்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் சக்தி சாலி ஆகிறீர்கள். நீங்கள் உண்மையிலும் உண்மையான மகாவீர் மகாவீரனிகள். உங்களின் பெயர் சிவசக்தி. சிங்கத்தின் மீது சவாரி செய்கிறீர்கள். மற்ற மகாரதிகள் யானையின் மீது சவாரி செய் கின்றனர். யோக பலத்தினால் நீங்கள் உலகத்தின் மீது இராஜ்யம் செய்கின்றீர்கள். இப்போது நாம் வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டும். இது பழைய உலகம் என ஆத்மா கூறுகிறது. இதுவே எல்லையற்ற சன்னியாசம் ஆகும். இல்லறத்தில் இருந்தாலும் தூய்மையாக வேண்டும். மேலும் சக்கரத்தைப் புரிந்துக் கொள்வதால் சக்கரவர்த்தி ராஜா ஆகலாம். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தர்மராஜின் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு எந்த தேகத்தையும் நினைக்கக் கூடாது. இந்த கண்களினால் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு தந்தையை நினைக்க வேண்டும். அசரீரி யாவதற்கு பயிற்சி செய்ய வேண்டும். தூய்மையாக வேண்டும்.

2. முக்தி மற்றும் ஜீவன் முக்திக்கான வழியை அனைவருக்கும் கூற வேண்டும். இப்போது நாடகம் முடியப் போகிறது, வீட்டிற்குச் செல்ல வேண்டும். இந்த நினைவின் மூலம் எல்லையற்ற வருமானத்தை சேமிக்க வேண்டும்.

வரதானம்:
ஒரு நொடியின் பந்தயத்தின் மூலம் முழு கல்பத்தின் அதிர்ஷ்டத்தை அமைத்து கொள்ள கூடிய சிறந்த பாக்கியசாலி ஆவீர்களாக.

இந்த சங்கமத்தின் சமயத்தில் என்ன வேண்டுமோ எப்படி வேண்டுமோ எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பாக்கியத்தை அமைத்து கொள்ள முடியும் என்ற வரதானம் இந்த சங்கமத்தின் சமயத்திற்கு கிடைத்து உள்ளது .ஏனெனில் பாக்கிய விதாதா தந்தை தங்களது அதிர்ஷ்டத்தை அமைத்து கொள்ள கூடிய சாவியை குழந்தைகளின் கையில் கொடுத்திருக்கிறார். கடைசியாக இருப்பவரும் வேகமாக சென்று முதல் நம்பரில் வர முடியும். ஆனால் சேவைகளின் விஸ்தாரத்தில் சுயத்தின் ஸ்திதியை ஒரு நொடியில் சார சொரூபம் ஆக்குவதற்கான அப்பியாசம் மட்டும் செய்யுங்கள். இப்பொழுதே ஒரு நொடியில் மாஸ்டர் விதை ஆகி விடுங்கள் என்ற உத்தரவு கிடைத்தது என்றால் அவ்வாறு செய்வதற்கு நேரம் பிடிக்கக் கூடாது.இந்த ஒரு நொடியின் பந்தயத்தின் மூலம் முழு கல்பத்திற்கான அதிர்ஷ்டத்தை அமைத்து கொள்ள முடியும்.

சுலோகன்:
இரட்டை சேவை மூலம் சக்திசாலி வாயுமண்டலத்தை அமைத்தீர்கள் என்றால் இயற்கை அடிமை ஆகி விடும்.

அவ்யக்த சமிக்ஞை: ஏகாந்தபிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஒருமுக நிலையை கடைபிடியுங்கள்.

அனேக விருட்சங்களின் கிளைகள் ஒரே ஒரு சந்தனத்தின் மரம் ஆகிவிட்டது.2-4 தாய்மார்கள் கூட ஒரு இடத்தில் ஒன்றாக இருக்க முடியாமல் இருப்பார்கள் என்று ஜனங்கள் கூறுவார்கள்.மேலும் இங்கு தாய்மார்கள் அனைவரும் இப்பொழுது முழு உலகத்தில் ஒற்றுமையை நிலை நாட்டு வதற்கு கருவியாக இருக்கிறார்கள். தாய்மார்கள் வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்து வந்துள்ளார்கள். தேச ங்கள் பலவிதம்.மொழிகள் பலவிதம். கலாசாரம் பலவிதம். ஆனால் நீங்கள் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டு வந்துள்ளீர்கள்.