04-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது நீங்கள்
புருஷோத்தமர் ஆவதற்கான முயற்சி செய்கிறீர்கள். தேவதைகள் தான்
புருஷோத்தமர்கள். ஏனெனில் அவர்கள் தூய்மையானவர்கள், நீங்கள்
தூய்மையாகிக் கொண்டிருக்கிறீர்கள்
கேள்வி:
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்கு ஏன் அடைக்கலம் கொடுத்துள்ளார்?
பதில்:
ஏனெனில் நாம் அனைவரும்
குப்பைத்தொட்டியில் விழுந்து கிடந்தோம். பாபா நம்மை குப்பைத்
தொட்டியிலிருந்து வெளியில் எடுத்து மணமுள்ள மலர்களாக
ஆக்குகின்றார். அசுர குணமுடையவர்களை தெய்வீக குணமுடையவர்களாக
ஆக்குகிறார். நாடகப்படி பாபா வந்து நம்மை
குப்பைத்தொட்டியிலிருந்து எடுத்து தத்தெடுத்து தன்னுடையவராக
ஆக்கியுள்ளார்.
பாடல்:
இன்று அதிகாலையில் வந்தது யார்...
ஓம் சாந்தி.
இரவை பகலாக்க பாபா வர வேண்டியதாக இருக்கிறது. இப்போது குழந்தை
களாக நீங்கள் தெரிந்துள்ளீர்கள் - பாபா வந்துள்ளார். முதலில்
நாம் சூத்ர வர்ணத்தவராக இருந்தோம், சூத்திர புத்தி இருந்தது.
வர்ணத்தைப் பற்றிய சித்திரம் கூட புரிய வைக்க மிக நன்றாக உள்ளது.
நாம் இந்த வர்ணங்களில் எப்படி சுற்றி வருகின்றோம் என்று
குழந்தைகள் தெரிந்திருக்கின்றனர். இப்போது நம்மை பரம்பிதா
பரமாத்மா சூத்திரனிலிருந்து பிராமணன் ஆக்கியுள்ளார். கல்ப
கல்பமாக ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் நாம் பிராமணன்
ஆகிறோம். பிராமணர்களை புருஷோத்தமர்கள் என்று சொல்ல முடியாது,
புருஷோத்தமர்கள் என்று தேவதைகளைத் தான் சொல்வோம். பிராமணர்கள்
புருஷோத்தமர் ஆவதற்காக இங்கே முயற்சி செய்கிறார்கள்.
தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆவதற்குத் தான் தந்தையை
அழைக்கின்றனர். ஆக தனக்குத் தான் கேளுங்கள் - நாம் எந்தளவு
தூய்மையாகியுள்ளோம்? மாணவர்கள் கூட படிப்பிற் காக சிந்தனைக்
கடலை கடைகிறார்கள் அல்லவா! இந்தப் படிப்பின் மூலம் நாம் இப்படி
ஆகின்றோம் என்று புரிந்து கொள்கிறார்கள். நாம் தேவதை ஆவதற்காக
இப்போது பிராமணன் ஆகியுள்ளோம் என்று குழந்தைகளின் புத்தியில்
உள்ளது. இது விலைமதிப்பற்ற வாழ்க்கை. ஏனெனில் நீங்கள் ஈஸ்வரிய
குழந்தைகள். ஈஸ்வரன் உங்களுக்கு ராஜயோகம் கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கிறார். தூய்மையற்ற வரிலிருந்து தூய்மையானவராக
ஆக்கிக் கொண்டிருக்கிறார். தூய்மையான தேவதைகளாக ஆகின்றோம்.
வர்ணங்களைப் பற்றிப் புரிய வைப்பது மிக நல்லது. சன்னியாசிகள்
இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். மற்றபடி 84 பிறவி
களின் கணக்கை புரிந்து கொள்ள முடியும். நாம் சன்னியாச
தர்மத்தினர் 84 பிறவிகள் எடுப்ப தில்லை என்பதைக் கூட புரிந்து
கொள்ள முடியும். இஸ்லாமியர் பௌத்தர்கள் கூட நாம் 84 பிறவிகள்
எடுப்ப தில்லை என்பதை புரிந்து கொள்வார்கள். மற்றபடி மறுபிறவி
எடுப்பார்கள், ஆனால் குறைவான பிறவி எடுக்கிறார்கள். நீங்கள்
புரியவைத்தால் உடனே புரிந்து கொள்வார்கள். புரியவைப்பதற்கும்
யுக்தி தேவை. குழந்தைகளாகிய நீங்கள் இங்கே முன்னால்
அமர்ந்திருக்கும் போது பாபா புத்தியை புத்துணர்வு அடைய
வைக்கிறார். மற்ற குழந்தைகள் கூட இங்கே புத்துணர்வு அடைவதற்காக
வருகிறார்கள். இப்படி தாரணை செய்யுங்கள் என்று உங்களை பாபா
தினமும் புத்துணர்வு அடைய வைக்கிறார். நாம் 84 பிறவிகள் எப்படி
எடுக்கிறோம், நாம் எப்படி சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகிறோம்?
என்ற சிந்தனை புத்தியில் ஓட வேண்டும். நாம் பிரம்மாவின்
குழந்தைகள் பிராமணர்கள். இப்போது பிரம்மா எங்கிருந்து வந்தார்?
பாபா வந்து புரிய வைக்கிறார் - நான் இவருக்கு பிரம்மா என்ற
பெயர் வைக்கிறேன். இவர்கள் பிரம்மா குமார், பிரம்மா குமாரிகள்,
இது குடும்பமாக இருக்கிறது. ஆக நிச்சயமாக தத்தெடுக்கப்
பட்டவர்கள். தந்தை தான் தத்தெடுக்கிறார். அவரை தந்தை என்று
சொல்லப்படுகிறது, தாதா (மூத்த அண்ணன்) என்று சொல்ல மாட்டோம்.
தந்தையை தந்தை என்று தான் சொல்ல முடியும். தந்தையிட மிருந்து
ஆஸ்தி கிடைக்கிறது. பெரியப்பா, சித்தப்பா, மாமாவிடமிருந்து
தத்தெடுக்கப்படுகிறது. பாபா ஏற்கனவே சொல்லியிருந்தார் - ஒரு
குழந்தை குப்பைத் தொட்டியில் விழுந்து கிடந்தது, அதை யாரோ
எடுத்துச் சென்று ஒருவரிடம் வளர்க்கக் கொடுத்தார்கள். ஏனெனில்
அவருக்கு தனக்கென்று குழந்தை இருக்கவில்லை. ஆக குழந்தை யாரிடம்
வளர்க்கப்படுகிறதோ அவர்களை அம்மா-அப்பா (மம்மா-பாபா) என்று
சொல்லும் அல்லவா. இது இங்கே எல்லைக்கப்பாற்பட்ட விசயமாகும்.
குழந்தைகளாகிய நீங்களும் எல்லைக்கப்பாற்பட்ட (மீள முடியாத)
குப்பைத்தொட்டியில் விழுந்து கிடந்தீர்கள். விஷ நிறைந்த நதியில்
(வைதரணியில்) விழுந்து கிடந்தீர்கள். எவ்வளவு அழுக்காகி
விட்டீர்கள். நாடகப்படி அந்த குப்பையிலிருந்து எடுத்து உங்களைத்
தத்தெடுத்துள்ளார். தமோபிர தானத்தை குப்பை என்று தான் சொல்வோம்
அல்லவா! அசுர குணமுடைய மனிதர்கள் தேக அபிமானிகள். காம குரோதம்
கூட பெரிய விகாரம் அல்லவா! ஆக நீங்கள் இராவணின் பெரிய (கழிவு
தொட்டியில்) சிறையில் உள்ளீர்கள். உண்மையில் அகதிகளாக
உள்ளீர்கள். இப்போது நீங்கள் சிறையிலிருந்து விடுபட்டு
மலர்களைப் போன்ற தேவதை ஆவதற்காக எல்லைக்கப் பாற்பட்ட தந்தையின்
அடைக்கலம் பெற்றுள்ளீர்கள். இந்த நேரம் முழு உலகமும் பெரிய
சிறையில் அடைபட்டுள்ளது. பாபா வந்து குப்பையிலிருந்து உங்களை
எடுத்து தன்னுடையவராக மாற்றுகிறார். ஆனால் குப்பையில்
இருக்கக்கூடியவர்கள் அவ்வாறு மோசமாக இருக்கிறார்கள், வெளியே
எடுத்த பின்னரும் அவர்களுக்கு குப்பை தான் பிடித்திருக்கிறது.
பாபா வந்து எல்லைக்கப்பாற்பட்ட குப்பையிலிருந்து நீக்குகிறார்.
பாபா, முள் காட்டிலிருந்து விடுவித்து எங்களை மலர்களாக்குங்கள்,
இறைவனின் மலர் தோட்டத்தில் அமர்த்துங்கள் என்று அழைக் கின்றனர்.
இப்போது அசுரர்களின் காட்டில் விழுந்து கிடக்கின்றனர். பாபா
குழந்தைகளாகிய உங்களை (மலர்) தோட்டத்துக்கு அழைத்துச்
செல்கிறார். சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகி யுள்ளோம், பிறகு
தேவதை ஆவோம். இது தேவதைகளின் இராஜ்யம் ஆகும். பிராமணர்களின்
இராஜ்யமே கிடையாது. பாண்டவர்களின் பெயர் இருந்தாலும்,
பாண்டவர்களுக்கு இராஜ்யம் கிடையாது. இராஜ்யம் அடைவதற்காக
தந்தையிடம் அமர்ந்துள்ளீர்கள். காரிருள் என்கின்ற இரவு முடிந்து
இப்போது எல்லைக்கப்பாற்பட்ட பகல் ஆரம்பமாகிறது. இன்று
அதிகாலையில் வந்தது யார் என்ற பாட்டைக் கேட்டீர்கள் அல்லவா!
இரவை முடித்து பகலை உருவாக்குவதற்காக அதாவது நரகத்தை அழித்து
சொர்க்கத்தை ஸ்தாபனை செய்வதற்காக அதிகாலையில் வருகிறார். இது
புத்தியில் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்கும். யார் புதிய
உலகத்தில் உயர்பதவி அடைபவர் களோ அவர்கள் ஒருபோதும் தன்னுடைய
அசுர குணத்தைக் காட்ட மாட்டார்கள். எந்த யக்ஞத்தின் மூலம்
இவ்வளவு உயர்ந்த பதவி அடைகிறார் களோ அந்த யக்ஞத்துக்கு அன்போடு
சேவை செய்வார்கள். இப்படிப்பட்ட யக்ஞத்துக்காக எலும்புகளைக்
கூட கொடுக்க (கடின உழைப்பு) வேண்டும். இந்த நடத்தை மூலம் நாம்
எப்படி உயர்ந்த பதவி அடைய முடியும் என்று தன்னைத்தான் பார்க்க
வேண்டும். ஒன்றுமறியாத சிறு குழந்தை இல்லை தானே. ராஜா எப்படி
உருவாகிறார் கள்? பிரஜைகள் எப்படி உருவாகிறார்கள்? என்று
புரிந்து கொள்ள முடியும். பாபா அனுபவம் நிறைந்த ரதத்தை
எடுத்துள்ளார். அவர் ராஜா போன்றவர்களை நன்றாகத் தெரிந்தவர்.
ராஜாக்களின் தாச தாசிகளுக்குக் கூட மிகுந்த சுகம் கிடைக்கிறது.
அவர்கள் ராஜாக்கள் கூடவே இருக்கின்றனர். ஆனால் தாச தாசிகள்
என்று அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் சுகம் இருக்கிறதல்லவா. ராஜா
ராணிக்கு என்ன கிடைக்கிறதோ அதுவே அவர்களுக்கும் கிடைக்கும்,
வெளியே உள்ளவர்கள் அதை சாப்பிட முடியாது. தாச தாசிகள் கூட
வரிசைக்கிரமமாக இருக் கின்றனர். சிலர் அலங்காரம் செய்பவர்கள்,
சிலர் குழந்தைகளை வளர்ப்பவர்கள், சிலர் துப்புரவு செய்பவர்கள்.
இங்கே ராஜா ராணிகளுக்கே இவ்வளவு தாச தாசிகள் இருக்கும்போது
அங்கே (சத்யுகத்தில்) நிறைய பேர் இருப்பார்கள். அனைவருக்கும்
அவரவருக்கென்று பொறுப்புகள் இருக்கும். வசிப்பிடம் தனித்தனியாக
இருக்கும். அவர்கள் ராஜா ராணி போல அலங்கரிக்கப்பட்ட வர்களாக
இருக்க மாட்டார்கள். சேவாதாரிகளுக்கான வசிப்பிடம் இருக்கிற
தல்லவா. அரண்மனைக்குள் வருவார்கள், ஆனால் தத்தமது அரசு
குடியிருப்பில் தான் தங்குவார்கள். ஆக பாபா நன்றாக புரிய
வைக்கிறார் - நாம் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக ஆக வேண்டும் என்று
தம் மீது தாமே இரக்கம் காட்டுங்கள். இப்போது நாம்
சூத்திரனிலிருந்து பிராமணன் ஆகின்றோம். ஆஹா சௌபாக்கியம், பிறகு
தேவதை ஆவோம். இந்த சங்கமயுகம் மிகுந்த நன்மை செய்யக் கூடியது.
உங்களுடைய ஒவ்வொரு விசயத்திலும் நன்மை நிறைந்துள்ளது.
சமையலறையில் கூட யோகத்தில் இருந்து உணவு சமைத்தால் பலருக்கு
நன்மை ஏற்படும். ஸ்ரீநாத் துவாரகையில் முற்றிலும்
அமைதியிலிருந்து சமையல் செய்வார்கள். ஸ்ரீநாத்தின் நினைவில்
இருப்பார்கள். பக்தர்கள் தன்னுடைய பக்தியில் மிகவும் தீவிரமாக
இருக்கிறார்கள். நீங்கள் ஞானத்தில் தீவிரமாக இருக்க வேண்டும்.
கிருஷ்ணரை அவ்வளவு பக்தி செய் கிறார்கள், கேட்கவே கேட்காதீர்கள்.
(வார்த்தைகளில் விவரிக்க முடியாது) பிருந்தாவனத்தில் 2 பெண்
குழந்தைகள் இருந்தனர், முழுமையான பக்தைகளாக இருந்தனர், நாங்கள்
இங்கேயே இருப்போம், இங்கேயே கிருஷ்ணரின் நினைவில் உடலை விடுவோம்
என்று சொல்கின்றனர். நல்லது, வீட்டில் போய் இருங்கள், ஞானம்
எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் அனைவரும் சொல்கிறார்கள்.
ஆனால் நாங்கள் இங்கேயே தான் இருப்போம் என்று அவர்கள்
சொல்கிறார்கள். ஆக அவர்களை பக்த சிரோன்மணி என்று
சொல்லப்படுகிறது. கிருஷ்ணர் மீது எவ்வளவு பலி ஆகிறார்கள்.
இப்போது நீங்கள் பாபா மீது பலி ஆக வேண்டும். ஆரம்பத்தில்
சிவபாபா மீது எத்தனை பேர் பலி ஆனார்கள். நிறைய பேர் வந்தார்கள்.
இந்தியா வந்ததும் பலருக்கு தன்னுடைய வீடு, லௌகீகக் குடும்பம்
நினைவுக்கு வர ஆரம்பித்தது, எவ்வளவு பேர் போய் விட்டனர். நிறைய
பேர் மீது கிரகச்சாரம் அமர்ந்து விடுகிறது. எப்படி
எப்படியெல்லாம் கிரகச்சாரம் பிடித்து விடுகிறது. யாரேனும்
வந்தால், எங்கே வந்துள்ளீர்கள் என்று கேளுங்கள் என்று பாபா
புரிய வைத்துள்ளார். வெளியே பிரம்மா குமார் பிரம்மா குமாரிகள்
போர்டு பார்த்தோம் என்பார்கள். இது குடும்பம் அல்லவா. ஒன்று
நிராகார் பரம்பிதா பரமாத்மா, இன்னொருவர் பிரஜாபிதா பிரம்மா.
இருவரும் மகிமை பாடப்பட்டுள்ளனர். இவர்கள் (பி.கு) அனைவரும்
குழந்தைகள். சிவபாபா தாத்தா ஆவார். அவரிடமிருந்து தான் ஆஸ்தி
கிடைக்கிறது. என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மையற்ற
வரிலிருந்து தூய்மையானவராக ஆகிவிடுவீர்கள் என்று அவர் வழி
கூறுகிறார். கல்பத்திற்கு முன்பும் கூட இப்படி வழி காட்டி
யுள்ளார். எவ்வளவு உயர்ந்த படிப்பாக உள்ளது. நாம்
பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டி ருக்கிறோம் என்பது கூட
உங்கள் புத்தியில் உள்ளது.
குழந்தைகளாகிய நீங்கள் மனிதரிலிருந்து தேவதை ஆகக்கூடிய படிப்பு
படித்துக் கொண்டிருக் கிறீர்கள். நீங்கள் கண்டிப்பாக தெய்வீக
குணங்களை தாரணை செய்ய வேண்டும். நீங்கள் சாப்பிடுவது குடிப்பது,
பேச்சு நடத்தை எவ்வளவு ராயலாக இருக்க வேண்டும். தேவதைகள்
எவ்வளவு குறைவாக சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு எந்த ஆசையும்
இருப்ப தில்லை. 36 விதமான போஜனம் சாப்பிடுவார்கள், ஆனால்
கொஞ்சமாக சாப்பிடுவார்கள். சாப்பிடுவதில் ஆசை வைப்பது கூட அசுர
நடத்தை ஆகும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டுமானால்
சாப்பிடுவது குடிப்பது மிக சுத்தமாக சாதாரணமாக இருக்க வேண்டும்.
ஆனால் மாயை ஒரேடியாக கல் புத்தியாக ஆக்கி விடுகிறது. பிறகு
பதவியும் கூட அப்படி கிடைக்கும். பாபா சொல்கிறார் - தனக்கு
நன்மை செய்து கொள்ள தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள்.
நன்றாக படித்தால், படிக்க வைத்தால் உங்களுக்கு சன்மானம்
கிடைக்கும். பாபா கொடுப்பதில்லை, நீங்கள் தன்னுடைய முயற்சியால்
அடைகிறீர்கள். தன்னைத்தான் பார்க்க வேண்டும் - நாம் எந்தளவு
சேவை செய்கிறோம்? நாம் என்ன ஆவோம்? இந்த நேரம் சரீரம் விட்டால்
என்ன கிடைக்கும்? பாபாவிடம் யாராவது கேட்டால் பாபா உடனே
சொல்லிவிடுவார் - இந்த மாதிரியான நடத்தைக்கு இந்த மாதிரியான
பதவியை அடைவாய். முயற்சியே செய்யவில்லை என்றால் கல்ப
கல்பத்திற்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள். நல்ல சேவை
செய்பவர்கள் கண்டிப்பாக நல்ல பதவி அடைவார் கள். முயற்சி
செய்யாதவர்கள் தாச தாசியாக ஆவார்கள் என்று உள்ளுக்குள் புரிந்து
கொள்ள முடிகிறது. இதை வெளிப்படையாக சொல்ல முடியாது. வகுப்பில்
கூட நாம் பெரியவர் ஆவோமா அல்லது சிறியவர் ஆவோமா? என்று
மாணவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இங்கே கூட அப்படித்தான்.
பெரியவர் யாரோ அவர்கள் ராஜா ராணி ஆவார்கள், சிறியவர் குறைந்த
பதவி அடைவார்கள். செல்வந்தர்களில் கூட மூத்தவர் மற்றும்
சிறியவர் இருப்பார்கள். தாச தாசி களிலும் பெரியவர் சிறியவர்
இருப்பார்கள். பெரிய ஆத்மாக்களின் பதவி உயர்ந்ததாக இருக்கும்,
துப்புரவு செய்யும் தாச தாசிக்கு அரண்மனைக்குள் வர அனுமதி இல்லை.
இந்த அனைத்து விசயங் களையும் குழந்தைகளாகிய நீங்கள் நல்லவிதமாக
புரிந்து கொள்ள முடியும். இனிவரும் நாட்களில் இன்னும் கூட
புரிந்து கொள்வீர்கள். உயர்ந்த நிலை அடைபவர்களுக்கு மரியாதையும்
கொடுக்க வேண்டும். பாருங்கள், குமாரகா தாதி, (பிரகாஷ்மணி தாதி)
அவர் பெரியவர், ஆதலால் மரியாதை கொடுக்க வேண்டும்.
பாபா குழந்தைகளின் கவனத்திற்காக சொல்கிறார் - யார் மகாரதி
குழந்தைகளோ, அவர் களுக்கு மரியாதை கொடுங்கள். மதிப்பு
கொடுக்கவில்லை என்றால் தன் மேல் பாவச்சுமையை ஏற்றிக்
கொள்பவராகிறார்கள். இந்த அனைத்து விசயங்களுக்கும் பாபா கவனம்
கொடுக்கிறார்- மிக எச்சரிக்கை தேவை. நம்பர்வார் யாருக்கு எப்படி
மதிப்பு கொடுக்க வேண்டும் என்று. பாபா ஒவ்வொருவரையும்
தெரிந்திருக்கிறார். இதை வெளிப்படையாக சொல்லி விட்டால், விரோதி
யாக ஆவதில் சிறிதும் தாமதிக்க மாட்டார்கள். பிறகு மாதர்கள்,
குமாரிகளுக்கும் கூட பந்தனம் ஏற்பட்டு விடுகிறது. அனைத்தையும்
சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதிகமாக மாதர்கள் தான் இப்படி
எழுதுகிறார்கள் - பாபா, என்னை இவர் மிகவும் துன்புறுத்துகிறார்.
நான் என்ன செய்வது? அட, துன்புறுத்தப்படுவதற்கு நீங்கள் என்ன
மிருகமா? மனதிற்குள் அது போன்ற எண்ணம் இருக்கிறது, ஆகையால் தான்
என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இதில் கேட்பதற்கு அவசியமே
இல்லை. ஆத்மா தனக்குத் தான் நண்பன், தனக்குத் தான் எதிரி. எதை
விரும்புகிறதோ அதை செய்கிறது. கேட்கிறீர்கள் என்றால், அதை மனம்
விரும்புகிறது என்று அர்த்தம். முக்கியமான விசயமே நினைவு தான்.
நினைவின் மூலம் தான் தூய்மை ஆகின்றீர்கள். இந்த லட்சுமி
நாராயணர் நம்பர் ஒன் தூய்மையானவர்கள் அல்லவா! மம்மா எவ்வளவு
சேவை செய்கிறார்கள். நாங்கள் மம்மாவை விட புத்திசாலி என்று
யாரும் சொல்ல முடியாது. மம்மா ஞானத்தில் அனைவரையும் விட
தீவிரமானவர். யோகத்தில் குறை நிறைய பேரிடம் உள்ளது. நினைவில்
இருக்க முடிவதில்லை. நினைவே செய்யவில்லை என்றால் எப்படி
விகர்மம் வினாசமாகும்? கடைசியில் நினைவு செய்தபடியே உடலை
விடவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. சிவபாபாவின் நினைவில்
உயிர் உடலை விட்டுப்பிரிய வேண்டும். ஒரு பாபாவைத் தவிர வேறு
யாரும் நினைவுக்கு வரக்கூடாது. எதிலும் ஆசை வைக்கக் கூடாது.
இந்த பயிற்சி செய்ய வேண்டும். நாம் அசரீரியாக வந்தோம், பிறகு
அசரீரியாகிப் போக வேண்டும். குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும்
புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். மிக இனிமையானவர் ஆக
வேண்டும். தெய்வீக குணங்களும் இருக்க வேண்டும். தேக
அபிமானத்தின் பூதம் இருக்கிறதல்லவா! தன் மீது மிகுந்த கவனம்
வைக்க வேண்டும். மிக அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். தந்தையை
நினைவு செய்யுங்கள் மற்றும் சக்கரத்தை நினைவு செய்யுங்கள்.
சக்கரத்தின் ரகசியத்தை யாருக்குப் புரிய வைத்தாலும் அதிசயப்படு
வார்கள். 84 பிறவிகள் நினைவில் இல்லை என்றால் 84 லட்சம்
பிறவிகளை எப்படி நினைவு செய்ய முடியும்? நினைத்துக் கூட
பார்க்க முடியாது. இந்த சக்கரத்தை புத்தியில் நினைவு செய்தாலும்
ஆஹா சௌபாக்கியம். இப்போது இந்த நாடகம் முடிவடைகிறது. பழைய
உலகத்தின் மீது வைராக்கியம் வர வேண்டும். புத்தியோகம்
சாந்திதாமம், சுகதாமத்தின் மீது இருக்க வேண்டும். கீதையில் கூட
மன்மனாபவ என்பது உள்ளது. கீதையை படிக்கும் யாரும் மன்மனாபவ
என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை. குழந்தைகளாகிய
நீங்கள் தெரிந்து கொள்கிறீர்கள் - பகவானுடைய மகாவாக்கியம்,
தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விடுத்து தன்னை ஆத்மா என்று
புரிந்து கொள்ளுங்கள். இதை யார் சொன்னது? கிருஷ்ணர் பகவான்
அல்ல. நாங்கள் சாஸ்திரங்களைத் தான் நம்புகிறோம் என்று சிலர்
சொல்கின்றனர். பகவானே வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சாஸ்திரங்களைப் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். பகவான்
வந்துள்ளார், ராஜயோகம் கற்றுத்தருகிறார், ஸ்தாபனை நடந்து
கொண்டிருக்கிறது. இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்
தினுடையதாகும். பகவான் மீது நிச்சயம் ஏற்பட்டுவிட்டால், ஆஸ்தி
பெற வந்துவிடுவார்கள். அப்போது பக்தி கூட நீங்கி விடும். ஆனால்
நிச்சயம் (நம்பிக்கை) ஏற்பட வேண்டும் அல்லவா! நல்லது
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தேவதை ஆவதற்காக மிக இராயலான பழக்க வழங்களை நடைமுறையில்
வேண்டும். சாப்பிடுவது குடிப்பது மிக சுத்தமாகவும்
சாதாரணமாகவும் இருக்க வேண்டும். பேராசைப்படக்கூடாது, தனக்கு
நன்மை செய்து கொள்ள தெய்வீக குணங்களை தாரணைசெய்ய வேண்டும்.
2. தன் மீது கவனம் வைக்க வேண்டும், அனைவரோடும் மிக அன்புடன்
நடக்க வேண்டும். தன்னை விட சீனியர் (பெரியவர்கள்)
ஆத்மாக்களுக்கு கண்டிப்பாக மதிப்பு கொடுக்க வேண்டும். மிக மிக
இனிமையானவராக ஆக வேண்டும். தேக அபிமானத்தில் வரக் கூடாது.
வரதானம்:
கடந்து போன விசயங்களை கருணை உள்ளமுடையவராகி தனக்குள் கரைத்து
விடக் கூடிய நற்சிந்தனையாளர் ஆகுக.
ஒருவரது கடந்து போன பலவீன விசயங்களை யாராவது கூறுகிறார்கள்
எனில் சுப பாவனையுடன் தூரமாக்கி விடுங்கள். வீண் சிந்தனை அல்லது
பலவீன விசயங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளக் கூடாது. கடந்த
போன விசயங்களை கருணை உள்ளமுடைய வராகி தனக்குள் உள்ளடக்கி விடுங்
கள். உள்ளடக்கி விட்டு சுப பாவனையுடன் அந்த ஆத்மாவிற்கு மனசேவை
செய்து கொண்டே இருங்கள். சன்ஸ்காரங்களுக்கு வசமாகி ஒருவர்
தவறாக கூறினால், செய்தால் அல்லது கேட்கிறார் எனில் அதை மாற்றி
விடுங்கள். ஒருவரி-ருந்து இருவர், இருவரி-ருந்து மூவர் என்று
வீண் விசயங்களின் மாலை உருவாகி விடக் கூடாது. இவ்வாறு கவனம்
செலுத்துவது என்றால் நற்சிந்தனையாளர் ஆவதாகும்.
சுலோகன்:
திருப்தி மணியாக ஆகும் பொழுது பிரபுவிற்குப் பிரியமானவர்,
உலகிற்குப் பிரியமானவர் மற்றும் தனக்குப் பிரியமானவர்
ஆகிவிடுவீர்கள்.
அவ்யக்த இசாரே: இணைந்த ரூப நினைவின் மூலம் சதா வெற்றியாளர்
ஆகுங்கள்
உடல் மற்றும் ஆத்மா இணைந்திருந்தால் வாழ்க்கை இருக்கிறது. ஆத்மா
சரீரத்திலிருந்து நீங்கி விட்டால் வாழ்க்கை முடிவடைந்து விடும்.
அதே போன்று கர்மயோகி வாழ்க்கை என்றால் காரியம் யோகா இன்றி
இருக்கக் கூடாது, யோகா காரியம் இன்றி இருக்கக் கூடாது. சதா
இணைந்த ரூபத்தில் இருக்கும் போது தான் வெற்றி கிடைத்துக் கொண்டே
இருக்கும்.