15.11.26 காலை முரளி
ஓம் சாந்தி 20.03.2012 பாப்தாதா,
மதுபன்
திருப்தியின் சக்தியை முகத்திலும் நடத்தையிலும் தாரணை செய்து,
பிரம்மா பாபாவிற்குச் சமமாக ஆகுங்கள், சதா மகிழ்ச்சியாக
இருங்கள்
மேலும் மகிழ்ச்சியைப் பகிருங்கள்.
இன்று பாப்தாதா தம் எதிரிலோ அல்லது தொலைவிலோ இருக்கக்கூடிய
திருப்திமணியான குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு குழந்தையும் தங்கள் திருப்தியின் சக்தியால் பிரகாசித்து,
புன்சிரித்தபடி சந்திப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தத் திருப்தியின் சக்தி என்பது அனைத்தையும் விட (அதாவது
அனைத்து சக்திகளையும் விட) மிகவும் மகத்தானது, எனவே இதில்
அனைத்துப் பிராப்திகளும் அடங்கியுள்ளன. திருப்தியின் சக்தியைத்
தாரணை செய்யும் திருப்திமணிகள் - தமக்கும் பிரியமானவர்கள்,
பாபாவிற்கும் பிரியமானவர்கள், பரிவாரத்திற்கும் (பிராமண
குடும்பத்தினருக்கும்) பிரியமானவர்கள்; ஏனெனில் திருப்தி
எங்குள்ளதோ, அங்கு அனைத்துச் சக்திகளும் திருப்தி என்ற
சக்திக்குள் அடங்கியுள்ளன. திருப்தி என்ற சக்தியின் அதிர்வலைகள்
நாலாபுறமும் பரவுகின்றது. திருப்திமணியாக இருக்கும் ஆத்மாக்கள்
ஒருபோதும் மாயையிடம் தோற்பதில்லை, மாயை தான் அவர்களிடம்
தோற்கின்றது. திருப்திமணியான ஆத்மாக்கள் அனைவரின் இதயத்தையும்
தங்களுடைய தாக்கிக் கொள்ள முடியும் (அனைவரின் இதயத்தையும்
வெல்ல முடியும்). திருப்திமணியான ஆத்மாக்கள் - மாயையின் அல்லது
இயற்கையின் விதவிதமான சலசலப்புகளை ஒரு கார்ட்டூன் படத்தைப்
பார்ப்பது போல் அனுபவம் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
இப்படி ஒவ்வொரு குழந்தையும் தன்னைத் திருப்தியின் சக்தியில்
நிறைவடைந்தவராக உணர்கின்றீர்களா? "நான் திருப்திமணியாக
இருக்கின்றேனா?" என்று தங்களிடம் கேளுங்கள். சில குழந்தைகள் "அவ்வப்போது
இருக்கின்றோம், சதா இருப்பதில்லை" என்று கூறுகின்றார்கள்; ஆனால்
பாப்தாதாவிற்கு "அவ்வப்போது" என்ற சொல் பிடிப்பதில்லை. பாப்தாதா
சதா ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பு நினைவுகளையும் மகிழ்ச்சியையும்
தருகின்றார். எனவே பாப்தாதாவிற்கு இந்த "அவ்வப்போது" என்ற சொல்
பிடிப்பதில்லை, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த
"அவ்வப்போது" என்ற சொல்லை எவ்வாறு மாற்ற முடியும் என்பதே
பாப்தாதாவின் விருப்பமாகும். "அவ்வப்போது" என்ற சொல்
பிராமணர்களின் அகராதியிலேயே இல்லை, "சதா" என்பது தான் உள்ளது.
எனவே, பாபாவிற்குப் பிரியமானவர்களாகி, மாயையின்
செல்வாக்கிலிருந்து விலகி நின்ற அனைத்துக் குழந்தைகளும், இன்று
இந்த "அவ்வப்போது" என்ற சொல்லை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா?
முடியுமா? ஏனென்றால், பாப்தாதா நீண்டகாலமாகச் சொல்லி
வருகின்றார் அதாவது ஏதாவதொரு சலசலப்பு என்பது திடீரென்று வரும்.
அதை எதிர்கொள்ள தயாராக வேண்டுமென்றால், இப்போது வரை "அவ்வப்போது"
என்ற சன்ஸ்காரம் (தங்களிடம்) இருந்தால், சதா காலத்திற்குமான
ராஜ்ய பாக்கியத்திற்கு உரிமை யாளராக ஆக முடியுமா?
பிரம்மா பாபாவிடம் அனைவருக்கும் இதயப்பூர்வமான அன்பு உள்ளது.
பிரம்மா பாபாவிற்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்-அதாவது "(தங்கள்)
கூடவே இருக்கின்றோம், கூடவே செல் வோம், கூடவே ராஜ்யம் செய்வோம்"
என்று. இந்த வாக்குறுதி உறுதியானது தானே! தலையை ஆட்டுங்கள்.
உறுதியானதா? எவ்வளவு உறுதியானது! பிரம்மா பாபா எப்போதாவது "அவ்வப்
போது" என்ற வார்த்தையை சொல்லியிருக்கின்றாரா? தங்கள்
அனைவருக்கும்கூட சதா அமிர்த வேளையில் அன்பு நினைவுகளை
கொடுத்தார் மேலும் (பிரம்மா பாபா) சதா சிவபாபாவுடன் இணைந்து
ஞானத்தின் விஷயங்கள், அன்பினுடைய விஷயங்கள், ஊக்கம்-
உற்சாகத்தின் விஷயங்களைக் கூறினார். பாப்தாதாவிடம் அன்பு
இருக்கின்றதா? என்று அனைவரையும் கை தூக்கச் சொன்னால், அனைவரும்
இரண்டு கைகளையும் தூக்குவீர்கள். அப்படித்தானே! உறுதியா? அன்பு
இருக்கும்போது, அன்பானவரின் ஒவ்வொரு சொல்லின் மீதும் அன்பு
ஏற்படும். பிரம்மா பாபா ஒருபோதும் சிவ தந்தையிடம் "அவ்வப்போது
நடக்கின்றது" என்று கூறிய தில்லை. சதா தந்தையைப் பின்பற்றினார்,
கூடவே உங்களையும் பின்பற்ற வைத்தார்; ஏனெனில் பிரம்மா
பாபாவிற்கு குழந்தைகள் மீது ஆழமான அன்பு உள்ளது, அதனால்தான்
உங்களுடைய பெயர் கூட என்னவாக இருக்கின்றது? "பிரம்மா குமாரி" (பிரம்மாவின்
குமாரி என அழைக்கப் படுகின்றது), "சிவ குமாரி" என்ற பெயர் இல்லை.
எனவே பிரம்மா பாபாவிடம் அன்பு இருக் கின்றது என்றால் அர்த்தம்
பிரம்மா பாபா சொன்னார்; பிரம்மா குமார் மற்றும் குமாரிகள் அதை
ஏற்றனர் என்று இருப்பதாகும். அன்பு என்றால் அர்ப்பணிப்பு.
அப்படியானால் எதன் மீது அர்ப்பணிப்பீர்கள்? அவருடைய கட்டளையின்
மீது. எதைச் சொன்னாரோ அதைச் செய்தார், ஏனெனில் பிரம்மா
பாபாவுடன் சிவ பாபாவும் இருக்கின்றார். தனியாக இல்லை. "பாப்தாதா,
பாப்தாதா" என்று சொல்கின்றீர்கள் தானே!
எனவே இன்று பாப்தாதா "அவ்வப்போது" என்ற சொல்லை ஒவ்வொரு
குழந்தையின் வாயிலிருந்தும் முடிவுக்குக் கொண்டுவர
விரும்புகின்றார். எனவே நீங்கள் அனைவரும் பாபாவின் தோழர்கள்.
அன்பு இருக்கின்றது தானே! அன்பில் தன்னையே அர்ப்பணித்து விடு
கின்றார்கள், இது வெறும் ஒரு சொல்லை (அவ்வப்போது என்ற சொல்லை)
அர்ப்பணிப்பது மட்டுமே; ஏனெனில் பாப்தாதா ஒவ்வொரு குழந்தையையும்
மாலையின் வெற்றி ரத்தினமாக மாற்ற விரும்புகின்றார். எனவே உங்களை
மாலையின் மணியாகக் கருதுகின்றீர்களா? வெற்றி யாளராகக்
கருதுகின்றீர்களா? சில குழந்தைகள் கூறுகின்றார்கள்:
பிராமணர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், மாலையோ 108 மணிகள்
கொண்டது, எனவே 108 பேர் தானே வருவார்கள்! ஆனால் நீங்கள்
நிறைவடைந்தவர்களாக, வெற்றியாளர்களாக மாறுங்கள்; 108 மாலை
என்பதைப் பற்றி யோசிக்காதீர்கள், பாப்தாதா நடுவில்
இணைப்புகளையும் (இணைப்பு மணிகளையும்) சேர்த்துவிடுவார். ஆனால்
நீங்கள் வெற்றியாளராகுங்கள். சில குழந்தைகள் "தெரியவில்லை,
நம்பர் கிடைக்குமா கிடைக்காதா" என்று யோசிக்கின்றார்கள்.
நீங்கள் நிறைவடைந்தவரானால், பாபா எண் கொடுத்துவிடுவார், ஏனெனில்
பாபாவிற்கு ஒவ்வொரு குழந்தை மீதும் அன்பு உள்ளது. கடைசி
குழந்தையாக இருந்தாலும், அவர் மீதும் பாபாவிற்கு அன்பு உள்ளது
என்று முன்பே கூறப்பட்டது; ஏனெனில் அந்தக் குழந்தை தன்
சுபாவத்திற்கு வசப்பட்டிருந்தாலும், பாபாவை அறிந்து "என் பாபா"
என்று கூறியுள்ளது. உலகத்தில் எவ்வளவு பெரிய பதவியில்
இருப்பவர்களும் கூட பாபாவை அடையாளம் காணவில்லை, ஆனால் இந்த
ஆத்மா (பாபாவை) அடையாளம் கண்டுள்ளது. ஏதேனும் பலவீனத்தின்
வசப்பட்டிருந்தாலும் பாபாவை அடை யாளம் கண்டுள்ளது. அன்போடு "என்
பாபா" என்று கூறுவதால், கடைசி குழந்தைகளின் மீதும் பாபாவின்
அன்பு இருக்கவே செய்கின்றது; அதோடு அவர்கள் மீது சிறப்பான
கல்யாண் திருஷ்டி (நன்மை நிறைந்த பார்வையும்), கல்யாண்
விருத்தியும் (நன்மை நிறைந்த உள்ளுணர்வும்) இருக்கின்றது அதாவது
இந்த குழந்தை ஏதேனும் ஒருவகையில் முன்னேறிக் கொண்டே இருக்க
வேண்டும் என்று.
எனவே பாப்தாதா இன்று தெளிவாகக் கூறுகின்றார்: "இது எப்படி
நடக்கும், அது என்ன ஆகும்" என்று வேறு விஷயங்களைப் பற்றி
யோசிக்காதீர்கள். உங்களைத் தகுதியான ஆத்மாவாக ஆக்குங்கள்,
கர்மயோகி ஆத்மாவாக ஆக்குங்கள். மற்றபடி, இவ்வாறு தகுதியடையும்
ஒவ்வொரு குழந்தைக்கும் பாபா அனைத்துப் பிராப்திகளின்
வரதானத்தையும் கொடுத்து முன்னேற்றுவார், பின் தங்க விடமாட்டார்.
எனவே பாப்தாதா இன்று அமிர்தவேளையில் உள்நாடு, வெளிநாடு என
நாலாபுறமும் சுற்றிப் பார்க்கச் சென்றார். வழக்கமாக பாப்தாதா
பெரும்பான்மையாகச் சுற்றிப் பார்க்கவே செய்கின்றார், ஆனால்
இன்று சுற்றிப் பார்க்கச் சென்றபோது - முன்பே கூறியது போல -
உங்களுடைய முன்னோர்களான தாதிமார்களும் கூடவே சுற்றிப் பார்க்க
வருகின்றார்கள். அவ்வாறு சுற்றிப் பார்த்தபோது என்ன கண்டார்கள்?
(அவர்கள் என்ன கண்டார்கள் என்பதை) நீங்களும் அறிவீர்கள். நல்ல
நல்ல சங்கல்பங்களைச் செய்கின்றீர்கள் - "செய்து காட்டுவோம்,
ஆகியே தீருவோம், கையைப் பிடித்துக் கொண்டே செல்வோம்" என்று.
அப்படியானால் கை எது? சிவ பாபாவிற்கு ஃபரிஷ்தா (தேவதை) ரூபம்
கூட இல்லையே, அப்புறம் எந்தக் கை? ஸ்ரீமத் தான் கை.
வெளிநாடுகளில் கைகோர்த்து நடப்பது ஒரு ஃபேஷன். இங்கு கை என்பது
ஸ்ரீமத், எனவே அனைவரும் கைகோர்த்து நடப்பவர்கள் தானே! (கைகோர்த்து
நடப்பதற்கு அதாவது ஸ்ரீமத் படி நடப்பதற்கு) சக்தி இருக்கின்றதா?
பிரம்மா பாபா ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்படி நடந்து உங்கள்
அனைவருக்கும் செய்து காட்டினார். என்ன செய்ய வேண்டும், எப்படிச்
செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் அவரே உதாரணம். சாகாரத்தில் அவரே
உதாரணம். நிராகார விஷயத்தை விட்டுவிடுங்கள், ஆனால் பிரம்மா பாபா
சாகாரத்தில் உங்கள் தோழராக இருந்தார். பிரம்மா பாபாவோ ஸ்ரீமத்
எனும் கரத்துடன் கரம் கோர்த்து ஃபரிஷ்தாவாக மாறிவிட்டார்.
அதேபோல் "தந்தையைப் பின்பற்ற வேண்டும்" தானே! "தந்தையை
பின்பற்ற வேண்டும்" என்பது நினைவிருக்கின்றதா? அப்படி யானால்
எதைப் பின்பற்ற வேண்டும்? அனைத்து விஷயங்களையும்
தெளிவுபடுத்திக் காட்டினார்; பிரம்மா பாபாவின் முகத்தையும்
நடத்தையையும் அனைவரும் அறிவீர்கள் தானே! உங்கள் புத்தியின்
மூலம் பிரம்மா பாபாவை எதிரில் கொண்டு வர முடியும் தானே! எந்த
தினசரி நடவடிக்கைகளை (முழு நாளிற்கான நியமங்களை), பிரம்மா பாபா
எப்படி நடைமுறைப்படுத்தினாரோ, சாகாரத்தில் இருந்து கொண்டே,
சாகாரத்திலேயே அனைத்தையும் அனுபவம் செய்தார். பிரம்மா பாபாவின்
சரித்திரங்களை அனைவரும் அறிவீர்கள். எனவே தந்தையை
பின்பற்றுங்கள். உங்களை உறுதியாக்குவதற்காக பிரம்மா பாபாவின்
ஒவ்வொரு அடியும் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. 8 அடிகளைப்
பற்றி படிக்கின்றீர்கள் தானே, என்னென்ன செய்தார் என்று! அதை
அப்படியே பின்பற்ற வேண்டும். பின்பற்றுவது என்றால் பிரம்மா
பாபாவிற்குச் சமமாக ஆகுவதாகும். எனவே யோசியுங்கள், தந்தையிடம்
அன்பு இருக்கின்றது, இரண்டு தந்தையிடமும் (பிரம்மா பாபா, சிவ
பாபா) அன்பு இருக்கின்றது. அன்பு என்றால் - முன்பே கூறியது போல
- அன்பின் செயல்முறை வடிவம் என்பது பிரம்மா பாபா சொல்வதை ஏற்று,
குழந்தைகள் பாபாவிற்குச் சமமாக ஆகுவதாகும்; இதுவே உண்மையான
இதயப்பூர்வமான அன்பாகும். சில குழந்தைகள் என்ன செய்கின்றார்கள்?
பிரம்மா பாபாவிற்குச் சமமாக ஆக வேண்டும் என்று
யோசிக்கின்றார்கள், ஆனால் முதலில் செய்துவிட்டுப் பிறகு
யோசிக்கின்றார்கள்; பிரம்மா பாபாவிற்குச் சமமாகச் செய்யவில்லை,
ஆனால் செய்து முடித்து விட்டார்கள். ஆனால் பின்பற்ற வேண்டும்
என்றால், முதலில் யோசியுங்கள். சங்கல்பம் செய்வ தற்கு முன்
யோசியுங்கள்: "இந்தச் சங்கல்பம் பிரம்மா பாபாவின் சங்கல்பமா?"
என்று. அப்படி இருந்தால் அதைச் செயல்படுத்துங்கள்.
செய்துவிட்டுப் பிறகு யோசிக்காதீர்கள். முதலில்
யோசித்துவிட்டுப் பிறகு பின்பற்றுங்கள். பிரம்மா பாபாவை
பின்பற்றுவது என்றால் பிரம்மா பாபாவிற்குச் சமமாக ஆகுவதாகும்.
தைரியம் இருக்கின்றதா? பின்பற்றுவதற்குத் தைரியம் இருக்கின்றதா?
"செய்தே தீருவேன்" என்று கருதுபவர்கள் கைகளை உயர்த்துங்கள்.
முதலில் யோசியுங்கள், பிறகு செய்யுங்கள். செய்துவிட்டு
யோசிக்காதீர்கள். எனவே இன்று பாப்தாதா, பிரம்மா பாபாவிற்குச்
சமமான "திருப்தியின் சக்தியை" ஒவ்வொரு குழந்தையிடத்திலும்
சிறப்பாகப் பார்க்க விரும்புகின்றார். இந்த ஒரே ஒரு
திருப்தியின் சக்தியில் அனைத்துச் சக்திகளும் அடங்கிவிடும்.
எனவே இன்று பாப்தாதாவின் சிறப்பு வரதானம்: "திருப்தியின் சக்தி
பவ!" எது நடந்தாலும் உங்கள் திருப்தியை ஒருபோதும் கைவிடாதீர்கள்.
சில குழந்தைகள் மனப்பூர்வமாக உரையாடும்போது கூறுகின்றார்கள்: "திருப்தியாக
இருப்பது எளிது, ஆனால் மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது
மிகவும் கடினம்" என்று. யாராவது என்னவோ செய்கின்றார்கள், அது
சரியில்லை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்; பிறகும் அதை ஏன்
இதயத்தில் வைத்துக் கொள்கின்றீர்கள்? "இவர் இப்படிச்
செய்கின்றார், அவர் அப்படிச் செய்கின்றார், இவருடைய சுபாவம்
இப்படிப்பட்டது, அவருடையது அப்படிப்பட்டது..." என்று. அதை
இதயத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் உங்கள் இதயத்தில்
பாபாவை அமர்த்தி யுள்ளீர்கள். அமர்த்தியுள்ளீர்கள் தானே? தலையை
ஆட்டுங்கள். உறுதியாக அமர்த்தியுள்ளீர் களா? அல்லது (பாபாவை)
வெளியே எடுப்பதும் அமர்த்துவதுமாக இருக்கின்றீர்களா? அமர்த்தி
யிருந்தால், இதயத்தில் - பாபாவுடன் சேர்த்து இந்த விஷயங்களையும்
வைப்பீர்களா? எனவே இதயத்தில் (விஷயங்களை) வைக்காதீர்கள்.
பாப்தாதா முன்பே இந்த உபாயத்தைக் கூறியு ள்ளார்: எப்போதும்
அத்தகைய ஆத்மாவின் மீது சுப எண்ணம், சுப விருப்பம் வைத்து,
உங்கள் சுப விருப்பத்தைச் செயல்பாட்டில் ஈடுபடுத்துங்கள்.
மேலும், பொதுவாக யோசித்துப் பாருங்கள், "இவர் செய்வது சரியில்லை,
கெட்ட விஷயம்" என்று நீங்கள் கருதுகின்றீர்கள்; யாராவது
உங்களுக்குக் கெட்ட பொருளைக் கொடுத்தால் நீங்கள் அதை எடுத்துக்
கொள்வீர்களா? கெட்டது என்று தெரிந்த பிறகும் அதை புத்தியிலும்
இதயத்திலும் வைப்பதன் மூலம், அந்தக் கெட்ட பொருளை ஏன் எடுத்துக்
கொண்டீர்கள் (இதயத்தில். புத்தியில் வைப்பது என்பது கெட்ட
பொருளை ஏற்றுக்கொள்வதாகும்)? இவ்வாறு உங்கள் இதயத்தில் (விஷயங்களை
வைக்காமல்) எப்போதும் பாபாவை வைப்பதன் மூலம் பாபாவிற்குச்
சமமாக ஆகி விடுவீர்கள். இது வாக்குறுதி தானே, பாபாவிற்குச்
சமமாக ஆக வேண்டும் தானே! உறுதியாக ஆக வேண்டுமா? அல்லது ஆவோமா
ஆகமாட்டோமா என்று யோசிக்கின்றீர்களா? அப்படி யோசிப்பதில்லையே?
அன்பு இருக்கின்றது என்றால் தந்தையை பின்பற்றுங்கள். எனவே
பாப்தாதா இப்போது ஒவ்வொரு குழந்தையையும் சுப விருப்பம், சுப
எண்ணம் நிறைந்த ஆத்மாவாகப் பார்க்க விரும்புகின்றார்.
டீச்சர்கள் அவ்வாறு ஆகுவீர்களா? டீச்சர்கள் மீது
பாப்தாதாவிற்குச் சிறப்பு அன்பு உண்டு. ஏன் அன்பு? ஏனெனில்
பாபாவின் ஆசனத்தில் அமர்வதற்குத் தைரியம் காட்டியுள்ளீர்கள்.
எனவே டீச்சர்களிடம் தைரியம் இருக்கின்றது தானே! ஒவ்வொரு
டீச்சரின் தோற்றத்திலிருந்தும் எதிர்காலம் தெரிய வேண்டும்
என்பதே பாபா ஒவ்வொருவரிடமிருந்தும் விரும்புவதாகும்.
நிமித்தமாக இருக்கும் டீச்சர்களுக்கு பாப்தாதா கூறுகின்றார்,
ஆனால் நீங்களும் தோழர்கள் தானே! பாப்தாதா போர்டிங்கில்(அதாவது
ஆரம்பத்தில் யக்ஞத்தில் நடத்தப்பட்ட விடுதிப் பள்ளியில்)
இருந்த சிறு குழந்தைகளுக்கும் கூட இந்தச் படிப்பையே தந்தார்
அதாவது ஒவ்வொருவரின் முகமும் மகிழ்ச்சியானவர் மற்றும்
பாக்கியசாலி, முகமாக இருக்க வேண்டும்". எனவே இப்போதும் பாப்தாதா
விரும்புவது என்னவென்றால், ஒவ்வொரு குழந்தை யின் முகத்தைப்
பார்த்தாலே "இவர் மகிழ்ச்சியான மற்றும் பாக்கியசாலியான ஆத்மா"
என்று தெரிய வேண்டும். வார்த்தைகளின் மூலம் நிறைய சேவை
செய்தீர்கள், சிறப்பாகச் செய்தீர்கள், அதற்கான சான்றிதழ் உள்ளது;
ஆனால் இப்போது உங்கள் முகம் மற்றும் நடத்தையின் மூலம் சேவையில்
முன்னேறுங்கள். ஒரு ஏழைக்கு லாட்டரி கிடைத்தால், அவரது முகமும்
நடத்தை யும் பேசுகின்றது தானே! அவரது முகத்தைப் பார்த்தே "இன்று
இவருக்கு ஏதோ கிடைத்துள்ளது" என்பதை அனைவரும் உணர்கின்றார்கள்.
அது போலவே உங்கள் நடத்தை மற்றும் முகத்தைப் பார்த்து, "இவர்களுக்கு
ஏதோ சிறப்பான பிராப்தி கிடைத்துள்ளது" என்று ஒப்புக்கொள்ள
வேண்டும். எனவே இன்று பாப்தாதா என்ன விரும்புகின்றார்? பிரம்மா
பாபாவிற்குச் சமமாகுங் கள். தந்தையை பின்பற்றுங்கள், ஏனெனில்
காலத்தின் சூழ்நிலைகள் சலசலப்பிற்கு உட்பட்டுக்
கொண்டிருக்கின்றன, மேலும் (சலசலப்புகள்) வரவும் இருக்கின்றன;
எனவே பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தப் படிப்பையே தர
விரும்புகின்றார்: "என்றும் மகிழ்ச்சியாக இருங்கள் மற்றும்
மகிழ்ச்சியைப் பகிருங்கள்." எவ்வளவு மகிழ்ச்சியைப்
பகிர்கின்றீர்களோ, அவ்வளவு மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களை
மகிழ்ச்சியாகப் பார்த்து மற்றவர்களும் 5 நிமிடங் களுக்காவது
மகிழ்ச்சியடையட்டும். துக்கப்படும் ஆத்மாக்கள் உங்களைப்
பார்த்து 5 நிமிடங்கள் மகிழ்ச்சி யடைந்தாலும் கூட, அது
அவர்களுக்கு மிகவும் பிடிதமான விஷயமாகும். எனவே இன்று பாப்தாதா
ஒவ்வொரு குழந்தையும் விசேஷமாக திருப்தியின் சக்தியை நடத்தை
மற்றும் முகத்தில் தாரணை செய்து, மற்றவர்களையும் செய்ய
வைப்பதில் விசேஷமாக கவனத்தை ஈர்க்கின்றார். நல்லது.
இன்று முதன்முறையாக வந்துள்ள அனைவரும் எழுந்திருங்கள்.
பாருங்கள், உங்கள் அனைவருக்கும் (எழுந்து நிற்கும் காட்சி)
தெரிகின்றது, வகுப்பில் பாதி பேர் முதன்முறையாக வந்தவர்கள்.
கைகளை உயர்த்துங்கள். பாருங்கள், அனைவரின் கைகளையும் பாருங்கள்.
உங்களுடைய புதிய சகோதர சகோதரிகள் எத்தனை பேர் உங்கள் தோழர்களாக
மாறியிருக் கின்றார்கள். வாழ்த்துகள், பல கோடி வாழ்த்துகள்.
இப்போது இங்கு வரை வந்து விட்டீர்கள் தானே! பாப்தாதாவைச்
சந்திக்கும் வரை வந்துவிட்டீர்கள், இனி அடுத்து என்ன செய்ய
வேண்டும்? பிரம்மா பாபாவை பின்பற்றுங்கள். பாப்தாதாவிற்கும்
உங்களைப் போன்ற குழந்தை களைப் பார்த்து மகிழ்ச்சியாக
இருக்கின்றது - "ஆஹா! குழந்தை வந்துவிட்டது!" என்று. முழு
குடும்பத்திற்கும் மகிழ்ச்சியாக இருக்கின்றது - "எங்கள் சகோதர
சகோதரிகள் வந்துவிட்டார்கள், வந்துவிட்டார்கள்,
வந்துவிட்டார்கள்" என்று. இப்போது பிரம்மா பாபாவை
பின்பற்றுங்கள். எப்போது என்ன நடந்தாலும், ஏதேனும் கேள்வி
அல்லது பிரச்சனை வந்தால் - பிரச்சனை நிறைந்த உலகம் தானே இது -
உடனே உங்கள் டீச்சர் மூலம் அதற்குத் தீர்வு கண்டுவிடுங்கள். "இரண்டு
நாட்கள் ஆகிவிட்டன, இப்படி இருக்கின்றது" என்று வைக்காதீர்கள்;
ஏனெனில் மிகவும் தாமதமாக வந்திருக்கின்றீர்கள் தானே, ஆனால்
முன்னேறத்தானே விரும்புகின்றீர்கள்? பின் தங்கி இருக்க
விரும்புகின்றீர்களா? இல்லை. முன்னேற விரும்புகின்றீர்கள்
என்றால், முன்னேறு வதற்கு இந்த ஒரு விஷயத்தைச் செய்யுங்கள்:
இதயத்தில் எந்த ஒரு வீணான விஷயத்தையும் வைக்காதீர்கள். இதற்காக,
அமிர்தவேளையில் பாபாவைச் சந்தித்த பிறகு - ஒன்று, அமிர்த வேளையை
நிச்சயம் செய்ய வேண்டும்; அதன் பிறகு நாள் முழுவதற்குமான உங்கள்
தினசரி யில் (நியமத்தின்படி) மனம் பிஸியாக இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பயிற்சி, பல பயிற்சி களை பாப்தாதா கூறியுள்ளார்,
ஆனால் ஏதேனும் ஒரு பயிற்சியைக் கூடவே செய்துகொண்டே இருங்கள்.
பாப்தாதா அனைவருக்கும் கூறுகின்றார்: நடுநடுவே நேரம் ஒதுக்கி,
பழையவர்களோ புதியவர்களோ அனைவரும் முற்றிலும் அசரீரி (உடலற்ற
நிலைக்கான) பயிற்சியை நிச்சயம் செய்ய வேண்டும்; ஏனெனில்
வரவிருக்கும் கால கட்டத்தில் வினாடியில் அசரீரியாக ஆகியே தீர
வேண்டும். "நேரம் கிடைக்கவில்லை" என்று இந்தச் சாக்கைக்
கூறக்கூடாது. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தாகம் எடுத்தால்
தண்ணீர் குடிக்க எழும்புவதில்லையா! அவசியம் என்று கருதி
எழும்புகின்றீர்கள் தானே! எனவே இந்த ஒரு நிமிடம் அசரீரியாகும்
பயிற்சிப் பழக்கத்தை நிச்சயம் செய்யுங்கள். அந்த (கடைசி)
நேரத்தில் பயிற்சி செய்ய முடியாது.
சிலர் நினைக்கின்றார்கள், "நேரம் வரும்போது பார்த்துக்
கொள்ளலாம்" என்று. ஆனால் முடியாது. பிறவி பிறவியாக உள்ள உடல்
உணர்வுப் பழக்கம் அந்த நேரத்தில் அசரீரியாக ஆக விடாது; எனவே
இப்போதிலிருந்தே நேரம் ஒதுக்கி, நாள் முழுவதும் அவ்வப்போது
எந்த நேரத்தை நிர்ணயிக்கின்றீர்களோ அப்போது: "ஒரு வினாடியில்
நான் அசரீரி ஆத்மா" என்று ஆத்ம சொரூபத்தில் நிலைத்திருங்கள்.
உடல் உணர்வு தன் பக்கம் இழுக்கக்கூடாது. இந்தப் பயிற்சியை
அனைவரும் செய்ய வேண்டும், பழையவர்களோ புதியவர்களோ; ஏனெனில்
பாப்தாதா சில காலமாக இந்த விஷயத்தைக் கூறி வருகின்றார். ஆனால்
செய்வது அவசியம். இல்லையெனில் ஸ்ரீமத் எனும் கரத்தைக் கோர்த்து
நடக்க முடியாது. "உடன் செல்வோம், உடன் ராஜ்யத்திற்கு வருவோம்"
என்பது உங்கள் வாக்குறுதி. எனவே இந்தப் பயிற்சியை அனைவரும்
செய்ய வேண்டும். மற்றபடி புதிதாக வந்தவர்கள் அனைவரும்
மகிழ்ச்சியாக இருங்கள், செழிப்பாக இருங்கள், மேன்மேலும்
முன்னேறிக்கொண்டே இருங்கள். நல்லது.
நாலாபுறமும் தொலைவில் இருந்தாலும் இதயத்தில் அமர்ந்துள்ள
குழந்தைகளை பாப்தாதா வும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
அனைவரின் அன்பின் நறுமணம் மதுபனை வந்தடை கின்றது. எனவே அனைவரும்
இப்போது தீவிர வேகத்தில் செல்ல வேண்டும், தீவிர புருஷார்த்தம்
செய்ய வேண்டும். உலக மக்களுக்குச் சுகத்தை விரைவாகக் கொண்டு வர
வேண்டும். துக்கப்படுபவர்களைச் சுகமுடையவராக்க வேண்டும். இந்தச்
சுகமளிக்கும் செய்தியைக் கொடுத்து அனைவரையும் சுகமுடையவராக்க
வேண்டும்; இந்தச் சேவையில் (தங்களின்) வேகம் இருக்கின்றது
என்றாலும், இன்னும் வேகத்தைக் கொண்டு வர வேண்டும். நல்லது.
அனைவருக்கும் இதயப்பூர்வமான பல கோடி அன்பு நினைவுகள்
உரித்தாகுக.
ஆசீர்வாதம்:
தனது சொந்த ஓய்வையும் தியாகம் செய்து சேவை செய்யும்,
என்றும் திருப்தியான, என்றும் மகிழ்ச்சியான ஆத்மாவாக ஆகுக!
சேவாதாரிகள் தங்கள் இரவு-பகல் ஓய்வையும் தியாகம் செய்து
சேவையிலேயே ஓய்வை உணர்கின்றார்கள். அவர்களுடைய தொடர்பிலோ அல்லது
சம்மந்தத்திலோ வரக்கூடியவர்கள், குளுமையின் சக்தி, அமைதியின்
அருவியின் கீழ் அமர்ந்திருப்பது போன்ற நெருக்கத்தை உணர்
கின்றார்கள். சிறந்த குணநலன் கொண்ட சேவாதாரிகள் காமதேனுவாக ஆகி,
எக்காலத்திற்கு மாக அனைவரின் மன விருப்பங்களையும்
நிறைவேற்றுகின்றார்கள். அத்தகைய சேவாதாரிக்கு என்றும்
மகிழ்ச்சியாகவும், என்றும் திருப்தியாகவும் இருக்கும் வரதானம்
தானாகவே கிடைத்து விடுகின்றது.
சுலோகன்:
ஞான சொரூபமாக ஆக வேண்டுமென்றால், ஒவ்வொரு கணமும் படிப்பில்
கவனம் வையுங்கள்; பாபா மற்றும் படிப்பின் மீது சமமான அன்பு
இருக்கட்டும்.
அவ்யக்த சமிக்கை: பிரம்மா பாபாவிற்குச் சமமாக சம்பன்ன (நிறைந்த)
மற்றும்
சம்பூர்ண (முழுமையான) நிலையை அனுபவம் செய்யுங்கள்.
வீணான சங்கல்பங்களோ அல்லது விகல்பங்களோ எழுவதற்குக் காரணம்,
புத்தியில் வரும் ஒரே ஒரு சொல்: "இது ஏன் நடந்தது?" என்பதாகும்.
"ஏன்" என்ற சொல்லிலிருந்தே வீணான சங்கல்பங்களின் வரிசை (க்யூ)
தொடங்கிவிடுகின்றது. இந்த வரிசை (ஏன் என்ற க்யூ) முடிந்த பிறகே
சம்பூர்ணத்துவம் வரும், பிறகு அந்த வரிசை (அதாவது இறைவனின்
வருகை உணர்ந்து மக்கள் வரிசையில் நிற்கும் க்யூ) அமையும். "ஏன்"
என்ற சொல் முடியும் போது தான் நாடகத்தின் விதிக்கேற்ப ஒரே
சீராக அசைவற்ற நிலையை அடைய முடியும்.
சிறப்பு அறிவிப்பு - மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை யோக
பயிற்சி:
இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை. அனைத்துச் சகோதர
சகோதரிகளும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மாலை 6.30 மணி முதல் 7.30
மணி வரை தங்கள் சக்தி சொரூப நிலையில் நிலைத்து, ஞான சூரியனின்
சக்திவாய்ந்த கதிர்களைத் தமக்குள் தாரணை செய்து, அக்கதிர்கள்
மூலம் உலக மாற்றச் சேவையில் சகயோகியாக ஆகுங்கள்.