18-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! சர்வ சக்திவான்
தந்தையிடம் புத்தி யோகம் இணைப்பதால் சக்தி கிடைக்கும்.
நினைவினால் தான் ஆத்மா என்ற பேட்டரி சார்ஜ் ஆகும். ஆத்மா
பவித்திரமாக தூய்மையானதாக சதோபிரதானமாக ஆகி விடுகிறது.
கேள்வி:
சங்கம யுகத்தில் குழந்தைகளாகிய
நீங்கள் செய்யும் எந்த ஒரு புருஷார்த்தத்தின் (முயற்சியின்)
பலனாக தேவதை பதவி கிடைக்கிறது?
பதில்:
சங்கமயுகத்தில் நாம்
குளிர்ந்தவராக (சீதளம்) ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி) செய்
கின்றீர்கள். குளிந்தவர் அதாவது தூய்மையாக ஆவதால் நாம்
தேவதையாக ஆகி விடுகிறோம். குளிர்ந்தவராக ஆகாதவரையும் தேவதையும்
ஆக முடியாது. சங்கமத்தில் குளிர்ந்த தேவிகளாக ஆகி அனைவர் மீதும்
ஞானத்தின் குளிர்ந்த துளிகளை தெளித்து அனைவரையும் குளிர்விக்க
வேண்டும். எல்லோருடைய வெப்பத்தையும் தணிக்க வேண்டும். சுயம்
தாங்களும் குளிர்ந்தவர் ஆக வேண்டும். மேலும் அனைவரையும் ஆக்க
வேண்டும்.
ஓம் சாந்தி.
நாம் அனைவரும் சகோதர சகோதரர்கள் ஆவோம் மற்றும் சிவபாபா நம்
அனைவரின் தந்தை ஆவார் என்ற ஒரே ஒரு விஷயத்தை தான் குழந்தைகள்
முதன் முதலில் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. அவருக்கு
சர்வசக்திவான் என்று கூறப்படுகிறது. உங்களிடம் சர்வ சக்திகள்
இருந்தன. நீங்கள் முழு உலகத்தின் மீது ஆட்சி புரிந்து
கொண்டிருந்தீர்கள். பாரதத்தில் இந்த தேவி தேவதைகளின் ஆட்சி
இருந்தது. நீங்கள் தான் தூய்மையான தேவி தேவதைகளாக இருந்தீர்கள்.
உங்களுடைய குலம் அல்லது பரம்பரையில் அனைவரும் நிர்விகாரியாக
இருந்தார்கள். யார் நிர்விகாரியாக இருந்தார்கள்? ஆத்மாக்கள்.
இப்பொழுது மீண்டும் நீங்கள் நிர்விகாரியாக ஆகிக்
கொண்டிருக்கிறீர்கள். சர்வ சக்திவான் தந்தையின் நினைவினால்
சக்தி பெற்றுக் கொண்டிருக் கிறீர்கள். ஆத்மாக்கள் தான் 84
பிறவியின் பாகம் ஏற்று நடிக்கிறார்கள் என்பதை தந்தை புரிய
வைத்துள்ளார். ஆத்மாவில் தான் சதோபிரதான தன்மையின் வலிமை
இருந்தது. அது பின்னர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது.
சதோபிரதான நிலையிலிருந்து தமோபிரதான மாகவோ ஆகவே வேண்டி உள்ளது.
எப்படி பேட்டரியின் சக்தி குறைந்து கொண்டே சென்று விடும் பொழுது
மோட்டார் நின்று விடுகிறது. பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகி விடுகிறது.
ஆத்மாவின் பேட்டரி முழுமையாக டிஸ்சார்ஜ் ஆகி விடுவதில்லை.
சிறிதளவு சக்தி இருக்கிறது. எப்படி யாராவது இறந்து விடும்
பொழுது தீபம் ஏற்றுகிறார்கள். பின் அந்த ஜோதி அணைந்து விடாத
வகையில் எண்ணெய் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள். உங்களுடைய
ஆத்மாவில் முழுமையாக சக்தி இருந்தது. இப்பொழுது இல்லை என்பதை
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது மீண்டும்
நீங்கள் சர்வ சக்திவான் தந்தையிடம் உங்களது புத்தி யோகத்தை
ஈடுபடுத்துகிறீர்கள், உங்களுக்குள் சக்தி நிரப்புகிறீர்கள்.
ஏனெனில் சக்தி குறைந்து விட்டுள்ளது. சக்தி முற்றிலுமாக
முடிந்து போய் விட்டால் சரீரமே இருக்காது. ஆத்மா தந்தையை நினைவு
செய்து செய்து முற்றிலும் தூய்மையாக ஆகி விடுகிறது.
சத்யுகத்தில் உங்களுடைய பேட்டரி முழுமையாக திறன் நிரம்பியதாக (புல்சார்ஜ்)
இருக்கிறது. பிறகு மெல்ல மெல்ல கலை அதாவது பேட்டரியில் சக்தி
குறைந்து கொண்டே செல்கிறது. கலியுக கடைசியில் ஆத்மாவின் சக்தி
ஒரேயடியாக குறைந்து விடுகிறது. ஆற்றல் திவால் ஆகி விட்டது போல.
தந்தையை நினைவு செய்வதால் ஆத்மா மீண்டும் சக்தி நிரம்பியதாக ஆகி
விடுகிறது. எனவே ஒருவரைத் தான் நினைவு செய்ய வேண்டும் என்று
இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர்
பகவான் ஆவார். மற்ற எல்லாமே படைப்பு ஆகும். சரீரத்தை
படைத்தவரிடமிருந்து படைப்பிற்கு எல்லைக்குட்பட்ட ஆஸ்தி
கிடைக்கிறது. ஒரே ஒரு எல்லையில்லாத தந்தை தான் கிரியேட்டர் (படைப்பவர்)
ஆவார். மற்ற எல்லோருமே எல்லைக்குட் பட்டவர்கள் ஆவார்கள்.
எல்லையில்லாத தந்தையை நினைவு செய்வதால் எல்லையில்லாத ஆஸ்தி
கிடைக்கிறது. எனவே பாபா நமக்காக சொர்க்கமாகிய புதிய உலகத்தை
ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என்று குழந்தைகள் மனதிற்குள்
புரிந்து கொள்ள வேண்டும்.
நாடகத்திட்டப்படி சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
அதில் குழந்தைகளாகிய நீங்கள் தான் வந்து ஆட்சி புரிகிறீர்கள்.
நானோ எப்பொழுதும் பவித்திரமாக (தூய்மையாக) இருக்கிறேன். நான்
ஒரு பொழுதும் கர்ப்பத்தில் வந்து ஜென்மம் எடுப்பதில்லை. தேவி
தேவதைகளை போலவும் ஜென்மம் எடுப்பதில்லை. குழந்தைகளாகிய
உங்களுக்கு சொர்க்கத்தின் அரசாட்சி அளிப்பதற்காக மட்டுமே இவர்
(பாபா) 60 வயதில் வானப்பிரஸ்த நிலையில் இருக்கும் பொழுது
இவருடைய உடலில் நான் பிரவேசிக்கிறேன். இவரே பிறகு முதல் நம்பர்
தமோபிரதான நிலையிலிருந்து முதல் நம்பர் சதோபிரதானமாக ஆகிறார்.
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். பிறகு இருப்பவர்கள்
பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கரர் - சூட்சும வதனவாசிகள். இந்த
பிரம்மா, விஷ்ணு மற்றும் சங்கரர் எங்கிருந்து வந்தார்கள்? இது
சாட்சாத்காரம் (காட்சி) மட்டுமே ஆகிறது. சூட்சும வதனம்
இடையிலிருப்பது ஆகும் அல்லவா? அங்கு ஸ்தூல சரீரம் இருப்பதில்லை.
சூட்சும சரீரம் திவ்ய திருஷ்டியினால் மட்டுமே பார்க்கப்படுகிறது.
பிரம்மாவோ வெண்மையான ஆடை உடையவர். அந்த விஷ்ணு வைரம்
வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டவர். பிறகு சங்கரனின் கழுத்தில்
நாகம் ஆகியவை காண்பிக்கிறார்கள். இது போல சங்கரர் ஆகியோர்
யாரும் இருக்க முடியாது. அமர நாத்தில் சங்கரர் பார்வதிக்கு அமர
கதை கூறினார் என்று காண்பிக்கிறார்கள். இப்பொழுது
சூட்சுமவதனத்திலோ மனித சிருஷ்டி கிடையாது. ஆகவே பிறகு அங்கு
எப்படி கதை கூறுவார்கள்? மற்றபடி சூட்சும வதனத்தின்
சாட்சாத்காரம் மட்டுமே ஆகிறது. யார் முற்றிலும் தூய்மையாக ஆகி
விடுகிறார்களோ அவர்களுடைய சாட்சாத்காரம் ஆகிறது. இவர் களே பிறகு
சத்யுகத்தில் சென்று சொர்க்கத்தின் அதிபதி ஆகிறார்கள். எனவே
இவர்கள் மீண்டும் இந்த இராஜ்ய பாக்கியம் எப்படி அடைந்தார்கள்
என்பது புத்தியில் வர வேண்டும். சண்டை ஆகியவையோ ஒன்றும் நடப்ப
தில்லை. தேவதைகள் ஹிம்சை எப்படி செய்வார்கள்? இப்பொழுது நீங்கள்
தந்தையை நினைவு செய்து இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள். ஒருவர்
ஏற்று கொண்டாலும் சரி ஏற்று கொள்ளாவிட்டாலும் சரி தேகத்துடன்
கூடவே தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் மறந்து என் ஒருவனை
நினைவு செய்யுங்கள் என்று கீதையிலும் உள்ளது. தந்தைக்கோ பற்று
கொள்ளும் வகையில் தேகமே இல்லை. சிறிது காலத்திற்கு இந்த
சரீரத்தை கடனாக எடுக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். இல்லை
என்றால் நான் எப்படி நாலேஜ் (ஞானம்) கொடுக்க முடியும்? நான்
இந்த கல்ப விருட்சத்தின் சைதன்ய (உயிருள்ள) விதை ரூபமாக
இருக்கிறேன். இந்த விருட்சத் தின் நாலேஜ் (ஞானம்) என்னிடம் தான்
உள்ளது. இந்த சிருஷ்டியின் ஆயுள் எவ்வளவு? எப்படி உற்பத்தி,
பாலனை மற்றும் விநாசம் ஆகிறது? மனிதர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
அவர்கள் எல்லைக்குட்பட்ட படிப்பை படிக்கிறார்கள். தந்தையோ
எல்லையில்லாத படிப்பைப் படிப்பித்து குழந்தைகளை உலகிற்கு அதிபதி
ஆக்குகிறார். பகவான் என்று ஒரு பொழுதும் தேகதாரி மனிதருக்கு
கூறப்பட மாட்டாது. இவர்களுக்குக் (பிரம்மா, விஷ்ணு மற்றும்
சங்கருக்கு) கூட தங்களுக்கென்று சூட்சும தேகம் உள்ளது. எனவே
இவர்களைக் கூட பகவான் என்று கூற மாட்டார்கள். இந்த சரீரமோ இந்த
தாதாவின் ஆத்மாவின் பீடம் ஆகும். அகால பீடம் ஆகும் அல்லவா?
இப்பொழுது இது அகால மூர்த்தி தந்தையின் பீடம் ஆகும்.
அமிருதசரசில் கூட அகால பீடம் உள்ளது. பெரியவர்களாக (முக்கியமானவர்கள்)
யார் இருக்கிறார்களோ அவர்கள் அகால பீடத்தில் போய் அமருகிறார்கள்.
இது அனைத்து ஆத்மாக்களின் அகால பீடம் ஆகும் என்று இப்பொழுது
தந்தை புரிய வைக்கிறார். ஆத்மாவில் தான் நல்லது அல்லது தீய
சம்ஸ்காரம் உள்ளது. அதனால் தான் இது கர்மங்களின் பலன் ஆகும்
என்று கூறுகிறார். அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஒரே ஒருவர் ஆவார்.
பாபா ஒன்றும் சாஸ்திரங்கள் ஆகியவற்றைப் படித்து புரிய
வைப்பதில்லை. இந்த விஷயங்கள் கூட சாஸ்திரங்கள் ஆகியவற்றில்
இல்லை. அதனால் தான் மனிதர்கள் கோபப்படுகிறார்கள். இவர்கள்
சாஸ்திரங்களை ஏற்பதில்லை என்று கூறுகிறார்கள். சாது சந்நியாசி
ஆகியோர் கங்கையில் சென்று ஸ்நானம் செய்கிறார்கள். பின் பாவனமாக
ஆகி விட்டார்களா என்ன? திரும்பவோ யாரும் போக முடியாது.
எல்லோரும் பின்னால் செல்வார்கள். எப்படி தேனீக்களின் கூட்டம்
செல்கிறது. தேனீக் களில் கூட இராணித் தேனீ இருக்கும். அதற்குப்
பின்னால் எல்லாம் செல்கிறது. தந்தையும் செல்வார். அவருக்குப்
பின்னால் அனைத்து ஆத்மாக்களும் செல்வார்கள். மூலவதனத்தில் கூட
அனைத்து ஆத்மாக்களின் கூட்டம் போல இருக்கும். இங்கு பிறகு
இருப்பது அனைத்து மனிதர்களின் கூட்டம். எனவே இந்த கூட்டம் கூட
ஒரு நாள் ஓட வேண்டி உள்ளது. தந்தை வந்து அனைத்து ஆத்மாக்களையும்
கூட்டிச் செல்கிறார். சிவனின் ஊர்வலம் பாடப்பட்டுள்ளது. ஆண்
குழந்தைகள் என்று கூறினாலும் சரி அல்லது பெண் குழந்தைகள் என்று
கூறினாலும் சரி, தந்தை வந்து குழந்தை களுக்கு நினைவு யாத்திரை
கற்பிக்கிறார். தூய்மை ஆகாமல் ஆத்மா வீட்டிற்கு திரும்ப செல்ல
முடியாது. தூய்மையாக ஆகி விடும் பொழுது முதலில் சாந்திதாமம்
செல்வார்கள். பிறகு அங்கிருந்து மெல்ல மெல்ல வந்து கொண்டே
இருக்கிறார்கள். விருத்தி ஆகிக் கொண்டே இருக்கிறது. இராஜதானி
அமைய வேண்டி உள்ளது அல்லவா? எல்லோரும் ஒட்டு மொத்தமாக
வருவதில்லை. விருட்சம் மெல்ல மெல்ல விருத்தியை அடைகிறது அல்லவா?
முதன் முதலில் இருப்பது ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஆகும். அதை
தந்தை ஸ்தாபனை செய்கிறார். யார் தேவதையாக ஆக வேண்டி உள்ளதோ
அவர்கள் தான் முதன் முதலில் பிராமணர்கள் ஆகிறார்கள். பிரஜாபிதா
பிரம்மாவோ இருக்கிறார் அல்லவா? பிரஜைகளில் கூட சகோதர சகோதரியாக
ஆகி விடு கிறார்கள். பிரம்மா குமார் குமாரிகளாக இங்கு
அதிகமானோர் ஆகிறார்கள். அவசியம் நிச்சய புத்தி உடையவர்களாக
இருப்பார்கள். அதனால் தான் இத்தனை அதிக மார்க்குகள் (மதிப்பெண்கள்)
பெறு கிறார்கள். உங்களிலும் கூட யார் பக்குவமாக இருக்கிறார்களோ
அவர்கள் அங்கு முதலில் வருவார் கள். அரைகுறையாக இருப்பவர்கள்
பின்னால் தான் வருவார்கள். மூல வதனத்தில் அனைத்து ஆத்மாக்களும்
இருக்கிறார்கள். பிறகு கீழே வரும் பொழுது விருத்தி ஆகிக் கொண்டே
போகிறது. சரீரம் இன்றி ஆத்மா எப்படி பாகம் ஏற்று நடிக்கும்? இது
பாகத்தை ஏற்று நடிப்பவர்களின் உலகம் ஆகும். இது நான்கு
யுகங்களில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சத்யுகத்தில் நாம் தான்
தேவதை களாக இருந்தோம். பின் க்ஷத்திரியர், வைசியர் மற்றும்
சூத்திரர் ஆகிறோம். இப்பொழுது இது புருஷோத்தம சங்கம யுகம் ஆகும்.
தந்தை வரும் பொழுது தான் இந்த யுகம் அமைகிறது. இந்த
எல்லையில்லாத ஞானம் எல்லையில்லாத தந்தை தான் இப்பொழுது
கொடுக்கிறார். சிவபாபாவிற்கு தன்னுடைய சரீரத்திற்கான எந்த ஒரு
பெயரும் கிடையாது. இந்த சரீரமோ இந்த தாதாவினுடையது ஆகும். பாபா
சிறிது காலத்திற்காக இதைக் கடனாக எடுத்துள்ளார். நான் உங்களிடம்
உரையாடுவதற்காக வாயோ வேண்டும் அல்லவா என்று தந்தை கூறுகிறார்.
வாய் இல்லை என்றால் தந்தை குழந்தைகளிடம் உரையாடவும் முடியாது.
பின்னர் எல்லையில்லாத நாலேஜ் (ஞானம்) கூட இந்த வாயால்
கூறுகிறேன். எனவே இதை பசு வாய் (கவுமுக்) என்றும் கூறுகிறார்.
மலைகளி லிருந்து தண்ணீரோ எங்கிருந்து வேண்டுமானாலும் வெளிப்பட
முடியும். பிறகு இங்கு கவுமுக் (பசுவாய்) அமைத்துள்ளார்கள்.
அதிலிருந்து தண்ணீர் வருகிறது. அதை பிறகு கங்கா ஜலம் என்று
கருதி குடிக்கிறார்கள். அந்த தண்ணீருக்கு எவ்வளவு மகத்துவம்
கொடுக்கிறார்கள்! இந்த உலகத்தில் இருப்பது எல்லாமே பொய்.
உண்மையையோ ஒரு தந்தை தான் கூறுகிறார். பிறகு அந்த பொய்யான
மனிதர்கள் இந்த தந்தையின் ஞானத்தை பொய்யென்று நினைத்துக் கொண்டு
விடுகிறார்கள். பாரதத்தில் சத்யுகம் இருக்கும் பொழுது இதற்கு
உண்மையான கண்டம் என்று கூறப்பட்டது. பிறகு பாரதம் தான் பழையதாக
ஆகி விடும் பொழுது ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு பொருளும்
பொய்யானதாக ஆகி விடுகிறது. எத்தனை வித்தியாசம் ஆகி விடுகிறது.
நீங்கள் எனக்கு எவ்வளவு நிந்தனை செய்கிறீர்கள் என்று தந்தை
கூறுகிறார். சர்வ வியாபி என்று கூறி எவ்வளவு அவமதித்
துள்ளீர்கள். இந்த பழைய உலகத்திலிருந்து அழைத்துச் செல்லுங்கள்
என்றே சிவபாபாவை அழைக் கிறார்கள். எனது எல்லா குழந்தைகளும் காம
சிதையில் ஏறி ஏழைகளாக ஆகி விட்டுள்ளார் கள் என்று தந்தை
கூறுகிறார். நீங்களோ சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தீர்கள்
அல்லவா என்று தந்தை குழந்தைகளுக்குக் கூறுகிறார். நினைவிற்கு
வருகிறதா? குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கிறார். முழு
உலகத்திற்கோ புரிய வைக்க மாட்டார். குழந்தைகள் தான் தந்தையைப்
புரிந்துள்ளார்கள். உலகத்திற்கு இந்த விஷயங்கள் பற்றி என்ன
தெரியும்!
எல்லாவற்றையும் விட பெரிய முள் காமத்தினுடையது ஆகும். பெயரே
பதீதமான (தூய்மையற்ற) உலகம் என்பதாகும். சத்யுகம் என்பது 100
சதவிகிதம் தூய்மையான உலகம் ஆகும். மனிதர்கள் தான் தூய்மையான
தேவதைகளுக்கு முன்னால் சென்று வணங்குகிறார்கள். நிறைய பக்தர்கள்
சைவ உணவு உட்கொள்பவர்களாக இருக்கிறார்கள் என்றாலும் கூட
விகாரத்தில் செல்வதில்லை என்று கூற முடியாது. அப்படியும் நிறைய
பால பிரம்மசாரிகள் கூட இருக்கிறார்கள். சிறிய வயது முதல் ஒரு
பொழுதும் சீ-சீ உணவு ஆகியவை சாப்பிடுவதில்லை. சந்நியாசிகள் கூட
நிர்விகாரி ஆகுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் பதீத
நிலையிலிருந்து பாவனமாக ஆக முடியுமா என்ன? இல்லை. பதீத பாவன
தந்தையின் ஸ்ரீமத் இன்றி யாருமே பதீத (தூய்மையற்ற)
நிலையிலிருந்து பாவனமாக ஆக முடியாது. பக்தி என்பது இறங்கும்
கலையின் மார்க்கம் ஆகும். எனவே எப்படி பாவனமாக ஆக முடியும்?
பாவனம் (தூய்மை) ஆனோம் என்றால் வீட்டிற்கு சென்று விட முடியும்.
பிறகு சொர்க்கத்தில் வந்து விடலாம். சத்யுக தேவி தேவதைகள்
எப்பொழுதாவது வீடு வாசலை விடு கிறார்களா என்ன? அவர்களுடையது
எல்லைக்குட்பட்ட சந்நியாசம். உங்களுடையது எல்லை யில்லாத
சந்நியாசம் ஆகும். முழு உலகம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
ஆகிய அனைத்தின் சந்நியாசம். உங்களுக்காக இப்பொழுது
சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. உங்களுடைய புத்தி
சுவர்க்கத்தின் பக்கம் உள்ளது. மனிதர்களோ நரகத்திலேயே தொங்கிக்
கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின்
நினைவில் தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களை குளிர்ந்த தேவிகளாக ஆக்குவதற்காக ஞான சிதை மீது
அமர்த்தப்படுகிறது. குளிர்ச்சி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதம்
வெப்பம் என்பதாகும். உங்களுடைய பெயரே சீதளாதேவி. ஒருவர் மட்டும்
இருக்க மாட்டார் அல்லவா? பாரதத்தை குளிர்ந்ததாக ஆக்கியவர்கள்
அவசியம் நிறைய பேர் இருப்பார்கள். இச்சமயத்தில் அனைவரும் காமச்
சிதையில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய பெயர் இங்கு
ஷீதலா தேவிகள் என்பதாகும். நீங்கள் குளிர்விக்க கூடிய
குளிர்ந்த துளிகளை தெளிக்கக் கூடிய தேவிகள் ஆவீர்கள். தண்ணீர்
துளிகள் தெளிக்கச் செல்கிறார்கள் அல்லவா? இது ஆத்மா மீது
தெளிக்கப்படும் ஞானத் துளிகள் ஆகும். ஆத்மா தூய்மையாக ஆகி
விடும் பொழுது குளிர்ந்ததாக ஆகி விடுகிறது. இச்சமயம் முழு உலகம்
காம சிதையில் ஏறி கருப்பாக ஆகி விட்டுள்ளது. இப்பொழுது கலசம்
குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. கலசத்தினால் நீங்களும்
குளிர்ந்தவராக ஆகி மேலும் நீங்கள் மற்றவர்களையும்
ஆக்குகிறீர்கள். இவரும் குளிர்ந்தவராக ஆகியுள்ளார் அல்லவா?
இருவரும் சேர்ந்து இருக்கிறார்கள். வீடு வாசல் விடுவதற்கான
விஷயமே கிடையாது. ஆனால் பசு கொட்டகை அமைக்க வேண்டி இருந்தது.
எனவே அவசியம் ஒரு சிலர் வீடு வாசல் விட்டிருக்க வேண்டும்.
எதற்காக? ஞான சிதையில் அமர்ந்து குளிர்ந்தவராக (சீதள்)
ஆவதற்காக. இங்கு நீங்கள் தணிந்தவர்களாக ஆகி விடும் பொழுது தான்
தேவதை ஆக முடியும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியோகம் பழைய வீட்டின் மீது செல்லக் கூடாது. தந்தையுடன்
கூட புத்தி இணைந்து கொண்டு இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள்
அனைவரும் தந்தையுடன் கூட வீடு செல்ல வேண்டும். இனிமையான
குழந்தைகளே நான் உங்களைக் கூட்டி செல்வதற்காக வழி காட்டி ஆகி
வந்துள்ளேன் என்று தந்தை கூறுகிறார். இது சிவசக்தி பாண்டவ சேனை
ஆகும். நீங்கள் சிவனிடமிருந்து சக்தி எடுப்பவர்கள் ஆவீர்கள்.
அவர் சர்வ சக்திவான் ஆவார். மனிதர்களோ இறந்தவர்களை பரமாத்மா
உயிர்ப்பிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தந்தை
கூறுகிறார் - செல்லமான குழந்தைகளே, இந்த நாடகத்தில் ஒவ்வொரு
வருக்கும் அழிவில்லாத பாகம் கிடைத்துள்ளது. நான் கூட "கிரியேட்டர்,
டைரக்டர் மற்றும் பிரின்சிபல் ஆக்டர் (படைப்பவர், இயக்குநர்
மற்றும் முக்கிய நடிகராக உள்ளேன்). நாடகத்தின் பாகத்தையோ நாம்
சிறிது கூட மாற்ற முடியாது. ஒவ்வொரு இலையும் கூட பரமாத்மாவின்
கட்டளைப்படி அசைகிறது என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால்
நான் கூட நாடகத்திற்கு அடிமைப்பட்டுள்ளேன். இதனுடைய பந்தனத்தில்
கட்டுப் பட்டுள்ளேன் என்று பரமாத்மாவே கூறுகிறார். அப்படி இன்றி
என்னுடைய கட்டளையினால் இலைகள் அசையும் என்பதல்ல. சர்வ
வியாபியின் ஞானம் பாரதவாசிகளை முற்றிலும் ஏழையாக ஆக்கி
விட்டுள்ளது. தந்தையின் ஞானத்தினால் பாரதம் மீண்டும் தலையின்
கிரீடம் ஆகிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சூரிய வம்சத்தில் முதன் முதலில் வர வேண்டும் என்றால்
நிச்சயபுத்தி உடையவராக ஆகி முழுமையான மதிப்பெண்கள் பெற வேண்டும்.
உறுதியான பிராமணர் ஆக வேண்டும். எல்லை யில்லாத ஞானத்தை நினைவில்
கொள்ள வேண்டும்.
2. ஞான சிதையில் அமர்ந்து குளிர்ந்தவராக அதாவது தூய்மையாக ஆக
வேண்டும். ஞானம் மற்றும் யோகத்தினால் காமத்தின் வெப்பத்தை
நீக்கி விட வேண்டும். புத்தியோகம் சதா ஒரு தந்தையின் நினைவால்
இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
வரதானம்:
பிராமண வாழ்வில் உயர்ந்த மனோநிலை எனும் விருது (மெடல்) பெற்று
கவலையில்லா ஊருக்கு இராஜா ஆகுக
நீங்கள் அனைவரும் உங்களது சுய ஸ்திதியை மிகவும் நல்லதாக
ஆக்குவதற்குத் தான் பிராமணர் ஆகியிருக்கிறீர்கள். பிராமண
வாழ்க்கையில் சிரேஷ்ட ஸ்திதி தான் உங்களது சொத்தாகும். இது தான்
பிராமண வாழ்க்கையின் மெடல். யார் இந்த மெடலைப் பெறுகிறார்களோ,
அவர்கள் சதா ஆடாத, அசையாத, ஏக்ரஸ் (ஒரே சீரான) ஸ்திதியில்
இருந்து கொண்டு, கவலையற்ற ஊருக்கு மகாராஜா ஆகி விடுகிறார்கள்.
அவர்கள் அனைத்து ஆசைகளில் இருந்தும் விடுபட்ட இச்சா மாத்ரம்
அவித்யா (ஆசை பற்றி அறியாதவர்) சொரூபம் ஆகிறார்கள்.
சுலோகன்:
உடையாத நிச்சயம் மற்றும் பெருமிதத்துடன் சொல்லுங்கள் - மேரா
பாபா. அப்போது மாயா அருகில் கூட வர முடியாது.