19-11-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே - உங்களுடைய நினைவு மிகவும் அதிசயமானதாகும் ஏனென்றால் நீங்கள் தந்தை, டீச்சர் மற்றும் சத்குரு மூவரையும் ஒன்றாக நினைவு செய்கிறீர்கள்

கேள்வி:
மாயை எந்தவொரு குழந்தையையும் கர்வமிக்கவர்களாக்குகிறது என்றால் எந்த விஷயத்தில் அலட்சியம் செய்கிறார்கள்?

பதில்:
கர்வமுள்ள குழந்தைகள் தேக-அபிமானத்தில் வந்து முரளியை அலட்சியம் செய்கிறார்கள், ஒரு பழமொழி இருக்கிறது - எலிக்கு மஞ்சள் துண்டு கிடைத்து விட்டால், நான் பெரிய செல்வந்தன் (கடை, சொந்தக்காரன்) என்று புரிந்து கொள்ளுமாம்..... நிறைய பேர் முரளியை படிப்பதே இல்லை, எங்களுக்கு சிவபாபாவோடு நேரடி தொடர்பு இருக்கிறது என்று சொல்லி விடுகிறார்கள். பாபா கூறுகின்றார், குழந்தைகளே முரளியில் புதிய-புதிய விசயங்கள் வருகிறது, ஆகையினால் முரளியை ஒருபோதும் தவற விடக்கூடாது, இதன்மீது மிகுந்த கவனம் இருக்கட்டும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளிடம் ஆன்மீக தந்தை கேட்கிறார், நீங்கள் இங்கே யாருடைய நினைவில் அமர்ந்துள்ளீர்கள்? (தந்தை, டீச்சர், சத்குரு) அனைவரும் இந்த மூவரின் நினைவில் அமர்ந்துள்ளீர்களா? ஒவ்வொருவரும் தங்களிடம் கேளுங்கள் இங்கே அமர்ந் திருக்கும்போது மட்டும் நினைவிருக்கிறதா அல்லது நடக்கும்போதும்-சுற்றும்போதும் நினைவு இருக்கிறதா? ஏனென்றால் இது அதிசயமான விஷயமாகும். வேறு எந்த ஆத்மாவிற்கும் இப்படி சொல்லப்படுவதில்லை.இந்த லஷ்மி - நாராயணன் உலகத்திற்கு எஜமானர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆத்மாவை ஒருபோதும் இவர்கள் தந்தையாகவும் இருக்கிறார், டீச்சராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார் என்று சொல்ல முடியாது. முழு உலகத்தில் இருக்கும் எந்தவொரு ஜீவாத்மாவையோ, எந்தவொரு ஆத்மாவையும் இப்படி சொல்ல முடியாது. குழந்தை களாகிய நீங்கள் தான் அப்படி நினைவு செய்கிறீர்கள். மனதிற்குள் இந்த பாபா, தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார் என்பது வருகிறது. அதுவும் உயர்ந்தவர் ஆவார். மூவரையும் நினைவு செய்கிறீர்களா அல்லது ஒருவரையா? அவர் ஒருவராக இருக்கலாம் ஆனால் மூன்று குணங்களிலும் நினைவு செய்கிறீர்கள். சிவபாபா நம்முடைய தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார் மற்றும் சத்குருவாகவும் இருக்கின்றார். இது தனித்துவமானது என்று சொல்லப்படுகிறது. நீங்கள் அமரும்போது அல்லது நடக்கும்போதும் சுற்றும்போதும் நினைவிருக்க வேண்டும். இவர் நம்முடைய தந்தை, டீச்சர், சத்குருவாகவும் இருக்கின்றார் என்று நினைவு செய்கிறீர்களா என்று பாபா கேட்கிறார். இப்படி வேறு எந்த தேகதாரியும் இருக்க முடியாது. தேகதாரியில் நம்பர் ஒன் கிருஷ்ணர், அவரை தந்தை, டீச்சர், சத்குரு என்று சொல்ல முடியாது, இது முற்றிலும் அதிசயமான விசயமாகும். உண்மையாக சொல்லுங்கள் மூன்று ரூபத்திலும் நினைவு செய்கிறீர்களா? உண்ணும் போது சிவபாபாவை மட்டுமே நினைவு செய்கிறீர்களா? அல்லது மூவருமே புத்தியில் வருகின்றதா? வேறு எந்த ஆத்மாவிற்கும் அப்படி சொல்ல முடியாது. பாபாவினுடைய மகிமை விசித்திரமானதாகும். எனவே பாபாவை நினைவு செய்வதும் அப்படி இருக்க வேண்டும். எனவே புத்தி ஒரேயடியாக அவர் பக்கம் சென்று விடும் அளவிற்கு அதிசயமானவராக இருக்கின்றார். பாபாவே வந்து தன்னுடைய அறிமுகத்தையும் பிறகு முழு சக்கரத்தின் ஞானத்தையும் கொடுக்கின்றார். இந்த யுகங்கள் ஒவ்வொன்றும், இத்தனை-இத்தனை ஆண்டுகளுடையது, இது சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த ஞானத்தையும் கூட படைப்பவராகிய அந்த தந்தை தான் கொடுக்கின்றார். எனவே அவரை நினைவு செய்வதின் மூலம் நிறைய உதவி கிடைக்கும். தந்தை, டீச்சர், குரு எல்லாமாக அவர் ஒருவரே ஆவார். இவ்வளவு உயர்ந்த ஆத்மாவாக வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் மாயை அப்படிப்பட்ட தந்தையின் நினைவையும் மறக்கச் செய்து விடுகிறது என்றால் டீச்சர் மற்றும் குருவும் கூட மறந்து விடுகிறார்கள். இதை ஒவ்வொருவரும் தங்களுடைய மனதில் வைக்க வேண்டும். பாபா நம்மை அப்படிப்பட்ட உலகத்திற்கு எஜமானர்களாக்கி விடுவார். எல்லையற்ற தந்தையின் ஆஸ்தி கண்டிப்பாக எல்லையற்றதாகத் தான் இருக்கும். கூடவே இந்த மகிமையும் புத்தியில் வரவேண்டும், நடக்கும்போதும்-சுற்றும்போதும் மூவருமே நினைவிற்கு வர வேண்டும். இந்த ஒரு ஆத்மாவின் மூன்று சேவையுமே ஒன்றாக இருக்கிறது ஆகையினால் அவரை சுப்ரீம்(உயர்ந்ததிலும் உயர்ந்தவர்) என்று சொல்லப்படுகிறார்.

மாநாடுகள் போன்றவற்றிற்கு அழைக்கிறார்கள் என்றால், உலகத்தில் எவ்வாறு அமைதி ஏற்படும் என்று விவாதிக்கிறார்கள்? அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, வந்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறுங்கள். செய்து கொண்டிருப்பது யார்? நீங்கள் பாபாவின் தொழிலை நிரூபித்து புரிய வைக்க வேண்டும். பாபாவினுடைய காரியத்திற்கும் கிருஷ்ணருடைய காரியத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மற்ற அனைவரும் சரீரத்தின் பெயரால் தான் அழைக்கப்படுவார்கள். பாபாவிற்கே ஆத்மாவின் பெயர் பாடப்படுகிறது. அந்த ஆத்மா தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார். ஆத்மாவில் ஞானம் இருக்கிறது, ஆனால் அதை எப்படி எடுத்துக் கூற முடியும்? சரீரத்தின் மூலம் தான் கொடுக்க முடியும் அல்லவா. கொடுப்பதால் தான் மகிமை பாடப்படுகிறது அல்லவா. சிவஜெயந்தியின் போது குழந்தைகள் மாநாடுகள் நடத்துகிறார்கள். அனைத்து தர்மத்தின் தலைவர்களையும் அழைக்கிறார்கள். நீங்கள் ஈஸ்வரன் சர்வவியாபி அல்ல என்பதை புரிய வைக்க வேண்டும். அனைவருக்குள்ளும் ஈஸ்வரன் இருந்தால் ஒவ்வொரு ஆத்மாவும் பகவான், தந்தையாகவும் இருக்கிறது, டீச்சராகவும் இருக்கிறது, குருவாகவும் இருக்கிறதா என்ன! உலகத்தின் முதல், இடை, கடைசியின் ஞானம் இருக்கிறதா என்ன? இதை யாரும் சொல்லவே முடியாது.

உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் மகிமை எவ்வளவு இருக்கிறது என்பது குழந்தைகளாகிய உங்களுக்குள் வர வேண்டும். அவர் முழு உலகத்தையும் தூய்மையாக்கக் கூடியவர் ஆவார். இயற்கையும் தூய்மையாகி விடுகிறது. மாநாட்டில் முதலில் கீதையின் பகவான் யார் என்று நீங்கள் கேட்க வேண்டும். சத்யுக தேவி-தேவதா தர்மத்தினை ஸ்தாபனை செய்யக்கூடியவர் யார்? ஒருவேளை கிருஷ்ணர் என்று சொன்னால் பாபாவை மறைத்து விடுவார்கள் அல்லது அவர் பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லி விடுவார்கள். இல்லை என்று சொல்வதைப் போலாகும். ஏனெனில் பாபா கர்மேந்திரியங்கள் இல்லாமல் இருக்கிறார் அல்லவா. எல்லையற்ற தந்தையையே தெரிந்திருக்கவில்லை. ஒருவர் மற்றவர் மீது காமக்கோடாரியை வீசி எவ்வளவு துன்புறுத்து கிறார்கள். ஒருவர் மற்றவருக்கு துக்கம் கொடுக்கிறார்கள். எனவே இந்த விசயங்கள் அனைத்தும் உங்களுடைய புத்தியில் ஓட வேண்டும். ஒப்பிட வேண்டும் - இந்த லஷ்மி - நாராயணன் பகவான் - பகவதி அல்லவா, இவர்களுடைய வம்சாவழியும் இருக்கிறது அல்லவா. எனவே கண்டிப்பாக அனைவரும் பகவான் - பகவதியாகத் தான் இருக்க வேண்டும். எனவே நீங்கள் அனைத்து தர்மத்தைச் சேர்ந்தவர்களையும் அழைக்கிறீர்கள். யார் நன்கு படித்தவர்கள் இருக்கிறார்களோ, தந்தையின் அறிமுகத்தை அளிக்க முடியுமோ, அவர்களைத் தான் அழைக்க வேண்டும். படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியின் அறிமுகத்தை கொடுப்பவர்களுக்கு வந்து-போவதற்கு, தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்று எழுதுங்கள். அவர்கள் படைப்பவர் மற்றும் படைப்பின் அறிமுகத்தை அளிப்பவர்களாக இருந்தால். யாருமே இந்த ஞானத்தை கொடுக்க முடியாது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். யாராவது வெளி - நாடுகளில் இருந்து வந்தாலும் கூட, படைப்பவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடைசியின் அறிமுகத்தை கொடுத்தால் செலவை கொடுத்து விடுவோம். இப்படி மற்ற யாரும் விளம்பரம் கொடுக்க முடியாது. நீங்கள் தைரியசாலிகள் அல்லவா. மகாவீரர்கள் - மகாவீரனிகளாவீர்கள். லஷ்மி - நாராயணன் உலக இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். என்ன திறமை அல்லது தைரியத்தினால் ? இந்த விசயங்கள் அனைத்தும் புத்தியில் வர வேண்டும். நீங்கள் எவ்வளவு உயர்ந்த காரியத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள். முழு உலகத்தையும் தூய்மையாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே பாபாவை நினைவு செய்ய வேண்டும், ஆஸ்தியையும் நினைவு செய்ய வேண்டும். சிவபாபா நினைவிருக் கிறதா? என்பது மட்டுமில்லை. ஆனால் அவருடைய மகிமையையும் கூட சொல்ல வேண்டும். இது நிராகாரமானவருடைய மகிமையாகும். ஆனால் நிராகாரமானவர் தன்னுடைய அறிமுகத்தை எப்படி கொடுக்க முடியும்? கண்டிப்பாக படைப்பினுடைய முதல், இடை, கடைசியின் ஞானத்தை கொடுப் பதற்கு வாய் வேண்டும் அல்லவா. வாயிற்கு எவ்வளவு மகிமை இருக்கிறது. மனிதர்கள் கவ்முக் என்ற இடத்திற்கு செல்கிறார்கள், எவ்வளவு ஏமாற்றம் அடைகிறார்கள். என்னென்ன விசயங்களை உருவாக்கி விட்டார்கள். அம்பு எய்தார் கங்கை வந்தது எனக் கூறிவிட்டனர். கங்கையை தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவது என்று புரிந்து கொள்கிறார்கள். தண்ணீர் எப்படி தூய்மை யற்றவர்களை தூய்மையாக்க முடியும். தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குபவர் பாபாவே ஆவார். ஆக பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி-இப்படியெல்லாம் செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். படைப்பவர் பாபா மற்றும் படைப்பினுடைய அறிமுகத்தை யார் வந்து கொடுப்பார்கள். சாது - சன்னியாசிகள் போன்றோர் ரிஷிகள்-முனிவர்கள் அனைவருமே தெரியாது-தெரியாது, எங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டனர். இதை சொல்லமட்டும் தெரிந்துள்ளார்கள், அப்படியென்றால் நாஸ்திகர்களாவார்கள். இப்போது ஆஸ்திகர்கள் யாராவது வருகிறார்களா என்று பாருங்கள்? இப்போது குழந்தைகளாகிய நீங்கள் நாஸ்திகர்களிலிருந்து ஆஸ்திகர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையை தெரிந்துள்ளீர்கள் அவர் உங்களை இந்தளவிற்கு உயர்ந்தவர்களாக மாற்றுகின்றார். ஓ இறை தந்தையே, எங்களை விடுவியுங்கள் என்றும் அழைக்கிறார்கள். இந்த சமயத்தில் இராவணனுடைய இராஜ்யம் முழு உலகத்திலும் இருக்கிறது என்பதை பாபா புரிய வைக்கின்றார். அனைவரும் கீழானவர்களாக இருக்கிறார்கள், பிறகு உயர்ந்தவர்களாக ஆவார்கள் அல்லவா. முதல்-முதலில் தூய்மையான உலகம் இருந்தது என்பது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. பாபா தூய்மையற்ற உலகத்தையா படைப்பார்? பாபா வந்து தூய்மையான உலகத்தை படைக்கின்றார், அதனை சிவாலயம் என்று சொல்லப்படுகிறது. சிவபாபா சிவாலயத்தை தான் உருவாக்குவார் அல்லவா. அவர் எப்படி உருவாக்குகின்றார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். மகாபிரளயம், வெள்ளம் போன்றவைகளோ நடப்பதில்லை. சாஸ்திரங்களில் என்னென்னவோ எழுதி விட்டார்கள். மீதம் 5 பாண்டவர்கள் இருந்தார்கள், அவர்கள் இமய மலையில் சென்று கரைந்து விட்டார்கள், பிறகு முடிவைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. இவையனைத்து விசயங்களையும் பாபா வந்து புரிய வைக்கின்றார். அவர் தந்தையாகவும் இருக்கின்றார், டீச்சராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார் என்பதையும் நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். அங்கே இந்த கோவில் கள் இருப்பதில்லை. இந்த தேவதைகள் இருந்துவிட்டு சென்றுள்ளார்கள், அவர்களுடைய நினைவாக கோவில்கள் இங்கே இருக்கின்றன. இவையனைத்தும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. வினாடிக்கு வினாடி புதிய விசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது, சக்கரம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது பாபா குழந்தைகளுக்கு நிறைய நல்ல வழிமுறைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேக-அபிமானமுடைய குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் நாம் அனைத்தையும் தெரிந்திருக்கிறோம் என்று புரிந்து கொள்கிறார்கள். முரளி கூட வாசிப்பதில்லை. மதிப்பே இல்லை. சில நேரங்களில் நல்ல முரளி நடக்கிறது என்று பாபா அறிவுறுத்துகின்றார். தவற விடக்கூடாது. 10- 15 நாட்களுக்கு முரளி தவறுகிறது என்றால் அதை அமர்ந்து படிக்க வேண்டும். இந்த படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடைசியின் ஞானத்தை யாராவது வந்து கொடுத்தீர்கள் என்றால் நாங்கள் அவர்களுடைய செலவு போன்ற அனைத்தையும் கொடுப்போம் என்று சவால் விடுங்கள் என்று பாபா கூறுகின்றார். யார் தெரிந்துள்ளார்களோ, அவர்கள் தான் இப்படி சவால் விடுவார்கள் அல்லவா. டீச்சர் சுயம் தெரிந்திருப்பதால் தான் கேட்கின்றார் அல்லவா. தெரிந்திருக் காமல் எப்படி கேட்பார்கள்.

சில குழந்தைகள் முரளியை பற்றி கூட அக்கரை கொள்வதில்லை. எங்களுக்கு சிவபாபாவோடு தான் தொடர்பு அவ்வளவு தான். ஆனால் சிவபாபா என்ன சொல்கிறாரோ, அதையும் கேட்க வேண்டும் அல்லவா. அதல்லாமல் நினைவு மட்டும் செய்வதல்ல. பாபா எவ்வளவு நல்ல - நல்ல இனிமையிலும் இனிமையான விசயங்களை சொல்கின்றார். ஆனால் மாயை முற்றிலும் கர்வமுள்ளவர்களாக்கி விடுகிறது. பழமொழி இருக்கிறது அல்லவா - எலிக்கு மஞ்சள் துண்டு கிடைத்தது, நான் மிகப்பெரிய செல்வந்தன் (கடை முதலாளி) என்று புரிந்து கொண்டதாம்..... அதுபோல நிறைய பேர் இருக்கிறார்கள், முரளியை படிப்பதே இல்லை. முரளியில் புதிய-புதிய விசயங்கள் வருகின்றது அல்லவா. ஆகவே இந்த விசயங்கள் அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டியவைகளாகும். பாபாவின் நினைவில் அமரும்போது, அந்த தந்தை டீச்சராகவும் இருக் கின்றார் சத்குருவாகவும் இருக்கின்றார் என்பதையும் நினைவு செய்ய வேண்டும். இல்லை யென்றால் யாரிடமிருந்து படிப்பீர்கள். பாபா குழந்தைகளுக்கு அனைத்தையும் புரிய வைத்து விட்டார். குழந்தைகள் தான் தந்தையை வெளிக் காட்டுவார்கள். மகன் தந்தையை வெளிக் காட்டுவான். பிறகு மகனை தந்தை வெளிக்காட்டுவார். ஆத்மாவை வெளிப்படுத்துகின்றார். பிறகு குழந்தைகளுடைய வேலை தந்தையை வெளிக்காட்டுவதாகும். பாபாவும் குழந்தைகளை விட்டு விடுவதில்லை, இன்று இந்த இடத்திற்கு செல்லுங்கள், இன்று அங்கு செல்லுங்கள், என்று சொல்வார். இவருக்கு யாராவது கட்டளையிடுபவர்கள் இருக்கிறார்களா. எனவே இந்த அழைப்புகள் போன்றவை நாளேடுகளில் வரும். இந்த சமயத்தில் முழு உலகத்திலும் நாஸ்திகர்களாக இருக்கிறார்கள். பாபா தான் வந்து ஆஸ்திகர் களாக்குகிறார். இந்த சமயத்தில் உலகம் முழுவதும் ஒரு பைசாவிற்கு கூட மதிப்பற்றதாக இருக்கிறது. அமெரிக்காவிடம் எவ்வளவு தான் செல்வம் பொருட்கள் இருக்கட்டும் ஆனால் ஒரு பைசாவிற்கு மதிப்பற்றதாகும். இவையனைத்தும் அழியக் கூடியவைகளாகும். முழு உலகத்திலும் நீங்கள் முழு ரூபாய்க்கு ஒப்பாக மதிப்பானவர் களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அங்கே ஏழைகளாக யாரும் இருக்க மாட்டார்கள்.

குழந்தைகளாகிய நீங்கள் எப்போதும் ஞானத்தை சிந்தனை செய்து மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். இதற்குத் தான் அதீந்திரிய சுகத்தை கோப-கோபியர்களிடம் கேளுங்கள் என்று பாடப் பட்டுள்ளது. இது சங்கமயுகத்தின் விசயங்களே ஆகும். சங்கமயுகத்தை யாரும் தெரிந்திருக்கவே இல்லை. விரிவான சேவை செய்வதின் மூலம் மகிமைகள் ஏற்படலாம். ஆஹா பிரபு உன்னுடைய லீலைகளே லீலை தான். பகவான் தந்தை, டீச்சர், சத்குருவாகவும் இருக்கின்றார் என்பதை யாரும் தெரிந்திருக்க வில்லை. இப்போது தந்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக் கின்றார். குழந்தைகளுக்கு இந்த போதை நிலையாக இருக்க வேண்டும். கடைசி வரை போதை இருக்க வேண்டும். இப்போது போதை சோடா நீரைப் போல் ஆகி விடுகிறது. சோடாவும் அப்படி ஆகிறது அல்லவா. கொஞ்ச நேரம் வைத்திருந்தால் உப்பு நீராகி விடுகிறது. அப்படி ஆகக் கூடாது. யாருக்கும் இப்படி புரிய வைத்தீர்கள் என்றால் அவர்களும் அதிசயப்படுவார்கள். நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் ஆனால் நேரம் ஒதுக்கி புரிந்து கொள்வது, வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வது என்பது கடினமாக இருக்கிறது. தொழில் போன்றவைகளை செய்யாதீர்கள் என்று பாபா தடை சொல்வதில்லை. தூய்மையாக ஆகுங்கள் மற்றும் நான் என்ன படிப்பிக்கின்றேனோ அதை நினைவு செய்யுங்கள். இவர் டீச்சர் அல்லவா. மேலும் இது அசாதாரண மான படிப்பாகும். எந்த மனிதனும் கற்பிக்க முடியாது. பாபா தான் பாக்கியசாலி ரதத்தில் வந்து படிப்பிக்கின்றார். இது உங்களுடைய (பிரம்மா பாபா) சிம்மாசனமாகும் இதில் அழிவற்ற மூர்த்தி ஆத்மா வந்து அமருகிறது என்று பாபா அவருக்கு புரிய வைத்திருக்கிறார். அதற்கு முழு நடிப்பும் கிடைத்திருக்கிறது. இது உண்மையான விசயம் என்பதை இப்போது நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். மற்றவை அனைத்தும் செயற்கையான விசயங்களாகும். இதை நல்ல விதத்தில் தாரணை செய்து முடி போட்டுக் கொள்ளுங்கள். பிறகு கை படும்போதும் நினைவிற்கு வரும். ஆனால் ஏன் முடி போட்டோம் என்பதையே மறந்து விடுகிறார்கள். நீங்கள் இதை உறுதியாக நினைவு செய்ய வேண்டும். பாபாவின் நினைவின் கூடவே ஞானமும் வேண்டும். முக்தி இருக்கிறது என்றால் ஜீவன் முக்தியும் இருக்கிறது. மிகவும் இனிமையான குழந்தைகளாக ஆகுங்கள். கல்பம்-கல்பமாக இந்த குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பாபா உள்ளுக்குள் புரிந்து கொள்கிறார். வரிசைக் கிரமமான முயற்சியின்படி தான் ஆஸ்தியை அடைவார்கள். இருந்தாலும் படிப்பிக்கக் கூடிய டீச்சர் முயற்சி செய்ய வைப்பார் அல்லவா. நீங்கள் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள் எனவே தான் சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று நினைவூட்டப்படுகிறது. அவர் தந்தை, டீச்சர், சத்குரு வாகவும் இருக்கின்றார். சிறிய குழந்தைகள் அப்படி நினைவு செய்யாது. கிருஷ்ணரை தந்தை, டீச்சர், சத்குரு என்று சொல்ல முடியுமா என்ன? ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார், அவர் எப்படி குருவாக முடியும். துர்கதியில் இருக்கும்போது தான் குரு வேண்டும். பாபா வந்து அனைவரையும் சத்கதி அடையச் செய்கின்றார் என்று பாடப்பட்டுள்ளது. கிருஷ்ணரை நிலக் கரியை போல் கருப்பாக உருவாக்கி விட்டார்கள். இந்த சமயத்தில் அனைவரும் காமசிதையில் ஏறி நிலக் கரியைப்போல் ஆகி விட்டார்கள் ஆகையினால் தான் கார்மேகன் (கருமை நிறம்) என்று சொல்லப் படுகிறது. இது புரிந்து கொள்வதற்கு எவ்வளவு ஆழமான விசயங்களாக இருக்கிறது. கீதையை அனைவரும் படிக்கிறார்கள். பாரதவாசிகள் தான் அனைத்து சாஸ்திரங்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அனைவருடைய சித்திரங்களையும் வைத்திருப்பார்கள். என்றால் அவர்களை என்னவென்று சொல்வது? கலப்பட பக்தியாகி விட்டது அல்லவா. ஒரு சிவனுடையது தான் கலப் படமற்ற பக்தியாகும். ஞானமும் ஒரு சிவபாபாவிடமிருந்து தான் கிடைக்கிறது. இந்த ஞானமே வித்தியாசமானதாகும். இதனை ஆன்மீக ஞானம் என்று சொல்லப்படுகிறது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அழியக்கூடிய போதைகளை (கர்வத்தை) விட்டு விட்டு, ஒரு பைசா அளவு கூட மதிப்பில்லா நிலையி-ருந்து நாம் இப்போது முழு ரூபாய்க்கு ஒப்பானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம், என்ற அலௌகீக போதை இருக்கட்டும். சுயம் பகவான் நமக்கு கற்பிக்கின்றார், நம்முடைய படிப்பு புதுமையானது.

2) ஆஸ்திகர்களாக ஆகி பாபாவை வெளிப்படுத்தக் கூடிய சேவை செய்ய வேண்டும். கர்வமுள்ளவர்களாகி ஒருபோதும் முரளியை தவற விடக்கூடாது.

வரதானம்:
தூய்மையெனும் அஸ்திவாரம் மூலம் எப்போதும் உயர்ந்த செயல் செய்யும் பூஜைக்குரிய ஆத்மா ஆகுக !

தூய்மை பூஜைக்குரியவராக்குகின
்றது. எப்போதும் உயர் செயல் செய்பவரே பூஜைக்குரியவர் ஆவார். ஆனால் பிரம்மச்சரியம் மட்டுமே தூய்மையல்ல. மனதின் எண்ணத்தாலும் எவருக்கும் எதிர்மறை எண்ணம் எழக்கூடாது. யதார்த்தமற்ற சொல்லும் கூடாது. தொடர்பிலும் வேற்றுமை கூடாது. அனைவருடனும் உல்லதொரு சம்மந்தம் வேண்டும். மனம், சொல், செயல் அனைத்திலும் தூய்மை துண்டிக்கக் கூடாது. அப்போதே பூஜைக்குரியவர் ஆவார். நான் பரம பூஜைக்குரிய ஆத்மா இதே நினைவால் தூய்மையெனும் அஸ்திவாரத்தை உறுதி செய்க.

சுலோகன்:
ஆஹா நான் எனும் இந்த ஆன்மீக அலௌகீக குஷியில் இருந்தால் மனமும் உடலும் நடனமாடிக் கொண்டே இருக்கும்.