20-12-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்தால் சதா மகிழ்ச்சி நிறைந்த, மலர்ந்த முகத்தோடு இருப்பீர்கள், தந்தையின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும், ஒரு பொழுதும் குழப்பமடைய மாட்டீர்கள்.

கேள்வி:
குழந்தைகள் நீங்கள் இறை மாணவ வாழ்க்கையை எப்படிப்பட்ட நஷாவோடு (போதையுடன்) கழிக்க வேண்டும்.?

பதில்:
நாம் இந்த படிப்பின் மூலம் இளவரசனாக இளவரசியாக ஆகின்றோம். இந்த போதை சதா இருக்க வேண்டும். இந்த வாழ்க்கையை சிரித்துக் கொண்டு விளையாடிக்கொண்டு, ஞான நடனம் செய்து கொண்டு கழிக்க வேண்டும். சதா வாரிசாகி மலராக ஆவதற்கான முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். இது இளவரசன், இளவரசியாக ஆவதற்கான கல்லூரியாகும். இங்கு படிக்கவும், படிப்பிக்கவும் வேண்டும், பிரஜைகளையும் உருவாக்க வேண்டும் அப்பொழுது தான் இராஜாவாக ஆக முடியும். தந்தை படிப்பிக்கின்றார், அவர் படிப்பதற்கு அவசியம் இல்லை.

பாடல்:
குழந்தைப் பருவத்தின் நாட்களை மறந்து விடாதீர்கள்............

ஓம் சாந்தி.
இந்தப் பாடல் குறிப்பாக குழந்தைகளுக்கு உரியதாகும். சினிமா பாடலாக இருந்தாலும் சில பாடல்கள் குழந்தைகளுக்கு உரியதாகும். யார் திறமையான குழந்தைகளோ அவர்களுக்கு அந்த பாடல்களை கேட்கும் நேரத்தில் அதனுடைய அர்த்தத்தை தன்னுடைய மனதில் கொண்டு வர வேண்டும். தந்தை என்னுடைய செல்லமான குழந்தைகளே என்று அழைத்து புரிய வைக்கின்றார். ஏனென்றால் நீங்கள் குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள். எப்பொழுது குழந்தையாகின்றீர்களோ அப்பொழுது தான் தந்தையின் ஆஸ்தி நினைவில் வரும். குழந்தையாகவே ஆகவில்லையெனில் நினைவு செய்தாக வேண்டும். நாம் எதிர்காலத்தில் பாபாவின் ஆஸ்தியை அடைவோம் என்ற நினைவும் குழந்தைகளுக்கு இருக்கிறது, இது தான் இராஜயோகமாகும், பிரஜா யோகம் இல்லை. நாம் எதிர்காலத்தில் இளவரசாக-இளவரசியாக ஆவோம். நாம் அவருடைய குழந்தைகள் மற்றபடி உற்றார், உறவினார்கள் ஆகிய அனைவரையும் மறக்கத்தான் வேண்டும். ஒருவரைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. சரீரத்தின் நினைவு கூட வரக் கூடாது. தேக அபிமானத்தை விட்டு விட்டு ஆத்மா அபிமானியாக வேண்டும்; தேக அபிமானம் வருவதன் மூலம் அநேக விதமான வேண்டாத எண்ணங்கள் தலை கீழாக ஆக்குகிறது. நினைவில் இருப்பதற்கான பயிற்சி செய்து கொண்டே இருந்தால் எப்பொழுதும் முக மலர்ச்சியோடு மலர்ந்த மலராக இருப்பீர்கள். நினைவை மறப்பதினால் வாடிய மலராக ஆகின்றனர். தைரியமுள்ள குழந்தைகளுக்கு தந்தையின் உதவி நிச்சயமாக கிடைக்கும். குழந்தையாகவே ஆகவில்லையெனில் தந்தை எந்த விˆயத்திற்காக உதவி செய்வார்? ஏனென்றால் அவர்களுடைய தாய்,தந்தை மாயா இராவணன் ஆகும், ஆகவே அவர்கள் மூலமாக கீழே வீழ்வதற்கு உதவி கிடைக்கும். குழந்தைப் பருவ நாட்களை மறந்து விடாதீர்கள். ஆகவே இந்த பாடல் குழந்தைகள் உங்களுக்காகவே முற்றிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தந்தையை நினைவு செய்ய வேண்டும், நினைவு செய்யவில்லையெனில் இன்று சிரித்து, நாளை மீண்டும் அழ வேண்டியதாகி விடும். நினைவு செய்வதனால் சதா முகமலர்ச்சியோடு இருப்பீர்கள். ஒரே ஒரு கீதை சாஸ்திரத்தில் சில வார்த்தைகள் சரியாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். யுத்த மைதானத்தில் இறந்தால் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்று எழுதப்பட்டிருக் கிறது. ஆனால் இதில் ஹிம்சையான யுத்தத்திற்கான விˆயமில்லை. குழந்தைகள் நீங்கள் தந்தையிட மிருந்து சக்தி அடைந்து மாயாவை வெற்றிப் பெற வேண்டும் ஆகவே தந்தையை அவசியம் நினைத்தாக வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆவீர்கள். அவர்கள் ஸ்தூலமான ஆயுதங்களை காட்டியுள்ளனர். ஞானத்தின் வாள், ஞான அம்பு போன்ற வார்த்தையை கேட்டுள்ளீர்கள். ஆகவே அவர்கள் ஸ்தூலமான ஆயுதமாக கொடுத்துள்ளனர். நடைமுறையில் இவை ஞானத்தின் விˆயங்களாகும். மற்றபடி இவ்வளவு புஜங்கள் யாருக்கும் கிடையாது ஆக இது யுத்த மைதானமாக இருக்கிறது. நினைவு யாத்திரையிலிருந்து சக்தி அடைந்து விகாரங்களின் மீது வெற்றி பெற வேண்டும். தந்தையின் நினைவு மூலமாக பிராப்தியின் நினைவு வரும் வாரிசுகள் மட்டுமே பிராப்தி அடைகின்றனர். வாரிசாக ஆகவில்லை யெனில், பிறகு பிரஜையாக ஆகிவிடு வார்கள். இது இராஜயோகமாகும், பிரஜா யோகம் இல்லை. பாபாவை தவிர வேறு யாராலும் புரிய வைக்க முடியாது.

நான் இந்த சாதாரண உடலை ஆதாரமாக எடுக்க வேண்டியதாகிறது என தந்தை கூறுகின்றார். இயற்கையை ஆதாரமாக எடுக்காமல் குழந்தைகள் உங்களுக்கு எப்படி இராஜயோகத்தை கற்றுத் தர முடியும்? ஆத்மா சரீரத்தை விட்டு விட்டால் பிறகு எந்த விதமான பேச்சு வார்த்தை ஏற்பட முடியாது. ஆத்மா சரீரத்தை எடுத்து, குழந்தையாகி வெளியே வந்த பிறகு புத்தி திறக்கப்படும். சிறிய குழந்தைகள் தூய்மையானவர்கள் அவர்களிடம் விகாரங்கள் இருக்காது. சந்நியாசிகள் ஏணியில் ஏறி பிறகு கீழே இறங்குகின்றனர். தன்னுடைய வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகள் என்றாலே தூய்மையானவர்கள் குழந்தைகள் மகாத்மாவுக்கு சமம் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் நாம் இந்த சரீரத்தை விட்டு விட்டு; இளவரசன், இளவரசியாக ஆவோம் என நீங்கள் புரிந்துள்ளீர்கள். இதற்கு முன்பும் நாம் ஆகியிருந்தோம், இப்பொழுது மீண்டும் ஆகின்றோம். இப்படி யான சிந்தனைகள் மாணவர்களிடம் இருக்கும். யார் குழந்தைகளாக இருக்கின்றார்களோ அவர் களுடைய புத்தியில் இந்த விˆயங்கள் இருக்கும். மேலும் அவர்கள் கீழ்படிந்தவர்களாக, நம்பிக்கை யானவர்களாக இருந்து ஸ்ரீமத் படி நடந்து கொள்வார்கள். இல்லையெனில் உயர்ந்த பதவி அடைய முடியாது. டீச்சர் படிப்பிக்கின்றார், அவர் படித்து பிறகு படிப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவரை ஞானம் நிறைந்தவர் என கூறப்படுகிறது. உலகத்தின் மூன்று கால ஞானம் வேறு யாருக்கும் தெரியாது. முதலில் அவர் தந்தையாக இருக்கிறார் என்ற நம்பிக்கை வேண்டும். யாருக்கு அதிர்ஷ்டம் இல்லையோ அவர்களுக்குள் என்னால் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியுமா? தெரியவில்லை என்ற குழப்பம் இருக்கும். எப்பொழுது நீங்கள் தந்தையின் மடியில் வந்தீர்களோ, அப்பொழுது விகாரங்களின் வியாதி மிக வேகமாக வெளியேறும் என பாபா புரிய வைக்கின்றார். இந்த மருந்தை சாப்பிட்டால் வியாதி வேகமாக வெளியேறும் என்று வைத்தியர்கள் கூட கூறுவார் கள். நீங்கள் குழந்தைகளாக ஆனவுடன் தேக அபிமானத்தினுடையது மற்றும் காமம், கோபத்தின் வியாதி அதிகமாகும் என தந்தையும் கூறுகின்றார், இல்லையெனில் பரீட்சை எப்படி ஏற்படும்? ஏதாவது குழப்பம் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்; நீங்கள் பலசாலியாகும் பொழுது மாயாவும் வேகமாக தாக்குதல் செய்யும், நீங்கள் குத்துச் சண்டையில் இருக்கின்றீர்கள். குழந்தை யாகவில்லையெனில் குத்துச் சண்டைக்கான விˆமே இல்லை. அவர்கள் தன்னுடைய குழப்பமான, வீணான எண்ணங்களில் மூழ்கி விடுகின்றனர், எந்த உதவியும் கிடைப்பதில்லை. பாபா புரிய வைக் கின்றார் - மம்மா, பாபா என சொல்கின்றார்கள், ஆகவே தந்தையின் குழந்தையாக வேண்டும், பிறகு மனதில் அவர் தான் நம்முடைய ஆன்மீக தந்தை என்பது உறுதியாகி விடும். மற்றபடி இது யுத்த களமாக இருக்கிறது, நம்மால் இந்த புயலை தாங்கி கொண்டு இருக்க முடியுமா, முடியாதா? என்ற பயம் இருக்கக் கூடாது, இதனை பலவீனம் என கூறப்படுகிறது. இந்த விˆயத்தில் சிங்கம் போல் ஆக வேண்டும். முயற்சிக்காக தந்தையிடமிருந்து நல்ல வழி முறைகளை கேட்க வேண்டும். நிறைய குழந்தைகள் தனது நிலையை எழுதி அனுப்புகின்றனர், தந்தை தான் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இவரிடம் நீங்கள் மறைத்தாலும் சிவபாபாவிடம் மறைக்க முடியாது. நிறைய பேர் மறைக்கின்றனர், ஆனால் அவரிடம் எதையும் மறைக்க முடியாது. நல்லவற்றின் பலன் நல்லதாகவும் கெட்டவற்றின் பலன் கெட்டதாகவும் கிடைக்கும். சத்யுகம், திரேதா யுகத்தில் அனைத்தும் நல்லதாகவே கிடைக்கும். நல்லது- கெட்டது, பாவம்-புண்ணியம் இவையனைத்தும் இங்கு தான் ஏற்படுகிறது. அங்கு தானம், புண்ணியம் செய்யப்படுவதில்லை. அங்கு பிராப்தியின் அனுபவம் மட்டுமே இருக்கும். இங்கு நாம் முற்றிலும் அர்ப்பணம் ஆவதால் பாபா 21 பிறவிகளுக்கு திரும்ப கொடுக்கின்றார். தந்தையை பின்பற்ற வேண்டும்; தலைகீழான காரியம் செய்தால் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படும், எனவே அறிவுரை தர வேண்டியதாக இருக்கிறது. ஞானம், அன்பு நிறைந்தவராக ஆக வேண்டும். ஆத்மாக் களாகிய நமக்கு பாபா படிப்பிக்கின்றார் பிறகு நாமும் படிப்பிக்க வேண்டும், சத்தியமான பிராமணர் கள் சத்தியமான கீதையை கூற வேண்டும். வேறு எந்த சாஸ்திரங்களின் விˆயமும் இங்கு இல்லை முக்கியமானது கீதை, மற்றபடி மற்ற அனைத்து சாஸ்திரங்களும் அதன் குழந்தைகள். அதன் மூலம் யாருக்கும் நன்மை ஏற்படுவதில்லை, யாரும் என்னை அடைவதில்லை. நான் வந்து தான் மீண்டும் சகஜ ஞானம், சகஜ யோகத்தை கற்றுத் தருகிறேன். அனைத்து சாஸ்திரங்களின் தலைமையானது கீதை, அந்த உண்மையான கீதை மூலமாகத் தான் பிராப்தி கிடைக்கிறது. கிருஷ்ணருக்கும் கூட கீதை மூலமாக பிராப்தி கிடைத்தது, கீதையின் தந்தை, படைப்பவர் வந்து பலனைத் தருகின்றார். மற்றபடி கீதை சாஸ்திரத்தால் பலன் அடைய முடியாது. படைப்பவர் ஒருவரே, மற்றவையனைத்தும் அவருடைய படைப்புக்கள் ஆகும். முதல் நம்பர் சாஸ்திரம் கீதையாகும், பிறகு உருவாகும் சாஸ்திரங்களால் பலன் ஏற்படாது. பலன் நேரில் வரும் பொழுது கிடைக்கிறது. முக்திக்கான பலன் அனைவருக்கும் கிடைத்தாக வேண்டும், அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். மற்றபடி யார் எவ்வளவு படிக்கின்றார்களோ அவ்வளவு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும். தந்தை நேரில் வந்து படிப்பிக்கின்றார் எதுவரை யார் படிப்பிக்கின்றார் என்ற நம்பிக்கை இல்லையோ அவர்களால் என்ன புரிந்து கொள்ள முடியும்? என்ன பலனை அடைய முடியும்? இருந்தாலும் மீண்டும் தந்தையிடமிருந்து ஞானத்தை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஞானம் அழியாது. எவ்வளவு சுகம் கிடைக்கிறதோ அதனை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள். பிரஜைகளை உருவாக்கினால் அவர்கள் தாங்களே இராஜாவாக ஆவார்கள்.

நம்முடையது மாணவ வாழ்க்கை. சிரித்துக் கொண்டு, விளையாடிக் கொண்டு, ஞானத்தின் நடனம் செய்து நாம் இளவரசனாக ஆவோம். நாம் இளவரசனாக ஆவோம் என மாணவர்கள் புரிந்து கொள்ளும் பொழுது மகிழ்ச்சியும் அதிகமாகும். இது தான் இளவரசன்-இளவரசி ஆவதற்கான கல்லூரியாகும், அங்கு இளவரசன்-இளவரசி படிப்பதற்கு தனித்தனியாக கல்லூரி இருக்கும். விமானத் தில் சென்று வருவார்கள்; அங்கு விமானங்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். ஒரு பொழுதும் கோளாறு ஏற்படாது, எந்த வகையிலும் விபத்து ஏற்படாது, இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். முதலில் தந்தையிடம் முழுமையாக புத்தியின் தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்ததாக தந்தையிடம் அனைத்து விˆங்களையும் கூறிவிட வேண்டும். அதாவது யாரெல்லாம் முள்ளிலிருந்து மொட்டுக்களாக ஆகியுள்ளனர்?. தந்தையிடம் முழு சம்மந்தமும் வைத்துக் கொள்ள வேண்டும், பிறகு டீச்சர் ரூபத்தில் வழிகாட்டுதல் கொடுப்பார். யார் வாரிசாகி மலராக்கக் கூடிய முயற்சி செய்கின்றனர்? முள்ளிலிருந்து மொட்டாக ஆகி பிறகு மலராக ஆக வேண்டும்; அப்பொழுது தான் குழந்தையாக முடியும். இல்லையெனில் மொட்டாகவே இருந்து பிரஜையாக ஆகிவிடுவார்கள். இப்பொழுது யார் எவ்வாறு முயற்சி செய்கிறார்களோ அவ்வாறு பதவி அடைவார்கள். ஒருவர் முயற்சி செய்தால் அவருடைய வாலை பிடித்துக் கொண்டு நாமும் அடைந்து விடலாம் என்பது இல்லை. பாரதவாசிகள் அவ்வாறு புரிந்துள்ளனர். ஆனால் வாலை பிடித்துச் செல்வதற்கான விˆயம் இல்லை, யார் செய்கின்றார்களோ அவர்களே அடைவார்கள். யார் முயற்சி செய்கின்றார்களோ அவர்களுக்கு 21 வம்சங்களுக்கு பிராப்தி உருவாகும், முதுமை அவசியம் ஏற்படும். தீடீர் மரணம் ஏற்படாது, ஆக எவ்வளவு மிகப் பெரிய பதவியாக இருக்கிறது. இன்னாருடைய அதிர்ஷ்டம் உருவாகி விட்டது, வாரிசாக ஆகிவிட்டனர் என தந்தை புரிந்திருக்கிறார் இப்பொழுது முயற்சியாளராக இருக்கின்றனர், பிறகு முறையீடு செய்கின்றனர், பாபா இம்மாதிரி தடைகள் வருகின்றது, இவ்வாறு ஏற்படுகிறது என கூறுகின்றனர். ஒவ்வொருவரும் கணக்குகளை கொடுக்க வேண்டும், இவ்வளவு உழைப்பு வேறு சத்சங்கங்களில் ஏற்படுவதில்லை. பாபா சின்னஞ் சிறு குழந்தைகளைக் கூட செய்தியாளராக ஆக்கிவிட்டார். யுத்தகளத்தில் செய்தியை கொண்டு செல்பவர்களும் தேவையல்லவா! இதுவும் யுத்த மைதானமாக இருக்கிறது. இங்கு நீங்கள் நேரில் கேட்கும் பொழுது மிகவும் நன்றாக இருக்கிறது, உள்ளத்தில் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. வெளியே சென்று விட்டால் நாரைகளின் சகவாசம் ஏற்படுகிறது, எனவே மகிழ்ச்சியும் மறைந்து விடுகிறது. அங்கு மாயாவின் பாதிப்பு இருக்கிறதல்லவா, எனவே பக்காவாக ஆக வேண்டும்.

பாபா எவ்வளவு அன்போடு படிப்பிக்கின்றார், எவ்வளவு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் ஆக நல்லது நல்லது என்று கூறி பிறகு வராமல் மறைந்து விடுகின்றனர், அவ்வாறு நிறைய பேர் இருக்கின்றனர், மிகவும் ஒரு சிலர் மட்டுமே உறுதியாக நிற்கின்றனர். இங்கு ஞானத்தின் நஷா அவசியம் வேண்டும். மது அருந்தினால் நஷா ஏற்படுகிறது அல்லவா. யாராவது திவாலாகிவிட்டாலும் கூட, மது அருந்தினால் வேகமாக நஷா அதிகமாகி தன்னை தான் நான் இராஜாவுக்கெல்லாம் இராஜா என புரிந்து கொள்வார்கள். இங்கு குழந்தைகளுக்கு ஞான அமிர்தம் தினமும் கிடைக்கிறது. தாரணை செய்வதற்காக நாளுக்கு நாள் நிறைய விˆயங்கள் கிடைக்கிறது, ஆக புத்தியின் பூட்டு இதனால் திறந்து விடுகிறது. எனவே முரளியை எப்படியாவது படித்தாக வேண்டும். எப்படி கீதையை தினந்தோறும் படிக்கின்றார்கள் அல்லவா! இங்கும் தினமும் தந்தையிடம் வந்து படித்தாக வேண்டும். என்னுடைய முன்னேற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? வந்து கேட்டு புரிந்து கொள்ள வேண்டும்; யாருக்கு இவர் நம்முடைய தந்தை என்ற முழு நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் வருவார்கள். முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன், நிச்சய புத்தி ஏற்படுவதற்காக என்பதல்ல. நம்பிக்கை என்பது ஒன்றுதான், அதில் சதவீதம் கிடையாது. தந்தை ஒருவர் தான், அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. இங்கு ஆயிரக்கணக்கானோர் படிக்கின்றனர், ஆனாலும் எப்படி நம்புவது? என கேட்டால் அவர்களை அதிர்ஷ்டம் இல்லதாவர்கள் என கூறப்படுகிறது. தந்தையைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்பவர்களே அதிர்ஷ்டசாலி. யாராவது இராஜா என்னுடைய மடியில் குழந்தையாக வாருங்கள் என கூறினால் அவருடைய மடியில் சென்றதும் நம்பிக்கை வருமல்லவா! எப்படி நம்புவது என கூறமாட்டார்கள். இது தான் இராஜயோகம். தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர், அவர் சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகிறார். நம்பிக்கை இல்லையெனில் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை, பிறகு யார் என்ன செய்ய முடியும்? ஏற்றுக் கொள்ளவில்லையெனில் பிறகு முயற்சி எவ்வாறு செய்ய முடியும்? அவர்கள் தடுமாறி கொண்டே இருப்பார்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து பாரதவாசிகளுக்கு கல்ப-கல்பமாக சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. சொர்க்கத்தில் மட்டுமே தேவதைகள் இருப்பார்கள், கலியுகத்தில் இராஜ்யம் என்பதே இல்லை. பிரஜைகள் மேல் இராஜ்யம் செய்கின்றனர்; அழுக்கான உலகத்தை சுத்தமான உலகமாக தந்தை ஆக்கமால் வேறு யாரால் முடியும்? அதிர்ஷ்டம் இல்லையெனில் புரிந்து கொள்ளமாட்டார்கள்; இங்கு அனைத்தும் சகஜமாக புரிந்து கொள்ளக்கூடிய விசயங்கள் ஆகும். இலட்சுமி- நாராயணர் இராஜ்யத்தின் ஆஸ்தியை எப்பொழுது அடைந்தார்கள்? முந்தைய பிறவியில் அவசியம் அப்படிப்பட்ட கர்மம் செய்து அதற்கான பலனை அடைந்துள்ளனர். இலட்சுமி - நாராயணர் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தனர், இப்பொழுது நரகமாக இருக்கிறது. எனவே, சிரேஷ்டமான கர்மம் மற்றும் இராஜயோகத்தை தந்தையைத் தவிர வேறு யாராலும் கற்றுத் தர முடியாது. இப்பொழுது அனைவருக்கும் கடைசி பிறவியாகும். தந்தை இராஜயோகத்தை கற்றுத் தருகின்றார், துவாபரயுகத்தில் இராஜயோகம் கற்றுத் தர முடியாதல்லவா! துவாபரயுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர முடியாதல்லவா! இங்கு மிகவும் நன்றாக புரிந்து கொண்டு செல்கின்றனர், வெளியே சென்ற பிறகு காலியாகி விடுகின்றனர், எவ்வாறு பெட்டியில் துவாரம் இருந்தால் இரத்தினங்கள் வெளியேறி விடும். அது போல ஞானத்தை கேட்டு பிறகு விகாரத்தில் சென்றால் முடிந்து விடும். புத்தி மூலம் ஞான இரத்தினங்களை நிறைப்பதால் சுத்தமாகும். பாபா, உழைப்பு தொடர்ந்து செய்து பிறகு விழுந்து விட்டோம் எனவும் எழுதுகின்றனர். வீழ்வதன் மூலம் தனக்கும், குலத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர் அதிர்ஷ்டத்தை வரையறுத்துக் கொள்கின்றனர். வீட்டில் கூட குழந்தைகள் அவ்வாறு தலை கீழான காரியம் செய்தால் இப்படிப்பட்ட குழந்தை இறந்தால் கூட நல்லது என கூறுவார்கள். ஆக இந்த எல்லையற்ற தந்தை கூறுகின்றார், குலத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். விகாரங்களை தானமாக கொடுத்து பிறகு எடுத்துக் கொண்டால் பதவி தாழ்ந்து விடும் முயற்சி செய்து வெற்றியடைய வேண்டும். மாயாவுடைய அடி விழுந்தால் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும். அடிக்கடி அடிவாங்கி தோல்வியடைந்தால் மூர்ச்சை அடைந்துவிடுவீர்கள். தந்தை புரிய வைத்தாலும் சிலர் நிலையாக மாறாமல் இருக்கின்றார்கள், மாயா மிகவும் சக்தி வாய்ந்தது. தூய்மையாக இருப்பதற்கான வாக்குறுதி எடுத்து பிறகு விழுந்து விட்டால் பலமாக அடி கிடைக்கும். தூய்மையின் மூலமாகவே கரை சேர முடியும் தூய்மை இருந்த பொழுது பாரதம் ஜொலித்துக் கொண்டு இருந்தது, இப்பொழுது ஆழ்ந்த இருட்டாகி விட்டது. நல்லது

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும், ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. இந்த யுத்த மைதானத்தில் மாயாவைக் கண்டு பயப்படக் கூடாது, தந்தையிடமிருந்து முயற்சிக்காக நல்ல வழி முறைகளை கேட்டுப் பெற வேண்டும். நம்பிக்கைக்குரிய, கீழ்ப்படிந்த வராகி ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.

2. ஆன்மீக நஷாவில் இருப்பதற்கு தினமும் ஞான அமிர்தத்தைப் பருக வேண்டும். தினமும் முரளி படிக்க வேண்டும். அதிர்ஷ்டசாலி ஆவதற்கு தந்தை மீது ஒரு பொழுதும் சந்தேகம் வரக் கூடாது.

வரதானம்:
பிரம்மா பாபாவிற்கு சமமாக ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்யக் கூடிய கர்மபந்தனங்களிலிருந்து விடுபட்டவர் ஆகுக.

பிரம்மா பாபா காரியங்கள் செய்தாலும் கர்மத்தின் பந்தனங்களில் மாட்டிக் கொள்ளவில்லை. சம்பந்தங்களில் வந்தாலும் சம்பந்தங்களின் பந்தனங்களில் மாட்டிக் கொள்ளவில்லை. அவர் செல்வம் மற்றும் சாதனங்களின் பந்தனங்களிலிருந்தும் முக்தியாக இருந்தார். பொறுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தாலும் ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவம் செய்தார். இவ்வாறு தந்தையை பின்பற்றுங்கள். எந்த ஒரு கடந்த கால கணக்கு வழக்கு என்ற பந்தனத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. சன்ஸ்காரம், சுபாவம், பாதிப்பு மற்றும் அழுத்தம் என்ற பந்தனத்திலும் வரக் கூடாது. அப்போது தான் கர்மபந்தன்முக்த், ஜீவன்முக்த் என்று கூற முடியும்.

சுலோகன்:
தமோ குண வாயுமண்டலத்தில் தன்னை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் சாட்சியாக இருந்து விளையாட்டை பார்க்கும் பயிற்சி செய்யுங்கள்.