22.12.24    காலை முரளி            ஓம் சாந்தி  17.03.2003      பாப்தாதா,   மதுபன்


சதா தன்னுடைய சுவமானத்தில் இருக்க வேண்டும், மரியாதை கொடுக்க வேண்டும், அனைவருடைய சகயோகி ஆகவேண்டும் மற்றும் சக்திசாலி ஆக்க வேண்டும்

இன்று பாக்கிய விதாதா பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையினுடைய நெற்றியில் பாக்கியத்தின் மூன்று ரேகைகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒன்று பரமாத்ம பாலனையின் பாக்கியவான் ரேகை, இரண்டாவது சத்தியமான ஆசிரியரின் சிரேஷ்ட படிப்பின் பாக்கியவான் ரேகை, மூன்றாவது ஸ்ரீமத்தினுடைய ஜொலிக்கக் கூடிய ரேகை. நாலா புறங்களிலும் உள்ள குழந்தைகளினுடைய நெற்றியின் நடுவில் மூன்று ரேகைகளும் மிகவும் நன்றாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் அனைவரும் கூட தங்களுடைய மூன்று பாக்கியத்தின் ரேகைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் தானே. எப்பொழுது பாக்கிய விதாதா, குழந்தைகளாகிய உங்களுடைய தந்தையாக இருக்கின்றாரோ, அப்பொழுது சிரேஷ்ட பாக்கியம் உங்களைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்! உலகத்தில் அனேக கோடிக்கணக்கான ஆத்மாக்கள் இருக்கின்றனர், ஆனால், அந்த கோடிக்கணக்கானவர்களில் இருந்து 6 இலட்சம் பேர் (2003-ல்) கொண்ட பரிவாரம் . . . எவ்வளவு குறைவானவர்கள் இருக்கின்றனர்! என்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். கோடிகளில் ஒருவர் ஆகிவிட்டீர்கள் அல்லவா! ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் இந்த மூன்று விசயங்கள் - பாலனை, படிப்பு மற்றும் சிரேஷ்ட வழி ஆகிய மூன்றுமே அவசியமானதாக இருக்கின்றன. ஆனால், இந்த பரமாத்ம பாலனை மற்றும் தேவ ஆத்மாக்கள் அல்லது மனித ஆத்மாக்களின் வழி, பாலனை, படிப்பில் இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது. இந்தளவு சிரேஷ்ட பாக்கியம் சங்கல்பத்தில் கூட இருந்ததில்லை, ஆனால், இப்பொழுது ஒவ்வொருவருடைய உள்ளமும் அடைந்து விட்டேன் என்று பாடிக் கொண்டிருக் கின்றது. அடைந்து விட்டீர்களா அல்லது அடைய வேண்டுமா? என்ன கூறுவீர்கள்? அடைந்து விட்டீர்கள் அல்லவா! தந்தையும் அப்பேற்பட்ட குழந்தைகளின் பாக்கியத்தைப் பாôத்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆஹா பாபா ஆஹா! என்று குழந்தைகள் கூறுகின்றார்கள். மேலும், ஆஹா குழந்தைகளே ஆஹா! என்று தந்தை கூறுகின்றார். இந்த பாக்கியத்தை வெறும் நினைவில் மட்டும் வைத்தால் போதாது, ஆனால், சதா நினைவு சொரூபமாக இருக்க வேண்டும். சில குழந்தைகள் மிகவும் நன்றாக உள்ளது என்று யோசிக்கின்றனர், ஆனால், யோசனை சொரூபம் ஆக வேண்டாம், நினைவு சொரூபம் ஆக வேண்டும். நினைவு சொரூபமே சக்திசாலி சொரூபம் ஆகும். யோசனை சொரூபம் சக்திசாலியான சொரூபம் அல்ல.

பாப்தாதா குழந்தைகளின் விதவிதமான லீலைகளைப் பார்த்து புன்முறுவல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். சிலர் யோசனை சொரூபமாக இருக்கின்றனர், நினைவு சொரூபம் சதா இருப்ப தில்லை. சில நேரங்களில் யோசனை சொரூபம், சில நேரங்களில் நினைவு சொரூபம். யார் நினைவு சொரூபமாக இருக்கின்றார்களோ, அவர்கள் நிரந்தரமாக, இயல்பான சொரூபத்தில் இருக்கின்றார்கள். யார் யோசனை சொரூபத்தில் இருக்கின்றார்களோ, அவர்கள் உழைக்க வேண்டியதாக இருக்கின்றது. இந்த சங்கமயுகம் உழைப்பதற்கான யுகம் அல்ல, சர்வ பிராப்தி களினுடைய அனுபவங்களுக்கான யுகம் ஆகும். 63 பிறவிகளாக உழைத்தீர்கள், ஆனால், இப்பொழுது உழைப்பிற்கான பலனைப் பெறு வதற்கான யுகம் அதாவது சமயம் ஆகும்.

தேக உணர்வின் நினைவில் இருப்பதற்கு என்ன உழைப்பு செய்தீர்கள் - நான் இன்னார், நான் இன்னார் . . . இந்த உழைப்பு செய்தீர்களா? என்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயற்கையாக (நேச்சுரலாக) இருக்கின்றது அல்லவா! தேக உணர்வானது இயல்பு (நேச்சர்) ஆகிவிட்டது அல்லவா!. அந்தளவு உறுதியான இயல்பு ஆகிவிட்டது, அது இப்பொழுதும் கூட சில நேரங்களில், சில குழந்தை களை ஆத்ம அபிமானி ஆகவேண்டிய சமயத்தில், தேக உணர்வானது தன் பக்கம் கவர்ச்சி செய்து விடுகின்றது. நான் ஆத்மா, நான் ஆத்மா என்று நினைக்கின்றனர், ஆனால், தேக உணர்வு அப்படி நேச்சுரலாக இருக்கின்றது, அதனால் அடிக்கடி விரும்பாமலேயே, நினைக்காமலேயே தேக உணர்வில் வந்துவிடுகின்றனர். இப்பொழுது இந்த மறுபிறவியில் ஆத்ம அபிமானி அதாவது தேகி அபிமானி ஸ்திதி கூட அவ்வாறே இயற்கையாக, இயல்பாக இருக்க வேண்டும் என்று பாப்தாதா கூறுகின்றார் கள். நான் ஆத்மா, நான் ஆத்மா என்று கடின உழைப்பு செய்யக் கூடாது. எந்தவொரு குழந்தை பிறந்தாலும், அதற்கு கொஞ்சம் விபரம் தெரிந்த பிறகு, அதற்கு நீங்கள் யார், யாருடையவர் என்ற அறிமுகம் கொடுக்கின்றார்கள், அதுபோன்றே, எப்பொழுது பிராமணப் பிறவி எடுத்துவிட்டீர்களோ, அப்பொழுது பிராமண குழைந்தகளாகிய உங்களுக்கு பிறப்பெடுத்த உடனேயே என்ன அறிமுகம் கிடைத்தது? நீங்கள் யார்? ஆத்மா என்ற பாடம் உறுதியாக்கப்பட்டது அல்லவா! எனவே, இந்த முதல் அறிமுகம் இயற்கையானதாக இயல்பானதாக (நேச்சுரல் நேச்சர்) ஆகிவிட வேண்டும். இயல்பாக இருப்பது இயற்கையாகவும், நிரந்தரமாகவும் இருக்கிறது, நினைவு செய்ய வேண்டியது இருக்காது. அவ்வாறு இப்பொழுது சமயத்தின் அனுசாரம், ஒவ்வொரு பிராமண குழந்தையினுடைய ஆத்ம அபிமானி நிலை நேச்சுரலாக ஆகவேண்டும். சில குழந்தைகள் செய்திருக்கின்றார்கள், சிந்திக்க வேண்டியதில்லை, நினைவு சொரூபமாக இருக்கின்றார்கள். இப்பொழுது நிரந்தரமாக மற்றும் இயல்பாக நினைவு சொரூபமாக ஆகியே தீரவேண்டும். நஷ்டமோஹா நினைவு சொரூபம்என்ற இந்த சிறிய தேர்வே அனைத்து பிராமணர்களுக்கும் இறுதியான கடைசி தேர்வாக இருக்கும்.

இந்த வருடத்தில் என்ன செய்யப் போகின்றீர்கள்? இந்த வருடத்தில் விசேஷமான இலட்சியம் என்ன வைக்க வேண்டும்? என்று சில குழந்தைகள் கேட்கின்றனர். சதா ஆத்ம அபிமானி, நினைவு சொரூபம் ஆகுக என்று பாப்தாதா கூறுகின்றார்கள். ஜீவன் முக்தியோ கிடைக்கத் தான் போகிறது, ஆனால், ஜீவன் முக்தியை அடைவதற்கு முன்பாக கடின உழைப்பிலிருந்து முக்தி(விடுபடுதல்) அடைந்தவர் ஆகுங்கள். இந்த ஸ்திதியானது சமயத்தை அருகாமையில் கொண்டு வரும் மற்றும் உலகத்திலுள்ள உங்களுடைய அனைத்து சகோதர, சகோதரிகளை துக்கம், அசாந்தியில் இருந்து விடுபடச் செய்யும். உங்களுடைய இந்த ஸ்திதியே ஆத்மாக்களுக்காக முக்திதாமத்தின் கதவுகளை திறக்கச் செய்யும். ஆகவே, தன்னுடைய சகோதர, சகோதரிகள் மீது இரக்கம் வரவில்லையா! நாலாபுறங்களிலும் உள்ள ஆத்மாக்கள் எவ்வளவு கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள், உங்களுடைய முக்தி அனைவருக்கும் முக்தி கிடைக்கச் செய்யும். இயல்பான நினைவுடையவராக மற்றும் சக்திசாலி சொரூபமாக எந்தளவு ஆகியிருக்கின்றேன்? என்பதை சோதனை செய்யுங்கள். சக்திசாலி சொரூபம் ஆக வேண்டும், இதுவே வீணானதை சகஜமாக முடிவடையச் செய்துவிடும். அடிக்கடி கடின உழைப்பு செய்ய வேண்டி இருக்காது.

இப்பொழுது இந்த வருடம் பாப்தாதா குழந்தைகள் மீதுள்ள சினேகத்தினால் எந்தவொரு குழந்தையும், எந்தவொரு பிரச்சனையிலும் உழைப்பு செய்வதைப் பார்ப்பதற்கு விரும்பவில்லை. பிரச்சனை முடிவடைய வேண்டும் மற்றும் சமாதான சக்தி சொரூபம் ஆகவேண்டும். இது முடியுமா என்ன? தாதிகள் சொல்லுங்கள், முடியுமா? டீச்சர்கள் சொல்லுங்கள், முடியுமா? பாண்டவர்களால் முடியுமா? பிறகு சாக்குபோக்கு சொல்லக் கூடாது - இது இருந்தது அல்லவா, இது நடந்தது அல்லவா! இது நடக்காமல் இருந்திருந்தால் ஆகியிருக்காது! பாப்தாதா மிகவும் இனிமையிலும் இனிமையான விளையாட்டைப் பார்த்திருக்கின்றார்கள். என்ன ஆனாலும் சரி, இமயமலையை விட பெரியதாக இருந்தாலும், நூறு மடங்கு பிரச்சனையின் சொரூபமாக இருந்தாலும், அது உடல் மூலமோ, மனதின் மூலமோ, மனிதர் மூலமோ, இயற்கை மூலமோ வரக்கூடிய பிரச்சனையாக இருக்கலாம், பரஸ்திதி (சூழ்நிலை) உங்களுடைய சுயஸ்திதிக்கு முன்னால் ஒன்றுமே கிடையாது, மேலும், சுயஸ்திதிக்கான சாதனம் - சுவமானம் ஆகும். சுவமானம் நேச்சுரலாக இருக்க வேண்டும். நினைக்க வேண்டியதாக உள்ளது என்பது கூடாது, அடிக்கடி உழைக்கக் கூடாது, இல்லை, இல்லை, நான் சுயதரிசன சக்கரதாரி, நான் கண்ணின் மணி, நான் இதய சிம்மாசனதாரி, . . . அதுவாகத் தான் இருக்கின்றேன். வேறு யாராவது அப்படி ஆகவேண்டுமா என்ன! கல்பத்திற்கு முன்பு யார் ஆகியிருந்தார்கள்? வேறு யாராவது ஆகியிருந்தார்களா அல்லது நீங்கள் தான் ஆகியிருந்தீர்களா? நீங்கள் தான் ஆகியிருந்தீர் கள், நீங்கள் தான் ஆகியிருக்கின்றீர்கள், ஒவ்வொரு கல்பத்திலும் நீங்கள் தான் ஆகுவீர்கள். இது உறுதியானது. இவர்கள் கல்பத்திற்கு முன்பு வந்திருந்தவர்களே என்று பாப்தாதா அனைவருடைய முகங்களையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த கல்பத்தைச் சேர்ந்தவர்களா அல்லது பல கல்பங்களைச் சேர்ந்தவர்களா? பல கல்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லவா! சேர்ந்தவர்களா? யார் ஒவ்வொரு கல்பத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்கள் கை உயர்த்துங்கள். பிறகு, இது உறுதியானது தானே, உங்களுக்கோ தேர்ச்சிக்கான சான்றிதழ் கிடைத்துவிட்டது அல்லவா அல்லது பெற வேண்டுமா? கிடைத்துவிட்டது தானே? கிடைத்துவிட்டது அல்லவா அல்லது பெற வேண்டுமா? கல்பத்திற்கு முன்பு கிடைத்திருந்தது, இப்பொழுது ஏன் கிடைக்காது? சான்றிதழ் கிடைத்திருக்கின்றது என்ற இந்த நினைவு சொரூபம் ஆகுங்கள். மதிப்புடன் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழோ அல்லது தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழோ, இந்த வித்தியாசமோ இருக்கும், ஆனால், நாம் தான் தேர்ச்சி பெற்றவர்கள். இது உறுதியானது தானே! அல்லது இரயிலில் போகும்பொழுதே மறந்துவிடுமா, விமானத்தில் செல்லும்பொழுதே பறந்துவிடுமா? இல்லை.

பாருங்கள், நாலாபுறங்களிலும் சிவராத்திரியை ஊக்க உற்சாகத்தோடு கொண்டாட வேண்டும் என்று இந்த வருடம் திடமான சங்கல்பம் செய்தீர்கள், கொண்டாடிவிட்டீர்கள் அல்லவா! திட சங்கல்பத் தினால் என்ன நினைத்தீர்களோ, அது நடந்துவிட்டது அல்லவா! இது எந்த விசயத்தின் அதிசயம்? ஒற்றுமை மற்றும் உறுதித்தன்மை. 67 நிகழ்ச்சிகள் செய்வதற்காக யோசித்திருந்தீர்கள், ஆனால், அதைக்காட்டிலும் அதிகமாக சில குழந்தைகள் செய்திருப்பதை பாப்தாதா பார்த்தார்கள். இது சக்தி சொரூபத்தின் அடையாளம் ஆகும், ஊக்கம் உற்சாகத்தின் நடைமுறை நிரூபணம் ஆகும். தானாகவே நாலாபுறங்களிலும் செய்துவிட்டீர்கள் அல்லவா! இதுபோன்றே அனைவரும் இணைந்து ஒருவருக் கொருவர் தைரியத்தை அதிகரித்து - இப்பொழுது சமயத்தை அருகாமையில் கொண்டு வந்தே ஆக வேண்டும் - என்ற இந்த சங்கல்பம் செய்யுங்கள். ஆத்மாக்களுக்கு முக்தி அளிக்க வேண்டும். ஆனால் அது, எப்பொழுது நீங்கள் சிந்திப்பதை நினைவு சொரூபத்தில் கொண்டு வருவீர்களோ, அப்பொழுதே நடக்கும்.

வெளிநாட்டினருடைய விசேஷமான அன்பான சந்திப்பு மற்றும் மீட்டிங் நடைபெறுவதாகவும் மற்றும் பாரதத்தினருடைய மீட்டிங் நடைபெறுவதாகவும் பாப்தாதா கேள்வியுற்றார்கள். மீட்டிங்கில் சேவைக்கான திட்டத்தை மட்டும் உருவாக்கக்கூடாது, உருவாக்க வேண்டும் ஆனால், சமநிலையாக உருவாக்க வேண்டும். ஒருவருக்கொருவர் சகயோகி ஆகுங்கள், அதன் மூலம் அனைவரும் மாஸ்டர் சர்வசக்திவான் ஆகி முன்னேறி பறந்து செல்ல வேண்டும். வள்ளலாகி சகயோகம் கொடுங்கள். விசயங்களை பார்க்காதீர்கள், சகயோகி ஆகுங்கள். சுவமானத்தில் இருங்கள் மற்றும் மரியாதை கொடுத்து சகயோகி ஆகுங்கள். ஏனென்றால், எந்தவொரு ஆத்மாவிற்கும் ஒருவேளை, நீங்கள் உள்ளத்தால் மரியாதை கொடுக்கின்றீர்கள் என்றால், இது மிக மிகப் பெரிய புண்ணயம் ஆகும். ஏனென்றால், பலவீனமான ஆத்மாவை ஊக்க உற்சாகத்தில் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்றால் அது எவ்வளவு பெரிய புண்ணியம்! கீழே விழுந்திருப்பவர்களை தள்ளிவிடக் கூடாது, அரவணைக்க வேண்டும் அதாவது வெளியில் அரவணைக்கக் கூடாது, அரவணைப்பது என்றால் தந்தைக்கு சமமாக ஆக்குவது, சகயோகம் கொடுப்பது ஆகும்.

இந்த வருடம் என்னென்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் அல்லவா? மரியாதை கொடுக்க வேண்டும் மற்றும் சுவமானத்தில் இருக்க வேண்டும், அவ்வளவுதான். சக்திசாலி ஆகி சக்திசாலி ஆக்கவேண்டும். வீணான விசயங்களில் செல்லக் கூடாது. பலவீனமான ஆத்மா ஏற்கனவே பலவீனமாக இருக்கின்றார்கள், அவர்களுடைய பலவீனத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் எவ்வாறு சகயோகி ஆகுவீர்கள்? சகயோகம் கொடுங்கள், அப்பொழுது ஆசீர்வாதங்கள் கிடைக்கும். அனைத்தையும் விட எளிய முயற்சி எதுவென்றால், வேறு எதுவும் செய்ய முடிய வில்லை என்றாலும் அனைத்தையும் விட எளிய முயற்சி எதுவென்றால் - ஆசீர்வாதங்கள் கொடுங்கள், ஆசீர்வாதங்கள் பெறுங்கள் என்பதாகும். மரியாதை கொடுங்கள் மற்றும் மகிமைக்குத் தகுதியானவர் ஆகுங்கள். மரியாதை கொடுப்பவர்கள் தான் அனைவரின் மூலமாக மரியாதைக்கு உரியவர்களாக ஆகின்றார்கள். மேலும், எந்தளவு இப்பொழுது மரியாதைக்கு உரியவர்களாக ஆகுவீர்களோ, அந்தளவே இராஜ்ய அதிகாரியாக மற்றும் பூஜைக்குரிய ஆத்மாவாக ஆகுவீர்கள். கொடுத்துக் கொண்டே செல்லுங்கள், பெற வேண்டும் என்பது கூடாது. பெற்றுக் கொண்டு பிறகு கொடுப்பது என்பது வியாபாரிகளின் வேலை ஆகும். நீங்களோ வள்ளலின் குழந்தைகள். மற்றபடி பாப்தாதா நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளுடைய சேவையைப் பார்த்து மகிழ்ச்சி அடை கின்றார்கள், அனைவரும் நன்றாக சேவை செய்திருக்கின்றீர்கள். ஆனால், இப்பொழுது இன்னும் முன்னேற வேண்டும் அல்லவா! பேச்சு மூலம் அனைவரும் நன்றாக சேவை செய்திருக்கின்றீர்கள், சாதனங்களின் மூலம் செய்யப்பட்ட சேவைக்கான ரிசல்ட் நன்றாக உள்ளது. அனேக ஆத்மாக்களின் புகாரையும் முடிவடையச் செய்துவிட்டீர்கள். கூடவே, சமயத்தின் தீவிர போக்கின் வேகத்தைப் பார்த்து பாப்தாதா இதையே விரும்புகின்றார்கள் - கொஞ்ச ஆத்மாக்களுக்கு மட்டும் சேவை செய்யக் கூடாது, ஆனால், விஷ்வத்தின் அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தியை வழங்கும் வள்ளலாக இருப்பது நிமித்த ஆத்மாக்களாகிய நீங்களே, ஏனெனில், நீங்கள் தந்தைக்கு துணை ஆவீர்கள். எனவே, சமயத்தின் வேகத்தின் அனுசாரம் இப்பொழுது ஒரே நேரத்தில் மூன்று சேவைகளும் இணைந்தே செய்ய வேண்டும்:- ஒன்று பேச்சு, இரண்டாவது சுய சக்திசாலி ஸ்திதி மற்றும் மூன்றாவது சிரேஷ்ட ஆன்மிக அதிர்வலைகள். எங்கு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள், அங்கே அப்படிப்பட்ட ஆன்மிக அதிர்வலைகளைப் பரப்புங்கள், அந்த அதிர்வலைகளின் பிரபாவத்தில் சகஜமாக கவர்ந்தி ழுக்கப்பட வேண்டும். பாருங்கள், இப்பொழுது கடைசிப் பிறவியில் கூட உங்கள் அனைவருடைய ஜடசித்திரங்கள் எவ்வாறு சேவை செய்து கொண்டிருக்கின்றன? வார்த்தைகள் பேசுகின்றார்களா என்ன? அதிர்வலைகள் அப்படி இருக்கின்றது, அதனால் பக்தர்களின் பாவனைக்கான பலன் சகஜமாக கிடைத்துவிடுகின்றது. அவ்வாறு அதிர்வலைகள் சக்திசாலியாக இருக்க வேண்டும், அதிர்வலை களில் அனைத்து சக்திகளின் கிரணங்கள் பரவ வேண்டும், வாயுமண்டலம் மாற வேண்டும். அதிர்வலைகள் என்பது அப்பேற்பட்டது, அது உள்ளத்தில் அச்சு பதித்தது போல் பதிந்துவிடுகிறது. உங்கள் அனைவருக்கும் அனுபவம் உள்ளது - ஒரு ஆத்மாவிற்காக ஒருவேளை, ஏதாவது நல்ல அல்லது தீய அதிர்வலை உங்கள் உள்ளத்தில் பதிந்துவிட்டால் எவ்வளவு சமயம் அதன் தாக்கம் உள்ளது? நீண்ட காலம் உள்ளது அல்லவா! அதை நீக்க விரும்பினாலும் நீங்குவதில்லை, யாரை பற்றியாவது தீய அதிர்வலைகள் பதிந்துவிட்டால் சகஜமாக நீங்குகிறதா? உங்களுடைய சர்வ சக்திகளுடைய கிரணங்களின் அதிர்வலைகள் அச்சு பதிப்பது போன்று வேலை செய்யும். வார்த்தைகளை மறந்துபோகலாம், ஆனால், அதிர்வலைகளின் பதிவானது சகஜமாக விலகாது. அனுபவம் உள்ளது அல்லவா! இருக்கிறது தானே அனுபவம்?

குஜராத்தைச் சேர்ந்தவர்கள், பாம்பேயைச் சேர்ந்தவர்கள் யாரெல்லாம் ஊக்கம், உற்சாகத்தைக் காண்பித் தார்களோ, அவர்களுக்கும் பாப்தாதா கோடி கோடி மடங்கு வாழ்த்துக்கள் கொடுக் கின்றார்கள். ஏன்? விசேஷத்தன்மை என்ன இருந்தது? எதற்காக வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்கள்? பெரிய பெரிய நிகழ்ச்சிகளை செய்து கொண்டே இருக்கின்றீர்கள், ஆனால், குறிப்பாக வாழ்த்துக்கள் ஏன் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்? ஏனென்றால், ஒற்றுமை மற்றும் திடத்தன்மை என்ற இரண்டு விதமான விசேஷத்தன்மைகள் இருந்தன. எங்கே ஒற்றுமை மற்றும் திடத்தன்மை இருக்கிறதோ, அங்கே ஒரு வருடத்திற்கு பதிலாக ஒரு மாதம் என்பது ஒரு வருடத்திற்கு சமம் ஆகும். குஜராத் மற்றும் பாம்பேயைச் சேர்ந்தவர்கள் கேட்டீர்களா? நல்லது.

இப்பொழுது ஒரு நொடியில் ஞான சூரியன் என்ற ஸ்திதியில் நிலைத்திருந்து நாலாபுறங்களிலும் உள்ள பயமுற்ற, குழப்பமடைந்துள்ள ஆத்மாக்களுக்கு சர்வசக்திகளின் கிரணங்களைப் பரப்புங்கள். மிகுந்த பயம் உள்ளது. சக்தி கொடுங்கள். அதிர்வலைகளைப் பரப்புங்கள். நல்லது. (பாப்தாதா டிரில் செய்வித்தார்கள்)

நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளின் விதவிதமான அன்பு நினைவுகள் மற்றும் சமாச்சாரத்தைப் பற்றிய கடிதங்கள் மற்றும் இ-மெயில் தந்தையிடம் வந்து சேர்ந்துவிட்டன. என்னுடைய நினைவையும் கொடுங்கள், என்னுடைய நினைவையும் கொடுங்கள் என்று ஒவ்வொருவரும் கூறுகின்றார்கள். ஒவ்வொரு அன்பான குழந்தையின் நினைவும் பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து விட்டது என்று பாப்தாதா கூறுகின்றார்கள். தூரத்தில் அமர்ந்திருந்தாலும் பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரியாக இருக்கின்றீர்கள். எனவே, நினைவு கொடுங்கள், நினைவு கொடுங்கள் என்று யாரெல்லாம் கூறினார்களோ, அவை அனைத்தும் பாபாவிடம் வந்தடைந்துவிட்டன. இதுதான் குழந்தைகளுடைய அன்பு, மேலும், தந்தையின் அன்பு குழந்தைகளைப் பறக்க வைக்கின்றது. நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள மிக சிரேஷ்ட பாக்கியவான், கோடியில் ஒரு சில விசேஷ ஆத்மாக் களுக்கு, சதா சுவமானத்தில் இருக்கக்கூடிய, மரியாதை கொடுக்கக்கூடிய, சேவை செய்யக்கூடிய குழந்தைகளுக்கு, சதா நினைவு சொரூபம் மற்றும் சக்தி சொரூப ஆத்மாக்களுக்கு, சதா ஆடாத, அசையாத ஸ்திதி என்ற ஆசனத்தில் நிலைத்திருக்கும் சர்வசக்தி சொரூபமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாதி அவர்களுடன்:- பாப்தாதா உங்களைப் பார்த்து விசேஷமாக மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஏன் மகிழ்ச்சி அடைகின்றார்கள்? எவ்வாறு பிரம்மா பாபா அனைவருக்கும் இதைச் செய்ய வேண்டும், இப்பொழுது செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தாரோ, அவ்வாறே நீங்களும் கூட பிரம்மா பாபாவைப் பின்பற்றினீர்கள் என்ற இந்த விசேஷத்தன்மையைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். (நீங்களும் என்னுடன் இருக்கின்றீர்கள்) நாமோ இருக்கின்றோம், நிமித்தமாகவோ நீங்கள் ஆகியுள்ளீர் கள் அல்லவா. மேலும், அப்படி திட சங்கல்பம் செய்திருக்கின்றீர்கள், அதனால் நாலாபுறங்களிலும் வெற்றி கிடைத்துள்ளது. ஆகையினால், உங்களிடம் ஆன்மிக சக்தி மிகவும் குப்தமாக நிறைந்துள்ளது. உடல் நிலை நன்றாக உள்ளது, இந்தளவு ஆன்மிக சக்தி நிறைத்துள்ளீர்கள், அதனால், உடல்நிலைக்கு ஒன்றுமே இல்லை. அதிசயம் அல்லவா!

தாதிகளுடன் சந்திப்பதைப் பார்க்கும்பொழுது, நாமும் தாதியாக இருந்திருந்தால் சந்தித்திருப் போம் அல்லவா என்று அனைவருடைய உள்ளமும் விரும்புகின்றது. நீங்களும் கூட தாதி ஆகுவீர்கள். இப்பொழுது பாப்தாதா உள்ளத்தில் திட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள், ஆனால், இப்பொழுது கொடுக்கவில்லை. யாரெல்லாம் சேவையினுடைய, பிரம்மா பாபாவினுடைய சாகார சமயத்தில் சேவையில் ஆதிரத்தினங்களாக இருந்தார்களோ, அவர்களுடைய குழுவை உறுதியாக்க வேண்டும். (எப்பொழுது செய்யலாம்?) எப்பொழுது நீங்கள் செய்வீர்களோ அப்பொழுது. இந்தக் கடமை உங்களுடையது (தாதி ஜானகி அவர்களுடையது) ஆகும். உங்களுடைய உள்ளத்தின் சங்கல்பமும் கூட உள்ளது அல்லவா? ஏனெனில், எவ்வாறு தாதிகளாகிய உங்களுடைய ஒற்றுமை மற்றும் உறுதித் தன்மை உடைய குழு பக்காவாக உள்ளதோ, அவ்வாறு ஆதி சேவையினுடைய இரத்தினங்களின் குழு பக்காவாக ஆகவேண்டும், இது மிக மிக அவசியமானது ஆகும், ஏனென்றால், சேவையோ அதிகரிக்கப் போகிறது. ஆகையினால், குழுவின் சக்தியினால் என்ன விரும்புகின்றீர்களோ, அதை செய்யமுடியும். பஞ்ச பாண்டவர்கள் குழுவினுடைய அடையாளத்தின் நினைவுச்சின்னம் ஆவார்கள். ஐவர் உள்ளனர், ஆனால், குழுவின் அடையாளம் ஆகும். நல்லது - இப்பொழுது, யார் சாகார பிரம்மா இருக்கும்பொழுதே சேவைக்காக சென்டரில் இருந்தீர்களோ, சேவை செய்தீர்களோ, அவர்கள் எழுந்திருங்கள். சகோதரர்களும் உள்ளனர், பாண்டவர்கள் இல்லாமல் கதி இல்லை. இங்கேயோ சிலர் உள்ளனர், ஆனால், இன்னும் நிறைய பேர் உள்ளனர். குழுவை ஒன்று சேர்ப்பதற்கான பொறுப்பு இவர் களுடையது (தாதி ஜானகி அவர்களுடையது), இவர்களோ (தாதி) முதுகெலும்பாக இருக்கின்றார்கள். மிகவும் நல்ல நல்ல இரத்தினங்கள் உள்ளனர். நல்லது. அனைத்தும் நன்றாக உள்ளது. ஏதாவது செய்து கொண்டே இருக் கின்றீர்கள், ஆனால், உங்களுடைய குழு மகான்தன்மையானது. கோட்டை உறுதியானதாக இருக்கின்றது. நல்லது.

வரதானம்:
சுவமானம் என்ற ஆசனத்தில் நிலைத்திருந்து ஒவ்வொரு சூழ்நிலையையும் கடந்து செல்லக்கூடிய சதா வெற்றியாளர் ஆகுக.

நான் வெற்றி இரத்தினம், மாஸ்டர் சர்வசக்திவான் என்று சதா தன்னுடைய இந்த சுவமானம் என்ற ஆசனத்தில் நிலைத்திருங்கள். எவ்வாறு சீட் இருக்குமோ, அவ்வாறு இலட்சணம் வரும். எந்தவொரு சூழ்நிலை முன்னால் வந்தாலும், நொடியில் தன்னுடைய இந்த ஆசனத்தில் நிலைத்து விடுங்கள். ஆசனத்தில் இருப்பவர்களுடைய கட்டளை தான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆசனத்தில் இருந்தீர்கள் என்றால் வெற்றியாளர் ஆகிவிடுவீர்கள். சங்கமயுகமே சதா வெற்றியாளர் ஆகுவதற் கான யுகம் ஆகும், இந்த யுகத்திற்கு வரதானம் உள்ளது, எனவே, வரதானி ஆகி வெற்றியாளர் ஆகுங்கள்.

சுலோகன்:
அனைத்து பற்றுகள் மீதும் வெற்றி அடைபவர்களே, சிவசக்தி பாண்டவ சேனை ஆவார்கள்.