26-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! புருஷோத்தம
சங்கமயுக பிராமணர்களாகிய நீங்கள் இப்போது ஈஸ்வரனின் மடியில்
வந்திருக்கிறீர்கள். நீங்கள் மனிதரில் இருந்து தேவதை ஆக
வேண்டும். ஆகவே தெய்வீக குணங்களும் வேண்டும்.
கேள்வி:
பிராமணக் குழந்தைகள் எந்த
விஷயத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? ஏன்?
பதில்:
முழு நாளின் அட்டவணையில் எந்த ஒரு
பாவ கர்மமும் இருக்கக் கூடாது. இதில் பாதுகாப்பாக இருக்க
வேண்டும். ஏனென்றால் உங்கள் முன்னிலையில் பாபா தர்மராஜரின்
ரூபத்தில் நின்று கொண்டுள்ளார். சோதித்துப் பாருங்கள்,
யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருந்தோமா? ஸ்ரீமத்படி எத்தனை
சதவிகிதம் நடக்கிறோம்? இராவண வழிப்படியோ நடக்க வில்லையே?
ஏனென்றால் பாபாவுடையவராக ஆன பிறகு ஏதேனும் விகர்மம் நடந்தால்
ஒன்றுக்கு நூறு மடங்காகத் தண்டனை கிடைக்கும்.
ஓம் சாந்தி.
பகவானின் வாக்கு. இதுவோ குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மனிதரையோ தேவதையையோ பகவான் எனச்
சொல்ல முடியாது. இங்கே நீங்கள் அமரும் போது புத்தியில் இருக்க
வேண்டும் - நாம் சங்கமயுக பிராமணர்கள். இதுவும் சதா யாருக்கும்
நினைவிருப்பதில்லை. தங்களை உண்மையிலேயே பிராமணர் என உணர்ந்து
கொண்டுள்ளனர் என்பதும் கிடையாது. பிராமணக் குழந்தைகள் பிறகு
தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். நாம் சங்கமயுக
பிராமணர்கள், நாம் சிவபாபா மூலம் புருஷோத்தமர் ஆகிக் கொண்டி
ருக்கிறோம். இந்த நினைவு கூட அனைவருக்கும் இருப்பதில்லை.
அடிக்கடி இதை மறந்து போகின்றனர்- அதாவது நாம் புருஷோத்தமர்
சங்கமயுக பிராமணர்கள். இது புத்தியில் நினைவிருந்தால் கூட அஹோ
சௌபாக்கியம்! எப்போதுமே நம்பர்வார் இருக்கத் தான் செய்கிறார்கள்.
அனைவரும் அவரவர் புத்தியின் அனுசாரம் புருஷார்த்திகளாக (முயற்சி
செய்பவர் கள்) உள்ளனர். இப்போது நீங்கள் சங்கம யுகத்தவர்கள்.
புருஷோத்தமர் ஆகக்கூடியவர்கள். நீங்கள் அறிவீர்கள், நாம்
எப்போது மிகமிக அன்பான தந்தையை நினைவு செய்கிறோமோ அப்போது தான்
நாம் புருஷோத்தம் ஆகிறோம். நினைவின் மூலம் தான் பாவங்கள்
அழியும். யாராவது பாவம் செய்வார்களானால் அது நூறு மடங்காக
அதிகரித்து விடும். முன்பு பாவம் செய்தவர்களுக்கு 10 சதவிகிதம்
அதிகரித்தது. இப்போதோ 100 சதவிகிதம் அதிகரிக்கின்றது. ஏனென்றால்
ஈஸ்வரனின் மடியில் வந்துவிட்ட பிறகு பாவம் செய்கிறீர்கள்
இல்லையா? குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மைப்
புருஷோத்தம் மற்றும் தேவதை ஆக்குவதற்காகப் படிப்பிக்கிறார்.
இந்த நினைவு யாருக்கு நிலையாக உள்ளதோ, அவர்கள் அலௌகீக சேவையும்
அதிகம் செய்து கொண்டே இருப்பார்கள். சதா மலர்ந்த முகம்
உள்ளவராக ஆவதற்கு மற்றவர்களுக்கும் வழி சொல்ல வேண்டும். எங்கே
சென்றாலும் சரி, புத்தியில் இது நினைவிருக்க வேண்டும் - நாம்
சங்கமயுகத்தில் இருக்கிறோம். இது புருஷோத்தம சங்கமயுகம்.
அவர்கள் புருஷோத்தம மாதம் அல்லது வருடம் எனச் சொல்கின்றனர்.
நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் புருஷோத்தம சங்கமயுக
பிராமணர்கள். இதை நல்லபடியாக புத்தியில் தாரணை செய்ய வேண்டும்
- இப்போது நாம் புருஷோத்தமர் ஆவதற்கான யாத்திரையில் உள்ளோம்.
இது நினைவிருந்தால் கூட மன்மனாபவ ஆகி விட்டது. நீங்கள்
புருஷோத்தம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். புருஷார்த்தத்தின்
அனுசாரம் மற்றும் கர்மங் களின் அனுசாரம். தெய்வீக குணங்களும்
வேண்டும். மேலும் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தங்களுடைய
வழிப்படியோ மனிதர்கள் அனைவருமே செல்கின்றனர். அது இராவணனின்
வழிமுறை. நீங்கள் அனைவரும் ஒன்றும் ஸ்ரீமத்படி நடக்கிறீர்கள்
என்பதெல்லாம் கிடையாது. அநேகர் இராவணனின் வழிப்படி நடக்கின்றனர்.
ஸ்ரீமத்படி ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமான சதவிகிதம்
நடக்கின்றனர். சிலரோ 2 சதவிகிதம் மட்டுமே நடக்கின்றனர். இங்கே
அமர்ந்திருந்த போதிலும் சிவபாபாவின் நினைவில் அமர்வதில்லை.
எங்கெங்கோ புத்தியோகம் அலைந்து கொண்டே இருக்கும். தினந்தோறும்
தன்னைத் தான் பார்க்க வேண்டும். இன்று ஏதாவது பாவ காரியம்
செய்யாமல் இருந்தேனா? யாருக்காவது துக்கமோ கொடுக்காதிருந்தேனா?
தன் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஏனென்றால்
தர்மராஜரும் நின்று கொண்டுள்ளார் இல்லையா? இப்போதைய சமயம் தான்
கணக்கு-வழக்கை முடிப்பதற்கானது. தண்டனைகளும் பெற
வேண்டியிருக்கும். குழந்தைகள் அறிவார்கள், நாம்
ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவிகள். எங்கேயாகிலும் சிலர்
கோவில்களுக்கு, அல்லது குருவினிடம் மற்றும் சிலர் இஷ்ட
தேவதையிடம் செல்கின்றனர் என்றால் சொல்கின்றனர் - நாமோ
ஜென்ம-ஜென்மத்தின் பாவிகள். என்னைக் காப்பாற்றுங்கள், என்மேல்
இரக்கம் வையுங்கள். சத்யுகத்தில் ஒருபோதும் இத்தகைய சொற்களை
வெளிப்படுத்த மாட்டார்கள். சிலர் உண்மை பேசுகின்றனர், சிலர்
பொய் சொல்கின்றனர். இங்கும் கூட அதுபோல் உள்ளனர். பாபா
எப்போதுமே சொல்கிறார், தனது வாழ்க்கை வரலாறு பற்றிய கதையை
பாபாவுக்கு எழுதி அனுப்புங்கள். சிலரோ முற்றிலும் உண்மையை
எழுதுகின்றனர். எதையும் மறைப்பதில்லை. வெட்கம் வருகின்றது.
இதையோ அறிவீர்கள், தீய கர்மம் செயவதன் மூலம் அதன் பலனும் கூட
தீயதே கிடைக்கும். அதுவோ அல்பகாலத்தின் விஷயம். இதுவோ நீண்ட
காலத்தின் விஷயம். தீய கர்மம் செய்தால் தண்டனைகள் அடைவார்கள்.
பிறகு சொர்க்கத் திலும் மிக தாமதமாக வருவார்கள். இப்போது
யார்-யார் புருஷோத்தமர் ஆகிறார்கள் என்று அனைத்தும் தெரிந்து
விடுகிறது. அது புருúஷôத்தம தெய்வீக இராஜ்யம். உத்தமத்திலும்
உத்தம மான ஆத்மா ஆகிறீர்கள் இல்லையா? வேறு எந்த இடத்திலும்
இதுபோல் யாருக்கும் மகிமை செய்ய மாட்டார்கள். மனிதர்களோ,,
தேவதைகளின் குணங்கள் பற்றியும் கூட அறிந்திருக்க வில்லை. மகிமை
பாடுகின்றனர் என்ற போதிலும் அது கிளிப்பிள்ளை போலத்தான். அதனால்
தான் பக்தர்களுக்குப் புரிய வையுங்கள் என்று பாபாவும்
சொல்கிறார். பக்தர்கள் தங்களை நீசர் (மிகத் தாழ்ந்தவர்), பாவி
என்று சொல்லும் போது அவர்களிடம் கேளுங்கள், நீங்கள்
சாந்திதாமத்தில் இருந்த போது அங்கே பாவம் செய்தீர்களா என்ன?
அங்கோ ஆத்மாக்கள் அனைவரும் பவித்திரமாக உள்ளனர். இங்கே
அபவித்திரமாகி உள்ளனர், ஏனென்றால் தமோபிரதான் உலகம். புது
உலகத்திலோ பவித்திரமாக உள்ளனர். அபவித்திரமாக ஆக்குபவர் இராவணன்.
இச்சமயம் குறிப்பாக பாரதம், பொதுவாக முழு உலகின் மீது இராவணனின்
இராஜ்யம் உள்ளது. இராஜா-ராணி எப்படியோ, பிரஜைகளும் அப்படியே.
மிக உயர்ந்தவர், மற்றும் மிகத் தாழ்ந்தவர். இங்கே அனைவரும்
பதீதமானவர்கள் - பாபா சொல்கிறார், நான் உங்களைப் பாவனமாக்கி
விட்டுச் செல்கிறேன். பிறகு உங்களை யார் பதீத் ஆக்குகிறார்?
இராவணன். இப்போது நீங்கள் மீண்டும் எனது வழிமுறைப்படி
பாவனமாகிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு அரைக்கல்பத்திற்குப்
பின் இராவணனின் வழிப்படி பதீதம் (தூய்மையை இழந்தவர்) ஆவீர்கள்.
அதாவது தேக அபிமானத்தில் வந்து விகாரங்களின் வசமாகி
விடுகிறீர்கள். அது அசுர வழி எனச் சொல்லப்படுகின்றது. பாரதம்
பாவனமாக இருந்தது. அது தான் இப்போது பதீதம் ஆகி விட்டுள்ளது.
மீண்டும் பாவனமாக வேண்டும். பாவனமாக்குவதற்காக பதீத பாவனர் பாபா
வர வேண்டியுள்ளது. இச்சமயம் பாருங்கள், எவ்வளவு ஏராளமான
மனிதர்கள்! நாளை எவ்வளவு பேர் இருப்பார்கள்? யுத்தம் நடைபெறும்.
மரணம் என்பது எதிரிலேயே உள்ளது. நாளை இவ்வளவு பேரும் எங்கே
செல்வார்கள்? அனைவருடைய சரீரங்கள் மற்றும் இந்தப் பழைய உலகம்
விநாசமாகி விடும். இந்த இரகசியம் இப்போது உங்களுடைய புத்தியில்
உள்ளது- நம்பர்வார் புருஷôர்த்தத்தின் அனுசாரம். நாம் யாருக்கு
முன்னிலையில் அமர்ந்துள்ளோம்-இதையும் யாரும் புரிந்து
கொள்ளவில்லை. குறைந்ததிலும் குறைந்த பதவி பெறக் கூடியவர்கள்,
டிராமா அனுசாரம் என்ன தான் செய்ய முடியும்? அதிர்ஷ்டத்தில்
இல்லை. இப்போதோ குழந்தைகள் சேவை செய்ய வேண்டும். பாபாவை நினைவு
செய்ய வேண்டும். நீங்கள் சங்கமயுக பிராமணர்கள். நீங்கள்
பாபாவுக்கு சமமாக ஞானக்கடலாக, சுகத்தின் கடலாக ஆக வேண்டும்.
ஆக்கக் கூடிய பாபா கிடைத்துள்ளார் இல்லையா? தேவதைகளின் மகிமை
பாடப்படுகின்றது-சர்வகுண சம்பன்ன........... இப்போதோ இந்த
குணங்கள் உள்ளவர்கள் யாரும் கிடையாது. தன்னிடம் சதா கேட்டுக்
கொண்டே இருங்கள்-நாம் உயர்ந்த பதவி பெறுவதற்குத் தகுதி
உள்ளவராக எதுவரை ஆகியிருக்கிறோம்? சங்கமயுகத்தை நல்லபடியாக
நினைவு செய்யுங்கள். நாம் சங்கமயுக பிராமணர்கள் புருúஷôத்தமர்
ஆகக் கூடியவர் கள். ஸ்ரீகிருஷ்ணர் புதிய உலகத்தின் புருஷோôத்தம்
இல்லையா? குழந்தைகள் அறிவார்கள், நாம் பாபாவுக்கு முன்னிலையில்
அமர்ந்துள்ளோம். அதனால் இன்னும் அதிகமாகவே படிக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவும் வேண்டும். கற்றுக்
கொடுக்கவில்லை என்றால் படிப்பதில்லை என்பது தெளிவாகின்றது.
புத்தியில் பதிவதில்லை. 5 சதவிகிதம் கூடப் பதிவ தில்லை. நாம்
சங்கமயுக பிராமணர்கள் என்பது கூட நினைவிருப்பதில்லை. புத்தியில்
பாபாவின் நினைவு இருக்க வேண்டும், சக்கரம் சுற்றிக் கொண்டே
இருக்க வேண்டும். புரிதலோ மிகவும் சுலபமானது. தன்னை ஆத்மா என
உணர்ந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். அவர் அனைவரைக்
காட்டிலும் பெரிய தந்தை. தந்தை சொல்கிறார், என்னை நினைவு
செய்வீர்களானால் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகி விடும். நாம்
தான் பூஜைக்குரியவராக இருந்தோம், நாமே தான் பூஜாரி ஆகியுள்ளோம்
- இந்த மந்திரம் மிக நல்லதாகும். அவர்கள் பிறகு ஆத்மாவே தான்
பரமாத்மா எனச் சொல்லி விட்டுள்ளனர். என்னென்ன சொல்கிறார்களோ,
அனைத்துமே தவறாகும். நாம் பவித்திரமாக இருந்தோம். 84 பிறவிச்
சக்கரத்தைச் சுற்றி வந்து இப்போது இப்படி ஆகி விட்டுள்ளோம்.
இப்போது நாம் திரும்பிச் செல்கிறோம். இன்று இங்கே இருக்கிறோம்.
நாளை வீட்டுக்குச் செல்வோம். நாம் எல்லையற்ற தந்தையின்
வீட்டுக்குச் செல்கிறோம். இது எல்லையற்ற நாடகம். இது இப்போது
மீண்டும் முன்போலவே நடைபெறப் போகிறது. பாபா சொல்கிறார்,
தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து தர்மங்களையும் மறந்து தன்னை
ஆத்மா என உணருங்கள். இப்போது நாம் இந்த சரீரத்தை விட்டுவிட்டு
வீட்டுக்குச் செல்ல இருக்கிறோம். இதை உறுதியாக நினைவு
செய்யுங்கள், நாம் ஆத்மா-இதுவும் கூட நினைவிருக்குமானால் புத்தி
மூலம் முழு உலகத்தின் சந்நியாசம் ஆகி விட்டது. சரீரத்தின்
சந்நியாசமும் ஆகிவிட்டது என்றால் அனைத் திலிருந்தும் சந்நியாசம்.
அந்த ஹடயோகிகள் ஒன்றும் முழு உலகை சந்நியாசம் செய்வ தில்லை.
அவர்களுடையது அரைகுறையானது. நீங்களோ முழு உலகையும் தியாகம்
செய்ய வேண்டும். தன்னை தேகம் என உணர்ந்திருந்தால் பிறகு
காரியமும் அதுபோலவே செய்கின்றனர். தேக-அபிமானி ஆவதால் திருட்டு,
பொய் பேசுவது, பாவம் செய்வது. இவை அனைத்தும் பழக்கமாகி
விடுகின்றன. சப்தமாகப் பேசவும் பழக்கமாகி விடுகின்றது. எனது
சப்தமே அப்படித் தான் என்று பிறகு சொல்கின்றனர். ஒரு நாளில்
25-30 பாவங்களும் கூட செய்கின்றனர். பொய் பேசுவதும் பாவமாகிறது
இல்லையா? பழக்கமாகி விடுகின்றது. பாபா சொல்கிறார் - சப்தத்தைக்
குறைப்பதற்குக் கற்றுக் கொள்ளுங்களேன். சப்தத்தைக் குறைப்பதில்
தாமதமாவதில்லை. நாயைக் கூட வளர்க்கின்றனர் என்றால் நல்லதாகி
விடுகின்றது. குரங்குகள் எவ்வளவு துடுக்குத்தனமான உள்ளன! பிறகு
யாரிடமாவது சிறைப்பட்டு வளர்க்கப்பட்டால் நடனம் முதலியனவும்
ஆடுகின்றன. மிருகங்களும் கூட சீர்திருந்தி விடுகின்றன.
மிருகங்களைச் சீர்திருத்துபவர்கள் மனிதர்கள். மனிதர் களைச்
சீர்திருத்துபவர் பாபா. பாபா சொல்கிறார், நீங்களும்
மிருகங்களைப் போல் தான் இருக்கிறீர்கள். ஆக, என்னையும் கூட
ஏதாவது அவதாரம், வராக அவதாரம் எனச் சொல்லி விடுகிறீர்கள்.
எப்படி உங்களுடைய செயல்பாடுகள் உள்ளனவோ அதை விடவும் கீழாக என்னை
ஆக்கி விட்டிருக்கிறீர்கள். இதையும் நீங்கள் தான் அறிவீர்கள்
உலகத்திற்குத் தெரியாது. பின்னாளில் உங்களுக்கு சாட்சாத்காரம்
ஆகும். எப்படி-எப்படி தண்டனைகள் பெறுகின்றனர் என்பதும்
உங்களுக்குத் தெரிய வரும். அரைக்கல்பமாக பக்தி
செய்திருக்கிறீர்கள். இப்போது பாபா கிடைத்திருக்கிறார். பாபா
சொல்கிறார், எனது வழிமுறைப்படி நடக்கவில்லை என்றால் தண்டனை
இன்னும் கூட அதிகமாகிக் கொண்டே போகும். அதனால் இப்போது பாவங்கள்
முதலியவற்றைச் செய்வதை விட்டு விடுங்கள். தன்னுடைய சார்ட்
வையுங்கள். பிறகு அதோடு கூடவே தாரணையும் வேண்டும். யாருக்காவது
புரிய வைப்பதற்கான பயற்சியும் வேண்டும். கண்காட்சியின்
சித்திரங்கள் மீது சிந்தனையைச் செலுத்துங்கள். யாருக்கு நாம்
எப்படிப் புரிய வைப்பது? முதல்-முதல் விஷயமாக இதை எடுத்துக்
கொள்ளுங்கள் - கீதையின் பகவான் யார்? ஞானக் கடலோ பதீத பாவனர்
பரமபிதா பரமாத்மா இல்லையா? இந்தத் தந்தை ஆத்மாக்கள் அனைவருடைய
தந்தை ஆவார். ஆகவே தந்தையின் அறிமுகம் வேண்டும் இல்லையா?
ரிஷி-முனி முதலிய யாருக்குமே தந்தையின் அறிமுகம் கிடையாது.
படைப்பினுடைய முதல்-இடை-கடைசி பற்றியும் தெரியாது. அதனால்
முதல்-முதலிலோ இதைப் புரிய வைத்து - பகவான் ஒருவர் தான் என்று
எழுத வையுங்கள். வேறொருவர் இருக்க முடியாது. மனிதர்கள் தங்களை
பகவான் எனச் சொல்லிக் கொள்ள முடியாது. குழந்தை களாகிய
உங்களுக்கு இப்போது நிச்சயம் உள்ளது - பகவான் நிராகாராக உள்ளார்.
பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். நாம் மாணவர் கள்.
அவர் தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார்,
சத்குருவாகவும் உள்ளார். ஒருவரை நினைவு செய்வோமானால் ஆசிரியர்
மற்றும் குரு இருவரின் நினைவும் வரும். புத்தி அலையக் கூடாது.
வெறுமனே சிவன் என்று மட்டும் சொன்னால் போதாது. சிவன் நம்முடைய
தந்தையாகவும் இருக்கிறார், மிக மேலான ஆசிரியராகவும் இருக்கிறார்,
நம்மை உடன் அழைத்துச் செல்பவராகவும் இருக்கிறார். அந்த
ஒருவருக்கு எவ்வளவு மகிமை! அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும்.
ஒரு சிலர் இவர்களோ போய் பி.கே.யை குரு ஆக்கிக் கொண்டுள்ளனர்
என்று சொல்கின்றனர். நீங்கள் குருவாகவோ ஆகிறீர்கள் இல்லையா?
பிறகு உங்களைத் தந்தை எனச் சொல்ல மாட்டார்கள். ஆசிரியர், குரு
எனச் சொல்வார்கள், தந்தை அல்ல. மூவரும் என்று பிறகு அந்த ஒரே
தந்தையைத் தான் சொல்வார்கள். அவர் அனைவரைக் காட்டிலும் பெரிய
தந்தை. இதை நல்லபடியாகப் புரிய வைக்க வேண்டும். கண்காட்சியில்
புரிய வைப்பதற்கான புத்தி வேண்டும். ஆனால் தன்னிடம் அவ்வளவு
துணிச்சல் இருப்பதாக உணர்வதில்லை. பெரிய-பெரிய கண்காட்சிகள்
நடைபெறுகின்றன என்றால் நல்ல-நல்ல சேவையில் ஈடுபாடு கொண்ட
குழந்தைகள் சென்று சேவை செய்ய வேண்டும். பாபா தடை சொல்வதில்லை.
இன்னும் போகப் போக சாது-சந்நியாசிகளுக்கும் கூட நீங்கள் ஞான
பாணத்தை எய்து கொண்டே இருப்பீர்கள். எங்கே செல்வார்கள்? ஒரே
புகலிடம் தான் உள்ளது. அனைவருக்கும் சத்கதி இந்தப் புகலிடத்தில்
தான் கிடைக்க வேண்டும். இந்தப் புகலிடம் அத்தகையது, நீங்கள்
அனைவருக்கும் பவித்திரமாவதற்கான வழி சொல்கிறீர்கள். பிறகு
அவர்கள் ஆனாலும் சரி, ஆகா விட்டாலும் சரி.
குழந்தைகளாகிய உங்களது கவனம் விசேஷமாக சேவை மீது இருக்க
வேண்டும். குழந்தைகள் புத்திசாலிகள் தாம் என்ற போதிலும் சேவை
முழுமையாகச் செய்யவில்லை எனில் ராகு தசை பிடித்துள்ளது என பாபா
புரிந்து கொள்வார். தசைகளோ அனைவர் மீதும் சுற்றுகிறது இல்லையா?
மாயாவின் நிழல் படிகின்றது. பிறகு இரண்டு நாள் கழித்து சரியாகி
விடுகின்றனர். குழந்தைகள் சேவையின் அனுபவம் பெற்று வர வேண்டும்.
கண்காட்சிகளோ நடத்திக் கொண்டே உள்ளனர். மனிதர்கள் ஏன் புரிந்து
கொண்டு எழுதுவதில்லை - நிச்சயமாக கீதை கிருஷ்ணருடையது அல்ல,
சிவபகவான் பாடியது என்று? சிலரோ இது மிக நன்றாக உள்ளது என்று
மட்டும் சொல்லி விடுகின்றனர். மனிதர்களுக்கு மிகவும் நன்மை
செய்வது என்பதை அனைவர்க்கும் காட்ட வேண்டும். ஆனால் நானும்
இந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்வேன் என்று யாருமே சொல்வ தில்லை.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) தேக அபிமானத்தில் வந்து சப்தமாகப் பேசக் கூடாது. இந்தப்
பழக்கத்தை விட்டுவிட வேண்டும். திருடுவது, பொய் பேசுவது.........இவையனைத்தும்
பாவங்களாகும். இவற்றி லிருந்து தன்னைப் பாதுகாத்துக்
கொள்வதற்காக ஆத்ம அபிமானி ஆகி இருக்க வேண்டும்.
2) மரணம் என்பது எதிரிலேயே உள்ளது. அதனால் பாபாவின் ஸ்ரீமத்படி
நடந்து பாவனமாக வேண்டும். பாபாவுடையவர்களாக ஆன பிறகு எந்த ஒரு
தீய கர்மமும் செய்யக் கூடாது. தண்டனைகளில் இருந்து தன்னைப்
பாதுகாத்துக் கொள்வதற்கான புருஷôர்த்தம் செய்ய வேண்டும்.
வரதானம்:
மக்கள் விரும்பும் சபைக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யக்கூடிய
இராஜ்ய சிம்மாசன அதிகாரி ஆகுக.
எந்தவொரு சங்கல்பமோ அல்லது சிந்தனையோ செய்கின்றீர்கள் என்றால்
முதலில் இந்த சிந்தனை அல்லது சங்கல்பம் பாபாவிற்கு
பிடித்தமானதாக உள்ளதா? என்று சோதனை செய்யுங்கள். யார் தந்தைக்கு
பிடித்தமானவராக இருக்கின்றார்களோ, அவர்கள் மக்களுக்கு பிடித்த
மானவராக தானாகவே ஆகிவிடுகின்றார்கள். ஒருவேளை ஏதாவதொரு
சங்கல்பத்தில் சுயநலம் இருக்கிறது என்றால் மனதிற்கு
விருப்பமானது என்று சொல்லலாம் மற்றும் உலக நன்மை இருக்கிறது
என்றால் மக்களுக்கு விருப்பமானது மற்றும் பிரபுவிற்கு
விருப்பமானது என்று சொல்லலாம். மக்கள் விரும்பும் சபையின்
உறுப்பினர் ஆகுவது என்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு நிறைந்த
இராஜ்ய அதிகாரம் மற்றும் இராஜ்ய சிம்மாசனத்தை அடைவதாகும்.
சுலோகன்:
பரமாத்மாவின் துணையை அனுபவம் செய்தீர்கள் என்றால் அனைத்தும்
சகஜமாக இருப்பதாக அனுபவம் செய்து கொண்டே பாதுகாப்பாக
இருப்பீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை - இணைந்த ரூபத்தின் நினைவினால் சதா வெற்றியாளர்
ஆகுங்கள்.
எவ்வாறு சிவசக்தியின் இணைந்த ரூபம் உள்ளதோ, அதுபோல் பாண்டவபதி
மற்றும் பாண்டவர் என்பதும் சதா காலத்திற்கான இணைந்த ரூபம் ஆகும்.
பாண்டவபதியால் பாண்டவர் கள் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது.
யார் அவ்வாறு இணைந்த ரூபத்தில் எப்பொழுதும் இருக்கின்றார்களோ,
அவர்கள் முன்னால் பாப்தாதா சாகாரத்தில் அனைத்து
சம்பந்தங்களிலும் முன்னால் இருக்கின்றார். எங்கே அழைத்தாலும்
அங்கே நொடியில் ஆஜர் ஆகிவிடுவார், ஆகையினால் இறைவன் எங்கும்
நிறைந்து இருக்கின்றார் என்று கூறுகின்றனர்.
|
|
|