28-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே - மதிப்புடன்
தேர்ச்சி பெற வேண்டும் என்றால் ஸ்ரீமத்படி நடந்து கொண்டே
இருங்கள், கெட்ட சகவாசம் மற்றும் மாயையின் புயல்களிலிருந்து
தங்களை காத்துக் கொள்ளுங்கள்
கேள்வி:
பாபா குழந்தைகளுக்கு என்ன சேவை
செய்துள்ளார், அதை குழந்தைகளும் கூட செய்ய வேண்டும்?
பதில்:
பாபா செல்லக் குழந்தைகளே என்று
சொல்லி வைரத்தைப் போல் மாற்றுவதற்கான சேவை செய்துள்ளார்.
அதுபோல் குழந்தைகளாகிய நாமும் கூட நம்முடைய இனிமையான சகோதரர்களை
வைரத்தைப் போல் மாற்ற வேண்டும். இதில் கஷ்டமான விசயம் எதுவும்
இல்லை, பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் வைரத்தைப் போல் ஆகி
விடுவீர்கள் என்று மட்டும் சொல்ல வேண்டும்.
கேள்வி:
பாபா தன்னுடைய குழந்தைகளுக்கு
எந்தவொரு கட்டளை இட்டுள்ளார்?
பதில்:
குழந்தைகளே, நீங்கள் உண்மையான வருமானத்தை ஈட்டுங்கள். நீங்கள்
யாரிடமும் கடன் வாங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை.
பாடல்:
இந்த பாவம் நிறைந்த
உலகத்திலிருந்து...................
ஓம் சாந்தி.
புதிய உலகத்திற்கு செல்லக் கூடிய இனிமையிலும் இனிமையான ஆன்மீகக்
குழந்தைகளுக்கு பாபா காலை வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நாம் இந்த உலகத்தி லிருந்து தூரம் சென்று கொண்டிருக்கிறோம்
என்பதை ஆன்மீகக் குழந்தைகள் வரிசைக்கிரமமாக தெரிந்துள்ளார்கள்.
எங்கே? தங்களுடைய இனிமையான அமைதியான வீட்டிற்கு. சாந்திதாமம்
தான் தூரத்தில் இருக்கிறது, அங்கிருந்து ஆத்மாக்களாகிய நாம்
வருகின்றோம். அது மூலவதனம், இது ஸ்தூல வதனமாகும். அது
ஆத்மாக்களாகிய நம்முடைய வீடாகும். அந்த வீட்டிற்கு பாபாவைத்
தவிர வேறு யாரும் அழைத்துச் செல்ல முடியாது.
பிராமண-பிராமணிகளாகிய நீங்கள் அனைவரும் ஆன்மீக சேவை செய்து
கொண்டிருக்கிறீர்கள். யார் கற்றுக் கொடுத்தது? தூரமாக அழைத்துச்
செல்லக்கூடிய பாபா ஆவார். எவ்வளவு பேரை தூரமாக (சாந்தி தாமம்)
அழைத்துச் செல்வார்? எண்ணிலடங்காதவர்களை. ஒரு வழி காட்டியின்
குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் கூட வழிகாட்டிகளாவீர்கள்.
உங்களுடைய பெயரும் கூட பாண்டவ சேனையாகும். மன்மனாபவ, பாபாவை
நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளாகிய நீங்களும் கூட ஒவ்வொரு
வருக்கும் தூரமாக (சாந்திதாமம்) அழைத்துச் செல்வதற்கான யுக்தியை
கூறுகின்றீர்கள். பாபா, இந்த உலகத்திலிருந்து எங்கேயாவது
தூரமாக அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள்.
புதிய உலகத்தில் இப்படி சொல்ல மாட்டார்கள். இங்கே இராவண
இராஜ்யமாகும், இங்கு சுகம் இல்லை எனவே இதிலிருந்து வெகு தூரம்
அழைத்துச் செல்லுங்கள் என்று சொல் கிறார்கள். இதனுடைய பெயரே
துக்கதாமமாகும். இப்போது பாபா உங்களுக்கு எந்த ஏமாற்றமும்
அளிப்பதில்லை. பக்திமார்க்கத்தில் பாபாவைத் தேடுவதற்காக நீங்கள்
எவ்வளவு ஏமாற்றம் அடைகிறீர்கள்! நான் மறைமுகமாக இருக்கின்றேன்
என்று பாபா அவரே கூறுகின்றார். என்னை இந்த கண்களின் மூலம்
யாரும் பார்க்க முடியாது. கிருஷ்ணருடைய கோயிலில் காலில்
விழுந்து வணங்குவதற்காக ஒரு சிறு பலகையை வைக்கிறார்கள், நீங்கள்
விழுந்து வணங்க எனக்கு கால்களே இல்லை. நான் உங்களை செல்லக்
குழந்தைகளே என்று அழைக்கிறேன். - இனிமையான சகோதரர்களே, பரலௌகீக
தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் வினாசம் ஆகும்
என்று நீங்களும் கூட மற்றவர்களுக்கு கூறுகின்றீர்கள். அவ்வளவு
தான் வேறு எந்த கஷ்டமும் இல்லை. எப்படி பாபா வைரத்தைப் போல்
மாற்றுகிறாரோ, அதுபோல் குழந்தை களும் கூட வைரத்தைப் போல்
மாற்றுகிறார்கள். மனிதர்களை வைரத்தைப்போல் எப்படி மாற்றுவது
என்பதைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நாடகத்தின் படி
கல்பத்திற்கு முன் போலவே ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில்
பாபா வந்து நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். பிறகு நாம்
மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றோம். பாபா வைரத்தைப் போல்
மாற்றிக் கொண்டிருக்கிறார். கோஜர்களின் (அந்தப்புர பணியாளர்கள்)
குரு ஆகாங்காவை தங்கம், வெள்ளி, வைரத்தினால் எடை போட்டார்கள்
என்பது உங்களுக்குத் தெரியும். நேருவை தங்கத்தினால் எடை
போட்டார்கள். அவர் ஒன்றும் வைரத்தைப் போல் மாற்றவில்லை. பாபா
உங்களை வைரத்தைப் போல் மாற்றுகின்றார். அவரை நீங்கள் எதோடு எடை
போடுவீர்கள்? நீங்கள் வைரம் போன்ற வற்றை என்ன செய்வீர்கள்.
உங்களுக்கு அவசியமே இல்லை. அவர்கள் பந்தயத்தில் நிறைய பணத்தை
செலவழிக்கிறார்கள். வீடு, சொத்து போன்றவற்றை உருவாக்குகிறார்கள்.
குழந்தை களாகிய நீங்கள் உண்மையான வருமானத்தை சம்பாதித்துக்
கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கினீர்கள்
என்றால் பிறகு 21 பிறவிகளுக்கு நிறைத்துக் கொடுக்க வேண்டி
யிருக்கும். நீங்கள் யாரிடமும் கடன் பெறுவதற்கு சட்டமில்லை.
இந்த சமயத்தில் அனைத்தும் பொய்யான வருமானம் என்பதை நீங்கள்
தெரிந்துள்ளீர்கள், இவை அனைத்தும் அழியப்போகிறது. இவையனைத்தும்
சோழிகள் என்பதை பாபா பார்த்திருக்கிறார், நமக்கு வைரங்கள்
கிடைக்கிறது, எனவே இந்த சோழிகளை வைத்துக் கொண்டு என்ன
செய்வீர்கள்? தந்தை யிடமிருந்து ஏன் நாம் எல்லையற்ற ஆஸ்தியை
அடையக்கூடாது? உணவு கிடைக்கத் தான் வேண்டும். ஒரு பழமொழி
இருக்கிறது - யாருடைய கைகள் இப்படி இருக்கிறதோ... அவர்கள் முதல்
நம்பரை அடைந்து விடுகிறார்கள். பாபாவை பொற்கொல்லர் என்றும்
சொல்கிறார்கள் அல்லவா! எனவே பாபா கூறுகின்றார், உங்களுடைய பழைய
பொருட்களை மாற்றிக் கொடுக்கின்றேன். யாராவது இறந்து
விடுகிறார்கள் என்றால் அவர்களுடைய பழைய பொருட்களை தோட்டிக்கு
கொடுத்து விடுகிறார் கள் அல்லவா! பாபா கூறுகின்றார், நான்
உங்களிடமிருந்து என்ன எடுத்துக் கொள்கிறேன், இந்த மாதிரியை
பாருங்கள். திரௌபதி ஒருவர் மட்டும் இல்லை அல்லவா! நீங்கள்
அனைவரும் திரௌபதிகளாவீர்கள். பாபா நாங்கள்
துகிலுரிக்கப்படுவதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று
நிறைய அழைக்கிறார்கள். பாபா எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார்
- குழந்தைகளே, இந்த கடைசி பிறவியில் தூய்மையாக ஆகுங்கள். பாபா
குழந்தைகளுக்குக் கூறுகின்றார் அல்லவா! என்னுடைய தாடிக்கு
மரியாதை வையுங்கள், குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.
இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு
பெருமிதம் இருக்க வேண்டும்! பாபா உங்களை வைரத்தைப்
போலாக்குகின்றார், இவரைக் கூட அந்த பாபா வைரத்தைப்
போலாக்குகின்றார். அவரைத் (சிவபாபாவைத்) தான் நினைவு செய்ய
வேண்டும். இந்த பாபா பிரம்மா கூறுகின்றார், என்னை நினைவு
செய்வதின் மூலம் உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகாது. நான்
உங்களுடைய குரு அல்ல. அவர் எனக்கு கற்றுக் கொடுக்கின்றார்,
பிறகு நான் உங்களுக்கு கற்றுக் கொடுகின்றேன். வைரத்தைப் போல்
ஆக வேண்டும் என்றால் பாபாவை நினைவு செய்யுங்கள்.
பக்தி மார்க்கத்தில் சிலர் தேவதைகளின் பக்தி செய்து
கொண்டிருக்கிறார்கள், இருந்தாலும் கூட புத்தி கடை, தொழில்
போன்றவற்றின் பக்கம் ஓடிக்கொண்டே இருக்கிறது, ஏனென்றால்
அதிலிருந்து வருமானம் வருகிறது, என்பதை பாபா புரிய வைத்துள்ளார்.
புத்தி இங்கே-அங்கே ஓடும்போது, இந்த நினைவு ஏன் வருகிறது என்று
தன்னை ஒரு அறை அறைந்து கொள்வார் என்று பாபா தன்னுடைய
அனுபவத்தைக் கூறுகின்றார். எனவே இப்போது ஆத்மாக்களாகிய நாம் ஒரு
பாபாவைத் தான் நினைவு செய்ய வேண்டும், ஆனால் மாயை அடிக்கடி
மறக்கச் செய்கிறது, கோபம் வருகிறது. மாயை புத்தியோகத்தை
துண்டித்து விடுகிறது. இப்படி-இப்படியெல்லாம் தங்களோடு பேச
வேண்டும். இப்போது தங்களுக்கு நன்மை செய்து கொள்வதுடன் கூடவே
மற்றவர்களுக்கும் நன்மை செய்யுங்கள், சேவை நிலையங்களை
ஆரம்பியுங்கள் என்று பாபா கூறுகின்றார். இப்படி நிறைய
குழந்தைகள் திறக்கிறார்கள் - பாபா, இந்த இடத்தில் சென்டர்
திறக்கட்டுமா? என்று கேட்கிறார்கள். நான் வள்ளலாக இருக்கின்றேன்
என்று பாபா கூறுகின்றார். எனக்கு எதனுடைய அவசியமும் இல்லை.
இந்த கட்டிடம் போன்றவை கூட குழந்தை களாகிய உங்களுக்காக
உருவாக்கப்படுகிறது அல்லவா! சிவபாபா நம்மை வைரம் போலாக்க
வந்திருக்கின்றார். நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்களோ அவை
உங்களுடைய காரியத்திற்கே ஆகும். இவர் ஒன்றும் குரு அல்ல
சிஷ்யர்களை உருவாக்குவதற்கு, கட்டிடங்களை குழந்தைகள் தான்
தாங்கள் இருப்பதற்கு உருவாக்குகிறார்கள். கட்டிட கலைஞர்கள்
வருகிறார்கள் என்றால் அவர்களை, தாங்கள் சென்று புதிய
கட்டிடத்தில் இருங்கள் என்று மதிப்பளிக்கப் படுகிறது. சிலர்
நாங்கள் ஏன் புதிய கட்டிடத்தில் இருக்க வேண்டும், எங்களுக்கு
பழையதே நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீங்கள் எப்படி
இருக்கிறீர்களோ, அப்படி நாங்களும் இருப்போம் என்கிறார்கள். நான்
வள்ளல் என்ற அகங்காரம் எல்லாம் எங்களுக்கு இல்லை. பாப்தாதாவே
புதிய கட்டிடத்தில் இருப்பதில்லை எனும்போது நான் ஏன் இருக்க
வேண்டும்? எங்களையும் தங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.
எந்தளவிற்கு தங்களுக்கு அருகில் இருக்கிறோமோ அந்தளவிற்கு நல்லது.
எந்தளவிற்கு முயற்சி செய்வீர்களோ அந்தளவிற்கு சுகதாமத்தில்
உயர்ந்த பதவி அடைவீர்கள் என்று பாபா புரிய வைக்கின்றார்.
அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வார்கள் அல்லவா! பாரதம் புண்ணிய
ஆத்மாக்களின் உலகமாக இருந்தது, பாவம் என்ற பெயரே இருக்கவில்லை
என்பதை பாரதவாசிகள் தெரிந்துள்ளார்கள். இப்போது பாவாத்மாக்களாக
ஆகி விட்டார்கள். இது இராவண இராஜ்யமாகும். சத்யுகத்தில் இராவணன்
இருப்பதில்லை. அரை கல்பத்திற்கு பிறகு தான் இராவண இராஜ்யம்
வருகிறது. பாபா இவ்வளவு புரிய வைக்கின்றார் இருந்தாலும்
புரிந்து கொள்வதில்லை. கல்பம் கல்பமாக இப்படித் தான் நடந்து
வந்திருக்கிறது. ஒன்றும் புதிய விசயம் இல்லை. நீங்கள்
கண்காட்சிகள் வைக்கிறீர்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள்! நிறைய
பிரஜைகள் உருவாகுவார்கள். வைரத்திற்குச் சமமாக ஆவதற்கு நேரம்
பிடிக்கிறது. பிரஜைகள் உருவானா லும் கூட நல்லது தான். இப்போது
தீர்ப்பிற்கான நேரமாகும். அனைவருடைய கணக்கு-வழக்கும் முடிகிறது.
8 மணி மாலை என்பது மதிப்புடன் தேர்ச்சி பெறுபவர்களுடையதாகும்.
8 மணிகள் தான் முதல் நம்பரில் செல்கிறார்கள், அவர்களுக்கு
கொஞ்சம் கூட தண்டனை கிடைப்பதில்லை. கர்மாதீத் நிலையை அடைந்து
விடுகிறார்கள். பிறகு 108, வரிசைக்கிரமம் என்று சொல்வார்கள்
அல்லவா! இது உருவாகின்ற உருவாக்கப்பட்ட நாடகமாகும், இதை
அனைவரும் சாட்சியாக இருந்து யார் நல்ல முயற்சி செய்கிறார்கள்
என்று பார்கிறார்கள். சில குழந்தைகள் பின்னால்
வந்திருக்கிறார்கள், ஸ்ரீமத்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியே ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருந்தார்கள் என்றால்
மதிப்புடன் தேர்ச்சி பெற்று 8 மணி மாலையில் வர முடியும்.
போகப்போக கிரகச்சாரம் கூட வந்து விடுகிறது. இந்த
எழுச்சி-வீழ்ச்சி அனைவருக்கும் வருகிறது. இது வருமானமாகும்.
சில நேரங்களில் மிகவும் குஷியாக இருப்பார்கள், சில நேரங்களில்
துக்கம். மாயையின் புயல் மற்றும் கெட்ட சகவாசம் பின்னால் தள்ளி
விடுகிறது. குஷி மறைந்து விடுகிறது. நல்ல சேர்க்கை உயர்த்தும்
மற்றும் கெட்ட சகவாசம் வீழ்த்திவிடும் என்று பாடப்பட்டுள்ளது.
இப்போது இராவணனுடைய சகவாசம் வீழ்த்திவிடும், இராமருடைய சகவாசம்
உயர்த்தும். இராவணுடைய வழியின் மூலம் இப்படி ஆகி விட்டார்கள்.
தேவதைகள் கூட இறங்கும் மார்க்கத்தில் செல்கிறார்கள்.
அவர்களுடைய சித்திரத்தை எவ்வளவு மோசமாக காட்டு கிறார்கள்! இது
இறங்கும் மார்க்கத்தில் செல்வதின் அடையாளமாகும். பாரதத்தில்
தான் இராம இராஜ்யம் இருந்தது, பாரதத்தில் தான் இப்போது இராவண
இராஜ்யம் இருக்கிறது. இராவண இராஜ்யத்தில் 100 சதவீதம்
துக்கமுடையவர்களாக ஆகி விடுகிறார்கள். இது விளையாட்டாகும்.
இந்த ஞானத்தை யாருக்கும் புரிய வைப்பது எவ்வளவு சகஜமானதாக
இருக்கிறது!
(பாபாவிற்கு முன்னால் ஒரு நர்ஸ் அமர்ந்திருக்கிறார் ) பாபா
இந்த குழந்தைக்குக் கூறுகின்றார் நீங்கள் நர்ஸாக இருக்கிறீர்கள்,
அந்த சேவையையும் செய்து கொண்டிருங்கள், கூடவே நீங்கள் இந்த
சேவையும் செய்யலாம். நோயாளிகளுக்கும் கூட இந்த ஞானத்தைச்
சொல்லிக் கொண்டே இருங்கள், பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால்
விகர்மங்கள் வினாசம் ஆகும், பிறகு 21 பிறவிகளுக்கு நீங்கள்
நோயாளிகளாக ஆக மாட்டீர்கள். யோகத்தின் மூலம் தான் ஆரோக்கியம்
மற்றும் இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை தெரிந்து கொள்வதின் மூலம்
செல்வம் கிடைக்கிறது. நீங்கள் அதிக சேவை செய்ய முடியும், நிறைய
பேருக்கு நன்மை செய்வீர்கள். பணம் கூட என்ன கிடைக்கிறதோ அதை
இந்த ஆன்மீக சேவையில் ஈடுபடுத்துவீர்கள். உண்மையில் நீங்கள்
அனைவரும் கூட நர்ஸுகளாவீர்கள். மோசமான மனிதர்களை தேவதையாக்குவது
என்பது நர்ஸுக்கு சமமான சேவையாகிறது அல்லவா! வந்து எங்களை
தூய்மையாக்குங்கள் என்று தூய்மையற்ற மனிதர்கள் என்னை
அழைக்கின்றார்கள் என்று பாபாவும் கூறுகின்றார். நீங்களும் கூட
நோயாளிகளுக்கு இந்த சேவை செய்தீர்கள் என்றால் உங்களுக்கு
பலியாகி (விசுவாசியாகி) விடுவார்கள். உங்களின் மூலம் காட்சியும்
ஏற்படும். நீங்கள் யோகம் நிறைந்தவர்களாக இருந்தீர்கள் என்றால்
பெரிய-பெரிய டாக்டர்கள் கூட உங்களுடைய கால்களில் வந்து
விழுவார்கள். நீங்கள் செய்து பாருங்கள். இங்கே மேகங்கள்
புத்துணர்ச்சி பெற வருகின்றன. பிறகு சென்று மழையாகப் பொழிந்து
மற்றவர்களை புத்துணர்வு பெற வைக்கும். நிறைய குழந்தை களுக்கு
மழை எங்கிருந்து வருகிறது என்பது தெரிவதில்லை. இந்திரன் மழை
பொழிய வைக் கின்றார் என்று புரிந்து கொள்கின்றனர்.
சாஸ்திரங்களில் எவ்வளவு விசயங்களை எழுதி விட்டார்கள்!
நாடகத்தில் பதிவாகியிருப்பதால், இது மீண்டும் நடக்கும் என்று
பாபா கூறுகின்றார். நாம் யாரையும் நிந்தனை செய்வதில்லை, இது
உருவாக்கப்பட்ட உருவாக்கப்படுகின்ற ஆரம்பமும் முடிவுமற்ற
நாடகமாகும். இது பக்திமார்க்கம் என்பது புரிந்து
கொள்ளப்படுகிறது. ஞானம், பக்தி, வைராக்கியம் என்று
சொல்கிறார்கள். குழந்தை களாகிய உங்களுக்கு இந்த பழைய உலகத்தின்
மீது வைராக்கியமாகும். தாங்கள் இறந்தால் இந்த உலகம் இறந்ததாகி
விடும். ஆத்மா சரீரத்திலிருந்து தனியாகி விட்டால் உலகமே
முடிந்தது.
இனிமையான குழந்தைகளே, படிப்பில் தவறு செய்யாதீர்கள் என்று பாபா
குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். அனைத்தும் படிப்பில் தான்
ஆதாரப்பட்டிருக்கிறது. வக்கீல் சிலர் ஒரு இலட்ச ரூபாய்
சம்பாதிக்கின்றனர், சில வக்கீல்களுக்கு அணிவதற்கு கோட் கூட
இருக்காது. அனைத்தும் படிப்பில் ஆதாரப் பட்டிருக்கிறது. இந்த
படிப்பு மிகவும் சகஜமானதாகும். சுயதரிசன சக்கரதாரியாக ஆக
வேண்டும் அதாவது தங்களுடைய 84 பிறவிகளின் முதல்-இடை-கடைசியைத்
தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த முழு மரமும்
உளுத்துப்போன நிலையில் இருக்கிறது, அஸ்திவாரம் இல்லை. மற்றபடி
முழு மரமும் நின்று கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த ஆதிசனாதன
தேவி-தேவதா தர்மம் இருந்தது, தண்டாக இருந்தது, அது இப்போது
இல்லை. தர்மம் கீழானதாகவும், கர்மம் கீழானதாகவும் ஆகி விட்டது.
மனிதர்கள் யாருக்கும் சத்கதி அளிக்க முடியாது. பாபா அமர்ந்து
இந்த விசயங்கள் அனைத்தையும் புரிய வைக்கின்றார், நீங்கள்
எப்போதும் சுகமுடையவர்களாக ஆகி விடுகிறீர்கள். ஒருபோதும்
அகாலமரணம் நிகழாது. இன்னார் இறந்து விட்டார், என்ற வார்த்தையே
அங்கே இருப்பதில்லை. எனவே பாபா வழி சொல்கின்றார், நிறைய
பேருக்கு வழி சொன்னீர்கள் என்றால் அவர்கள் உங்களுக்கு பலியாகி
விடுவார்கள். யாருக்காவது காட்சி கூட ஏற்படலாம். காட்சி என்பது
வெறும் குறிக்கோள் ஆகும். அதற்காக படிக்கவும் வேண்டும் அல்லவா!
படிக்காமல் யாராவது வக்கீலாக ஆக முடியுமா. காட்சி ஏற்பட்டது
என்றால் முக்தி கிடைத்து விட்டது என்பது கிடையாது, மீராவிற்கு
காட்சி ஏற்பட்டது, அதற்காக கிருஷ்ணபுரிக்கு சென்று விட்டார்
என்பது கிடையாது. தீவிர பக்தி செய்வதின் மூலம் காட்சி
ஏற்படுகிறது. இங்கே உறுதியான நினைவாகும். சன்னியாசிகள் பிரம்ம
ஞானி யாகவும், தத்துவ ஞானியாகவும் ஆகி விடுகிறார்கள்.
பிரம்மத்தில் ஐக்கியமாக வேண்டும் அவ்வளவு தான். பிரம்மம்
ஒன்றும் பரமாத்மா இல்லை.
தங்களுடைய தொழில் போன்றவற்றை சரீர நிர்வாகத்திற்காக செய்யுங்கள்.
ஆனால் தங்களை டிரஸ்டி(பொருப்பாளர்) என்று புரிந்து கொண்டு
செய்தீர்கள் என்றால் உயர்ந்த பதவி கிடைக்கும் என்று பாபா புரிய
வைக்கின்றார். பிறகு பற்று விலகி விடும். இந்த பாபா எடுத்துக்
கொண்டு என்ன செய்வார்? இவர் அனைத்தையும் விட்டு விட்டார் அல்லவா!
வீடு வாசல் அல்லது மாளிகைகள் போன்றவை கட்ட வேண்டியதில்லை. இந்த
கட்டிடம் கட்டுகிறோம் ஏனென்றால் நிறைய குழந்தைகள் வருவார்கள்.
அபுரோட்டிலிருந்து இங்கு வரை வரிசை நிற்கும். இப்போது
உங்களுடைய தாக்கம் ஏற்பட்டால் புத்தி கெட்டு விடும். பெரிய
மனிதர்கள் வருகிறார்கள் என்றால் கூட்டம் கூடி விடும்.
உங்களுடைய தாக்கம் கடைசியில் ஏற்பட வேண்டும், இப்போது இல்லை.
பாபாவை நினைவு செய்வதற்கான பயிற்சி செய்ய வேண்டும் அதன்மூலம்
பாவம் அழியும். இப்படி நினைவில் சரீரத்தை விட வேண்டும்.
சத்யுகத்தில் சரீரத்தை விட்டால், ஒன்றை விட்டு விட்டு வேறொரு
புதியதை எடுப்போம் என்று புரிந்து கொள்வார்கள். இங்கே எவ்வளவு
தேக-அபிமானம் இருக்கிறது! வித்தியாசம் இருக்கிறது அல்லவா! இந்த
விசயங்கள் அனைத்தை யும் குறித்துக் கொள்ள வேண்டும் மற்றும்
மற்றவர்களையும் குறித்து வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.
மற்றவர் களையும் தங்களுக்கு சமமாக வைரம் போல் மாற்ற வேண்டும்.
எந்தளவிற்கு முயற்சி செய்வீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த பதவி
அடைவீர்கள். இதை பாபா புரிய வைக்கின்றார், இவர் ஒன்றும் சாதுவோ
மகாத்மாவோ இல்லை.
இந்த ஞானம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாகும், இதை நல்ல விதத்தில்
தாரணை செய்ய வேண்டும். பாபா சொன்னதைக் கேட்டோம் பிறகு இருந்த
இடத்திலேயே இருந்து கொண்டோம் என்பது கிடையாது. பாட்டில் கூட
கேட்டீர்கள் அல்லவா! கூடவே அழைத்துச் செல்லுங்கள் என்று
சொல்கிறார்கள். நீங்கள் இதற்கு முன்னால் இந்த விசயங்களைப்
புரிந்திருக்கவில்லை, இப்போது பாபா புரிய வைக்கின்றார் இப்போது
புரிந்து கொள்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) படிப்பில் ஒருபோதும் கவனக்குறைவாக அலட்சியமாக இருக்கக்
கூடாது. சுயதரிசன சக்கரதாரியாக ஆகி இருக்க வேண்டும்.
வைரத்தைப்போலாக்கும் சேவை செய்ய வேண்டும்.
2) உண்மையான வருமானத்தை ஈட்ட வேண்டும் மற்றும் ஈட்ட வைக்க
வேண்டும். தங்களுடைய பழைய பொருட்கள் அனைத்தையும் மாற்ற வேண்டும்.
கெட்ட சகவாசத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.
வரதானம்:
உலகத்தின் ஒளியாக ஆகி பக்தர்களை பார்வையாலேயே திருப்திப்படுத்தி
விடக்கூடிய தரிசனத்திற்கு உகந்த மூர்த்தி ஆவீர்களாக.
முழு உலகமே, உலகத்தின் கண்களாகிய உங்களுடைய பார்வை பெறுவதற்கான
எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். உலகத்தின் ஒளிகளாகிய நீங்கள்
தங்களது சம்பூர்ண ஸ்டேஜ் முழுமையான நிலை அடைந்து விடும் பொழுது
அதாவது சம்பூர்ணதா முழுமை என்ற கண்களை திறந்து விடும் பொழுது
ஒரு நொடியில் உலக மாற்றம் ஏற்படும். பிறகு தரிசனத்திற்கு உகந்த
ஆத்மாக்களாகிய நீங்கள் தங்களது பார்வையினாலேயே பக்த ஆத்மாக்களை
திருப்தி படுத்த கூடியவர்களாக ஆகி விடுவீர்கள் பார்வையினாலேயே
திருப்தி பட்டு விடக்கூடியவர்களின் நீண்ட கியூ (வரிசை)
இருக்கிறது. எனவே சம்பூர்ணதா என்ற கண்கள் திறந்திருக்கட்டும்.
கண்களை கசக்குவது மேலும் சங்கல்பங்களில் மூச்சு திணறுவதையும்
தூங்கி விழுவதையும் நிறுத்தி விடுங்கள்.அப்பொழுது
தரிசனத்திற்குரிய மூர்த்தியாக ஆக முடிந்தவர் ஆவீர்கள்.
சுலோகன்:
(நிர்மலமான) தூய்மையான சுபாவம் (நிர்மானதா) பணிவுடைமையின்
அடையாளம் ஆகும். நிர்மலமானீர்கள் என்றால் வெற்றி கிடைக்கும்.
தங்களது சக்திசாலி மனசா மூலமாக சகாஷ் சக்தி அளிக்கும் சேவை
செய்யுங்கள்
மனம் புத்தியை ஒருமுகப்படுத்த வேண்டும் என்றால் மன்மனாபவ என்ற
மந்திரத்தை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். மன்மனாபவ என்ற
மந்திரத்தின் நடைமுறை தாரணை மூலமாக முதல் நம்பரில் உங்களால்
வரமுடியும். மனதின் ஒருமுகநிலை என்றால் ஒருவரின் நினைவில்
இருப்பது. ஏகாக்ரதா ஒருமுகப்படுவது தான் ஏகாந்தம் தனிமை ஆகும்.
அனைத்து கவர்ச்சிகளின் அதிர்வலைகளில் இருந்து உள்முகமானவர்
ஆனீர்கள் என்றால் அப்பொழுது தான் மனசா மூலமாக முழு உலகத்திற்கு
சகாஷ் சக்தி கொடுக்கும் சேவையை செய்ய கூடியவர்களாக ஆகி
விடுவீர்கள்.