28.07.24    காலை முரளி            ஓம் சாந்தி  31.12.20      பாப்தாதா,   மதுபன்


இலாபக் கணக்கை சேமிப்பு செய்து இடைவிடாத மகாதானி ஆகுங்கள்”

இன்று புதுயுக படைப்பாளர் தன்னுடைய புதுயுக அதிகாரி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக் கின்றார். இன்று பழைய உலகில் சாதாரணமாக இருக்கின்றீர்கள் மற்றும் நாளை புதுயுகத்தில் இராஜ்ய அதிகாரியாக பூஜைக்குரியவராக இருப்பீர்கள். இன்று மற்றும் நாளையினுடைய விளையாட்டாகும். இன்று என்னவாக இருக்கின்றீர்கள் மேலும் நாளை என்னவாக ஆகின்றீர்கள்! எந்தக் குழந்தைகள் ஒப்பற்ற ஞான சொரூப ஆத்மாக்களாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கு முன்னால் வரக்கூடிய வருங்காலம் (நாளை) கூட இன்றைய பொழுது போல அந்தளவு தெளிவாக இருக்கும். நீங்கள் அனைவரும் புது வருடத்தைக் கொண்டாட வந்திருக்கின்றீர்கள், ஆனால், பாப்தாதா புதுயுகத்தை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். புது வருடத்திலோ ஒவ்வொருவரும் அவரவருடைய புதிய திட்டத்தை உருவாக்கி இருப்பீர்கள். இன்று பழைய வருடத்தின் முடிவாகும், முடிவில் முழு வருடத்தினுடைய ரிசல்ட் பார்க்கப்படுகின்றது. இன்று பாப்தாதா கூட ஒவ்வொரு குழந்தையினுடைய கடந்த வருடத்திற்கான ரிசல்ட்டை பார்த்தார்கள். பாப்தாதாவிற்கோ பார்ப்பதற்கு நேரம் ஆகுவதில்லை. இன்று விசேஷமாக அனைத்து குழந்தைகளுடைய சேமிப்பு கணக்கைப் பார்த்தார்கள். முயற்சியோ அனைத்து குழந்தைகளும் செய்திருக்கிறார்கள், நினை விலும் இருந்தார்கள், சேவையும் செய்தார்கள், லௌகீகம் மற்றும் அலௌகீக பரிவாரத்தில் சம்பந்தம், தொடர்பை கூட பராமரித்தார்கள், ஆனால், இந்த மூன்று விசயங்களில் எந்தளவு சேமிப்பு கணக்கு ஆகியுள்ளது?

இன்று வதனத்தில் பாப்தாதா தாய் ஜெகதம்பாவை எமர்ஜ் செய்தார்கள். (இருமல் வந்தது) இன்று வாத்தியம் சிறிது கெட்டுப்போய் இருக்கிறது, இசைக்க வேண்டி உள்ளது அல்லவா. பாப்தாதா மற்றும் மம்மா இணைந்து அனைவருடைய சேமிப்பு கணக்கைப் பார்த்தார்கள். சிக்கனம் செய்து எவ்வளவு சேமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்த்தார்கள். என்ன பார்த்தார்கள்? அனைவரும் வரிசைக்கிரமமாகத் தான் இருக்கின்றார்கள், ஆனால், எந்தளவு சேமிப்பு கணக்கு இருக்க வேண்டுமோ அந்தளவு கணக்கில் சேமிப்பு குறைவாக இருந்தது. தாய் ஜெகதம்பா கேள்வி கேட்டார்கள் - நினைவினுடைய பாடத்தில் சில குழந்தைகளின் இலட்சியம் கூட நன்றாக உள்ளது, முயற்சி கூட நன்றாக உள்ளது, பிறகு, சேமிப்பினுடைய கணக்கு எந்தளவு இருக்க வேண்டுமோ, அதில் ஏன் குறை உள்ளது? யோகத்தினுடைய பயிற்சியோ செய்து கொண்டு தான் இருக்கின்றார் கள், ஆனால், யோகத்தினுடைய நிலையின் சதவிகிதம் சாதாரணமாக இருப்பதன் காரணத்தினால் சேமிப்பினுடைய கணக்கு சாதாரணமாகவே உள்ளது என்ற ரிசல்ட் உரையாடல் செய்யச் செய்ய வெளிப்பட்டது. யோகத்திற்கான இலட்சியம் நல்லவிதமாக இருக்கின்றது, ஆனால், யோகத் தினுடைய ரிசல்ட் - யோகயுக்த் (யோக சொரூப நிலை), யுக்தியுக்த்தான (ஞானம் நிறைந்த) பேச்சு மற்றும் நடத்தை ஆகும். அதில் குறைவு இருப்பதன் காரணத்தினால், யோகத்தை ஈடுபடுத்தும் சமயம் யோகம் நன்றாக செய்கின்றனர். ஆனால், யோகி என்றால் யோகி வாழ்க்கையில் பிரபாவம் ஏற்பட்டிருக்க வேண்டும். சேமிப்பினுடைய கணக்கு சில சமயங்களில் சேமிப்பாகிறது, ஆனால், எல்லா நேரமும் சேமிப்பு ஆகுவதில்லை. போகப் போக நினைவினுடைய சதவிகிதம் சாதாரண மாக ஆகிவிடுகிறது. அதில் மிகக் குறைவான சேமிப்பு கணக்கே உருவாகிறது.

இரண்டாவது - சேவையைப் பற்றிய உரையாடல் நடந்தது. சேவையோ அதிகமாக செய்கின்றார்கள். பகல், இரவு பிஸியாக இருக்கின்றார்கள். மிகவும் நல்ல நல்ல திட்டங்களையும் உருவாக்குகின்றார்கள், மேலும், சேவையில் வளர்ச்சியும் மிகவும் நன்றாக ஆகிக் கொண்டிருக் கின்றது. பிறகும் கூட பெரும்பான்மையானோரின் சேமிப்பு கணக்கு ஏன் குறைவாக உள்ளது? சேவையோ அனைவரும் செய்து கொண்டு இருக்கின்றார்கள், தன்னை பிஸியாக வைத்துக் கொள்வதற்கான முயற்சியும் நன்றாக செய்து கொண்டு இருக்கின்றார்கள். பிறகு, என்ன காரணத்தினால் குறை உள்ளது என்பதும் உரையாடலில் பேசப்பட்டது. காரணமாக இதுவே வெளிப்பட்டது - சேவையினுடைய பலமும் கிடைத்துள்ளது, பலனும் கிடைத்துள்ளது. சுயத் தினுடைய உள்ளத்தின் திருப்தியே பலம் ஆகும் மற்றும் அனைவருடைய திருப்தி பலன் ஆகும். ஒருவேளை, சேவை செய்திருக்கிறீர்கள், உழைப்பு மற்றும் நேரத்தை ஈடுபடுத்தியிருக்கிறீர்கள் என்றால் உள்ளத்தில் திருப்தியை அனுபவம் செய்திருக்க வேண்டும் மற்றும் அனைவருடைய திருப்தி, அது உடன் இருப்பவர்களோ அல்லது யாருக்கு சேவை செய்திருக்கிறீர்களோ, அவர்களுடைய உள்ளத்தில் திருப்தியின் அனுபவம் செய்திருக்க வேண்டும். மிகவும் நன்றாக உள்ளது, மிகவும் நன்றாக உள்ளது என்று கூறி சென்றுவிடுவது கூடாது. உள்ளத்தில் திருப்தியின் அலை அனுபவம் ஆகவேண்டும். கொஞ்சம் கிடைத்தது, மிகவும் நன்றாக கேட்டோம் என்று கூறுவது வேறு. கொஞ்சம் கிடைத்தது, கொஞ்சம் அடைந்துவிட்டேன் என்று கூறவேண்டும். இதையே பாப்தாதா - ஒன்று புத்தி வரை அம்பு தைப்பது மற்றும் இரண்டாவது உள்ளத்தில் அம்பு தைப்பது என்று முன்பே கூறியிருக்கின்றார்கள். சேவையினுடைய மற்றும் சுயத்தினுடைய திருப்தியானது தன்னை மகிழ்விப்பதற்கான திருப்தியாக மட்டும் இருக்கக்கூடாது. மிகவும் நன்றாக நடந்தது, மிகவும் நன்றாக நடந்தது, இவ்வாறு அல்ல. தன்னுடைய மற்றும் பிறருடைய உள்ளம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மற்றும் ஒரு விசயம் என்னவென்றால், சேவை செய்தார்கள் மற்றும் அதனுடைய முடிவில் என்னுடைய உழைப்பு என்றோ அல்லது நான் செய்தேன் . . . நான் செய்தேன் என்று சுவீகாரம் செய்துவிட்டார்கள் என்றால் சேவையினுடைய பழத்தை சாப்பிட்டுவிட்டார்கள் என்று அர்த்தம். சேமிப்பு ஆகவில்லை. பாப்தாதா செய்ய வைத்தார்கள் என்று தன்னுடைய ஆத்மாவின் பக்கம் அல்லாமல், பாப்தாதாவின் பக்கம் கவனத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த சகோதரி மிகவும் நல்லவர், இந்த சகோதரர் மிகவும் நல்லவர், இவ்வாறு அல்ல. இவர்களுடைய பாப்தாதா மிகவும் நல்லவர்கள், இந்த அனுபவத்தை ஏற்படுத்த வேண்டும் - இதுவே சேமிப்பு கணக்கை அதிகரிப்பதாகும். ஆகையினால், மொத்த ரிசல்ட்டில் பார்க்கப்பட்டது என்னவென்றால் - உழைப்பு அதிகம், சமயம், சக்தி அதிகம் மற்றும் கொஞ்சம் கொஞ்சம் பகட்டு (ஷோ) அதிகம் உள்ளதால், சேமிப்பு கணக்கு குறைந்துவிடுகிறது. சேமிப்பு கணக்கினுடைய சாவி மிகவும் சகஜமானது, அது வைரச் சாவி ஆகும், தங்கச் சாவி போடுகிறீர்கள், ஆனால், நிமித்த உணர்வு மற்றும் பணிவான உணர்வு - இதுவே சேமிப்பிற்கான வைரச் சாவி ஆகும். ஒருவேளை, ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும், அது உடன் இருப்பவர்களுக்கோ அல்லது எந்த ஆத்மாவிற்கு சேவை செய்கின்றீர்களோ, அவர்களுக்கோ, சேவை செய்யும் சமயத்தில், முன்போ, பின்போ அல்லாமல் சேவை செய்யும் சமயத்தில் நிமித்த உணர்வு, பணிவான உணர்வு, சுயநலமற்ற சுபபாவனை மற்றும் சுபமான சினேகம் எமர்ஜ்ஜாகி இருக்க வேண்டும், அப்பொழுதே சேமிப்பு கணக்கு அதிகரிக்கும்.

இந்த விதிப்படி சேவை செய்யக்கூடியவர்களின் சேமிப்பு கணக்கு எவ்வாறு அதிகரிக்கின்றது என்பதை பாப்தாதா தாய் ஜெகதம்பாவிற்கு காண்பித்தார்கள். டிக்-டிக்-டிக் என்று வேகமாக சீக்கிரம், சீக்கிரமாகச் செய்திடும் இயந்திரத்தைப் போல் ஒரு நொடியில் அனேக மணி நேரத்தினுடைய சேமிப்பு கணக்கு சேமிப்பாகிவிடுகின்றது சேமிப்பினுடைய கணக்கை சேமிப்பு செய்வதோ மிகவும் சகஜமாக இருக்கின்றது என்று ஜெகதம்பா மிகுந்த குஷி அடைந்து கொண்டிருந்தார்கள். எனவே, இருவரின் (பாப்தாதா மற்றும் ஜெகதம்பாவின்) கருத்து என்னவென்றால், இப்பொழுது புதிய வருடம் ஆரம்பம் ஆகிக்கொண்டிருக்கின்றது, எனவே, சேமிப்பு கணக்கை சோதனை செய்யுங்கள், முழு நாளில் தவறு செய்யவில்லை, ஆனால், சமயம், சங்கல்பம், சேவை, சம்பந்தம், தொடர்பில் அன்பு, திருப்தியின் மூலம் சேமிப்பு எவ்வளவு ஆனது? இன்று தீயது எதுவும் நடக்கவில்லை. யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லை என்ற இதை மட்டும் சில குழந்தைகள் சோதனை செய்கின்றார்கள். ஆனால், இப்பொழுது முழு நாளில் சிரேஷ்ட சங்கல்பங்களின் கணக்கு எவ்வளவு சேமிப்பு செய்யப்பட்டது? சிரேஷ்ட சங்கல்பங்களின் மூலம் சேவையின் கணக்கு எவ்வளவு சேமிப்பு ஆனது? எத்தனை ஆத்மாக்களுக்கு ஏதாவதொரு செயல் மூலமாக சுகம் கொடுத்தேன்? யோகம் செய்யப்பட்டது, ஆனால், யோகத்தின் சதவிகிதம் எவ்விதமாக இருந்தது? இன்றைய நாளில் ஆசீர்வாதங்களின் கணக்கை எவ்வளவு சேமிப்பு செய்தேன்? என்பதை சோதனை செய்யுங்கள்.

இந்த புது வருடத்தில் என்ன செய்ய வேண்டும்? மனதாலோ, வார்த்தையாலோ, கர்மத்தினாலோ என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால், நேரத்தின் அனுசாரம் மனதில் நான் இடைவிடாத மகாதானி ஆகியே தீரவேண்டும் என்ற இந்த ஆர்வம் இருக்க வேண்டும். இடைவிடாத மகாதானி, மகாதானி அல்ல, இடைவிடாத மகாதானி ஆகவேண்டும். மனதால் சக்திகளின் தானம், வார்த்தைகளால் ஞானத்தின் தானம் மற்றும் தன்னுடைய கர்மத்தினால் குண தானம் செய்ய வேண்டும். தற்சமயம் உலகத்தில், அது பிராமண பரிவாரத்தின் உலகத்திலோ, அஞ்ஞானிகளின் உலகத்திலோ, கேட்பதற்கு பதிலாக பார்க்க விரும்புகின்றார்கள். பார்த்து செய்வதற்கு விரும்புகின்றார்கள். உங்களுக்கு ஏன் சகஜமாக உள்ளது? பிரம்மா பாபாவை கர்மத்தில் குண தான மூர்த்தியாகப் பார்த்தீர்கள். ஞான தானமோ செய்யத்தான் செய்கின்றீர்கள், ஆனால், இந்த வருடத்தில் விசேஷமாக, ஒவ்வொரு ஆத்மாவிற்கும் குணதானம் அதாவது தன்னுடைய வாழ்க்கையின் குணத்தின் மூலம் சகயோகம் கொடுக்க வேண்டும் என்ற கவனம் கொடுங்கள். பிராமணர்களுக்கு தானமோ செய்யமாட்டீர்கள் அல்லவா, சகயோகம் கொடுங்கள். என்ன வேண்டு மானாலும் நடக்கட்டும், ஒருவர் எவ்வளவு தான் அவகுணமுடையவராக இருக்கட்டும், ஆனால், நான் என்னுடைய வாழ்க்கையின் மூலம், கர்மத்தின் மூலம், தொடர்பின் மூலம் குணதானம் அதாவது சகயோகி ஆகவேண்டும். இவர் செய்யவில்லை என்றால் நான் எவ்வாறு செய்வேன், இவரும் இப்படித்தான் இருக்கின்றார் என்று இதில் பிறரைப் பார்க்கக் கூடாது. பிரம்மா பாபா சிவபாபாவை மட்டும் பார்த்தார். குழந்தைகளாகிய நீங்கள் ஒருவேளை பார்க்க வேண்டும் என்றால் பிரம்மா பாபாவைப் பாருங்கள். இதில் பிறரை பார்க்காதீர்கள். யார் முôட/முதல் முயற்சி எடுத்து தன்னை நிமித்தம் ஆக்குவார்களோ, அவர்கள் அர்ஜூனன் ஆவார்கள் என்பது பிரம்மா பாபா வினுடைய சுலோகனாக இருந்தது. யார் தம்மை நிமித்தமாக ஆக்குவார்களோ, அவர்கள் முதல் நம்பர் அர்ஜூனன் ஆகிவிடுவார்கள். பிரம்மா பாபா முதல் நம்பர் அர்ஜூனன் ஆனார். ஒருவேளை, பிறரைப் பார்த்து செய்தீர்கள் என்றால், நம்பர்ஒன் ஆகமாட்டீர்கள். வரிசைக்கிரமத்தில் வந்து விடுவீர்கள், நம்பர்ஒன் ஆகமாட்டீர்கள். மேலும், எப்பொழுது கை உயர்த்த வைக்கின்றார்களோ, அனைவரும் வரிசைக்கிரமத்தில் வருவதற்கு கை உயர்த்துகின்றீர்களா அல்லது முதல் நம்பரில் வருவதற்கு கை உயர்த்துகின்றீர்களா? ஆகவே, என்ன இலட்சியம் வைப்பீர்கள்? இடைவிடாத குணதானம் செய்பவர், உறுதியானவர் ஆகவேண்டும், ஒருவர் எவ்வளவு அசைத்தாலும் அசையக்கூடாது என்ற இந்த இலட்சியம் வைத்திடுங்கள். அனைவரும் இப்படித்தான் இருக்கின்றார்கள், நீங்கள் இப்படி ஏன் தன்னையே வருத்திக் கொள்கிறீர்கள், நீங்களும் சேர்ந்து விடுங்கள் என்று ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் கூறுகின்றார்கள். பலவீனம் ஆக்கக்கூடிய துணைவன் நிறைய பேர் கிடைக்கின்றார்கள். ஆனால், தைரியம் மற்றும் ஊக்கத்தை அதிகப்படுத்து வதற்குத் துணையாக இருக்கும் குழந்தைகள் பாப்தாதாவிற்குத் தேவை. ஆகவே, என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? சேவை செய்யுங்கள், ஆனால், சேமிப்பு கணக்கை அதிகரிக்கும் படியாகச் செய்திடுங்கள், நன்றாக சேவை செய்யுங்கள். முதலில் சுயத்திற்கு சேவை, பிறகு அனைவருக்குமான சேவை செய்யுங்கள். இன்னுமொரு விசயத்தை பாப்தாதா கவனித்தார்கள், கூறட்டுமா?

இன்று சந்திரன் மற்றும் சூரியனின் சந்திப்பு நடந்தது அல்லவா. எனவே, தாய் ஜெகதம்பா அட்வான்ஸ் பார்ட்டி எதுவரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டார்கள்? ஏனென்றால், எப்பொழுது நீங்கள் அட்வான்ஸ் நிலைக்கு செல்வீர்களோ, அப்பொழுது அட்வான்ஸ் பார்ட்டி யினுடைய காரியம் முடிவடையும். எனவே, தாய் ஜெகதம்பா இன்று பாப்தாதாவிடம் மிகவும் மெதுவாக, பெரிய அளவில் ஒரு விசயத்தைக் கூறினார்கள், எந்தவொரு விசயத்தைக் கூறினார்கள்? பாப்தாதாவோ அறிந்திருக்கின்றார்கள், பிறகும் கூட இன்று உரையாடல் நடைபெற்றது அல்லவா. என்ன கூறினார்கள் என்றால், நானும் வலம் வருகிறேன், மதுபனிலும் வலம் வருகின்றேன், சென்டர்களிலும் வலம் வருகிறேன் என்றார். (மம்மா) சிரித்துக்கொண்டே, யார் ஜெகத்தம்பாவைப் பார்த்திருக்கிறார்களோ, அவர்களுக்கு தெரியும், ஜெகதம்பா சிரித்துக் கொண்டே சமிக்ஞை செய்துவிடுவார்கள், நேரடியாக சொல்லமாட்டார்கள். தற்காலத்தில் ஒரு விசேஷத்தன்மை தென்படுகிறது என்று கூறினார்கள். அது என்ன விசேஷத்தன்மை? இப்பொழுது கவனக்குறைவு பலவிதமாக வந்துவிட்டது என்று கூறினார்கள். சிலருக்குள் ஒருவிதமான கவனக்குறைவு இருக்கின்றது, சிலருக்குள் இன்னொரு விதமான கவனக்குறைவு உள்ளது. நடந்துவிடும், செய்துவிடுவோம் . . . பிறரும் செய்து கொண்டிருக்கின்றார்கள், நாங்களும் செய்து விடுவோம் . . . இது இருந்து கொண்டு தான் இருக்கிறது, நடந்து கொண்டு தான் இருக்கிறது . . . இந்த சோம்பேறித்தனமான மொழி சங்கல்பத்திலோ உள்ளது, ஆனால், வார்த்தையிலும் வருகின்றது. இதற்காக புதிய வருடத்தில் நீங்கள் ஏதாவது யுக்தியை குழந்தைகளுக்கு கூறுங்கள் என்று பாப்தாதா கூறினார்கள். தாய் ஜெகதம்பா சதா தாரணை செய்த ஒரு சுலோகன் இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், நினைவு இருக்கின்றதா? யாருக்கு நினைவு உள்ளது? (நடப்பதெல்லாம் அவருடைய கட்டளையின் படியே நடக்கிறது . . .) நம்மை பாப்தாதா நடத்திக் கொண்டிருக்கின்றார்கள், அவருடைய உத்தரவின் படி ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற இந்த தாரணையை அனைவரும் செய்ய வேண்டும் என்று ஜெகதம்பா கூறினார்கள். நம்மை இயக்குபவர் டைரக்ட் தந்தை ஆவார் என்ற இந்த நினைவு ஒருவேளை இருந்ததென்றால், பார்வை எங்கு செல்லும்? நடப்பவர்களுடைய பார்வை நடத்துபவரின் பக்கம் தான் செல்லும், வேறு பக்கம் செல்லாது. ஆகவே, செய்விக்கக்கூடியவர் நிமித்தம் ஆக்கி செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றார், இயக்கிக் கொண்டிருக்கின்றார். செய்விப்பவர் பொறுப்பாளர் ஆவார். பிறகு, சேவையில் தலைபாரம் என்ன ஏற்படுகிறதோ, அது சதா இலகுவாகி, ஆன்மிக ரோஜா மலர் போல் ஆகிவிடும். என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? இடைவிடாத மகாதானி ஆகவேண்டும். நல்லது.

புதுவருடத்தைக் கொண்டாடுவதற்காக அனைவரும் ஓடோடி வந்தடைந்துவிட்டீர்கள். நன்றாக உள்ளது, ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. நல்ல தண்ணீர் கிடைத்தது அல்லவா! தண்ணீர் கிடைத்ததா? தண்ணீருக்காக உழைத்தவர்களுக்கும் கூட வாழ்த்துக்கள். இத்தனை ஆயிரம் பேர்களுக்கும் தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்பது என்பது சாதாரண விசயம் அல்ல, ஏதோ இரண்டு, நான்கு வாளிகள் கிடையாது அல்லவா! நாளை முதல் புறப்படும் விழா ஆரம்பித்துவிடும். அனைவரும் ஓய்வாக இருந்தீர்களா! சிறிதளவு புயல் பரீட்சை வைத்தது. கொஞ்சம் காற்று வீசியது. அனைவரும் நன்றாக இருந்தீர்களா? பாண்டவர்கள் நன்றாக இருந்தீர்களா? நன்றாக இருக்கிறது, கும்பமேளாவை விட நன்றாக உள்ளது அல்லவா! நல்லது மூன்றடி நிலமோ கிடைத்தது அல்லவா! கட்டில் கிடைக்கவில்லை, ஆனால், மூன்றடி நிலமோ கிடைத்துவிட்டது அல்லவா!

புதுவருடத்தில் நாலாபுறங்களிலும் உள்ள குழந்தைகளும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் கூட புதுவருடத்தின் விழாவை புத்தி மூலம் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள், காதுகள் மூலமாகக் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். மதுபனிலும் கூட பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். மதுபன் நிவாசிகளும் கூட யக்ஞ இரட்சகர் ஆகி சேவையின் பாகத்தை நடித்திருக்கின்றனர், மிக நல்லது. பாப்தாதா வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினரின் கூடவே மதுபன் நிவாசிகளுக்கும், யாரெல்லாம் சேவைக்கு நிமித்தமாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கும் வாழ்த்துக்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நல்லது. மற்றபடி வாழ்த்து அட்டைகள் அதிகம் வந்துள்ளன. அதிகமான வாழ்த்து அட்டைகள் வந்திருப்பதை நீங்கள் அனைவரும் கூட பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா. வாழ்த்து அட்டை ஒன்றும் பெரிய விசயம் அல்ல, ஆனால், இதில் உள்ளத்தின் அன்பு மறைந்துள்ளது. எனவே, பாப்தாதா வாழ்த்து அட்டையின் அழகைப் பார்க்கவில்லை, ஆனால், எவ்வளவு மதிப்பான உள்ளத்தின் அன்பு நிறைந்துள்ளது, அனைவரும் அவரவர் உள்ளத்தின் அன்பை அனுப்பி இருக்கின்றார்கள். அப்பேற்பட்ட அன்பான ஆத்மாக்களுக்கு விசேஷமாக ஒவ்வொருவருடைய பெயரையும் சொல்ல முடியாது அல்லவா! ஆனால், பாப்தாதா வாழ்த்து அட்டைக்கு பதிலாக அப்பேற்பட்ட குழந்தைகளுக்கு அன்பு நிறைந்த மரியாதை கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். நினைவுக் கடிதம், தொலைபேசி, கணினி, ஈமெயில் போன்ற என்னவெல்லாம் சாதனங்கள் உள்ளனவோ, அந்த அனைத்து சாதனங்களை விட முன்னதாக, சங்கல்பத்தின் மூலமே பாப்தாதாவிடம் வந்தடைந்துவிடுகின்றன, அதன் பிறகே, உங்களுடைய கம்ப்யூட்டர் மற்றும் ஈமெயிலில் வருகின்றன. குழந்தைகளின் அன்பு பாப்தாதா விடம் ஒவ்வொரு சமயமும் வந்தடைகின்றது. ஆனால், இன்று விசேஷமாக புதுவருடத்தில் சிலர் திட்டத்தையும் எழுதியுள்ளனர், உறுதிமொழியும் செய்துள்ளனர், முடிந்தவற்றிற்கு முற்றுப் புள்ளி வைத்து முன்னேறிச் செல்வதற்கான தைரியமும் வைத்துள்ளனர். அனைவருக்கும் பாப்தாதா மிக, மிக சபாஷ் குழந்தைகளே, சபாஷ் என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றீர்கள் அல்லவா! ஆதலால், அவர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். வள்ளலின் குழந்தைகள் ஒவ்வொருவரும் வள்ளல் ஆகிவிடுங்கள் என்ற இந்த உள்ளத்தின் ஆசை இப்பொழுது பாப்தாதாவிற்கு இருக்கின்றது. இது கிடைக்க வேண்டும், இது நடக்க வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று கேட்காதீர்கள். வள்ளல் ஆகுங்கள், ஒருவரை ஒருவர் முன்னேற்றுவதில் பரந்த உள்ளம் உடையவர் ஆகுங்கள். எங்களுக்கு பெரியவர்களின் அன்பு வேண்டும் என்று பாப்தாதாவிடம் சிறியவர்கள் கூறுகின்றனர். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தீர்கள் என்றால் அன்பு கிடைக்கும் என்று தந்தை சிறியவர்களுக்கு கூறுகின்றார். மரியாதை கொடுப்பது தான் மரியாதையைப் பெறுவதாகும். மரியாதை சாதாரணமாகக் கிடைக்காது. கொடுப்பது தான் பெறுவதாகும். உங்களுடைய ஜடச்சித்திரங்கள் கொடுக்கின்றன. தேவதை என்பதன் அர்த்தமே கொடுக்கக் கூடியவர் என்பது தான். தேவியின் அர்த்தமே கொடுக்கக் கூடியவர் என்பது தான். ஆகவே, சைத்தன்ய தேவி, தேவதைகளாகிய நீங்கள் வள்ளல் ஆகுங்கள், கொடுங்கள். ஒருவேளை, அனைவரும் கொடுக்கக்கூடிய வள்ளல் ஆகிவிட்டால் பெறக் கூடியவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் அல்லவா! பிறகு, நாலாபுறங்களிலும் திருப்தி யினுடைய, ஆன்மிக ரோஜா மலரின் நறுமணம் பரவும். கேட்டீர்களா!

புதுவருடத்தில் பழைய வார்த்தைகளைப் பேச வேண்டாம், சிலர் பழைய வார்த்தைகள் என்ன பேசுகின்றார்களோ, அது நன்றாக இல்லை, எனவே, பழைய பேச்சு, பழைய நடத்தை, பழைய எந்தவொரு பழக்கத்திற்கும் கட்டுப்படாதவர் ஆகவேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் இது புதியதாக உள்ளதா! என்று தன்னைத் தானே கேட்க வேண்டு. என்ன புதுமையாக செய்தேன்? 21ஆம் நூற்றாண்டை மட்டும் கொண்டாடினால் போதுமா, 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை முழுமையான 21ஆம் நூற்றாண்டில் அடைந்தே தீரவேண்டும். அடைய வேண்டும் அல்லவா! நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள புதுயுகத்திற்கு அதிகாரியான சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, அனைத்து குழந்தைகளுக்கு, சதா ஒவ்வொரு அடியிலும் கோடிகளை சேமிப்பு செய்யக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா தன்னை பிரம்மா பாபாவிற்கு சமமாக அனைவருக்கும் முன்னால் உதாரணம் (சாம்பிள்) ஆக்கி எளிதானதாக (சிம்பிள்) ஆக்கக்கூடிய ஆத்மாக்களுக்கு, சதா தன்னுடைய வாழ்க்கையில் குணங்களை பிரத்யட்சம் செய்து பிறரையும் குணவான் ஆக்கக்கூடிய, சதா அகண்ட மகாதானி, மகா சகயோகி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

இந்த நேரம் பழைய மற்றும் புதிய வருடம் சங்கமமாகும் நேரம் ஆகும். சங்கமிக்கும் சமயம் என்றால் பழையது முடிந்துவிட்டது மற்றும் புதியது ஆரம்பமாகிவிட்டது என்று அர்த்தம். எவ்வாறு எல்லையற்ற சங்கமயுகத்தில் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் உலக மாற்றம் செய்வதற்கு நிமித்தமாக இருக்கின்றீர்களோ, அவ்வாறு இன்றைய இந்த பழைய மற்றும் புதிய வருடத்தினுடைய சங்கமத்தில் கூட சுய மாற்றத்திற்கான சங்கல்பத்தை உறுதியாக செய்தீர்கள் மற்றும் செய்தே ஆகவேண்டும். ஒவ்வொரு நொடியும் உறுதியாக, இடைவிடாத மகாதானியாக ஆகவேண்டும். வள்ளலின் குழந்தைகள் மாஸ்டர் வள்ளல் ஆகவேண்டும். பழைய வருடத்திற்கு விடை கொடுப்பதன் கூடவே பழைய உலகத்தின் மீதுள்ள பற்று மற்றும் பழைய சமஸ்காரத்திற்கு விடைகொடுத்து, புதிய சிரேஷ்ட சமஸ்காரத்தை வரவேற்க வேண்டும். அனைவருக்கும் நூறு கோடி முறை (பில்லியன்), ஆயிரம் கோடி முறை (டிரில்லியன்) வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

வரதானம்:
பிராப்தி சொரூபம் ஆகி ஏன், என்ன என்ற கேள்விகளில் இருந்து கடந்து இருக்கக்கூடிய சதா மகிழ்ச்சியானவர் ஆகுக.

யார் பிராப்தி சொரூப சம்பன்ன ஆத்மாக்களாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கு ஒருபொழுதும் எந்த விசயத்திலும் கேள்வி எழாது. அவர்களுடைய முகம் மற்றும் நடத்தையில் மகிழ்ச்சியின் பெர்சனாலிட்டி தென்படும், இவர்களைத் தான் திருப்தியானவர் என்று கூறுகின்றார் கள். மகிழ்ச்சி ஒருவேளை குறைந்துவிடுகிறது என்றால் அதற்கான காரணம் பிராப்தி குறைவாக இருக்கின்றது என்பதாகும். மேலும், ஏதாவது ஆசையே பிராப்தியின் குறைபாட்டிற்குக் காரணம் ஆகும். மிகவும் சூட்சுமமான ஆசைகள் அபிராப்தியின் பக்கம் இழுத்துச் செல்கின்றன, ஆகையினால், அல்பகாலத்திற்கான ஆசைகளை விடுத்து பிராப்தி சொரூபம் ஆனீர்கள் என்றால் சதா மகிழ்ச்சி யானவர்களாக இருப்பீர்கள்.

சுலோகன்:
பரமாத்ம அன்பில் மூழ்கி இருந்தீர்கள் என்றால், மாயாவினுடைய கவர்ச்சி சமாப்தி ஆகிவிடும்.