29-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே ! நீங்கள் உங்களது யோக பலத்தினால் தான் விகர்மங்களை அழித்து, பாவனமாகி பாவன (தூய்மையான) உலகை உருவாக்க வேண்டும். இதுவே உங்களது சேவை ஆகும்.

கேள்வி:
தேவி தேவதா தர்மத்தின் எந்த ஒரு சிறப்பு பாடப் பட்டுள்ளது?

பதில்:
தேவி தேவதா தர்மம் தான் மிகவும் சுகம் அளிக்கக் கூடியதாகும். அங்கு துக்கத்தின் பெயர் அடையாளம் இருக்காது. குழந்தைகளாகிய நீங்கள் முக்கால் பங்கு சுகம் பெறுகிறீர்கள். ஒரு வேளை பாதி சுகம், பாதி துக்கம் என்றிருந்தால் ஆனந்தமாகவே இருக்காது.

ஓம் சாந்தி.
பகவான் கூறுகிறார் - எந்த ஒரு மனிதனையும் பகவான் என்று கூற முடியாது என்பதை பகவான் தான் புரிய வைத்துள்ளார். தேவதைகளைக் கூட பகவான் என்று கூறப்படுவ தில்லை. பகவானோ நிராகாரமானவர் ஆவார். அவருக்கு எந்த ஒரு சாகாரி அல்லது ஆகாரி ரூபம் கிடையாது. சூட்சும வதனவாசிகளுக்குக் கூட சூட்சும உடல் உள்ளது. எனவே அதற்கு சூட்சும வதனம் என்று கூறப்படுகிறது. இங்கு சாகார மனித உடல் உள்ளது. எனவே இதற்கு ஸ்தூல வதனம் என்று கூறப்படுகிறது. சூட்சும வதனத்தில் இந்த ஸ்தூல 5 தத்துவங்களின் சரீரம் இருப்பதில்லை. இது 5 தத்துவங்களினால் மனித உடல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு மண் பொம்மை என்று கூறுவார்கள். சூட்சும வதனவாசிகளுக்கு மண் பொம்மை என்று கூற மாட்டார் கள். தேவதா தர்மத்தினரும் கூட மனிதர்கள் ஆவார்கள். ஆனால் அவர்களுக்கு தெய்வீக குணங் களுடைய மனிதர்கள் என்பார்கள். இவர்கள் தெய்வீக குணங்களை சிவபாபா விடமிருந்து பெற்றுள் ளார்கள். தெய்வீக குணம் உடைய மனிதர்கள் மற்றும் அசுர குணம் உடைய மனிதர்களுக் கிடையில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது! மனிதர்கள் தான் சிவாலயம் அல்லது வைசியாலயத் தில் இருப்பதற்கான தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். சத்யுகத்திற்கு சிவாலயம் என்று கூறப்படுகிறது. சத்யுகம் இங்கேயே தான் உருவாகிறது. மூலவதனம் அல்லது சூட்சுமவதனத்தில் ஒன்றும் உருவாகுவதில்லை. அது சிவபாபாவினால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் ஆகும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்பொழுது ஸ்தாபனை செய்தார்? சங்கமத்தில். இது புருஷோத்தம யுகம் ஆகும். இப்பொழுது இந்த உலகம் பதீதமாக (தூய்மையற்றதாக) தமோபிரதானமாக உள்ளது. இதற்கு சதோபிரதானமான புது உலகம் என்று கூறமாட்டர்கள். புது உலகத்திற்கு சதோபிரதானம் என்று கூறப்படுகிறது. அதுவே பின்னர் பழையதாக ஆகி விடும் பொழுது அதனை தமோபிரதானம் என்று கூறப்படுகிறது. பிறகு சதோபிரதானமாக எவ்வாறு ஆகிறது. குழந்தைகளாகிய உங்களுடைய யோக பலத்தினால். யோக பலத்தினால் தான் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிறது. மேலும் நீங்கள் பவித்திரமாக (தூய்மையாக) ஆகி விடுகிறீர்கள். தூய்மையானவர்களுக்கோ பின் அவசியம் தூய்மையான உலகம் வேண்டும். புது உலகிற்கு பவித்ரமான உலகம் என்றும், பழைய உலகத்திற்கு அபவித்திர மானது (தூய்மையற்றது) என்றும் கூறப்படுகிறது. பவித்திரமான (தூய்மையான) உலகத்தை தந்தை ஸ்தாபனை செய்கிறார். பதீத மான (தூய்மையற்ற) உலகத்தை இராவணன் ஸ்தாபனை செய்கிறான். இந்த விஷயங்களை எந்த மனிதர்களும் அறியாமல் உள்ளார்கள். இந்த 5 விகாரங்கள் இல்லையென்றால் மனிதர்கள் துக்கப்பட்டு கொண்டு தந்தையை ஏன் நினைவு செய்வார்கள்? நான் இருப்பதே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவராக (துக்க ஹர்த்தா, சுக கர்த்தா) என்று தந்தை கூறுகிறார். இராவணனுக்கு (10 தலைகள் உடைய) 5 விகாரங்களின் பொம்மையை அமைத்துள்ளார்கள். அந்த இராவணனை எதிரி என்று நினைத்து எரிக்கிறார்கள். அது கூட துவாபர முதற் கொண்டே எரிக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதல்ல. தமோபிரதானமாக ஆகி விடும் பொழுது யாரோ வெவ்வேறு கொள்கை உடையவர்கள் அமர்ந்து இது போன்ற புதிய விஷயங்களை எடுத்து வருகிறார்கள். யாராவது மிகவுமே துக்கம் கொடுத்தார்கள் என்றால் அவர்களது கொடும்பாவியை (பொம்மை) எரிக்கிறார்கள். ஆக இங்கு கூட மனிதர்களுக்கு மிகவும் துக்கம் ஏற்படும் பொழுது இந்த இராவணனுடைய கொடும்பாவி செய்து எரிக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு முக்கால் பங்கு சுகம் இருக்கிறது. ஒரு வேளை பாதி அளவு துக்கம் இருக்கிறது என்றால், அது என்ன தான் மகிழ்ச்சியாக இருக்கும்? உங்களுடைய இந்த தேவி தேவதா தர்மம் மிகவுமே சுகம் அளிக்க கூடியது என்று தந்தை கூறுகிறார். சிருஷ்டியோ அனாதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பு (சிருஷ்டி) ஏன் உருவானது. மீண்டும் எப்பொழுது முடிவடையும்? என்று யாருமே கேட்க முடியாது. இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுள் இலட்சக்கணக்கான வருடங்கள் என்று போட்டு விட்டார்கள். அவசியம் சிருஷ்டி மாற வேண்டிய வகையில் சங்கம யுகம் கூட இருக்கும். இப்பொழுது எப்படி நீங்கள் உணர்ந்துள்ளீர்களோ அது போல வேறு யாரும் புரிந்து கொள்வதில்லை. குழந்தைப் பருவத்தில் தான் இராதை கிருஷ்ணர் என்ற பெயர் உள்ளது. பிறகு சுயம்வரம் ஆகிறது என்ற சிறிய விஷயத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை. இருவரும் தனித்தனி அரசாட்சி யுடையவர்கள். பிறகு அவர்களுக்கு சுயம்வரம் ஆகும் பொழுது இலட்சுமி நாராயணர் ஆகிறார்கள். இந்த எல்லா விஷயங்களையும் தந்தை புரிய வைக்கிறார். தந்தை தான் நாலேஜ்ஃபுல் (ஞானம் நிறைந்தவர்) ஆவார். அப்படி இன்றி அவர் எல்லாமே அறிந்தவர் என்பதல்ல. தந்தையோ வந்து ஞானம் அளிக்கிறார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். ஞானம் பாடசாலையில் கிடைக்கிறது. பாடசாலையில் (ஏம் ஆப்ஜெக்ட்) இலட்சியம் அல்லது நோக்கம் அவசியம் இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். சீ சீ உலகத்தில் ஆட்சி புரிய முடியாது. தூய்மையான அழகான உலகத்தில் தான் ஆட்சி புரிவீர்கள். இராஜயோகம் சத்யுகத்தில் கற்பிப்பார்களா என்ன? சங்கமயுகத்தில் தான் தந்தை இராஜயோகம் கற்பிக்கிறார். இது எல்லை யில்லாத விஷயம் ஆகும். தந்தை எப்பொழுது வருகிறார் என்பது யாருக்குமே தெரியாது. காரிருளில் இருக்கிறார்கள். ஞான சூரியன் என்ற பெயரில் ஜப்பானில் அவர்கள் சூரிய வம்சத்தினர் என்று அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் சூரிய வம்சத்தினரோ தேவதைகள் ஆகிறார்கள். சூரிய வம்சத்தினரின் இராஜ்யம் சத்யுகத்தில் தான் இருந்தது. ஞான சூரியன் வெளிப்பட்டார் .. அப்பொழுது பக்தி மார்க்கத்தின் இருள் நீங்கி விடுகிறது என்று பாடப்படுகிறது .புதிய உலகமே பழையதாக, பின் பழைய உலகமே புதியதாக ஆகிறது. இது எல்லையில்லாத பெரிய வீடு ஆகும். எவ்வளவு பெரிய மேடை ஆகும். சூரியன், சந்திரன், நட்சட்திரங்கள் எவ்வளவு பயன்படுகின்றன! இரவில் நிறைய வேலைகள் நடக்கின்றன. ஒரு சில இராஜாக்கள் இப்படியும் இருக்கிறார்கள் பகலில் உறங்கி விடுகிறார்கள். இரவில் தங்களுடைய சபையை கூட்டுவார்கள், பொருட்களை வாங்கும் காரியங்கள் செய்கிறார்கள். இது போல இதுவரையும் அங்காங்கே நடக்கிறது. தொழிற் சாலைகள் (இயந்திரங்கள்) ஆகியவை கூட இரவில் இயங்குகின்றன. இவை எல்லைக்குட்பட்ட இரவு பகல். அது எல்லையில்லாத விஷயம். இந்த விஷயங்கள் உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. சிவபாபாவைக் கூட அறியாமல் உள்ளார்கள். தந்தை ஒவ்வொரு விஷயத்தையும் புரிய வைத்து கொண்டே இருக்கிறார். பிரம்மாவை பிரஜா பிதா பிரம்மா என்பது புரிய வைக்கப்பட்டுள்ளது. தந்தை சிருஷ்டியைப் (படைப்பு) படைக்கிறார் என்றால், அவசியம் யாருக்குள்ளாவது பிரவேசம் செய்வார். பாவன மனிதர்களோ இருப்பதே சத்யுகத்தில் தான். கலியுகத்திலோ எல்லோரும் விகாரத்தால் பிறக்கிறார்கள். எனவே பதீதமானவர்கள் (தூய்மையற்றவர்கள்) என்று கூறப்படுகிறது. விகாரம் இன்றி சிருஷ்டி எப்படி நடக்கும் என்று மனிதர்கள் கூறுவார்கள். அட தேவதைகளுக்கு நீங்கள் சம்பூர்ண நிர்விகாரி என்று கூறுவீர்கள். எவ்வளவு தூய்மையுடன் அவர்களுக்கு கோவில் அமைக்கிறார்கள். பிராமணரைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். உண்மையில் இந்த தேவதைகளை விகாரிகள் யாரும் தீண்டவும் முடியாது. ஆனால் தற்காலத்திலோ பணத்தால் எல்லாமே நடக்கிறது. ஒரு சிலர் வீட்டில் கோவில் ஆகியவை வைத்திருக்கிறார்கள் என்றாலும் கூட பிராமணர்களைத் தான் அழைக்கிறார்கள். இப்பொழுது அந்த பிராமணர்கள் கூட விகாரிகளாக அல்லவா இருக்கிறார்கள்! பெயர் மட்டும் பிராமணர்கள் என்று உள்ளது. இந்த உலகமே விகாரியாக உள்ளது. எனவே பூஜை கூட விகாரிகளால் தான் ஆகிறது. நிர்விகாரி எங்கிருந்து வர முடியும்? நிர்விகாரிகள் இருப்பதே சத்யுகத்தில் தான். அப்படி இன்றி யார் விகாரத்தில் செல்வதில்லையோ அவர்களை நிர்விகாரி என்று கூறலாம் என்பதல்ல. சரீரமோ பிறகும் விகாரத்தால் உருவாகி உள்ளது அல்லவா? இது முழுமையாக இராவண இராஜ்யம் ஆகும் என்ற ஒரே ஒரு விஷயத்தை தந்தை கூறி உள்ளார். இராம இராஜ்யத்தில் இருப்பவர்கள் சம்பூர்ண நிர்விகாரி ஆவார்கள். இராவண இராஜ்யத்தில் இருப்பவர்கள் விகாரி ஆவார்கள். சத்யுகத்தில் தூய்மை இருக்கும் பொழுது சுகம் சாந்தி இருந்தது. சத்யுகத்தில் இந்த இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது அல்லவா என்று நீங்கள் காண்பிக்கலாம். அங்கு 5 விகாரங்கள் இருப்பதில்லை. அது இருப்பதே பவித்திரமான (தூய்மை யான) இராஜ்யம் ஆகும். அதை பகவான் ஸ்தாபனை செய்கிறார். பகவான் பதீதமான (தூய்மை யற்ற) ராஜ்யத்தை ஸ்தாபனை செய்வாரா என்ன? சத்யுகத்தில் ஒரு வேளை பதீதர்கள் இருந்திருந்தால் தந்தையை அழைத்திருப்பார்கள் அல்லவா? அங்கே யாரும் அழைப்பதே இல்லை. சுகத்தில் யாரும் நினைவு செய்வதில்லை. சுகக் கடல், தூய்மையின் கடல்...... என்று பரமாத்மா விற்கு மகிமையும் செய்கிறார்கள். அமைதி வேண்டும் என்று கூறவும் செய்கிறார்கள். இப்பொழுது முழு உலகத்தில் மனிதர்கள் எப்படி அமைதியை நிலை நாட்ட முடியும்? அமைதியின் இராஜ்யமோ ஒரே ஒரு சொர்க்கத்தில் மட்டும் தான் இருந்தது. யாராவது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்றால், அமைதி ஏற்படுத்த வேண்டி இருக்கும். அங்கோ இருப்பதே ஒரு இராஜ்யம் ஆகும்.

இந்த பழைய உலகமே இப்பொழுது முடியப் போகிறது என்று தந்தை கூறுகிறார். இந்த மகாபாரதப் போரில் எல்லாமே அழிந்து விடுகிறது. விநாசகாலத்தில் விபரீதமான (அன்பில்லாத) புத்தி என்ற வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் பாண்டவர்கள் நீங்கள் ஆவீர்கள் அல்லவா? நீங்கள் ஆன்மீக வழிகாட்டி ஆவீர்கள். அனைவருக்கும் முக்தி தாமத்திற்கான வழி கூறுகிறீர்கள். அது ஆத்மாக்களின் வீடான சாந்தி தாமம் ஆகும். இது துக்கதாமம் ஆகும். இந்த துக்க தாமத்தைப் பார்த்தாலும் இதை மறந்து விடுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார். இப்பொழுதோ நாம் சாந்தி தாமத்திற்குச் செல்ல வேண்டும் அவ்வளவே!. இதை ஆத்மா கூறுகிறது. ஆத்மா (ரியலைஸ்) உணர்கிறது. நான் ஆத்மா ஆவேன் என்ற நினைவு ஆத்மாவிற்கு வந்துள்ளது. நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன்... என்பதை வேறு யாருமே புரிந்து கொள்ள முடியாது. நான் (பிந்து) புள்ளியாக உள்ளேன் என்பதை உங்களுக்குத் தான் புரிய வைத்துள்ளேன். நாம் 84ன் சக்கரம் எப்படி சுற்றியுள்ளோம் என்பது உங்களுக்கு அடிக்கடி புத்தியில் இருக்க வேண்டும். இதில் தந்தையும் நினைவிற்கு வருவார். வீடும் நினைவிற்கு வந்து விடும். சக்கரமும் நினைவிற்கு வரும். இந்த உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். எவ்வளவு கண்டங்கள் உள்ளன! எவ்வளவு போர்கள் ஆகியவை நிகழ்ந்துள்ளன. சத்யுகத்தில் சண்டை ஆகிய விசயங்களே இல்லை. இராம இராஜ்யம் எங்கே? இராவண இராஜ்யம் எங்கே? இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய இராஜ்யத்தில் இருப்பது போல உள்ளது. ஏனெனில் இறைவன் இங்கு இராஜ்யம் ஸ்தாபனை செய்வதற்காக வந்துள்ளார். சுயம் இறைவனோ ஆட்சி புரிவதில்லை. சுயம் அவர் ராஜ்யம் பெறுவதில்லை. பலனை எதிர்பாராமல் சேவை செய்கிறார். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் அனைத்து ஆத்மாக்களின் தந்தை ஆவார். பாபா என்று கூறுவதாலேயே ஒரேயடியாக குஷியின் அளவு அதிகரிக்க வேண்டும். அதீந்திரிய சுகம் உங்களுடைய அந்திம நிலையினுடைய தாகப் பாடப்பட்டுள்ளது. தேர்வின் நாட்கள் நெருங்கி வரும் பொழுது எல்லாமே சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிவது) ஆகிறது. அதீந்திரிய சுகம் கூட குழந்தைகளினுடையது வரிசைக்கிரமமாக உள்ளது. ஒரு சிலரோ தந்தையின் நினைவில் மிகுந்த குஷியுடன் இருக்கிறார்கள்.

ஆஹா பாபா! நீங்கள் எப்படி இருந்த எங்களை எப்படியாக ஆக்கி விட்டீர்கள் என்ற இதே (ஃபீலிங்) உணர்வு குழந்தைகளாகிய உங்களுக்கு நாள் முழுவதும் இருக்க வேண்டும். உங்களிடமிருந்து எங்களுக்கு எவ்வளவு சுகம் கிடைக்கிறது... .தந்தையை நினைவு செய்கையில் அன்புக் கண்ணீர் வந்து விடுகிறது. எவ்வளவு அதிசயமான விஷயம்! நீங்கள் வந்து எங்களை துக்கத்திலிருந்து விடுவிக்கிறீர்கள். விகார கடலிலிருந்து பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறீர்கள். நாள் முழுவதும் இதே (ஃபிலிங்) உணர்வு இருக்க வேண்டும். தந்தை எந்த நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டு கிறாரோ அப்பொழுது நீங்கள் எவ்வளவு புளகாங்கிதம் அடைகிறீர்கள்! சிவபாபா நமக்கு இராஜ யோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் சிவராத்திரி கூட கொண்டாடப்படுகிறது. ஆனால் மனிதர்கள் சிவபாபாவிற்கு பதிலாக ஸ்ரீகிருஷ்ணரின் பெயரை கீதையில் எழுதி வைத்துள்ளார்கள். இது பெரியதிலும் பெரிய ஒரே ஒரு தவறு ஆகும். முதல் நம்பர் கீதையிலேயே தவறு செய்து விட்டுள்ளார்கள். நாடகமே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. பதீத பாவனர் நான் ஆவேனா இல்லை கிருஷ்ணரா என்று தந்தை வந்து இந்த தவறை எடுத்துக் கூறுகிறார். உங்களுக்கு நான் இராஜயோகத்தை கற்பித்து மனிதனிலிருந்து தேவதையாக ஆக்கினேன். எனக்கு பாடல் கூட உள்ளது அல்லவா! அகாôல மூரத், அஜோனி என்று எனக்குத்தான் மகிமை உள்ளது.. கிருஷ்ணருக்கு இந்த மகிமை இருக்க முடியுமா என்ன? அவரோ புனர் ஜென்மத்தில் வருபவர் ஆவார். குழந்தைகளாகிய உங்களிலும் இந்த எல்லா விஷயங்களும் புத்தியில் வரிசைக் கிரமமாக உள்ளது. ஞானத்துடன் கூட நடத்தையும் நன்றாக இருக்க வேண்டும். மாயையும் ஒன்றும் குறைந்தது அல்ல. யார் முதலில் வருவார்களோ அவர்கள் அவசியம் அந்த அளவு ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். பாகமேற்று நடிப்பவர்கள் (பாகதாரிகள்) வெவ்வேறாக இருப்பார்கள் அல்லவா? ஹீரோ ஹீரோயினுடைய பாகம் பாரதவாசிகளுக்குத் தான் கிடைத் துள்ளது. நீங்கள் அனைவரையும் இராவண இராஜ்யத்திலிருந்து விடுவிக்கிறீர்கள். ஸ்ரீமத்தினால் உங்களுக்கு எவ்வளவு பலம் கிடைக்கிறது! மாயை கூட மிகவுமே பலசாலியாக உள்ளது. போகப் போக ஏமாற்றி விடுகிறது.

பாபா அன்பின் கடலாக இருக்கிறார். எனவே குழந்தைகளாகிய நீங்கள் கூட தந்தைக்கு சமமாக அன்பின் கடல் ஆக வேண்டும். ஒரு பொழுதும் கசப்பான வார்த்தைகளைப் பேசாதீர்கள். யாருக்காவது துக்கம் கொடுத்தீர்கள் என்றால் துக்கமடைந்து இறப்பீர்கள். இந்த பழக்கங்கள் அனைத்தையும் நீக்கி விட வேண்டும். விகாரக் கடலில் மூழ்கி எழுவது அசுத்தத்திலும் அசுத்த மான பழக்கம் ஆகும். காமம் மகா எதிரி ஆகும் என்று தந்தையும் கூறுகிறார். எத்தனை பெண் குழந்தைகள் அடி வாங்குகிறார்கள். ஒரு சிலரோ பெண் குழந்தையிடம் சரி, தூய்மையாக ஆகு என்பார்கள். அட! முதலில் சுயம் நீங்களோ தூய்மை ஆகுங்களேன். பெண் குழந்தையைக் கொடுத்து விட்டோம் என்றால் செலவு ஆகிய சுமையிலிருந்து இன்னுமே விடுபட்டு விடலாம். ஏனென்றால் இவருடைய அதிர்ஷ்டத்தில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. வீடு கூட சுகமுடையதாக கிடைக்குமோ இல்லையோ என்று நினைப்பார்கள். தற்காலத்தில் செலவு கூட நிறைய பிடிக்கிறது. ஏழைகளோ சட்டென்று கொடுத்து விடுகிறார்கள். ஒரு சிலருக்கோ பிறகு மோகம் இருக்கும். முன்பு ஒரு காட்டு ஜாதியை சேர்ந்த பெண் வந்து கொண்டிருந்தார். அவரை ஞானத்தில் வர விடவில்லை. ஏனெனில், மாய மந்திரம் செய்து விடுவார் என்ற பயம் இருந்தது. பகவானுக்கு மந்திரவாதி என்றும் கூறுகிறார்கள். கருணையுள்ளம் என்றும் பகவானைத் தான் கூறுவார்கள். கிருஷ்ணருக்கு கூறுவார்களா என்ன? கருணையற்றவரிடமிருந்து விடுவிப்பவர் தான் கருணையுள்ளம் உடையவர் ஆவார். இராவணன் கருணை அற்றவன் ஆவான்.

முதன் முதலில் இருப்பது ஞானம். ஞானம், பக்தி பிறகு வைராக்கியம். அப்படி இன்றி பக்தி, ஞானம் பிறகு வைராக்கியம் என்று கூறுவதல்ல. ஞானத்தின் மீது வைராக்கியம் என்று கூற முடியுமா என்ன? பக்தியின் மீது வைராக்கியம் கொள்ள வேண்டி உள்ளது. எனவே ஞானம், பக்தி, வைராக்கியம் இது சரியான வார்த்தைகள் ஆகும். தந்தை உங்களுக்கு எல்லையில்லாத அதாவது பழைய உலகத்தின் மீது வைராக்கியம் செய்விக்கிறார். சந்நியாசிகளோ வீடு வாசல் மீது மட்டும் வைராக்கியம் செய்விக்கிறார்கள். இதுவும் நாடகத்தில் பொருந்தி உள்ளது. மனிதர்களின் புத்தியில் பதிவதே இல்லை. பாரதம் 100 சதவிகிதம் செழிப்புடையதாக, நிர்விகாரியாக மற்றும் ஆரோக்கிய மானதாக இருந்தது. ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படவில்லை. இந்த எல்லா விசயங்களின் தாரணை மிகவும் குறைவானோருக்குத் தான் ஆகிறது. யார் நன்றாக சேவை செய்கிறார்களோ அவர்கள் மிகவும் செல்வந்தராக ஆவார்கள். குழந்தைகளுக்கோ நாள் முழுவதும் பாபா பாபா தான் நினைவில் இருக்க வேண்டும். ஆனால் மாயை நினைவு செய்ய விடுவதில்லை. சதோபிர தானமாக ஆக வேண்டும் என்றால் நடந்தாலும், சென்றாலும், உணவு உட்கொள்ளும் பொழுதும் என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். நான் உங்களை உலகிற்கே அதிபதி ஆக்குகிறேன். நீங்கள் நினைவு செய்ய மாட்டீர்களா? நிறைய பேருக்கு மாயையின் புயல் நிறைய வருகிறது. இப்படி ஆகத்தான் செய்யும் என்று தந்தை புரிய வைக்கிறார். நாடகத்தில் பொருந்தி உள்ளது. சொர்க்கத்தின் ஸ்தாபனையோ ஆகவே வேண்டி உள்ளது. எப்பொழுதுமே புதிய உலகம் இருக்க முடியாது. சக்கரம் சுற்றுகிறது என்றால் அவசியம் கீழே இறங்குவீர்கள். ஒவ்வொரு பொருளும் புதியதிலிருந்து பின் அவசியம் பழையதாக ஆகிறது. இச்சமயம் மாயை எல்லோரையும் ஏப்ரல் ஃபூல் ஆக்கி விட்டுள்ளது. தந்தை வந்து மலர் போன்று மென்மையாக ஆக்குகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தைக்குச் சமானமாக அன்பின் கடல் ஆக வேண்டும். ஒரு பொழுதும் யாருக்கும் துக்கம் கொடுக்க கூடாது. கசப்பான வார்த்தைகள் பேசக் கூடாது. அசுத்தமான பழக்கங்களை நீக்கி விட வேண்டும்.

2. பாபாவிடம் இனிமையிலும் இனிமையான விஷயங்களை பேசியபடியே ஆஹா ! பாபா! நீங்கள் எப்படி இருந்த எங்களை எப்படி ஆக்கியுள்ளீர்கள் என்ற இதே (ஃபீலிங்) உணர்வில் இருக்க வேண்டும். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு சுகம் கொடுத்துள்ளீர்கள். பாபா நீங்கள் பாற்கடலுக்கு அழைத்துச் செல்கிறீர்கள்.. .. .. நாள் முழுவதும் பாபா பாபா என்றே நினைவிருக்க வேண்டும்.

வரதானம்:
சர்வ சம்பந்தங்கள் மற்றும் சர்வ குணங்களின் அனுபூதியில் சம்பன்னம் ஆகக்கூடிய சம்பூர்ண மூர்த்தி ஆகுக.

சங்கமயுகத்தில் விசேசமாக சர்வ பிராப்திகளில் தன்னை சம்பன்னம் ஆக்க வேண்டும். எனவே சர்வ கஜானாக்கள், சர்வ சம்பந்தங்கள், சர்வ குணங்கள் மற்றும் கடமைகளை முன்னால் வைத்து, சோதித்துப் பாருங்கள் -- அனைத்து விசயங்களிலும் அனுபவி ஆகியிருக்கிறோமா? ஏதேனும் ஒரு விசயத்தின் அனுபவத்தில் குறை உள்ளதென்றால் அதில் தன்னை அனுபவி ஆக்குங்கள். ஒரே ஒரு சம்பந்தம் அல்லது குணத்தின் குறை இருக்குமானால் சம்பூர்ண ஸ்டேஜ் அல்லது சம்பூர்ண மூர்த்தி எனச் சொல்ல முடியாது. எனவே பாபாவின் குணங்கள் அல்லது தனது ஆதி சொரூபத்தின் குணங்களை அனுபவம் செய்யுங்கள். அப்போது சம்பூர்ண மூர்த்தி ஆவீர்கள்.

சுலோகன்:
ஆவேசத்தில் வருவதும் கூட மனதின் அழுகை ஆகும். இப்போது அழுகையின் ஃபைலை முடித்து விடுங்கள்.

தனது சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுப்பதற்கான சேவை செய்யுங்கள்

மனதால் சேவை செய்வதற்காக, சர்வ சக்திகளைத் தனது வாழ்வின் அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். பாபாவுக்கு சமமாக முழுமையானவர் ஆகுங்கள் -- உள்ளுக்குள் எந்த ஒரு குறையும் இருக்கக் கூடாது. அப்போது சிரேஷ்ட சங்கல்பங்களின் ஒருமுகத் தன்மை மூலம் அதாவது மனதின் மூலம் தானாகவே சகாஷ் பரவும்.