30-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே-இந்த பழைய உலகத்தில் எந்த சாரமும் இல்லை. ஆகவே நீங்கள் இதன் மீது மனதை செலுத்தாதீர்கள். தந்தையின் நினைவு துண்டிக்கப்பட்டால் தண்டனை அடைய வேண்டியிருக்கும்.

கேள்வி:
பாபாவின் முக்கியமான டைரக்ஷன் என்ன? அதை ஏன் மீறுகிறார்கள்?

பதில்:
யாரிடமும் சேவையை வாங்காதீர்கள், ஏனென்றால் நீங்களே வேலைக்காரர்கள் என்பது பாபாவின் டைரக்ஷன் ஆகும். ஆனால் தேக உணர்வின் காரணமாக பாபாவின் இந்த டைரக்ஷனை மீறுகிறார்கள். நீங்கள் இங்கே சுகம் அடைந்தால் அங்கே சுகம் குறைந்து போகும் என பாபா கூறுகின்றார். நிறைய குழந்தைகள் நாங்கள் சுதந்திரமாக இருப்போம் என கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் அனைவரும் பாபாவைச் சார்ந்து இருக்கிறீர்கள்.

பாடல்:
உள்ளத்தின் உதவி துண்டிக்கப்படக் கூடாது.....

ஓம் சாந்தி.
தனது சாலிகிராமங்களுக்காக (ஆத்மாக்கள்) சிவ பகவானின் வாக்கு. சிவன் மற்றும் சாலிகிராமத்தை அனைத்து மனிதர்களும் அறிகிறார்கள். இருவரும் நிராகாரர். இப்போது கிருஷ்ண பகவான் வாக்கு என கூற முடியாது. பகவான் ஒருவர் தான். அதனால் யாருக்காக சிவ பகவானின் வாக்கு.ஆன்மீகக் குழந்தைகளுக்காக இப்போது குழந்தைகளுக்கு பாபாவிடம் தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் பதீத பாவனர், ஞானக் கடல், சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுக்கக் கூடியவர் சிவபாபா தான் என குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. அவரைத் தான் நினைக்க வேண்டும். அவருடைய பாக்கியசாலி இரதம் பிரம்மா ஆவார். இரதம் மூலமாகத் தான் பாபா ஆஸ்தியைக் கொடுக்கின்றார். பிரம்மா ஆஸ்தி தர முடியாது. அவர் எடுக்கக் கூடியவர். எனவே குழந்தைகள் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைக்க வேண்டும். இரதத்திற்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டாலோ, அல்லது காரணத்தோடோ அல்லது காரணம் இன்றியோ குழந்தை களுக்கு முரளி கிடைக்கவில்லை என்றால் குழந்தைகளின் கவனம் முழுவதும் சிவபாபாவிடம் செல்கிறது. அவர் ஒரு போதும் நோய்வாய் பட முடியாது. குழந்தைகளுக்கு இவ்வளவு ஞானம் கிடைத்திருக்கிறது. அதையும் புரிய வைக்கலாம். படக் கண்காட்சியில் குழந்தைகள் எவ்வளவு புரிய வைக்கிறார்கள்! குழந்தைகளுக்குக் கூட ஞானம் இருக்கிறது அல்லவா? ஒவ்வொருவரின் புத்தியிலும் சித்திரங்களின் ஞானம் அடங்கியிருக்கிறது. குழந்தை களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட முடியாது. அஞ்சல் வருவது போவது நின்று விடுகிறது, வேலை நிறுத்தம் ஏற்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். பிறகு என்ன செய்வீர்கள்? குழந்தைகளுக்குள் ஞானம் இருக்கிறது, சத்யுகம் இருந்தது என புரிய வைக்க வேண்டும். இப்போது கலியுகம் பழைய உலகம் ஆகும். பழைய உலகத்தில் எந்த சாரமும் இல்லை, இதன் மீது மனதை செலுத்தாதீர்கள். இல்லை யென்றால் தண்டனை அடையக் கூடும் என்று பாடலில் கூட கூறுகிறார்கள். தந்தையின் நினைவினால் தான் தண்டனைகள் நீங்கும். பாபாவின் நினைவு துண்டிக்கப்பட்டு பிறகு தண்டனை அடைந்து பழைய உலகத்தில் சென்று விடக் கூடாது. இப்படி பல பேர் சென்றிருக்கிறார்கள் அவர்களுக்கு தந்தையின் நினைவு கூட இல்லை. பழைய உலகத்தில் மனம் மாட்டிக் கொண்டது. காலம் மிகவும் மோசமாக இருக்கிறது. யாரிடமாவது மனதை செலுத்தினால் தண்டனை மிகவும் கிடைக்கும். குழந்தைகளுக்கு ஞானம் கூற வேண்டும். பக்தி மார்க்கத்தின் பாடலைக் கூட கேட்க வேண்டியதில்லை. இப்போது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். ஞானக்கடல் பாபா மூலமாக உங்களுக்கு சங்கமயுகத்தில் தான் ஞானம் கிடைத்திருக்கிறது. ஞானக்கடல் ஒருவர் தான் என்பது உலகத்தில் யாருக்கும் தெரியாது. பாபா ஞானம் கொடுக்கும் போது மனிதர்களுக்கு சத்கதி கிடைக்கிறது. சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர் தான். அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். மாயை யாரையும் விடுவதில்லை. தேக அபிமானத்திற்கு பிறகு ஏதேனும் தவறு நடக்கிறது. சிலர் பாதி காமத்திற்கு வசமாகிறார்கள், சிலர் கோபத்திற்கு வசமாகிறார்கள். நேசிக்கலாம், இதை செய்யலாம்...... என மனதில் நிறைய புயல் வருகிறது. யாருடைய உடல் மீதும் மனதை செலுத்தக் கூடாது. தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டால் சரீர உணர்வு இருக்காது என பாபா கூறுகிறார். இல்லையென்றால் பாபாவின் கட்டளையை மீறி விடுகின்றனர். தேக அகங்காரத்தினால் நிறைய நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே தேகம் உட்பட அனைத்தையும் மறந்து விட வேண்டும். அப்பாவையும் வீட்டையும் மட்டும் நினைக்க வேண்டும். ஆத்மாக்களுக்கு பாபா புரிய வைக்கிறார்-சரீரத்தினால் காரியங்கள் செய்தாலும் என்னை நினைத்தால் விகர்மங்கள் எரிந்து போகும். வழி மிகவும் எளிது. உங்கள் மூலமாக தவறு நடந்துக் கொண்டே இருக்கிறது என்பதை இவர் கூட புரிந்து கொள்கிறார். ஆனால் தவறுகளில் மாட்டிக் கொண்டே இருக்கக் கூடாது. ஒரு முறை தவறு நடந்தது. பிறகு அந்த தவறு ஒரு போதும் நடக்கக் கூடாது. தனது காதைப் பிடிக்க வேண்டும். பிறகு அந்த தவறு நடக்காது. முயற்சி செய்ய வேண்டும். ஒரு வேளை அடிக்கடி தவறு நடந்தால் நமக்கு நிறைய நஷ்டம் ஏற்படுகிறது என புரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்து செய்து தான் துர்க்கதியை அடைந்திருக்கின்றனர் அல்லவா?. எவ்வளவு பெரிய ஏணியில் இறங்கி எப்படி ஆகியிருக்கிறீர்கள்? முன்பு இந்த ஞானம் இல்லை. இப்போது வரிசைக் கிரமமாக ஞானத்தில் அனைவரும் திறமை அடைந்திருக்கிறீர்கள். எவ்வளவு முடியுமோ உள்நோக்கு பார்வையில் இருக்க வேண்டும். வாய் மூலமாக எதுவும் கூற வேண்டியதில்லை. யார் ஞானத்தில் திறமையான குழந்தைகளாக இருக்கிறார்களோ அவர்கள் ஒரு போதும் பழைய உலகத்தில் மனதைச் செலுத்த மாட்டார்கள். நாம் இராவண இராஜ்யத்தை அழிக்க விரும்புகிறோம் என்பது அவர்களுடைய புத்தியில் இருக்கும். இந்த சரீரம் கூட பழைய இராவணனின் சம்பிரதாயமாக இருப்பதால் நாம் இராவண சம்பிரதாயத்தை ஏன் நினைக்க வேண்டும்? ஒரு இராமரை நினைக்க வேண்டும். உண்மையான பிதாவிரதையாக ஆக வேண்டும் அல்லவா!

என்னை நினைவு செய்து கொண்டே இருந்தால் உங்களுடைய விகர்மங்கள் அழிந்து போகும் என பாபா கூறுகின்றார். பக்தர்கள், பகவானே, வந்து எங்களுக்கு சுகம், சாந்தியின் செல்வத்தைக் கொடுங்கள் என பகவானைத் தான் நினைக்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் அர்ப்பணம் ஆகிறார்கள். பலி கொடுக்கிறார்கள். இங்கே பலி கொடுக்க வேண்டிய விஷயம் அல்ல. நாம் உயிரோடு பலியாக வேண்டும். அர்ப்பணம் ஆகுதல் என்பது உண்மையில் இப்போதைய விஷயம் ஆகும். பக்தி மார்க்கத்தில் அவர்கள் எவ்வளவு தற்கொலை செய்கிறார்கள்! இங்கு கொலையின் விஷயம் எதுவும் இல்லை. தன்னை ஆத்மா என உணருங்கள். பாபாவுடன் தொடர்பு வையுங்கள். தேக உணர்வில் வராதீர்கள் என பாபா கூறுகின்றார். உட்காரும் போதும், எழும் போதும், பாபாவை நினைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். 100 சதவீதம் யாரும் தேர்ச்சி அடைய வில்லை. மேலே கீழே ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். தவறுகள் நடக்கிறது. அதன் மீது கவனமாயிருக்க அறிவுரை கிடைக்கவில்லை என்றால், தவறுகளை எப்படி விடுவார்கள்? மாயை யாரையும் விடுவதில்லை. பாபா, நாங்கள் மாயையிடம் தோல்வி அடைந்து விட்டோம். முயற்சியும் செய்கிறோம், பிறகு என்ன நடக்கிறது தெரியவில்லை எனவும் கூறுகிறார்கள். எங்கள் மூலமாக இவ்வளவு கடுமையான தவறுகள் எப்படி நடக்கிறது என்பதே தெரியவில்லை. பிராமண குலத்தில் இதனால் நம்முடைய பெயர் கெட்ட பெயராகிறது என புரிந்து கொள்கிறார்கள். இருப்பினும் மாயையிடம் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு போர் ஏற்படுகிறது. தேக அபிமானத்தில் வருவதால் முட்டாளாகி விடுகிறார்கள். முட்டாள் தனமான வேலையைச் செய்கிறார்கள். நிந்தனையும் நடக்கிறது. சொத்தும் குறைந்து போகிறது. இவ்வாறு நிறைய தவறுகள் நடக்கிறது. மாயை இவ்வளவு வேகமாக அடி கொடுக்கிறது. இதனால் தான் தோல்வி அடைந்து கோபத்தில் வந்து மற்றவர்களையும் அடிக்கிறார்கள் அல்லது செருப்பை எடுத்து கூட அடிக்கிறார்கள். பிறகு வருந்தவும் செய்கிறார்கள். இப்போது நிறைய முயற்சியும் செய்ய வேண்டும் என பாபா கூறுகின்றார். தனக்கும் நஷ்டம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்றால் மற்றவர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்கள், எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறது! இராகுவின் கிரகணம் பிடித்துக் கொள்கிறது. இப்போது தானம் அளித்தால் கிரகணம் விலகிப்போகும் என பாபா கூறுகிறார், இராகுவின் கிரகணம் பிடித்துக் கொண்டால் பிறகு அது நேரத்தை எடுத்துக் கொள்கிறது. படியில் ஏறி பிறகு இறங்குவது கடினமாகிறது. மனிதர்களுக்கு குடிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டால் அதை விடுவதில் எவ்வளவு கஷ்டம் ஏற்படுகிறது! எல்லாவற்றையும் விட பெரிய தவறு முகத்தில் கரி பூசுவதாகும் (சிற்றின்ப விகாரத்தில் செல்லுதல்) . அடிக்கடி சரீரம் நினைவிற்கு வருகிறது. பிறகு குழந்தை கள் இருந்தால் அவர்களுடைய நினைவும் வந்து கொண்டிருக்கிறது. பிறகு இவர்கள் மற்றவர்களுக்கு என்ன ஞானம் கொடுப்பார்கள்?. அவர்கள் யாரும் கேட்க மாட்டார்கள். நாம் இப்போது அனைத்தையும் மறந்து ஒருவரை மட்டும் நினைப்பதற்கு முயற்சி செய்கின்றோம். இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாயா மிகவும் வேகமாக இருக்கிறது. முழு நாளும் சிவபாபாவை நினைப்பதற்கான எண்ணங்களைக் கொண்டு வர வேண்டும். இப்போது நாடகம் முடியப் போகிறது. நாம் போக வேண்டும். இந்த சரீரம் கூட அழியப் போகிறது. எவ்வளவு பாபாவை நினைக்கிறீர்களோ அவ்வளவு தேக அபிமானம் விலகிப் போகும். வேறு யாருடைய நினைவும் வராது. எவ்வளவு பெரிய குறிக்கோள், ஒரு பாபாவைத் தவிர வேறு யாருடனும் மனதை ஈடுபடுத்தக் கூடாது. இல்லையென்றால் அவர்கள் நிச்சயமாக எதிரில் தோன்றுவார்கள். எதிரியாக நிச்சயம் மாறுவார்கள். மிக உயர்ந்த குறிக்கோள். சொல்வது மிகவும் எளிதாகும். இலட்சத்தில் ஒரு மணி வெளிப்படுகிறது. சிலர் ஸ்காலர்ஷிப் கூட பெறுகிறார்கள் அல்லவா?. யார் நன்கு உழைக்கிறார்களோ அவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவார்கள். சாட்சியாக இருந்து எப்படி சேவை செய்கிறேன் என பார்க்க வேண்டும். நிறைய குழந்தைகள் உலகியல் தொழிலை விட்டு இதில் ஈடுபட்டு விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் பாபா அவர்களுடைய சூழ்நிலையையும் பார்க்கிறார். தனியாக இருக்கிறார்கள், எந்த உறவும் இல்லையென்றால் பரவாயில்லை. இருப்பினும் வேலையும் செய்யுங்கள், கூடவே, இந்த சேவையும் செய்யுங்கள் என கூறுகின்றார். வேலை செய்யும் போது கூட பலருடன் சந்திப்பு ஏற்படுகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு நிறைய ஞானம் கிடைத்திருக்கிறது. குழந்தைகள் மூலமாகக் கூட பாபா நிறைய சேவை செய்விக்கிறார். சிலருக்குள் பிரவேசமாகியும் சேவை செய்கிறார். சேவை செய்து தான் ஆக வேண்டும். யாருடைய தலையில் பொறுப்பு இருக்கிறதோ அவர்களுக்கு தூக்கம் எப்படி வரும்? சிவபாபா எரிந்து கொண்டிருக்கும் ஜோதியாக இருக்கிறார். நான் இரவும் பகலும் சேவை செய்கிறேன். சரீரம் தான் களைத்துப் போகிறது என பாபா கூறுகிறார். சரீரம் ஒத்துழைக்கவில்லை என்றால் ஆத்மா என்ன செய்ய முடியும்? பாபாவோ களைப்பற்றவர் அல்லவா ! அவர் எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும் ஜோதியாக இருக்கிறார். முழு உலகையும் எழுப்புகிறார். அவருடைய நடிப்பே அதிசயமானது. அவரை குழந்தைகளாகிய உங்களிலும் சிலரே அறிகிறார்கள். காலனுக் கெல்லாம் காலன் பாபா. அவருடைய கட்டளையை ஏற்க வில்லை என்றால் தர்மராஜிடம் தண்டனை அடைவார்கள். பாபாவின் முக்கியமான டைரக்ஷன் யாரிடமும் சேவையைப் பெறாதீர்கள். ஆனால் தேக அபிமானத்தில் வந்து பாபாவின் கட்டளையை மீறுகிறார்கள். நீங்களே வேலைக்காரர்கள் என பாபா கூறுகிறார். இங்கே சுகம் பெறுகிறீர்கள் என்றால் அங்கே சுகம் குறைந்து போகும். பழக்கம் ஆகிவிட்டால் வேலைக்காரர்கள் இல்லாமல் இருக்க முடியாது. சிலர் நாங்கள் சுதந்திரமாக இருப்போம் என கூறுகிறார்கள். ஆனால் பாபா சார்ந்திருத்தல் நல்லது என கூறுகிறார். நீங்கள் அனைவரும் பாபாவை சார்ந்திருக்கிறீர்கள். தனித்து இருப்பதால் விழுந்து விடுகிறார்கள். நீங்கள் அனைவரும் சிவபாபாவை சார்ந்திருக்கிறீர்கள். முழு உலகமும் சார்ந்திருக் கிறது. அதனால் தான் பதீத பாவனா வாருங்கள் எனக் கூறுகிறார்கள். அவரிடமிருந்து தான் சுகம், சாந்தி கிடைக்கிறது. ஆனால் புரிந்து கொள்ளவில்லை. இந்த பக்தி மார்க்கத்தின் நேரம் கூட கடந்து போக வேண்டும். இரவு முடியும் போது பாபா வருகின்றார். ஒரு நொடி கூட வித்தியாசம் ஏற்படாது. நான் இந்த நாடகத்தை அறிந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். நாடகத்தின் முதல், இடை, கடையை வேறு யாரும் அறியவில்லை. சத்யுகத்தில் இந்த ஞானம் மறைந்து போகிறது. இப்போது நீங்கள் படைக்கக் கூடியவர் மற்றும் படைப்பின் முதல், இடை, கடையை உணர்கிறீர்கள். இதற்குத் தான் ஞானம் என்று கூறப்படுகிறது. மற்ற அனைத்தும் பக்தியாகும். பாபாவை (நாலேட்ஜ்ஃபுல்) ஞானம் நிறைந்தவர் என்கிறார்கள். நமக்கு அந்த ஞானம் கிடைத்துக் கொண்டிருக் கிறது. குழந்தைகளுக்கு நன்கு போதை இருக்க வேண்டும். இராஜ்யம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது எனவும் புரிந்து கொள்கிறார்கள். சிலர் பிரஜைகளிலும் சாதாரண வேலைக் காராக மாறுகிறார்கள். சிறிது கூட ஞானம் புரிவதில்லை. அதிசயம் அல்லவா?. ஞானம் மிகவும் எளிதாகும். 84 பிறவி களின் சக்கரம் முடியப் போகிறது. இப்போது நம்முடைய வீட்டிற்குப் போக வேண்டும். நாம் நாடகத்தின் முக்கியமான நடிகர்கள். முழு நாடகத்தையும் புரிந்து கொண்டிருக் கிறோம். நாடகம் முழுவதிலும் ஹீரோ, ஹீரோயின் நடிகர்கள் நாமே ! எவ்வளவு எளிதாக இருக்கிறது! ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை யென்றால் என்ன முயற்சி செய்வார்கள்? படிப்பில் இவ்வாறு நடக்கிறது. சிலர் தேர்ச்சி அடைவதில்லை எவ்வளவு பெரிய பள்ளிக் கூடம். இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்போது யார் எவ்வளவு படிக்கிறார்களோ குழந்தைகள் நாம் என்ன பதவியைப் பெற முடியும் என புரிந்து கொள்ள முடியும். நிறைய பேர் இருக்கிறார்கள், அனைவரும் வாரிசாக முடியாது. தூய்மையாவது மிகவும் கடினமாகும். பாபா எவ்வளவு எளிதாகப் புரிய வைக்கிறார். இந்த நாடகம் முடியப் போகிறது. பாபாவின் நினைவினால் சதோபிரதானமாகி சதோபிரதானமான உலகத்திற்கு அதிபதியாக வேண்டும். எவ்வளவு முடியுமோ நினைவில் இருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் பாபாவிற்குப் பதிலாக மற்றவர்களை நினைப்பார்கள். மனம் போவதால் பிறகு நிறைய அழ வேண்டியிருக்கிறது. இந்தப் பழைய உலகத்தில் மனதை ஈடுபடுத்தாதீர்கள் என பாபா கூறுகிறார். இது அழியப் போகிறது, இது வேறு யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் கலியுகம் இன்னும் நிறைய காலம் இருக்கும் எனக் கூறுகிறார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய இந்த படக் கண் காட்சி பிரஜைகளை உருவாக்குவதற்கான பறக்கும் மார்க்கத்தின் சேவைக்கான சாதனம் ஆகும். இராஜா இராணி கூட யாராவது தோன்றுவார்கள். நிறைய பேர் சேவையில் நன்கு ஆர்வம் வைக்கிறார்கள். பிறகு சிலர் ஏழையாக, சிலர் பணக்காரராக இருக்கிறார்கள். மற்றவர்களை தனக்குச் சமமாக மாற்றுகிறார்கள். அவர்களுக்கு கூட நன்மை இருக்கிறது அல்லவா? குருடர் களின் ஊன்று கோல் ஆக வேண்டும். அப்பா மற்றும் ஆஸ்தியை நினையுங்கள். வினாசம் எதிரில் நிற்கிறது என்பதை மட்டும் தெரிவிக்க வேண்டும். வினாசத்தை நெருக்கத்தில் பார்க்கும் போது உங்களுடைய விசயத்தைக் கேட்பார்கள். உங்களுடைய சேவையும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே இருக்கும். மிக சரியாக இருக்கிறது என புரிந்து கொள்வார்கள். வினாசம் நடக்கக் போகிறது என நீங்கள் கதறுகிறீர்கள்.

உங்களுடைய படக் கண்காட்சி, மேளா சேவை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். நல்ல ஹால் கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். வாடகை கொடுப்பதற்கு நாம் தயாராக இருக் கிறோம். உங்களுடைய பெயர் இன்னும் பிரசித்தம் ஆகும் எனக் கூறுங்கள். இவ்வாறு பலரிடம் ஹால் இருக்கிறது. முயற்சி செய்தால் 3 அடி நிலம் கிடைக்கும். அதுவரை நீங்கள் சிறிய சிறிய படக் கண்காட்சிகளை வையுங்கள். சிவஜெயந்தி கூட நீங்கள் கொண்டாடினீர்கள் என்றால் சத்தம் பரவும். சிவஜெயந்தி அன்று விடுமுறை அளியுங்கள் என்று கூட நீங்கள் எழுதுவீர்கள். உண்மையில் பிறந்த நாள் கூட ஒருவருக்கு தான் கொண்டாட வேண்டும். அவரே பதீத பாவனர். தபால் தலை கூட உண்மையில் உண்மையான இந்த திரிமூர்த்தியினுடையது. சத்யமேவ ஜெயதே...... இது வெற்றி அடைவதற்கான நேரம் ஆகும். நன்கு புரிய வைப்பவர்கள் கூட வேண்டும். அனைத்து சென்டர்களிலும் முக்கியமானவர்கள் கவனம் கொடுக்க வேண்டும். நம்முடைய தபால்தலை வெளியிட முடியும். இது திரிமூர்த்தி சிவஜெயந்தி ஆகும். சிவஜெயந்தி என்று மட்டும் கூறுவதால் புரிந்து கொள்ள முடியாது. இப்போது குழந்தைகள் தான் வேலையை செய்ய வேண்டும். நிறைய பேருக்கு நன்மை நடந்தால் எவ்வளவு லிப்ட் கிடைக்கும்! சேவையின் லிப்ட் நிறைய கிடைக்கிறது. படக் கண்காட்சியினால் நிறைய சேவை நடக்கிறது. பிரஜைகள் உருவாகிறார்கள் அல்லவா?. சேவையில் எந்தக் குழந்தைகள கவனம் வைக்கிறார்கள் என பாபா பார்க்கிறார். அவர்களே இதயத்தில் இடம் பிடிப்பார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஒருவேளை ஒரு முறை ஏதாவது தவறு நடந்தால் அச்சமயம் காதைப் பிடிக்க வேண்டும். இன்னொரு முறை அந்தத் தவறு நடக்கக் கூடாது. ஒரு போதும் தேக அகங்காரத்தில் வரக் கூடாது. ஞானத்தில் திறமை உடையவராகி உள்நோக்கு பார்வை உடையவராக இருத்தல் வேண்டும்.

2. உண்மையான பிதாவிரதை ஆக வேண்டும். உயிரோடு பலியாக வேண்டும். யாரிடமும் மனதை செலுத்தக் கூடாது. முட்டாள்தனமான எந்த வேலையும் செய்யக் கூடாது.

வரதானம்:
பிரிவு என்பதை சதா காலத்திற்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டு அன்பின் சொரூபமாகுக

எனது அன்பருக்கு எது பிடிக்குமோ அதுவே எனக்கும் பிடிக்கும். இதுவே அன்பின் சொரூபம். உண்பது, பருகுவது, பழகுவது யாவும் அன்பருக்கு பிரியமானதாக வேண்டும். எனவே எந்த ஒரு செயலும் செய்யும் முன்பே என் அன்பான பாபாவிற்கு பிரியமானதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அத்தகைய உண்மையான சினேகி ஆகிவிட்டால் நிரந்தர யோகி, சகஜயோகி ஆகிவிடுவீர்கள். இந்த அன்பின் சொரூபத்தை சமன் செய்து விட்டால் அமர்பவ எனும் வரதானம் கிடைத்து விடும். பிரிவு என்பதற்கு சதா காலத்திற்கும் பிரிவு கிடைத்து விடும்.

சுலோகன்:
சுபாவம் சுலபமாக மற்றும் முயற்சியில் கவனம் கொடுப்பவராகுங்கள்.

தனது சக்தி வாய்ந்த மனதின் மூலமாக சக்தி தரும் சேவை செய்யுங்கள்

ஒரு விதையினுள் முழு மரமும் அடங்கியிருப்பது போலவே ஒரு எண்ணத்தில் முழு மரத்தின் விஸ்தாரமும் உள்ளடங்கும் பொழுதே எண்ணங்களின் ஆர்பாட்டம் அடங்கும். இன்றைய உலகில் அரசியல், பொருட்களின் விலைவாசி, பணமதிப்பு, கர்ம வினையெனும் நோய்கள் - தர்மத்தின் ஆர்ப்பாட்டம் அனைத்தும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவைகளில் இருந்து தன்னையும், பிறரையும் காப்பாற்ற மனம்-புத்தியை ஒருமுகமாக்கும் பயிற்சி செய்து சக்தி தரும் சேவை செய்து கொண்டேயிருங்கள்.