31-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! புண்ணிய ஆத்மா ஆக வேண்டுமானால் தனது கணக்கைப் (சார்ட்) பாருங்கள், எந்த ஒரு பாவமும் செய்யவில்லையே? உண்மையின் கணக்கு சேமிப்பாகியுள்ளதா?

கேள்வி:
அனைத்திலும் பெரிய பாவம் எது?

பதில்:
யார் மீதும் தீய பார்வை வைப்பது என்பது அனைத்திலும் பெரிய பாவமாகும். நீங்கள் புண்ணிய ஆத்மா ஆகக் கூடிய குழந்தைகள், யார் மீதும் விகாரி திருஷ்டி வைக்க முடியாது. சோதித்துப் பார்க்க வேண்டும், நாம் எதுவரை யோகத்தில் இருக்கிறோம்? எந்த ஒரு பாவ காரியமும் செய்யவில்லையே? உயர்ந்த பதவி பெற வேண்டுமானால் எச்சரிக்கையாக இருங்கள் - ஒரு சிறிதும் தீய பார்வை என்பது இருக்கக் கூடாது. பாபா தரும் ஸ்ரீமத் படி முழுமையாக நடந்து சென்று கொண்டே இருங்கள்.

பாடல்:
முகத்தைப் பார் மனிதா !

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை தன்னுடைய குழந்தைகளுக்குச் சொல்கிறார் - குழந்தைகளே தனது கடந்த காலத்தை கொஞ்சம் சோதித்துப் பாருங்கள். இதுவோ மனிதர்களுக்குத் தெரிந்திருக் கிறது, அதாவது நாம் வாழ்க்கை முழுவதிலும் எவ்வளவு பாவம், எவ்வளவு புண்ணியம் செய்துள் ளோம் என்று. தினந்தோறும் தங்களின் கணக்கைப் பாருங்கள் - எவ்வளவு பாவங்கள், எவ்வளவு புண்ணியங்கள் செய்திருக்கிறோம்? யார் மீதும் கோபப் படாமல் இருந்தோமா? ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள முடியும் - நாம் வாழ்க்கையில் என்னென்ன செய்துள்ளோம்? எவ்வளவு பாவம் செய்துள்ளோம், எவ்வளவு தான-புண்ணியம் முதலியன செய்துள்ளோம்? என்று மனிதர்கள் யாத்திரை செல்கின்றனர் என்றால் தான-புண்ணியம் செய்கின்றனர். முயற்சி செய்து பாவம் செய்யாமல் உள்ளனர். ஆக, பாபா குழந்தைகளிடம் கேட்கிறார் - எவ்வளவு பாவம், எவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறீர்கள்? இப்போது குழந்தைகள் நீங்கள் புண்ணிய ஆத்மாக்களாக ஆக வேண்டும். எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது. பாவங்களும் அநேக விதமாக உள்ளன. யார் மீதாவது தீய பார்வை செலுத்துகிறோம் என்றால் இதுவும் கூட பாவமாகும். தீய பார்வை என்பது விகாரத்தினுடையதாகும். அது அனைத்தினும் கெட்டதாகும். ஒரு போதும் விகார திருஷ்டி செலுத்தக் கூடாது. அதிகமாக ஆண்-பெண்ணுக்கிடையில் விகாரத்தின் திருஷ்டி தான் உள்ளது. குமார்-குமாரிகளுக்கும் கூட எங்காவது விகாரத்தின் திருஷ்டி எழுகின்றது. இப்போது பாபா சொல்கிறார், இந்த விகாரத்தின் திருஷ்டி இருக்கக் கூடாது. இல்லையென்றால் உங்களை குரங்கு என்று சொல்ல வேண்டும். நாரதரின் உதாரணம் உள்ளது இல்லையா? இலட்சுமியை மணக்க விரும்புவதாக நாரதர் சொன்னார். நீங்களும் சொல்கிறீர்கள் இல்லையா, நாங்களோ இலட்சுமியை மணப்போம் என்று? நாரியிலிருந்து இலட்சுமியாக, நரனிலிருந்து நாராயணனாக ஆவோம் என்று. பாபா சொல்கிறார், தனது மனதைக் கேளுங்கள் - எது வரை நாம் புண்ணியாத்மாவாக ஆகியிருக் கிறோம்? எந்த ஒரு பாவமும் செய்யாதிருக்கிறோமா? எதுவரை யோகத்தில் இருக்கிறோம்?

குழந்தைகள் நீங்களோ தந்தையை அறிந்து கொண்டிருக்கிறீர்கள், அதனால் தான் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? உலக மனிதர்கள் இவர் பாப்தாதா என அறிந்து கொள்ளவில்லை. பிராமணக் குழந்தைகளாகிய நீங்களோ அறிவீர்கள், பரமபிதா பரமாத்மா பிரம்மாவுக்குள் பிரவேச மாகி நமக்கு அழியாத ஞான இரத்தினங்களின் கஜானாவைத் தருகிறார். மனிதர்களிடம் இருப்பது அழியக்கூடிய செல்வம். அதைத் தான் தானம் செய்கின்றனர். அதுவோ கல்லாகும். இவை ஞான இரத்தினங்கள். ஞானக்கடலான தந்தையிடம் தான் ஞான இரத்தினங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு இரத்தினமும் இலட்ச ரூபாய் பெறுமானதாகும். இரத்தின வியாபாரி பாபாவிடமிருந்து ஞான ரத்தினங்களை தாரணை செய்து பிறகு இந்த இரத்தினங்களை மற்றவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இதை ஒருவர் எவ்வளவு பெறுகிறாரோ மற்றும் பிறருக்குக் கொடுக்கிறாரோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவார். ஆக, பாபா புரிய வைக்கிறார், உங்களுக்குள் நாம் எவ்வளவு பாவம் செய்திருக்கிறோம் என்று பாருங்கள். இப்போது எந்த ஒரு பாவமும் செய்யாதிருக் கிறோமா? கொஞ்சம் கூட தீய பார்வை இருக்கக் கூடாது. பாபா கொடுக்கும் ஸ்ரீமத் படி முழுமை யாக நடந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த கவனம் வேண்டும். மாயாவின் புயல் வரலாம். ஆனால் கர்மேந்திரியங்கள் மூலம் எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது. எந்தப் பக்கமாவது தீய பார்வை போகுமானால் அதற்கு முன்னால் நின்று கொண்டிருக்கக் கூடாது. உடனே விலகிப் போய்விட வேண்டும். இவருக்குத் தீய பார்வை உள்ளது என்பது தெரிந்து விடும். உயர்ந்த பதவி பெற வேண்டுமானால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீய பார்வை போகுமானால் பிறகு முடம், நொண்டியாக ஆக வேண்டியிருக்கும். பாபா சொல்லும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். தந்தையைக் குழந்தைகள் தான் அறிந்து கொள்ள முடியும். பாபா எங்காவது செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அங்குள்ள குழந்தைகள் தான் பாப்தாதா வந்துள்ளார் என்று அறிந்து கொள்வார்கள். மற்ற மனிதர்கள் அநேகர் பார்க்கின்றனர் என்ற போதிலும் அவர்களுக்குத் தெரியாது. இவர் யார் என்று யாராவது கேட்கவும் செய்யலாம். பாப்தாதா எனச் சொல்லுங்கள். பேட்ஜோ அனைவரிடமும் இருக்க வேண்டும். சொல்லுங்கள், சிவபாபா எங்களுக்கு இந்த தாதா மூலம் அழியாத ஞான இரத்தினங்களை தானம் செய்கிறார். இது ஆன்மிக ஞானமாகும் ஆத்மாக் கள் அனைவரின் தந்தையாகிய ஆன்மிகத் தந்தை வந்து இந்த ஞானத்தைத் தருகிறார். சிவ பகவான் சொல்கிறார், கீதையில் கிருஷ்ண பகவான் வாக்கு என எழுதப் பட்டிருப்பது தவறாகும். ஞானக்கடல், பதீத பாவனர் என்பதாக சிவபகவான் தான் சொல்லப்படுகிறார். ஞானத்தின் மூலம் தான் சத்கதி கிடைக்கின்றது. இவை அழியாத ஞான இரத்தினங்கள். சத்கதி அளிப்பவர் ஒரே ஒரு பாபா தான். இந்த அனைத்து வாக்கியங்களையும் முழுமையாக நினைவில் வைக்க வேண்டும். இப்போது குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், நாம் பாபாவை அறிவோம், மேலும் பாபாவும் நாம் குழந்தைகளை அறிவோம் என்று புரிந்து கொண்டுள்ளார் . இவர்கள் அனைவரும் என்னுடைய குழந்தைகள் என்று பாபாவோ சொல்வார் இல்லையா, ஆனால் அவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதிர்ஷ்டத்தில் இருக்குமானால் இனி வரும் காலத்தில் அறிந்து கொள்வார்கள். இந்த பாபா எங்காவது செல்கிறார், யாராவது இவர் யார் என்று கேட்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். நிச்சயமாக சுத்த பாவனையுடன் தான் கேட்பார்கள். பாப்தாதா என்ற வார்த்தை யையே சொல்லுங்கள். எல்லையற்ற தந்தை நிராகார். அவர் எதுவரை மானுடலில் (சாகாரில்) வரவில்லையோ, அதுவரை தந்தையிடமிருந்து ஆஸ்தி எப்படிக் கிடைக்கும்? ஆக, சிவபாபா பிரஜாபிதா பிரம்மா மூலம் தத்தெடுத்து ஆஸ்தி தருகிறார். இவர் பிரஜாபிதா பிரம்மா மற்றும் இவர்கள் பிரம்மா குமார், குமாரிகளுக்கு படிப்பு சொல்லித் தருபவர் ஞானக்கடல். அவரிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கின்றது. இந்த பிரம்மாவும் படிக்கிறார். இவர் பிராமணரில் இருந்து மீண்டும் தேவதை ஆகப் போகிறவர். இதைப் புரிய வைப்பது எவ்வளவு சுலபம்! யாருக்காவது பேட்ஜை வைத்துப் புரிய வைப்பது நல்லது. சொல்லுங்கள், பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர் களானால் உங்களுடைய பாவ கர்மங்கள் விநாசமாகி விடும். பாவனமாகி பிறகு பாவன உலகத்திற்குச் சென்று விடுவீர்கள். இவர் பதீத பாவனர் பாபா இல்லையா? நாம் பாவனமாவதற் கான புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறோம். விநாசத்திற்கான சமயம் வரும்போது நமது படிப்பு முடிவடைந்து விடும். இதைப் புரிய வைப்பது எவ்வளவு சுலபம்! யாராவது எங்காவது வந்தாலோ போனாலோ பேட்ஜ் கூடவே இருக்க வேண்டும். இந்த பேட்ஜுடன் கூடவே ஒரு சிறு நோட்டீசும் இருக்க வேண்டும். அதில் பாரதத்தில் தந்தை வந்து மீண்டும் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என எழுதப் பட்டிருக்க வேண்டும். மற்ற அநேக தர்மங்கள் அனைத்தும் இந்த மகாபாரத யுத்தத்தின் மூலம் கல்பத்திற்கு முன் போலவே டிராமா பிளான் அனுசாரம் அழிந்து போகும். அதுபோன்ற நோட்டீஸ் 2-4 இலட்சம் அச்சடித்து வைக்க வேண்டும். அப்போது யாருக்கு வேண்டுமானாலும் அந்த நோட்டீசைக் கொடுக்க முடியும். மேலே திரிமூர்த்தி இருக்க வேண்டும். மறு பக்கம் சென்டர்களின் முகவரிகள் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சேவை பற்றிய சிந்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள் - தினந்தோறும் தனது கணக்கை (சார்ட்) உட்கார்ந்து வெளிக் கொண்டு வர வேண்டும். அதாவது இன்று நாள் முழுவதும் நமது மனநிலை எப்படி இருந்தது? (பிரம்மா)பாபா இதுபோல் அநேக மனிதர்களைப் பார்த்துள்ளார் - அவர்கள் தினமும் இரவில் முழு நாளினுடைய கணக்கை உட்கார்ந்து எழுதுவார்கள். சோதித்துப் பார்க்கின்றனர் - எந்த ஒரு தீய காரியமும் செய்யவில்லையே? அனைத்தையும் எழுதுகின்றனர். புரிந்துள்ளனர், நல்ல வாழ்க்கை வரலாறு எழுதப் பட்டிருக்குமானால் பின்னால் வருபவர்களும் படித்து அதுபோல் எழுதக் கற்றுக் கொள்வார்கள். அதுபோல் எழுதுபவர்கள் நல்ல மனிதர்களாகவே இருப்பார்கள். விகாரிகளோ அனைவருமே தான். இங்கோ அந்த விசயம் கிடையாது. நீங்கள் உங்களுடைய கணக்கை தினந் தோறும் பாருங்கள். பிறகு பாபாவிடம் அனுப்பி வைக்க வேண்டும். அப்போது நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலும் பயமும் இருக்கும். அனைத்தையும் தெளிவாக எழுத வேண்டும் - இன்று நமக்கு தீய திருஷ்டி சென்றது, இவ்வாறு நடந்தது...... யார் ஒருவர் மற்றவர்க்கு துன்பம் தருகின்றனரோ, பாபா அவர்களை காஜி (மதத்திற்காகச் சண்டையிடுபவர்) எனச் சொல்கிறார். ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பாவங்கள் உங்கள் தலை மீது உள்ளன. இப்போது நீங்கள் நினைவின் பலத்தினால் பாவங்களின் சுமையை இறக்கி வைக்க வேண்டும். அதனால் தினமும் பார்க்க வேண்டும் - நாம் இன்று எவ்வளவுக்கு துக்கம் தரும் போர்வீரனாக ஆகியிருக்கிறோம்? யாருக் காவது துக்கம் தருவது என்றால் காஜி ஆவதாகும். பாவமாக ஆகி விடுகின்றது. பாபா சொல்கிறார், காஜி ஆகி யாருக்கும் துக்கம் கொடுக்காதீர்கள். தன்னை முழுமையாகச் சோதித்துப் பாருங்கள் - நாம் எவ்வளவு பாவம், எவ்வளவு புண்ணியம் செய்துள்ளோம்? யாரை சந்தித்தாலும் அனை வருக்கும் இந்த வழியைச் சொல்லத் தான் வேண்டும். அனைவருக்கும் மிகுந்த அன்போடு சொல்லுங்கள் - பாபாவை நினைவு செய்ய வேண்டும், மேலும் பவித்திரமாக வேண்டும். இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாகப் பவித்திரமாக ஆக வேண்டும். நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள் என்ற போதிலும் இது இராவண இராஜ்யம் இல்லையா? இந்த மாயாவி விஷ வைதரணி நதியில் இருந்து கொண்டே தாமரை மலருக்குச் சமமாக பவித்திர மாக ஆக வேண்டும். தாமரை மலர் அதிகமான இலைகள், கொடிகளை (குழந்தை-குட்டிகள்) உடையது என்ற போதிலும் தண்ணீருக்கு மேலேயே உள்ளது. இல்லறவாசி, அதிகப் பொருட்களை உற்பத்தி செய்வது. இந்த உதாரணம் உங்களுக்காகவும் உள்ளது. விகாரங்களிலிருந்து விலகி விடுபட்டு இருங்கள். இந்த ஒரு ஜென்மம் பவித்திரமாக இருப்பீர்களானால் பிறகு இது அவிநாசி ஆகி விடும். உங்களுக்கு பாபா அவிநாசி ஞானம் தருகிறார். மற்ற எல்லாமே கற்கள். அந்த மனிதர்களோ பக்தியின் விசயங்களையே சொல்கின்றனர். ஞானக்கடல் பதீதபாவனோ ஒருவர் மட்டுமே. ஆகவே அப்படிப்பட்ட தந்தையிடம் குழந்தைகளுக்கு எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! தந்தைக்குக் குழந்தைகளிடம், குழந்தைகளுக்குத் தந்தையிடம் அன்பு உள்ளது. மற்றப்படி வேறு யாரிடமும் தொடர்பு கிடையாது. யார் தந்தையின் வழிமுறைப்படி முழுமையாக நடக்கவில்லையோ, அவர்கள் தான் மாற்றாந்தாய்க் குழந்தைகள் ஆவர். இராவணனின் வழிப்படி நடக்கின்றனர் என்றால் அது இராமரின் வழியல்ல. அரைக்கல்பம் இராவண சம்பிரதாயம். அதனால் இது பிரஷ்டாச்சாரி (விகாரி) உலகம் எனச் சொல்லப்படுகின்றது. இப்போது நீங்கள் மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு தந்தையின் வழிமுறைப்படி நடக்க வேண்டும். பி.கு.வின் அறிவுரை கிடைக்கின்றது என்றாலும் கூட சோதிக்க வேண்டியுள்ளது - இந்த வழி சரியா, தவறா? குழந்தைகளாகிய உங்களுக்கு சரியானது மற்றும் தவறானது பற்றிய புரிதலும் இப்போது கிடைத்துள்ளது. எப்போது சரியானவர் வருகிறாரோ, அப்போது தான் சரியானது மற்றும் தவறானது பற்றிச் சொல்வார். பாபா சொல்கிறார், நீங்கள் அரைக்கல்பமாக இந்த பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களைக் கேட்டிருக்கிறீர்கள். இப்போது நான் உங்களுக்கு என்ன சொல்கிறேனோ, இது சரியா அல்லது அது சரியானதா? அவர்கள் சொல்கின்றனர், ஈஸ்வரன் சர்வவியாபி என்று. நான் சொல்கிறேன், நானோ உங்களுடைய தந்தை என்று. இப்போது யார் சொல்வது சரி என்பதைத் தீர்மானியுங்கள். இதுவும் குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கப் படுகின்றது இல்லையா? - எப்போது பிராமணராக ஆகிறீர்களோ, அப்போது புரிந்து கொள்வீர்கள். இராவண சம்பிரதாயத் தினரோ அநேகர் உள்ளனர். நீங்களோ குறைவானவர்களே இருக்கிறீர்கள். அதிலும் நம்பர்வார். யாருக்காவது தீய பார்வை இருக்குமானால் அவர்கள் இராவண சம்பிரதாயத்தினர் எனச் சொல்லப் படுவார்கள். எப்போது முழு சிருஷ்டியும் மாறி தெய்வீகமாக ஆகின்றதோ, அப்போது இராம சம்பிரதாயத்தினர் எனபுரிந்து கொள்ளப் படுவார்கள். தனது மனநிலை மூலம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவோ முடியும் இல்லையா? முதலிலோ ஞானம் இல்லாதிருந்தது. இப்போது பாபா வழி சொல்லியிருக்கிறார். ஆக, பார்க்க வேண்டும், அவிநாசி ஞான இரத்தினங்களின் தானம் செய்து கொண்டே இருக்கிறேனா? பக்தர்கள் அழியக்கூடிய செல்வத்தை தானம் செய்கின்றனர். இப்போது நீங்கள் அழியாத ஞான இரத்தினங்களை தானம் செய்ய வேண்டும். அழியக் கூடியதை அல்ல. அழியக் கூடிய செல்வம் இருந்தால் சேவையில் ஈடுபடுத்திக் கொண்டே செல்லுங்கள். பதீதர்களுக்கு தானம் செய்வதால் பதீத்தமாகவே ஆகி விடுவீர்கள். இப்போது நீங்கள் உங்களுடைய செல்வத்தை தானம் செய்தால் இதற்குப் பிரதிபலனாக 21 பிறவிகளுக்கு புது உலகத்தில் கிடைக்கின்றது. இந்த அனைத்து விசயங்களும் புரிந்து கொள்ள வேண்டியவையாகும். பாபா சேவைக்கான யுக்திகளும் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அனைவர் மீதும் இரக்கம் காட்டுங்கள். பரமபிதா பரமாத்மா பிரம்மா மூலம் ஸ்தாபனை செய்கிறார் என்று பாடவும் பட்டுள்ளது. ஆனால் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பரமாத்மாவையே சர்வ வியாபி எனச் சொல்லி விட்டுள்ளனர். ஆக, குழந்தைகளுக்கு சேவை செய்வதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நன்மை செய்வீர்களானால் தனக்கும் அதில் நன்மை ஏற்படும். நாளுக்கு நாள் பாபா மிகவும் எளிமையாக ஆக்கிக் கொண்டே செல்கிறார். இந்தத் திரிமூர்த்தியின் சித்திரமோ மிக நல்ல ஒரு பொருள். இதில் சிவபாபாவும் இருக்கிறார், பிறகு பிரஜாபிதா பிரம்மாவும் இருக்கிறார். பிரஜாபிதா பிரம்மாகுமார்-குமாரிகள் மூலம் மீண்டும் பாரதத்தில் 100 சதவிகிதம் பவித்திரதா-சுகம்-சாந்தியின் தெய்வீக சுயராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறார். மற்ற அநேக தர்மங்கள் இந்த மகாபாரத யுத்தத்தினால் கல்பத்திற்கு முன் போலவே விநாசமாகி விடும். இப்படி-இப்படி நோட்டீஸ் அச்சடித்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பாபா எவ்வளவு சகஜமான வழி சொல்கிறார்! கண்காட்சிகளிலும் நோட்டீஸ் கொடுங்கள். நோட்டீஸ் மூலம் புரிய வைப்பது சுலபம். பழைய உலகத்தின் விநாசமோ நடந்தேயாக வேண்டும். புது உலகத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓர் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மற்ற இவை அனைத்தும் கல்பத்திற்கு முன் போலவே விநாசமாகி விடும். எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள், பாக்கெட்டில் நோட்டீஸ் மற்றும் பேட்ஜ்கள் சதா இருக்க வேண்டும். விநாடியில் ஜீவன்முக்தி என்பது பாடப் பட்டுள்ளது. சொல்லுங்கள், இவர் தந்தை, இவர் தாதா. அந்தத் தந்தையை நினைவு செய்வதன் மூலம் இந்த சத்யுக தேவதா பதவி பெறுவீர்கள். பழைய உலகத்தின் விநாசம், புது உலக ஸ்தாபனை, விஷ்ணுபுரி புது உலகத்தில் மீண்டும் இவர்களின் இராஜ்யம் இருக்கும். எவ்வளவு சுலபம்! தீர்த்த ஸ்தலங்கள் முதலானவற்றிற்கு மனிதர்கள் செல்கின்றனர். எவ்வளவு துன்பங்களை அடைகின்றனர்! ஆரிய சமாஜத்தினர் போன்றவர்களும் இரயில் நிறைய செல்கின்றனர். இது தர்மத்திற்கான அடி எனச் சொல்லப்படுகின்றது. உண்மையில் அதர்மத்தின் அடி என்று தான் சொல்ல வேண்டும். தர்மத்திலோ அடி வாங்குவதற்கான தேவையே கிடையாது. நீங்களோ படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றனர்!

குழந்தைகள் பாடலையும் கேட்டீர்கள் - முகத்தைப் பார்த்துக் கொள்......... இந்த முகத்தை உங்களைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. பகவானையும் நீங்கள் காட்ட முடியும். இவை ஞானத்தின் விசயங்கள். நீங்கள் மனிதரில் இருந்து தேவதையாக, பாவாத்மாவில் இருந்து புண்ணியாத்மாவாக ஆகிறீர்கள். உலகம் இந்த விசயங்களை முற்றிலும் எதையும் அறிந்திருக்க வில்லை. இந்த இலட்சுமி-நாராயணர் சொர்க்கத்தின் எஜமானராக எப்படி ஆனார்கள்? இது யாருக்கும் தெரியாது. குழந்தைகள் நீங்களோ, அனைத்தையும் அறிவீர்கள். யாருக்காவது புத்தியில் பதியுமானால் துன்பங்கள் விலகி விடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) அழியக்கூடிய செல்வம் இருந்தால் அதைப் பயனுள்ளதாக ஆக்குவதற்கு அலௌகீக சேவையில்ஈடுபடுத்த வேண்டும். அவிநாசி செல்வத்தின் தானமும் அவசியம் செய்ய வேண்டும்.

2) தன்னுடைய கணக்கில் (சார்ட்)பார்க்க வேண்டும் - நமது மனநிலை எப்படி இருந்தது? முழு நாளிலும் எந்த ஒரு தீய செயலும் செய்யாதிருந்தேனா? ஒருவர் மற்றவர்க்கு துக்கம் கொடுக்காமல் இருக்கிறோமா? யார் மீதும் தீய திருஷ்டி செல்லாமல் இருக்கிறதா?

வரதானம்:
டபுள் லைட் ஆகி அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி (ஹை ஜம்ப்) செல்லக் கூடிய தீவிர முயற்சியாளர் ஆகுக.

தன்னை சதா விலைமதிப்பற்ற வைரம் என்று புரிந்து கொண்டு பாப்தாதாவின் மனம் என்ற பெட்டியில் இருங்கள். அதாவது தந்தையின் நினைவில் மூழ்கி இருந்தீர்கள் எனில் எந்த ஒரு விசயமும் கடினமாக அனுபவம் செய்யமாட்டீர்கள். அனைத்து சுமைகளும் சமாப்தி ஆகிவிடும். இந்த சகஜயோகத்தின் மூலம் டபுள் லைட் ஆகி, முயற்சியில் ஹை ஜம்ப் செய்து தீவிர முயற்சியாளர் ஆகிவிடுவீர்கள். எப்பொழுதெல்லாம் கடினம் என்ற அனுபவம் ஏற்படுகிறதோ, அப்பொழுது தந்தையின் எதிரில் அமர்ந்து விடுங்கள். மேலும் பாப்தாதாவின் வரதானங்கள் என்ற கை தன்மீது இருப்பதாக அனுபவம் செய்யுங்கள். இதன் மூலம் விநாடியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும்.

சுலோகன்:
சகயோகத்தின் சக்தியானது அசம்பவத்தையும் சம்பவமாக்கி விடும். இதுவே பாதுகாப்புக் கோட்டையாகும்.

தனது சக்திசாலியான மனதின் மூலம் சக்தி கொடுக்கும் சேவை செய்யுங்கள்:

நேரத்தின் அனுசாரம் நாலாபுறங்களிலும் சக்தி கொடுக்கும், அதிர்வலைகள் பரப்பும், மனதின் மூலம் வாயுமண்டலத்தை உருவாக்கும் காரியம் செய்ய வேண்டும். இப்பொழுது இந்த சேவை மிகவும் அவசியமாகும். சாகாரத்தில் பார்த்திருக்கிறீர்கள் - ஏதாவது ஒரு நாட்டுப் பிரச்சனையின் அலைகள் வருகின்ற போது இரவு-பகல் சக்தி கொடுக்கும், பலமற்றவர்களுக்கு பலம் கொடுப்பதில் கவனம் இருந்தது. நேரம் ஒதுக்கி ஆத்மாக்களுக்கு சக்தி கொடுக்கும் சேவை நடைபெற்றது. இவ்வாறு தந்தையை பின்பற்றுங்கள்.