01.07.24

இன்றைய சிந்தனைக்கு

கவனமாக கேட்பது:

கவனமாக கேட்கும் சக்தி, உள்ளார்ந்த அமைதியை கொண்டு வருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில் யாராவது ஏதாவது சொல்லும்போதுமற்றவர்கள் புண்படுத்தும் நோக்கத்தோடு எதனையும் கூறவில்லை என்றாலும் கூட, புண்படும் போக்கு நம்மிடம் இருக்கிறது. ஏனென்றால் அவர்களின் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், பேசும் வார்த்தைகளை மட்டுமே கேட்கின்றோம். இது தவறான புரிந்துணர்வு மற்றும் சண்டை சச்சரவுகளுக்கு வழிவகுத்து  உறவுகளை கெடுத்துவிடக்கூடும்.

செயல்முறை:

யாராவது என்னிடம் எதையாவது கூறும் போது, மேலோட்டமாக அவர்களுடைய வார்த்தைகளை கேட்பதற்கு பதிலாக அவருடைய நோக்கத்தை புரிந்து கொள்வது அவசியம். வார்த்தைகளுக்கு பின்னால் உள்ள நோக்கத்தை புரிந்துகொள்ளும்போது, சண்டை சச்சரவுக்கு பதிலாக என்னால் அவர்களிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள முடிகிறது.