01.08.24
இன்றைய சிந்தனைக்கு
கவனமாக கேட்பது
மற்றவர்கள் கூறுவதை கேட்பது, நம்மை மீண்டும் மீண்டும் தவறுகள் செய்வதிலிருந்து விடுவிக்கிறது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
மற்றவர்கள் நம்மை விமர்சிக்கும்போது, பெரும்பாலும் நாம் அவர்களை புறக்கணிக்கின்றோம் அல்லது நம்மை தற்காத்துக்கொள்வதில் கவனம் செலுத்துகின்றோம். நாம் கவனமாக கேட்கும் சக்தியை இழப்பதோடு, மற்றவர்கள் நமக்கு கொடுக்க முயற்சிக்கும் உதவியை நாம் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றோம். நம்முடைய தவறுகளை நாம் திருத்திக்கொள்ள தவறுகின்றோம், மேலும் அதே பிரச்சனைகள் அடிக்கடி நிகழ்வதை நாம் காண்கின்றோம்.
செயல்முறை:
மற்றவர்கள் நான் கூறுவதை அல்லது செய்வதை விமர்சிக்கும்போது, அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்கின்றதா என்று நான் சிந்தித்து பார்ப்பது அவசியம். அவர்கள் என்னிடம் கூறும் சில விஷயங்களை ஏற்றுக்கொள்வது எனக்கு சிரமமாக இருக்கும்போதிலும், என்னிடம் இருக்கும் சிறப்பான திறமைகள் மட்டுமே அவர்களுக்கு தேவைப்படுவதை நான் அறிவேன். என்னுடைய பலவீனங்களை நான் அறிந்துகொள்ளும்போது, என்னுடைய நடத்தையை என்னால் மாற்றகொள்ள முடிவதோடு, தொடர்ந்து மேம்படுத்திகொண்டு, வெற்றியை நோக்கி செல்கின்றேன்.