01.10.25
இன்றைய சிந்தனைக்கு......
ஒரு நற்பண்பை பொறுப்புடன் பயன்படுத்துவது என்றால் மற்ற அனைத்து நற்பண்புகளின் பயன்பாட்டிற்கும் உத்தரவாதம் அளிப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நற்பண்புகள் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையவை, இது ஒரு மதிப்புமிக்க குடும்பத்தில் உறுப்பினர்களாக இருப்பதைப் போல் உள்ளது. ஒரு நற்பண்பை பொறுப்புடன் பயன்படுத்த உறுதியளித்தவரால் மற்ற சம்பந்தப்பட்ட நற்பண்புகளையும் வெளிப்படுத்த முடிகின்றது. அத்தகைய நபரால் அவர் செய்யும் மற்றும் பேசும் அனைத்தினதும் தரத்தையும் உயர்த்த முடிகின்றது.
அனுபவம்:
என்னுடைய சொந்த சிறந்த நற்பண்புகளை அடையாளம் கண்டு, அதை என் அன்றாட வாழ்க்கையில் பொறுப்புடன் பயன்படுத்தும்போது, நான் செய்யும் அனைத்திலும் என்னால் வெற்றியை அனுபவம் செய்ய முடிகிறது. ஏனென்றால், என்னிடம் இருக்கும் சிறந்தவற்றைக் கொடுப்பதில் திருப்தி இருப்பதோடு, நான் செய்யும் அனைத்தின் தரத்தையும் உயர்த்தி இருப்பதாலும் ஆகும்.