02.01.25
இன்றைய சிந்தனைக்கு......
ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயல் ஆகியவற்றுக்கு பொறுப்பானவராக இருப்பதென்றால் எவ்வித கேள்விகளிலிருந்து விடுபட்டு இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து: நாம் சவால்களை எதிர்கொள்ளும்போது பொதுவாக மற்றவர்களை அல்லது சூழ்நிலைகளை குற்றம் சாட்டுகிறோம். நமது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை நியாயப்படுத்துகிறோம். அதன்பிறகு, நாம் அவ்வாறு சிந்திக்கவும் பேசவும், அவ்வாறு செயல்படவும் நிர்பந்தபடுத்தபட்டோம் என்று நம்மிடமும் மற்றவர்களிடமும் கூறுகின்றோம். இப்படிப்பட்ட சிந்தனை மற்றவர்களைப் பற்றியும் நம்முடைய மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது, மேலும் இது போன்ற சூழ்நிலைகளுக்கு ஒருபோதும் நம்மால் தீர்வு கண்டுபிடிக்க இயலாது.
தீர்வு: நாம் செய்ய விரும்பாத எந்த ஒரு செயலையும் எந்த ஒரு நபரோ அல்லது வேறு எதுவும் நம்மை அச்செயலை செய்ய கட்டாயப்படுத்த முடியாது என்பதை நாம் உணர வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம் சொந்த விருப்பமாகும். அதற்கு நாம் தான் பொறுப்பு. நாம் இந்த வழியில் பொறுப்பேற்கும்போது, தேவையற்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்களிலிருந்து நம்மால் விடுபட்டிருப்பதோடுமட்டுமல்லாமல், நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் சரியான திசையில் செலுத்த முடிகின்றது.