02.03.25
இன்றைய சிந்தனைக்கு
அமைதி
அமைதியான மனதினால் துல்லியமாக தீர்மானம் செய்ய முடியும்.
சிந்திக்க வேண்டிய கருத்து:
ஒரு சவாலில் துல்லியமான தீர்மானம் செய்ய வேண்டிய பொழுது, பதற்றமடையும் போக்கு நம்மிடம் உள்ளது. அனேகமான எதிர்மறை எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. அந்த மனநிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
செயல்முறை:
சவால்மிக்க சூழ்நிலைகளில் முடிவு எடுப்பதற்கு முன், நான் என்னுடைய மனதை அமைதியான நிலையில் வழிநடத்துவது அவசியம். இதை செயல்படுத்துவதற்கு, எனக்கு நீண்ட நாள் பயிற்சி தேவைப்படுகிறது – சூழ்நிலையானது என்னுடைய நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரிக்க தூண்டும் போதும்கூட, வெகு நாட்களுக்கு மனதிற்கு அளிக்கும் பயிற்சியானது, மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் மனதை அமைதியாக வைத்திருக்க உதவி செய்கிறது.